பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் 
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
  அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) 
  
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
  உங்கள் மீது உண்டாகுக 
  
 
  
திரு உமர் அவர்களின் “மோசே அல்லது யாக்கோபு! அல்லாஹ்வின்
  குழப்பம் 
குர்ஆன் முரண்பாடு” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு 
  
  
வாசகர்களே,
  இதற்க்கு முன்னரே பைபிள் முரண்பாடு மற்றும் அதற்க்கு ஒன்றிய கருத்துகளை விவரிக்கும்
  பல கட்டுரைகளை தெளிவான பைபிள் ஆதாரத்தை கோடிட்டு விவரித்து இருந்தோம், பார்க்க: 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
வாசகர்களே, மேலே கோடிட்ட
  நம்முடைய முந்தைய கட்டுரைகளுக்கே திரு உமர் அவர்கள் இன்றளவும் தெளிவான பைபிள்
  வசன ஆதாரம் கொண்டு மறுப்பு அளிக்க முயலாத/இயலாத நிலையில், தொடர்ந்து முகவரி அற்ற
  நபர்கள் இயற்றிய கிறிஸ்தவ பைபிள் வரலாற்றை/பொய்யுரையை ஒன்றி, இஸ்லாமிய திரு
  குர்ஆன் வரலாறு அமையாத/பொய்யுரைக்காத 
  காரணத்தினால், அது பிழையான/பொய்யான வரலாறு என்பது போன்ற கருத்தினை வாசகர்கள்
  மத்தியில் பரவ செய்யும் முயற்சியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொண்டு
  இருக்கிறார்.  திரு உமர் அவர்களின் இந்த முயற்சியில், திரு
  குர்ஆன் அறிவிக்கும் சரித்திரங்கள் வாசகர்களுக்கு தெளிவு பெற்று இன்னும்,
  தொடர்ந்து பைபிள் சரித்திர பிழைகள் தாம் குவியல் குவியலாய் வெளிவருகிறது.  
  
தன்னுடைய வேதத்தில்
  உள்ள குறைபாடுகளை விவரிக்க முயற்சிக்க மறுக்கும் திரு உமர் அவர்கள், இன்னும்
  அந்த முரண்பாடுகளை விளக்க வல்லமை அற்ற நபர், ஏனைய மதத்தின் வேதங்களை பரிகாசிக்க முற்படுவது
  விந்தையாக இருக்கிறது. 
  
திரு உமர்
  அவர்களின் நயவஞ்சக முயற்சியின் தொடர்ச்சியாக சமீபமாக “மோசே அல்லது யாக்கோபு!
  அல்லாஹ்வின் குழப்பம் குர்ஆன் முரண்பாடு” என்ற
  பொய்யுரையை வெளியிட்டு இருந்தார், அந்த பொய்யுரைக்கு பதில் அளிக்கும் வண்ணம், இன்னும் பைபிள் முரண்பாடுகளை விவரிக்கும்
  முயற்சியின் தொடர்ச்சியாக, எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையை நாடியவர்களாக இந்த
  கட்டுரையை வரைய துவங்குகிறோம். 
  
   
   
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
   
   
   
  
   
   
  
  
திரு உமர்
  அவர்கள் தன் மூல கட்டுரையில், திரு
  குர்ஆன் அறிவிக்கும் திரு மூஸா (அலை) அவர்களின் வரலாற்றை, பைபிள் அறிவிக்கும் திரு
  மோசே அவர்களின் சரித்திரதுடன் ஒப்பிட்டு பார்க்க முனைந்தால் அவற்றின் இடையே மூன்று
  சரித்திர பிழைகள் காண நேரிடும் என்று அறிவிக்க விரும்புவதாக நம்மால் அறிய
  முடிகிறது.  
  
  
   
    
திரு குர்ஆன்: 
  
28:22
      وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَىٰ رَبِّي أَن يَهْدِيَنِي
    سَوَاءَ السَّبِيلِ 
28:22. பின்னர், அவர் மத்யன்
    (நாட்டின்) பக்கம் சென்ற போது, “என் இறைவன் என்னை நேரான
    பாதையில் செலுத்தக் கூடும்” என்று கூறினார். 
28:23   وَلَمَّا وَرَدَ مَاءَ
    مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِن
    دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ ۖ قَالَ مَا خَطْبُكُمَا ۖ قَالَتَا لَا نَسْقِي حَتَّىٰ يُصْدِرَ الرِّعَاءُ ۖ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ 
28:23. இன்னும், அவர் மத்யன்
    நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில்
    ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக்
    கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள்
    இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்;
    “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று
    (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள்
    எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும்
    வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள். 
28:24   فَسَقَىٰ لَهُمَا ثُمَّ
    تَوَلَّىٰ إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ
    خَيْرٍ فَقِيرٌ 
28:24. ஆகையால், அவ்விருவருக்குமாக
    அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு
    அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு
    இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”
    என்று கூறினார். 
28:25   فَجَاءَتْهُ إِحْدَاهُمَا
    تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قَالَتْ إِنَّ أَبِي يَدْعُوكَ لِيَجْزِيَكَ
    أَجْرَ مَا سَقَيْتَ لَنَا ۚ فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا
    تَخَفْ ۖ نَجَوْتَ مِنَ الْقَوْمِ
    الظَّالِمِينَ 
28:25. (சிறிது நேரத்திற்குப்) பிறகு
    அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு
    வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று
    கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை
    எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்!
    அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார். 
28:26   قَالَتْ إِحْدَاهُمَا يَا
    أَبَتِ اسْتَأْجِرْهُ ۖ إِنَّ خَيْرَ مَنِ
    اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ 
28:26. அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள்
    இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள்
    கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.” 
28:27   قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنكِحَكَ
    إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَىٰ أَن تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ ۖ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ
    عِندِكَ ۖ وَمَا أُرِيدُ
    أَنْ أَشُقَّ عَلَيْكَ ۚ سَتَجِدُنِي إِن
    شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ 
28:27. (அப்போது அவர் மூஸாவிடம்)
    கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை
    செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு
    பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் -
    ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால்,
    அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை
    கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை
    நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.” 
28:28   قَالَ ذَٰلِكَ بَيْنِي
    وَبَيْنَكَ ۖ أَيَّمَا
    الْأَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَيَّ ۖ وَاللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌ 
28:28. (அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை -
    நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். 
  
 | 
    
 
  
  
   
    
And sure enough, Pharaoh heard what had happened, and he tried
    to kill Moses. But Moses fled from Pharaoh and went to live in the land of
    Midian. When Moses arrived in Midian, he sat down beside a well. Now the
    priest of Midian had seven daughters who came as usual to draw water and
    fill the water troughs for their father’s flocks. But some other shepherds
    came and chased them away. So Moses jumped up and rescued the girls from
    the shepherds. Then he drew water for their flocks. When the girls returned
    to Reuel, their father, he asked, “Why are you back so soon today?” “An
    Egyptian rescued us from the shepherds,” they answered. “And then he drew
    water for us and watered our flocks.” “Then where is he?” their father
    asked. “Why did you leave him there? Invite him to come and eat with us.” And Moses was content to dwell with the
    man: and he gave Moses Zipporah his daughter. Later she gave birth to a
    son, and Moses named him Gershom, for he explained, “I have been a
    foreigner in a foreign land.” (Exodus
    2:15-22) 
 | 
    
 
  
  
அதாவது, திரு
  உமர் அவர்களின் கருத்து அடிப்படையில், பைபிள் அறிவிக்கும் சரித்திரங்களில், “திரு
  மோசே மற்றும் திரு யாகோபு அவர்களின் வாழ்நாளில் நடந்தேறிய சில நிகழ்வுகள் ஒன்றி
  அமைந்தமையினால், இவற்றினை பிரித்து அறிய இயலாமல், குழப்பம் கொண்டு, திரு குர்ஆன்
  இவ்விருவரில் ஒருவர் வரலாற்றில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை, மற்றொருவர் வரலாற்றில்
  இணைத்து அறிவித்து உள்ளதாக” திரு உமர் அவர்கள் குற்றம் சுமத்த முனைவதை நம்மால்
  அறிய முடிகிறது. அவை: 
  
   
    
1 
 | 
    
திரு
    குர்ஆன் (திரு குர்ஆன் 28:23-28)
    அறிவிக்கும் சரித்திரத்தில்,  திரு
    மூஸா (அலை) அவர்களின் மனைவியின் தந்தைக்கு இரண்டு புதல்விகள் இருந்ததாகவும்,
    இவற்றில் ஒருவரை திரு மூஸா (அலை) அவர்களுக்கு, 8 அல்லது 10 ஆண்டுகள் தனக்கு
    ஊதியம் புரிய நிபந்தனை பெயரில் திருமணம் முடித்து கொடுத்ததாகவும் அறிவிக்கிறது.
    இதற்க்கு முற்றிலும் மாறாக பைபிள் (Exodus 2:15-22) திரு மூஸா (அலை) அவர்களின் மனைவியின்
    தந்தைக்கு ஏழு புதல்விகள் இருந்ததாகவும், இவற்றில் ஒருவரை திரு மூஸா (அலை)
    அவர்களுக்கு, எந்த நிபந்தனையும் இன்றி கொடுத்ததாக அறிவிக்கிறது.  
  
இவை
    (திரு உமர் அவர்களின் கருத்து
    அடிப்படையில்) பைபிள் (Genesis 29:1-30) அறிவிக்கும், திரு யாக்கோபு அவர்களின் வரலாற்றில்
    இருந்து எடுக்க பெற்ற, திரு குர்ஆன் அறிவிக்கும் திரு மூஸா (அலை) அவர்களின்
    வரலாற்றில் தவறுதலாக இணைக்க பெற்றவை என, திரு உமர் அவர்கள் குற்றம் சுமத்த முயன்று
    இருந்தார். 
  
 | 
    
    
2 
 | 
    
இவற்றை
    போல், திரு குர்ஆன் (திரு குர்ஆன் 28:29)
    வசனத்தில், திரு மூஸா (அலை) அவர்கள் தன் குடும்பத்தாருடன் தாயகம் பயணிக்கும்
    வேளையில் இறைவனை செவியுற்ற செய்தியை அறிவிக்கிறது, இது தவறான சரித்திரம், பைபிள்
    (Exodus 32:22-30) சரித்திரத்தின் அடிப்பட்டையில் திரு
    யாக்கோபு அவர்கள் தாம் தன் குடும்பதோருடன் பயணத்தின் வேளையில் இறைவனை
    சந்தித்தார் என்று பைபிள் அறிவிக்கிறது இது தான்
    சரியானது என திரு உமர் அவர்கள் குற்றம்
    சுமத்த முயன்று இருந்தார். 
  
 | 
    
 
  
  
நம்முடைய
  விளக்கம்: 
திரு உமர்
  அவர்களே, சரித்திர பிழைகளின் களஞ்சியம் என்று வர்ணிக்க பெரும் பைபிள் உடனா திரு
  குர்ஆணை ஒப்பிட்டு பார்க்க எங்களை வினாவுகிறீர்கள்? விந்தையாக இருக்கிறது... 
  
யூதர்கள்,
  இஸ்லாமியர்கள் இன்னும் கிறிஸ்தவ அறிஞ்சர்களே முரண்படும், இன்னும் ஏற்க மறுக்கும்
  பைபிள் சரித்திரத்தையா உண்மை சரித்திரம் என்று வாதாட முனைகிறீர் ??? 
  
இதற்க்கு முன்னரே, பல
  பைபிள் சரித்திர பிழைகளை நாங்கள் கோடிட்டு இருக்கிறோம், இதற்கே நீங்கள்
  இன்றளவும் தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு பதில் அளிக்க முயலாத நிலையில், இதனை
  போன்ற கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து வெளியிடுவது உங்களுக்கு வெட்கத்தை தர வில்லையா? 
  
  
   
    
திரு குர்ஆன்: 
  
 
    3:61   فَمَنْ حَاجَّكَ فِيهِ مِن بَعْدِ مَا جَاءَكَ مِنَ
    الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ
    وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ
    فَنَجْعَل لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ 
3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும்
    உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து
    தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள்
    புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்;
    எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு)
    ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்”
    என்று நாம் பிரார்த்திப்போம்!” என
    நீர் கூறும். 
3:62   إِنَّ هَٰذَا لَهُوَ
    الْقَصَصُ الْحَقُّ ۚ وَمَا مِنْ
    إِلَٰهٍ إِلَّا اللَّهُ ۚ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 
3:62. நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு;
    அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை; நிச்சயமாக
    அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன். 
  
 | 
    
 
  
  
  
வாசகர்களே, தெளிவான
  எழுத்து விவாத அழைப்பை நாம் விடுத்தாலே தலைமறைவாகும் திரு உமர் அவர்கள், திரு
  குர்ஆன் பரிந்துரைக்கு ஒப்ப, தங்கள் புதல்வர்களை சபைக்கு அழைத்து இறைவன் பெயரில்
  சாபத்தை வேண்டி பிராத்திக்க வேண்டினால் அவ்வளவு தான்!!! 
  
வாசகர்களே,
  திரு உமர் அவர்கள் எழுப்பிய சந்தேகத்தில் மூவரின் வரலாறு அடங்கி இருக்கிறது. 
   
    
1 
 | 
    
திரு
    மோசே அவர்களின் மனைவியின் தந்தையின் சரித்திரம் 
 | 
    
    
2 
 | 
    
திரு
    மோசே அவர்களின் சரித்திரம்  
 | 
    
    
3 
 | 
    
திரு
    யாக்கோபு அவர்களின் சரித்திரம்   
 | 
    
 
  
  
திரு உமர்
  அவர்களே, திரு குர்ஆன் (திரு குர்ஆன் 28:23-28)
  அறிவிக்கும், திரு மூஸா (அலை) அவர்களின் மனைவியின் தந்தைக்கு இரண்டு
  புதல்விகள் என்பதனையும், அவ்விருவரில் ஒருவரை திரு மூஸா (அலை) அவர்களுக்கு, 8
  அல்லது 10 ஆண்டுகள் தனக்கு ஊதியம் புரிய நிபந்தனை பெயரில், திரு மூஸா (அலை)
  அவர்களின் மனைவியின் தந்தை திருமணம் முடித்து கொடுத்தார் என்பதையும்
  இஸ்லாமியர்கள் நாங்கள் முழுமையாக நம்புகிறோம். 
  
  
   
    
திரு
    உமர் அவர்களே, திரு குர்ஆன் அறிவிக்கும் சரித்திரத்தில், நிபந்தனை
    அடிப்படையில் திரு மூஸா (அலை) அவர்கள் திருமணம் முடித்ததை நீங்கள் கேள்வி
    எழுப்ப முயல்கிறீர்கள், இன்னும் "இதனை போன்று எந்த நிபந்தனையும் பைபிள்
    அறிவிக்க வில்லை" என்பது போன்று அறிவிக்க முனைந்து இருந்தீர்கள். நீங்கள் கண் இருந்தும் குருடராக, இதனை “திரு மோசே அவர்கள் தாம் இயற்றினார்” என நீங்கள் அறிவிப்பதில் துளி அளவும் உண்மையாக இருக்குமேயெனில்,
    நிபந்தனை அடிப்படையில் தான் திருமணம் முடித்ததை, திரு மோசே குறிப்பிட்டு
    இருப்பார், ஆனால் இது முகவரி அற்ற நபர்கள் இயற்றிய போலியான சரித்திரம் தானே? 
  
     
      
திரு குர்ஆன்: 
  
28:27   قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنكِحَكَ
      إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَىٰ أَن تَأْجُرَنِي ثَمَانِيَ
      حِجَجٍ ۖ فَإِنْ
      أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِندِكَ ۖ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ
      عَلَيْكَ ۚ سَتَجِدُنِي
      إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ 
28:27. (அப்போது அவர் மூஸாவிடம்)
      கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை
      செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய
      இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான்
      நாடுகிறேன் - ஆயினும், நீர்
      பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம்
      விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க
      விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில்
      உள்ளவராக காண்பீர்.”  
 | 
      
 
  
  
யூதர்கள் பெண் வீட்டாருக்கு மணப்பெண் தொகை/திருமணதிற்கான
    தொகையை (Ketubah) செலுத்த வேண்டும் என்பதனை நீங்கள் அறியாததா? இதனை
    நீங்கள் பைபிள்ளில் அறிய வில்லையா? 
  
     
      
  
Shechem also said to her father and
      to her brothers, “Let me find favor in your eyes, and whatever you
      say to me I will give. Ask me for as great a bride price and gift
      as you will, and I will give whatever you say to me. Only give me the
      young woman to be my wife.” (Genesis 34:11-12) 
  
 | 
      
 
  
  
     
      
  
But if her father refuses to let him marry her, the man
      must still pay him an amount equal to the bride price of a virgin.
      (Exodus 22:16-17) 
  
 | 
      
 
  
  
     
      
  
he told them, “Tell David that all I
      want for the bride price is 100 Philistine foreskins! Vengeance on my
      enemies is all I really want.” But what Saul had in mind was that David
      would be killed in the fight. (1 Samuel 18:25)  
  
 | 
      
 
  
  
திரு
    உமர் அவர்களே, நீங்கள் அறிவிக்க விரும்புவது போல் “நிபந்தனை
    அடிப்படையில் திரு மோசே அவர்கள் தன் மனைவியின் தந்தையிடம் ஊழியம் புரியவில்லை”
    என்ற பட்சத்தில், எதற்காக இறைவன் கட்டளையின் அடிப்படையில் தன் தாயகம் செல்ல தன்
    மாமானாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? நிபந்தனை ஊழியன் தானே அனுமதி பெற
    வேண்டும்? திரு மோசே அவர்கள், “தான் செல்கிறேன்” என்று அறிவித்தால் போதாதா? 
  
     
      
Moses went back to Jethro his father-in-law and said to him, “Please
      let me go back to my brothers in Egypt to see whether they are still
      alive.” And Jethro said to Moses, “Go in peace.” (Exodus
      4:18) 
 | 
      
 
  
  
திரு
    உமர் அவர்களே, முறையே மோசே அவர்கள் திருமணம் முடித்து இருந்தால் பெண்வீட்டார்
    தொகையை (Ketubah) செலுத்தி ஆக
    வேண்டும், அவர் முறையே திருமணம் முடித்தார் என்று திரு குர்ஆன்
    பரிந்துரைக்கிறது. ஆனால், பைபிள் அவர் முறையே திருமணம் முடித்த சரித்திரத்தை
    விவரிப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. பைபிள் வசன ஆதாரங்களை கண்டு விளக்கம் அளியுங்களேன். 
  
     
      
And Moses was content to dwell with the man: and he gave
      Moses Zipporah his daughter. (Exodus 2:21) 
 | 
      
 
  
  
திரு
    உமர் அவர்களே, "திரு மூஸா (அலை) இறைவனிடம் உரையாடியது தன்
    குடும்பத்தாரோடு பயணித்த வேளையில்" என்று திரு குர்ஆன் பரிந்துரைக்கிறது. இது
    தவறு, "திரு மோசே அவர்கள் தன் மாமனாரிடம் ஊழியம் செய்யும் வேளையில், அவர் இறைவனிடம்
    உரையாடினார்" என முகவரி அற்ற நபர்கள் இயற்றிய பைபிள் சரித்திரம் அறிவிப்பதே சரியானது
    என்பது போன்று நீங்கள் அறிவிக்க முனைந்து இருந்தீர்.  
  
திரு உமர் அவர்களே, திரு மோசே அவர்கள் தன் மாமனாரிடம்
    ஊழியம் செய்யும் வேளையில் இறைவனை சந்தித்து இருந்தால், அதனை அவரிடம் முன்னமே அறிவித்து
    இருப்பார் தானே? எதற்காக தன் உடன் பிறப்பை சந்திக்க போவதாக பொய்யுரைதார்?  
  
இறைவன் உரையாடலை திரு மோசே அவர்களின் மாமானார் முன்னமே
    அறிந்து இருந்தால், அப்பொழுதே அவர் திரு மோசேயுடன் துணை நின்று இருப்பார்
    அல்லவா? ஆனால், பைபிள் அவர் பின்னாளில் திரு மோசே அவர்களுக்கு துணை நின்றார்
    என்ற சரித்திரத்தை சொல்கிறதே? இதன் அடிப்படையில், திரு மோசே அவர்கள் இறைவனை
    முன்னமே செவியுற்றார் என்பது பொய்யான சரித்திரம் தானே? 
  
     
      
Moses’ father-in-law, Jethro, the priest of Midian, heard
      about everything God had done for Moses and his people, the Israelites.
      He heard especially about how the LORD had rescued them from Egypt. Earlier,
      Moses had sent his wife, Zipporah, and his two sons back to Jethro, who
      had taken them in. (Moses’ first son was
      named Gershom, a for Moses had said when the boy was born, “I have been a
      foreigner in a foreign land.” His second son was named Eliezer, for Moses
      had said, “The God of my ancestors was my helper; he rescued me from the
      sword of Pharaoh.”) Jethro, Moses’ father-in-law, now came to visit Moses
      in the wilderness. He brought Moses’ wife and two sons with him, and they
      arrived while Moses and the people were camped near the mountain of God.
      Jethro had sent a message to Moses, saying, “I, Jethro, your
      father-in-law, am coming to see you with your wife and your two sons.” So
      Moses went out to meet his father-in-law. He bowed low and kissed him.
      They asked about each other’s welfare and then went into Moses’ tent.
      Moses told his father-in-law everything the LORD had done to Pharaoh and
      Egypt on behalf of Israel. He also told about all the hardships they had
      experienced along the way and how the LORD had rescued his people from
      all their troubles. Jethro was delighted when he heard about all the good
      things the LORD had done for Israel as he rescued them from the hand of
      the Egyptians. “Praise the LORD,” Jethro said, “for he has rescued you
      from the Egyptians and from Pharaoh. Yes, he has rescued Israel from the
      powerful hand of Egypt! I know now that the LORD is greater than all
      other gods, because he rescued his people from the oppression of the
      proud Egyptians.” Then Jethro, Moses’ father-in-law, brought a burnt
      offering and sacrifices to God. Aaron and all the elders of Israel came
      out and joined him in a sacrificial meal in God’s presence. (Exodus
      18:1-12) 
  
 | 
      
 
  
  
திரு
    உமர் அவர்களே, திரு மோசே அவர்கள், இறைவனிடம் முதல் முறை உரையாடியது “சினாய்” மலையில் என பைபிள் வசனம் (Exodus
    3:1-4) அறிவிக்கிறது. நீங்கள் அறிவிக்க விரும்புவது போல, இந்த நிகழ்வு அவர்
    தன் மாமானரிடம் ஊழியம் செய்த வேளையில் என்பது சரியானதாக இருந்தால், “சினாய்”
    மலை “மத்யன்” நாட்டில் அமைந்து இருக்க வேண்டும் ஏன்னெனில், திரு மோசே அவர்கள்
    ஊழியம் செய்தது “மத்யன்” நாட்டில். ஆனால், “சினாய்” மலை வெகு தொலைவில் "எகிப்து”
    நாட்டில் அமைந்து இருக்கிறது என உங்கள் கிறிஸ்தவ அறிஞ்சர்கள் தாம் சாட்சி அளிக்கிறார்கள். அப்படியானால், திரு மோசே அவர்கள் தினமும் ஆடு மேய்க்க “அரேபியா” வில் துவங்கி “எகிப்து” நாட்டிற்கு வந்து இறங்கி, மீண்டும் மாலையில் “அரேபியா” விற்கு  கால் நடையாக சென்றடைவரா??? அக்காலத்தில் இது சாத்தியமா? இது ஒன்றே போதவில்லையா பைபிள் சரித்திரம் போலியானது என்பதனை அறிவிக்க???  
  
 | 
    
 
  
  
திரு உமர்
  அவர்களே, உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் இந்த கட்டுரையில் பதில் அளித்து
  இருக்கிறோம் என்று நம்புகிறோம். சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் திரு குர்ஆன் தெளிவாக
  அறிவிக்கும் இந்த சரித்திரத்தில், போலியாக சந்தேகம் எழுப்ப முயலும் நீங்கள், உங்கள்
  பைபிள்ளை தெளிவாக பிரித்து அறிந்து, பைபிள் வசன தெளிவான ஆதாரத்துடன், இந்த
  சரித்திரத்திற்கு தொடர்புடைய பைபிள் சரித்திர பிழைகளையேனும் விளக்கம் தர முயலுங்களேன்,
  ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நாள் ஒன்றுக்கு ஒரு
  பொய்யுரையை/கட்டுரையை வெளியிட வல்லமை பெற்ற உங்களுக்கு, இந்த பைபிள் சரித்திர
  முரண்பாடுகளை விளக்குவதா கடினம்???? இதோ சில முரண்பாடுகள் உங்களுக்காக: 
  
   
    
1 
 | 
    
திரு
    மோசே அவர்களின் மனைவியின் தந்தை சரித்திரம் தொடர்பான சில பைபிள் முரண்பாடுகள்: 
 | 
    
    
2 
 | 
    
திரு
    மோசே அவர்களின் சரித்திரம் தொடர்பான சில பைபிள் முரண்பாடுகள்: 
 | 
    
    
3 
 | 
    
திரு
    யாக்கோபு அவர்களின் சரித்திரம் தொடர்பான சில பைபிள் முரண்பாடுகள்: 
 | 
    
 
  
  
   
    
1 
 | 
    
திரு
    மோசே அவர்களின் மனைவியின் தந்தை சரித்திரம் தொடர்பான சில பைபிள் முரண்பாடுகள்: 
  
     
      
1.1 
 | 
      
திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் திரு மோசே
      அவர்களின் மனைவியின் தந்தை இயற் பெயர் என்ன? “ஜேத்ரோ / ஹோபாப் / ரேயுள்”?
      இவற்றில் ஏது சரியானது? 
  
பைபிள் பரிந்துரை - “ஜேத்ரோ” பார்க்க: 
       
        
One day Moses was
        tending the flock of his father-in-law, Jethro, a the priest
        of Midian. He led the flock far into the wilderness and
        came to Sinai, the mountain of God. (Exodus
        3:1) 
 | 
        
 
  
  
பைபிள் பரிந்துரை - “ஹோபாப்” பார்க்க:  
       
        
Now Heber the Kenite
        had moved away from the Kenites, the descendants of Hobab,
        Moses’ father-in-law. He lived near the great
        tree in Zaanannim near Kedesh.
        (Judges 4:11) 
 | 
        
 
  
  
பைபிள் பரிந்துரை - “ரேயுள்” பார்க்க:  
       
        
When the girls returned to Reuel, their father
        (Exodus 2:18) 
 | 
        
 
  
திரு உமர் அவர்களே, இந்த
      மூன்று பெயர்களில் எதனை தேர்வு செய்ய போகிறீர்கள்? இந்த மூன்று பெயர்களும்
      சரியானது என்று அறிவிக்க விரும்புகிறீர்களா? இதற்க்கு தொடர்புடைய தெளிவான
      பைபிள் வசன ஆதாரத்தையும் தாருங்களேன்? உங்களுக்கு இயலவில்லை என்றால், திரு
      மூஸா (அலை) அவர்களின் மாமானார் இயற்பெயரை காட்டிலும் அறியாத இறைவன், உங்கள்
      இறைவன் என்பதனை நீங்களே சாட்சி அளிக்கிறீர்கள் தானே?  
  
 | 
      
      
1.2 
 | 
      
திரு உமர் அவர்களே, பைபிள்
      அறிவிக்கும் திரு மோசே அவர்களின் மனைவியின் தந்தை இயற் தொழில் என்ன? “மத்யன்
      நாட்டு ஆசாரியன் / செம்பு கொல்லர்”? இவற்றில் ஏது சரியானது? 
  
பைபிள் பரிந்துரை - “மத்யன் நாட்டு ஆசாரியன்”
      பார்க்க: 
       
        
One day Moses was
        tending the flock of his father-in-law, Jethro, a the priest
        of Midian. He led the flock far into the wilderness and
        came to Sinai, the mountain of God. (Exodus
        3:1) 
 | 
        
 
  
  
பைபிள் பரிந்துரை - “செம்பு கொல்லர்”
      பார்க்க: 
       
        
And the descendants of the Kenite, Moses’
        father-in-law, went up with the people of Judah from the
        city of palms into the wilderness of Judah, which lies in the Negeb
        near Arad, and they went and settled with the people. (Judges
        1:16) 
 | 
        
 
  
  
 | 
      
      
1.3 
 | 
      
திரு உமர் அவர்களே, பைபிள்
      அறிவிக்கும் திரு மோசே அவர்களின் மனைவி எந்த தேசத்தை சேர்ந்தவர்? “மத்யன்
      தேசத்து பெண் / எத்தியோப்பியா தேசத்து பெண்”? இவற்றில் ஏது சரியானது? 
  
பைபிள் பரிந்துரை – “மத்யன் தேசத்து பெண்”
      பார்க்க: 
       
        
Now the priest of Midian had seven daughters
        who came as usual to draw water and fill the water troughs for their
        father’s flocks. (Exodus 2:16) 
 | 
        
 
  
  
பைபிள்
      பரிந்துரை – “எத்தியோப்பியா தேசத்து பெண்” பார்க்க: 
       
        
And Miriam and Aaron
        spake against Moses because of the Ethiopian woman whom he had
        married: for he had married an Ethiopian woman. (Numbers 12:1) 
 | 
        
 
  
  
திரு உமர் அவர்களே, மேலே
      கோடிட்ட இரண்டு தேசமும் ஒன்று தான் என்று அறிவிக்க விரும்புகிறீர்களா?
      இரண்டும் வெவ்வேறு தேசம் என்பதற்கான ஆதாரம் வேண்டுமா? 
  
 | 
      
 
  
  
 | 
    
    
2 
 | 
    
திரு
    மோசே அவர்களின் சரித்திரம் தொடர்பான சில பைபிள் முரண்பாடுகள்: 
  
     
      
2.1 
 | 
      
திரு உமர் அவர்களே, திரு மோசே
      அவர்கள் பேச்சாற்றல் கொண்டவரா? அல்லது பேச்சு திறன் அற்றவரா? ஏது சரியானது? 
  
பைபிள் பரிந்துரை - “பேச்சு திறன்
      அற்றவர்” பார்க்க: 
       
        
And Moses said unto the
        LORD, O my Lord, I am not eloquent, neither heretofore, nor since thou
        hast spoken unto thy servant: but I am slow of speech, and of
        a slow tongue. (Exodus 4:10) 
 | 
        
 
  
  
பைபிள் பரிந்துரை - “பேச்சாற்றல்
      கொண்டவர்” பார்க்க: 
       
        
And Moses was learned
        in all the wisdom of the Egyptians, and was mighty in words
        and in deeds. (Acts
        7:22) 
 | 
        
 
  
  
 | 
      
      
2.2 
 | 
      
திரு உமர் அவர்களே, பைபிள்
      இறைவன் மரணிக்க செய்தனவற்றில் எப்படிப்பட்ட கால்நடைகள் அடங்கும்? “அணைத்து
      கால்நடைகளும் கொள்ளபட்டனவா? அல்லது முதற்பேற கால்நடைகள் மட்டுமே கொள்ள
      பட்டனவா”? 
  
பைபிள் பரிந்துரை – “அணைத்து
      கால்நடைகளும் கொள்ளபட்டன” பார்க்க: 
       
        
And the LORD did that thing on the morrow, and all the cattle of
        Egypt died: (Exodus 9:6) 
 | 
        
 
  
பைபிள் பரிந்துரை – “முதற்பேற கால்நடைகள்
      மட்டுமே கொள்ள பட்டன” பார்க்க: 
       
        
And it came to pass, that at midnight the LORD smote all
        the firstborn in the land of Egypt, from the firstborn of
        Pharaoh that sat on his throne unto the firstborn of the captive that
        was in the dungeon; and all the firstborn of cattle. (Exodus
        12:29) 
 | 
        
 
  
  
 | 
      
      
2.3 
 | 
      
திரு உமர் அவர்களே, “பெரொஹ்”வின்
      இருதயத்தை யார் கடினமாக்கியது? “பெரொஹ் தாமே தன் இருதயத்தை கடினமாக்கி கொண்டானா”?
      அல்லது “பைபிள் இறைவன் பெரொஹ்வின் இருதயத்தை கடினமாக்கினானா”? 
  
பைபிள் பரிந்துரை – “பெரொஹ் தாமே தன்
      இருதயத்தை கடினமாக்கி கொண்டான்” பார்க்க: 
       
        
But when Pharaoh saw that there was respite, he
        hardened his heart, and hearkened not unto them; as the
        LORD had said. (Exodus 8:15) 
 | 
        
 
  
  
பைபிள் பரிந்துரை – “பைபிள் இறைவன்
      பெரொஹ்வின் இருதயத்தை கடினமாக்கிணன்” பார்க்க: 
       
        
But the LORD hardened Pharaoh's heart, so
        that he would not let the children of Israel go. (Exodus
        10:20) 
 | 
        
 
  
  
  
 | 
      
      
2.4 
 | 
      
திரு உமர் அவர்களே, இஸ்ரவேலர்கள்
      எத்தனை ஆண்டு காலம் எகிப்தில் வாழ்ந்தார்கள்? “400 ஆண்டு காலமா”?
      அல்லது “430 ஆண்டு காலமா” ? 
  
பைபிள் பரிந்துரை – “430 ஆண்டு காலம்” பார்க்க: 
       
        
Now the length of time the Israelites lived in Egypt
        was 430 years. (Exodus
        12:40) 
 | 
        
 
  
  
பைபிள் பரிந்துரை – “400 ஆண்டு காலம்” பார்க்க:  
       
        
Then the Lord
        said to Abram, “Know for certain that
        your descendants will be strangers in
        a foreign country. They
        will be enslaved and oppressed for
        four hundred years. (Genesis
        15:13) 
 | 
        
 
  
  
 | 
      
      
2.5 
 | 
      
திரு உமர் அவர்களே, திரு மோசே
      அவர்கள் கூட்டத்தாருடன் இறைவன் செல்வதாக வாக்களித்தானா? அல்லது செல்ல
      மறுத்தானா?  
  
பைபிள் பரிந்துரை – “திரு மோசே அவர்கள்
      கூட்டத்தாருடன் இறைவன் செல்வதாக வாக்களித்தான்” பார்க்க: 
       
        
"I myself," the LORD answered, "will go along, to give you
        rest." (Exodus
        33:14)  
 | 
        
 
  
  
பைபிள் பரிந்துரை – “திரு மோசே அவர்கள்
      கூடாத்தாருடன் இறைவன் செல்ல மறுத்தான்” பார்க்க: 
       
        
"... I will send
        an angel before you to the land flowing with milk and honey. But I myself will not go up in your company,
        because you are a stiff-necked people; otherwise I might exterminate
        you on the way." (Exodus
        33:2-3) 
 | 
        
 
  
  
 | 
      
 
  
  
 | 
    
    
3 
 | 
    
திரு
    யாக்கோபு அவர்களின் சரித்திரம் தொடர்பான சில பைபிள் முரண்பாடுகள்: 
  
வாசகர்களே
    இதற்க்கு முன்னரே திரு யாக்கோபு அவர்கள் வரலாற்று தொடர்புடைய பைபிள்
    பொய்யுரைகளை நாம் வெளியிட்டு இருந்தோம், அவற்றுக்கே திரு உமர் அவர்கள்
    இன்றளவும் தெளிவான பைபிள் வசனம் கொண்டு விளக்கம் அளிக்க வில்லை பார்க்க: 
  
இன்னும்
    சில திரு உமர் அவர்களுக்காக: 
  
     
      
3.1 
 | 
      
திரு உமர் அவர்களே, பைபிள்
      வசனம் (Genesis 37:28), “மீதியானியர்”
      திரு யாக்கோபு அவர்களை எகிப்து நகரம் புகுவதற்கு முன்னரே “இஸ்மவேலர்களிடம்”
      விற்பனை செய்தார்கள் என்று அறிவிக்கிறது. இதற்க்கு முற்றிலும் மாறாக பைபிள்
      வசனம் (Genesis 37:36), “மீதியானியர்கள்” திரு யாக்கோபு அவர்களை எகிப்து
      நகரம் வந்து அடைந்த பிறகு எகிப்திய அரண்மனை காவலாலியிடம் விற்பனை
      செய்தார்கள் என்று அறிவிக்கிறது இவற்றில் எது சரியானது? பார்க்க: 
  
       
        
Then Midianite traders passed by.
        And they drew Joseph up and lifted him out of the pit, and sold
        him to the Ishmaelites for twenty shekels of silver. They took
        Joseph to Egypt. (Genesis 37:28) 
 | 
        
 
  
  
       
        
Meanwhile, the Midianite
        traders arrived in Egypt, where they sold Joseph to Potiphar,
        an officer of Pharaoh, the king of Egypt. Potiphar was captain of the
        palace guard. (Genesis 37:36) 
 | 
        
 
  
  
 | 
      
      
3.2 
 | 
      
திரு உமர் அவர்களே, பைபிள்
      வசனம் (Genesis
      50:13), திரு யாக்கோபு அவர்கள் “மக்பெலாஹ்” என்னும் இடத்தில்
      நல்லடக்கம் செய்ய பெற்றார் என்று அறிவிக்கிறது. இதற்க்கு முற்றிலும் மாறாக
      பைபிள் வசனம் (Acts 7:15-16), திரு யாக்கோபு
      அவர்கள் “மக்பெலாஹ்” என்னும் இடத்தில் இருந்து ஏறத்தாழ நாற்பது மைல்கள்
      தொலைவில் அமைந்து உள்ள “ஷேசெம்” எனும் இடத்தில் நல்லடக்கம் செய்ய பெற்றார்
      என்று அறிவிக்கிறது. இவை இரண்டில் எது சரியானது? என்று பைபிள் வசன
      ஆதாரத்தோடு விவரியுங்களேன்.  
  
       
        
They carried his body to the land
        of Canaan and buried him in the cave in the field of Machpelah,
        near Mamre. This is the cave that Abraham had bought as a permanent
        burial site from Ephron the Hittite. (Genesis 50:13) 
 | 
        
 
  
  
       
        
So Jacob went to Egypt. He died
        there, as did our ancestors. Their bodies were taken to Shechem
        and buried in the tomb Abraham had bought for a certain price from
        Hamor’s sons in Shechem. (Acts 7:15-16) 
 | 
        
 
  
  
 | 
      
 
  
  
 | 
    
 
  
  
முடிவுரை:  
வாசகர்களே, பைபிள் இறைவேதம் எனும் போர்வையில், முகவரி அற்ற, எண்ணிகையில்
  அடங்க நபர்கள் இயற்றிய கட்டு கதைகளை விவரிக்கிறது. அதனை இறைவேதம் என ஏற்க முன்
  வரும் திரு உமர் அவர்கள், துளியும் சந்தேகத்திற்கு இடம் அளிக்காமல், திரு
  குர்ஆன் அறிவிக்கும் தெளிவான சரித்திரங்களை ஏளனம் செய்ய முனைகிறார்.  
  
திரு குர்ஆன் அறிவிக்கும் சரித்திரத்தில் முரண்பாடு
  இருக்கவில்லை. மாறாக, முகவரி அற்ற நபர்கள் இயற்றிய பைபிள் தாம் நடந்தேறிய
  சரித்திரத்தை திரித்து முன்னுக்கு பின் முரணாக அறிவிப்பதை நாங்கள் முன்னர்
  கோடிட்ட தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு வாசகர்கள் தெளிவு பெற்று இருப்பீர்கள்
  என்று நம்புகிறோம்.  
  
இஸ்லாமியர்களின் நோன்பு
  காலத்தில் அவர்களுக்கு எதிராக தினமும் ஒரு பொயுரையை வரைய வல்லமை பெற்ற திரு உமர்
  அவர்கள், எங்கள் இந்த கட்டுரைக்கேனும் மழுப்பு தெரிவிக்காமல் தெளிவான பைபிள்
  ஆதாரம் கோடிட்டு விளக்கம் அளிப்பார் என்று நம்புகிறோம்...  
  
திரு உமர் அவர்களே
  இதனை போன்று செய்ய முன் வருவீர்களா? அல்லது தொடர்ந்து உங்கள் இணையதளத்தில் எதிர்
  கேள்வி எழுப்பும் நபர்களை பேடித்தனமாக எழுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்து
  கொண்டு இருக்க போகிறீர்களா? தெளிவான கையெழுத்து ஒப்பந்தத்தை வெளியுடுங்களேன், எதிர்பார்த்து
  காத்திருக்கிறோம்....  
  
  
அஸ்ஸலாமு
  அழைக்கும் 
  
-ஜியா &
  அப்சர்    
 | 
 
No comments:
Post a Comment