பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
“பைபிளில், திரு சால் அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்த நபர் யார்?”
வாசகர்களே, பைபிள் புதிய ஏற்பாட்டின்
பெரும் பகுதியை இயற்றிய நபராக நம்பப்படும் திரு பால் அவர்கள், திரு இயேசு அவர்களை
ஒருமுறையேனும் உயுருடன் பார்த்தது இல்லை என்ற செய்தியை இதற்க்கு முன்னரே தெளிவான
பைபிள் வசன ஆதாரம் கொண்டு விவரித்து இருந்தோம்.
பார்க்க:
திரு பால் அவர்களின் இயற் பெயர் சால்
என்று பைபிள் சான்ருரைகிறது, அவ்வாறே நாம் முன்னர் வெளியிட்ட பைபிள் தெளிவான வசன
ஆதாரத்திலும் திரு இயேசு அவர்கள், திரு பால் அவர்களை, அவருடைய இயற் பெயரான சால்
என்று அழைத்ததாக பைபிள் அறிவிக்கிறது.
இதற்க்கு முன்னர், திரு உமர் அவர்களுக்கு “ஆபிரகாமின் உண்மைப் பெயர் பைபிள் இறைவனுக்கு தெரியுமா?” என்ற கட்டுரையில் “திரு உமர் அவர்களே ஆபிரகாம் இறைத்தூதர், ஆகையால் அவருக்கு பைபிள்ளில் இறைவன் பெயர் மாற்றம் செய்தான் என்று கிறிஸ்தவர்கள் அறிவிக்கிறீர்கள். ஆபிரகாமின் மனைவி என்ன இறைதூதரா? மூதாட்டி ஆனா அவருக்கு எதற்காக இறைவன் பைபிள்ளில் பெயர்மாற்றம் செய்தான்?” என்ற கேள்வியை எழுப்பி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையில் திரு சால் அவர்களுக்கு பால் என்று பெயர் மாற்றம் செய்த நபர் யார், இன்னும் அதற்க்கு காரணம் என்ன? என்ற கேள்விகளையும் விட்டு வைக்கிறோம். வாசகர்களே, பைபிள்ளில் முதல் முறையாக திரு சால் அவர்களை பால் என்று அறிவிக்கும் வசனம் (Acts 13:9), இதனை தொடர்ந்து இந்த பெயர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று பைபிள் தெளிவாக அறிவிக்காமல், அவரை குறிப்பிடும் பெரும்பலான வசனங்களில் அவரை பால் என்றே அறிவிப்பதை நம்மால் காண முடிகிறது.
வாசகர்களே, பொதுவாக கிறிஸ்தவர்கள்
பைபிள் புத்தக தொகுப்பினை (எண்ணிகையில் அடங்கா) முகவரி அற்ற நபர்கள் இயற்றி
இருப்பினும், அது இறைவனால் வழங்க பெற்றது என்ற நம்பிக்கையை கொண்டுள்ளார்கள்.
வாசகர்களே, திரு சால் அவர்களுக்கு பால்
என்று பெயர் மாற்றம் செய்த நபர் யார், இன்னும் இதற்கு என்ன பின்னணி என்பதை திரு
உமர் அவர்கள் தெளிவான வசன ஆதாரத்தை கொண்டு விவரிப்பார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக
விடை பெறுகிறோம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர்
|
--
--
No comments:
Post a Comment