பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
பைபிளில் சரித்திர பிழை – பாகம் 1 – இறைத்தூதர் ஆரோன் (அலை) மரணித்தது எங்கே?
எழுத்து விவாதத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் திரு உமர்: அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்களின் பொய் கூற்றுகளை தகர்த்து எரிவதையே முதன்மை நோக்கமாக கொண்டு, எல்லாம் வல்ல இறைவன் கிருபையில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மறுப்பு கட்டுரைகள் வெளியிட்டு கொண்டு இருக்கிறோம். திரு உமர் அவர்களுக்கு, இதற்கு முன்னரே தெளிவான எழுத்து விவாத அழைப்புகள் விடுத்து, அவரை கையெப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டு, கட்டுரை வரைய துவங்குமாறு வேண்டி இருந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே.
இவ்வாறு எல்லாம் வல்ல இறைவன் கிருபையில், திரு உமர் அவர்களின் பொய் கூற்றுகளை பட்டியலிட்டு நாம் விடுத்த எழுத்து விவாத அழைப்புகளை ஏற்காமல், திரு உமர் அவர்கள் கால தாமதம் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. “இஸ்லாமியர்களுக்கு ஏதிராக தெளிவான ஆதாரம் எடுக்க, பல ஆதாரங்களை ஆராய வேண்டி உள்ளது. ஆதலால் கால தாமதம் ஆகிறது” என்று வாசகர்களுக்கு திரு உமர் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
பைபிள் திரு உமருடைய வேலையை சுலபமாக்குமா/உதவுமா ? ஆதலால் அவருடைய வேலையை எளிதாக்க, பைபிள் கருத்துக்களில் உள்ள முரண்பாட்டை தலைப்பாக கொண்ட இந்த கட்டுரையை கையில் எடுத்துள்ளோம். ஏனெனில் பைபிள் முரண்பாடுகளை முன் வைத்தால், அவர் எளிதில் அதற்கு பைபிளை ஆதாரமாக கொண்டு விளக்கம் அளிக்க கூடும் என்ற எண்ணுகிறோம். குறிப்பு: திரு உமர் அவர்களின் கருத்துப்படி, கடவுளின் தனிப்பட்ட பெயரில் கூட தெளிவில்லாத மதம் உலகிலேயே கிறிஸ்தவமாக தான் இருக்க முடியும். மாத கணக்கில் அதிகப்படியான கட்டுரைகள் வரைந்த பின்னும் தெளிவான ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் இதுவரை கிறிஸ்தவர்களின் இறைவனின் தனிப்பட்ட பெயர் என்ன என்பதை சரிவர நிரூபிக்கவில்லை. |
நம்முடைய இந்த கட்டுரைக்கேனும், பைபிள் உதவி கொண்டு தெளிவான ஆதாரங்களை முன் வைத்து எதிர் வாதம் வரைவார் என்ற நம்பிக்கையில் எல்லாம் வல்ல இறைவன் கிருபையை நாடியவர்களாக கட்டுரை வரைய துவங்குகிறோம்.
இறைத்தூதர் ஆரோன் (அலை) மரணித்தது எங்கே?
உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை, உலகில் வாழ்ந்தவர்களில், தன் உடன் பிறப்புக்கு ஒருவர் செய்ய கூடிய நன்மைகளில் மிகவும் உயர்ந்த நன்மையை செய்தவர் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் ஆவார் என்பது என்னுடைய கருத்து.
எல்லாம் வல்ல இறைவன், மூஸா (அலை) அவர்களுக்கு இறைத்தூதர் அந்தஸ்த்தை அளித்த பொழுது, மூஸா (அலை) அவர்கள், எல்லாம் வல்ல இறைவனிடம், தனக்கு பேச்சாற்றல் குறைவாக இருப்பதினால், தன்னுடன் தன் உடன் பிறப்பான ஆரோன் (அலை) அவர்களுக்கும் இறைத்தூதர் அந்தஸ்து வழங்கி தன் கரங்களுக்கு வலு சேர்க்குமாறு வேண்டினார். இதை ஏற்ற எல்லாம் வல்ல இறைவன், மூஸா (அலை) அவர்களின் உடன் பிறப்பான ஆரோன் (அலை) அவர்களுக்கும் இறைத்தூதர் அந்தஸ்தை வழங்கினான். இவ்வாறு இறைத்தூதர் அந்தஸ்த்தை பெற்ற ஆரோன் (அலை) அவர்களின் மரணத்தை பைபிள் இரு விதமாக விவரிக்கிறது அவை: 1 | “ஹோர்” மலையில் மரணித்தாரா?
ஆரோன் (அலை) அவர்கள், “ஹோர்” மலையில் மரணித்ததாக பைபிள் அறிவிக்கிறது. இவ்வாறே ஆரோன் (அலை) “ஹோர்” மலையில் மரணிப்பார் என்று இதற்கு முன்னரே பைபிளின் இறைவன் முன் அறிவிப்பு செய்கிறார். Number 20:24 he-shall-be-gathered Aaron to peoples-of-him that not he-shall-come to the land which I-give to son-of Israel on which you (p)-rebelled bidding-of-me to waters-of Meribah 20:25 take-you! Aaron and Eleazar son-of-him and bring-up-you! Them Hor the mountain 20:26 and strip-you! Aaron garments-of him and you-put-on-them Eleazar son-of him and Aaron he-shall-be-gathered and he-dies there 20:27 and he-is-doing Moses as-which he-instructed Yahweh and they-are-going-up to Hor the mountain to eyes-of all-of the congregation 20:28 and he-is-stripping Moses Aaron garments-of him and he-is-putting-on them Eleazar son-of him and he-is-dying Aaron there in summit-of the mountain and he-is-descending Moses and Eleazar from the mountain 20:29 and they-are-discerning all-of the congregation that he-expired Aaron and they-are-lamenting Aaron thirty day all-of house-of Israel. | Number 33:38 and he-is-going-up Aaron the-priest to Hor the-mountain on bidding-of Yahweh and he-is-dying therein year-of the forty to to-go-forth-of son-of Israel from land-of Egypt in the month the-fifth in-one to-the-month 33:39 and-Aaron son-of three and twenty and hundred-of year in-to-die-of-him in-Hor the-mountain | | 2 | “மோசெராஹ்” வில் மரணித்தாரா?
ஆரோன் (அலை) “ஹோர்” மலையில் மரணிப்பார் என்று இதற்கு முன்னரே பைபிளின் இறைவன் முன் அறிவிப்பு செய்து இருக்க, அவ்வாரே ஆரோன் (அலை) அவர்கள், “ஹோர்” மலையில் மரணித்ததாக பைபிள் அறிவிக்க, இதற்கு முரணான செய்திகளை பைபிள் தனக்கு தானே அறிவித்து கொள்கிறது. அது இறைத்தூதர் ஆரோன் (அலை) அவர்கள், பைபிளின் இறைவன் முன் அறிவிப்பு செய்த “ஹோர்” மலையில் மரணிக்க வில்லை, இதற்கு மாறாக “மோசெராஹ்” என்னும் இடத்தில மரணித்ததாக அறிவிக்கிறது. Deuteronomy 10:6 and-son-of Israel they-journeyed from-wells-of-sons-of-Jaakan Moserah there he-died Aaron and he-is-being-entombed there and he-is-becoming-priest Eleazar son-of-him instead-of-him | |
இப்படி இறைத்தூதர் ஆரோன் (அலை) அவர்களின் மரணத்தை முன்னுக்கு பின் முரணாக அறிவிக்கும் பைபிளை புகழ முன் வரும் கிறிஸ்தவ அறிஞரான திரு உமர் அவர்களை, இந்த தருணத்தில் நாம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம்: 1 | திரு உமர் அவர்களே, இதற்கு முன்னர் “குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு, குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்” என்ற கட்டுரையில் பைபிளை புகழும் வண்ணம் “இறைவனின் உண்மையான வேதமும், இஸ்ரவேல் மக்களின் மிகவும் பழமையான சரித்திர விவரங்களும் அடங்கிய பரிசுத்த பைபிளில்,...” என்று அறிவித்து இருந்தீர்.
திரு உமர் அவர்களே, நாங்கள் கோடிட்டது போல் முன்னுக்கும் பின் முரணான செய்திகளை அறிவிக்கும் பைபிளையா இறைவனின் உண்மையான வேதம் என்று அழைக்கிறீர்?
திரு உமர் அவர்களே, குர்ஆனில் சரித்திர பிழை இருக்கிறது எனறு பொய் அறிவித்து விட்டு, அதலால் அதை ஏற்க கூடாது எனறு அறிவித்த நீங்கள், எதன் அடிப்படையில் சரித்திர பிழை நிறைந்த பைபிளை ஏற்க முன் வந்தீர்கள்?
பைபிளில் பல பிழைதிருத்தம் இருப்பதானால், நாங்கள் கோடிட்ட பிழைகள் நீங்கள் வைத்து இருக்கும் பிழைதிருத்தத்தில் திருத்தப்பட்டு இருக்கலாம். அப்படியானால் நீங்கள் எந்த பைபிள் பிழைதிருத்ததை(revision) உங்கள் கையில் வைத்து இருக்கிறீர்கள் என்று எங்களுக்கு அறிவிப்பீர்களாயின் அதை நாங்கள் ஒப்பிட்டு பார்க்க வகையாக இருக்கும்.
| 2 | திரு உமர் அவர்களே, இதற்கு முன்னர், “குர்ஆன் முரண்பாடுகள், மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?” என்ற கட்டுரையில் “...குர்ஆன் கூறுகிறது. ஆனால், பைபிள் சொல்வது தான் சரியானது, எப்படியென்றால், எபிரேய பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை (தோரா) எழுதியவர் மோசே என்பதால்,...” என்று அறிவித்து இருந்தீர்.
திரு உமர் அவர்களே பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை இயற்றியவர் மோசே அவர்களா?
எந்த தெளிவான ஆதாரத்தை அடிப்படையாக வைத்து இதை அறிவித்தீர்கள் என்று எங்களுக்கு விளக்க முடியுமா?
உங்கள் கூற்றின் அடிப்படையில், பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை இயற்றிய நபர் மோசே என்பது உண்மை என்றால், அவர் தன் உடன் பிறப்பின் மரணத்தை முன்னுக்கு பின் முரணாக இயற்றி வைக்க வாய்ப்பு உள்ளதா?
இறைவன் செய்த முன் அறிவிப்புக்கு மாறாக, ஆரோன் (அலை) வேறு இடத்தில மரணித்தார் என்ற செய்தியை அறிவிக்க மோசே அவர்களுக்கு எவ்வாறு சாத்தியம் ஆயிற்று?
இதற்கு முன்னரே, பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை இயற்றிய நபர் மோசே என்பது உண்மை என்றால், “தன்னுடைய மரணத்தை இயற்றி வைக்க மோசே அவர்களுக்கு எவ்வாற சாத்தியம் ஆயிற்று?” என்று நாங்கள் வினாவிய கேள்விக்கும் நீங்கள் வரைய விருக்கும் கட்டுரையில் பதிலளிக்க முன் வருவீர்களா? Deuteronomy 34:5 So Moses, the servant of the Lord, died there in the land of Moab as the Lord had said. 34:6 He buried him in the land of Moab near Beth Peor, but no one knows his exact burial place to this very day. 34:7 Moses was 120 years old when he died, but his eye was not dull nor had his vitality departed. 34:8 The Israelites mourned for Moses in the deserts of Moab for thirty days; then the days of mourning for Moses ended. 34:9 Now Joshua son of Nun was full of the spirit of wisdom, for Moses had placed his hands on him; and the Israelites listened to him and did just what the Lord had commanded Moses. 34:10 No prophet ever again arose in Israel like Moses, who knew the Lord face to face. | | 3 | இரண்டும் ஒரே இடமா?
திரு உமர் அவர்களே, ஆரோன் (அலை) மரணித்ததாக அறிவிக்கும் “ஹோர்” மலை மற்றும் “மோசெராஹ்” என்ற இரண்டும் ஒரே இடம் என்ற வாதத்தை நீங்கள் முன் வைக்க விரும்பலாம். ஆனால் திரு உமர் அவர்களே, இவை இரண்டும் வெவேறு இடங்கள் என்றும், இன்னும் அதிகபடியாக இவை இரண்டுக்கும் மத்தியில் நெடு தூற பயணம் உள்ளது என்றும் பைபிள் சான்றளிக்கிறது... Number 33:30 and they-are-journeying from Hashmonah and-they-are-encamping in-Moseroth 33:31 and they-are-journeying from-Moseroth and they-are-encamping in Bena-Jaakan 33:32 and they-are-journeying from Bena-Jaakan and they are encamping in-Hor-Haggidgad 33:33 and they are journeying from Hor-Haggidgad and they-are-encamping in Jotbathah 33:34 and they-are-journeying from Jotbathah and they-are-encamping in Abronah 33:35 and they-are-journeying from-Abronah and they-are-encamping in-Ezion-Geber 33:36 and they-are-journeying from Ezion-Geber and they-are-encamping in-wilderness-of Zin She Kadesh 33:37 and they-are-journeying from Kadesh and they-are-encamping in HOR the mountain in outmost-part-of land-of Edom | |
திரு உமர் அவர்களே, நாங்கள் முன் வைத்துள்ள இந்த கட்டுரைக்கேனும் உங்கள் சொந்த கருத்தை விளக்கமாக தராமல், பைபிளின் தெளிவான வசன ஆதாரம் உதவிகொண்டு எங்கள் சந்தேகங்களை/கேள்விகளை விளக்குவீர்கள் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறோம்..
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர் |
No comments:
Post a Comment