பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
பைபிளில் சரித்திர பிழை – பாகம் 2 – திரு இயேசு
அவர்களுக்கு பெயர் சூட்டியது யார்?
வாசகர்களே, பைபிள்லின் கிரேக்க மூலம் திரு ஈஸா (அலை) அவர்களின் இயற் பெயர் “iEsoun” என்று அறிவித்த போதிலும் கிறிஸ்தவர்கள் அவரை ஜீஸஸ் என்று அழைப்பதை நீங்கள் செவியுற்று இருக்கலாம். பெயர்களில் அதுவும் குறிப்பாக திரு ஈஸா (அலை) அவர்களின் பெயரை கிறிஸ்தவர்கள் மொழிபெயர்ப்பு செய்வதை கண்டு நீங்கள் வியப்பு அடைந்து இருக்கலாம். இதில் ஒரு விசித்திரம் என்ன வென்றால் பைபிள்லின் இறைவன் திரு ஈஸா (அலை) அவர்களுக்கு சூட்டிய பெயரை மொழிபெயர்க்கும் வேளையில் “emmanouEL” என்பதனை “EMMANUEL” (“இம்மானுவேல்”) என்று மொழிபெயர்க்கும் கிறிஸ்தவ மொழிபெயர்ப்பாளர்கள் “iEsoun” என்ற பெயரை மொழிபெயர்க்கும் வேளையில் “Jesus” (ஜீஸஸ்) என்று பிழையாக மொழிபெயர்கிறார்கள். இன்னும் கிரேக்க மூலம் திரு ஈஸா (அலை) அவர்களின் அன்னையான திரு மரியம் அவர்களின் இயற் பெயரை “MARIAM” (மரியம்) என்று அழைக்க இதை மறுத்து பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் “MARY” (மேரி) என்று மொழிபெயர்கிறார்கள். இன்னும் அதிகபடியாக திரு ஈஸா (அலை) அவர்களின் பெயரை திரு ஈஸா (அலை) அவர்களுக்கு சூட்டியவராக இரண்டு நபரை பைபிள் ஆதாரமிடுகிறது.
முதலாவது: “iEsoun” என்ற பெயரை சூட்டியது திரு ஜோசப் அவர்கள்.
இரண்டாவது: “iEsoun” என்ற பெயரை என்ற பெயரை சூட்டியது திரு மரியம் (மேரி) அவர்கள்.
வாசகர்களே, திரு ஈஸா (அலை) அவர்களின் இயற் பெயர் “iEsoun” அல்லது Jesus (ஜீஸஸ்) என்பதனையும், இன்னும் இந்த பெயரை அவருக்கு சூட்டிய நபர் யார் என்பதனையும், திரு உமர் அவர்கள், திரு ஈஸா (அலை) அவர்கள் தன் வாயால் அறிவித்த தெளிவான பைபிள் வசன ஆதாரத்தோடு விளக்குவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்..
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர்
|
--
--
No comments:
Post a Comment