பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
தன் இயற்பெயரை அறியாத பைபிள்லின் இயேசு
வாசகர்களே, பைபிள்லின்
இறைவன், திரு இயேசு அவர்களின் பிறப்பை பற்றிய முன் அறிவிப்பை பைபிள்ளில்
அறிவிக்கும் வேளையில், அவரின் பெயர் “இம்மானுவேல்” என்று அறிவித்ததாக பைபிள்
அறிவிக்கிறது.
வாசகர்களே, பொதுவாக
கிறிஸ்தவர்கள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற மூன்று கடவுள்கள், ஆயினும் அவர்கள்
மூவர் அல்ல ஒரே கடவுள், என்ற பைபிள்லின் இயேசு தன் வாயால் அறிவிக்காத ஒரு கொள்கையை,
திரித்துவ கிறிஸ்தவ அடிப்படை கொள்கை என்று நமக்கு அறிவிப்பதை நீங்கள் செவியுற்று
இருப்பிர்கள். இன்னும் ஆதியில் இறைவனுடன் திரு இயேசு அவர்கள் உடன் இருந்தார்
என்று கிறிஸ்தவர்கள் அறிவிப்பதை நீங்கள் செவியுற்று இருப்பிர்கள். ஆயினும் இயேசு
உலகில் வாழ்ந்த நாட்களாக பைபிள் அறிவிக்கும் நிகழ்ச்சிகளில், இறைவன் தன் பிறப்பிர்க்கு
முன்னர், தன் பெயராக அறிவித்த “இம்மானுவேல்” என்ற பெயரில் தன் வாழ்நாளில் தன்னை எவரும்
விளிக்காத நிலையில், இதை அவர் தன் வாயிலாக எதிர்த்ததாக எந்த தெளிவான
ஆதாரத்தையும் நம்மால் காண முடியவில்லை. குறைந்த பட்சம் தனக்கு இறைவன் “இம்மானுவேல்”
என்று பெயர் சூட்டியதை, அவர் முன்னமே அறிந்தவராக தன் வாயால் அறிவிக்கும் எந்த
தெளிவான வசனமும் இருப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. இன்னும் சில கிறிஸ்தவ
அறிஞ்சர்கள் “இம்மானுவேல்” என்பது திரு இயேசு அவர்களின் இயற் பெயர் அல்ல, அவரின்
பல பெயர்களில் அதுவும் ஒன்று, அதற்க்கு பொருள் “இறைவன் நம்மோடு இருக்கிறார்”
என்ற வாதத்தை நீங்கள் செவியுற்று இருக்கலாம். அவ்வாறு வாதத்தை வைக்க விரும்பும்
கிறிஸ்தவர்களை நாம் கேட்க்க விரும்பும் கேள்வி பைபிள்ளில் திரு இயேசு அவர்கள்
தன் வாயால் தன்னை இறைவன் என்று அழைத்த வசனம் ஏதேனும் இருக்குமெனில் அதை
ஆய்வுக்காக எடுத்து தாருங்கள் என்பதாகும், அல்லது குறைந்த பட்சம் திரு இயேசு அவர்களின்
முன்னிலையில் எவரேனும் திரு இயேசு அவர்களை இறைவன் என்று அழைத்து அதை திரு இயேசு
அவர்கள் மறுக்காத தெளிவான வசனம் ஏதேனும் பைபிள்ளில் இருக்குமெனில் அதை ஆய்வுக்காக
எடுத்து தாருங்கள் என்பதாகும். இதற்க்கு மாறாக பைபிள்ளில் திரு இயேசு அவர்கள்
தன்னை பரிசுத்தமானவன் என்று அழைப்பதை கடுமையாக எதிர்த்த வசனத்தையே நம்மால் காண
முடிகிறது.
வாசகர்களே, மேலே கோடிட்ட ஆதாரத்தின்
அடிப்படையில் தனக்கு இறைவன் இட்ட “இம்மானுவேல்” என்ற பெயரை திரு இயேசு அவர்கள்
அறியாதவராகவே இருந்துள்ளார் என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.
தன்னுடைய இயற் பெயராக இறைவன் வழங்கிய பெயரை காட்டிலும் அறியாத ஒரு நபர், எப்படி
எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒப்பாக முடியும் என்பதை, திரு உமர் அவர்கள் தெளிவான
பைபிள் வசன ஆதாரத்தை வைத்து விளக்குவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை
பெறுகிறோம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர்
|
--
--
No comments:
Post a Comment