Thursday, October 27, 2011

திரு குர்ஆனில் பிழை திருத்தங்களா? - திரு உமர் அவர்கள் குர்ஆன் மீது கூறிய அவதூறுகளுக்கு மறுப்பு (மறுப்புகளின் தொகுப்பு)


திரு உமர் அவர்கள் குர்ஆன் மீது கூறிய அவதூறுகளுக்கு மறுப்பு 
(மறுப்புகளின் தொகுப்பு )

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
  

அஸ்ஸலாமு அழைக்கும்

பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

திரு உமர் அவர்கள் சமீபமாக உலகில் உள்ள  திரு குர்ஆனில் (பைபிளை போல்) பல பிழை திருத்தங்கள் (Versions) உள்ளது என்றும், இன்னும் திரு குர்ஆன் பைபிளை போல் முழுமை அடையா நூல் என தன் பொய் கூற்றுகளை வாசகர்களை நம்ப செய்யும் முயற்சியில், பல இடை சொருகள்கள் செய்யபட்டு போலியான மற்றும் தெளிவில்லாத ஆதாரங்களை கொண்டு மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு கொண்டு இருக்கிறார். திரு உமர் அவர்களின் இந்த பொய்யான கருத்துகளை எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் ஒன்றின் பின் ஒன்றாக ஆராய்ந்து தெளிவு பெற முனைவோம்.


வாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவித்த கருத்துகளை ஆராய்வதற்கு முன்னர், இஸ்லாமியர்கள் பைபிளின் நம்பகதன்மைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள்/கருத்துகளுக்கு அடிப்படை என்னவென்பதை பார்போம்:

பைபிள் முரண்பாடுகள் 
ஓர் இறை கொள்கையை பைபிளின் பழைய ஏற்பாடும், ஈஸா (அலை) அவர்களும் தெளிவாக போதிக்க, இதற்கு முற்றிலும் எதிரான திரித்துவ கொள்கையை கிறிஸ்தவர்கள் பைபிளில் இடைசொருகள்கள் செய்ததும், “நானே வணக்கத்திற்கு உரிய இறைவன் என தன்னை ஒரு முறையேனும் தன் வாயால் ஈஸா (அலை) அவர்கள் அறிவிக்காத நிலையில், இன்னும் தன்னை பரிசுத்தமானவர் என்று அழைப்பதை கடுமையாக எதிர்த்த ஈஸா (அலை) அவர்களை, கிறிஸ்தவர்கள் எல்லாம் வல்ல இறைவனுக்கு நிகராக வணங்குவதும், இன்னும் ஈஸா (அலை) அவர்களை ஒருமுறையேனும் உயிருடன்  பார்திராத திரு பால் அவர்கள், பைபிள் புதிய ஏற்பாட்டின் புத்தகங்களை அதிக படியாக இயற்றி, திரு ஈஸா (அலை) அவர்களின் போதனைக்கும்/கொள்கைக்கு முற்றிலும் எதிரான மார்கத்தை விளக்குவதுமே ஆகும். இது (பைபிள்) தொடர்பாக நாம் முன்வைத்த அடிப்படையான ஒரு சில கேள்விகளுக்கு கூட இன்னும் எந்த பதிலும் இல்லை. ஆக நாம் பைபிளை முன்வைத்து எழுதிய அணைத்து கருத்துக்களும்/ கேள்விகளும் உண்மை என்பதை திரு உமர் அவர்கள் ஒப்புக்கொள்கிறார். பைபிளின் குழப்பங்களையும், முரண்பாடுகளையும் மறுத்து விளக்கமளிப்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்த திரு உமர் அவர்கள், சரி பைபிளின் தரத்தை தான் உயர்த்த முடியவில்லை, குர்ஆனின் தரத்தை தாழ்த்தியாவது குர்ஆனின் தரமும் பைபிளின் தரத்தை போன்றதே என்ற மாயயை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

ஆக நாம், குர்ஆனின் மீது திரு உமர் அவர்களும் அவரின் ஆங்கில மூல ஆசிரியர்களும் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் மறுத்து உண்மையை நிரூபித்தாலே, குர்ஆன் இறைவனால் பாதுகாக்கப்பட்ட இறைவேதம் என்பதும், திரு உமர் அவர்கள் முன்னரே அறிவித்தது போல பைபிள் எல்லாம் கலந்த கதை புத்தகம் என்பதும் நிரூபணம் ஆகும்.

திரு உமர் அவர்கள், முன்னர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கூறி வந்தார், எழுத்து விவாததிற்கு தயார் என்றார். அவற்றுக்கு தக்க ஆதரங்களுடன் பதில் எழுதியவுடன் நழுவலாக பதில் என்ற போர்வையில் கேள்விகளையும் பொய் கருத்தையும் முன் வைத்தார். கடைசிவரை எழுத்து விவாததிற்கு வர மறுத்துவிட்டார்.

கடைசியாக எழுத்து விவாதத்திற்கு வர மாட்டேன் என்பதை சூசகமாக, "நான் கட்டுரைகள் ஆதாரங்களுடன் எழுதுகிறேன், முடிந்தால் பதிலளியுங்கள் பாதிப்பு யாருக்கு என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்" என ஒரு தோரணையில் எழுதினார் என்பதை அனைவரும் அறிந்ததே....

சரி இப்போது திருக்குரானை தலைப்பாக எடுத்திருக்கிறார். இப்போதும் கேட்கிறோம், திரு உமர் அவர்களே, நீங்கள் உங்கள் கருத்துக்கள் அனைத்திலும் உறுதியாக இருந்தால், நீங்கள் வெளியிடும் கட்டுரைகள் உங்கள் விவாதத்திற்கு உதவும் என்று நீங்கள் நம்பினால், பைபிளை காட்டிலும் குர்ஆனில் பிழைகள் உள்ளது என நம்பினால் தெளிவாக "பைபிள் - குரான் முரண்பாடுகள்" என்ற தலைப்பில் விவாதிக்க தயார் என பகிரங்கமாக அறிவியுங்கள். பிறகு மற்ற விவரங்கள் முடிவு செய்த பிறகு எழுத்து விவாதத்தை துவங்குவோம்.

ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக இந்த பகிரங்க அழைப்பை விடுகிறோம். உங்கள் பதில் என்ன?

அதுவரையில் வாசகர்கள் பயன்பெறுவதற்காக, இது தொடர்பாக நாம் வெளியிட்ட மருப்புகளின் தொகுப்பு....


  1. குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறா? - குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  2. "isa koran : குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்" என்ற கட்டுரைக்கு மறுப்பு
  3. உமரின் "உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு
  4. திரு உமர் அவர்களின், "வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு


மறுப்புகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்....

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்

No comments: