பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் -
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
பைபிள் புத்தகங்கள் - பைபிள் அறிஞர்கள் (scholars) பைபிள் உருவான / தொகுக்கப்பட்ட வரலாற்றையும் அதன் ஆசிரியைகளை பற்றியும் விரிவாக அலசும் நூல்களின் பட்டியல்.
திரு உமர் அவர்கள் முதற்கொண்டு அணைத்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும், பைபிள் மாறுபாடுகள் இல்லாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதும், இப்போது உலகம் முழுவதும் உள்ள பைபிள்கள் அனைத்தும் மாறுபாடில்லாமல், மனித கரங்களால் மாசுபடாமல் இருக்கிறது என்பதுமே. ஆனால் உண்மையோ இதற்கு எதிராக உள்ளது.
இது தொடர்பாக நாம் முன்வைத்த ஆதாரங்களுக்கு இன்னமும் பதில் இல்லை. பார்க்க:
இப்போது அவர்கள் கேட்பது, ஒருவர் பதில் எழுத வேண்டுமானால் அவர் அதனை ஆராய்ந்து எழுதும் அறிஞராக (scholar) இருக்க வேண்டுமாம். அப்போது தான் அவர்கள் அந்த பதிலை ஏற்றுகொள்வார்களாம்!!! திரு உமர் அவர்கள், "Answering..... " என பல கட்டுரைகள் எழுதியுள்ளார், ஆனால் இவர் எந்த படிப்பில் "டாக்டர்"(PhD) பட்டம் வாங்கினார் என அவர் பின்னால் இருப்பவர்கள் தான் அறிவிக்க வேண்டும். அப்படி இல்லையாயின் அவருடைய கட்டுரைகள் நாம் முன்னமே அறிவித்தது போல போலியான வெறும் கட்டு கதைகள் என்பது நிரூபணமாகும்.
சரி அவர் வழிக்கே வருவோம், உங்களுக்கு தேவை அறிஞர்களால் அறைந்து எழுதப்பட்ட ஆதாரங்கள். சரிதானே?
இதோ பட்டியலிடுகிறோம், பைபிளை ஆராய்ந்த அறிஞர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள்,
முதலாவதாக, பர்ட் டி. எர்மன் (Bart D. Ehrman) (http://www.bartdehrman.com). இவர் முன்னால் கிறிஸ்தவர், தான் கொண்டிருந்த அதீத கடவுள் நம்பிக்கையின் காரணமாக பைபிளை அறிந்துகொள்வதையும், ஆராய்வதையும் தனது முழு நேர படிப்பாக தேர்ந்தெடுத்தார். இவர் கல்லூரி படிப்பில் அறிந்தவையும், அவர் ஆராய்ச்சியின் விளைவாகவும் அறியப்பட்ட வரலாறு கிறிஸ்தவத்தின் அஸ்திவாரத்தையே அசைபதாக இருந்தது. இவரது ஆராய்ச்சியின் விளைவாக இவர் கிறிஸ்தவத்தை விட்டே வெளியேறிவிட்டார்.
இவர் எழுதிய, அமேரிக்காவில் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களில் சில....
அவர் எழுதியவை தவிர மற்றும் சில ஆசிரியர்களின் நூல்கள்.....
இவர்கள் அனைவரும் பைபிளை ஆராய்ந்து எழுதும் அறிஞர்கள். இவர்களின் புத்தகங்களில் இருந்து முன்வைக்கப்படும் எழுதுக்களுக்காவது திரு உமர் அவர்கள் மறுப்பு எழுதுகிறாரா என பார்ப்போம்!! இவற்றில் இருந்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் எவ்வாறு கிறிஸ்தவத்தின் ஆணி வேரையே அசைகப்போகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
கிறிஸ்தவ அறிஞர்களாலே எழுதப்பட்ட கிறிஸ்தவத்தை கேள்விக்குறியாக்கும், மேலும் அமெரிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகப்படியாக விற்பனையாகும் நூலாகவும் திகழும் மேற்கூறிய புததகங்கள் முன்வைக்கும் கருதுகளுக்கேனும் திரு உமர் அவர்கள் பதிலளிப்பாரா? மறுப்பு எழுதுவாரா? பொறுத்திருந்து பாப்போம்......
இன்ஷா அல்லாஹ்,
ஜியா & அப்சர்
நன்றி - அபூ ஸைத் அல் அதரி
No comments:
Post a Comment