பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
திரு உமர் அவர்கள் “ஸஃபிய்யாவின் திருமணம்” பற்றி அவதூறு கட்டுரை தொடர் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு தக்க முறையில் பதில் அளித்தவுடன் அதற்கு மேல் அவருடைய வாதத்தை நிரூபிக்க முடியாததால் அந்த கட்டுரை தொடரை அதற்க்கு மேல் தொடராமல் அத்துடன் முடித்துக்கொண்டார். ஆறு மாதங்களாக பதிலளிப்பார் என காத்திருந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் உமர் அவர்கள் இந்த வாதத்தில் தோற்றுவிட்டார் என முடிவு செய்து இந்த கட்டுரைக்கு முடிவுரை வரைய துவங்குகிறோம். குர்ஆன் 17:81 "சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்" திரு உமர் அவர்கள் “முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" என ஒரு கட்டுரையை ஆறு/ஏழு மாதங்களுக்கு முன்னால் வரைந்திருந்தார். அதன் முக்கிய சாராம்சம் (கட்டுரை சுருக்கம்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உமர் எழுதியது: முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
இதற்கு நாம் வெளியிட்ட மறுப்பு கட்டுரையின் சுருக்கம்:
இவற்றுக்கு எதிர் வாதம் வைப்பதாக நினைத்துக்கொண்டு திரு உமர் அவர்கள் எழுதிய கட்டுரையின் சுருக்கம் முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம் "ஸஃபிய்யா விரும்பி முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்களா?"
திரு உமர் அவர்கள் வெளியிட்ட இந்த கட்டுரையின் நமது அலசல்... உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரை பகுதி இரண்டின் சுருக்கம் இந்த அலசலின் மூலமாக அவர் கீழே உள்ள இரண்டு கேள்விகள் தவிர அவராக சொந்தமாக திரித்து கூறிய கருத்துக்கள் மட்டுமே உள்ளன என்பதும், நாம் வெளியிட்ட கருத்துக்களில் ஒன்றை கூட அவர் மறுத்து எழுதவில்லை என்பதையும் நாம் தெளிவுபடுத்தி இருந்தோம். அது மட்டும் இல்லாமல் அவர் தன் தலைப்பில்/கருத்தில் கூட நிலையாக இல்லை என்பதையும் நாம் விளக்கி இருந்தோம். திரு உமர் அவர்கள் முன் வைத்த கேள்விகள்,
பகுதி – இரண்டு, உமரின் " முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?" கட்டுரையின் பதில் தொடர்ச்சி இதன் சுருக்கம்
உமர் எங்கே? இதற்கு திரு உமர் அவர்கள் பதில் கட்டுரை எழுதுவார் என கடந்த ஆறு மாதங்களாக காத்துக்கொண்டிருந்தோம். ஆனால் திரு உமர் அவர்கள் எங்கு ஓடி ஒளிந்தார் என தெரியவில்லை. பாவம் அவரும் என்ன தான் செய்வார், இந்த கட்டுரையின் மூல எழுத்தாளர் கற்பனையாக திரித்து எழுதியதை, யாரும் எதிர் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவரும் மொழிபெயர்த்துவிட்டார். இப்போது தோல்வியை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் ஓடி ஒழிந்துவிட்டார். புகழனைத்தும் ஏக இறைவன் அல்லாவுக்கே..... திரு உமர் அவர்கள், பொய் உரைப்பதையும், அவதூறு கூறுவதையும் கிறிஸ்தவம் அனுமதிக்கிறதா? இல்லை அவர் கிறிஸ்தவம் கூறுவதற்கு எதிராக செயல்படுகிறாரா? கிறிஸ்தவம் தான் அவரை பொய் உரைக்கவும், அவதூறு கூறவும் தூண்டியது என்றால், கிறிஸ்தவம் எப்படிபட்டது என்பதை கிறிஸ்தவர்களே தெரிந்துகொள்ளுங்கள். அல்லது கிறிஸ்தவம் பொய் உரைப்பதையும் தடுத்திருந்தும் கிறிஸ்தவ கொள்கைகளுக்கு எதிராக திரு உமர் அவர்கள் செயல்படுகிறார் என்றால் அவர்களுக்கு ஒத்து ஊதும் கிறிஸ்தவர்களையும் அவர்களை வளர்த்துவிடும் பாதரிமார்களும் கிறிஸ்தவர்களாக அல்ல உலகில் ஒரு மனிதராக கூட வாழ தகுயற்றவர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். திரு உமர் அவர்கள் இஸ்லாமின் மீது கூறிய பொய்களும், அவதூறுகளும் தான் எடுபடாமல் போனதே, அதை விட்டுவிட்டு நாங்கள் முன் வைத்த பைபிள் வசனங்களுக்காவது மறுப்பு எழுதலாம் அல்லவா? நாம் எழுதிய பைபிள் வசனங்களுக்கு மறுப்பு எழுதாததன் மூலம், பைபிள் விபச்சாரத்தை அனுமதிக்கிறது என்பதை திரு உமர் அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார். இது தான் நீங்கள் உங்கள் கிறிஸ்தவத்தை காக்கும் லட்சணமா. இதை படிக்கும் நடுநிலை சிந்தனை கொண்ட வாசகர்களுக்கு, கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை காக்க பொய்கள், அவதூறுகள் என எந்த கீழ்த்தனமான செயல்கள் செய்யவும் தயங்க மாட்டார்கள் என புரிய வைக்க உதவிய திரு உமர் அவர்களுக்கு நன்றி. இதன் மூலம் வாசகர்களை இஸ்லாத்தின் உண்மை நிலைபாட்டை அறிய, இஸ்லாமிய வரலாற்றை தூய வடிவில் அறிய, வாசகர்கள் மனதில் இஸ்லாத்தை பற்றிய நல்லெண்ணத்தை விதைக்க திரு உமர் அவர்கள் உதவியதன் மூலம் "இஸ்லாத்தை பரப்ப திரு உமர் அவர்கள் உதவுகிறார்" என நாம் வெளியிட்ட கருத்தை உண்மைபடுத்திவிட்டார். மேலும் தொடரும் இறைவன் நாடினால்....... அஸ்ஸலாமு அழைக்கும், ஜியா& அப்சர் |
No comments:
Post a Comment