1
|
திரு
கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:
இரத்தமும்
மாமிசமும் பரலோக ராஜியத்தை சுதந்திர்த்துக் கொள்வதில்லை என்பது பைபிள்
வாக்கு. இப்படியிருக்க மாமிசமும் இரத்தமும் உடைய மனிதனை அங்கு படைத்தார்
என்பதும் சொர்கத்திலே பல அடிகளுடைய மனிதனை படைத்தான் என கப்ஸா விடுவதும்
அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறதா?
|
நம்முடைய
விளக்கம்:
திரு
கொல்வின் அவர்களே, இரத்தமும் மாமிசமும் பரலோக ராஜியத்தை சுதந்திர்த்துக்
கொள்வதில்லை என்பது பைபிள் வாக்கு என்று அறிவிகிறீர்கள். பைபிளை ஒரு முறையேனும் முழுமையாக படித்தது உண்டா?
இது பைபிள் வாக்கா?அல்லது திரு இயேசு தன் வாயால் அல்லது செயலால் அறிவித்ததா? அல்லது திரு பால் அவர்கள் அறிவித்தது என்று நீங்கள் நம்புவதா? அப்படியானால் திரு இயேசு அவர்களை ஒருமுறையேனும் உயுருடன் பார்திராத, இன்னும் அவருடைய பரிந்துரையை அறிந்திராத, இன்னும் அதிகப்படியாக திரு இயேசு அவர்களின் பரிந்துரையை அறிய விரும்பாத, திரு பால் அவர்கள் எழுதியதை தான் முழுமையான பைபிள் என்று அறிவிக்க விரும்புகிறீர்களா?
For I determined not to know anything among you,
except Jesus Christ, and him crucified. (1
Corinthians 2:2)
|
திரு
கொல்வின் அவர்களே, இரத்தமும் மாமிசமும் பரலோக ராஜியத்தை சுதந்திர்த்துக்
கொள்வதில்லை என்ற உங்கள் கருத்து சரியானது என்றால் அது எப்படி திரு இயேசு
அவருக்கு மட்டும் சாத்தியம் ஆயிற்று? அவர் எப்படி சரீரத்துடன் பரலோகம் சென்றார்?
திரு
இயேசு அவர்கள் சரீரத்துடன் பரலோகம் செல்ல வில்லை என்றால் அவருடைய உடல் அடக்கம்
செய்த இடம் ஏது? பைபிளை இன்னும் ஒரு முறை வாசித்து பாருங்கள். திரு இயேசு
அவர்களுடைய சரீரம் குகையினுள் இல்லாத நிலையில் நடந்த நிகழ்வுகளை அது
விவரிக்கும்.
"Don't be
alarmed," he said. "You are looking for Jesus the Nazarene, who
was crucified. He has risen! He is not here. See the place where
they laid him. (Mark
16:6)
|
And the
angel answered and said unto the women, Fear not: for I know that you seek
Jesus, who was crucified.
He is not here: for he is risen, as he said.
Come, see the place where the Lord lay. (Matthew
28:5-6)
|
திரு
கொல்வின் அவர்களே, இரத்தமும் மாமிசமும் பரலோக ராஜியத்தை சுதந்திர்த்துக்
கொள்வதில்லை என்ற உங்கள் கருத்து சரியானது என்றால் அது எப்படி திரு இயேசு
அவர்கள் சரீரத்துடன் பரலோகம் சென்ற கதையை பைபிள் விவரிக்கிறது??? அப்படியானால்
இந்த வசனங்கள் இடை சொருகள் என்று நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா? கீழே உள்ள பைபிள்
வசனங்கள் மூலம் இது உங்களுக்கு தெளிவாகும் என்று நம்புகிறோம்.
Then he said to
them, “Why are you frightened, and
why do doubts arise in your
hearts? Look
at my hands and my feet; it’s me! Touch
me and see; a ghost does not have flesh and bones like
you see I have.” When he had
said this, he showed them his hands and his feet. And while they still could not believe it (because of their joy) and were
amazed, he said to
them, “Do you have anything here to eat?” So they
gave him a piece of broiled fish, and he took it and ate it in front of them.
Then he
said to them, “These are my words that I spoke to you while I was
still with you, that everything written about me in the law of Moses and the
prophets and the psalms must
be fulfilled.” Then he opened their minds so they could understand the
scriptures, and
said to them, “Thus it stands written that the Christ would suffer and would rise from the dead on
the third day, and repentance for
the forgiveness of sins would be proclaimed in his name to all nations, beginning from Jerusalem. You are
witnesses of these things. And look, I
am sending you what my Father
promised. But stay in the
city until you have been clothed
with power from on high.” Then Jesus led them out as far as Bethany, and lifting up his hands, he
blessed them. Now during
the blessing he departed and
was taken up into heaven. (Luke 24:38 – 51)
|
திரு
கொல்வின் அவர்களே, சொர்க்கத்தில் மனிதனை படைத்தது கப்ஸா என்று அறிவிக்க
முனைகிறீர். ஆனால் இதனை முதலில் அறிவித்தது பைபிள் தானே? அப்படியானால் பைபிள்
கப்ஸா என்று சொல்கிறீர்களா? உதாரணமாக, பைபிள் அடிப்படையில், இறைவன் மனிதனை
படைத்த ஈடான் தோட்டம் எங்கு இருக்கிறது என்று தெளிவாக அறிவிக்காத நிலையில், அந்த
தோட்டத்தின் மத்தியில் ஜீவா மரம் உள்ளது என்று அறிவிக்கிறது.
Then the LORD God formed the man from the dust of the earth and blew
the breath of life into his nostrils. The man became a living being. The
LORD God planted a garden in Eden, in the east. That's where he put the man
whom he had formed. The LORD God made all the trees grow out of the ground. These trees were nice to look at, and their
fruit was good to eat. The
tree of life and the tree
of the knowledge of good and evil grew in the middle of the garden. (Genesis 2:7-9)
|
திரு
கொல்வின் அவர்களே, புதிய ஏற்பாடு அந்த ஜீவா மரம் அமைந்துள்ள இடம் சொர்கத்தின்
நடு பகுதியில் உள்ளது என்று தெளிவாக அறிவிக்கிறது. அப்படியானால் இறைவன் மனிதனை
படைத்த ஈடான் தோட்டம் சொர்க்கத்தின் மத்தியில் உள்ளது என்று தானேஅர்த்தம்? இல்லை
என்று மறுப்பு அளிக்க விரும்பினால் கீழ் வரும் வசனத்திற்கு தெளிவான பைபிள்
வசனங்கள் கொண்டு விளக்கம் அளியுங்களேன்.
He that has an ear, let
him hear what the Spirit says unto the churches; To him that overcomes will
I give to eat of the tree of life, which is in the midst of the paradise of
God. (Revelation 2:7)
|
|
2
|
திரு
கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:
அப்படின்னா அவன்
பூமிக்கு சிறக்கு வைத்து பறந்தா வந்தான்.
|
நம்முடைய
விளக்கம்:
திரு
கொல்வின் அவர்களே, உங்கள் நம்பிக்கை அடிப்படையில் தகப்பன் இல்லாமல் தன்னுடைய
தாயை அசுத்த படுத்தி பிறந்த சராசரி இயேசு அவர்களுக்கு சரீரத்துடன் சொர்க்கம்
பறந்து செல்வது சாத்தியம் என்ற நிலையில், இறைவன் தன் கையால் படைத்த முதல் மனிதன்,
தாய் மற்றும் தந்தை இல்லாத அதிசய பிறவி, உயிரினங்கள் அனைத்துக்கும் தானே பெயர்
சூட்டிய முதல் மனிதன், அவன் இறைவன் ஆணை படி, வானவர்கள் உதவிகொண்டு சொர்க்கத்தில் இருந்து பறந்து வருவது
சாத்தியம் இல்லாததா? அற்ப மனிதர்கள் வடிவமைக்கும் வானூர்திகளே அசர வைக்கும்
விதமாக விண்ணில் பறந்து செல்லும் வேளையில், அணைத்து உலகத்தையும் படைத்தது
பரிபாலிக்கும் இறைவனின் படைப்பான முதல் மனிதன் சொர்க்கத்தில் இருந்து இறைவன் கட்டளைப்படி பறந்து
வருவது என்ன அதிசயமா?
|
3
|
திரு
கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:
உண்பதும்
குடிப்பதும் கிறிஸ்த பரலோகத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
|
நம்முடைய
விளக்கம்:
திரு
கொல்வின் அவர்களே, பரலோகத்தில் உண்பது குடிப்பது இல்லை என்பது உங்கள் சொந்த
பைபிள் விரிவுரை தானே? ஏனெனில் பைபிளில் இயேசு வேறு விதமாக அறிவிக்கிறார். கீழ் வரும் வசனங்களை பாருங்கள்...
Then the mother of Zebedee’s sons
came to Jesus with her sons and, kneeling down, asked a favor of him. “What
is it you want?” he asked. She said, “Grant that one of these two
sons of mine may sit at your right and the other at your left in your
kingdom.” “You don’t know what you are asking,” Jesus said to
them. “Can
you drink the cup I am going to drink?” “We can,” they answered. Jesus
said to them, “You will indeed drink from my cup, but to sit at my
right or left is not for me to grant. These places belong to those for whom
they have been prepared by my Father.” (Matthew
20:20-23)
|
"I
can guarantee that I won't drink this wine again until that day
when I drink new wine with you in my Father's kingdom."
(Matthew 26:29)
|
திரு
கொல்வின் அவர்களே, மேலே உள்ள வசனங்களை படித்தீர்களா? தகப்பனின் ராஜ்ஜியம், சொர்க்கத்தில் அமைவதா அல்லது உலகதிலா? அப்படியானால், திரு இயேசு அறிவித்தது
சொர்க்கத்தில் அருந்த போகும் மதுவை பற்றியது தானே?? தெளிவான பைபிள் வசனங்கள்
கொண்டு மறுப்பு அளியுங்களேன்.
|
4
|
திரு
கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:
எந்த இடத்தில்
படைத்தார் என்தை பைபளிள் குறிப்பிடவில்லை. ஆயினும் ஆதியாகமத்தை
வாசிக்கும்போதும் பூமியிலேதான் உண்டாக்கினார் என்பது தெளிவு
|
நம்முடைய
விளக்கம்:
திரு
கொல்வின் அவர்களே, எந்த வசனத்தில் இது உங்களுக்கு தெளிவானது என்று எங்களுக்கும்
அறிவியுங்களேன்? இந்த வசனங்களில் பாம்பு பேசியது என்றும் அறிவிக்கிறது, இதனையும்
நீங்கள் ஏற்கிறீர்கள் தானே?
இதற்கு
முன்னரே, ஈடன் தோட்டம் எங்கு இருக்கிறது என்று தெளிவாக அறிவிக்காத நிலையில்
அந்த தோட்டத்தின் மத்தியில் உள்ள ஜீவா மரம் அமைந்த இடம் சொர்க்கம் என்ற தெளிவான
ஆதாரத்தை வெளியிட்டு இருந்தோம், அதற்கு நீங்கள் எந்த தெளிவான ஆதாரத்தையும்
கொண்டு மறுப்பு அளிக்க முயலவில்லையே ஏன்?
|
5
|
திரு
கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:
செங்கொடியின் தளத்திற்கு சென்று இது தொடர்பாக பதிவு
ஒன்று உள்ளது. அதற்கும் பதில் அளித்துவிட்டு வாருங்கள்.
|
நம்முடைய
விளக்கம்:
திரு
கொல்வின் அவர்களே, இதற்கு முன்னரே பல முறை இதை போன்ற கேள்விக்கு நாங்கள் பதில்
அளித்து விட்டோம். உதாரணமாக:
திரு உமர்
அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெளியிடும் பொய்யுரைகளுக்கு, ஒன்றன்
பின் ஒன்றாக, பதில் அளிப்பதை முதன்மை குறிக்கோளாக கொண்டு இந்த இணைய
தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள், மற்றும் தெளிவான மறுப்புகளை நாங்கள் வெளியிட்டு கொண்டு
இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. நம் இணையதளத்தில், வாசகர்கள்
தலைப்புக்கு தொடர்புடைய கேள்விகளை எழுப்பும் பட்சத்தில், அவர்களுக்கும்
நாம் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்கங்கள் அளிப்பது வழக்கம். இந்த முறை திரு
ஜான்சன் விக்டர் என்ற வாசகர், தான் வேறு ஒரு இணையதளத்தில் வெளியிட்ட கருத்துகளுக்கு நாம்
விளக்கம் அளிக்க வேண்டும் என்று வேண்டுதல் விடுத்து இருக்கிறார். இது போன்று
உலகில் உள்ள ஏனைய இஸ்லாமியர்களுக்கு எதிரான இணையதளங்களில் விடுக்கப்படும்
ஆதாரமற்ற தனி நபர் கருத்துக்களுக்கு, நாங்கள்
இரு இளைஞர்கள் விடை அளிக்க முனைவது, மிக
பளுவான வேலை என்பதனால் பொதுவாக இதனை நாம் செய்ய முனைவது இல்லை.
|
திரு
கொல்வின் அவர்களே, இது என்ன விந்தை? எங்களுக்கு மறுப்பு அளிக்க நீங்கள் முனைந்து
விட்டு, தெளிவான ஆதாரத்தை முன் வைக்காமல் பிற இணைய தளங்களுக்கு எங்களை பதில்
அளிக்க ஆணை இடுவது எந்த விதத்தில் நியாயம்??? இறைவன் நாடினால் அதனையும் செய்ய
முனைவோம் விரைவில்...
|
6
|
திரு
கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:
நான் கேட்ட 100 தாய் தந்தையர் பதிவுக்கு பதில் எங்கே சும்மா எழுத
வேண்டும் என்பதற்கhக எதையாவது எழுதி கொட்ட வேண்டாம். தெளிவான பதில் தேவை.
|
நம்முடைய விளக்கம்:
திரு
கொல்வின் அவர்களே, நாங்கள் பிரசுரித்த பைபிள் வசனம்:
Then
answered Peter and said unto him, Behold, we have forsaken all,
and followed thee; what shall we have therefore? And Jesus said
unto them, Verily I say unto you, That ye which have followed me, in the
regeneration when the Son of man shall sit in the throne of his glory, ye
also shall sit upon twelve thrones, judging the twelve tribes of Israel. And every one that hath forsaken houses, or brethren, or sisters, or father, or mother, or wife, or children, or lands, for my name's sake, shall receive an
hundredfold, and shall inherit everlasting life. But many that are first shall be
last; and the last shall be first. (Matthew 19:27 – 29)
|
நாங்கள்
முன்னரே அறிவித்த விளக்கம்:
உங்கள் நம்பிக்கை
அடிப்படையில், திரு
இயேசு தன் வாயால் அறிவித்த வாக்களிப்பை நீங்கள் ஏற்க மறுத்தால் அதற்கு
நாங்கள் பொறுப்பல்ல. இந்த பைபிள் வசனங்களை நாங்கள் இயற்ற வில்லை. மனிதனின்
நற்செயல்களுக்கு ஒன்றுக்கு நூறு பகரமாக வழங்குவதாக அந்த வசனம் அறிவிக்க வில்லை, மாறாக எந்த
உறவுகளுக்கு பகரமாக நூறு மடங்கு வழங்க விருக்கிறது என்பதனை அந்த வசனம் மிக
தெளிவாக பட்டியல் இடுகிறது. உங்கள் கருத்தின் அடிப்படையில் ஒருவனுக்கு நூறு
தாய் தந்தையர் இருக்க இயலாது என்றால், உங்கள்
நம்பிக்கையின் அடிப்படையில் இதனை அறிவித்த, அதனை
இயற்றிய, இன்னும் இதனை
இறைவேதமாக ஏற்றுள்ள நபர்களை தான் மன நல மருத்துவரிடம் எடுத்து செல்ல வேண்டும்.
சரிதானே திரு கொல்வின் அவர்களே???
|
திரு
கொல்வின் அவர்களே, உங்களுக்கு இன்னும் தெளிவாக வில்லை என்று நினைக்கிறேன், அல்லது
பைபிள் அறிவிப்பது போல் கண் இருந்தும் குருடர் காதிருந்தும் செவிடராக நடக்க
முயல்கிறீர்களா?
மேலே உள்ள
பைபிள் வசனத்தை இன்னும் ஒரு முறை படித்து பாருங்கள். மேலே உள்ள பைபிள் வசனத்தில்
பீட்டர், “தாங்கள் எல்லா உறவுகளையும்” விட்டு வருவதாக அறிவிக்கிறார், பொருள்களை அல்ல.
இதற்கு பகரமாக, திரு இயேசு அவர்கள் ஒவ்வொரு
உறவுகளையும் தெளிவாக பட்டியல் இட்டு விட்டு, அதற்கு நூறு மடங்கு தருவதாக
தெளிவாக வாக்களிக்கிறார். இதை நாங்கள் வேதமாக ஏற்க வில்லை, நீங்கள் தானே வேதமாக
ஏற்று உள்ளீர்கள். அப்படியானால் உங்கள் இயேசு பொய்யுரைத்தார் என்று நீங்களே
ஒப்பு கொள்கிறீர்களா? அல்லது இதனை இயற்றிய முகவரி அற்ற நபர் தவறு செய்தார் என்று
ஒப்பு கொள்கிறீர்களா???
திரு
கொல்வின் அவர்களே, மனிதனுக்கு எப்படி நூறு தாய் தந்தை இருக்க முடியும் என்று
கேட்கிறீர். இறைவனுக்கே (இயேசு) இறைவன் (எலோஹீம்) சரீரா தகப்பனாக இருக்கிறான்
என்பதனை நம்ப முன்வரும் நீங்களா இதை போன்ற கேள்விகளை எழுப்புவது??? இன்றைய விஞ்ஞான உலகத்தில், வாடகை தாய், கரு முட்டை வங்கி, மற்றும் உயிரணுக்கள் வங்கி
இயங்கும் நிலையில், இன்னும் க்ளோனிங் முறை பிறப்புகள் சாத்திய கூறுகள் நிறைந்து
இருக்கும் இந்த கால கட்டத்திலா நீங்கள் இதை போன்ற விந்தையான கேள்விகளை எழுப்பி
கொண்டு இருக்கிறிர்கள்???
திரு
கொல்வின் அவர்களே, உங்கள் இறைவன் வாக்கு மீது உங்களுக்கே சந்தேகமா??? பைபிள்
நம்பிக்கை அடிப்படையில் தாய் தந்தை இல்லாமல் ஆதி மனிதனை படைக்க வல்ல இறைவன்,
இன்னும் தகப்பன் இல்லாமல் திரு இயேசு அவர்களை படைக்க வல்ல இறைவன், தான் முன்னர்
அறிவித்ததை/வாக்களித்ததை செய்ய வல்லமை இல்லாதவனா? விந்தையாக உள்ளது...
|
7
|
திரு
கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:
பொதுமொழிபெயர்ப்பு
வேதாகமத்தை பாவியுங்கள்.
|
நம்முடைய
விளக்கம்:
திரு
கொல்வின் அவர்களே, “குறைந்த அளவே பிழைகள் கொண்ட ஒரு தமிழ் மொழியாக்கத்தை நீங்கள்
அறிவீர்களாயின் அவற்றை எங்களுக்கு அறிவியுங்கள் ஆயுவுக்காக..” என்று நாங்கள்
முன்னர் அறிவித்ததற்கு, பொது மொழிபெயர்ப்பு வேதாகமத்தை பாவிக்க சொல்கிறீர்கள். இது எந்த பைபிள் பிழை திருத்தத்தை சார்ந்தது, இன்னும் இதனை எங்கு கண்டறியலாம்,
இன்னும் இது எந்த வகையில் ஏனைய பைபிள் பிழை திருத்தங்களை காட்டிலும் சிறந்தது,
இன்னும் நாங்கள் முன்னரே விடுத்த பைபிள் மொழியாக்க பிழைகள் இந்த
மொழியாகதிர்க்கும் பொருந்துமா என்பதனை தெளிவகுங்களேன், வாசகர்கள் பயன் பெற...
|
8
|
திரு
கொல்வின் அவர்களுடைய கேள்வி / கருத்து:
குர்ஆன்
மொழிபெயர்ப்புகளிலும் ஏராளமான முரண்பாடுகள உள்ளன. அனுமதித்தால் அவற்றினை தரலாம்.
அவற்றில் எது சரி என உங்களால் சொல்ல முடியுமா?
|
நம்முடைய
விளக்கம்:
திரு
கொல்வின் அவர்களே, திரு குர்ஆன் மொழிபெயர்ப்பை பைபிள் பிழைதிருத்தம்/மொழிபெயர்ப்புகளோடு
ஒப்பிட முனைகிறீர். இதை போன்ற கேள்விக்கு இதற்கு முன்னறே பலமுறை நாங்கள்
விளக்கம் அளித்துளோம். திரு குர்ஆன் மொழிபெயர்ப்பு அதனுடைய மூல அரபி வசனத்தை
வெளியிட்டு, அதனுடன் தமிழில் விளக்கம் நிறைந்து இருக்கும். ஆனால் பைபிள்
மொழியாக்கம் இது எந்த மொழியில் இருந்து மொழியாக்கம் செய்ய பெற்றது, இன்னும் இதன்
மூல நூல் ஏது என்று விவரம் கூட இல்லாமல் பிழையான மொழிபெயர்ப்பை கொண்டு
இருக்கும்.
இஸ்லாமியர்கள்,
திரு குர்ஆன் வழங்க பெற்ற அரபி மொழியிலே திரு குர்ஆனை ஓதுகிறார்கள்.
மொழியாக்கத்தை வசனங்களின் அர்த்தங்களை அறிவதற்காக எடுத்து கொள்கிறார்களே அன்றி,
மொழியாக்கம் தான் முழுமையான வேதமாக ஏற்பது இல்லை. கிறிஸ்தவர்கள் பைபிள் எந்த மொழியில்
இயற்ற பெற்றது, அதனை இயற்றிய நபர் யார், இன்னும் அதனை மொழி பெயர்த்த நபர் யார்
என்ற தங்கள் மொழிபெயர்ப்பு பற்றிய அடிப்படை விவரங்கள் அறியாமலே அதனை வேதமாக
கொண்டுள்ளார்கள்.
எல்லாம்
வல்ல இறைவனின் வாக்கான திரு குர்ஆன் வசனங்களை அற்ப மனிதர்கள் மொழிபெயர்ப்பது
சுலபமான வேலை இல்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் பலவிதமான அர்த்தம் கொள்ளும் விதமாகவே
திரு குர்ஆன் வசனங்கள் அமைந்து உள்ளது. ஆகையால் அதனை மனிதர்கள் மொழிபெயர்க்க
முனையும் வேளையில் அறியாமல் சிறு பிழைகள் நிகழ வாய்ப்பு உள்ளது. இது ஒரு தனிப்பட்ட
மனிதனின் முயற்சியில் ஏற்படும் பிழை. இருப்பினும் அப்படி ஒரு பிழையை நீங்கள்
கண்டு, அதன் மொழியாக்க ஆசிரியருக்கு தெரிவித்தால், அதில் உண்மை இருப்பின் அதனை அவர் திருத்திக்கொள்ள மறுக்க மாட்டார் / மறுக்கவும் கூடாது.
திரு
குர்ஆன் மொழியாக்க பிழைகள், பைபிள் பிழைகளுக்கு நிகரானதாக இருக்காது என்று
நம்புகிறோம். உதாரணமாக, பைபிள் “எலோஹீம்” என்ற இறைவனின் பெயரை, “தேவன்” என்று
மொழி பெயர்த்து, அவன் தான் திரு இயேசு என்று அறிவிக்கும் அளவுக்கு பெரியதாக
இருக்காது என்று நம்புகிறோம்.
பைபிள் பிழைதிருதங்கள்
மற்றும் மொழிபெயர்ப்புகள் தனி நபர் முயற்சி அல்ல, அது ஒரு சபை, அல்லது இன்னும்
அதிகபடியான தேர்ச்சி பெற்ற நபர்களை கொண்டு, பெரிய முதலீட்டில் வெளி வரும்
பைபிளில் காண பெரும் அடிப்படை கோட்பாட்டு பிழைகள். இதை போன்று இஸ்லாத்தின் கோட்பாட்டிற்கு முரணான
மொழிபெயர்ப்பு நீங்கள் அறிவீர்களாயின், இன்னும் அதற்கு இஸ்லாமியர்களால்
மறுப்பு அளிக்க பெறவில்லை என்ற நிலையில், எங்களுக்கு அதனை கோடிடுங்கள்
ஆயுவுக்காக...
|
7 comments:
noநான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. சொர்க்கத்தில் ஒருவனுக்கு 100 தகப்பனிருப்பது எப்படி சாத்;தியம் விளக்கம் தேவை. அலட்ட வேண்டாம். ஆக மொத்ததில் குர் ஆன் மொழி பெயர்ப்புகளிலும் தவறு உள்ளது என்பதை ஒப்புக் கொள்கீறீர்கள் தானே!. இஸ்லாமியருக்கு எத்தனை பேருக்கு அரபி தெரியும் சொந்த மொழியிலேயெ படிப்பதில்லை. இதில் புரியாத மொழியில் வாசித்து பயன் ஏது?
// இன்றைய விஞ்ஞான உலகத்தில், வாடகை தாய், கரு முட்டை வங்கி, மற்றும் உயிரணுக்கள் வங்கி இயங்கும் நிலையில், இன்னும் க்ளோனிங் முறை பிறப்புகள் சாத்திய கூறுகள் நிறைந்து இருக்கும் இந்த கால கட்டத்திலா நீங்கள் இதை போன்ற விந்தையான கேள்விகளை எழுப்பி கொண்டு இருக்கிறிர்கள்???//
haq....ha... haaa...
தமாஷ் பண்ணுவதற்கு அளவுக்கு உள்ளது. சொர்க்கத்திலே குளோனிங் முறையில் இறைவன் உருவாக்குவானா? நல்ல ஜோக்.
அஸ்ஸலாமு அழைக்கும்,
திரு கொல்வின் அவர்களே, பைபிள் தெளிவான வசனங்களை முன் வைத்து விளக்கம் அளிக்க போவது இல்லை என்று உறுதியாக இருக்கிறீர்கள் அப்படித்தானே? இப்படி தான் ஞானஸ்தானம் எடுத்தீர்களா??? என்ன உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கை...
தொடர்ந்து கண் இருந்தும் குருடர், காதிருந்தும் செவிடர் என்று நிருபித்து கொண்டு இருக்கிறீர்...
குளோனிங் முறையில் இறைவன் உருவாகுவான் என்று நாங்கள் சொல்ல வரவில்லை!! ஆனால், அற்ப மனிதனுக்கே இப்படி அதிகபடியான தாய் தந்தை கொண்ட படைப்புகளை படைக்க சாத்தியம் மற்றும் வல்லமை இருக்கும் நிலையில், உங்கள் இறைவன், உங்கள் வேதத்தில் வாக்களித்ததை செய்ய வல்லமை இல்லாதவன் என்று வாதிடும் நீங்கள், எந்த அளவில் உங்கள் வேதத்தை ஏற்று உள்ளீர்கள் என்பதை எண்ணி நாங்கள் தான் நகைத்து கொண்டு இருக்கிறோம். அப்படியானால் இந்த பைபிள் வசனம் போலியானது என்று நீங்கள் ஒப்பு கொள்கிறீர்கள் தானே???
நூறு தாய் தந்தை இருக்கும் என்று நாங்கள் சொல்ல வில்லை, நூறு தாய் தந்தை மற்றும் மனைவிகள் வழங்குவதாக பைபிள் தானே அறிவிக்கிறது, உங்கள் இறைவன் தானே சொல்கிறார், உங்கள் இறைவனின் வாக்கு மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற பட்சத்தில் அதை உங்கள் இறைவனிடம் அல்லது இதனை இயற்றிய முகவரி இல்லாத நபர்களை தானே கேட்க வேண்டும். இது உங்கள் நம்பிக்கையில் உள்ள குறைபாடு, இதை நாங்கள் எப்படி சரி செய்வது???
திரு குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் பிழைகள் உள்ளது என்று நாங்கள் அறிவிக்க வில்லை. தனி மனிதர் முயற்சியில் உருவாகும் திரு குர்ஆன் மொழி பெயர்ப்பில் அறியாமல் பிழைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், அதனை உரிய நபருக்கு தெரிவித்தால் அதை அவர் கண்டிப்பாக நிவர்த்தி செய்வார் என்பது எங்கள் நம்பிக்கை. இன்னும், அது பைபிள் மொழிபெயர்ப்புகள், அடிப்படை கோட்பாடு பிழைகளை செய்து இருப்பதற்கு இணையாக இருக்காது என்றும் எங்கள் கருத்தினை நாங்கள் அறிவித்து இருந்தோம். இஸ்லாமில் எத்தனை பேருக்கு அரபி மொழி தெரியும் என்று கேள்வி எழுப்பி இருந்தீர். எத்தனை பேருக்கு அரபி குர்ஆன் படிக்க தெரியாது என்று கணக்கெடுப்பை எடுத்து வெளியிட்டால் அது பதில் அளிக்க ஏகுவாக இருக்கும். ஒரு திரு குர்ஆன் அரபி வசனம் காட்டிலும் தெரியாத இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கையை எடுத்து வெளியிட்டால் எங்களுக்கு பதில் அளிக்க அது எளிதாக இருக்கும். அர்த்தம் புரிந்து கொள்ளவே மொழிபெயர்ப்பு அது மூல வசனம் ஆகாது. இன்று திரு குர்ஆணை அரபி பிரதிகளை முழுமையாக மனனம் செய்துள்ள நபர்களை இன்னும் சிறுவர் சிறுமிகளை மிக சாதாரணமாக சந்திக்கலாம். பைபிள் மூலம் இயற்ற பெற்ற மொழியை காட்டிலும் அறியாத நீங்கள், அதனை எப்படி அது இயற்ற பெற்ற மொழியில் பயிலா முன் வருவீர்கள்???
உதாரணமாக புதிய ஏற்பாடு மட்தேவ் (matthew) இயற்ற பெற்ற மூல மொழி ஏது என்று நீங்கள் அறிவீர்களா??? மட்தேவ் (matthew) இயற்றிய பைபிள் எங்கே இருக்கிறது? தக்க ஆதாரத்துடன் பதில் அளியுங்கள்...
அஸ்ஸலாமு அழைக்கும்,
-ஜியா & அப்சர்.
அஸ்லாமு அலைக்கும்
மத்தேயு 22
23. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து:
24. போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
25. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.
26. அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.
27. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
28. ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;
எத்தனை முரண்பாடுகள்
Matthew 19:29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
And every one that hath forsaken houses, or brethren, or sisters, or father, or mother, or wife, or children, or lands, for my name's sake, shall receive an hundredfold, and shall inherit everlasting life.
Hi Zia & Afsar,
i want to talk to you guys, can u pls mail me abdulmax@aramco.com
வாசகர்கள் தங்களது ஆக்கங்களை அனுப்புவதற்கு ஏதுவாக the.religion.islam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை வாசகர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இதற்க்கு முன்னரே நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் வாசகர்கள் எங்களை தொடர்புகொள்வதற்கு ஏதுவாகவும், ஏளிதாகவும் இருக்கும்.
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர்
நான் ஒரு கிறிஸ்தவன் பரிசுத்த வேதத்தில் நாங்கள் கர்த்தர் என்றும் குர் ஆன் மொழி பெயர்ப்பில் நீங்கள் இறைவன் என்றும் சொல்லுகிறிர்கள் நாங்கள் இறைவனின் வல்லமையையும் அவரின் மகத்துவத்தையும் அறிந்திருக்கிறோம் அறியாத ஜனங்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு இறைவனின் அன்பை காட்டி இறைவனிடம் கூட்டி சேருங்கள் கிறிஸ்தவம் இஸ்லாம் யூதம் மூன்றிலும் உன்னதமான இறைவன் ஒருவனே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என கருதும்
உங்கள் சகோதரன்
Post a Comment