பிஸ்மில்லா
ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு
அழைக்கும்
பொருள்:
சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
பைபிள்
முரண்பாடு – கிறிஸ்தவ சொர்க்கத்தில்
தம்பதியினர் உண்டா? கேள்வி – பதில்
பகுதி தொடர்ச்சி – பாகம் 2
வாசகர்களே, சமீபமாக திரு டேனியல் பீட்டர் என்ற
நண்பர் தொடுத்த கேள்விகளுக்கு பதிலை இந்த பகுதியின் தொடர்ச்சியாக இணைக்கிறோம்.
daniel peter said...
அன்பு நண்பரே! ஆதம் ஏவாள் கணவன் மனைவியாக
இருந்தது சொர்க்கத்தில் அல்ல ஏதேன் தோட்டமாகிய பூமியில்தான். இரண்டாவது நூறத்தனையாக பலனை
அடைவார்கள் என்ற வசனத்தை தவறாகப் புரிந்து கொண்டு இயேசு 100 மனைவியைத்
தருவார் என்பதும் தவறான உங்களுடைய புரிந்து கொள்ளுதலே.
அதற்கு காரணம்“ குரானை எழுதிய நபி அவர்கள் பெண்கள் விஷயத்தில்
அப்படியாகத்தான் நடந்து கொண்டார். அவரது மனைவியர், வைப்பாட்டியர், அடிமைகள்
அதனை கணக்கில் எடுத்தால் அது 100ஐவிட தாண்டும். எனவே அதன் விளைவு 100
பெண்கள் கிடைப்பார்களென்று இயேசுவிடம் எதிர்பார்ப்பது தவறு. அது நபியிடம்
வேண்டுமானால் கிடைக்கும்.அந்த எண்ணத்தில்தான் அங்கும் பெண்கள், கன்னியர்
கிடைப்பார்களென்று அவர் கட்டளைபெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட சபல புத்தியுள்ளவர்
இயேசு கிறிஸ்து அல்லவே அல்ல இயேசு புனிதமானவர் என்று குரான்
கூறுகிறது குரான் வசனங்கள். மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான
அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு
அவருக்கு உதவி செய்தோம்; 2:253 “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக்
கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக்
கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும்
உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;3:55.. குரானை
நம்புவீர்கள்தானே. ஆனால் நபி பாவி என்றல்லவோ குரான் கூறுகிறது.40:55. குரான்
வசத்தை படியுங்கள் ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின்
வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும்
காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு
இருப்பீராக! எனவே இயேசு
பரிசுத்தமானவர் என்பதற்கும் ஷநபி ஒரு பாவி என்பதற்கும் நீங்கள் நம்புகிற குரனே
ஆதாரம் தருகிறது. அடுத்து 3வது குற“றச“சாட்டு.
இயேசுவை திருமணம் செய்வதாக கூறியுள்ளீர்களே! அவர் உலகத்தில் இருந்தபோதே
திருமணம் செய்து நபியைப்போல வாழவில்லையே பிறகு எப்படி மறுமையில் திருமணம்
செய்வார். திருமண பந்தம் என்பது நீடீய வாழ்வை அடிப்படையாகக் கொண்டது.நெருங்கிய
உறவுக்கு அடையாளமாக திருமண பந்தம் உள்ளது. அதனைப் போலவே ஆண்டவரை நம்புகிற
பக்தியுள்ளவர்களை உலகத்தைவிட்டு
நீடீய காலமாக தம்மோடு ஐக்கியப்பட்டு பரலோகில் வாழ்வார்கள் என்பதை உதாரணமாகக்
கூறுமபடியே பைபிள் கல்யாண நாளுக்கு ஒப்பிட்டு கூறுகிறது. இதிலும் உங்களது மனக்கண்களில் வேதாகமத்தை அறியும் வெளிச்சம் இல்லாமல்
இருப்பதையே காட்டுகிறது. எனவே உண்மையைப் புரிந்து பைிளை குறை
சொல்வதை நிறுத்தி அதனை நம்புங்கள் சமாதானம் உண்டாகட்டும்.
|
உதாரணமாக, “ஆதம் ஏவாள் கணவன் மனைவியாக இருந்தது சொர்க்கத்தில்
அல்ல ஏதேன் தோட்டமாகிய பூமியில்தான்.” என்று அறிவிகிறிர்கள், இதற்க்கு தெளிவான
ஆதாரமான பைபிள் வசனம் எங்கே?
ஏதேன் தோட்டம் எங்கே அமைந்து இருக்கிறது என்பதனை
பைபிள் தெளிவாக அறிவிக்காத போதிலும்,
- ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஜீவ மரம் அமைந்து
உள்ளது என்பதனை பைபிள் வசனம் (Genesis 2:7-9) தெளிவாக அறிவிக்கிறது.
- இந்த ஜீவ மரம் சொர்க்கத்தின் மத்தியில் அமைந்துள்ள தோட்டத்தில் இருக்கிறது என்பதாக
(Revelation 2:7) பைபிள்
வசனம் தெளிவாக அறிவிக்கிறது.
இதன் அடிப்படையில் ஜீவ மரம் அமைந்துள்ள ஏதேன்
தோட்டம் சொர்க்கத்தில் தானே அமைந்து உள்ளது?
இன்னும் தெளிவாக பைபிள் வசனம் the garden of Eden, to till the ground from whence he was taken (Genesis 3:19-24) ஏதேன்
தோட்டத்தில் இருந்து, ஆதி மனிதனை படைக்க மண் எடுத்து வரப்பட்ட நிலத்திற்கு மீண்டும்
அனுபப்பட்டார் என்று பைபிள் அறிவிக்கிறது. இது இரண்டுமே பூவுலகில் நடந்தது என்ற
பட்சத்தில், எதற்காக இப்படி இரண்டையும் பிரித்து அறிவிக்க வேண்டும்? தோட்டத்தில்
இருந்து வெளியேற்ற பெற்றார் என்று தானே பைபிள் அறிவித்து இருக்கும்???? இதை மறுக்க
வேறு ஏதேனும் தெளிவான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா?
இன்னும், “இரண்டாவது நூறத்தனையாக பலனை அடைவார்கள் என்ற வசனத்தை
தவறாகப் புரிந்து கொண்டு இயேசு 100 மனைவியைத் தருவார் என்பதும் தவறான உங்களுடைய
புரிந்து கொள்ளுதலே.” என்று அறிவிகிறீர்.
Then
answered Peter and said unto him, Behold, we have forsaken all, and followed
thee; what shall we have therefore? And
Jesus said unto them, Verily I say unto you, That ye which have followed
me, in the regeneration when the Son of man shall sit in the throne of his
glory, ye also shall sit upon twelve thrones, judging the twelve tribes of
Israel. And every one that hath forsaken houses, or brethren, or sisters, or father, or mother, or
wife, or children, or lands, for my name's sake,
shall receive an hundredfold, and shall inherit everlasting life.
But many that are first shall be last; and the last shall be first. (Matthew 19:27 – 29)
|
திரு டேனியல் பீட்டர்
அவர்களே, மேலே உள்ள பைபிள் வசனத்தை இன்னும் ஒரு முறை படித்து
பாருங்கள். மேலே உள்ள பைபிள் வசனத்தில்
- பீட்டர், “தாங்கள் எல்லா
உறவுகளையும்” விட்டு
வருவதாக தெளிவாக அறிவிக்கிறார், பொருள்களை
அல்ல.
- இதற்கு பகரமாக, திரு
இயேசு அவர்கள் ஒவ்வொரு உறவுகளையும் தெளிவாக பட்டியல் இட்டு விட்டு, அதற்கு
நூறு மடங்கு தருவதாக தெளிவாக வாக்களிக்கிறார்.
இதை நாங்கள் வேதமாக ஏற்க வில்லை, நீங்கள்
தானே வேதமாக ஏற்று உள்ளீர்கள். அப்படியானால் உங்கள் இயேசு பொய்யுரைத்தார் என்று
நீங்களே ஒப்பு கொள்கிறீர்களா? அல்லது இதனை இயற்றிய முகவரி அற்ற நபர் தவறு செய்தார் என்று
ஒப்பு கொள்கிறீர்களா???
திரு டேனியல் பீட்டர்
அவர்களே, உங்கள் இறைவன் வாக்கு மீது உங்களுக்கே சந்தேகமா??? பைபிள்
நம்பிக்கை அடிப்படையில் தாய் தந்தை இல்லாமல் ஆதி மனிதனை படைக்க வல்ல இறைவன், இன்னும்
தகப்பன் இல்லாமல் திரு இயேசு அவர்களை படைக்க வல்ல இறைவன், தான்
முன்னர் அறிவித்ததை/வாக்களித்ததை செய்ய வல்லமை இல்லாதவனா? விந்தையாக
உள்ளது. இது உங்கள் நம்பிக்கையில் உள்ள குறைபாடு தானே???
திரு டேனியல் பீட்டர்
அவர்களே, திரு இயேசு அவர்கள் பரிசுத்தமானவர் என்றும் திரு முஹம்மத் நபி (ஸல்)
அவர்கள் பாவி என்றும் திரு குர்ஆன் அறிவிப்பதாக அறிவிகிறீர். இதை போன்ற எந்த
தெளிவான வசனமும் திரு குர்ஆனில் இருப்பதாக எங்களால் அறிய முடிய வில்லை. இதோ நீங்கள்
கோடிட்ட வசனம்:
2:253 تِلْكَ الرُّسُلُ
فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ ۘ مِّنْهُم مَّن كَلَّمَ اللَّهُ ۖ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ ۚ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ
بِرُوحِ الْقُدُسِ ۗ وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلَ الَّذِينَ
مِن بَعْدِهِم مِّن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ وَلَٰكِنِ
اخْتَلَفُوا فَمِنْهُم مَّنْ آمَنَ وَمِنْهُم مَّن كَفَرَ ۚ وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلُوا
وَلَٰكِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ
2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச்
சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;
அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;
தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான
அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும்,
ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு
அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ்
நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த
பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள்
(தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால்
அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான்
கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும்
(காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால்
அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
|
3:55 إِذْ قَالَ اللَّهُ يَا
عِيسَىٰ إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ
الَّذِينَ كَفَرُوا وَجَاعِلُ الَّذِينَ اتَّبَعُوكَ فَوْقَ الَّذِينَ
كَفَرُوا إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ ۖ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنتُمْ
فِيهِ تَخْتَلِفُونَ
3:55. “ஈஸாவே! நிச்சயமாக
நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை
உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக்
கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு
மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல்
என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து
கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
|
திரு டேனியல் பீட்டர்
அவர்களே, மேலே நீங்கள் கோடிட்ட திரு குர்ஆன் வசனங்கள், திரு ஈஸா (அலை) அவர்களை
பரிசுத்தமானவர் என்று அறிவிப்பதாக நம்மால் அறிய முடியவில்லை, அவ்வாறு "தூய்மை
படுத்துவேன்" என்று வாக்குறுதியை தான் இறைவன் விடுகிறான். இன்னும் திரு ஈஸா (அலை)
அவர்களை பின் பற்றுவோரை மேன்மை படுத்துவதாக இறைவன் அறிவிக்கிரனே அன்றி அவரை
இறைவனாக வணங்கு வோரை அல்ல. திரு ஈஸா (அலை) அவர்களின் போதனையை ஏற்று, அவரை ஒரு
இறைதூதரக ஏற்று, எல்லாம் வல்ல ஏக இறைவனை வணங்குவோரை இறைவன் கண்டிப்பாக ஈடேற்றுவான்.
40:55 فَاصْبِرْ إِنَّ وَعْدَ
اللَّهِ حَقٌّ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ
بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ
40:55. ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின்
வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக;
மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து,
தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
|
திரு டேனியல் பீட்டர்
அவர்களே, ஏக இறைவன், இறைதூதர்களை பாவ மன்னிப்பு கோர பணிப்பது, அவர்கள் மனிதர்களுக்கு
ஒரு நல்ல முன் மாதிரி என்பதனால், அவர்களை கொண்டே மக்கள் வணக்க வழிபாடு வழிமுறைகளை அறிய
முடியும் என்பதனால், இதற்க்கு பொருள் அவர்கள் பாவி என்பது அல்ல. பைபிள்ளில் தன்னை
பரிசுத்தமானவர் என்று அழைப்பதை காட்டிலும் பொறுக்காத நபரை நீங்கள்
பரிசுத்தமானவர் என்கிறீர், வியப்பாக உள்ளது. அப்படியானால், திரு இயேசு அவர்கள் கற்று தந்த பாவ மன்னிப்புகளுக்கு என்ன விளக்கம் தருவீர்கள்?
இதை போன்ற
கருத்துக்கு இதற்க்கு முன்னரே "முஹம்மது ஒரு பாவியா ?" என்ற கட்டுரையில் தெளிவாக விளக்கம் அளித்து
இருக்கிறோம், தயவு செய்து அதை படித்து விளக்கம் அளிக்கவும்.
"They write down not what
they find but what they think is the meaning; and while they attempt to
rectify the errors of others, they merely expose their own" (Jerome,
Epist. lxxi.5)
|
இன்னும், “அப்படிப்பட்ட சபல புத்தியுள்ளவர் இயேசு கிறிஸ்து அல்லவே
அல்ல” என்று அறிவிகிறீர். நீங்கள் அறிந்து வைத்து இருக்கும் பைபிள், திரு
இயேசு அவர்களின் வாழ்க்கையில், எதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பைபிள்ளை
இயற்றிய உங்கள் முன் சென்ற கிறிஸ்தவ அறிஞ்சர்கள் விரும்பினார்களோ, அதை மட்டுமே
அறிவிக்கிறது. அவர்கள் அறிவிக்க விரும்பாத சரித்திரங்களை உங்கள் பைபிள் அறிவிப்பது
இல்லை.
நீங்கள் அறிந்து வைத்து இருப்பது, திரு இயேசு
அவர்களின் உலக வாழ்வின் இறுதி முன்றரை ஆண்டுகள் நிகழ்ந்த நிகழ்வுகளை, தீரித்து முகவரி
அற்ற நபர்கள் இயற்றி வைத்தவைகளை. இன்றளவும் பிழைதிருத்தம் காணும் நூல்களை. இதை
கொண்டு எப்படி அவருடைய முழுமையான சரித்திரத்தை அறிய முடியும்? இதற்க்கு முன்னர்
அவர் திருமணம் செய்தாரா? அல்லது திருமணம் இல்லாமல் பெண்களுடன் வாழ்ந்தாரா
என்பதனை இந்த முன்றரை ஆண்டு கால நிகழ்வுகளை கொண்டு ஆராய முடியுமா?
திரு டேனியல் பீட்டர்
அவர்களே, திரு இயேசு அவர்களுடன் இருந்த பன்னிரெண்டு அபோச்ட்லேகளில்
ஒருவரான பிலிப் இயற்றியதாக நம்பப்படும் “கோச்பேல் ஆப் பிலிப்”பை நீங்கள்
ஏற்க முன் வருவீர்களா?
முகவரி அல்லாதோர், தங்கள் கனவை (revelation) அறிவித்தாலும்
அதை இறைவேதம் என்று ஏற்க்க முன் வரும் நீங்கள், திரு இயேசு அவர்களுடன்
இருந்த பன்னிரெண்டு அபோச்ட்லேகளில் ஒருவரான பிலிப் இயற்றிய “கோச்பேல்
ஆப் பிலிப்” பை ஏற்க்க
மறுப்பது ஏன்? அப்படி
என்றால் ஜீசஸ் அவர்களை பார்த்திராத, கேட்டிராத மனிதர்கள் எழுத்தி வைத்ததை
மட்டுமே நீங்கள் ஏற்பவரா?
Gospel of Philip
Gospel of Philip, dating from the 2nd or
3rd century, survives in part among the texts found inNag Hammadi in 1945.[19] In a manner very similar to John
19:25-26, the Gospel of Philip presents Mary Magdalene among Jesus' female
entourage, adding that she
was hiskoinônos, a Greek word
variously translated in contemporary versions as partner, associate,
comrade, companion.[20]
There were three who always walked with the Lord: Mary, his mother,
and her sister, and Magdalene, the one who was
called his companion. His sister,[21] his mother and his companion were each a Mary.[19]
And the companion of [the saviour was Mar]y Ma[gda]lene. [Christ
loved] M[ary] more than [all] the disci[ples, and used to] kiss her [often]
on her [mouth]. The rest of [the disciples were offended by it and
expressed disapproval]. They said to him, "Why do you love her more
than all of us?" The Saviour answered and said to them, "Why do I
not love you like her?"[19]
“Jesus loved Mary
Magdalene more than all the disciples and used to kiss her often on the
mouth.”[3]
|
திரு டேனியல் பீட்டர்
அவர்களே,
- திரு இயேசு அவர்களுடன், முறையே
திருமணம் முடிக்காத மேரி மக்தேளேன், அவருடன் அனேக நேரங்களில் தனித்து
இருந்தார்கள் என்று பைபிள் விரிவுரையாளர்கள் அறிவிக்கிறர்கள்.
- ஆண் சீடர்களை காட்டிலும் திரு இயேசு அவர்களுடன்
மேரி மக்தேளேன் நெருக்கமாக இருந்தார் என்று பைபிள் விரிவுரையாளர்கள்
அறிவிக்கிறர்கள்.
- திரு இயேசு அவர்கள் இன்னும்
அதிகப்படியாக மேரி மக்தேளேன் அவர்களின் உதடுகளில் முத்தம் இடுவதை வாடிக்கையாக
கொண்டு இருந்தார் என்று கோச்பேல் ஆப் பிலிப் சாட்சி கூறுகிறது.
- திரு இயேசு அவர்கள் சிலுவையில் இட
நேரிடும் பொழுது மேரி மக்தேளேன் உடன் இருந்தார் என்று பைபிள் அறிவிக்கிறது.
- திரு இயேசு அவர்களை அடக்கம் செய்த
பிறகு அவர் உடலை ஆசுவாச படுத்த / தேய்த்து விட (anoint) மேரி
மக்தேளேன் சென்றார் என்று பைபிள் உறைகிறது.
- திரு இயேசு அவர்கள் மீண்டும்
உயிர்பித்து எழுந்ததை முதலில் அறிந்தவர் மேரி மக்தேளேன் என்று பைபிள்
அறிவிக்கிறது.
- திரு இயேசு அவர்களை கண்டவுடன் பரவசம்
அடைந்து, கட்டி
அணைக்க மேரி மக்தேளேன் முற்பட்டதையும், அதை திரு இயேசு அவர்கள் தவிர்ததை
பைபிள் அறிவிக்கிறது.
அப்படி என்றால் இவர்களுக்கு இடையே என்ன உறவு
இருந்தது என்பதை நீங்கள் தான் அறிவிக்க வேண்டும்.
ஒரு இளம் பெண், உங்கள்
தேவாலயத்தில் மதகுருவுடன் தனித்து இருப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தால், அவர்கள்
உதடுகளில் முத்தம் இடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தால், அது ஏற்க கூடியாதா? இதை ஏற்க
நீங்கள் மூன் வருவீர்களா? இதை
உங்கள் இயேசு செய்ததாக கிறிஸ்தவம் அறிவித்தால் அதை ஏற்க்க உங்களால் எப்படி
சாத்தியம் ஆகிறது?
இவ்வாறு ஒரு கன்னி பெண்ணுடன் தனித்து
இருப்பது தவறு என்பது, நீங்கள்
இறைவனாக வணங்கும் திரு இயேசு அவர்களுக்கு தெரியாதா? அல்லது
இதை அறிந்து கொண்டே செய்ய அவர் துணிந்தாரா? அவர் இவ்வாறு அறிந்து கொண்டே தவறு
செய்ய துணிந்த காரணத்தினாலே தன்னை பரிசுத்தமானவர் என்று அழைப்பதை கண்டித்தாரா?
Now a certain ruler asked him, “Good teacher, what must I
do to inherit eternal life?” Jesus said
to him, “Why do you call me good? No one is good except God alone. (Luke 18:18-19)
|
திரு இயேசு மற்றும் மேரி மக்தேளேன்னை இடையே
திருமணம் முடித்து இருந்தது என்ற வாதத்தை நீங்கள் முன் வைக்க விரும்பினால், பைபிளின்
வெளிபடுதுதல், திரு இயேசு அவர்களுக்கு நடக்க விருக்கும் திருமணத்தை அறிவிக்கிறது, அப்படி
என்றால் அவர் ஒன்றிக்கு மேல் மனைவிகளை கொண்டவர் தானே? அவரை பழிக்க
முன் வருவீர்கள் தானே?
Let us rejoice and exult and give him glory,
because the wedding celebration
of the Lamb has come, and his bride has made herself ready. She was permitted to be
dressed in bright, clean, fine linen” (for the fine
linen is the righteous deeds of the saints). Then the angel said to me, “Write the following: Blessed are those
who are invited to the banquet at the wedding celebration of the Lamb!” He
also said to me, “These are the true words of God.” (Revelation 19:7-9)
|
திரு டேனியல் பீட்டர்
அவர்களே, பைபிள்
சொர்க்கத்தில் நடக்கவிருக்கும் திருமணத்தை மிக தெளிவாக விவரித்த போதிலும் அதை
மறுத்து “உலகத்தைவிட்டு
நீடீய காலமாக தம்மோடு ஐக்கியப்பட்டு பரலோகில் வாழ்வார்கள் என்பதை உதாரணமாகக்
கூறுமபடியே பைபிள் கல்யாண நாளுக்கு ஒப்பிட்டு கூறுகிறது.
இதிலும் உங்களது
மனக்கண்களில் வேதாகமத்தை அறியும் வெளிச்சம் இல்லாமல் இருப்பதையே காட்டுகிறது.” என்று மீண்டும்
அறிவிக்க போகிறீர்களா?
பைபிள் தெளிவாக அறிவிக்கும் செய்திகளை பின்னுக்கு
தள்ளிவிட்டு உங்கள் ஆதாரம் இல்லாத சுய விரிவுரைகளை மட்டுமே நாங்கள் ஏற்க
வேண்டும் என்று நீங்கள் அறிவிப்பது எந்த விதத்தில் நியாயம்??? குறைந்த பட்சம்
ஒரு பெண்ணுக்கு ஏழு கணவர்கள் உலகில் இருந்தார்கள் ஆனால் சொர்க்கத்தில் அவர்க்கு
யார் கணவர் என்று கேள்வியை திரு இயேசு அவர்கள் முன் வைத்த பொழுது இப்படி பல தர
திரு மனதை அவர் தெளிவாக எதிர்தாரா?
In the Hebrew
Bible, polygyny was a permitted practice (and required in the case of a levirate
marriage) whilst polyandry (a woman having more than one
husband) was seen as adultery.
|
Suppose a man has two women, one whom he loves more than
the other,
and they both bear him sons, with the firstborn being the child of the less
loved women. In the day he divides
his inheritance he must not appoint as firstborn the son of the favorite
women in place of the other women son who is actually the firstborn. Rather, he must acknowledge the son of the less loved
women as firstborn and give him the double portion of all he has, for that
son is the beginning of his father’s procreative power – to him should go
the right of the firstborn. (Deuteronomy
21:15-17)
|
திரு டேனியல் பீட்டர்
அவர்களே, குறைந்த பட்சம் உங்கள் இறைவன் பல தார திருமணத்தை
எதிர்ப்பவராக இருந்தால், பல மனைவிகளுக்கு இடையே எவ்வாறு
சொத்துரிமை அமைய வேண்டும் என்று பைபிள்ளில் தெளிவாக விவரிப்பாரா? தெளிவான ஆதாரம்
கொண்டு எங்கள் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து விட்டு எதிர் கேள்விகள் எழுப்ப
முன் வருவீர்களா?
அஸ்ஸலாமு அழைக்கும்,
-ஜியா & அப்சர்
--
--
|
No comments:
Post a Comment