பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
பைபிளில் சரித்திர பிழை – பாகம் 3 – இறைவன் ஆபிரகாம் அவர்களுக்கு காட்சி அளித்தது ஆரான் நகரம் வந்தடைவதற்கு முன்னரா??? அல்லது பின்னரா??? வாசகர்களே, கிறிஸ்தவர்கள் வழக்கமாக இஸ்லாமியர்கள் கோடிடும் தவ்ராத் வேதம் பைபிள்லின் பழைய ஏற்பாடு பகுதி என்ற வாதத்தை முன் வைப்பதை நீங்கள் செவியுற்று இருக்கலாம். இன்னும் அதிக படியாக இந்த பழைய ஏற்பாடு திரு மூஸா (அலை) அவர்களால் இயற்ற பெற்றது என்ற கிறிஸ்தவ பொய்யுரைகளையும் நீங்கள் செவியுற்று இருக்கலாம். இன்னும் சில கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே தவ்ராத் வேத பகுதி என்று அறிவிப்பதையும் நீங்கள் செவியுற்று இருக்கலாம். இதற்க்கு முன்னரே, இந்த கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில், அவர்கள் குறிப்பிட விரும்பும் தவ்ராத் வேத பகுதி புத்தகங்களை இயற்றிய நபர் யார் என்று கேள்வி எழுப்பி தெளிவான ஆதாரம் கொண்டு நாம் வரைந்த கட்டுரைகளுக்கு, இன்றளவும் தெளிவான ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் பதில் அளித்ததாக நம்மால் அறிய முடியவில்லை. இந்த கேள்விகளின் தொடர்ச்சியாக நம்முடைய இந்த பைபிளில் சரித்திர பிழை – பாகம் 3 – இறைவன் ஆபிரகாம் அவர்களுக்கு காட்சி அளித்தது ஆரான் நகரம் வந்தடைவதற்கு முன்னரா??? அல்லது பின்னரா??? என்ற கட்டுரையை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையை நாடியவர்களாக வரைய துவங்குகிறோம். வாசகர்களே, கிறிஸ்தவர்கள் தவ்ராத் வேத பகுதி என்று அறிவிக்கும் புத்தகங்களில் முதலாவதாக இருக்கும் ஆதியாகமம் என்ற புத்தகத்தில், இறைத்தூதர் ஆபிரகாமின் வரலாற்று நிகழ்வுகள் என்று சில நிகழ்ச்சிகள் சித்தரிக்க பட்டுள்ளது. அவற்றில் ஒன்று அவர் தான் பிறந்த நகரத்தை விடுத்து வேறு நகரங்களுக்கு பயணப்பட்ட நிகழ்வு. கிறிஸ்தவர்கள் தவ்ராத் வேத பகுதி என்று அறிவிக்கும் புத்தகங்களில் முதலாவதாக இருக்கும் ஆதியாகமம் ஆபிரகாம் அவர்கள் தன் தந்தையுடன் ஆரான் நகரம் வந்தடைந்த பிறகு இறைவன் அவரிடம் பேசினார் என்ற விவரங்களை அளிக்கிறது.
குறிப்பு: கிழே கோடிடபடும் ஆதியாகமம் வசனத்தில்,
ஆபிரகாம் ஆரான் நகரம் வந்தடைந்த பிறகு இறைவன் அவரிடம் பேசினான் என்று ஆதியாகமம் அறிவிக்கிறதே
அன்றி, இறைவன் அவருக்கு காட்சி அளித்ததாக அறிவிக்க வில்லை. இன்னும் ஆபிரகாம்
தான் பிறந்த நகரத்தை விடுத்து ஆரான் நகரம் வந்தடைய காரணம் அவருடைய தந்தை என்றே ஆதியாகமம்
அறிவிக்கிறதே அன்றி, இறைவனின் கட்டளைக்கு இணங்கி அவர் இவ்வாறு பயணப்பட்டார்
என்று அது விவரிக்க வில்லை.
வாசகர்களே, கிறிஸ்தவர்கள் தவ்ராத்
வேத பகுதி என்று அறிவிக்கும் புத்தகங்களில் முதலாவதாக இருக்கும் ஆதியாகமம் அறிவிக்கும்
சரித்திர நிகழ்ச்சிக்கு முற்றிலும் எதிராக, திரு ஈஸா (அலை) அவர்களை
ஒருமுறையேனும் உயுருடன் பாத்திராதா திரு பால் அவர்கள் இயற்றியதாக நம்பாபடும் பைபிள்லின்
புதிய ஏற்பாட்டின் பகுதிகள் முரணான செய்திகளை அறிவிக்கிறது. அதாவது இறைவன் திரு
ஆபிரகாம் அவர்களுக்கு காட்சி அளித்தது அவர் பிறந்த நகரத்தை விடுத்து வேரு நகரம்
பயண படுவதற்கு முன்னர் என்ற முரணான செய்தி.
இந்த
தருணத்தில் திரு உமர் அவர்களை நாம் கேட்க விரும்பும் கேள்வி,
வாசகர்களே,
வழக்கமாக நாம், திரு உமர் அவர்கள் எந்த தெளிவான பைபிள் வசன ஆதாரத்தையும் முன்
வைத்து பதில் அளிக்க முயற்சிக்க போவது இல்லை என்பதனை தெளிவாக அறிந்து கொண்டே,
திரு உமர் அவர்கள் தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு பதில் அளிப்பார், என்ற
போலியான நம்பிக்கையில் உங்களிடம் விடை பெறுவதை போல், இந்த கட்டுரையிலும் நாங்கள்
உங்களிடம் விடை பெறுகிறோம். எல்லாம் வல்ல இறைவன் நாடினால் விரைவில் மிண்டும்
சந்திப்போம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர்
|
--
No comments:
Post a Comment