பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
“பைபிள் முரண்பாடு – எவரும் காண இயலா பைபிள் இறைவன் ஒரு திறன்
இல்லா மல்யுத்த வீரன்”
வாசகர்களே,
இதற்க்கு முன்னரே பைபிள் முரண்பாடு மற்றும் அதற்க்கு ஒன்றிய கருத்துகளை விவரிக்கும்
பல கட்டுரைகளை தெளிவான பைபிள் ஆதாரத்தை கோடிட்டு விவரித்து இருந்தோம், பார்க்க:
வாசகர்களே, மேலே கோடிட்ட
நம்முடைய முந்தைய கட்டுரைகளுக்கே திரு உமர் அவர்கள் இன்றளவும் தெளிவான பைபிள்
வசன ஆதாரம் கொண்டு மறுப்பு அளிக்க முயலாத/இயலாத நிலையில், தொடர்ந்து முகவரி அற்ற
நபர்கள் இயற்றிய கிறிஸ்தவ பைபிள் வரலாற்றை/பொய்யுரையை ஒன்றி, இஸ்லாமிய திரு
குர்ஆன் வரலாறு அமையாத/பொய்யுரைக்காத காரணத்தினால், அது பிழையான/பொய்யான வரலாறு என்பது போன்ற கருத்தினை வாசகர்கள்
மத்தியில் பரவ செய்யும் முயற்சியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொண்டு
இருக்கிறார்.
தன்னுடைய வேதத்தில்
உள்ள குறைபாடுகளை விவரிக்க முயற்சிக்க மறுக்கும் நபர், இன்னும் அந்த
முரண்பாடுகளை விளக்க வல்லமை அற்ற நபர், ஏனைய மதத்தின் வேதங்களை பரிகாசிக்க
முற்படுவது விந்தையாக இருக்கிறது.
இதற்க்கு
பதில் அளிக்கும் வண்ணம், இன்னும் பைபிள் முரண்பாடுகளை விவரிக்கும் முயற்சியின்
தொடர்ச்சியாக, எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையில் இந்த கட்டுரையை வரைய
துவங்குகிறோம்.
வாசகர்களே, எல்லாம் வல்ல ஏக இறைவனை காணும் சக்தி, சராசரி மனிதர்கள் கண்களுக்கு
அளிக்கப்படவில்லை என்பது பரவலாக எல்லா இஸ்லாமியர்களின் உறுதியான நிலைப்பாடாக
இருப்பதை நம்மால் காண முடிகிறது. இந்த கருத்தினை உறுதி செய்யும் பல தெளிவான பைபிள்
வசனங்களையும் நம்மால் காண முடிகிறது. இருப்பினும், இதற்க்கு முற்றிலும் முரணான
வரலாற்றை, திரு மோசேஸ் அவர்கள் இயற்றியதாக பொய்யுரைக்க பெரும் பைபிள்ளின் “ஆதியாகமம்” 32 ஆம் அதிகாரம் அறிவிக்கிறது.
அதாவது, எல்லாம் வல்ல
பைபிள்ளின் இறைவன், இறைத்தூதர் திரு யாக்கோபு அவர்களுடன் மல்யுத்தம் செய்து
வெற்றி பெற திறன் இல்லாத நிலையில், திரு யாக்கோபு அவர்களிடம் தன்னை விடுவிக்க
கோரியதாக ஒரு விந்தையான பைபிள் வரலாற்றை அறிவிக்கிறது, பார்க்க:
வாசகர்களே, எல்லாம் வல்ல
பைபிள்ளின் இறைவன் இறைத்தூதர் திரு யாக்கோபு அவர்களுடன் மல்யுத்தம் செய்து
வெற்றி பெற இயலாத நிலையில், திரு யாக்கோபு அவர்களிடம் தன்னை விடுவிக்க கோரியதாக
பைபிள் அறிவிக்கும் வரலாற்றை சரியானது என்று நாம் ஏற்று கொள்ள முனைந்தால்,
பைபிள் அறிவிக்கும் “இறைவனை எவரும் பார்த்தது இல்லை” என்ற வசனங்கள் அனைத்தும்
பொய்படும், இருப்பினும் முகவரி அற்ற நபர்களின் வாக்குகளை பற்றி திரு உமர் போன்ற
அறிஞ்சர் பெருமக்களுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவர்கள் இறைவனாக
ஏற்று உள்ள திரு இயேசு அவர்களின் வாக்கு பொய்யானதாக இருக்க கூடாது அல்லவா?
அப்படி அவர் பொய்யுரைத்து இருந்தால் இறைவனாக அல்ல, குறைந்த பட்சம் ஒரு இறைதூதராக
ஏற்க அவர் தகுதியானவர் தானா? திரு இயேசு அவர்கள் அறிவித்த பைபிள்
வாக்கு “இறைவனை எவரும் பார்த்தது இல்லை” (John 1:18)
இன்னும் பைபிள் அறிவிப்பது:
வாசகர்களே, இவ்வாறு
கேள்விகள் எழுப்பிய உடன் திரு உமர் போன்ற போலி பைபிள் அறிஞ்சர்கள், பைபிள்
தெளிவான வசனத்தை கொண்டு விளக்கம் அளிக்காமல், தங்கள் சொந்த விளக்கவுரையை
“திரித்துவ” கொள்கையை உள்ளே திணித்து அளிக்க முற்படுவார்கள்.
“பிதாவும் கடவுள், மகனும் (இயேசு)
கடவுள், எண்ணிகையில் அடங்கா தூய வானவர்களும் கடவுள், ஆனால் அவர்கள் மூண்று
கடவுள் அல்ல ஒரே கடவுள்”
என்று விளங்க முடியா விந்தையான
ஒரு கருத்தினை அறிவிப்பார்கள். இதன் அடிப்படையில் மூல கடவுளான பிதாவை யாரும்
பார்த்தது இல்லை, ஆனால் இதர/துணை கடவுளான மகனும் (இயேசு), எண்ணிகையில் அடங்கா தூய
வானவர்களை பலர் பார்த்து இருக்கிறார்கள், எனவே இறைத்தூதர் திரு யாக்கோபு
அவர்களுடன் மல்யுத்தம் செய்து வெற்றி பெற திறன் இல்லாமல் போனது மகன் (இயேசு)
அல்லது தூய வானவர்களாக இருக்கலாம், என்ற சுய விளக்கத்தை அவர்கள் அறிவிக்க
முயற்சிப்பார்கள். அவர்கள் சொல்லும் இந்த விந்தையான விளக்கத்தை நாம் ஒரு
வாதத்திற்காக ஏற்க முனைந்தாலும் அவர்களின் விளக்கமே அவர்களுக்கு எதிராக
இருக்கும்.
அதாவது, மேலே “இறைவனை
பார்த்தது இல்லை” என்ற பைபிள் அதிகாரங்கள் “பிதாவை” பார்த்தவர் இல்லை என்று
அறிவிக்க வில்லை, அது “இறைவனை பார்த்தவர் இல்லை” என்று தெளிவாக அறிவிக்கிறது. அதன்
அடிப்படையில் மகனும் (இயேசு), எண்ணிகையில் அடங்கா தூய வானவர்களும் இறைவன் இல்லை
என்பதே தெள்ள தெளிவாகுகிறது, இவர்களை கண்டவர்கள் இறைவனை கண்டவர்கள் ஆக மாட்டா என்பதே
தெள்ள தெளிவாகுகிறது. இதன் அடிப்படையில், இவ்விருவரில் எவரேனும் ஒருவருடன்
இறைத்தூதர் திரு யாக்கோபு அவர்கள் மல்யுத்தம் புரிந்து இருந்தாலும், அது
இறைவனுடன் மல்யுத்தம் புரிந்ததர்க்கும் ஒப்பாகாது, பைபிள் இறைவேதமாக இருந்தால்
அது "இறைத்தூதர் திரு யாக்கோபு இறைவனுடன் மல்யுத்தம் செய்தார்" என்பது போன்ற கருத்தினை அது விவரித்து இருக்காது.
ஒரு வாதத்திற்காக
கிறிஸ்தவர்களின் “திரித்துவ” கொள்கையை ஏற்று, அதன் மூலம் திரு யாக்கோபு அவர்களின்
வரலாற்றை அறிய முற்பட்டால், பைபிள்ளின் “இறைவன் ஒருவனே” என்ற வசனங்கள் பொய்படுகிறது,
அந்த வசனங்கள் பொய் படுவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று “திரித்துவ”
கொள்கையை ஏற்க முற்பட்டால், மூன்று கடவுளும் ஒன்று என்ற நிலையில் இதில் எவர்
ஒருவருடனும் சண்டை இட்டாலும், அது மூவருடனும் சண்டை இட்டதற்கு சமம் ஆகிறது.
இதன் அடிப்படையில், திரு
யாக்கோபு அவர்களை மல்யுத்தத்தில் வெல்ல வல்லமை அற்றவர் இவ் மூவரில் எவர் ஒருவராக
இருந்த போதிலும், திரு யாக்கோபு இவ் மூவரையும் மிஞ்சிடும் வல்லமை பெற்றவர் என்பதே பொருள் படுகிறது. இதன் அடிப்படையில், திரு யாக்கோபு அவர்கள் சர்வ வல்லமை படைத்த
பைபிள்ளின் “திரித்துவ” இறைவனை காட்டிலும் வல்லமை பெற்றவர் என்பதே பொருள்
படுகிறது, இதன் அடிப்படையில், (கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில்) வல்லமை அற்ற,
தன்னை தானே காக்க திறன் இல்லாத, இன்னும் இரவு பகலாக அழுது புரண்ட போதிலும் இறைவன்
தன்னை காக்க மறுத்த திரு இயேசு அவர்களை வணங்குவதை காட்டிலும் வல்லமை நிறைந்த,
இறைவனை வென்ற திரு யாக்கோபு அவர்களை வணங்குவது தானே கிறிஸ்தவர்களுக்கு சரியானதாக
இருக்கும்?
ஆக இந்த
வரலாற்றில் ஏது உண்மையானது ஏது பொய்யானது என்பதனை திரு உமர் அவர்கள் தெளிவான
பைபிள் வசன ஆதாரம் கொண்டு விவரிப்பார் என்ற தொடர்ந்து நம்புவோம்.
முடிவுரை:
பைபிள், இறைவேதம்
எனும் போர்வையில் முகவரி அற்ற எண்ணிகையில் அடங்க நபர்கள் இயற்றிய கட்டு கதைகளை
விவரிக்கிறது. அதனை போன்ற ஒன்றே, இந்த கட்டுரையில் நாங்கள் விவரித்த திரு யாக்கோபு
அவர்களின் வரலாறு.
அப்படி அல்ல, திரு யாக்கோபு
அவர்களின் வரலாறு உண்மை சம்பவம், என்று திரு உமர் அவர்கள் போன்ற கிறிஸ்தவ அறிஞ்சர்கள்
அறிவிக்க விரும்பினால், திரு யாக்கோபு அவர்களை வெல்ல திறன் இல்லாத பைபிள்ளின் “திரித்துவ”
கடவுளை வணங்குவதை காட்டிலும், இன்னும் கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில் வல்லமை
அற்ற, தன்னை தானே காக்க திறன் இல்லாத, இன்னும் இரவு பகலாக அழுது புரண்ட போதிலும்,
இறைவன் தன்னை காக்க மறுத்த திரு இயேசு அவர்களை வணங்குவதை காட்டிலும், வல்லமை
நிறைந்த, கிறிஸ்தவ இறைவனை வென்ற திரு யாக்கோபு அவர்களை வணங்குவதே கிறிஸ்தவர்களுக்கு
சரியானதாக இருக்கும் என்பது நாங்கள் கோடிட்ட தெளிவான பைபிள் வசன ஆதாரங்கள் வாயிலாக
வாசகர்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த கட்டுரைகேனும்
தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் மறுப்பு இயற்றுவார் என்ற நமது
வழக்கமான நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்
அஸ்ஸலாமு
அழைக்கும்
-ஜியா &
அப்சர்
|
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)
Friday, June 15, 2012
“பைபிள் முரண்பாடு – எவரும் காண இயலா பைபிள் இறைவன் ஒரு திறன் இல்லா மல்யுத்த வீரன்”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment