பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
“பைபிள் முரண்பாடு – எவரும் காண இயலா பைபிள் இறைவன் ஒரு திறன்
இல்லா மல்யுத்த வீரன்”
வாசகர்களே,
இதற்க்கு முன்னரே பைபிள் முரண்பாடு மற்றும் அதற்க்கு ஒன்றிய கருத்துகளை விவரிக்கும்
பல கட்டுரைகளை தெளிவான பைபிள் ஆதாரத்தை கோடிட்டு விவரித்து இருந்தோம், பார்க்க:
வாசகர்களே, மேலே கோடிட்ட
நம்முடைய முந்தைய கட்டுரைகளுக்கே திரு உமர் அவர்கள் இன்றளவும் தெளிவான பைபிள்
வசன ஆதாரம் கொண்டு மறுப்பு அளிக்க முயலாத/இயலாத நிலையில், தொடர்ந்து முகவரி அற்ற
நபர்கள் இயற்றிய கிறிஸ்தவ பைபிள் வரலாற்றை/பொய்யுரையை ஒன்றி, இஸ்லாமிய திரு
குர்ஆன் வரலாறு அமையாத/பொய்யுரைக்காத காரணத்தினால், அது பிழையான/பொய்யான வரலாறு என்பது போன்ற கருத்தினை வாசகர்கள்
மத்தியில் பரவ செய்யும் முயற்சியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொண்டு
இருக்கிறார்.
தன்னுடைய வேதத்தில்
உள்ள குறைபாடுகளை விவரிக்க முயற்சிக்க மறுக்கும் நபர், இன்னும் அந்த
முரண்பாடுகளை விளக்க வல்லமை அற்ற நபர், ஏனைய மதத்தின் வேதங்களை பரிகாசிக்க
முற்படுவது விந்தையாக இருக்கிறது.
இதற்க்கு
பதில் அளிக்கும் வண்ணம், இன்னும் பைபிள் முரண்பாடுகளை விவரிக்கும் முயற்சியின்
தொடர்ச்சியாக, எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையில் இந்த கட்டுரையை வரைய
துவங்குகிறோம்.
வாசகர்களே, எல்லாம் வல்ல ஏக இறைவனை காணும் சக்தி, சராசரி மனிதர்கள் கண்களுக்கு
அளிக்கப்படவில்லை என்பது பரவலாக எல்லா இஸ்லாமியர்களின் உறுதியான நிலைப்பாடாக
இருப்பதை நம்மால் காண முடிகிறது. இந்த கருத்தினை உறுதி செய்யும் பல தெளிவான பைபிள்
வசனங்களையும் நம்மால் காண முடிகிறது. இருப்பினும், இதற்க்கு முற்றிலும் முரணான
வரலாற்றை, திரு மோசேஸ் அவர்கள் இயற்றியதாக பொய்யுரைக்க பெரும் பைபிள்ளின் “ஆதியாகமம்” 32 ஆம் அதிகாரம் அறிவிக்கிறது.
அதாவது, எல்லாம் வல்ல
பைபிள்ளின் இறைவன், இறைத்தூதர் திரு யாக்கோபு அவர்களுடன் மல்யுத்தம் செய்து
வெற்றி பெற திறன் இல்லாத நிலையில், திரு யாக்கோபு அவர்களிடம் தன்னை விடுவிக்க
கோரியதாக ஒரு விந்தையான பைபிள் வரலாற்றை அறிவிக்கிறது, பார்க்க:
வாசகர்களே, எல்லாம் வல்ல
பைபிள்ளின் இறைவன் இறைத்தூதர் திரு யாக்கோபு அவர்களுடன் மல்யுத்தம் செய்து
வெற்றி பெற இயலாத நிலையில், திரு யாக்கோபு அவர்களிடம் தன்னை விடுவிக்க கோரியதாக
பைபிள் அறிவிக்கும் வரலாற்றை சரியானது என்று நாம் ஏற்று கொள்ள முனைந்தால்,
பைபிள் அறிவிக்கும் “இறைவனை எவரும் பார்த்தது இல்லை” என்ற வசனங்கள் அனைத்தும்
பொய்படும், இருப்பினும் முகவரி அற்ற நபர்களின் வாக்குகளை பற்றி திரு உமர் போன்ற
அறிஞ்சர் பெருமக்களுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவர்கள் இறைவனாக
ஏற்று உள்ள திரு இயேசு அவர்களின் வாக்கு பொய்யானதாக இருக்க கூடாது அல்லவா?
அப்படி அவர் பொய்யுரைத்து இருந்தால் இறைவனாக அல்ல, குறைந்த பட்சம் ஒரு இறைதூதராக
ஏற்க அவர் தகுதியானவர் தானா? திரு இயேசு அவர்கள் அறிவித்த பைபிள்
வாக்கு “இறைவனை எவரும் பார்த்தது இல்லை” (John 1:18)
இன்னும் பைபிள் அறிவிப்பது:
வாசகர்களே, இவ்வாறு
கேள்விகள் எழுப்பிய உடன் திரு உமர் போன்ற போலி பைபிள் அறிஞ்சர்கள், பைபிள்
தெளிவான வசனத்தை கொண்டு விளக்கம் அளிக்காமல், தங்கள் சொந்த விளக்கவுரையை
“திரித்துவ” கொள்கையை உள்ளே திணித்து அளிக்க முற்படுவார்கள்.
“பிதாவும் கடவுள், மகனும் (இயேசு)
கடவுள், எண்ணிகையில் அடங்கா தூய வானவர்களும் கடவுள், ஆனால் அவர்கள் மூண்று
கடவுள் அல்ல ஒரே கடவுள்”
என்று விளங்க முடியா விந்தையான
ஒரு கருத்தினை அறிவிப்பார்கள். இதன் அடிப்படையில் மூல கடவுளான பிதாவை யாரும்
பார்த்தது இல்லை, ஆனால் இதர/துணை கடவுளான மகனும் (இயேசு), எண்ணிகையில் அடங்கா தூய
வானவர்களை பலர் பார்த்து இருக்கிறார்கள், எனவே இறைத்தூதர் திரு யாக்கோபு
அவர்களுடன் மல்யுத்தம் செய்து வெற்றி பெற திறன் இல்லாமல் போனது மகன் (இயேசு)
அல்லது தூய வானவர்களாக இருக்கலாம், என்ற சுய விளக்கத்தை அவர்கள் அறிவிக்க
முயற்சிப்பார்கள். அவர்கள் சொல்லும் இந்த விந்தையான விளக்கத்தை நாம் ஒரு
வாதத்திற்காக ஏற்க முனைந்தாலும் அவர்களின் விளக்கமே அவர்களுக்கு எதிராக
இருக்கும்.
அதாவது, மேலே “இறைவனை
பார்த்தது இல்லை” என்ற பைபிள் அதிகாரங்கள் “பிதாவை” பார்த்தவர் இல்லை என்று
அறிவிக்க வில்லை, அது “இறைவனை பார்த்தவர் இல்லை” என்று தெளிவாக அறிவிக்கிறது. அதன்
அடிப்படையில் மகனும் (இயேசு), எண்ணிகையில் அடங்கா தூய வானவர்களும் இறைவன் இல்லை
என்பதே தெள்ள தெளிவாகுகிறது, இவர்களை கண்டவர்கள் இறைவனை கண்டவர்கள் ஆக மாட்டா என்பதே
தெள்ள தெளிவாகுகிறது. இதன் அடிப்படையில், இவ்விருவரில் எவரேனும் ஒருவருடன்
இறைத்தூதர் திரு யாக்கோபு அவர்கள் மல்யுத்தம் புரிந்து இருந்தாலும், அது
இறைவனுடன் மல்யுத்தம் புரிந்ததர்க்கும் ஒப்பாகாது, பைபிள் இறைவேதமாக இருந்தால்
அது "இறைத்தூதர் திரு யாக்கோபு இறைவனுடன் மல்யுத்தம் செய்தார்" என்பது போன்ற கருத்தினை அது விவரித்து இருக்காது.
ஒரு வாதத்திற்காக
கிறிஸ்தவர்களின் “திரித்துவ” கொள்கையை ஏற்று, அதன் மூலம் திரு யாக்கோபு அவர்களின்
வரலாற்றை அறிய முற்பட்டால், பைபிள்ளின் “இறைவன் ஒருவனே” என்ற வசனங்கள் பொய்படுகிறது,
அந்த வசனங்கள் பொய் படுவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று “திரித்துவ”
கொள்கையை ஏற்க முற்பட்டால், மூன்று கடவுளும் ஒன்று என்ற நிலையில் இதில் எவர்
ஒருவருடனும் சண்டை இட்டாலும், அது மூவருடனும் சண்டை இட்டதற்கு சமம் ஆகிறது.
இதன் அடிப்படையில், திரு
யாக்கோபு அவர்களை மல்யுத்தத்தில் வெல்ல வல்லமை அற்றவர் இவ் மூவரில் எவர் ஒருவராக
இருந்த போதிலும், திரு யாக்கோபு இவ் மூவரையும் மிஞ்சிடும் வல்லமை பெற்றவர் என்பதே பொருள் படுகிறது. இதன் அடிப்படையில், திரு யாக்கோபு அவர்கள் சர்வ வல்லமை படைத்த
பைபிள்ளின் “திரித்துவ” இறைவனை காட்டிலும் வல்லமை பெற்றவர் என்பதே பொருள்
படுகிறது, இதன் அடிப்படையில், (கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில்) வல்லமை அற்ற,
தன்னை தானே காக்க திறன் இல்லாத, இன்னும் இரவு பகலாக அழுது புரண்ட போதிலும் இறைவன்
தன்னை காக்க மறுத்த திரு இயேசு அவர்களை வணங்குவதை காட்டிலும் வல்லமை நிறைந்த,
இறைவனை வென்ற திரு யாக்கோபு அவர்களை வணங்குவது தானே கிறிஸ்தவர்களுக்கு சரியானதாக
இருக்கும்?
ஆக இந்த
வரலாற்றில் ஏது உண்மையானது ஏது பொய்யானது என்பதனை திரு உமர் அவர்கள் தெளிவான
பைபிள் வசன ஆதாரம் கொண்டு விவரிப்பார் என்ற தொடர்ந்து நம்புவோம்.
முடிவுரை:
பைபிள், இறைவேதம்
எனும் போர்வையில் முகவரி அற்ற எண்ணிகையில் அடங்க நபர்கள் இயற்றிய கட்டு கதைகளை
விவரிக்கிறது. அதனை போன்ற ஒன்றே, இந்த கட்டுரையில் நாங்கள் விவரித்த திரு யாக்கோபு
அவர்களின் வரலாறு.
அப்படி அல்ல, திரு யாக்கோபு
அவர்களின் வரலாறு உண்மை சம்பவம், என்று திரு உமர் அவர்கள் போன்ற கிறிஸ்தவ அறிஞ்சர்கள்
அறிவிக்க விரும்பினால், திரு யாக்கோபு அவர்களை வெல்ல திறன் இல்லாத பைபிள்ளின் “திரித்துவ”
கடவுளை வணங்குவதை காட்டிலும், இன்னும் கிறிஸ்தவ நம்பிக்கை அடிப்படையில் வல்லமை
அற்ற, தன்னை தானே காக்க திறன் இல்லாத, இன்னும் இரவு பகலாக அழுது புரண்ட போதிலும்,
இறைவன் தன்னை காக்க மறுத்த திரு இயேசு அவர்களை வணங்குவதை காட்டிலும், வல்லமை
நிறைந்த, கிறிஸ்தவ இறைவனை வென்ற திரு யாக்கோபு அவர்களை வணங்குவதே கிறிஸ்தவர்களுக்கு
சரியானதாக இருக்கும் என்பது நாங்கள் கோடிட்ட தெளிவான பைபிள் வசன ஆதாரங்கள் வாயிலாக
வாசகர்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த கட்டுரைகேனும்
தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் மறுப்பு இயற்றுவார் என்ற நமது
வழக்கமான நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்
அஸ்ஸலாமு
அழைக்கும்
-ஜியா &
அப்சர்
|
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)
Friday, June 15, 2012
“பைபிள் முரண்பாடு – எவரும் காண இயலா பைபிள் இறைவன் ஒரு திறன் இல்லா மல்யுத்த வீரன்”
Tuesday, June 12, 2012
வஞ்சக கிறிஸ்தவ ஆசிர்வாதமும், கபட நிற்பந்தமும் - பைபிள்ளின் பரிந்துரை” பாகம் - 2
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
“வஞ்சக கிறிஸ்தவ ஆசிர்வாதமும், கபட நிற்பந்தமும் - பைபிள்ளின் பரிந்துரை” பாகம் - 2
வாசகர்களே, சமீபமாக திரு உமர் அவர்கள் “இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் : நிர்பந்தமும் கபட இஸ்லாமிய
வாழ்வும் (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்)” எனும் தெளிவில்லாத
மொழிபெயர்ப்பு கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். இந்த கட்டுரைக்கு பதில் அளிக்கும் வண்ணம்
இதற்க்கு முன்னரே “வஞ்சக
கிறிஸ்தவ ஆசிர்வாதமும், கபட நிற்பந்தமும்
- பைபிள்ளின் பரிந்துரை” பாகம் - 1” என்ற கட்டுரையை தெளிவான ஆதாரம் கொண்டு
கிறிஸ்தவர் நிலையை விவரித்து இருந்தோம். அந்த கட்டுரையின் தொடர்ச்சியாக பாகம் –
2, எல்லாம் வல்ல ஏக இறைவன் கிருபையை நாடியவர்களாக எழுத துவங்குகிறோம்.
வாசகர்களே, அன்பே உருவான கிறிஸ்தவ இறைவன் என்று
பொய்யுரைக்க படும் பைபிள் இறைவன், தன்னை கண்டு அஞ்சிகொள்ளுமாறு பல வசனங்களில்
பைபிள்ளில் அறிவிக்கிறான். அன்பை போதிக்கும் கிறிஸ்தவ இறைவனை கண்டு மக்கள்
அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? மக்கள் மனதில் அச்சத்தை விதைத்து அதன் வாயிலாக
நிர்பந்த படுத்தி தன் மார்கத்தை தொடர செய்வது தான் பைபிள்ளின் அன்பை போதிக்கும் வழிமுறையா?
பைபிள் இறைவன் அன்பை போதிக்கவில்லை, மாறாக அச்சத்தை
போதிக்கிறான், நம்பிகையாளர்களை ஏனையவர்களை கொன்று குவிக்க பணிக்கிறான் என்பதனை பல
தெளிவான பைபிள் வசனங்களை கொண்டு நாம் தொடர்ந்து விவரிப்பத்தின் தொடர்ச்சியாக,
இந்த கட்டுரையில் திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் அறிவித்த கருத்தினை
விவரிப்போம்:
திரு உமர் அவர்கள் தன்னுடைய கட்டுரையில்
இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:
அதாவது, ஒரு மார்க்கத்தை, அதன் போதனையை
கொண்டே நல்ல மார்க்கமா அல்லது தீய மார்க்கமா என்பதை முடிவெடுக்க வேண்டும் என்று
திரு உமர் அவர்கள் அறிவுரை அளித்து இருந்தார்கள். திரு உமர் அவர்களின் பரிந்துரையின்
அடிப்படையில், கிறிஸ்தவம் இன்னும் பைபிள் வேத நூல் அறிவுரையை ஆராய்ந்து, அது
மக்களுக்கு சுகந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்கிறதா அல்லது தன் வஞ்சக இரும்பு
கரம் கொண்டு பைபிள் வேதத்தை ஏற்க மறுக்கும் நபர்களை கொன்று குவிக்கிறதா என்பதை
காண முயல்வோம்.
திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில் ”வஞ்சகம் என்பது
எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை தேவனுடைய வார்த்தையாகிய பைபிள் தெளிவாக
விளக்குகிறது” என்று
அறிவித்து, சில பைபிள் வசனங்களை முழுமையாக வெளியிடாமல் அறிவித்து இருந்தார். திரு உமர் அவர்கள் அறிவித்தது:
வாசகர்களே, இஸ்ரவேலர்கள் பைபிள் திரு மோசேயுடன்
எகிப்தை விட்டு வெளிவர, இன்னும் அவருக்கு உதவி புரிய, பைபிள் எவ்வாறு மக்களை
பயத்துக்கு ஆளாக்கியது, அவர்களுக்கு கட்டளை விதித்தது, இன்னும் இதற்க்கு பணியா
மறுத்த நபர்களை எவ்வாறு கொன்று குவித்தது, என்பதை கிழ வரும் பைபிள் தெளிவான வசனங்களை
கொண்டு அறியலாம்.
வாசகர்களே, இவ்வாறு பைபிள் அறிவிப்பது போல மக்களை
வஞ்சித்து, உயிர் பயத்தின் பெயரில் அவர்களை தங்கள் வசம் கொல்வது தான் “மக்களை
சுகந்திரமாக முடிவெடுக்க” கிறிஸ்தவம் அனுமதித்த வழி முறையா என்பதை சிந்தியுங்கள்...
திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் இவ்வாறு
அறிவித்து இருந்தார்கள்:
யோசுவா புத்தகத்தில் குறிப்பிட்டது போல, இஸ்ரவேல் அடைந்த பிறகு தேவன் இதே
போல ஒரு கேள்வியை யோசுவாவின் மூலமாக மக்களிடம் கேட்டார். அதனை நாம் யோசுவா 24ம்
அதிகாரத்தில் காணலாம். "இதர தெய்வங்களை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு
தைரியமிருக்கின்றதா?" என்று கேட்கவில்லை, அதற்கு பதிலாக "இதோ இப்போது
நீங்கள் விடுதலையாக இருக்கிறீர்கள், உங்கள் சுயவிருப்பப்படி முடிவு
எடுங்கள்" என்று கேட்டார்.
வாசகர்களே, திரு உமர்
அவர்கள் அறிவிக்க விரும்பியவாறு பைபிள் இறைவன் மக்களை சுயமாக தேர்வு செய்ய அனுமதித்தானா
?, அல்லது இவ்வாறு சுயமாக முடிவெடுக்க முயன்ற நபர்களை, யோசுவாவின் எச்சரிக்கையை கொண்டு,
இன்னும் கொடுரமாக கொன்று குவிக்க பட நேரிடும் என்ற பயத்தை விதைத்து, அதன்
விளைவாக கட்டாயத்தின் பெயரில் பைபிள் மார்கத்தை தேர்வு செய்ய அவர்கள் கட்டாய
படுத்தப்பட்டார்களா என்பதை கிழ வரும் வசனங்களை கொண்டு அறிந்து கொள்ளுங்கள்...
வாசகர்களே, திரு உமர்
அவர்கள் தன் கட்டுரையில், மக்களை சுயமாக முடிவெடுக்க அனுமதித்த உதாரணத்தை பைபிள்
வசனம் 1 இராஜாக்கள் 18:21 ம் வசனத்தை
கொண்டு விவரிக்க முனைந்து இருந்தார்கள். ஆனால், அந்த வசனத்தின் தொடர்ச்சியை வெளியிடாமல்
மறைத்து இருந்தார்கள், அதனை வெளியிட்டு இருந்தால், திரு உமர்கள் அறிவித்தது போல்
இல்லாமல், பைபிள் இறைத்தூதர் எலிஜாஹ், பைபிள் இறைவன் கட்டளையின் பெயரில்,
நம்பிக்கை கொண்ட மக்களை கொண்டு, “பைபிள் வேதத்தை சுகந்திரமாக ஏற்க மறுத்து, ஏனைய
நபர்களை எவ்வாறு கொன்று குவித்தார்” என்பதை வாசகர்கள் அறிய நேரிட்டு இருக்கும், திரு
உமர் அவர்கள் வெளியிட்ட பைபிள் வசனம் அதன் தொடர்ச்சியை கொண்டே அவருக்கு எதிராக தெளிவான
வாக்குமூலம் அளித்து இருக்கும், இதோ அந்த வசன தொகுப்பு:
வாசகர்களே,
திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:
“தங்கள் சபைகளை விட்டு சுயமாக
வெளியே போகிறவர்களுக்கு எந்த வித தண்டனையையும் சபை கொடுக்கக்கூடாது”
வாசகர்களே, இது பைபிள்
பரிந்துரைக்கு முற்றிலும் முரணான செய்தியாகும் ஏன்னெனில், மத்தேயு 18:17 வசனம், அந்த நபர்களை, திரு சபை பைபிள் மார்கத்தை ஏற்றுக் கொள்ளாதோர்களை
(heathen) போன்று நடத்த வேண்டும் என்று அறிவிக்கிறது. பைபிள்
பரிந்துரை (Deuteronomy 13:6 - 11) அடிப்படையில் பைபிள் மார்கத்தை ஏற்க்கதோர், இன்னும் அதனை
விட்டு விலகுவோர் நிலை சபையோர்களால் விதிக்கப்படும் கொடுரா மரணம் என்று
அறிவிக்கிறது. பார்க்க:
வாசகர்களே,
திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:
"நான் நம்பிக்கை கொள்ள
மாட்டேன் என்று நேர்மையாக" சொல்கின்ற நாத்திகனையும் தேவன்
மெச்சிக்கொள்கிறார்”
வாசகர்களே, திரு உமர்
அவர்கள் அறிவித்த கருத்து அவருடைய சொந்த கருத்தே அன்றி பைபிள் பரிந்துரை அல்ல,
ஏன்னெனில் பைபிள் வசனம் (2
Chronicles 15:12-13), (Deuteronomy 17:12) இதற்க்கு முரணான பரிந்துதுரையை
விவரிக்கிறது, பார்க்க:
வாசகர்களே,
திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்:
“தன் விசுவாசத்தில் பலவீனமாக
இருப்பவனையும் தேவன் ஒப்புக்கொள்கிறார்.”
வாசகர்களே, திரு உமர்
அவர்கள் அறிவித்த கருத்து அவருடைய சொந்த கருத்தே அன்றி பைபிள் பரிந்துரை அல்ல,
ஏன்னெனில் பைபிள் வசனம் (Acts 5:1-11) தன் விசுவாசத்தில்
குறைபாடு கொண்டு, தன் செல்வங்களை தாமே வைத்து கொள்ள எண்ணிய கணவன்-மனைவி இருவரையும்
பைபிள் இறைவன் கொன்று குவித்த முரணான வரலாற்றை விவரிக்கிறது, பார்க்க:
வாசகர்களே,
திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:
“நான் முழுவதுமாக விசுவாசிக்கிறேன்
என்றுச் சொல்லியும், தேவனுக்கு
அன்புடன் கீழ்படிந்து, அன்பு
செலித்தி வாழுகிறேன் என்று வஞ்சகமாக சொல்லுகிறவனை தேவன் அங்கீகரிப்பதில்லை.
இருதயத்தில் விசுவாசிக்காமல், உதட்டளவில்
நம்பிக்கைக் கொள்கின்ற ஏமாற்றுக்காரனை தேவன் அங்கீகரிப்பதில்லை.”
வாசகர்களே, திரு உமர்
அவர்கள் அறிவித்த இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தாக இருந்த போதிலும், அதுவும்
ஒரு விதத்தில் உண்மை தான், தன்னை ஏற்கதோர் இன்னும், தன்னை ஏற்பதில் குறைபாடு கொண்ட
விசுவாசிகளையே நயவஞ்சகமாக கொன்று குவிக்கும் கிறிஸ்தவ இறைவன், இவ்வாறு நயவஞ்சகம்
செய்பவர்களையா விட்டு வைக்க போகிறார்???
வாசகர்களே, திரு உமர் அவர்கள் முன்னர் அறிவித்தது போல் கிறிஸ்தவ மார்க்கத்தை, அதன் போதனையை கொண்டு அறிய முற்ப்பட்டால், அது எந்த மனிதனும் ஏற்க தகுதியற்றது என்பதே பைபிள் வசனம் கொண்டு தெளிவாகுகிறது. இன்னும், அது தீய போதனைகளை கொண்ட மார்க்கம் என்பதும் பைபிள் வசனம் கொண்டு தெளிவாகுகிறதுதேலவுகுகிறது இன்னும் அது மக்களுக்கு சுகந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க மறுக்கிறது என்பதும் இந்த கட்டுரை முலம் தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.
இது வரை, திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் தெளிவான ஆதாரம் இல்லாமல் இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்வைத்த கருத்துகள் பொய்யானது, இந்த கருத்துகளுக்கு தகுந்தது கிறிஸ்தவமும் அதன் வேத நூல்களும் தான் என்பதனை தெளிவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம். இன்னும், வஞ்சகத்தை இஸ்லாம் கண்டிக்கிறது ஆனால் மக்களுக்கு சுயமாக முடிவெடுக்க சுதந்திரத்தை அளிக்கிறது, இதற்க்கு மாறாக கிறிஸ்தவம் வஞ்சகத்தை கண்டிப்பது மட்டும் அல்லாமல் கிறிஸ்தவர் உட்பட கிறிஸ்தவம் அல்லாத ஏனைய மதத்தினரை, இன்னும் பழி பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகளை கொன்று குவிக்க பணிக்கிறது என்பதனை பைபிள் தெளிவான வசனங்கள் வாயிலாக தெளிவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம்.
இந்த கட்டுரைகேனும் திரு உமர் அவர்கள் தெளிவான
ஆதாரம் கொண்டு மறுப்பு எழுதுவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை
பெறுகிறோம்.
அஸ்ஸலாமு
அழைக்கும்
-ஜியா &
அப்சர்
|
--
--
Subscribe to:
Posts (Atom)