Thursday, November 3, 2011

உமரின் "உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு பாகம் 2



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் 
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) 



 அஸ்ஸலாமு அழைக்கும் - 
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக




உமரின் "உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு பாகம் 2   






முன்னுரை
வாசகர்களே, நாம் கடந்த ஒரு வருடமாக திரு உமர் அவர்களின் “ஈஸா-குர்ஆன்” தளத்தில் இஸ்லாமை தாக்கி எழுதப்படும் கட்டுரைகளுக்கு மறுப்புகள் அளித்து வருகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. நாம் வெளியிட்ட அதிகபடியான கட்டுரைகளில் ஒரு சிலவற்றுக்கு மட்டும் மறுப்பு என்ற போர்வையில், பொய்யுரைகளை திரு உமர் அவர்கள் பதில் கட்டுரைகளாக வரைந்தார். அவராக முன்வைத்த இந்த தலைப்புகளை கூட சரிவர நிரூபிக்க இயலாமல் பாதியிலேயே விட்டுச் சென்று தலைமறைவு ஆனா செய்தி நீங்கள் அனைவரும் அறிந்ததே. திரு உமர் அவர்களுக்கு ஞாபகமறதி அதிகம் போலும், நாம் பல முறை பதிலளித்த, அவர் எதிராகவே திரும்பக்கூடிய கேள்விகளையும், கருத்துக்களையும் இங்கு மிண்டும் பதிந்துள்ளார். ஆக நாம் முன்னர் பதித்த கருத்துக்களை அவருக்கு எடுத்துக்காட்டினாலே, அவருடைய கட்டுரைக்கு மறுப்பாக அமைந்துவிடும். 


திரு உமர் அவர்களே, நாம் குர்ஆன் பற்றி எழுதிய மூன்று கட்டுரைகளும், சுருக்கமாகவும் சிறிதாகவும் உள்ளதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படி நீங்கள் பதில் கட்டுரை எழுதுவதற்கு ஏதுவாகவும், விவாதத்திற்கு அழைப்பதற்கு ஏதுவாகவும் இருப்பதற்காக தான் நாங்கள் சுருக்கமாக எழுதியுள்ளோம். அப்படியாவது நீங்கள் தெளிவான ஆதாரம் கொண்டு பதில் அளிக்க முன் வரமாட்டிர்களா என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு வெளியிட்டோம். பொதுவாக எங்களுக்கு பதில் அளிக்க நேரம் இல்லை என்று பொய்யுரைக்கும் திரு உமர் அவர்கள் இதை போன்று எளிதான கட்டுரைகளை வெளியிட்டால் அதற்க்கு உடன் பதில் அளிப்பார் என்பதினால். திருக்குர்ஆன் பற்றி நாம் எழுதிய முதல் கட்டுரையின் போதே இப்படி திரு உமர் அவர்கள் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். வலையை யார் விரித்தது, அதில் யார் சிக்குகிறார் என்பதனை பொருத்து இருந்து பார்போம்...



என்ற தலைப்பின் கீழ் எழுதிய முன்னுரையை மறுபடியும் நினைவு படுத்துகிறோம்:


திரு உமர் அவர்கள், முன்னர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கூறி வந்தார், எழுத்து விவாததிற்கு தயார் என்றார். அவற்றுக்கு தக்க ஆதாரங்களுடன் பதில் எழுதியவுடன் நழுவலாக பதில் என்ற போர்வையில் கேள்விகளையும் பொய் கருத்தையும் முன் வைத்தார். கடைசிவரை எழுத்து விவாததிற்கு வர மறுத்துவிட்டார்.


கடைசியாக எழுத்து விவாதத்திற்கு வர மாட்டேன் என்பதை சூசகமாக, "நான் கட்டுரைகள் ஆதாரங்களுடன் எழுதுகிறேன், முடிந்தால் பதிலளியுங்கள் பாதிப்பு யாருக்கு என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்" என ஒரு தோரணையில் எழுதினார் என்பதை அனைவரும் அறிந்ததே....

சரி இப்போது திருக்குரானை தலைப்பாக எடுத்திருக்கிறார். இப்போதும் கேட்கிறோம், திரு உமர் அவர்களே, நீங்கள் உங்கள் கருத்துக்கள் அனைத்திலும் உறுதியாக இருந்தால், நீங்கள் வெளியிடும் கட்டுரைகள் உங்கள் விவாதத்திற்கு உதவும் என்று நீங்கள் நம்பினால், பைபிளை காட்டிலும் குர்ஆனில் பிழைகள் உள்ளது என நம்பினால் தெளிவாக "பைபிள் - குரான் முரண்பாடுகள்" என்ற தலைப்பில் விவாதிக்க தயார் என பகிரங்கமாக அறிவியுங்கள். பிறகு மற்ற விவரங்கள் முடிவு செய்த பிறகு எழுத்து விவாதத்தை துவங்குவோம்.

ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக இந்த பகிரங்க அழைப்பை விடுகிறோம். உங்கள் பதில் என்ன?

சரி இப்போது திரு உமர் அவர்களின் கட்டுரைக்கு நமது மறுப்பை பாப்போம்...
திரு உமர் அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்,
இஸ்லாமியர்களின் பேச்சு நம் தமிழ் அரசியல் வாதிகளின் பேச்சையே மிஞ்சிவிடும். அரசியல்வாதி சொல்லும் பொய்களே வெட்கமடையும் அளவிற்கு பொய்களை வீசுவார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.
நம் பதில்: திரு உமர் அவர்களே, இதற்கு மிகவும் பொருத்தமானவர் நீங்களா இல்லை நாங்களா? இந்த கருத்தில் நீங்கள் நிலையாக இருந்தால் உங்களுக்கு நாங்கள் சவால் விடுகிறோம். நாங்கள் எழுதிய பொய்கள் ஏதும் இருப்பின் அவற்றை பட்டியலிடுங்கள், நீங்கள் எழுதிய பொய்களை நாங்கள் பட்டியளிடுகிறோம். இந்த சவாலுக்கு தயாரா? கையெழுத்திட்ட தெளிவான ஒப்பந்தத்தை வெளியிடுவிர்களா?? 

திரு உமர் அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்,
குர்‍ஆன் பற்றி பெருமையாக நாலு வார்த்தை பேசுங்கள் என்று ஒரு இஸ்லாமியருக்கு சொல்லிவிட்டால் போதும், அல்லாஹ்விற்கே ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் பேசித் தள்ளுவார்கள். அல்லாஹ்வே ஆச்சரியத்தோடு, "அடப்பாவமே, இதுவரை எனக்கே தெரியாமல் போய்விட்டதே இவ்வளவு விஷயங்கள்" என்று கூறுவார்.
நம் பதில்: திரு உமர் அவர்களே, திரும்பவும் கேட்கிறேன், இதற்கு மிகவும் பொருத்தமானவர் நீங்களா/பைபிளா இல்லை நாங்களா/குர்ஆனா?


பெயரில்லா கர்த்தருக்கு (இதுவும் அவர் பெயர் இல்லை) “இருக்கிறவன்” என்ற இல்லாத பெயர் சூட்டி, பெயரில்லா இறைவனுக்கே பெயர்சூட்டி, பெயரில்லா இறைவனையே “ஆஹா என்ன அருமையான பெயர். அடப்பாவமே, இதுவரை எனக்கே தெரியாமல் போய்விட்டதே இந்த பெயர்” என  ஆசிரியத்தில் ஆழ்த்தியது, நீங்களா இல்லை நாங்களா? 

அந்த கட்டுரையை படித்தால் கிறிஸ்தவர்கள் முதற்கொண்டு அனைவரும் சிரிப்பார்கள்...  இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை கண்டும் காணாமல் இருக்கும், இன்னும் உங்கள் பின் நின்று உங்களை ஆஹா ஓஹோ என புகழ்பவர்களை பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை? பதில் வருமா? பொறுத்திருந்து பாப்போம்.

திரு உமர் அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்,
இஸ்லாமியர்களின் ஒவ்வொரு வார்த்தையின் பின்னணியும், ஒவ்வொரு வரியின் உள்நோக்கமும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எழுதியதை முதலில் படிப்பவர்கள், ஆஹா எவ்வளவு அழகாக பதில் கொடுக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள், (இப்படி எண்ணம் கொள்பவர்களில் 99% சதவிகித மக்கள் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள் என்பது வேறு விஷயம்), ஆனால், ஒவ்வொரு வரியாக நாம் படித்து பதில் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் அறியாமை அல்லது வஞ்சக வலை வெளியே தெரியவரும்.
நம் பதில்: திரு உமர் அவர்களே, திரும்பவும் கேட்கிறேன், இதற்கு மிகவும் பொருத்தமானவர் நீங்களா/பைபிளா இல்லை நாங்களா/குர்ஆனா?


இதற்க்கு பொருத்தமான உங்களுடைய பல கட்டுரைகளை பட்டியலிடலாம். உதாரணமாக கர்த்தர் ஸ்பெஷல் I am “இருக்கிறேன்” என்ற தலைப்பும் அதில் ஒன்று. இப்படி எழுதிய உங்களது உள்நோக்கம் தான் என்ன? அடேங்கப்பா எவ்வளவு அழகாக பதில் கொடுத்துள்ளீர். உண்மையிலேயே வியப்பாக உள்ளது என்று கிறிஸ்தவர்களை என்ன செய்தாலும், ஒவ்வொரு வரியாக நாம் படித்து பதில் கொடுக்க ஆரம்பித்தால், உங்களின் அறியாமை மற்றும் வஞ்சக வலை தெளிவாக வெளிவரும், இதற்க்கு முன்னரே எங்கள் கட்டுரைகளில் வெளிவந்துவிட்டது!! அவற்றுக்கு பதில் வருமா? பொறுத்திருந்து பாப்போம்.

திரு உமர் அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்,
சரி, இதுவரை இஸ்லாமியர்கள் எழுதியவைகளுக்கு பதிலை அளித்துக்கொண்டு இருந்த என்னை, ஒரு பிபிசியின் செய்தியை படித்து இஸ்லாமியர்களுக்கு விளக்கவேண்டிய வேலையையும் நமது அன்பு சகோதரர்கள் திரு ஜியா அவர்களும், சகோதரர் அப்சர் அவர்களும் அளித்துள்ளார்கள். 
நம் பதில்: அவர் பதிலளித்த லட்சணத்தை மேலே உள்ள பத்திகளை படித்தாலே புரியும்.

திரு உமர் அவர்கள் எழுதியது,
இவர்கள் தங்கள் கட்டுரையில் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்: 

1) இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.

2) ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.

3) என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.
நம் பதில்: திரு உமர் அவர்களே, முன்று குற்றச்சாட்டுகள் தானா? நீங்கள் பதிலளிக்க விரும்பாத/இயலாத கேள்விகள் உங்கள் கண்களில் தென்பட மறுக்கின்றனவா? வாசகர்களே, இப்பொழுதும் தெளிவான ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் பதிலளிக்க போவதில்லை, இருந்த போதிலும் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டி....

சரி ஏசு மரணித்த பிறகு, நூறு ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட ஏதேனும் பைபிள் எழுத்துக்கள் உள்ளனவா? முழுவதுமாக கேட்கவில்லை ஏதேனும் ஒரு சில வரிகள்,இவற்றை எழுதிய நபர் யார்???  

திரு உமர் அவர்கள் எழுதியது,
இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதிலை காண்போம். அந்த பிபிசி செய்தி பற்றிய அவர்களின் நம்பிக்கையும், அதற்கான பதிலையும் நீங்கள் படித்தால் சிரித்துவிடுவீர்கள், அதாவது எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும், கொஞ்சம் கூட அடிப்படை ஆய்வு செய்யாமல் எழுதுவது, இஸ்லாமிய அறிஞர்களின் வழக்கமாக ஆகிவிட்டது, என்பதை அறிந்துக்கொள்வீர்கள்.
நம் பதில்: இது வரை நீங்கள் எழுதிய கட்டுக்கதைகளை பார்த்து சிரிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். உங்கள் நகைச்சுவை மிகுந்த கட்டுரைகள் பற்றிய தொகுப்பு வேண்டுமா?

திரு உமர் அவர்கள் எழுதியது,
கட்டுரையின் மூலத் தொடுப்பை கொடுக்க பயந்து, குர்‍ஆனின் மூலத்தைப் பற்றி எழுதவந்துவிட்டீர்களா? இஸ்லாமிய நண்பர்களாகிய ஜியா அவர்களே, மற்றும் அப்சர் அவர்களே, எந்த தளத்தில் என் கட்டுரையை படித்தீர்கள்? அதன் தொடுப்பு எங்கே? "அல்லாஹ்வின் திருப்பெயரால்..." என்று ஆரம்பித்து வஞ்சிக்க வந்துவிட்டீர்களா? நீங்கள் படித்த என் கட்டுரையை உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் படிக்கவேண்டாமா? நீங்கள் மட்டும் படித்தால் போதுமா?
நம் பதில்: திரு உமர் அவர்களே, இதை பற்றி உங்களுக்கு பல முறை பதிலளிக்க பட்டுள்ளது. அதை நீங்கள் படித்தீர்களா? படித்தீர்கள் என்றால் அதற்கு உங்கள் பதில் என்ன? படிக்கவில்லை என்றால் நீங்கள் படிக்க ஏதுவாக அந்த தொடுப்பு இங்கே...

கூடுதலாக இந்த கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..

உங்களுக்கு மட்டும் எப்படி எங்கள் மறுப்பை படித்து, எந்த தலைப்புக்கு நாங்கள் மருப்பளிதுள்ளோம் என்பதனை புரிந்து, மறுப்பு வெளியிட முடிந்தது? 

திரு உமர் அவர்கள் எழுதியது, 
நீங்கள் உண்மையை மறைத்து, உங்களுக்கு சாதகமாக தோன்றும் ஒரு சில வரிகளை மட்டும் பதித்து பதில் தருவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியுமே.

நம் பதில்: திரு உமர் அவர்களே, இதற்கு மிகவும் பொருத்தமானவர் நீங்களா இல்லை நாங்களா என யோசித்து பார்த்து எழுதுங்கள். இல்லையென்றால் தவளை தன் வாயால் கெடும் என்பார்களே அதை போன்ற நிலைமைதான் உங்களுக்கும் ஏற்படும். யார் உண்மையை மறைகிறார் என்பதை பட்டியலிடுங்கள் நாங்களும் பட்டியளிடுகிறோம். தயாரா?


திரு உமர் அவர்கள் எழுதியது, 
நீங்கள் நேர்மையானவர்கள் தானா? நீங்கள் ஐந்து வேளை தொழுகை புரியும் இஸ்லாமியர்களா? "ஆம், நாங்கள் அல்லாஹ்வின் அடியார்கள், நேர்மையானவர்கள் தான்" என்று கூறுவீர்களானால், ஏன் மூல தொடுப்பை மறைக்கிறீர்கள்? மூல தொடுப்பை கொடுக்க பயப்படுகிறீர்கள்? உங்கள் இஸ்லா‌ம் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா? 

நானும் கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன், ஆனால், ஒரு ரோஷமுள்ள நேர்மையான இஸ்லாமிய அறிஞரை காணவில்லை. இந்த தமிழ் பேசும் மக்களுக்கு வந்த கதியை பாருங்கய்யாஇஸ்லாமியர்கள் சொல்வதை மற்றவர்கள் படிக்கவேண்டும், ஆனால், உண்மையை மட்டும் தெரிந்துக்கொள்ளக்கூடாது, இது தானே இவர்களின் எண்ணம், இஸ்லாமை வாழவைக்க வந்தவர்களின் எண்ணம்? 

நீங்கள் என் கட்டுரைகளுக்கு பதில் என்றுச் சொல்லி எழுதும் போதெல்லாம், நீங்கள் இப்படி நேர்மையற்ற முறையில் நடந்துக்கொள்கின்ற போதெல்லாம், நான் இப்படி சில வரிகளை எழுதி, உங்களுக்கு இதன் பிறகாவது நேர்மையாக எழுத விருப்பம் வரும் என்று எதிர்ப்பார்த்து இவைகளை பதிக்கிறேன். பார்க்கலாம் இந்த முறையாவது ரோஷம் வருமா?

நம் பதில்: இன்னும் எத்தனை காலம் தான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் இப்படியே உங்கள் வாசகர்கள் காதில் பூ சுத்துவீர்களோ? நீங்கள் படிக்க ஏதுவாக அந்த தொடுப்பு இங்கே...


நாங்கள் முன்னர் விடுத்த எழுத்து விவாத அழைப்பை ஏற்று தெளிவான கையெழுத்து ஒப்பந்தத்தை வெளியுடுங்கள், எழுத்து விவாதத்தில் தோல்வியுற்றால் நிங்களும் இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் உங்கள் நண்பர்களும் இனி கனவிலும் இஸ்லாமியர்களை பலிப்பது இல்லை என்ற வாக்குறுதியை வெளியிடுங்கள், இதற்க்கு முன்னர் நீங்கள் வெளியிட்ட எந்த கட்டுரை அல்லது மொழிபெயர்ப்பு தெளிவான ஆதாரத்தை கொண்டுள்ளது என்று பட்டியல் வெளியிடுங்கள். பின்னர் உங்கள் தொடுப்பை நாங்கள் வெளியிட மறுப்பதை விமர்சிக்கலாம், செய்விர்களா???


திரு உமர் அவர்கள் எழுதியது, 
பெரிய வலை வீசி நிறைய மீன்களை பிடிக்கனுமா? (அ) ஒரு தூண்டில் போட்டு காத்துக்கொண்டு இருக்கவேண்டுமா? 

நம் பதில்:
கழிவு நீரை தூர் வாருவது….
சொறி நாய் பிடிப்பது….
யானைக்கு வால் வெட்டுவது
இப்போது மீன் பிடிக்கிராராம்….

திரு உமர் அவர்களே, ஒழுங்கா பதில் எழுத சொன்னா, அதை விட்டு விட்டு ஏன் இந்த வேலை எல்லாம் உங்களுக்கு... ஓ கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில், தன் மரணத்திற்கு பிறகும், தனக்கு மீன் உன்ன வேண்டி (அவ்வாறு மீன் உன்ன வழங்க மறுத்தால், அத்திப்பழ மரத்தை சபித்து கொன்றது போல், தங்களையும் கொன்று விடுவாரோ என்ற பயத்தில் சீடர்கள் அவர்க்கு மீன் வழங்கி), திரு இயேசு அவர்கள் பைபிள்ளில் மீன் வேண்டி உண்டமையல் (Luke 24:41-43) திரு உமர் அவர்கள் மீன் பிடிக்க போவதாக சொல்கிறாரோ? திரு உமர் அவர்களே, உங்கள் உவமையிலும் நீங்கள் அன்பை போதிக்க மருகிறீர்களே? அது ஏன்? 



திரு உமர் அவர்கள் எழுதியது,
திமிங்கிலமா நத்திலியா?

.....ஆகையால் தான், நான் உங்களின் மற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை எழுதுவதை தாமதப்ப‌டுத்தி, பீஜே அவர்களுக்கு பதில் அளிக்க முனைந்துள்ளேன். இப்போது சொல்லுங்க, திமிங்கிலத்தை வலை போட்டு பிடிப்பது நல்லதா, அல்லது நத்திலி மீனை ஒரு தூண்டில் போட்டு பிடிப்பது சிறந்ததா?

நம் பதில்: நன்றாக தான் சொன்னீர்கள்!!!! ஆனால் திமிங்கலத்தை பிடிக்க வேண்டுமென்றால் கடலுக்கு செல்ல வேண்டும். கடலுக்கு சென்றால் எனக்கு பாதுகாப்பில்லை என சொல்லிக்கொண்டு வீட்டில் அமர்ந்துக்கொண்டு மீன் தொட்டிக்குள் வலையை விரித்துவிட்டு, ஏய் திமிங்கலமே, நான் கடலுக்கு வந்தால் நீ என்ன செய்கிறாய் என்பதை என்னால் கவனிக்க முடியாது, நான் பார்காத பொது என்னை கவிழ்த்து விடுவாய், அதனால் நீ தைரியம் இருந்தா மீன் தொட்டிக்குள் வா, அப்ப தான் நான் பிடிப்பேன், என வாய் உதார் விட்டால் அந்த வலையில ஒரு ரூபாய் மீன் கூட மாட்டது.


அதுக்காக பார்த்தீர்களா, திமிங்கலம் பயந்துவிட்டது என் வீட்டு தொட்டிகுள்ள வர பயப்படுதுனு சொன்னா உங்களை நல்ல மருத்துவரிடம் போய் காண்பிக்க சொல்வார்களே தவிர ஆஹா ஓஹோ என புகள மாட்டார்கள்.


திரு உமர் அவர்களே, எங்களை நெத்திலி மின் என்று உவமை செய்கிறிர்கள், இந்த இறு நெத்திலி மின்கலையே சமாளிக்க முடியாமல்/ கையால் ஆகாமல் தலைமறைவாகும் நீங்கள், திமிங்கலத்தை பிடிக்க போவதாக சொல்வது நகைப்புக்கு உரிய செய்தி தானே???

உண்மையில் மிக பெரிய திமிங்கலம் எது தெரியுமா பல கட்டுக்கதைகள், முரண்பாடுகள், விபச்சாரம் மற்றும் விரசங்களை தன்னுள் உள்ளடக்கி உலக மக்கள் அநேகரை ஏமாற்றி வரும் பைபிள் தான், அது உங்கள் கையில் தானே உள்ளது அதனை விவரிக்க என் இதனை தாமதம்???

உண்மையிலேயே உங்களுக்கு உங்கள் கட்டுரையின் மீது நம்பிக்கை இருக்குமானால், எங்கள் கேள்விக்கு உலகில் எந்த கிறிஸ்தவரும் இதுவரை பதிலை கொடுக்கவில்லை என்ற நம்பிக்கை இருக்குமானால், உங்களுக்கு நான் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தை (http://www.answering-islam.org/) அறிமுகப்படுத்துகிறேன். அதில் உலகத்தில் இருக்கும் பெரிய பெரிய திமிங்கிலத்தை வாயில் போட்டு, மென்று விழுங்கியிருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான கட்டுரைகள், செய்திகள் மறுப்புக்களை காணலாம். முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, என் கட்டுரைகளை நான் தயார் படுத்துகிறேன். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால், அதில் சென்று படியுங்கள், உங்கள் கண்கள் தெளிவாக்கப்படும்.
நம் பதில்: நீங்கள் கூறும் தளங்களில் உள்ள எல்லா கேள்விகளுக்கான பதிலளிக்கும் ஒன்றல்ல, பல இஸ்லாமிய தளங்கள் இணையத்தில் உள்ளன. ஏறத்தாலா எல்லா கேள்விகளும் இதற்க்கு முன்னரே பதிலளிக்க பட்டுவிட்டது. அது உங்களுக்கே நன்கு தெரிந்த ஒரு செய்தி தானே?  

அந்த இணையதளத்தை தான் நீங்கள் காப்பி அடிக்கிறீர்கள் என ஒப்பு கொள்கிறீர்கள் அல்லவா? அதுவும் இந்த இணையதளம் பெரிய பெரிய திமிங்கலங்களை விழுங்கி இருக்கிறார்களாம். அப்படியானால் இந்த இணைய தல நண்பர்களை கொண்ட நீங்கள் ஏன் இந்த நெத்திலி மீனிடம் (“I am என்கிற இருக்கிறவன்)  என்ற கட்டுரையில் சிக்கி சின்னா பின்னமாகி போனிர்கள்? நன்றாக உற்று பாருங்கள் அவர்கள் பிடித்தது மண் புழுவாக இருக்க போகிறது. உங்கள் கற்பனைகளை தான் நாங்கள் பைபிளில் பார்க்கிறோமே....!!!!


திரு உமர் அவர்கள் எழுதியது, 
சுட்டபழத்திற்கும் பதில் கிடைக்கும், சுடாத பழத்திற்கும் (உங்கள் சொந்த தயாரிப்பிற்கும்!) பதில் கிடைக்கும். 

நம் பதில்: அதை தான் நாங்களும் கேட்கிறோம் சுட்ட பைபிள் எது சுடாத பைபிள் (உங்கள் சொந்த தயாரிப்பு) எது எனபதற்கு பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்....

திரு உமர் அவர்கள் எழுதியது, 
ஆக, அதிகமாக சத்தம் போட்டது போதும், உருப்படியாக பதில் எழுதுவதை பாருங்க... 

நம் பதில்: யார் அதிகமாக சத்தம் போட்டது என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்கலுக்கு நன்கு புலப்படும்.

மறுபடியும் நினைவு படுத்துகிறேன், திரு உமர் அவர்களேநீங்கள் உங்கள் கருத்துக்கள் அனைத்திலும் உறுதியாக இருந்தால்நீங்கள் வெளியிடும் கட்டுரைகள் உங்கள் விவாதத்திற்கு உதவும் என்று நீங்கள் நம்பினால்பைபிளை காட்டிலும் குர்ஆனில் பிழைகள் உள்ளது என நம்பினால் தெளிவாக "பைபிள் - குர்ஆன் முரண்பாடுகள்என்ற தலைப்பில் விவாதிக்க தயார் என பகிரங்கமாக அறிவியுங்கள், முன்னர் கேட்க்கபட்ட கையெழுத்து ஒப்பந்தத்தை வெளியிடுங்கள். பிறகு மற்ற விவரங்கள் முடிவு செய்து எழுத்து விவாதத்தை துவங்குவோம்.

ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக இந்த பகிரங்க அழைப்பை விடுகிறோம். உங்கள் பதில் என்ன?


இப்படி கிடைத்தது "ஒரு வாய்ப்பு" என வாய்க்கு வந்ததை எல்லாம் கொட்டி தீர்ப்பதை விட்டுவிட்டு, தலைப்புக்கு சம்பந்தமாக மட்டும் எழுதினால் நாமும் அதற்கு விரைவாக பதிலளிக்க ஏதுவாக இருக்கும். இப்படி தேவையற்றவைகளை எல்லாம் கொட்டி தீர்த்தால் அதற்கு பதிலளித்த பிறகே தலைபிற்கு செல்ல முடியும். 


இனிமேலாவது சுயபுத்தியுடன் இப்படியெல்லாம் அவர்கள் நம்மை பார்த்தும் கேட்பார்களே, இந்த கேள்விகள் அனைத்தும் நமக்கும்/கிறிஸ்தவத்திற்கும் பொருந்துமே என்பதை சிந்தித்து கட்டுரை வரைந்தால் சிறிதாவது கிறிஸ்தவம் பிழைத்துக்கொள்ளும். 


தலைபிர்க்குரிய கேள்விகளுக்கும், உமரின் போலியான கருத்துக்களுக்கும் பதில் தயாராக உள்ளது. நாம் இரண்டையும் சேர்த்து வெளியிட்டால், திரு உமர் அவர்களுக்கு எந்தெந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ, அவற்றுக்கு மட்டும் பதில் என்ற போர்வையில், நான் இப்படி சொல்லவில்லை, அப்படி சொல்லவில்லை என கேள்விகளை மட்டும் பதித்து செல்வார். இப்படி தான் பல முறை செய்துள்ளார் என்பதால், அவர் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் எழுதிய இந்த கருத்துக்களுக்கு பதில் சொல்ல வற்புறுத்துவதற்காக இதை முதலில் பதிக்கிறோம். பதிலை எதிர்பார்த்து.....


இதன் தொடர்ச்சியாக அவருடைய தலைபிற்கு சம்பந்தமான பதில்களை அலசுவோம். அதில் அவர் எப்படி தனக்கு தானே வலை விரித்து, அதிலேயே அவரும், அவர் சார்ந்திர்க்கும் கிறிஸ்தவமும் எப்படி சிக்கி தவிக்கபோகிறது என்பதை இதன் தொடர்ச்சியாக பாப்போம் இன்ஷா அல்லாஹ்...



அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்

2 comments:

rameez said...

//தலைபிர்க்குரிய கேள்விகளுக்கும், உமரின் போலியான கருத்துக்களுக்கும் பதில் தயாராக உள்ளது. நாம் இரண்டையும் சேர்த்து வெளியிட்டால், திரு உமர் அவர்களுக்கு எந்தெந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமோ, அவற்றுக்கு மட்டும் பதில் என்ற போர்வையில், நான் இப்படி சொல்லவில்லை, அப்படி சொல்லவில்லை என கேள்விகளை மட்டும் பதித்து செல்வார். இப்படி தான் பல முறை செய்துள்ளார் என்பதால், அவர் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் எழுதிய இந்த கருத்துக்களுக்கு பதில் சொல்ல வற்புறுத்துவதற்காக இதை முதலில் பதிக்கிறோம். பதிலை எதிர்பார்த்து.....//

சரியாக செய்தீர்கள் நண்பரே, நீங்கள் சொல்வது நூத்துக்கு நூறு உண்மை. இப்படி சம்பந்தம் இல்லாமல் அவர் கூறிய கருத்துக்களை நிரூபிக்க சொன்னவுடன், பத்து நாட்களுக்கு மேலாகியும் பதிலே இல்லை. இப்படி தான் பொய்களை கொண்டே தங்களை வளர்த்து வருகிறார்கள்.

rameez said...

//பெயரில்லா கர்த்தருக்கு (இதுவும் அவர் பெயர் இல்லை) “இருக்கிறவன்” என்ற இல்லாத பெயர் சூட்டி, பெயரில்லா இறைவனுக்கே பெயர்சூட்டி, பெயரில்லா இறைவனையே “ஆஹா என்ன அருமையான பெயர். அடப்பாவமே, இதுவரை எனக்கே தெரியாமல் போய்விட்டதே இந்த பெயர்” என ஆசிரியத்தில் ஆழ்த்தியது, நீங்களா இல்லை நாங்களா? //

நுணலும் தன் வாயினால் கெடும் என்பது இதுதானோ?