Thursday, August 4, 2011

"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" என்ற கட்டுரைக்கு மறுப்பு - பாகம் 2



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" என்ற கட்டுரைக்கு மறுப்பு - பாகம் 2
முன்னுரை
வாசகர்களே, திரு உமர் அவர்கள் வெகு நாட்களுக்கு பிறகு, நமது கட்டுரைக்கு பதிலளிப்பதாக கூறி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதுவும் இதுவரை அவர் எடுத்த இரண்டு தலைப்பையும் விட்டு விட்டு மூன்றாவதாக ஒரு தலைப்பில்.....
Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
அவருடைய கட்டுரைக்கு பதிலளிப்பதற்கு முன்னர், நாம் இந்த தலைப்பில் இதற்க்கு முன்னரே வெளியிட்ட மறுப்பு இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற கட்டுரைக்கு மறுப்பு அதற்கு திரு உமர் அவர்கள் இப்பொழுது எழுதி இருக்கும் பதிலுக்கும்!! உள்ள தொடர்பையும், சாராம்சங்களையும் இந்த கட்டுரையில் ஆராய்வோம்.
கட்டுரையின் தலைப்பு
கட்டுரையை ஒப்பிடுவதற்கு முன்னர், திரு உமர் அவர்களுடைய கட்டுரையின் தலைப்பிற்கும், கட்டுரைக்கும், உள்ள தொடர்பை ஆராய்வோம். அவரது கட்டுரை தலைப்பின் முக்கிய வார்த்தைகளான "Answering" மற்றும் "Round 2" மூலம் திரு உமர் அவர்கள் என்ன அறிவிக்க முயல்கிறார் என்பதை சுருக்கமாக ஆராய்வோம்!!!
Answering அர்த்தம் என்ன?
திரு உமர் அவர்களே, உங்களுக்கு "அல்லேலூயா" என்ற வார்தைக்கு அர்த்தம் தெரியாது என இதற்க்கு முன்னரே தெளிவாக அறிவித்து இருந்தீர், இப்போது பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு தெரிந்த "Answer/Answering" என்ற வார்தைக்கு கூட அர்த்தம் தெரியாது என்பது போல், "Answering" என தலைப்பை மட்டும் பிரமாண்டமாக கொடுத்துவிட்டு, பதில்களை காட்டிலும் இருபதுக்கும் அதிகமான பொய்யான, கோடிட்ட ஆதாரத்திற்கு முரணான கேள்விகளையே முன்வைத்து உள்ளீரே!!! உங்கள் அகராதியில் "Answering" என்றால் பதில்களை காட்டிலும் அதிகப்படியான, பொய்யான கேள்விகளை கேட்ப்பது என்று அர்த்தமா?
நீங்கள் பதிலளித்த லட்சணத்தை பார்பதற்கு முன்னர், இதோ நாங்கள் முன்வைத்த கேள்விகளில், நீங்கள் பதிலளிக்க தவறிய கேள்விகளின் சுருக்கம்....
1
திரு உமர் அவர்களே, முறையே திருமணம் ஒப்பந்தம் முடிந்த பெண்ணை, கணவன் அழைப்பது உங்கள் அகராதியில் கற்பளிப்பா?
2
முறையே திருமணம் முடிக்காமல் பெண்களுடன் வீடு கூட பைபிள் பணிக்கிரதே? இதற்கு பதில் அளிப்பீர்களா?
Now therefore kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him. But all the women children, that have not known a man by lying with him, keep alive for yourselves. (Numbers 31:17-18)

3
திரு உமர் அவர்களே, உங்கள் கூற்று படி, அந்த பெண்ணை கற்பழிக்க பலவந்தமாக அழைத்து வரப்பட்டு இருந்தால், எதற்காக அவரை வளர்த்த செவிலித் தாயும் அவருடன் அழைத்து வரப்பட்டார்? அந்த செவிலி தாய் ஏன் இதனை தடுக்கவில்லை?
4
திரு உமர் அவர்களே, உங்கள் கூற்று படி, அந்த பெண்ணை கற்பழிக்க பலவந்தமாக அழைத்து வரப்பட்டு இருந்தால், பலவந்தமாக அழைத்து வரப்பட்ட பெண்ணிடம் கற்பழிக்க யாராவது அனுமதி பெறுவார்களா?
5
அந்த பெண் ஒரு அரசியா? அந்த பெண் எந்த நாட்டின் அரசி என்று கொஞ்சம் விளக்க ஆதாரங்கள் தாருங்களேன்
6
திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இடையர் குளத்தை சேந்தவாரா? அவர்கள் மக்கா வாழ் உயர்ந்த அரச குலமான குறைஷி குளத்தை சேந்தவர் என்பது உங்களுக்கு தெரியாதா? இன்னும் அந்நாளில் மதீனா மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள ராஜ்யங்களை ஆளும் மன்னர் என்பது உங்களுக்கு தெரியாதா? இப்படி இருக்க எதற்காக அந்த பெண் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இடையர் என்று விவரிக்க வேண்டும்? இதற்கு காரணம் அந்த பெண் திட்டமிட்டு முஹம்மத் நபி (ஸல்)அவர்களை திருமணம் முடித்து இழிவு செய்ய நாடி இருப்பார் என்று தானே அர்த்தம்? இதன் விளைவாக தான் அவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் திருமண ஒப்பந்தம் செய்து பிறகு, அவர் அழைப்புக்கு இழிவு செய்யும் வகையில், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இடையர் என்று அழைத்ததாக நீங்கள் வெளியிட்ட ஆதாரம் அறிவிக்கிறது.
7
திரு உமர் அவர்களே, உங்கள் கூற்றுப் படி, கற்பழிக்க பலவந்தமாக அழைத்து வரப்பட்ட பெண்ணை, முறையே திரும்பி அனுப்ப பணிக்கும் பொழுது, அவருக்கு அன்பளிப்பு அளித்து முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அனுப்ப பணித்ததை நீங்கள் உங்கள் ஆதாரம் முலமே விவரித்துள்ளீர்கள். இது எப்படி முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு சாத்தியம் ஆயிற்று? தன்னை இழிவு செய்த பெண்ணுக்கு அன்பளிப்பு அளிக்க நடைமுறையில் எவருக்கும் மனம் வருமா? ஆனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும் அந்த உயர்ந்த குணம் இருந்தது என்று நீங்களே சாட்சி கூருகிறீர்கள். இப்படி எதிரிகள் வாயிலே அவருடைய மேன்மையை இறைவன் பரவ செய்வது ஒன்றே உங்களுக்கு போதவில்லையா? இறைவன் உங்களுடன் இல்லை என்பதை உணர.
8
திரு உமர் அவர்களே, கற்பழிப்புக்கு பிறகு அந்த பெண் மீது விருப்பம் இல்லாமல் போனால் விரட்டி அடிக்க சொல்லும் (Deuteronomy 21:10 – 14) வசனம். இப்படிப்பட்ட பைபிளையா அனைவரும் பின்பற்ற வேண்டும் என வர்புறுத்துகிரீர்?
When you go out to do battle with your enemies and the Lord your God allows you to prevail and you take prisoners, if you should see among them an attractive woman whom you wish to take as yours, you may bring her back to your house. She must shave her head, trim her nails, discard the clothing she was wearing when captured, and stay in your house, lamenting for her father and mother for a full month. And after that thou shall go in unto her, and you possess her and she becomes your women. If you are not pleased with her, then you must let her go where she pleases. You cannot in any case sell her; you must not take advantage of her, since you have already humiliated her. (Deuteronomy 21:10-14)

9
திரு உமர் அவர்களே, உங்கள் கூற்று படி, அந்த பெண்ணை கற்பழிக்க பலவந்தமாக அழைத்து வரப்பட்டு இருந்தால், தன்னை இடையர் என்று இழிவு செய்த பெண்ணை ஒரு மன்னர் எவ்வாறு திரும்பி செல்ல அனுமதிப்பார்? உங்கள் கூற்று படி, தன் விருபதிற்காக பலவந்தமாக அழைத்து வரவழைக்கபட்ட பெண்ணை, மீண்டும் அனுப்ப முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு மனம் வந்தது? இது ஒன்றே போதவில்லையா, திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மேன்மை பற்றி உங்களை அறியாமலே நீங்கள் அளித்த நற் சான்றிதழ் இது என்பதை உணர.
10
தன்னிடம் உதவி நாடி வந்த பெண்ணை நாய் என்று உதாரணம் காட்டிய (Mark 7:27-29) உங்கள் ஏசுவை காட்டிலும் தன்னை இழிவு செய்த பெண்ணை உபசரித்து அனுப்பிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மேன்மையானவர் என்று நீங்களே அளித்த நற் சான்றிதழ் தானே இந்த கட்டுரை?
அது என்ன பாரபட்சம் திரு உமர் அவர்களே, பைபிளை முன் வைத்தால் மட்டும் நீங்கள் மௌனத்தை சம்மதமாக தருகிறீர்கள்? அப்படியானால் பைபிள் விபச்சாரத்தை போதிக்கிறது என்பதை ஏற்று கொள்கிறீர்களா? இஸ்லாமியர்களை குறை கூற கிறிஸ்தவர்கள் தகுதியற்றவர்கள் என்பதை ஒப்பு கொள்கிறீர்கள் தானே!! அப்படியல்ல என்றால் இப்போழுதாவது இந்த பைபிள் வசனங்களுக்கு தெளிவான பைபிள் வசனத்தை கோடிட்டு பதில் தருவீர்களா?
Round 2
வாசகர்களே, அதற்கு அடுத்தபடியாக தன் தலைப்பில், திரு உமர் அவர்கள் "Round 2" என குறிப்பிட்டுள்ளார். அது என்ன இரண்டாவது ரவுண்டு என தெரியவில்லை? ஓ!!! எங்கேயோ திரு உமர் அவர்கள் "ரவுண்டு கட்டி அடிக்க போவதாக" கூறியதாக ஞாபகம்! அதில் ஒரு ரவுண்டு முடித்துவிட்டார் போலும். இப்போது இரண்டாவது ரவுண்டு ஆரம்பித்து இருக்கிறார்.
அப்படி என்றால் முதல் ரவுண்டு எது? நமக்கு தெரிந்தவரை உமர் அவர்கள் விவாதித்த "முஹம்மது நபி (ஸல்) சபியா திருமணம்" மற்றும் "அல்லேலூயா" தலைப்புகளை தான் அவர் முதல் ரவுண்டு என நினைக்கிறார் போலும். அப்படி என்றால் திரு உமர் அவர்கள் அவர் இதுவரை விவாதித்த இந்த இரண்டு தலைப்புகளில் அவர் இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என தோல்வியுற்றதை ஒப்புக்கொண்டார் போலும்!!!
மேலும் இந்த தலைப்புகள் பற்றி படிக்க,
இந்த கட்டுரைகளுக்கு திரு உமர் அவர்களின் பதில் என்ன?
உமரின் இணையதள தொடுப்பை கொடுக்க மறுக்கிறோமா ?
திரு உமர் அவர்களே, உங்களுடைய இந்த கேள்விகளுக்கு இதற்க்கு முன்னரே எங்களிடம் பதிலளிக்க பட்டுள்ளதே, பிறகு ஏன் இந்த போலியான கேள்விகளை கொண்டு மாயையை உண்டாக்க முயல்கிறீர். நீங்கள் மறந்து விட்டீர்கள் என்றால் இதோ அந்த தொடுப்பை மீண்டும் கொடுக்கிறோம்.
பார்க்க:
அந்த தொடுப்பில் கேள்வி "14 திரு. உமர் அவர்களின் கருத்து:" க்கான பதிலை பார்க்கவும்.
ஏற்கனவே இதற்கு பதிலளிக்க பட்டிருந்தும் ஏன் இந்த கேள்வியை மீண்டும் முன்வைகிறீர்கள்? அப்படி நீர் முன்வைக்க விரும்பினால் நாங்கள் அந்த கட்டுரையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு அல்லவா கேள்வி எழுப்ப வேண்டும்!!! ஏன் இந்த போலித்தனம்?
அதில் நங்கள் வெளியிட்ட கருத்துக்கள், கேள்விகளின் சுருக்கம் இதோ
1
உங்கள் பொய் பிரச்சாரங்களை, நாங்கள் பிரசுரிக்க வேண்டும் என்று வேண்டுகிறீர்களா? எங்கள் தளங்களில் உங்களுக்கு விளம்பரம் வேண்டுமா?
2
திரு உமர் அவர்களே, உங்கள் பொய் கூற்று நிரம்பிய இணைய தளத்தை நங்கள் பிரசுரிக்காமல் இருப்பது, உங்கள் பொய் உரைகளை வாசகர்கள் முன் முகத்திரை கிளிப்பதற்காக அன்றி வேற எதற்காகவும் இல்லை. பொய் உறைகளை பிரசுரிக்க எங்களை பணிக்கிறீர்களா? இதை செய்ய யாரேனும் முன் வருவார்களா? உங்கள் இணைய தளத்தில் பிரசுரிக்க பெற்றுள்ள கட்டுரைகள் பாதிக்கு மேல் நீங்கள் மொழி பெயர்த்து, அப்படியானால் அதற்கு உரிமையாளர் நீங்கள் இல்லை. அப்படி இருக்க நாங்கள் ஏன் உங்களை அந்த கட்டுரைக்கு உரிமையாளர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்?
3
திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரைகளுக்கு பதில் அளிக்க உங்கள் இணையதள முகவரி இல்லாமல் செய்ய கூடாதா? அப்படி செய்தால் அது வாசகர்களை சென்று அடையாதா? உங்கள் கட்டு கதைகளை படித்து பாராட்ட முன் வரும் வாசகர்கள் எங்கள் கட்டுரைகளில் முன் வைக்கும் தெளிவான ஆதாரங்களை அதிலுள்ள உண்மை தன்மையை அறிய முன் வரமாட்டார்களா? உங்களை போல் நாங்கள் ஆதாரம் இல்லாமல் இப்படி தான் இருக்க வேண்டும்”, அல்லது அப்படி தான் இருக்க வேண்டும்என்று எங்கள் பொய்யான என்னத்தை வாசகர்களை நாங்கள் நம்ப சொல்வது இல்லை. தெளிவான பைபிள் வசனத்தை வாசகர்கள் முன் எடுத்து வைக்கிறோம். எதிர் வாதம் என்று சொல்லும் நீங்கள் இந்த பைபிள் வசனங்களுக்கு தெளிவான ஆதாரத்தை முன் வைத்து மறுப்பு எழுத்து மறுக்கிறீரே? ஏன் உங்கள் பைபிளை நீங்கள் முழுமையாக அறியவில்லையா?
4
திரு உமர் அவர்களே, கட்டுரை வரைவதில் அவர் அவருக்கென்று ஒரு தனித்துவம் உள்ளது. உங்கள் தனித்துவம் ஒன்று அல்லது இரண்டு குர்ஆன் அல்லது ஹதீஸ் தொகுப்பை எடுத்துக்கொண்டு அது வேறொரு உண்மையை அறிவிக்கும் நிலையில், நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து, உங்கள் கற்பனை கூற்றுக்களை அதனுள் திணித்து, பக்கம் பக்கமாக பொய் உரைகளை வரைவது, இடை சொருகள்கள் செய்வது, வார்த்தை ஜாலங்கள் செய்வது, அடுத்தவர் கட்டுரைகளை மொழி பெயர்ப்பது என்ற பெயரில் உங்கள் கூற்றுக்களை இடை திணித்து வாசகர்களுக்கு வழங்குவது இன்னும் பல...
5
எங்களுடைய தனித்துவம் குர்ஆன், ஹதிஸ், பைபிள், உண்மையான சரித்திர புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துகள் கொண்டு உள்ளது உள்ளபடி அவற்றை அதிக படியாக முன் வைத்து அதன் முலம் வாசகர்களை விளங்க செய்வது. இவ்வாறு மக்களை விளங்க செய்வதற்கு முகவரி இல்லாத உங்களின் இணைய தள முகவரி தேவையா? இந்த வழிமுறையை பயன்படுத்த உங்களுடைய அறிவுரை எங்களுக்கு அவசியமா?
6
உங்கள் கட்டுரை தொடுப்பை கொடுக்கவில்லை என்பதற்காக இப்படி குதிக்கும் நீங்கள் உங்களின் நிலை பற்றி சிறிது நினைத்து பார்த்து இந்த கேள்வி கேட்பதர்க்கு நீங்கள் தகுதியானவரா என சிந்தியுங்கள்...
I
உமரின் உண்மையான பெயர் தெரியாது? உண்மையான பெயரில் எழுதுவதற்கு கூட தைரியமில்லை
II
நேரடி விவாதத்திற்கு வருவதற்கு தைரியமில்லை….
III
எழுத்து விவாததிற்கு வருவதற்கு தைரியமில்லை......
IV
நாம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பரா? தெரியவில்லை...
V
சரி அவர் மறுப்பு எழுத முடியாத கட்டுரைகளுக்காவது அவர் தோல்வியை ஒப்புகொல்வரா? அல்லது அந்த பதிப்பை இணையதளத்தில் இருந்து நீக்குவாரா?
VI
சரி அவரது இணையதள முகவரிக்கும் கிறிஸ்தவத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? ஈஸா? வுக்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்பந்தம்? குர்-ஆன்? னுக்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்பந்தம்?
VII
கிறிஸ்தவம் இப்படித்தான் உங்களை போலியாக / கோழையாக வெளிபடுத்த போதிக்கிறதா? நீங்களே உங்கள் மதம் போலி என பிரகடனம் படுத்துகிறீரே!!!

இப்படி ஏற்கனேவே பதிலளிக்கப்பட்ட கேள்வியை, மறுபடியும் கேட்க ஏறத்தாள 38 வரிகளில் ஒரு கட்டுரையே எழுதியுள்ளார்!!! இதை பார்த்தால் கேள்வி கேட்பதர்காக எழுதியதாக தெரியவில்லை. பரிட்சையில் பதில் தெரியாவிட்டால் பக்கங்களை நிரப்புவதற்காக எழுதுவார்களே அது போல இருக்கிறது. பாவம் அவரும் என்ன செய்வார் அவர் நம்பி வந்த பைபிளும் அவரை கைவிட்டது. வேறு வழி இல்லையே!!!
இப்போது அவர் முன்வைத்த அதிகப்படியான கருத்துக்கு நமது மறுப்பை பாப்போம்
உமர் சொன்னது,
கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், இஸ்லாமியரல்லாதவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கு மறுப்பு என்றுச் சொல்லி இஸ்லாமியர்கள் எழுதுகிறார்கள். ஆனால், இஸ்லாமியரல்லாதவர்களின் தொடுப்பை கொடுக்க இவர்கள் பயப்படுகிறார்கள். இவர்கள் தளத்தில் படிக்கும் வாசகர்கள் இருபக்கத்திலும் எடுத்துவைத்த விவரங்களை படித்து, அலசி ஒருமுடிவிற்கு வர இவர்கள் விரும்புவதில்லை
நம்முடைய மறுப்பு:
"கடந்த நான்கு....." ஷ் ஷ்.... யப்பா..... இன்னும் எத்தனை காலம் இதே புராணத்தை பாடுவீர்களோ.... திரு உமர் அவர்களே, எத்தனை ஆண்டு காலம் எழுதுகிறோம் என்பது முக்கியம் அல்ல, நம் கட்டுரைகளில் எத்தனை சதவிதம் உண்மை இருந்தது என்பதும், எத்தகைய தெளிவான ஆதாரத்தை நாம் கோடிட்டோம் என்பதுமே வாசகர்களுக்கு முக்கியம்.
நாம் தொடுப்பை கொடுக்காததனால் ஏற்படும் விளைவுகளாக திரு உமர் அவர்கள் அறிவித்தது,
"இவர்கள் தளத்தில் படிக்கும் வாசகர்கள் இருபக்கத்திலும் எடுத்துவைத்த விவரங்களை படித்து, அலசி ஒருமுடிவிற்கு வர இவர்கள் விரும்புவதில்லை"
நம்முடைய மறுப்பு:
திரு உமர் அவர்களே, நீங்கள் முன்வைக்க விரும்பும் கருத்து, நாங்கள் எழுதும் கட்டுரை மூலம் வாசகர்கள் "இருபக்கத்திலும் உள்ள விவரங்களை படித்து அலச முடியவில்லை" என்பது. ஆனால் நிகழ்வுகள் வேறு விதமாக அல்லவா உள்ளது. வாசகர்கள் நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு ஏற்கனவே பதிலளிக்க பட்டுள்ளதாக கூறி அதற்கான தொடுப்பையும் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி இருபக்கத்திலும் உள்ள விவரங்களை தொடர்பு படுத்தி படிக்க முடிகிறது?
இதிலிருந்தே தெரியவில்லையா, வாசகர்கள் தொடர்பு படுத்தி படிக்க தேவையான விவரங்கள் நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்பதை நிரூபிக்க. பிறகு ஏன் இப்படி உண்மைக்கு மாறாக இப்படி பொய் உரைகிரீர்கள்?
திரு உமர் அவர்கள் அறிவித்தது,
மடியிலே கனமில்லையானால் வழியிலே பயமிருக்காது
உண்மை சொல்லும் எவனும் தன் வாசகருக்கு அனைத்து விவரங்களையும் கொடுக்க விரும்புவான்
நம்முடைய மறுப்பு:
இது ஏதோ நீங்கள் கண்ணாடி முன் நின்று உங்களை பார்த்து நீங்கள் கேட்பது போல் தோன்றுகிறது!!! முன்னமே நாம் வெளியிட்ட கேள்விகள்...
i
உமரின் உண்மையான பெயர் தெரியாது? உண்மையான பெயரில் எழுதுவதற்கு கூட தைரியமில்லை
ii
நேரடி விவாதத்திற்கு வருவதற்கு தைரியமில்லை….
iii
எழுத்து விவாததிற்கு வருவதற்கு தைரியமில்லை......
iv
நாம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பரா? தெரியவில்லை...
v
சரி அவர் மறுப்பு எழுத முடியாத கட்டுரைகளுக்காவது அவர் தோல்வியை ஒப்புகொல்வரா? அல்லது அந்த பதிப்பை இணையதளத்தில் இருந்து நீக்குவாரா?
இப்போது சொல்லுங்கள் மடியிலே கனமில்லையானால் வழியிலே பயம் எதற்கு உங்களுக்கு? நீங்கள் பொய் சொல்கிறீரா அல்லது அணைத்து விவரங்களையும் கொடுப்பீரா?
இதற்கு அடுத்த படியாக உமர் எழுதியது,
"செவிடன் காதில் ஊதிய சங்கு, மழையில் நனைந்த எருமை மாடு"
நம்முடைய மறுப்பு:
இதுவும் ஏதோ நீங்கள் கண்ணாடி முன் நின்று உங்களை பார்த்து நீங்கள் கேட்பது போல் தோன்றுகிறது!!! முன்னமே நாம் வெளியிட்ட எழுத்து விவாத அழைப்பு ...
திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரைகளில் நீங்கள் வெளியிட்ட பொய்யான கருத்துகள் ஏதேனும் ஒன்றின் மீது உங்களிடம் தெளிவான ஆதாரங்கள் இருந்தால், எழுத்து விவாத கையெப்பமிட்ட தெளிவான ஒப்பந்தத்தை வெளியிட்டு, உங்கள் தெளிவான ஆதாரத்தை முன் வைத்து கட்டுரையாக வரையுங்கள், உங்கள் கிறிஸ்தவத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் உண்மையாக கிறிஸ்தவராக இருந்தால் அப்படி செய்யுங்கள்.
அப்படி தக்க ஆதரத்துடன் நீங்கள் வரையப் போகும் கட்டுரைக்கு, எதிர் வாதம் வரைய இறைவன் கிருபையை நாடியவர்களாக நாங்கள் காத்திருக்கிறோம். இப்படி முறையே எழுத்து விவாதத்திற்கு வருவதை விடுத்து, எந்த ஆதாரமும் முன் வைக்காமல் இப்படி புலம்பி கொண்டு இருக்காதீர்கள். இனியேனும் இப்படி தெளிவான ஆதாரத்தை முன் வைத்து நேரடி விவாதத்திற்கோ அல்லது எழுத்து விவாதத்திற்கோ முன் வராமல் பொய்யான வார்த்தைகளை நீங்கள் மொழிவதை தொடர்வீர்களாயின் சூரியனை பார்த்து குறைகிறீர்கள்என்று கிறிஸ்தவர்களாலே ஒதுக்க படுவீர், இன்னும் உங்கள் பெற்றோர்களை பார்த்து நீங்கள் இந்த கருத்தை தெரிவித்ததாக வாசகர்களால் கருத்தப் படுவீர்.
மேலும் அறிய அல்லேலூயாவும் ஈசா உமரும் பாகம் 2
உமர் அவர்களே, இப்போது சொல்லுங்கள்
  • செவிடன் காதில் ஊதிய சங்கு!
  • மழையில் நனைந்த எருமை மாடு!!
  • சூரியனை பார்த்து குறைக்கும் ___!!!
  • காமண்ஸ் சென்ஸ் இல்லாதவர் !!!!

இவை யாருக்கு பொருந்தும் என்று?
இதற்கு அடுத்த படியாக உமர் எழுதியது,
இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி அதிகம் எழுத எழுத அனேக உண்மைகள் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஆண்டாண்டு காலமாக இஸ்லாமியர்கள் மறைத்துவைத்திருந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது.
நம்முடைய மறுப்பு:
திரு உமர் அவர்களே, நாமும் உண்மைகள் வெளிவர வேண்டும் என்று தான் எழுதுகிறோம். அதன்படியே இறைவனின் கிருபையால் உண்மைகள் வெளிவந்தன.... நீங்கள் மறந்து இருப்பீர்களானால் இதோ ஏற்கனவே வெளிவந்த உண்மைகள், நீங்கள் இதுவரை மறுப்பு தெரிவிக்காத உண்மைகள்....
இதோ கிறிஸ்தவம் பற்றி வெளிவந்த உண்மைகள், திரு உமர் அவர்களால் மறுப்பு அளிக்க முடியாதா உண்மைகள்...
இன்னும் பல....
இப்போது சொல்லுங்கள் திரு உமர் அவர்களே, எப்படிப்பட்ட உண்மைகள் வெளிவந்ததென்று....
வாசகர்களே, இந்த கட்டுரை மூலம் திரு உமர் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே போலியானது என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.
திரு உமர் அவர்கள் எழுதிய பதிலை இப்போது அலசுவோம்....
திரு உமர் அவர்கள் எழுதியது,
எங்கள் கட்டுரையில் ஆதாரங்கள் அதிகமாக இருப்பதினால் தானே, எழுத்து விவாதம் வேண்டாம், நேரடி விவாதம் வா என்றுச் சொல்லி அழைக்கிறீர்கள்.
இதே கட்டுரையில் அவரது கேள்விகளுக்கு மத்தியில் அவர் வெளியிட்ட கருத்து,
எழுத்து விவாதம் பற்றி கேட்டு இருந்தீர்கள், எனக்கு எது பாதுகாப்போ அதையே நான் செய்வேன். உங்களால் பதில் சொல்லமுடிந்தால் எழுத்து வடிவில் சொல்லுங்கள்.

நம்முடைய மறுப்பு:

திரு உமர் அவர்களே, நீர் சுயநினைவுடன் தான் எழுதுகிறீரா என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது? அல்லாது திரைக்கு பின் மறைந்து இருக்கும் உங்கள் நண்பர்கள் எழுத்தி தருவதை ஒரு முறையேனும் படிக்காமல் வெளியிடுகிறீர்களா?
  • ஒரே கட்டுரையில், முதலில் “இஸ்லாமியர்கள் எழுத்து விவாதம் வேண்டாம்” என கூறியதாக அறிவிக்க முயல்கிறீர்!
  • பின்னர் எங்களுடைய எழுத்து விவாத அழைப்பிர்க்கு, மறுப்பு தெரிவிக்கும் வகையில் “எனக்கு எது பாதுகாப்போ அதையே நான் செய்வேன்” என்று அறிவிகிறீர், அப்படியானால் “எழுத்து விவாதம் பாதுகாப்பற்றது, அதனால் நான் பங்கேற்கமாட்டேன்” என்று நீங்கள் அறிவித்ததாக தானே அது பொருள் படும், அப்படியானால் உங்களுடைய முந்தையா கருத்துக்கே நீர் முரன்படுகிறீர் தானே?
வாசகர்களே, உமர் அவர்கள் என்ன தான் செய்வார், தனுக்கு தானே முரண்படும் பைபிள்லின் ஒரு சில வசனங்களை மட்டுமே படித்து வளந்தவராயிற்றே.... பைபிளில் உள்ள வியாதி அவரையும் தொற்றிக்கொண்டது போலும்.....
வாசகர்களே, இறைவன் கிருபையில், தெளிவாக எழுத்து விவாததிற்கு நாம் தயார் என அறிவித்த வெகுநாட்களுக்கு பிறகு "எழுத்து விவாதத்திலும் பாதுகாப்பில்லை" என திரு உமர் அவர்கள் பயப்படுகிறார். இவரை பார்த்து நகைப்பதை தவிர வேறென்ன செய்வது? புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே...
திரு உமர் அவர்களே, இப்போது சொல்லுங்கள், உங்கள் கட்டுரையின் கருத்துகள் நீங்கள் உங்களை பார்த்து கேட்டு கொண்டது போல் உள்ளதா? இப்போது சொல்லுங்கள் யார் கோழை? யார் தொடை நடுங்கிகள்? யாருக்கு பைபிளின் மீது நம்பிக்கை இல்லை? யாருக்கு ஏசுவின் மீதும் அவர் அன்பானவர் என்பதின் மீதும் நம்பிக்கை இல்லை? இதை பார்த்தால் கிறிஸ்தவத்தை முன்னிறுத்தி விவாதிப்பது திரு உமர் அவர்களுடன் சேர்த்து, கிறிஸ்தவத்துக்கும் மற்றும் பைபிளுக்கும் பாதுகாப்பற்றது என்பதனால், திரு உமர் அவர்கள் பின்வாங்குகிறார் என்று தோன்ற செய்கிறது அல்லவா?
உமர் அவர்கள் தன் கட்டுரையில் முன்வைத்த ஒரே கேள்வி (அவர் கற்பனை கூற்று களை தவிர்த்து),
இப்போது என் கேள்விகள் என்னவென்றால், ஹதீஸ் எண் 5255ல் சொல்லப்படாத புதிய விவரம், அல்லது முக்கியமான விவரம் ஏதாவது ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 என்பவைகளில் உண்டா?
மேற்கண்ட கேள்விக்கான பதில்லை, இந்த கட்டுரையின் தொடர்ச்சியில் வெளியிடுவோம். இன்ஷா அல்லாஹ்.....
அஸ்ஸலாமு அழைக்கும்,

-ஜியா & அப்சர்


--
--

5 comments:

sfssdd said...

அஸ்ஸலாமு அழைக்கும்
அல்லா உங்களுக்கு மறுமையில் நற் கூலி வழங்குவானகா .....நீங்கள் ஏன் jesusinvites.wordpress.com தளத்திற்கு பதில் அளிக்க கூடாது ........
Best Regards...

Mohammed

sfssdd said...

அஸ்ஸலாமு அழைக்கும்
அல்லா உங்களுக்கு மறுமையில் நற் கூலி வழங்குவானகா .....நீங்கள் ஏன் ஜெசுசின்விடேத்.வோர்ட்ப்றேச்ஸ்.கம தளத்திற்கு பதில் அளிக்க கூடாது ........

Mistnaya said...

என்னவோ இமய மலையை தூக்கிகிட்டு நிக்கிற மாதிரி சீன்னு போட்ற உமரண்ணன், ஏதோ கொஞ்சம் பிரீயா இருப்பதாகவும், மறுப்பு கட்டுரை தர போறதாகவும் பாவ்லா காட்டியிருந்தார்.இப்போ நீங்க அடிச்சா ஆப்புலே ஒரு மூணு நாலு மாசம் தலையை காட்ட மாட்டார் பாருங்க.

கிடைக்கிற எலும்புக்காக வாளாட்டுறே உமரன்னனும் என்னதான் செய்வார் பாவம்.

Mist

Zi said...

அஸ்ஸலாமு அழைக்கும் வா ரஹ்மதுல்லாஹி வா பராகத்துஹு, திரு முஹம்மது அவர்களே, எல்லாம் வல்ல இறைவன் கிருபையால், நாங்கள் இருவர் திரு உமர் அவர்கள், மற்றும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவருடைய தோழர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யும் பொய் பிரச்சாரங்களுக்கு இந்த இணையதளம் மூலம் பதில் அளித்து கொண்டு இருக்கிறோம். கூடிய விரைவில் ஏனைய இணையதளங்களுக்கும் பதில் அளிக்க முயற்சிப்போம், எல்லாம் வல்ல இறைவன் நாடினால்.

- ஜியா

rameez said...

சகோதரர் மிஸ்ட் அவர்களே,

நீங்கள் ஏன் உங்கள் கருத்துகளையும் பதில்களையும் கட்டுரையாக எழுதகூடாது? உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்
எனது email முகவரி rameez.1900௦@gmail.com

ரமீஸ்