Friday, November 4, 2011

திரு உமர் அவர்களின், "வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும்
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக




திரு உமர் அவர்களின், "வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு 


திரு உமர் அவர்கள் சமீபமாக, உலகில் உள்ள  திரு குர்ஆனில் (பைபிளை போல்) பல பிழை திருத்தங்கள் (Versions) உள்ளது என்றும், இன்னும் திரு குர்ஆன் பைபிளை போல் முழுமை அடையா நூல் என, தன் பொய் கூற்றுகளை வாசகர்களை நம்ப செய்யும் முயற்சியில், பல இடை சொருகள்கள் செய்யபட்டு போலியான மற்றும் தெளிவில்லாத ஆதாரங்களை கொண்டு மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு கொண்டு இருக்கின்றார். திரு உமர் அவர்களின் இந்த பொய்யான கருத்துகளை எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் ஒன்றின் பின் ஒன்றாக ஆராய்ந்து தெளிவு பெற முனைவோம்.



வாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவித்த கருத்துகளை ஆராய்வதற்கு முன்னர், இஸ்லாமியர்கள் பைபிளின் நம்பகத்தன்மைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள், கருத்துகள் மற்றும் தெளிவான அதரங்களுக்கு, இந்த நொடி வரையிலும் எந்த தெளிவான விளக்கமும் இல்லை என்பதை இக்கணம் வாசகர்கள் முன்நிலையில் பதிவு செய்ய விரும்புகிறோம்.



வாசகர்களே, பெரும்பாலும் உலகளவில் எல்லா இஸ்லாமியனும் கையில் வைத்து இருப்பது ஒரே திரு குர்ஆனின்  பிரதிகள் என்பதை நாம் அறிந்ததே. நம்மிடம் உள்ள திருக்குர்ஆன், வசனங்களாக அருளப்பட்டு, நபி தோழர்களால் உடனுக்குடன் எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, கலிFபா அபு பக்கர் (ரலி) அவர்கள் காலத்தில் வசனங்கள் ஒன்று சேர்க்க பெற்று தொகுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டது. அவர் மறைவுக்கு பின்னர் கலிFபா உமர் (ரலி) அவர்களிடமும், பின்னர் ஹப்ஸா (ரலி) அவர்களிடமும் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதன் பின்னரே திரு உமர் அவர்கள் அறிவிக்க விரும்புவது போல் இந்த குர்ஆன் கலிFபா உத்மான் (Uthman Ibn Affan) அவர்கள் ஆட்சி காலத்தில், பல பிரதேசங்களுக்கும் அனுப்புவதற்காக, தொகுத்து பிரதிகள் எடுக்கப்பட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்ததில் இருந்து, கலிFபா உத்மான் அவர்களால், திரு குர்ஆன் பிரதிகள் பல்வேறு பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்க பெற்றதர்க்கும் இடைப்பட்ட காலம் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் மட்டுமே.



வாசகர்களே, திரு உமர் அவர்கள் அறிவிக்க விரும்பும் கருத்துகள், இந்த திரு குர்ஆனுக்கு பொருந்துமா என்பதே இந்த தொடர் கட்டுரையின் மைய கருத்து. இந்த தொடர் கட்டுரையில் முதலாவதாக நாம் பார்க்க விருப்பது, திரு உமர் அவர்களின் ரமளான் சிறப்புக் கட்டுரை: வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல் என்ற மொழிபெயர்ப்பு கட்டுரை ஆகும்: 


இன்றைய திருக் குர்ஆன்
நம்மிடம் உள்ள  திருக் குர்ஆன், கலிFபா உத்மான் (Uthman Ibn Affan) அவர்கள் ஆட்சி காலத்தில், அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஹப்ஸா (ரலி) அவர்களிடமும் பாதுகாக்கப்பட்ட திரு குர்ஆன்னுடன் ஒப்பிட்டு, வசனங்கள் பலவகையான சோதனைகளுக்கு பிறகு, சஹாபா பெருமக்களால் ஏற்க்க பெற்று தொகுப்பில் சேர்க்கப்பட்டது. இதை திரு உமர் அவர்களே உறுதி செய்யும் வண்ணம் இதற்க்கு முன்னரே, பல கட்டுரைகளில், அவரே வெளியிட்ட செய்தி.

உத்மான் அவர்கள் தொகுத்த திருக் குர்ஆன் பிரதிகள் இன்றளவும் உலகில் உள்ள பல நூலகங்களில், இன்னும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த திரு குர்ஆனுக்கும் நம்மிடம் உள்ள திரு குர்ஆன்க்கும் இடையே எந்த முரண்பாடுகளும் இருப்பதாக நம்மால் அறிய முடியவில்லை.


திரு உமர் அவர்கள் சொல்லும் அந்த மற்ற திருக் குர்ஆன் என்பது என்ன?

திரு உமர் அவர்கள் தன்னுடைய மொழிபெயர்ப்பு கட்டுரையில் வர்ஷ் மற்றும் ஹப்ஸ் என்ற பெயரில் இரண்டு திரு குர்ஆன் இருப்பதாகவும், இவை இரண்டின் இடையில் பல வார்த்தை வேற்றுமை இருப்பதாகவும் ஒரு பட்டியலை வெளியிட்டு இருந்தார். இன்னும் தன் கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்:

ஒரு வசனம் ஹப்ஸ் குர்‍ஆனில் "ஒருவகையாகவும்", அதே வசனம் "வர்ஷ்" குர்‍ஆனில் வேறு வகையாகவும் இருக்கும். உதாரணத்திற்கு: குர்‍ஆன் 2:58ஐ எடுத்துக்கொண்டால், ஹப்ஸ் குர்‍ஆனில் "நாம் மன்னிப்போம்" என்று "அல்லாஹ் நேரடியாக பேசியதாக" இருக்கும். ஆனால், வர்ஷ் குர்‍ஆனில் அதே வசனம் "அவன் மன்னிப்பான்" என்று "அல்லாஹ் பேசியதாக மூன்றாம் நபர் சொல்வதாக" இருக்கும். இங்கு வார்த்தையே மாறியுள்ளது. இதைப் பற்றி இன்னும் மேலதிக விவரங்கள் இந்த கட்டுரைக்கு பீஜே அவர்கள் மறுப்பு எழுதினால், நாம் பிறகு பார்ப்போம்.



திரு உமர் அவர்களிடம் நாம் கேட்க்க விரும்பும் கேள்வி:

  1. திரு உமர் அவர்களே, இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ பைபிள்ளில் எடுத்து வைப்பது பொருள் மற்றும் மூல கருத்தில் உள்ள வேற்றுமை. ஆனால், நீங்கள் கொடிடுவது மூல கருத்தில் ஒன்றி வார்த்தைகளில் வேறுபடும் வேற்றுமை. இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியாதா?
  2. திரு உமர் அவர்களே, நீங்கள் கோடிட்ட வர்ஷ் மூல முழுமையான குர்ஆன் அரபி ஆதாரத்தை எந்த முகவரியில் இருந்து எடுத்தீர்கள்? நீங்கள் அறிவிக்கும் இந்த குர்ஆன் முழுமையான பிரதிகள் எங்கே உள்ளது? அந்த முகவரியை வெளியிடுங்கள், ஏன்னெனில் நீங்கள் ஒரு சில வார்த்தையை மட்டுமே வெளியிட்டு இருக்கிறீர்கள், அது சார்ந்து இருக்கும் முழு வசனத்தையும் ஆராய்ந்தாலே அன்றி அந்த வசனம் பொருளில் வேருபடுகிறதா என்பதை அறிய முடியாது.


திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த உதாரணத்தின் அடிப்படையில் பார்த்தாலும் 2:58 வர்ஷ் ஓதுதலின்படிஅவன் மன்னிப்பான்” என்று வருகிறது, இன்னும் ஹப்ஸ் ஓதுதலின் படி “நாம் மன்னிப்போம்” என்று வருகிறது. இந்த ரெண்டு வசனங்களையும் முழுமையாக படித்தால் வர்ஷ் ஓதுதல் அடிப்படையில் ஒரு முன்றாம் நபர் இறைவனின் செயலை அறிவிப்பதாக அவன் மன்னிப்பான்” என்றும், ஹப்ஸ் ஓதுதல் அடிப்படையில் இறைவன் தன் செயலை அறிவிப்பதாக “நாம் மன்னிப்போம்” என்று அறிவிப்பதை நம்மால் உணரா முடிகிறது. இந்த இரண்டு வசனங்களுக்கு இடையே உள்ள பொருள் மாறு பட வில்லை, இரண்டுமே “இறைவன் மன்னிப்பான்” என்பதையே அறிவிக்கிறது, ஆனால் அந்த பொருளை அறிவிக்கும் விதத்தில் வார்த்தைகள் இடையே வேற்றுமை இருக்கிறது. இதை இஸ்லாமியர்கள் “அஹ்ருப்” என்பார்கள், “அஹ்ருப்” என்பது பெரும்பாலும் ஒரு தரப்பினர் மொழியில் உள்ள கொச்சை வழக்கு (Slang) ஏற்ப வார்த்தைகளை உச்சரிப்பது ஆகும். திரு குர்ஆன் ஏழு அஹ்ருப்களில் வழங்க பெற்றது என்று ஹதிஸ்கள் அறிவிக்கின்றன. ஆனால் இந்த அஹ்ருப்கள் அறிவிக்கும் மையா கருத்துகளில் வேற்றுமை இருந்ததாக நம்மால் அறிய முடியவில்லை.   
According to hadith literature, the Qur'an is revealed in seven ahruf (singular harf). The most famous of those hadiths is reported in the Muwatta compiled by Malik ibn Anas.

Malik Ibn Anas has reported:[1]
Abd Al-Rahman Ibn Abd al-Qari narrated: “ Umar Ibn al-Khattab said before me: I heard Hisham Ibn Hakim Ibn Hizam reading Surat Al-Furqan in a different way from the one I used to read it, and the Prophet (sws) himself had read out this surah to me. Consequently, as soon as I heard him, I wanted to get hold of him. However, I gave him respite until he had finished the prayer. Then I got hold of his cloak and dragged him to the Prophet (sws). I said to him: “I have heard this person [Hisham Ibn Hakim Ibn Hizam] reading Surah Al Furqan in a different way from the one you had read it out to me.” The Prophet (sws) said: “Leave him alone [O ‘Umar].” Then he said to Hisham: “Read [it].” [Umar said:] “He read it out in the same way as he had done before me.” [At this,] the Prophet (sws) said: “It was revealed thus.” Then the Prophet (sws) asked me to read it out. So I read it out. [At this], he said: “It was revealed thus; this Qur’an has been revealed in Seven Ahruf. You can read it in any of them you find easy from among them.





நாம் முன்னரே அறிவித்த அதிகார பூர்வமான திரு குர்ஆன் தொகுப்பை தவிர்த்து, அந்நாளில் நபிதோழர்கள், தங்கள் உபயோகத்திற்காக, தாங்களே திரு குர்ஆன் வசனங்களை கோர்த்து, இயற்றி, சேகரித்து பாதுகாத்தனர். இதில் குறிப்பிட தக்கவர்கள் இப்னு மசூத் (Ibn Mas'ud), உபை பின் காப் (Ubay bin Ka'b), ஹப்சா(Hafsa), ஜைத் பின் தாபித் ( Zaid bin Thabit), ஆயிஷா ( 'A'isha), உம்மு சலமா (Umm Salama), etc.... 

இவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் திரு குர்ஆன்னை தொகுத்து, பாதுகாத்து, உபயோகித்து வந்தார்கள். இப்படி தொகுக்க பட்டவை அரபி மொழியில் இருந்தாலும், அவர்கள் தங்கள் சொந்த புரிதலுக்காகவும், விளக்கத்திற்காகவும், தங்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் சில சுய குறிப்புகளை இயற்றி இருக்கலாம். இவை குர்ஆன்னில் செய்யப்பட்ட திருத்தங்கள் அல்ல, இவற்றையும் ஒரு மொழிபெயர்பாகவே கருதவேண்டும். இன்னும் இவர்கள் தங்கள் அதிகார பூர்வமற்ற திரு குர்ஆன்னில் எந்த அஹ்ருப்பை தேர்வு செய்து இயற்றி கொண்டார்கள் என்பது, (இவர்கள் தொகுத்த மூல குர்ஆன் முழுமையாக கிடைக்க பெறாத நிலையில்) இன்னும் தெளிவாகாதா செய்தி. இவர்கள் தங்களுக்கு எந்த அஹ்ருப் புரிதல் எளிதாக இருந்ததோ அதை அவர்கள் தேர்வு செய்து இருக்க கூடும். இவற்றினுள் வார்த்தை வேற்றுமை அமைந்து இருக்க வாய்ப்பு இருந்தாலும், மூல பொருளில் வேறுபட வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இன்னும் திரு உமர் அவர்கள் வெளியிட்ட தெளிவில்லா வசனங்களும் இதை போன்று அதிகார பூர்வமாக அறிவிக்க படாத ஒரு திரு குர்ஆன் அஹ்ருப்பை சார்ந்த வசனங்களாக இருக்க கூடும், இத்தனை திரு உமர் அவர்கள் தரவிருக்கும் முழுமையான வர்ஷ் மூல குர்ஆன் முகவரிகளை கொண்டே உறுதி செய்ய முடியும்.    

மேலும், ஒரு தனி நபர் தொகுத்த திரு குர்ஆன், பலரிடம் உள்ள வசனங்களை முழுமையாக சேகரித்து, அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து, அதனை முழுமையாக தொகுக்க வாய்ப்புகள் மிகவும் சொற்பமாகவே உள்ளது. ஆனால் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசாங்கத்தால் அறிவிப்பு செய்யப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தொகுக்கப்பட்ட கலிFபா உத்மான் அவர்கள் காலத்து திரு குர்ஆன்னே முழுமையானதாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


இன்னும் ஏன் அந்த சஹாபாக்களின் திருக் குர்ஆன் உபயோகத்தில் உள்ளது?
கலிFபா உத்மான் அவர்கள் திரு குர்ஆன் பிரதிகள் அதிகார பூர்வமாக அறிவித்த பிறகு எஞ்சி இருந்த திரு குர்ஆன் பிரதிகளை அழிக்கும் மாறு முறையான வேண்டுதல் விடுத்து இருந்தார்கள். ஆனால் சில சஹாபாக்கள், தங்கள் திரு குர்ஆன் ஒரு சில பிரதி பக்கங்களில், தங்கள் சொந்த புரிதலுக்காக பல பின்குறிப்புகளை இணைத்து இருந்தமையால், அதனை அழிக்க மனம் இல்லாமல் அவற்றை வைத்து கொண்டார்கள். அத்தகைய அதிகார பூர்வமற்ற திரு குர்ஆன் பிரதியின் ஒரு சில பக்கங்களை அரபி மொழியை தாய் மொழியாக கொண்டவர்களும், அரபி மொழி ஆராய்ச்சியாளர்களும்,  திருக் குர்ஆன் ஆராய்ச்சியாளர்களும், தங்கள் ஆய்வுகளுக்காகவும், இன்னும் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்வதர்காகவும் உபயோக படுத்துகிறார்களே அன்றி, அதிகாரப்பூர்வ  திருக் குர்ஆனை விட்டுவிட்டு, மறுத்துவிட்டு சஹாபாக்கள் சுயமாக தொகுத்த திரு குர்ஆன் மொழியாக்க ஒரு சில பக்கங்களை பயன் படுத்துவோர் இல்லை.


மொழி வேறுபாடுகள் 
இவற்றை தவிர்த்து மொழிகளுக்கு என்றே உள்ள மருவல்கள், உட்பிரிவுகள் உள்ளன. உதாரணத்திற்கு பலருக்கு ஆங்கிலத்திற்கு உள்ளேயே பிரிவுகள் (UK English and US English) என இருப்பது தெரியாது. ஆனால் படித்தவர்கள் இதனை அறிவார்கள். உதாரணத்திற்கு சில வார்த்தைகள்
UK
US
Aeroplane
Airplane
Aluminium
Aluminum
Speciality
Specialty
Cheque
Check


இதற்காக ஒருவர் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தை (UK) வைத்துக்கொண்டு, மற்றொன்டை (US) பிழை செய்துள்ளார்கள் என்று கூறினால் அவனை பார்த்து அனைவரும் சிரிப்பார்கள். இதை உறுதிபடுத்தும் விதாமாக இப்போது  குர்ஆனில் இருந்தே ஒரு உதாரணத்தை பாப்போம்.







மேலே இடது புறத்தில் உள்ளது அதிகாரப்பூர்வ திருக்குர்ஆன், வலது புறத்தில் உள்ளது அதிகார பூர்வமற்ற திரு குர்ஆன்னின் ஒரு சில பக்கங்கள். இவற்றில் "குர்ஆன்" என்னும் எழுத்துக்கு "கு"  வுக்கு பதிலாக "Fபூ"(Foo)  என்னும் எழுத்து பயன் படுத்தப்பட்டுள்ளது. இதையும் பிழையாக எழுதிவிட்டார்கள் என்று சொல்வீர்கள் போலும்!!! மேலும் பழங்கால அரபி மொழியில் Diacritical Marks என்று சொல்லக்கூடிய அடையாளங்கள் இருக்காது. அதை போன்றே பழங்கால குர்ஆனிலும் இதை போன்ற அடையாளங்கள் இல்லை.





இந்த உச்சரிப்பு அடையாளங்கள் அரபி மொழி வளர்ச்சிக்கு ஏற்ப பின்னாளில் மாற்றம் அடைந்தவை. திரு குர்ஆன் எழுத்து வடிவில் அல்லாமல், உச்சரிப்பு மற்றும் ஓசை வடிவில் மக்கள் மனதில் முழுவதுமாக பாதுகாக படுகிறது. இந்த எழுத்து வடிவ குர்ஆனும், அரபி மொழியின் வளர்ச்சிக்கு ஏற்ப, வார்த்தைகளின் துவக்கம் மற்றும் முடிவு முதலியவற்றை அறியும் வண்ணம், அதன் ஓசை மற்றும் மூல பொருளில் மாற்றம் அடையாமல், உலகில் உள்ள அனைவரும் பயன் பெரும் வகையில் மாற்றம் அடைந்துள்ளது. இதிலிருந்தே திரு உமர் அவர்கள் அறிவிக்க வரும் கருத்துக்கும் குர்ஆனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இன்னும் அன்றாடம் பிழை திருத்தம் காணும் கிறிஸ்தவ பைபிள் தொகுப்புக்கு, அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஏறத்தாள ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கழிந்த நிலையிலும், பிழைதிருத்தம் காண திரு குர்ஆன், அணு அளவும் ஒப்பாகாது என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.


பார்க்க: 


சரி, திரு உமர் அவர்கள் செய்த மொழிபெயர்பாவது சரியாக உள்ளதா என்று பார்த்தால், வழக்கம் போல் அதிலும் பிழை, இடை சொருகள். உதாரணமாக திரு உமர் அவர்கள் எழுதியது,

قُل
Say!
கூறு!
قَالَ
He (said)
அவர் கூறினார்
அல் அன்பியா
الأنبياء
21:4

திரு உமர் அவர்களேقَالَ என்கின்ற தனிப்பட்ட வார்த்தைக்கு நேரடியான அர்த்தம் "He" என்பதா, இல்லை "said" என்பதா? "said" என்ற நேரான அர்த்தத்தை அடைப்புக்குறிக்குள் போட்டுவிட்டு "He" என அர்த்தம் செய்துள்ளீர்!!! இது தான் நீங்கள் குறை கண்டுபிடிக்கும் லட்சணமா. யாரோ எழுதுகிறார் என்பதற்காக இப்படி "ஈ அடிச்சான் காப்பி அடித்தால்" இப்படிதான் ஆகும். சரி ஆங்கிலம் தான் அரைகுறை என்றால் தமிழில் அந்த அடைப்புக்குறி கூட இல்லை. "அவர் கூறினார்" என்று நேரடியாக பொருள் படுவது போல் எழுதி உள்ளீரே,  قَالَ என்கின்ற தனிப்பட்ட வார்த்தைக்கு நேரடியான அர்த்தம் "அவர் கூறினார்" என்பதா?.


திரு உமர் அவர்கள் குறிப்பிட்டது:
مَا تَنَزِّلُ
you send not down
நீ ... உண்மையான (தக்க காரணத்தோடு) அல்லாமல் இறக்குவதில்லை
مَا نُنَزِّلُ
We send not down
நாம் ... உண்மையான (தக்க காரணத்தோடு) அல்லாமல் இறக்குவதில்லை (*)
அல் ஹிஜ்ர்
الحجر
15:8

இதன் முழு வாக்கியம் (உமர் அவர்கள் குறிப்பிட்ட ஹப்ஸ் திரு குர்ஆன் கருத்துப்படி),

15:8

We do not send down the angels except with truth; and the disbelievers would not then be reprieved.

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு,
நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை; அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.


இந்த வாக்கியம் இறைவன் அறிவிக்கும் கருத்தாக அமைந்துள்ளதை நாம் தெளிவாக உணர முடிகிறது. திரு உமர் அவர்கள் அறிவிக்க விரும்பும் “வர்ஷ்”, முழுமையான வசனம் ஆதாரம் இல்லாத காரணத்தால், இந்த வசனத்தை நாம் திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் "நாம்" என்ற இடத்தில் "நீ" (வர்ஷ்) என்ற வார்த்தையை உபயோக படுத்தி பாப்போம்.
நீ மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை; அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.

இப்படி இறைவன் (மனிதன் மலக்குகளை இறக்குகிறார் என) கூறுவது போல், திரு குர்ஆணை தொகுப்பதற்கு எந்த முஸ்லிமாவது முயன்று இருப்பாரா? சரி உதாரணத்திற்கு இப்படி தான் இருக்கிறது என்று வைத்துகொள்வோம், இவ்வளவு பெரிய முரண்பாடை உங்கள் கிறிஸ்தவ அறிஞர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா என்ன? அந்த முழு வாக்கியத்தையும் எழுதி இதற்கென ஒரு தலைப்பை போட்டு பக்கம் பக்கமாக உங்கள் பொய்யுரைகளை வெளியிட்டு இருக்க மாட்டிர்கள்?

ஆக அந்த முழு வாக்கியத்தையும் வெளியிடாமல் இருப்பதிலிருந்தே தெரிகிறது, இந்த கட்டுரையின் மூல ஆசிரியர் எதையோ மறைக்க முயல்கிறார் என்று.

திரு உமர் அவர்களே, இந்த கட்டுரைகேனும் தெளிவான ஆதாரம் கொண்டு ஒவ்வொரு மறுப்புக்கும் பதில் அளிப்பீர்களா? இல்லை தலைப்பை மட்டும் பதில் என்று போட்டுவிட்டு சம்பந்தம் இல்லாமல் எழுதுவீர்களா? பொருத்து இருந்து பார்போம் இன்ஷா அல்லாஹ்...  

மேலும் மறுப்புகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்......

அஸ்ஸலாமு அழைக்கும்

-
ஜியா & அப்சர்






--





பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும்
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


கேள்வி – பதில் பகுதி




வாசகர்களே, இந்த பகுதி, மேலே வெளியிடபட்ட தலைப்புக்கு தொடர்பாக வாசகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு/கருத்துகளுக்கு, எல்லாம் வல்ல ஏக இறைவன் கிருபையை நாடியவர்களாக பதில் அளிக்க முயலும் விதமாக வடிவமைக்க பெரும் பகுதி.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: பொதுவாக இஸ்லாமியர்களுக்கு எதிராக, திரு உமர் அவர்கள் அறிவிக்கும் கருத்துகளுக்கு மறுப்பு அளிக்க முயலும் வேளையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளுக்கு/பொய்யுரைகளுக்கு தெளிவான ஆதாரம் விடுத்து மறுப்பு அளித்த பிறகே, நாம் அந்த தலைப்புக்கு ஒன்றிய கிறிஸ்தவ நம்பிக்கையின் தெளிவான ஆதாரங்களை முன் வைத்து எதிர் கேள்வி எழுப்ப முனைகிறோம். இதை போன்று நம்மிடம் எதிர் கேள்விகள் எழுப்ப விரும்பும் வாசகர்கள், வேரு இணைய தள முகவரிகளை கோடிடாமல், கிறிஸ்தவ நம்பிக்கையில் இருந்து நாம் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் தெளிவான பைபிள் வசன ஆதாரம் விடுத்து விளக்கம் அளித்த பிறகு, இதற்க்கு தொடர்பான இஸ்லாமிய நம்பிக்கையின் தெளிவான ஆதாரங்களை விடுத்து கேள்வி எழுப்ப முனைந்தால், அது ஒரு ஆரோக்கியமான எழுத்து விவாதமாக அமையும் என்ற எண்ணத்தில், இதை போன்று தெளிவான ஆதாரம் கொண்டு எல்லா கேள்விகளுக்கு விடை அளிக்குமாறு வாசகர்களை கேட்டு கொள்கிறோம்.





1
வாசகர் திரு கொல்வின் அவர்களின் கேள்வி / கருத்து:


குவைது என்ற போர்வீரன் உத்மானிடம் குர்-ஆன் வாக்கியங்களை குறித்து பேசினான். அதன் பின்பு அவர் 14 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, குர்-ஆன் வாக்கியங்களை சேகரிக்க முயன்றார். முகமது வாய் வழியாக சொன்னவற்றை கேட்ட அநேகர் வந்து முகமது இதையெல்லாம் என்று சொன்னார்கள். அதிகளவு ஜனங்கள் வந்ததனால், இனி யாரும் குர்-ஆன் வாக்கியங்களை கொண்டுவர வேண்டாம் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதுவரை சேகரித்த வாக்கியங்களை எல்லாம் தொகுத்து அமைத்தனர். இந்த நிகழ்ச்சி கி.பி 650- 656 வரையில் நடந்தது. குர்-ஆனின் தொகுப்பில் எவை சேர்க்கப்பட வேண்டும், எவை சேர்க்கப்பட கூடாது என்று உத்மான் கட்டளையிட்டார். அதிகாரப்பூர்வமான குர்-ஆன் ஒன்று தான் இருக்க வேண்டுமென்று இப்படி செய்யப்பட்டது. தன் காலத்தில் கொடுக்கப்பட்ட குர்-ஆனின் பிரதியை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, அல்லது அப்படி கருதப்படுகின்ற எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், அல்லது துண்டுப்பகுதிகளாக இருப்பினும் அவற்றையும் எரித்து விட வேண்டுமென்று உத்மான் கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6: 479) on திரு உமர் அவர்களின், "வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு



நம்முடையா விளக்கம்: திரு கொல்வின் அவர்களே, பதில்/மறுப்பு அளிக்க வேண்டும் என்ற உங்களுடைய ஆர்வம் எங்களுக்கு புரிகிறது, இந்த முயற்சிக்காக உங்களை வாழ்த்துகிறோம். ஆனால் இவ்வாறு பதில் அளிக்க முயற்சிக்கும் வேளையில், திரு உமர் அவர்கள் போன்ற பொய்யர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக அவிழ்த்து விடும் கட்டு கதைகளை நம்பி, அதனை பிரசுரிக்க முனைவது, வரவேற்ப்புக்கு உரியது அல்ல என்பதனை இச்சமையத்தில் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் அறியாமையினால் பிரசுரிக்கும் பொய்யுரைகளுக்கும், எல்லாம் வல்ல இறைவனிடம் பதில் அளிக்க நேரிடும் என்பதனை மனதில் கொண்டு, சிறிது ஆய்வு பிறகு, உங்கள் கருத்தில் உண்மை இருக்கும் என்ற நிலையில், அதனை பிரசுரித்தால் அது வரவேற்ப்புக்கு உரியதாக இருக்கும் என்று கேட்டு கொள்கிறோம்.

உதாரணமாக, நீங்கள் மேலே கோடிட்ட ஹதிஸ் எங்கிருந்து எடுக்க பட்டது? இதன் அறிவிப்பது யார்? இன்னும் குறைத்த பட்சம் “குவைது” என்ற போர் வீரனை ஏதேனும் ஒரு ஹதிஸ்களில் கண்டிர்களா? அப்படி ஒரு ஹதிஸ் இருந்தால் எங்களுக்கு எடுத்து தாருங்கள் ஆயுவுக்காக. இன்னும் நீங்கள் அறிவிக்கும் புகாரி ஹதிஸ் முகவரி அல் புகாரி 6: 479 சரியானதா? அந்நாளில் திரு குர்ஆன்னில் எதனை சேர்க்க வேண்டும் என்று உஸ்மான் கட்டளையிட்டாரா? 14 நபர்கள் கொண்ட குழு திரு குர்ஆன்னை தொகுத்தார்களா?    

உங்களுக்காக, இதற்க்கு தொடர்பான தெளிவான ஹதிஸ் நாங்கள் தருகிறோம்:


புகாரி 4987. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.
Volume :5 Book :66



திரு கொல்வின் அவர்களே, மேலே கோடிடபட்ட புகாரி ஹதிஸ், முன்னர் நாங்கள் இந்த தலைப்பில் விடுத்த கருத்தை உறுதி செய்கிறது. அப்படி அல்ல நீங்கள் சொல்வது தான் சரியானது என்று நீங்கள் அறிவிக்க விரும்பினால் அதற்க்கு தொடர்பான தெளிவான ஆதாரத்தை எடுத்து தர முன் வருவீர்களா? இஸ்லாமின் வரலாற்றை அறிவிக்க முனையும் நீங்கள் பைபிள் இயற்ற பெற்ற வரலாற்றை தெளிவான ஆதாரம் கொண்டு விவரிக்க முன் வருவீர்களா? உங்கள் தெளிவான ஆதாராதிற்காக காத்திருக்கிறோம்...




இறைவன் நாடினால் மீண்டும் விரைவில் சந்திப்போம்...

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்






--
--

2 comments:

Colvin said...

குவைது என்ற போர்வீரன் உத்மானிடம் குர்-ஆன் வாக்கியங்களை குறித்து பேசினான். அதன் பின்பு அவர் 14 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, குர்-ஆன் வாக்கியங்களை சேகரிக்க முயன்றார். முகமது வாய் வழியாக சொன்னவற்றை கேட்ட அநேகர் வந்து முகமது இதையெல்லாம் என்று சொன்னார்கள். அதிகளவு ஜனங்கள் வந்ததனால், இனி யாரும் குர்-ஆன் வாக்கியங்களை கொண்டுவர வேண்டாம் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதுவரை சேகரித்த வாக்கியங்களை எல்லாம் தொகுத்து அமைத்தனர். இந்த நிகழ்ச்சி கி.பி 650- 656 வரையில் நடந்தது. குர்-ஆனின் தொகுப்பில் எவை சேர்க்கப்பட வேண்டும், எவை சேர்க்கப்பட கூடாது என்று உத்மான் கட்டளையிட்டார். அதிகாரப்பூர்வமான குர்-ஆன் ஒன்று தான் இருக்க வேண்டுமென்று இப்படி செய்யப்பட்டது.
தன் காலத்தில் கொடுக்கப்பட்ட குர்-ஆனின் பிரதியை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, அல்லது அப்படி கருதப்படுகின்ற எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், அல்லது துண்டுப்பகுதிகளாக இருப்பினும் அவற்றையும் எரித்து விட வேண்டுமென்று உத்மான் கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6: 479)
இப்படித்தான் குர்-ஆன் உருவாகியது.

Zi said...

அஸ்ஸலாமு அழைக்கும்,

திரு கொல்வின் அவர்களின் கேள்விக்கும் நம்முடைய விளக்கம் மேலே இந்த கட்டுரையின் கேள்வி – பதில் பகுதியில் வழங்க பெற்றுள்ளது...

-ஜியா & அப்சர்