பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
திரு உமர் அவர்களின் “சமீபத்திய வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு, பாகம் – 1 தொடர்ச்சி:
இனி திரு உமர் அவர்கள் வெளியிட்ட
விளக்கத்தையும் அதற்க்கு எங்கள் மறுப்பையும் பார்போம்.
திரு உமர் அவர்களின் கருத்து:
இங்கு ஒரு மார்க்கம் "முன்னால் வந்ததா அல்லது
அடுத்தபடியாக வந்ததா" என்பது கேள்வியில்லை. ஆனால், முக்கியமான கேள்வி என்னவென்றால்: அந்த நபர் உண்மையாகவே நபியாக
இருந்தரா இல்லையா என்பது தான்? கிறிஸ்தவர்களாகிய நாங்கள்
முஹம்மதுவை அவருக்கு முன்பாக வந்த வேதத்தின் செய்தியோடு ஒப்புடுகிறோம். அவருக்கு
ஒரு உண்மை நபிக்கான தகுதி உண்டா? அவர் முந்தைய வேதம்
சொல்லும் நபிக்கான பரிட்சையில் வெற்றி பெறுகிறாரா என்று நாங்கள் சரி
பார்க்கிறோம். முஹம்மது இந்த தீர்க்கதரிசி பரிட்சையில் தோற்று போகிறார், ஆகையால் நாங்கள் அவரை நபி என்று நம்புவதில்லை அவரை நிராகரிக்கிறோம்.
நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, திரு முஹம்மத்
நபி (ஸல்) அவர்களை முந்தைய வேதத்தின் செய்திகளோடு ஒப்பிட்டு பார்க்கிறோம் என்று
அறிவிகிறீர்களே, எந்த செய்தியோடு நீங்கள் ஒப்பிட்டிர்கள்? அது எந்த
பிழைதிருத்த செய்தி? ஏன்னெனில் ஒவ்வொரு பிழைதிருத்தமும் ஒரு செய்தியை அறிவிக்கின்றனவே!!!
நீங்கள் ஒப்பிட்ட செய்தி முந்தைய இறைதூதர்கள் திரு ஈஸா (அலை) அவர்கள் உட்பட தன் வாயால் தெளிவாக அறிவிக்காத “மூன்று இறைவன்கள்”, அல்லது “திரு ஈஸா (அலை) அவர்கள் தான் இறைவன்”, அல்லது “திரு ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் ஒரே சரீரா மகன்” என்ற செய்தியா? அல்லது முந்தையா இறைதூதர்கள் திரு ஈஸா (அலை) அவர்கள் உட்பட தன் வாயால் தெளிவாக அறிவித்த “வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன்” என்ற ஏகத்திய கொள்கை நிறைந்த செய்தியா?
உங்கள் பதில் “ஏகத்துவ செய்தி” என்ற
பட்சத்தில் அதற்க்கு மிகவும் தகுந்தவர் திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தாம்,
இன்னும் இன்றைய நிலையில் உலக அளவில் ஏகத்துவத்தை முறையாக கொண்டுள்ளது இஸ்லாம்
என்பது நீங்கள் அறிந்த செய்தி தானே?
இதற்க்கு முன்னரே பைபிள்
திர்க்கதரிசனத்தை இஸ்லாமுடன் ஒப்பிட்டு தெளிவான கட்டுரைகளை நாங்கள் வெளியிட்டு
இருக்கிறோம், முடிந்தால் அவற்றுக்கு தெளிவான ஆதாரம் கொண்டு விடை அளிக்க முயற்சியுங்களேன்!!!
பார்க்க:
திரு உமர் அவர்களின் கருத்து:
அவர் இயேசுவை மாற்றி அந்த இடத்தில் "தான்"
உட்கார முடியாது அல்லது இயேசுவின் மார்க்கத்தை இரத்து செய்து தன் மார்க்கத்தை
நிலை நிறுத்தமுடியாது.
நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, இயேசுவை நீங்கள்
இறைவன் என்கிறீர்கள், இதை போன்று திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தன்னை பற்றி
அறிவித்த செய்தி எதனையும் நம்மால் காணமுடியவில்லை. திரு குர்ஆன் திரு ஈஸா (அலை)
அவர்களை கண்ணிய படுத்துகிறது, ஆனால் அவர் இறைவன் என்பதை ஏற்க மறுக்கிறது. இந்நிலையில்
எத்தனை கொண்டு திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் திரு ஈஸா (அலை) அவர்களை மாற்றி
அந்த இடத்தில அமர முயற்சிப்பதாக குற்றம் சற்றுகிறீர்?
திரு உமர் அவர்களே எத்தனை இயேசுவின்
மார்க்கம் என்கிறீர்? பண்றி மாமிசம் உன்ன அனுமதித்ததையா? அல்லது ஏகத்துவத்தையா?
திரு உமர் அவர்களின் கருத்து:
கடைசியாக, இஸ்லாமியர்கள் அடிக்கடி
இவ்விதமாக கூறுவார்கள்: "மோசேயின் செய்தியை யூதர்கள் திருத்திவிட்டதால், இயேசு வந்து அவைகளை சரிப்படுத்தினார் மற்றும் தேவனின்
உண்மையான செய்தியை (இஸ்லாமை) கொண்டுவந்தார். அதே போல, கிறிஸ்தவர்கள் இயேசுவின் செய்தியை திருத்திவிட்டதால் அவருடைய
போதனையிலிருந்து வழிவிலகி சென்றுவிட்டதால், இறைவன் அவர்களை
சரிப்படுத்த முஹம்மதுவை அனுப்பினார்". இது இஸ்லாமியர்களின் தவறான
கருத்தாகும். பழைய ஏற்பாட்டை திருத்தவே நான் வந்தேன் என்று இயேசு ஒரு போதும்
கூறவே இல்லை. அவர் பழைய ஏற்பாட்டை நிறைவேற்ற வந்தார். உண்மையில், பைபிளின் ஒரு பாகம் பழைய ஏற்பாடு ஆகும். ஆனால், முஹம்மதுவும், இஸ்லாமும் பைபிளை
பக்கத்தில் வைத்துவிட்டார்கள். இனி பைபிள் உபயோகப்படாது என்று அவர்கள்
கூறுகிறார்கள். குர்ஆன் பைபிளின் இடத்தை பிடித்துவிட்டது என்று கூறுகிறார்கள்.
நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, பழைய
ஏற்பாட்டை திருத்த இயேசு வரவில்லை என்கிறீர், ஆனால் பைபிள் முரணான செய்தியை
அறிவிக்கின்றாதே? உதாரணமாக பழைய ஏற்பாடு பண்றி மாமிசம் புசிப்பதை எதிர்க்கிறது,
இன்னும் விருத்தசேதனம் நம்பிக்கையாளர்களுக்கு கடமையாக்குகிறது, இன்னும்
விபசாரத்திற்கு கல்யேறி மரண தண்டனை அறிவிக்கிறது. இவற்றை திரு இயேசு அவர்கள்
திருத்தம் செய்தார், இன்னும் ரத்து செய்தார் என்று நாங்கள் அறிவிக்க வில்லை
நீங்கள் தான் அறிவிகிறீர்கள். இதன் அடிப்படையில் இயேசு பழைய ஏற்பாட்டை திருத்தம்
செய்தார் என்று நீங்கள் நம்புகிறீர்கள் தானே?
திரு உமர் அவர்களே பைபிள் ஒரு பகுதி
பழைய ஏற்பாடு என்கிறீர், பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்பதெல்லாம் இஸ்லாமுக்கு
தெரியாது. நாங்கள் கேட்ப்பது தவ்ராத் மற்றும் இன்ஜீல் இறை வேதங்களை இவற்றை கண்டு
எங்களுக்கு தக்க ஆதாரத்தோடு அறிவியுங்களேன் உங்களால் இயன்றால்.
திரு உமர் அவர்களின் கருத்து:
பைபிளின் செய்தியும், குர்ஆனின் செய்தியும் ஒன்றல்ல. இஸ்லாம் சொல்லும் செய்தி
பைபிள் சொல்லும் செய்தி அல்ல, அது பைபிளுக்கு
எதிரானதாகும். பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாக புதிய ஏற்பாடு இருப்பதுபோல, பைபிளின் தொடர்ச்சி குர்ஆன் அல்ல. கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி
இஸ்லாம் அல்ல.
நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, உண்மை தான்,
முகவரி அற்ற எண்ணிக்கை அடங்க நபர்கள் இயற்றி, அணு தினமும் பிழை திருத்தம் காணும்
பைபிள் கோர்ப்பு அறிவிக்கும் செய்தியும், திரு குர்ஆன் அறிவிக்கும் செய்தியும்
ஒன்றல்ல. இந்த பைபிள் கோர்பினை தழுவிய கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல.
இஸ்லாம் இபுராஹிம் நபி (ஸல்) அவர்களின் மார்க்கம், அதன் தொடர்ச்சி. தவ்ராத்
மற்றும் இன்ஜீல் அறிவித்த ஏகத்துவ செய்தியின் தொடர்ச்சி. இத்தனை கிறிஸ்தவதுடன்
ஒப்பிடுவது முறை அல்ல.
திரு உமர் அவர்களின் கருத்து:
பழைய ஏற்பாட்டின் மற்றும் புதிய ஏற்பாட்டின் முக்கியமான
அடிப்படை கோட்பாடுகளோடு குர்ஆன் முரண்படுகிறது.
நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, பழைய
ஏற்பாட்டின் அடிப்படை கோட்பாடு என்று எத்தனை அறிவிகிறீர்? நீங்கள் அறிவிக்க
விரும்பும் கோட்பாடு முந்தைய இறைதூதர்கள் திரு ஈஸா (அலை) அவர்கள் உட்பட தன்
வாயால் தெளிவாக அறிவிக்காத “மூன்று இறைவன்கள்”, அல்லது “திரு ஈஸா (அலை) அவர்கள்
தான் இறைவன்”, அல்லது “திரு ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் ஒரே சரீரா மகன்” என்ற
கோட்பாடா? அல்லது வணக்கத்திற்கு உரிய இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கோட்பாடா?
திரு உமர் அவர்களின் கருத்து:
தோராவின் படி, பாவ நிவாரணத்திற்கு ஒரு
மிருகத்தை பலியிடவேண்டும் என்ற கோட்பாட்டை எடுத்துக்கொள்வோம். பழைய ஏற்பாட்டின் படி
பாவ நிவாரணத்திற்கு மிருகத்தை பலியிடுவது முக்கியமானதாகும். இயேசு சிலுவையில்
மரித்ததினால் இந்த கோட்பாடு நிறைவேறியது. பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இந்த காரியத்தில் ஒன்றோடு ஒன்று கலந்துவிடுகிறது.
ஆனால், தோராவில் இப்படிப்பட்ட பலியிடும் கோட்பாடு உள்ளது
என்றுகூட குர்ஆனுக்கு தெரியாது. தோரா பற்றி கூறும் போதும், குர்ஆன் இதைப் பற்றி சொல்வது இல்லை. குர்ஆன் இந்த பாவ
நிவாரண பலியை நிராகரிக்கிறது. இஸ்லாமின் படி மனிதன் நல்லவனாக இருக்கிறான்
மற்றும் அவனுக்கு இரட்சிப்பு அவசியமில்லை என்று கருதுகிறது.
நம்முடையா விளக்கம்: திரு உமர் அவர்களே, தோரவின்
அடிப்படையில் பாவ நிவாரணத்திற்கு ஒரு மிருகத்தை பலியிட வேண்டும் என்பதனை
எங்கிருந்து கண்டிர்கள்? குறைந்த பட்சம் பைபிள்ளில் உங்கள் இறைவன் இதை போன்று
அறிவித்த தெளிவான வசனம் ஏதேனும் நீங்கள் அறிவிர்களா? இத்தனை இறைவன் பணித்தானா?
அல்லது அந்நாளின் அறியாமை மக்கள் தங்கள் விருப்பத்திற்கு இத்தனை செய்தார்களா?
வாசகர்களே, மேலே கோடிடபட்ட தெளிவான
பைபிள் வசனங்கள் வாயிலாக, பாவ நிவாரணத்திற்கு ஒரு மிருகத்தை பலியிட பைபிள்
இறைவன் பணிக்கவில்லை, மாறாக அந்நாளின் அறியாமை மக்கள் இதை செய்து வந்தார்கள்
என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இன்னும் அதிகப்படியாக திரு உமர்
அவர்கள் தன் கட்டுரையில், தங்கள் நம்பிக்கை அடிப்படையில் திரு இயேசு அவர்கள்
கொள்ளபட்டதனால் இந்த மிருகத்தை பலியிடும் வழக்கம் நிறைவானது என்று அறிவித்து
இருந்தார். ஏன் இதற்க்கு முன்னர் எந்த இறைதூதர்களும் கொள்ள படவில்லையா? இதோ திரு
இயேசு அவர்களுக்கு முன்னர் கொலையுண்டவர்களின் பட்டியல், அவர்கள் முலம் உங்கள்
இறைவன் இந்த மிருக வதையை அகற்றி இருக்க கூடதா? குறைந்த பட்சம் இந்த பலியிடும்
வழக்கம் திரு இயேசு அவர்கள் மூலம் நிறைவு பெற்ற நிலையில் அவர்களுடைய தோழர்களை
கொலையுராமல் உங்கள் இறைவன் காப்பாற்றி இருக்க வேண்டாமா? இறைவனுக்கு
விசுவாசிகளின் இரத்தம் மிகவும் விருப்பமானதா?
திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிப்பது போன்று மனிதன் அவன் முன்னோர்கள் செய்த பாவசுமையுடன் பிறக்கிறான், இன்னும் எப்படி பட்ட பாவத்தை அவன் செய்து இருந்தாலும், திரு இயேசு அவர்களை நம்பினால் மட்டும் போதும், செய்த பாவங்கள் மன்னிக்கபெற்று சொர்க்கம் சென்றுவிடலாம் என்று இஸ்லாம் பணிப்பது இல்லை. மாறாக இஸ்லாம் உலகில் பிறக்கும் எல்லா மனிதர்களும் பாவ சுமை இல்லாமலே பரிசுத்தமாக பிரகிறர்கள், பின்னாளில் அவர்கள் தாங்கள் தங்கள் கைகளால் செய்யும் செயல்களினலே கேள்வி கேட்க்க பெறுவார்கள், அவர்களின் பாவ சுமைக்கு ஏற்ப்ப எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபை மற்றும் தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் சொர்க்கம் செயல்வது நரக நெருப்பில் வீல்வதும் அமையும் என்று பரிந்துரைக்கிறது. இதில் எது சரியானது? நீங்கள் அறியாத எவனோ ஒருவன் செய்த பாவதிருக்கு உங்களை குற்றம் பிடிக்கும் கிறிஸ்தவமா? அல்லது உங்கள் செயல்களுக்கு இன்னும் உங்கள் பாவ மணிப்பு மற்றும் நற்செயல்களுக்கு ஏற்ப்ப உங்கள் மீது கிருபை பொழியும் இஸ்லாம் அறிவிக்கும் இறைவனா???
நம்முடைய இந்த கட்டுரைகேனும் தெளிவான
பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து திரு உமர் அவர்கள் மறுப்பு அளிப்பார் என்ற
நம்பிக்கையில் விடை பெறுகிறோம்..
அஸ்ஸலாமு அழைக்கும்,
-ஜியா & அப்சர்.
|
--
--
No comments:
Post a Comment