Friday, November 11, 2011

“பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்கபட்ட நபர் யார், திரு பால் அவர்களா?” – கேள்வி பதில் பகுதி



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும்
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக




பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்கபட்ட நபர் யார், திரு பால் அவர்களா?” – கேள்வி பதில் பகுதி



வாசகர்களே, இதற்கு முன்னர் பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ள தீர்கதரிசியாக சித்தரிக்கபட்ட நபர் யார்? திரு பால் அவர்களா?” என்ற தலைப்பில் நாம் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். இந்த கட்டுரைக்கு ஒரு வாசகர் கீழ்வரும் பின்னூட்டத்தை பதித்து இருந்தார்.


ஜான்சன் விக்டர் said...
http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=28&topic=2307&Itemid=287

மேற்கண்ட தொடுப்பில் இது தொடர்பான என் கருத்துகளுக்கும் கேள்விகளுக்கும் தயவுகூர்ந்து விளக்கம் தரவும். நன்றி.




வாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெளியிடும் பொய்யுரைகளுக்கு, ஒன்றன் பின் ஒன்றாக, பதில் அளிப்பதை முதன்மை குறிக்கோளாக கொண்டு இந்த இணைய தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள், மற்றும் தெளிவான மறுப்புகளை நாங்கள் வெளியிட்டு கொண்டு இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. நம் இணையதளத்தில், வாசகர்கள் தலைப்புக்கு தொடர்புடைய கேள்விகளை எழுப்பும் பட்சத்தில், அவர்களுக்கும் நாம் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்கங்கள் அளிப்பது வழக்கம். இந்த முறை திரு ஜான்சன் விக்டர் என்ற வாசகர், தான் வேறு ஒரு இணையதளத்தில் வெளியிட்ட கருத்துகளுக்கு நாம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வேண்டுதல் விடுத்து இருக்கிறார். இது போன்று உலகில் உள்ள ஏனைய இஸ்லாமியர்களுக்கு எதிரான இணையதளங்களில் விடுக்கப்படும் ஆதாரமற்ற தனி நபர் கருத்துக்களுக்கு, நாங்கள் இரு இளைஞர்கள் விடை அளிக்க முனைவது, மிக பளுவான வேலை என்பதனால் பொதுவாக இதனை நாம் செய்ய முனைவது இல்லை. இருப்பினும் நமது வாசகர் திரு ஜான்சன் விக்டர் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, இந்த முறை அவர்களுக்காக, இந்த முயற்சியை எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையை நாடியவர்களாக துவங்குகிறோம்...


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, நீங்கள் அளித்த முகவரியில் சென்று உங்கள் கருத்துகளை படிக்க முயற்சித்தோம். அதில் நீங்கள் எங்கள் தலைப்புக்கு எதிராக, அல்லது மறுப்பு அளிக்கும் வகையில் எந்த தெளிவான ஆதாரத்தையும் முன் வைத்து இருந்ததாக எங்களால் அறிய முடியவில்லை. மாறாக எங்கள் கட்டுரை பற்றிய உங்களுடைய கண்ணோட்டத்தை வரைவதாக நீங்களே தெளிவாக அறிவித்து இருந்தீர். கிறிஸ்தவரான நீங்கள் எங்கள் கட்டுரையில் பிழை கண்டால், அல்லது எங்கள் ஆதாரத்தில் குரை கண்டால், அதற்க்கு எதிரான தெளிவான ஆதாரத்தை வெளியிட்டால், அதற்கு விளக்கம் அளிக்க ஏதுவாக இருக்கும். இதை விடுத்து உங்கள் சுய கண்ணோடங்களுக்கு நாங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது எந்த விதத்தில் நியாயம்???


நாங்கள் வெளியிட்ட மூல கட்டுரையில் நாங்கள் தெரிவிக்க விரும்பிய கருத்தின் சுருக்கம்:
  1. திரு இயேசு அவர்கள், தனக்கு பின் வரவிருக்கும் இறைவனின் தீர்க்கதரிசியை ஏற்க பணிக்கிறார் (John 16:12-13).
  2. தன்னை அங்கும் இங்கும் கண்டதாக அறிவிக்கும் கள்ள தீர்க்கதரிசிகளை நம்பவேண்டாம் என்று அறிவிக்கிறார் (Matthew 24:23-26).
  3. இதை போன்று சரித்திரத்தில் முரணாக அறிவித்த முதல் நபர் நாம் அறிந்தவரையில் திரு பால் அவர்கள் (Acts 9:3 – 9), (Acts 22:6 – 11 ), (Acts 26:12 - 16 ).
  4. தனக்கு சமீபமாக நடந்த நிகழ்வை முன்னுக்கு பின் முரணாக அறிவிக்கும் திரு பால் அவர்கள் தாம் திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக இருக்குமோ? என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, மேலே நாங்கள் கோடிட்ட பைபிள் வசனம் அல்லது கருத்துகளில் தவறு இருந்தால், அதற்கு தொடர்பான உங்கள் நம்பிக்கையில் அடிப்படையில், திரு இயேசு அவர்கள் தன் வாயினால் அறிவித்த தெளிவான வசனத்தை கொண்டு நீங்கள் மறுப்பு அளிக்க முயற்சித்து இருக்கலாம். இதை விடுத்து உங்கள் கட்டுரையில் எங்கள் மேல் உங்களுக்கு உள்ள தனிநபர் விமர்சனங்களை அதிக படியாக விடுத்துள்ளீர்கள். இப்படி தனிநபர் விமர்சனங்களை அதிக படியாக விடுத்து விட்டு, வியக்கத்தக்க வகையில், நீங்கள் நடுநிலையாக பேசுவதாக உங்களுக்கு நீங்களே அறிவித்து கொள்கிறீர்கள்.

உதாரணமாக, திரு ஜான்சன் விக்டர் அவர்கள் அறிவித்தது:
திரு.ஜியா அவர்களும் திரு.அப்சர் அவர்களும் கூலிக்கு மாறடிக்கிறார்கள்”,
“வாசகர்களைக் குழப்புவதற்காக திரு.ஜியா அவர்களும் திரு.அப்சர் அவர்களும் இப்படியா, அப்படியாஎன்று கேள்வி கேட்பதோடு, தங்கள் நிலைப்பாடு இன்னதென்று அறிவிக்காமல் விட்டு விடுகிறார்கள்.”,
“ஜியாவுக்கும் அப்சருக்கும் எப்படி ஒரே விதமான சந்தேகம் ஏற்படுகிறது? இருவரும் இரட்டைப் பிறவிகளா அல்லது குளோன்களா என்று கேட்க வேண்டி வருகிறது.”
“திரு.அப்சரும் திரு.ஜியாவும் தங்கள் சொந்தத் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார்கள் என்று சொல்லும் நிலைமைக்கு இவர்கள் இருவரும் தள்ளப்பட்டுள்ளார்கள்.”,
“சமயப் பிரச்சாரம் செய்ய முன்வருகிறவர்களுக்கு ஒரு தராதரம் வேண்டும்.”,


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, மேலே நீங்கள் அறிவித்த இந்த கருத்துகளுக்கு இந்த தலைபிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? எங்களை பற்றி இப்படி தனிநபர் விமர்சனம் செய்வதால், இன்னும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பினை எங்கள் மீது உமிழ்வதனால், உங்களுக்கு என்ன கிடைத்தது? இது உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதா? இப்படி கருத்துகளை அறிவிக்க உங்களிடம் ஏதேனும் தெளிவான ஆதாரம் இருக்கிறதா?


But I say unto you, That whosoever is angry with his brother without a cause shall be in danger of the judgment: and whosoever shall say to his brother, Raca, shall be in danger of the council: but whosoever shall say, You fool, shall be in danger of hell fire. (Matthew 5:22)


With this bless we God, even the Father; and with this curse we men, who are made after the similitude of God. Out of the same mouth proceeds blessing and cursing. My brethren, these things ought not so to be. Does a fountain send forth at the same place sweet water and bitter? Can the fig tree, my brethren, bear olive berries? either a vine, figs? so can no fountain both yield salt water and fresh. (James 3:9-12)



திரு ஜான்சன் விக்டர் அவர்களே, திரு உமர் அவர்கள் போல் நாங்கள் இந்த கட்டுரைகளை வேறு முகவரிகளில், இன்னும் வேறு பெயர்களில் ஆச்சு அசல் பிரதிகளாக வெளியிடுவோர் இல்லை. முகவரி அற்ற நபர்களை கொண்டு திரைக்கு பின் ஒரு குழுவாக செயல்படுவது இல்லை. நாங்கள் எந்த விளம்பரமோ அல்லது வெகுமானமோ எதிர்பார்த்து இந்த கட்டுரைகளை வரைவது இல்லை. நாங்கள் எதிர் பார்க்கும் வெகுமானம் படைத்த இறைவனிடம் இருந்து வரவேண்டியது. இதற்கு முன்னர் எங்கள் கருத்துகளை திரு உமர் அவர்கள் வெளியிட மறுத்தார், அவற்றுக்கு பதில் அளிக்க இந்த இணையதளம் எங்களில் ஒருவரான திரு அப்சர் அவர்களால் சுயமாக உருவாக்க பெற்றது. பின்னர் எங்களில் ஒருவரான திரு ஜியா அவர்கள் கட்டுரைகளும், திரு உமர் அவர்களால் நிராகரிக்கபட்ட நிலையில் அவரே தன்னை இந்த இணையதளத்தோடு இணைத்து கொண்டார். நீங்கள் விரும்பினால் எங்களை கருத்தில் ஒன்று பட்டு உருவில் வேறுபடும் இரட்டையர்கள் என்று அழைத்து கொள்ளலாம். நாங்கள் எங்கள் தலைகளில் மண் எறிகிறோமா, அல்லது திரு உமர் அவர்கள் கட்டுரைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க செயல்படுகிறோமா என்பது எங்கள் கட்டுரைகளை படித்தால் தெளிவாகும். நாங்கள் திரு உமர் அவர்கள் போல் ஆதாரம் ஒன்று அறிவிக்க, அப்படியா இப்படியா என்று சிந்திக்க பொய்யுரைப்பது இல்லை. தெளிவான வசனங்களை முன் வைத்து எங்கள் வாதங்களை முன் வைக்க முயற்சிக்கிறோம், இது போதுமா எங்களை பற்றி நீங்கள் அறிய???



திரு ஜான்சன் விக்டர் அவர்களே, உங்கள் இணையதளத்தில் இதற்கு முன்னரே சில இஸ்லாமியர்களை விளக்கம் அளிக்க விடாமல் உங்கள் கிறிஸ்தவர்கள் தடை செய்த செய்தியை சில வாசகர்கள் எங்களிடம் அறிவித்து இருகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்??? ஒருவர் அறிவிக்கும் கருத்தினை வெளியிட உங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது, ஆனால் அவருடைய முகவரியை தடை செய்வது ஏற்புக்கு உரிய செயல் அல்ல. அப்படியானால் நீங்கள் விரும்பும் கருத்துகளை மட்டுமே உங்கள் வாசகர்கள் அறிவிக்க வேண்டும் என்று நீங்கள் கட்டாய படுத்து விரும்புகிறீர்களா? இது முறையா???


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, நாங்கள் வேத வசனங்களை ஆங்கிலத்தில் வெளியிடுகிறோம் என்று குற்றம் சாட்டி இருந்தீர். இதற்கு முன்னரே நாங்கள் பல முறை இந்த குற்றச்சாட்டுக்கு தெளிவான விளக்கம் அளித்து இருக்கிறோம். எங்களால் இதுவரை ஓரளவுக்கேனும் பிழைகள் கொண்ட தமிழ் மொழியாக்க பிழைதிருத்ததை காண  இயலவில்லை என்று. அப்படி ஒன்று நீங்கள் அறிவீர்களாயின், அது எந்த விதத்தில் ஏனைய பிழைதிருதங்களை விட சிறந்தது என்று எங்களுக்கு தெளிவாகுங்கள், ஆய்வுக்காக..

பார்க்க:

   

"முஹம்மது ஒரு பாவியா ?"கேள்வி பதில் பகுதி


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, ஒரு பைபிள் வசனத்தை, மீண்டும் ஒரு முறை பிரசுரித்தால், உங்களுக்கு ஒவ்வொரு முறையும் வித்தியாசம் வேண்டும் என்று அறிவித்து இருந்தீர். உங்களை போன்ற கிறிஸ்தவர்களை மனதில் கொண்டு அவர்களை ஈர்பதர்க்காகவே பைபிள் பிழைதிருதங்கள், ஒவ்வொரு முறையும் புதிய வசனங்கள் அல்லது பழையது திருத்தப்பட்டு வெளி ஆகுகிறாதோ?

பார்க்க:


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, நீங்கள் அறிவித்தது போல் (Acts 9:3 – 9), (Acts 22:6 – 11 ), (Acts 26:12 - 16 ) வசனங்களை இதற்கு முன்னரே நாங்கள் பிரசூரித்து இருந்தோம். அந்த முறை இந்த வசனங்களை முரணாக இயற்றிய நபர் திரு பால் அவர்களாக இருக்க முடியுமா என்ற கருத்துக் கருவுடன் இயற்றி இருந்தோம். இவற்றினை திரு பால் அவர்கள் தான் இயற்றி இருப்பார்கள் என்று ஏற்க முனைந்தால், இந்த தலைப்பில் “திரு இயேசு தன்னை இங்கும் அங்கும் சந்தித்ததாக அறிவிக்கும் கள்ள தீர்க்கதரிசி திரு பால் அவர்களா?” என்ற கருத்துடன் இணைத்து, அதே வசனத்தை கோடிட்டு இருந்தோம். ஆக வசனம் ஒன்று தான், ஆனால் அதனை இணைக்கும் கரு வெவ்வேறு. அப்படி இருக்க இது எப்படி உங்கள் கருத்தின் அடிப்படையில் தவறாகும்? உங்களுக்காக, நாங்கள் பைபிளில் இல்லாத புதிய வசனங்களையா எழுத முடியும்??  


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, நாங்கள் வெளியிட்ட ஒரு சிறிய புகைப்படத்தை ஒரு சில முறை பார்த்துவிட்டே அதனுள் ஒளிந்து இருந்த வானவர் மற்றும் ஆடவர் அரை நிர்வாணத்தை விமர்சித்து இருந்தீர். இப்படி ஒரு சில பார்வையிலே ஒரு புகை படத்தில் ஒளிந்து இருக்கும் ஆபாசத்தை கண்டு எடுக்க வல்ல நீங்கள், ஒரு ஆபாச எதிர்ப்பாளர் என்ற பட்சத்தில், அதனை தினம் தினம் பைபிளில் கண்டு வரும் நீங்கள் அதனை ஏன் எதிர்க்க மறுக்கிறீர்கள்? உதாரணமாக பெண்களின் பிறப்பு உறுப்புக்களை வர்ணித்து போற்றும் பைபிள் வசனங்களை (Song of Songs 7:1-4, 8-9) இறைவன் அருளியது என்று எதனை கொண்டு ஏற்க முன் வருகிறீர்கள்?


All scripture is given by inspiration of God, and is profitable for doctrine, for reproof, for correction, for instruction in righteousness: (2 Timothy 3:16)




திரு ஜான்சன் விக்டர் அவர்களே, இத்தனை சிறிய புகைப்படத்தை நாங்கள் வெளியிட்டதற்கு எங்களை விமர்சிக்கிரீர்களே, உண்மையில் இந்த புகை படம் எங்கு இருக்கிறது தெரியுமா? இது கிறிஸ்தவ தலைமை நகரமாக கருத பெரும் வாட்டிகன் நகரின் புகழ் பெற்ற பாலின் சாப்பேல் (Pauline Chapel) தேவலையத்தில் சுவர்களில் இருந்து எடுக்க பெற்ற புகைப்படம். இத்தனை இயற்றிய நபர் உலக புகழ் பெற்ற திரு மிசெலங்கலோ.

Michelangelo imagined it, in his great late painting in the Vatican’s Pauline Chapel (painted 1542-1545),









திரு ஜான்சன் விக்டர் அவர்களே, காமசூத்திர கருங்கற்கள் சிற்பங்களை மிஞ்சிடும் பழிங்கு ஆபாச சிற்பங்கள் கொண்ட, கிறிஸ்தவ தலைநகராக கருத படும், வாட்டிகன் நகர வீதிகள், மற்றும் தேவலையங்கள் உங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்படவைகளா? நாங்கள் வெளியிட்ட சிறிய புகை படத்தில் மறைந்து இருந்த அரை நிர்வாணத்தை விமர்சிக்கும் நீங்கள், கிறிஸ்தவ தேவலையங்களில் பொறித்து வைக்க பெற்றுள்ள முழு நிர்வாண விக்ரகங்களை என்ன வென்று அழைப்பீர்??? இவை பைபிள் விபச்சார மற்றும் விரச வசனங்களின் வெளிப்பாடு தானே? இதனை கண்டு உங்கள் கண்கள் கூசவில்லையா? ஆபாசத்தை விரும்பும் இளைஞர்கள் உங்கள் பைபிளை, அல்லது உங்கள் புகழ் பெற்ற தேவாளையங்களை அணுகலாம் என்று ஊக்குவிக்க முன் வாருங்களேன்!!! உருவ வழிபாட்டை முதன்மையாக எதிர்க்க வேண்டிய கிறிஸ்தவ சமூகம், தங்கள் தேவாளையங்களில் முழு நிர்வாண, திருஉருவங்களை பொரித்து வைத்து இருப்பது வெட்கத்துக்குரிய செயல் இல்லையா???


“You shall not make for yourself a carved image or any likeness of anything that is in heaven above or that is on the earth beneath or that is in the water below. You shall not bow down to them or serve them, for I, the Lord, your God, am a jealous God, responding to the transgression of fathers by dealing with children to the third and fourth generations of those who reject me, and showing covenant faithfulness to a thousand generations of those who love me and keep my commandments. (Exodus 20:4-6)





திரு ஜான்சன் விக்டர் அவர்களே, குழந்தை இயேசுவுக்கு பாலுட்டும் அறை நிர்வாண மேரி, முழு நிர்வாண டேவிட் இன்னும் பல இறைதூதர்கள், முழு நிர்வாண ஆதாம் மற்றும் பிதா, சிலுவையில் அறை நிர்வாண இயேசு, போன்ற உங்கள் கிறிஸ்தவ தேவாளையங்களில், உங்கள் நம்பிக்கை அடிப்படையில் இயற்றி வைத்து இருப்பவனவற்றை, அளவில் சிறியதாக, தெளிவில்லாத வகையில் மறு பதிவு செய்வதனை, இஸ்லாமிய இறைதூதர்களின் கேலி சித்திரத்தை இழிவு படுத்து வகையில் கிறிஸ்தவர்கள் வெளியிடுவதற்கு ஒப்பாக முயற்சிக்கிறீர். இந்த புகைப்படங்கள், நீங்கள் அங்கீகரித்த விரசங்களை உங்களுக்கு புரிவிக்கும் எண்ணத்தில் வெளியிடபட்டது. நீங்கள் செய்வது இஸ்லாமியர்களுக்கு எதிரான உங்கள் கொடூர எண்ணங்களை வெளிபடுதுவது. இவற்றுக்கு உள்ள வேறுபாடு நீங்கள் அறியாததா???


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, இதை போன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக புகைப்படம் வெளியிட்டால் பல அசம்பாவிதம் நடந்தேறும் என்று எச்சரித்து இருந்தீர். இதற்கு முன்னரே உங்கள் திரு உமர் அவர்கள், திரு குர்ஆன் பிரதிகளை கழிவறையில் இட்டு புகைப்படம் வெளியிட்டு இருந்தார், இன்னும் திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் கேலி சித்திரத்தை வெளியிட்டு இருந்தார், இன்னும் இஸ்லாமியர்களின் அன்னையாக கருத பெரும் நபர்களை விபச்சாரியாக சித்தரித்து இருந்தார். இவற்றை நீங்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டு தான் இருந்தீர். இத்தகைய இழிவான செயல்களுக்கு என்ன அசம்பாவிதம் நடந்தது என்று திரு உமர் அவர்களை வினாவி பாருங்கள். இன்னும் இவற்றுக்கு மறுப்பு அளித்த இஸ்லாமியர்கள் எப்படி கண்ணியம் காத்தார்கள் என்று அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


கிறிஸ்தவர்கள் இப்படி செய்வது ஒன்றும் புதிதல்ல, இதற்கு முன்னரே பல முறை வீதிகளில் திரு குர்ஆன் பிரதிகள் தீயில் இடப்பட்டன, இன்னும் பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் கிறிஸ்தவ வீதிகளில் மானபங்க படுத்த படுகிறார்கள். இன்னும் இஸ்லாமிய தீர்க்கதரிசிகள் கேலி பட சித்திரங்கள் வெளியிட படுகின்றன. இவற்றுக்கு இஸ்லாமியர்கள் அகிம்சை முறையில் எதிருப்பு தெரிவிகிறார்களே அன்றி, நீங்கள் அறிவிப்பது போல் இந்த செயல்களை செய்யும் நபர்களை தேடி சென்று பழி திருத்த எந்த சம்பவங்களையும் நம்மால் அறிய முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த கருத்தினை அருவிக்கும் நீங்கள் வாழும் இடம் இஸ்லாமிய நாடான மலேசியா என்று நீங்களே அறிவித்து இருந்தீர். இப்படி கருத்துகளை அறிவிததற்காக எத்தனை முறை, இதற்கு முன்னர் உங்கள் விடுகள் எரிக்க பெற்றன என்ற எண்ணிக்கையையும் வெளியிடுங்களேன், ஆய்வுக்காக...


திரு ஜான்சன் விக்டர் அவர்கள் அறிவித்தது:


பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்க பட்ட நபர் யார், திரு பால் அவர்களா?”[5] இந்தத் தலைப்பு, இஸ்லாமிய உலகுக்கே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறது. இக்கேள்விக்கு இரண்டே இரண்டு பதில்தான் கூற முடியும்... ஆம்அல்லது இல்லைஎன்பதுதான் அந்தப் பதில்கள்.

ஆம், பவுலைத்தான் (மன்னிக்கவும், திரு.பவுல்) இயேசு (மீண்டும் மன்னிக்கவும், திரு.ஏசு) கூறுகிறார் என்றால், நிச்சயமாக திரு.முகமதுவை வரப் போகிற கடைசி தீர்க்கதரிசி என்று கூறியிருக்க வேண்டும். திரு.பால், திரு.ஏசுவையோ திரு.முகமதுவையோ இருவரையுமே நேரடியாகப் பார்த்ததில்லை (இந்த விவாதத்திற்காக அப்படி வைத்துக் கொள்வோம். இதற்கிடையில் திரு.ஜியாவும் திரு.அப்சரும் திரு.பாலுக்கு தீர்க்கதரிசி என்ற பட்டத்தை வழங்குகிறார்கள். இவர்கள் வாதத்தில் தீர்க்கதரிசியாக அறிவிக்கப்படுகிறவர் ஏன் திரு.முகமதுவை வரப்போகிற கடைசி தீர்க்கதரிசி என்று அறிவிக்கவில்லை? இந்த வலைப்பூவின் வாசகர்கள் சுவிகாரச் சிந்தனையுடையவர்களாக இருந்தால், இந்த உண்மை புரியும். தொடர்ந்தாற் போல் அடுத்த கேள்வியும் வருகிறது. திரு.பால் திரு.ஏசுவை ஆண்டவர் என்று பல இடங்களில் அறிவிக்கிறார். எனவே, இஸ்லாமியர்கள் தங்கள் கடின இருதயத்தை திரு.ஏசுவுக்காகத் திறந்து விட வேண்டும்.

சரி, ‘இல்லைஎன்ற பதில் வந்தால் என்ன நிகழும்? அவர் ஒரு கள்ள தீர்க்கதரிசி அல்லர் என்றால், அவருடைய உபதேசங்களை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக அப்போஸ்தலர் 20.29-31ல், நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.

என்று திரு.பவுல் எச்சரிக்கிறார். இந்த வசனங்களைக் கவனமாக ஒப்பிட்டுப் பார்த்தால், திரு.முகமது, திரு.ஜியா, திரு.அப்சோர் போன்றோர்தான் அந்த மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள்என்று புரிந்து கொள்ள முடிகிறது.




திரு ஜான்சன் விக்டர் அவர்களே, எங்களுடைய தலைப்பினை இன்னும் ஒருமுறை உங்களை படிக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறோம் பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ள தீர்கதரிசியாக சித்தரிக்கபட்ட நபர் யார்? திரு பால் அவர்களா?”. இதில் உள்ள கேள்வி திரு இயேசு அவர்கள் அறிவித்த கள்ள தீர்க்கதரிசி யார்? திரு பால் அவர்களா என்பதாகும். எங்களுடைய விளக்கத்தில், திரு இயேசு அறிவித்தது போல், வரலாற்றில் திரு இயேசு அவர்களுக்கு பின்னர் வந்த முதல் கள்ள தீருக்கதரிசி, திரு பால் அவர்கள் தான், என்பதனை உறுதி செய்ய வண்ணம் ஆதாரங்களை வெளியிட்டு இருந்தோம். “கள்ள தீருக்கதரிசி திரு பால் அவர்கள் என்றால், வரவிருக்கும் இறைவனின் தீருக்கதரிசி திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் என்று திரு இயேசு அவர்கள் அறிவித்து இருக்க வேண்டும்” என்று சொல்கிறீர். திரு இயேசு அவர்கள் இதை போன்று அறிவித்து இருப்பார், யாருக்கு தெரியும்!! திரு இயேசு அவர்களுக்கு இறைவன் வழங்கிய இன்ஜீல் கிடைக்க பெற்றால் அது தெளிவாகலாம். அல்லது “எலோஹீம்” என்ற பெயரினை நீங்கள் தேவன் என்று மொழிபெயர்த்து கொண்டது போல், இதனையும் மறைத்து இருக்கலாம். சரி உங்கள் வாதத்திற்கே வருகிறோம், இதற்கு முன்னரே திரு மோசே அவர்கள், தனக்கு பின்னர் வரவிருக்கும் இறைத்தூதர் பற்றிய முன் அறிவிப்பு செய்தார், உங்கள் நம்பிக்கை அடிப்படையில் அது திரு இயேசு அவர்கள். அப்படியானால் ஏன் திரு மோசேஸ் அவர்கள் வரவிருக்கும் இறைத்தூதர் திரு இயேசு என்று தெளிவாக அறிவிக்க வில்லை???     


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, திரு பால் அவர்களுக்கு தீர்க்கதரிசி பட்டத்தை நாங்கள் வழங்கினோம் என்று அறிவிக்கிறீர்கள். நாங்கள் அறிவிக்க வில்லை நீங்கள் தான் அறிவிக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை அடிப்படையில் திரு இயேசு இறைவன் என்றால் அவன் அனுப்பிய தூதர்கள் தீர்க்கதரிசிகள் தானே??? இன்னும் திரு பால் அவர்கள் வரவிருக்கும் எங்களை ஓநாய்கள் என முன் அறிவிப்பு செய்தார் என்று நீங்கள் தானே சொல்கிறீர். முன் அறிவிப்பு செய்யும் நபர்கள் உங்கள் நம்பிக்கை அடிப்படையில் தீர்க்கதர்சிகள் தானே??? இன்னும் கீழே உள்ள வசனங்களை பாருங்கள், உங்கள் நம்பிக்கை அடிப்படையில் பொதுவாக தீர்கதரிசீகளுக்கு தானே டிசைபல்ஸ் இருப்பார்கள்?

And after the uproar was ceased, Paul called unto him the disciples, and embraced them, and departed to go into Macedonia. (Acts 20:1)


திரு பால் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்ற நிலையில் எதற்காக அவர் இயற்றிய அதிக படியான நூல்களை உங்கள் பைபிள் தொகுப்பில் இனைதீர்கள்???  



திரு ஜான்சன் விக்டர் அவர்கள் அறிவித்தது:


அப்போஸ்தலர் 20.29-31ல், நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.

என்று திரு.பவுல் எச்சரிக்கிறார். இந்த வசனங்களைக் கவனமாக ஒப்பிட்டுப் பார்த்தால், திரு.முகமது, திரு.ஜியா, திரு.அப்சோர் போன்றோர்தான் அந்த மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள்என்று புரிந்து கொள்ள முடிகிறது.


For I know this, that after my departing shall grievous wolves enter in among you, not sparing the flock. Also of your own selves shall men arise, speaking perverse things, to draw away disciples after them. Therefore watch, and remember, that by the space of three years I ceased not to warn everyone night and day with tears. (Acts 20:29-31)





திரு ஜான்சன் விக்டர் அவர்களே, மேலே உங்கள் வசனங்களை கவனமாக ஒப்பிட்டு பாருங்கள், தற்சமயம் நாங்களா உங்களில் இருந்தே உங்கள் உல் வந்தோம்? நீங்கள் தான் இஸ்லாமிய நாட்டில், இஸ்லாமியர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு பிரசாரம்/கருத்துகளை அறிவித்து கொண்டு இருக்கிறீர்கள்!!! அப்படியானால் ஓநாய் யார்??? இன்னும் இந்த வசனத்தை எங்களுடன் ஒப்பிடுவதே தவறானது."உங்களிலும் சிலர் எழும்பி" என எங்களை பார்த்தா கூறினார்? இதிலிருந்தே தெளிவாகிறது அது கிறிஸ்தவர்களிலிருந்தே பிளவு ஏற்படுத்துபவர்களை குறிக்கிறது என்று.



திரு ஜான்சன் விக்டர் அவர்களே, திரு இயேசு அவர்கள் அறிவித்த கள்ள தீருக்கதரிசி திரு பால் அவர்கள் தாம் என்ற நிலையில், திரு.பால் திரு.ஏசுவை ஆண்டவர் என்று பல இடங்களில் அறிவிக்கிறார். எனவே, இஸ்லாமியர்கள் தங்கள் கடின இருதயத்தை திரு.ஏசுவுக்காகத் திறந்து விட வேண்டும். என்று அறிவிக்கிறீர். இது என்ன விந்தை? கள்ள தீருக்கதரிசி அறிவிப்பதற்கு இணங்கி நாங்கள் நடக்க வேண்டுமா? உங்களை போல் நாங்களும் முகவரி அற்ற நபர்கள் அறிவிக்கும் சுவிசேஷகளை ஏற்க வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்??


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, திரு இயேசு அவர்கள் அறிவித்த கள்ள தீருக்கதரிசி திரு பால் அவர்கள் அல்ல என்ற நிலையில் அவருடைய உபதேசங்களை இஸ்லாமியர்கள் ஏற்க வேண்டும் என்று அறிவிக்கிறீர். திரு இயேசு அவர்கள் அறிவித்த கள்ள தீருக்கதரிசி திரு பால் அவர்கள் தாம் என்பதனை நிரூபிக்கவே நாங்கள் தெளிவான ஆதாரத்தை முன் வைத்து இருந்தோம். அவர் உண்மையான தீர்கதரிசி என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்காமல்,நீங்கள் எங்களை ஏற்றுகொள்ள பணித்தாலும், அவருடைய உபதேசங்கள் எது என்பதனை எங்களுக்கு தெளிவாக்க வேண்டும்? அவர் தன் கையால் இயற்றிய உபதேசம் எது என்பதனை எங்களுக்கு தெளிவாக்க வேண்டும். அது இதற்கு முன்னர் சென்ற இறைதூதர்கள் உபதேசித்த ஏகத்துவ கொள்கைக்கும் முரண் படாத செய்தியா என்பதனையும் நீங்கள் அறிவிக்க வேண்டும். இதை போன்ற தெளிவான ஆதாரங்களை எடுத்து வைக்க முன் வருவீர்களா? ஆய்வுக்காக???



திரு ஜான்சன் விக்டர் அவர்களே, எங்கள் கட்டுரையில் நங்கள் மற்றம் செய்யகூடும், என்று அறிவித்து எங்கள் கட்டுரையை வெளியிட்டு இருந்தீர். நாங்கள் என்ன திரு உமர் அவர்களா, எங்கள் கருத்துகளில் தொடர்ந்து மாற்றங்கள் செய்து கொள்ள?? அல்லது பைபிள் அசிரியர்களா, மொழியாகத்துக்கு மொழியாக்கம் பிழைதிருத்தம் செய்ய???

திரு ஜான்சன் விக்டர் அவர்களே, நாங்கள் முன்னர் வெளியிட்ட (Acts 9:3 – 9), (Acts 22:6 – 11 ), (Acts 26:12 - 16 ) வசனங்களுக்கு திரு உமர் அவர்கள் மறுப்பு எழுதியதாகவும் அதற்க்கு நாங்கள் விளக்கம் அளிக்கவில்லை என்று அறிவித்து இருந்தீர். இன்னும் திரு பால் அவர்கள் விளக்கம் சரியானது, நாங்கள் ஏமாதுகிறோம் என்றும் அறிவித்து இருந்தீர். திரு உமர் அவர்கள் அப்படி என்ன விளக்கம் அளித்து இருந்தார்? இந்த முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் தெளிவான வசன ஆதாரத்தை பைபிளில் இருந்து விடுத்து இருந்தாரா? அல்லது சுயமாக இது மூன்றுமே சரியானது என தன் சுய பைபிள் விரிவுரையை வெளியிட்டு இருந்தாரா? இப்படி நாங்களும் ஆதாரம் இல்லாமல் எங்கள் சொந்த விரிவுரைகளை அறிவித்தால் அதை நீங்கள் ஏற்க தயாரா? சரி நாங்கள் தான் ஏமாதுகிறோம், நீங்கலாவது இந்த பைபிள் முரண்பாடு வசனங்களுக்கு தெளிவான வசன ஆதாரத்தை வைத்து விளக்கம் அளிக்க முன் வாருங்களேன். எங்களுடைய கேள்வி, பைபிளில் திரு பால் இயற்றியதாக நம்பப்படும் (Acts 9:3 – 9), (Acts 22:6 – 11 ), (Acts 26:12 - 16 ) வசனங்கள், திரு பால் அவர்களுடன் உடன் இருந்தவர்கள் நிலையை முன்னுக்கு பின் முரணாக அறிவிக்கிறது. இவர்கள் திரு இயேசு அவர்களை கண்டார்களா? ஓசையை கேட்டார்களா? ஒளியை கண்டர்களா? அனைவரும் கீழே விழுந்தார்களா? அல்லது திரு பால் அவர்கள் மட்டுமே விழுந்தாரா? இவர்கள் ஒளியை கண்டு இருந்தால் ஏன் இவர்கள் கண்கள் திரு பால் அவர்கள் போல் குருடாகவில்லை? அவர்கள் ஓசையை கேட்டு இருந்தால் அவர்களும் கிறிஸ்தவத்தை தழுவினார்களா? இவற்றில் ஏதோ ஒன்று சரியானது என்று நீங்கள் அறிவிக்க முனைந்தாலும் மன்றொன்று பிழையானது என்று அர்த்தம் ஆகும். இது மூன்றுமே சரியானது என்று நீங்கள் அறிவிக்க விரும்பினால் அது உலகில் ஒரு விந்தையான சுய விளக்கமாக அமையுமே அன்றி அதற்கு பைபிளில் எந்த தெளிவான ஆதாரமும் இருப்பதாக நம்மால் அறிய முடியவில்லை, அப்படி இது மூன்றுமே சரியானது என்ற  நிலையில், எதற்காக இப்படி மூன்று விதமாக திரு பால் அவர்கள் இயற்றினார் என்ற கருத்தினையும் உங்கள் சொந்த விளக்கத்தில் இருந்தே அளித்து விடுங்கள் எங்கள் ஆய்வுக்காக.    


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, “வாசகர்களே நீங்களே முடிவெடுங்கள்” என்று நாங்கள் குறிப்பிடாததால் எங்கள் துர் நோக்கம் வெளிபடுகிறது என்று அறிவித்து இருந்தீர். அப்படி எங்களுடைய எந்த துர் நோக்கத்தை நீங்கள் கண்டிர்கள்? வேறு எங்கும் விளம்பரம் இல்லாத எங்கள் கட்டுரைகளை சிந்திக்கும் வாசகர்கள் மட்டுமே வந்து படிக்கிறார்கள் என்பது எங்கள் எண்ணம். அதனாலே இறைவன் கிருபையில் துவங்கி ஓர் ஆண்டுக்குள் எங்கள் இணையதள வாசகர்கள் வருகை எண்ணிக்கை 13000  தாண்டி உள்ளது. சிந்திக்க மறுக்கும் வாசகர்கள், திரு உமர் அவர்கள் கட்டுரையை படித்து விட்டு, ஆஹா ஓஹோ என்று பாராட்டி விட்டு, விலகி சென்று விடுவார்கள். சிந்திக்கும் வாசகர்கள் மட்டுமே எங்கள் இணைய தளத்தையும் அணுகி, எங்களுடைய விளக்கங்களையும் படிக்கிறார்கள். சில வாசகர்கள், மறுப்பு மற்றும் கருத்துகளை அறிவிக்க முனைகிறார்கள். திரு உமர் அவர்களை போல் தெளிவான ஆதாரம் இல்லாமல் அப்படியா இப்படியா என்ற வாதத்தை நாங்கள் வைப்பது இல்லை. மாறாக தெளிவான ஆதாரங்களை முன் வைக்கிறோம். அதை படிக்கும் வாசகர்கள் தாமே விளங்கி கொள்கிறார்கள். இது வாசகர்கள் விளக்கம் பெறுவதற்காக எடுக்க பெரும் முயற்சியே அன்றி வாசகர்களை தடாலடியாக முடிவெடுக்க நிர்பந்திக்கும் முயற்சி அல்ல.


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, பைபிள் முரண்பாடான வசனங்களை கொடுத்து விட்டு “திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ள தீர்க்கதரிசி, திரு பால் அவர்களாக இருக்குமோ என்று சந்தேகம் நமக்கு எழுகிறது” என்று நாங்கள் அறிவித்து இருந்தமையினால், “ஒரு செய்தி தெளிவாக சொல்லப்பட்ட பிறகு, எங்களுக்கு எப்படி ஒரே விதமான சந்தேகம் எழுகிறது” என்று வினவி இருந்தீர். நாங்கள் முன்னமே அறிவித்தது போல் இந்த தளத்தில் எங்கள் இருவர் பெயர்களில் வெளிவரும் எல்லா கட்டுரைக்கும் நாங்கள் இருவரும் பொறுப்பு ஏற்கிறோம். இது எங்கள் இருவருடைய கருத்து. இரண்டாவது இந்த கட்டுரையின் நடையை ஆரம்பத்தில் இருந்து நீங்கள் இன்னும் ஒரு முறை படிக்க நேர்ந்தால், இது திரு இயேசு அவர்கள் என்ன முன் அறிவிப்பு செய்தார் என்பதனை அனுமானிக்கும் விதமாகவே அமைக்க பெற்றுள்ளதை அறிவீர். எங்களுடைய கருத்தினை திணிப்பதற்காக ஒரு கட்டுரை வரையும் வேளையில், திரு பால் அவர்கள் தாம் கள்ள தீர்க்கதரிசி என்று தெளிவாக அறிவிக்க முடியும். ஆனால் இந்த கட்டுரை திரு இயேசு என்ன முன் அறிவிப்பு செய்தார் என்பதை அனுமானிக்கும் கட்டுரை, இன்னொரு மனிதர் அவர் உலகில் இல்லாத நிலையில், அவர் இவரை தான் குறிப்பிட்டார் என்று நாம் உறுதியாக சொல்ல முடியாது, ஆனால் அவர் குறிப்பிட்ட அடையாளங்கள் பொருந்தும் முதல் நபர் அவர் குறிப்பிட்ட நபராக இருக்குமோ என்ற எங்களுடைய விளக்கத்தை தான் அந்த கட்டுரையில் விட்டு வைத்து இருந்தோம். இப்பொழுது உங்களுக்கு தெளிவானதா ????


திரு ஜான்சன் விக்டர் அவர்களே, “நீங்கள் பதில் அளிக்க தவறி விட்டால் தொல்வியுற்றதாக என்ன வேண்டாம் என்று அறிவித்து இருந்தீர்”. பதில் அளிக்க தவறியவர்களை நாங்கள் வென்று விட்டோம் என்று அறிவிக்க முனைந்து இருந்தால், எங்கள் முதல் கட்டுரையிலே நாங்கள் திரு உமர் அவர்களை வென்று விட்டோம் என்று அறிவித்து இருப்போம். இன்று வரை எங்கள் தெளிவான எழுத்து விவாத அழைப்பை அவரும், திரைக்கும் பின் மறைந்து இருக்கும் அவர் நண்பர்களும் ஏற்காத நிலையில், இவர்கள் அனைவரையும் நாங்கள் இரு இளைஞர்கள் வென்று விட்டோம் என்று அறிவித்து இருப்போம். வெற்றி தோல்வி எண்ணி இந்த கட்டுரைகள் வரைய பெறுவது இல்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக பின்னப்படும் பொய்யுரைகளை இறைவன் கிருபையில் கிழித்து எரிவதே எங்கள் முயற்சி, அந்த பொய்யுரைகளை அகற்றுவதே எங்கள் வெற்றி...
  

திரு ஜான்சன் விக்டர் அவர்களே, முடித்த வரை நாங்கள் உங்கள் கேள்விகள் மற்றும் உங்கள் சுய கண்ணோட்டத்தை இந்த கட்டுரையில் விவரித்து இருக்கிறோம் என்று நம்புகிறோம். இனி வரும் காலங்களில் தலைப்புக்கு தொடர்புடைய உங்கள் விளக்கங்களை தெளிவான பைபிள் வசன ஆதாரத்தோடு அறிவித்து விட்டு, பின்னர் உங்கள் கேள்விகளை சுருக்கமாக எங்கள் இணைய தளத்திலே பதில் அளிக்க ஏதுவாக விட்டு வைப்பீர்கள் என்ற எண்ணத்தில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்,

ஜியா & அப்சர் 
   



5 comments:

Johnson Victor said...

படித்து விட்டேன். பிரமிக்கும் வகையில் நீண்ட விளக்கம் தந்திருக்கிறீர்கள்.
அத்தோடு, நான் உங்களை விமர்சனம் செய்திருந்தாலும், அதைச் சுட்டிக் காட்டுகிற நிலையில் மருந்துக்குக் கூட என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்காமல் இருந்தது என்னை உண்மையிலேயே பாராட்ட வைக்கிறது. முடிந்தால், தனிப்பட்ட தாக்குதல்களை நாளை நீக்கி விடுகிறேன். நிச்சயமாக எனது மன்னிப்பு கேட்கும் வாசகமும் அதில் இடம் பெறும்.(ஆனால், ஒரு வேளை அது கிறிஸ்தவ சகோதரர்களின் எதிர்ப்புகளையும் சந்திக்கக் கூடும்)

என்னிடம் இவ்வளவு பண்பாகப் பேசுகிற நீங்கள் திரு.உமரைத் தாக்குகிறீர்களே. இந்த விடயத்தில் நீங்கள் சற்று யோசிக்க வேண்டும். ‘அவர்தான் முதலில் எழுதினார். அதற்கு நாங்கள் பதில் எழுதினோம்’ என்றெல்லாம் நீங்கள் வாதிடக் கூடும்.
ஆனால், நாம் இரண்டு தரப்புமே நமது புனித கோட்பாடுகளை இந்தச் செயல் மூலம் சிறுமைப் படுத்துகிறோம்.
நீங்கள் இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம். என்னை இடித்துரைக்கும் வகையில் சில வேத வசனங்களை எடுத்துக் காட்டுகிறீர்கள். அதாவது நான் வேதத்தைக் கடைபிடிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.
அதே போல், உமரை நீங்கள் தனிப்பட்ட முறையில் தாக்கும் போது, அவரும் முகமதுவின் கூற்றுகளை முன் வைத்து உங்களை இடித்துரைக்கலாம் அல்லவா?

இப்படிதான் பெரும்பாலான கோட்பாடுகள் மோதும் போது விரோதங்களும் குரோதங்களும் வளர்ந்து இரத்தம் சிந்துதல் வரைக்கும் இட்டுச் செல்கிறது.

நீங்கள் மிக நீண்ட கட்டுரையை வரைந்திருப்பதால் இந்தக் குறுகிய காலக்கட்டத்தில் அதற்குப் பதில் எழுத இயலவில்லை.

சந்திப்போம்.

Zi said...

திரு ஜான்சன் விக்டர் அவர்களே, குறுகிய காலக்கட்டத்தில் எங்கள் கட்டுரைக்கு பதில் எழுத இயலவில்லை என்று அறிவித்து இருந்தீர். ஒன்றும் அவசரம் இல்லை, பொறுமையாகவே பதில் அளியுங்கள், உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்து கொள்ளுங்கள். ஆனால் மிண்டும் உங்கள் சொந்த கண்ணோடங்களுக்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று எழுத மாட்டிர்கள் என்று நம்புகிறோம். தெளிவான பைபிள் வசனங்களை கொண்டு கேட்க பெற்ற கேள்விகளுக்கு முறையே பதில் எழுதுவிர்கள் என்று நம்புகிறோம்.

திரு உமர் அவர்களை, நாங்கள் தாக்குகிறோம் என்று அறிவித்து இருந்தீர். இந்த கட்டுரையில், அவர் செய்யாத எதனை கொண்டு அவரை நாங்கள் தனி நபர் விமர்சனம் செய்தோம் என்று எங்களுக்கு தெளிவாக்க முடியுமா? திரு உமர் அவர்கள் தன்னை பற்றி தன் வாயால் என்ன அறிவித்தாரோ, அல்லது எதனை தன் செயல்களால் வெளிபடுதினாரோ, அதனை தான் நாங்கள் மிண்டும் அறிவித்து இருப்போமே அன்றி, புதியதாக அவர் செய்யாத ஒன்றில் இருந்து அவர் மீது நாங்கள் தனி நபர் விமர்சனங்களை விடுத்து இருக்க மாட்டோம் என்று நம்புகிறோம்.

எங்களை பற்றி நீங்கள் செய்யும் தனி நபர் விமர்சனங்களை நாங்கள் பெரிது படுத்துவது இல்லை, எங்களுடைய ஆதாரங்களுக்கு பதில் அளிக்க இயலாமல், கையாள ஆகாத தனத்தை தான், எங்கள் மீது உள்ள வெறுப்பினை வெளிப்படுத்தும் வகையில், தனி நபர் விமர்சன பொயுரைகளாக, போலி கிறிஸ்தவ வாசகர்களின் வாயிலாக வெளிவருகிறது என்பது நாங்கள் அறிந்ததே.

இதை போன்ற விமர்சனங்கள் எங்களை எந்த விதத்திலும் பாதிக்க போவது இல்லை. ஆனால் இப்படி ஆதாரம் இல்லாமல் பொய்யுரைப்பது உங்கள் நம்பிக்கை அடிப்படையில் தவறு, என்பதை உங்களுக்கு அறிவிக்கவே பைபிள் வசனங்களை வெளியிட்டு இருந்தோமே தவிர, உங்களை கடிந்து கொள்வதற்கு இல்லை. அப்படி நாங்கள் கடிந்து கொள்வது என்றால் இதற்க்கு முன்னரே உங்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் (உங்கள் திரு உமர் அவர்கள் உட்பட) எதனை கிழ்த்தரமாக எங்களிடம் கேள்விகள் எழுப்பி இருந்தார்கள் என்று சென்று பாருங்கள், அவர்களை தான் நாங்கள் முதலாவதாக கடிந்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்ய வில்லை, கண்ணியம் காத்து பதில் அளித்து இருக்கிறோம். ஆண்டவன் கிருபையில்... உங்கள் தெளிவான ஆதாரங்களுக்காக காத்து இருக்கிறோம்...

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்

rameez said...

//ஆனால், ஒரு வேளை அது கிறிஸ்தவ சகோதரர்களின் எதிர்ப்புகளையும் சந்திக்கக் கூடும்//

அனைவரும் நடுநிலையாக சிந்தித்தால் இந்த நிலை இருக்காது. ஆனால் பொய்களை வாரி இறைத்தாவது தன் நிலைபாட்டை உண்மையாக்க முயல்வதால் தான் இந்த நிலை.

jalal said...

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்). . அன்பு சகோதரர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் செய்வானாக! மற்றும் உங்களது பணிகளுக்கு அல்லாஹ் மறுமையில் சிறந்த கூலி தருவானாக!. . உங்களது தளத்தை பார்வையிட்டேன். . மாஷா அல்லாஹ். . எவ்வளவு தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கம் அளிக்கிறீர்கள். . நானும் எனது நண்பர் ஒருவரும் சேர்ந்து இந்த "போலி உமர்" அவனது தளத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு தளத்தை நாங்களும் உருவாக்கினோம். எங்களது தளம் (www.breakcross.blogspot.com) . . அதில் நாங்கள் பதில் அளித்து அவனது முகத்திரையை கிழிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போதுதான் உங்களது தளத்தை அறிந்தோம். நீங்கள் இருவரும் உமர் என்பவனுக்கு பதில் கொடுத்து வருகிறீர்கள் என்பதையும் கேள்விப்பட்டோம். நாங்கள் உங்கள் தளத்தை பார்வையிட்டோம். ரொம்பவும் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். உங்கள் அளவுக்கு நாங்கள் பதில் கொடுத்திருப்போம் என்பது சந்தேகம் தான். அதனால் உமர் என்பனுக்கு பதில் சொல்வதை நிறுத்தி விட்டோம். மேலும் உங்கள் தளத்தில் இருந்து பல தகவல்களை எங்கள் தாவா பணிக்கு எடுத்துக் கொள்கிறோம்.. எங்கள் பணிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. . . உங்கள் பணி தொடர்ந்து வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறோம் என்று கூறி விடைபெறுகிறோம். . அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்). . . - உங்கள் சகோதரர் ஜலால்

Anonymous said...

பவுலை கள்ளத் தீர்க்கதரிசி என்கிறீா்களே! அவர் இயேசுவின் தரிசனத்தை நேரடியாக கண்டு இயேசுவை மகிமைப்படுத்தி கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என கிறிஸ்துவுக்காக உயிரையே கொடுத்தவர். இயேசுவின் நாமத்தினால் முழங்கால் யாவும் முடங்கும்,நாவுகள் யாவும் அவரே தேவன் என அறிக்கையிடும் என்றெல்லாம் இயேசுவையும் அவருடைய தெயவீகத்தையும் அறிந்து உணர்ந்து, புகழ்ந்து அவருக்ககாக வாழ“க்கையையே அர்ப்பணித்தவர் எப்படி ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக இருக்க முடியும். உங்களது வாதம் சரியானதாக இருந்தால் இயேசுவுக்கு விரோதமாக அல்லவா அவர் செயல்பட்டிருக்க வேண்டும்.அப்படி இயேசுவின் சிலுவைப் பாடுகளையும், உயிர்த்தெழுதலையும் மறுதலித்து அவர் தேவ குமாரன் இல்லை என உலக மக்களையே இரண்டாக பிரிப்பதற்கு காரணமான முகம்மது நபி அல்லவோ கள்ளத் தீர்க்கதரிசி என உங்களது வாதப்படியே திட்டமாக கூறலாமே.மற்றொருவிதத்தில் அல்லாவின் தீர்்க்கதரிசி என நீங்கள் கூறுகிற நபிக்கு அல்லா எப்போதாவது காட்சி கொடுக்கவில்லையே. ஜிப்ரீல் வானவரைத்தானே நபி தரிசித்தாா்.அதுபோல குரான் சொல்லுகிற ஐபபிள் சொல்லுகிற தீர்க்கதரிசி மூஸா அவர்களுக்கு அல்லாஹ் எத்தனை முறை காட்சி கொடுத்துள்ளார்.அதே அல்லா நபிக்கு மட்டும் ஏன் காட்சி தரவில்லை.ஒரு தீர்க்கதரிசிக்கு, ஒரு வேதத்தையே முழு உலகுக்கும் கொண்டு வருகிற நபிக்கு மட்டும் ஏன் அல்லாஹ் தம்மை வெளிப்படுத்தவில்லை.உங்களது வாதப்படியே நபி கள்ளத்“ தீர்க்கதரிசி என ஏன் சொல்லக் கூடாது.பவுலுக்கு தேவன் அருளிய வெளிப்பாடுகளை இயேசுவோடு கூட இருந்த பேதுரு சாட்சியிட்டு உறுதிப்படுத்தியுள்ளாரே.அவரோடு இருந்த யோவான் இன்னும் எத்தனைபோ் அதனை உறுதிப்படுத்தியுள்ளனரே. நபி சொன்னதை வேறு யாராவது உறுதிப்படுத்தினார்களா? வேறு ஆட்களே அல்லாவுக்கு கிடைக்கவில்லையா அல்லது நபி கள்ளத் தீர்க்கதரிசனம் சொல்லியுள்ளனாரா? படிப்பறிவே இல“லாத நபி சொன்னதை வேத வாக்கு என் வாதிடுகிறீர்களே1 படித்து பட்டம் பெற்று, பெரும் செல்வந்தனாயிருந்து,கிறிஸ்துவுக்கு விரோதமாக எழும்பி கிறிஸ்தவத்தை அழிக்க எண்ணியவனையே கர்த்தர் இயேசு சந்தித்து மாபெரும் சாட்சியாக எழுப்பி வைத்ததை மறுக்க முடியாத சாட்சி என்பதைப் பொறுக்க முடியாமல்தானே அவரையே கள்ளத்தீர்க்கதரிசி என வாதிடுகிறீர்கள். எத்தனை ரோம அதிகாரம் பெற்று கிறிஸ்துவுக்காக அத்தனையையும் உதறிவிட்டு உலகத்தின் பாதி நாடுகள்வரை இயேசுவின் சுவிசேஷம் பரவ காரணமாயிருந்தவர் கள்ளத் தீர்க்கதரிசி எனக் கூறுவது எத்தனை பெரிய முட்டாள்தனம்.முகம்மது நபியே கள்ளத் தீர்்க்கதரிசியாவார். அதனால்தான் மக்கள் அவரை மெக்காவைவிட்டு விரட்டினார்கள் என்பது உமக்குத் தெரியும்தானே.