பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
திரு உமர் அவர்களின் “சமீபத்திய
வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு, பாகம் – 1:
திரு
குர்ஆன்
2:135
وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَىٰ تَهْتَدُوا ۗ قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
2:135. “நீங்கள் யூதர்களாக அல்லது
கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த)
இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்)
முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர்
கூறுவீராக!
|
திரு
குர்ஆன்
|
19:30
قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي
نَبِيًّا
19:30. “நிச்சயமாக நான்
அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு
வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
19:31 وَجَعَلَنِي
مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا
دُمْتُ حَيًّا
19:31. “இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை
முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம்
தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத்
செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
19:32
وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا
19:32. “என் தாயாருக்கு நன்றி
செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட
பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
19:33
وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ
أُبْعَثُ حَيًّا
19:33. “இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும்
(மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி
நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
19:34
ذَٰلِكَ عِيسَى ابْنُ مَرْيَمَ ۚ قَوْلَ الْحَقِّ الَّذِي فِيهِ يَمْتَرُونَ
19:34. இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய
புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய
உண்மையான சொல் (இதுவே ஆகும்).
19:35 مَا
كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍ ۖ سُبْحَانَهُ ۚ إِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ
كُن فَيَكُونُ
19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும்
ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு
காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
19:36
وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ ۚ هَٰذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ
19:36. “நிச்சயமாக அல்லாஹ்வே
(படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால்,
அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான
வழியாகும்” (என்று நபியே! நீர் கூறும்).
|
வாசகர்களே, திரு உமர் அவர்கள் இரண்டு
மாத கால இடைவெளிக்கு பிறகு, தான் பதிலளிக்க போவதாக அறிவித்து விட்டு வெளியிட்ட
மொழிபெயர்ப்பு கட்டுரை “சமீபத்திய வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?” என்ற கட்டுரையாகும். இந்த கட்டுரையில் சமீபத்திய வெளிப்பாடு
(மார்க்கம்) என்று திரு உமர் அவர்கள் குறிப்பிட முனைவது, ஏறத்தாள ஆயிரத்தி
நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த உலகின் இரண்டாம் மிக பெரிய மார்கமான இஸ்லாமை. திரு
உமர் அவர்கள் அறிவிப்பது போல், ஆயிரத்தி நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மார்கத்தை
சமீபத்திய வெளிப்பாடு (மார்க்கம்) என்று அறிவிக்க முனைந்தால், அதற்க்கு அறனூறு
ஆண்டுகளே முந்திய கிறிஸ்தவத்தை என்ன வென்று அழைப்பது? அதற்கும் முந்தைய யூத
மார்கத்திர்க்கு கிறிஸ்தவம் சமீபத்திய வெளிப்பாடு (மார்க்கம்) தானே? திரு உமர்
அவர்கள் கருத்தின் அடிப்படையில் கிறிஸ்தவம் எப்படி உண்மை மார்க்கமாக இருக்க
முடியும்? இது ஏற்க தகுதியானதா?
வாசகர்களே, திரு உமர் அவர்களின் “சமீபத்திய
வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?” என்ற கட்டுரை “14 மே 2005” கேட்க்க பட்ட வாசகர் மின் அஞ்சல்
கேள்விக்கு விடை அளிக்கும் வண்ணம் அமைக்க பட்டு இருந்தது. நான்கு ஆண்டு
காலமாக கட்டுரை வரைவதாக சதா பெருமை பேசி கொள்ளும் நமது நண்பர் திரு உமர் அவர்கள்,
“14 மே 2005” வருடம் கேட்க்க பட்ட கேள்விக்கு
தற்சமயம் பதில் அளிப்பது நமக்கு வியப்பை தருகிறது. இந்த பதிலை அளிக்க இந்த
கட்டுரையின் மூல ஆசிரியர் இத்தனை ஆண்டுகாலம் காலதாமதம் செய்தாரா? அல்லது இதை
மொழிபெயர்ப்பு செய்ய இத்தனை ஆண்டுகாலம் திரு உமர் அவர்கள் எடுத்து கொண்டாரா? என்பதை திரு உமர் அவர்கள் தான்
நமக்கு அறிவிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகால தாமதத்திற்கு பிறகு திரு உமர்
அவர்கள் வெளியிட்ட “சமீபத்திய வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?” என்ற கட்டுரையின் மையா கருத்தினை
எல்லாம் வல்ல ஒரே இறைவனின் உதவியை நாடியவர்களாக ஆராய முனைவோம்...
திரு உமர் அவர்கள் வெளியிட்ட
கட்டுரையில், ஒரு வாசகர் இஸ்லாம் பற்றிய தன்னுடைய சந்தேகத்தை விளக்கும் மாறு வினாவும்
வகையில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். ஆதாவது தான் இஸ்லாமியர்களிடம் ஊழியம்
செய்யும் வேளையில், இஸ்லாமியர்கள் (கிறிஸ்தவர்கள் அறிவிக்கும்) இன்ஜீல் (நூலை)
ஏற்க மாறுகிறார்கள். திரு இயேசு அவர்களை கிறிஸ்தவர்கள் (இறைவனாக) நம்பிக்கை
கொள்வது போல் நம்பிக்கை கொள்ள மறுகிறார்கள். இன்னும் தவ்ராத், ஜபூர், இன்ஜீல்,
மற்றும் திரு குர்ஆன் என்பது இறைவன் வழங்கிய நான்கு வேதங்கள். இவற்றில் முந்தைய
மூன்று வேதங்களும் அந்த அந்த காலத்திற்கு உரியது, ஆனால் திரு குர்ஆன் தற்காலத்திற்கு
உரியது என்று வாதிடுகிறார்கள். இது எப்படி என்றால் ஒரு நாட்டின் ஆட்சி புரியும்
அரசாங்கத்திற்கு நிகரானது, ஆட்சியாளர்கள் மாற்றத்திற்கு ஏற்ப சட்ட திட்டங்கள்
மாற்றம் அடையும், அவற்றை மக்கள் ஏற்பதை போலவே இதுவும் என்ற அடிப்படையில் அந்த
வாசகர் உவமை அளித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்க்கு பதில் அளித்த ஆசிரியர்
(திரு உமர் அவர்கள்), அந்த வாசகர் எழுப்பிய கேள்வியை பின்னுக்கு தள்ளி விட்டு,
அவர் எடுத்து வைத்த உவமையை கருவாக எடுத்து கொண்டு பதில் அளித்து இருந்தார்.
ஆதாவது இஸ்லாம் ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு சமமானது என்ற உவமையின்
அடிப்படையில், இஸ்லாம் நிலையானது அல்ல, அதற்க்கு பின்னர் வரும் மார்கதையும்
இஸ்லாமியர்கள் ஏற்க தயாராக இருக்க வேண்டும், இன்னும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்
கிறிஸ்தவ இறைதூதர்களுக்கு இணையானவர் அல்ல என்றும் பதில் அளித்து இருந்தார்.
திரு உமர் அவர்கள், வாசகரின்
உண்மையான கேள்விக்கு பதில் அளிக்காமல் வாசகரின் உவமையை கொண்டே பதில் அளித்தது
ஏற்க தக்கது அல்ல. வாசகரின் கேள்வி:
1. இஸ்லாமியர்கள்
(கிறிஸ்தவர்கள் அறிவிக்கும்) இன்ஜீல் (நூலை) ஏற்க மாறுகிறார்கள்.
2. திரு இயேசு அவர்களை
கிறிஸ்தவர்கள் (இறைவனாக) நம்பிக்கை கொள்வது போல் நம்பிக்கை கொள்ள மறுகிறார்கள்.
3. இன்னும் தவ்ராத், ஜபூர்,
இன்ஜீல், மற்றும் திரு குர்ஆன் என்பது இறைவன் வழங்கிய நான்கு வேதங்கள். இவற்றில்
முந்தைய மூன்று வேதங்களும் அந்த அந்த காலத்திற்கு உரியது, ஆனால் திரு குர்ஆன்
தற்காலத்திற்கு உரியது என்று வாதிடுகிறார்கள்.
1
|
வாசகர் கேள்வி: இஸ்லாமியர்கள்
(கிறிஸ்தவர்கள் அறிவிக்கும்) இன்ஜீல் (நூலை) ஏற்க மாறுகிறார்கள்.
நம்முடைய விளக்கம்: பெரும் பாலும் எல்லா
இஸ்லாமியனும், எல்லாம் வல்ல இறைவன் திரு ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கிய
இறைவேதம் இன்ஜீல் என்பதனை நம்பிக்கை கொள்கிறார்கள்.
திரு
குர்ஆன்
3:3
نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا
بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالْإِنجِيلَ
3:3. (நபியே!
முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான்
உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள
(வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
|
5:46 وَقَفَّيْنَا عَلَىٰ
آثَارِهِم بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ
التَّوْرَاةِ ۖ وَآتَيْنَاهُ الْإِنجِيلَ فِيهِ هُدًى
وَنُورٌ وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى
وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ
5:46. இன்னும் (முன்னிருந்த)
நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம்
தொடரச் செய்தோம்; அவருக்கு நாம்
இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும்
இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக
இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர்
வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
|
இஸ்லாமியர்கள் நம்பிக்கை கொள்வது
எல்லாம் வல்ல இறைவன் திரு ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கிய இன்ஜீல் என்ற
இறைவேதம், ஆனால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை ஏற்க பணிப்பது, முகவரி அற்ற
நபர்கள் இயற்றி, திரு ஈஸா (அலை) அவர்கள் போதித்த “ஒரே இறைவனை வணங்குங்கள்”
என்ற மார்கதிர்க்கு முற்றிலும் முரணான “மூன்று இறைவன்கள், ஆனால் அவர்கள்
மூன்று அல்ல ஒன்று” என்ற வினோதமான செய்திகளை அறிவிக்கும் புத்தகங்களை.
மேலும் இந்த புத்தகங்களின் நடை,
இறைவன் மனிதர்களுக்கு தன் சட்ட திட்டங்களை விவரிக்கும் வண்ணம் அமைந்ததாக
நம்மால் அறிய முடியவில்லை. மாறாக திரு இயேசு அவர்களின் வாழ்நாளில் இறுதி சில
ஆண்டுகளில் நடந்தேறிய நிகழ்வுகளை, முன்னுக்கு பின் முரணாக, முகவரி அற்ற
முன்றாம் நபர் அறிவிப்பது போன்று அமைந்துள்ளது. இந்த புத்தகங்களை திரு இயேசு
அவர்கள் தன் வாழ்நாளில், தன் முன்நிலையில் இயற்ற பணித்து, இன்னும் வசனங்களை சரி
பார்த்த எந்த தெளிவான வசனத்தையும் நம்மால் காண முடியவில்லை. இன்னும் கிறிஸ்தவ
நம்பிக்கையின் அடிப்படையில், திரு இயேசு அவர்களின் மரணத்திற்கு பிறகு
நடந்தேறிய நிகழ்வுகளை, கற்பனைகளை, கனவுகளை இன்னும் பொய்யுரைகளை இந்த
புத்தகங்கள் அதிகப்படியாக கொண்டுள்ளதை நம்மால் காண முடிகிறது. இதனாலே இந்த
புத்தகங்கள் இந்த நொடி வரை பிழை திருத்தங்களை கண்டு வருகிறது. இந்நிலையில் இந்த
புத்தகங்கள் எப்படி இறைவன் திரு ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கிய இன்ஜீல் வேதமாக
இருக்ககூடும்?
திரு
குர்ஆன்
3:79 مَا كَانَ لِبَشَرٍ أَن
يُؤْتِيَهُ اللَّهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ
لِلنَّاسِ كُونُوا عِبَادًا لِّي مِن دُونِ اللَّهِ وَلَٰكِن كُونُوا
رَبَّانِيِّينَ بِمَا كُنتُمْ تُعَلِّمُونَ الْكِتَابَ وَبِمَا كُنتُمْ
تَدْرُسُونَ
3:79. ஒரு மனிதருக்கு அல்லாஹ்
வேதத்தையும், ஞானத்தையும்,
நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர்
அவர் “அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்”
என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற
மனிதரிடம்) “நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக்
கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும்
இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி
விடுங்கள்” (என்று தான் சொல்லுவார்).
3:80 وَلَا
يَأْمُرَكُمْ أَن تَتَّخِذُوا الْمَلَائِكَةَ وَالنَّبِيِّينَ أَرْبَابًا ۗ أَيَأْمُرُكُم بِالْكُفْرِ بَعْدَ إِذْ
أَنتُم مُّسْلِمُونَ
3:80. மேலும் அவர், “மலக்குகளையும்,
நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக
எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் உங்களுக்குக்
கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும்
சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள்
என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.
|
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை ஏறக
சொல்லும் புத்தகங்கள், திரு ஈஸா (அலை) அவர்களின் காலத்திற்கு பிறகு ஏறத்தாள
நூறு இரண்ணூறு ஆண்டுகள் பிறகு இயற்ற பெற்ற நூல்கள். இன்னும் திரு ஈஸா (அலை)
அவர்களை ஒரு முறையேனும் உயுருடன் பாத்திராதா நபர்கள் இயற்றிய நூல்கள். இந்த
நூல்களை எத்தனை அடிப்படையாக கொண்டு ஏற்ப்பது?
திரு
குர்ஆன்
2:79
فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ
ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا
قَلِيلًا ۖ فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ
أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ
2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத்
தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து
வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு
எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும்
அவர்களுக்குக் கேடுதான்!
|
இன்னும் சில கிறிஸ்தவர்கள் புதிய
ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களே இன்ஜீல்லின் பகுதி என்று
அறிவிக்கிறார்கள். ஆனால் இந்த நான்கு புத்தகங்களில் எந்த புத்தகமும் தன்னை
எல்லாம் வல்ல இறைவன் திரு ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கிய இன்ஜீல் என்று சாட்சி
அளிப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. இன்னும் இந்த நான்கு புத்தகங்கள் இயற்றிய
நபர்கள் யார் என்று கிறிஸ்தவ அறிஞ்சர்கள் மத்தியில் குழப்பங்கள் நிளவும்
நிலையில், இன்னும் இந்த நான்கு புத்தகங்கள், தாங்கள் அறிவிக்கும் செய்திகளில்
இடையே முரண் படும் நிலையில், இந்த புத்தகங்களை இன்ஜீல்லின் பகுதி என்பதை
எத்தனை அடிப்படையாக கொண்டு ஏற்ப்பது என்பதனை திரு உமர் அவர்கள் தான் விவரிக்க
வேண்டும்.
|
2
|
வாசகர் கேள்வி: (இஸ்லாமியர்கள்)
திரு இயேசு அவர்களை கிறிஸ்தவர்கள் (இறைவனாக) நம்பிக்கை கொள்வது போல் நம்பிக்கை
கொள்ள மறுகிறார்கள்.
நம்முடைய விளக்கம்: இஸ்லாமியர்கள் திரு ஈஸா (அலை)
அவர்களை ஒரு இறைத்தூதர் என்று நம்பிக்கை கொள்கிறார்கள்.
திரு
குர்ஆன்
2:136
قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا
أُنزِلَ إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ
وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَا أُوتِيَ
النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ
وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு
இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல்,
இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர்
சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும்,
ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற
நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும்
நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும்
நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள்
அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று
கூறுவீர்களாக.
2:137
فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنتُم بِهِ فَقَدِ اهْتَدَوا ۖ وَّإِن تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي
شِقَاقٍ ۖ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
2:137. ஆகவே, நீங்கள் ஈமான்
கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை
பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள்
புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே
அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்;
அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
|
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை திரு ஈஸா
(அலை) அவர்களை இறைவன் என்று நம்பிக்கை கொள்ள பணிக்கிறார்கள், ஆனால் இதை போன்று
“தன்னையே வணங்குங்கள்” என்று தெளிவாக திரு ஈஸா (அலை) அவர்கள் தன் வாழ்நாளில்
அறிவித்த ஒரு தெளிவான ஆதாரத்தை பைபிள்ளில் நம்மால் காண முடியவில்லை. மாறாக
அவர் அறிவித்தது “எல்லாம் வல்ல ஒரே இறைவனை வணங்குங்கள்” என்பதே. இன்னும் திரு
குர்ஆன்னும் இதையே சாட்சி அளிக்கிறது. இந்த நிலையில் எத்தனை அடிப்படையாக
கொண்டு திரு ஈஸா (அலை) அவர்களை இறைவன் என்று ஏற்ப்பது?
Jesus answered, “The
most important is: ‘Listen, Israel, the Lord our God, the Lord is one. Love the Lord your God with all your heart, with all your soul,
with all your mind, and with all your strength. (Mark 12:29 -30)
|
திரு
குர்ஆன்
5:72
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ
ابْنُ مَرْيَمَ ۖ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي
إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ ۖ إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ
فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே
நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ்
கூறினார்: “இஸ்ராயீலின்
சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய
இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு
அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும்
அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு
உதவிபுரிபவர் எவருமில்லை.
|
திரு
குர்ஆன்
4:159 وَإِن مِّنْ أَهْلِ
الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ
شَهِيدًا
4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம்
இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான்
கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர்
அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
|
திரு
குர்ஆன்
5:17 لَّقَدْ كَفَرَ الَّذِينَ
قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ۚ قُلْ فَمَن يَمْلِكُ مِنَ اللَّهِ شَيْئًا
إِنْ أَرَادَ أَن يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَن فِي
الْأَرْضِ جَمِيعًا ۗوَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَمَا بَيْنَهُمَا ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர்
மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்
என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர்
ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய
தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால்,
(அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ
அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர்
கேளும்; வானங்களிலும், பூமியிலும்,
அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள
ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப்
படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும்
ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
|
|
3
|
வாசகர் கேள்வி: (இஸ்லாமியர்கள்)
தவ்ராத், ஜபூர், இன்ஜீல், மற்றும் திரு குர்ஆன் என்பது இறைவன் வழங்கிய நான்கு
வேதங்கள். இவற்றில் முந்தைய மூன்று வேதங்களும் அந்த அந்த காலத்திற்கு உரியது,
ஆனால் திரு குர்ஆன் தற்காலத்திற்கு உரியது என்று வாதிடுகிறார்கள்.
நம்முடைய விளக்கம்: நாம் முன்னரே அறிவித்தது போல்,
இஸ்லாமியர்கள் திரு குர்ஆனுக்கு முந்தைய எல்லா வேதங்களையும், இன்னும் எல்லா
இறைதூதர்களையும் ஏற்கிறார்கள்/அங்கீகரிக்கிறார்கள். ஆனால் திரு குர்ஆனுக்கு
முந்தைய வேதங்கள் மற்றும் இறைதூதர்கள் அந்நாளில் இருந்த ஒரு
சமுகத்திற்கு அல்லது ஒரு தரப்பினர்களுகாக வழங்கபட்டது, இன்னும் கிறிஸ்தவர்கள்
முன்வைக்கும் வேதங்களும் தான் ஒரு தரப்பினருகே வழங்கபெற்றது என்று தெளிவாக
சாட்சி அளிப்பதை பைபிள்ளில் நம்மால் காண முடிகிறது.
Jesus responded,
"I was sent only to the lost sheep of the nation of Israel." (Matthew
15:24)
|
Jesus sent these
twelve out with the following instructions: "Don't go among people
who are not Jewish or into any Samaritan city. Instead, go to the lost
sheep of the nation of Israel. (Matthew 10:5-6)
|
திரு
குர்ஆன்
3:47 قَالَتْ رَبِّ أَنَّىٰ
يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ ۖ قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ إِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ
لَهُ كُن فَيَكُونُ
3:47. (அச்சமயம் மர்யம்)
கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும்
தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ்
தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக்
கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
3:48
وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ
وَالْإِنجِيلَ
3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும்
கற்றுக் கொடுப்பான்.
3:49
وَرَسُولًا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُم
بِآيَةٍ مِّن رَّبِّكُمْ ۖ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ
كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ ۖ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ
وَأُحْيِي الْمَوْتَىٰ بِإِذْنِ اللَّهِ ۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَّكُمْ إِن
كُنتُم مُّؤْمِنِينَ
3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத்
தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக
வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு
பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது
அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக்
குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும்
குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு
இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும்,
நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி
நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்)
ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது”
(என்று கூறினார்).
3:50
وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ
وَلِأُحِلَّ لَكُم بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ ۚ وَجِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
3:50. “எனக்கு முன்
இருக்கும் தவ்ராத்தை
மெய்பிக்கவும், உங்களுக்கு
விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள்
இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு
வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”
|
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை ஏற்க
பணிக்கும் முந்தைய வேதங்களும், இன்னும் அவற்றை இறைவனிடம் பெற்ற இறைதூதர்களும்
இந்த வேதங்களை இறுதி வேதமாக அறிவித்த எந்த தெளிவான ஆதாரத்தை நம்மால் காண
முடியவில்லை. மாறாக இதற்க்கு பின்னர் வர விருக்கும் இறுதி தூதர் மற்றும் அவர்
முலம் வரவிருக்கும் இறைவேததையே முன் அறிவிப்பு செய்வதாக நம்மால் அறிய
முடிகிறது..
The LORD your
God will raise up for you a prophet like me from among your own brothers.
You must listen to him. (Deuteronomy 16:18)
|
"I have a
lot more to tell you, but that would be too much for you now. When the Spirit of Truth comes, he will guide you
into the full truth. He won't speak on his own. He will speak what he
hears and will tell you about things to come. (John 16:12-13)
|
கிறிஸ்தவர்கள் கோடிடும் வேதங்களின்
இறைதூதர்கள், தாமே இறுதியானவர் என்று தங்கள் வாயிலாக அறிவித்த தெளிவான
வசனங்களை நம்மால் காண முடியவில்லை, மாறாக தனக்கு பின் இறைதூதர்கள் வருகையை
முன் பதிவு செய்துலதாக பைபிள் அறிவிக்கிறது. ஆனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்
இறுதி தூதர் என்று திரு குர்ஆன் சாட்சி கூறுகிறது.
33:40 مَّا كَانَ مُحَمَّدٌ
أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ
النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில்
எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ
அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி
(முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ்
எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
|
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை ஏற்க
பணிக்கும் முந்தைய வேதங்களை இறைவன் காப்பதாக எந்த
வாக்குறுதியையும் அவர்கள் அறிவிக்கும் வேதங்களில் நம்மால் காண முடியவில்லை.
ஆனால் திரு குர்ஆன்னை இறைவன் தானே காப்பதாக சாட்சி கூறுகிறான்.
திரு
குர்ஆன்
15:9
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்)
இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன்
பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
|
இறுதி வேதம் திரு குர்ஆன், உலக முடிவு
நாள்வரை பின் பற்ற கூடிய சட்ட திட்டங்களை கொண்டது. அதுவே இறுதி வேதமாக சாட்சி
அளிக்கிறது. இந்த நிலையில் இந்த இறுதி வேதமே தற்காலத்திர்க்கும், இனி வரும்
எக்காலத்திற்கும் ஏற்புடையது என்பது இதன் மூலம் தெளிவாகுகிறது.
திரு
குர்ஆன்
5:3 حُرِّمَتْ عَلَيْكُمُ
الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ
بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ
وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى
النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِن
دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ
نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
5:3. (தானாகச்)
செத்தது, இரத்தம், பன்றியின்
இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது
கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச்
செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்
பட்டுச் செத்ததும், (கரடி, புலி
போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன;
(அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து,
முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை
உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற
இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள்
குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்)
பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய
மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து
விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்;
எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள்
மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என்
அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும்
உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில்
எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக்
கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப்
புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும்
மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
|
மேலே கோடிட்ட ஆதாரங்கள் வாயிலாக திரு
குர்ஆனுக்கு முந்தைய வேதம் காலத்தால் அழிந்து போயின இன்னும் அவை ஒரு
சமுகத்திற்கு வழங்க பெற்றமையால் அவை பாதுகாக்க படவில்லை. ஆனால் திரு குர்ஆன்
இறைவனால் பாதுகாக படுகிறது இன்னும் அதுவே இறுதி வேதமாக திகழ்கிறது என்பது
வாசகர்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.
|
இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக திரு
உமர் அவர்கள் வெளியிட்ட விளக்கத்தையும் அதற்க்கு எங்கள் மறுப்பையும் எல்லாம்
வல்ல இறைவன் நாடினால் கூடிய விரைவில் வெளியிடுவோம். அது வரை உங்களிடம் இருந்து
தற்காலிகமாக விடைபெறுகிறோம்...
அஸ்ஸலாமு அழைக்கும்,
-ஜியா & அப்சர்.
|
No comments:
Post a Comment