பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் 
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற   அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) 
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது   உண்டாகுக 
"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம்   செய்துக்கொள்வாளா?"  என்ற கட்டுரைக்கு மறுப்பு - பாகம் 2 
முன்னுரை  
வாசகர்களே,   திரு உமர் அவர்கள் வெகு நாட்களுக்கு பிறகு, நமது கட்டுரைக்கு பதிலளிப்பதாக கூறி   ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதுவும் இதுவரை அவர் எடுத்த இரண்டு தலைப்பையும்   விட்டு விட்டு மூன்றாவதாக ஒரு தலைப்பில்..... 
Answering   Ziya & Absar: "இடையரை   (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2 
அவருடைய   கட்டுரைக்கு பதிலளிப்பதற்கு முன்னர், நாம் இந்த தலைப்பில் இதற்க்கு முன்னரே வெளியிட்ட   மறுப்பு “இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம்   செய்துக்கொள்வாளா?” என்ற கட்டுரைக்கு   மறுப்பு அதற்கு   திரு உமர் அவர்கள் இப்பொழுது எழுதி இருக்கும் பதிலுக்கும்!! உள்ள தொடர்பையும், சாராம்சங்களையும்   இந்த கட்டுரையில் ஆராய்வோம். 
கட்டுரையின்   தலைப்பு  
கட்டுரையை   ஒப்பிடுவதற்கு முன்னர், திரு உமர் அவர்களுடைய கட்டுரையின் தலைப்பிற்கும்,   கட்டுரைக்கும், உள்ள தொடர்பை ஆராய்வோம். அவரது கட்டுரை தலைப்பின் முக்கிய   வார்த்தைகளான "Answering" மற்றும்   "Round 2" மூலம் திரு உமர் அவர்கள் என்ன அறிவிக்க   முயல்கிறார் என்பதை சுருக்கமாக ஆராய்வோம்!!! 
Answering அர்த்தம் என்ன?  
திரு   உமர் அவர்களே, உங்களுக்கு "அல்லேலூயா" என்ற வார்தைக்கு அர்த்தம் தெரியாது என இதற்க்கு   முன்னரே தெளிவாக அறிவித்து இருந்தீர், இப்போது பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு   தெரிந்த "Answer/Answering" என்ற   வார்தைக்கு கூட அர்த்தம் தெரியாது என்பது போல், "Answering" என   தலைப்பை மட்டும் பிரமாண்டமாக கொடுத்துவிட்டு, பதில்களை காட்டிலும் இருபதுக்கும் அதிகமான   பொய்யான, கோடிட்ட ஆதாரத்திற்கு முரணான கேள்விகளையே முன்வைத்து உள்ளீரே!!! உங்கள்   அகராதியில் "Answering" என்றால்   பதில்களை காட்டிலும் அதிகப்படியான, பொய்யான கேள்விகளை கேட்ப்பது என்று அர்த்தமா? 
நீங்கள்   பதிலளித்த லட்சணத்தை பார்பதற்கு முன்னர், இதோ   நாங்கள் முன்வைத்த கேள்விகளில், நீங்கள் பதிலளிக்க தவறிய கேள்விகளின்   சுருக்கம்.... 
 
அது   என்ன பாரபட்சம் திரு உமர் அவர்களே, பைபிளை முன் வைத்தால் மட்டும் நீங்கள் மௌனத்தை   சம்மதமாக தருகிறீர்கள்? அப்படியானால் பைபிள் விபச்சாரத்தை   போதிக்கிறது என்பதை ஏற்று கொள்கிறீர்களா? இஸ்லாமியர்களை குறை கூற கிறிஸ்தவர்கள்   தகுதியற்றவர்கள் என்பதை ஒப்பு கொள்கிறீர்கள் தானே!! அப்படியல்ல என்றால் இப்போழுதாவது   இந்த பைபிள் வசனங்களுக்கு தெளிவான பைபிள் வசனத்தை கோடிட்டு பதில் தருவீர்களா? 
Round 2 
வாசகர்களே,   அதற்கு அடுத்தபடியாக தன் தலைப்பில், திரு உமர் அவர்கள் "Round 2" என   குறிப்பிட்டுள்ளார். அது என்ன இரண்டாவது ரவுண்டு என தெரியவில்லை? ஓ!!!   எங்கேயோ திரு உமர் அவர்கள் "ரவுண்டு கட்டி அடிக்க போவதாக" கூறியதாக   ஞாபகம்! அதில் ஒரு ரவுண்டு முடித்துவிட்டார் போலும். இப்போது இரண்டாவது ரவுண்டு   ஆரம்பித்து இருக்கிறார். 
அப்படி   என்றால் முதல் ரவுண்டு எது? நமக்கு தெரிந்தவரை உமர் அவர்கள் விவாதித்த "முஹம்மது நபி (ஸல்) சபியா திருமணம்" மற்றும் "அல்லேலூயா" தலைப்புகளை தான் அவர் முதல் ரவுண்டு என   நினைக்கிறார் போலும். அப்படி என்றால் திரு உமர் அவர்கள் அவர் இதுவரை   விவாதித்த இந்த இரண்டு தலைப்புகளில் அவர் இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என   தோல்வியுற்றதை ஒப்புக்கொண்டார் போலும்!!! 
மேலும்   இந்த தலைப்புகள் பற்றி படிக்க, 
இந்த   கட்டுரைகளுக்கு திரு உமர் அவர்களின் பதில் என்ன? 
உமரின்   இணையதள தொடுப்பை கொடுக்க மறுக்கிறோமா ? 
திரு   உமர் அவர்களே, உங்களுடைய இந்த கேள்விகளுக்கு இதற்க்கு முன்னரே   எங்களிடம் பதிலளிக்க பட்டுள்ளதே, பிறகு ஏன் இந்த போலியான கேள்விகளை கொண்டு   மாயையை உண்டாக்க முயல்கிறீர். நீங்கள் மறந்து விட்டீர்கள் என்றால் இதோ அந்த   தொடுப்பை மீண்டும் கொடுக்கிறோம். 
பார்க்க: 
அந்த   தொடுப்பில் கேள்வி "14  திரு. உமர் அவர்களின் கருத்து:" க்கான பதிலை பார்க்கவும். 
ஏற்கனவே   இதற்கு பதிலளிக்க பட்டிருந்தும் ஏன் இந்த கேள்வியை மீண்டும் முன்வைகிறீர்கள்? அப்படி   நீர் முன்வைக்க விரும்பினால் நாங்கள் அந்த கட்டுரையில் எழுப்பிய கேள்விகளுக்கு   பதிலளித்து விட்டு அல்லவா கேள்வி எழுப்ப வேண்டும்!!! ஏன் இந்த போலித்தனம்? 
அதில்   நங்கள் வெளியிட்ட கருத்துக்கள், கேள்விகளின் சுருக்கம் இதோ 
 
இப்படி   ஏற்கனேவே பதிலளிக்கப்பட்ட கேள்வியை, மறுபடியும் கேட்க ஏறத்தாள 38   வரிகளில் ஒரு கட்டுரையே எழுதியுள்ளார்!!! இதை பார்த்தால் கேள்வி கேட்பதர்காக   எழுதியதாக தெரியவில்லை. பரிட்சையில் பதில் தெரியாவிட்டால் பக்கங்களை   நிரப்புவதற்காக எழுதுவார்களே அது போல இருக்கிறது. பாவம் அவரும் என்ன செய்வார்   அவர் நம்பி வந்த பைபிளும் அவரை கைவிட்டது. வேறு வழி இல்லையே!!! 
இப்போது   அவர் முன்வைத்த அதிகப்படியான கருத்துக்கு நமது மறுப்பை பாப்போம் 
உமர்   சொன்னது, 
 
நம்முடைய மறுப்பு:  
"கடந்த நான்கு....." ஷ் ஷ்....   யப்பா..... இன்னும் எத்தனை காலம் இதே புராணத்தை பாடுவீர்களோ.... திரு உமர்   அவர்களே, எத்தனை ஆண்டு காலம் எழுதுகிறோம் என்பது முக்கியம் அல்ல, நம்   கட்டுரைகளில் எத்தனை சதவிதம் உண்மை இருந்தது என்பதும், எத்தகைய தெளிவான ஆதாரத்தை   நாம் கோடிட்டோம் என்பதுமே வாசகர்களுக்கு முக்கியம்.  
நாம்   தொடுப்பை கொடுக்காததனால் ஏற்படும் விளைவுகளாக திரு உமர் அவர்கள் அறிவித்தது,  
 
நம்முடைய மறுப்பு:  
திரு   உமர் அவர்களே, நீங்கள் முன்வைக்க விரும்பும் கருத்து, நாங்கள்   எழுதும் கட்டுரை மூலம் வாசகர்கள் "இருபக்கத்திலும் உள்ள விவரங்களை படித்து   அலச முடியவில்லை" என்பது. ஆனால் நிகழ்வுகள் வேறு விதமாக அல்லவா உள்ளது.   வாசகர்கள் நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு ஏற்கனவே பதிலளிக்க பட்டுள்ளதாக கூறி   அதற்கான தொடுப்பையும் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி இருபக்கத்திலும் உள்ள   விவரங்களை தொடர்பு படுத்தி படிக்க முடிகிறது? 
இதிலிருந்தே   தெரியவில்லையா, வாசகர்கள் தொடர்பு படுத்தி படிக்க தேவையான   விவரங்கள் நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்பதை நிரூபிக்க. பிறகு ஏன் இப்படி   உண்மைக்கு மாறாக இப்படி பொய் உரைகிரீர்கள்?  
திரு   உமர் அவர்கள் அறிவித்தது, 
 
நம்முடைய மறுப்பு: 
இது ஏதோ   நீங்கள் கண்ணாடி முன் நின்று உங்களை பார்த்து நீங்கள் கேட்பது போல்   தோன்றுகிறது!!! முன்னமே நாம் வெளியிட்ட கேள்விகள்... 
 
இப்போது   சொல்லுங்கள் மடியிலே கனமில்லையானால் வழியிலே பயம் எதற்கு உங்களுக்கு? நீங்கள்   பொய் சொல்கிறீரா அல்லது அணைத்து விவரங்களையும் கொடுப்பீரா? 
இதற்கு   அடுத்த படியாக உமர் எழுதியது, 
 
நம்முடைய மறுப்பு: 
இதுவும்   ஏதோ நீங்கள் கண்ணாடி முன் நின்று உங்களை பார்த்து நீங்கள் கேட்பது போல்   தோன்றுகிறது!!! முன்னமே நாம் வெளியிட்ட எழுத்து விவாத அழைப்பு ... 
  | 
மேலும் அறிய அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 2
உமர்   அவர்களே, இப்போது சொல்லுங்கள்
- செவிடன் காதில் ஊதிய சங்கு!
 - மழையில் நனைந்த எருமை மாடு!!
 - சூரியனை பார்த்து குறைக்கும் ___!!!
 - காமண்ஸ் சென்ஸ் இல்லாதவர் !!!!
 
இவை   யாருக்கு பொருந்தும் என்று? 
இதற்கு   அடுத்த படியாக உமர் எழுதியது, 
 
நம்முடைய மறுப்பு: 
திரு   உமர் அவர்களே, நாமும் உண்மைகள் வெளிவர வேண்டும் என்று   தான் எழுதுகிறோம். அதன்படியே இறைவனின் கிருபையால் உண்மைகள் வெளிவந்தன....   நீங்கள் மறந்து இருப்பீர்களானால் இதோ ஏற்கனவே வெளிவந்த உண்மைகள், நீங்கள் இதுவரை   மறுப்பு தெரிவிக்காத உண்மைகள்.... 
இதோ கிறிஸ்தவம்   பற்றி வெளிவந்த உண்மைகள், திரு உமர் அவர்களால் மறுப்பு அளிக்க முடியாதா உண்மைகள்... 
இன்னும்   பல.... 
இப்போது   சொல்லுங்கள் திரு உமர் அவர்களே, எப்படிப்பட்ட உண்மைகள் வெளிவந்ததென்று.... 
வாசகர்களே,   இந்த கட்டுரை மூலம் திரு உமர் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே   போலியானது என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். 
திரு   உமர் அவர்கள் எழுதிய பதிலை இப்போது அலசுவோம்.... 
திரு   உமர் அவர்கள் எழுதியது, 
 
இதே   கட்டுரையில் அவரது கேள்விகளுக்கு மத்தியில் அவர் வெளியிட்ட கருத்து, 
  | 
நம்முடைய மறுப்பு: 
 | 
திரு உமர் அவர்களே, நீர் சுயநினைவுடன் தான் எழுதுகிறீரா என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது? அல்லாது திரைக்கு பின் மறைந்து இருக்கும் உங்கள் நண்பர்கள் எழுத்தி தருவதை ஒரு முறையேனும் படிக்காமல் வெளியிடுகிறீர்களா? 
 | 
  | 
வாசகர்களே, உமர் அவர்கள் என்ன தான் செய்வார், தனுக்கு தானே முரண்படும் பைபிள்லின் ஒரு சில வசனங்களை மட்டுமே படித்து வளந்தவராயிற்றே.... பைபிளில் உள்ள வியாதி அவரையும் தொற்றிக்கொண்டது போலும்.....
வாசகர்களே, இறைவன் கிருபையில், தெளிவாக எழுத்து விவாததிற்கு நாம் தயார் என அறிவித்த  வெகுநாட்களுக்கு பிறகு "எழுத்து விவாதத்திலும் பாதுகாப்பில்லை" என திரு உமர் அவர்கள் பயப்படுகிறார். இவரை பார்த்து நகைப்பதை தவிர வேறென்ன செய்வது? புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே...
திரு உமர் அவர்களே, இப்போது சொல்லுங்கள், உங்கள் கட்டுரையின் கருத்துகள் நீங்கள் உங்களை பார்த்து கேட்டு கொண்டது போல் உள்ளதா? இப்போது சொல்லுங்கள் யார் கோழை? யார் தொடை நடுங்கிகள்? யாருக்கு பைபிளின் மீது நம்பிக்கை இல்லை? யாருக்கு ஏசுவின் மீதும் அவர் அன்பானவர் என்பதின் மீதும் நம்பிக்கை இல்லை? இதை பார்த்தால் கிறிஸ்தவத்தை முன்னிறுத்தி விவாதிப்பது திரு உமர் அவர்களுடன் சேர்த்து, கிறிஸ்தவத்துக்கும் மற்றும் பைபிளுக்கும் பாதுகாப்பற்றது என்பதனால், திரு உமர் அவர்கள் பின்வாங்குகிறார் என்று தோன்ற செய்கிறது அல்லவா?
உமர் அவர்கள் தன் கட்டுரையில் முன்வைத்த ஒரே கேள்வி (அவர் கற்பனை கூற்று களை தவிர்த்து),
இப்போது   என் கேள்விகள் என்னவென்றால், ஹதீஸ் எண் 5255ல்   சொல்லப்படாத புதிய விவரம், அல்லது முக்கியமான விவரம் ஏதாவது ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 என்பவைகளில் உண்டா? 
 |   
மேற்கண்ட கேள்விக்கான பதில்லை, இந்த கட்டுரையின் தொடர்ச்சியில் வெளியிடுவோம். இன்ஷா அல்லாஹ்.....
அஸ்ஸலாமு அழைக்கும்,
--
--
5 comments:
அஸ்ஸலாமு அழைக்கும்
அல்லா உங்களுக்கு மறுமையில் நற் கூலி வழங்குவானகா .....நீங்கள் ஏன் jesusinvites.wordpress.com தளத்திற்கு பதில் அளிக்க கூடாது ........
Best Regards...
Mohammed
அஸ்ஸலாமு அழைக்கும்
அல்லா உங்களுக்கு மறுமையில் நற் கூலி வழங்குவானகா .....நீங்கள் ஏன் ஜெசுசின்விடேத்.வோர்ட்ப்றேச்ஸ்.கம தளத்திற்கு பதில் அளிக்க கூடாது ........
என்னவோ இமய மலையை தூக்கிகிட்டு நிக்கிற மாதிரி சீன்னு போட்ற உமரண்ணன், ஏதோ கொஞ்சம் பிரீயா இருப்பதாகவும், மறுப்பு கட்டுரை தர போறதாகவும் பாவ்லா காட்டியிருந்தார்.இப்போ நீங்க அடிச்சா ஆப்புலே ஒரு மூணு நாலு மாசம் தலையை காட்ட மாட்டார் பாருங்க.
கிடைக்கிற எலும்புக்காக வாளாட்டுறே உமரன்னனும் என்னதான் செய்வார் பாவம்.
Mist
அஸ்ஸலாமு அழைக்கும் வா ரஹ்மதுல்லாஹி வா பராகத்துஹு, திரு முஹம்மது அவர்களே, எல்லாம் வல்ல இறைவன் கிருபையால், நாங்கள் இருவர் திரு உமர் அவர்கள், மற்றும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவருடைய தோழர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யும் பொய் பிரச்சாரங்களுக்கு இந்த இணையதளம் மூலம் பதில் அளித்து கொண்டு இருக்கிறோம். கூடிய விரைவில் ஏனைய இணையதளங்களுக்கும் பதில் அளிக்க முயற்சிப்போம், எல்லாம் வல்ல இறைவன் நாடினால்.
- ஜியா
சகோதரர் மிஸ்ட் அவர்களே,
நீங்கள் ஏன் உங்கள் கருத்துகளையும் பதில்களையும் கட்டுரையாக எழுதகூடாது? உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்
எனது email முகவரி rameez.1900௦@gmail.com
ரமீஸ்
Post a Comment