Wednesday, April 6, 2011

ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 3, தன் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்த பைபிளின் ஏசு...



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் பாகம் 3, தன் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்த பைபிளின் ஏசு...


அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும், பைபிளின் ஏசு அவர்கள் அன்பை போதிப்பவர் என்ற மாயயை பரப்ப முயல்வது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அவர்களது கூற்றுகளின் அடிப்படையில், பைபிளில் திரு ஏசு அவர்கள் அகிம்சை முறையை நடைமுறை படுத்தவில்லை என்பதை மைய கருத்தாக கொண்டு, எல்லாம் வல்ல இறைவானின் கிருபையை நாடியவர்களாக, இந்த தலைப்பில் நாம் கட்டுரைகள் வரைய துவங்கியுள்ளோம். இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக, பாகம் 3 இப்பொழுது வெளியிடுகிறோம்.


திரு உமர் அவர்களே, பைபிளின் ஏசு அவர்கள் அஹிம்சையை போதித்தார்கள் என்று உங்கள் கட்டுரைகளில் நீங்கள் அறிவிக்க விரும்புகிறீர்கள், ஆனால் இதற்கு முற்றிலும் எதிரான வரலாற்றை பைபிள் அறிவிக்கிறது. பைபிளில் திரு ஏசு அவர்கள் தன் சீடர்களிடம் தன் ஆடைகளை விற்றாவது போர்வாள் கொள்முதல் செய்ய பரிந்துரைத்த வசனம் இதோ:

Luke 22:35 and he-said to-them when I-commission You minus of-purse and of-bag(beggar’s) and of-sandals no of-any ye-want the yet they-said of-not-yet-one 22:36 he-said them to-them but now the one-having purse let-him-lift like-as and bag(beggar’s) and the-one no having let-him-sell the cloak of-him and let-him-buy sword 22:37 i-am-saying her to-you that still this the having-been-written is-binding to-be-being-finished in me the-one and with un-laweds is-accounted and for the about me finish is-having



திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தின் அடிப்படையில் உங்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்:

1

திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக அறிவிக்க விரும்பும் திரு ஏசு அவர்கள், அஹிம்சையை போதித்தார்கள் என்ற உங்கள் கூற்றை ஏற்போம்மேயானால், பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தில், திரு ஏசு அவர்கள், எதற்காக தன் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்தார் என்பதை, பைபிளின் தெளிவான வசன ஆதாரம் கொண்டு எங்களுக்கு தெரிவிக்க முடியுமா?


2

திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக அறிவிக்க விரும்பும் திரு ஏசு அவர்கள், அன்பே உருவானவர் என்ற உங்கள் கூற்றில் கடுகளவும் உண்மை இருக்குமேயானால், அவர் தன்னை தர்காத்துக் கொள்ள போர்வாள் கொள்முதல் செய்ய அவசியம் என்ன?


போர்வாளின் உதவி இல்லாமல் தன்னை தர்காத்துக் கொள்ள வல்லமை அற்ற இறைவனா உங்கள் இறைவன்?


3

திரு உமர் அவர்களே, நீங்கள் இறைவனாக அறிவிக்க விரும்பும் திரு ஏசு அவர்கள், தன்னை தற்காத்துக் கொள்ள போர்வாள் கொள்முதல் செய்ய வில்லை என்று நீங்கள் அறிவிக்க விரும்பினால், தங்கள் ஆடையை விற்று போர்வாள் கொள்முதல் செய்த தன் சீடர்களை ஏசு பணிக்க என்ன அவசியம் நேரிட்டது?


4

திரு உமர் அவர்களே, திரு ஏசு அவர்கள் போர்வாள் கொள்முதல் செய்ய பண்ணிக்கவில்லை, இது பிழையான மொழிபெயர்ப்பு என்று ஏனைய கிறிஸ்தவர்கள் வாதத்தை நீங்களும் முன் வைக்க விரும்பினால், திரு ஏசு அவர்கள் போர்வாள் கொள்முதல் செய்தார்கள் என்றும், அதை கொண்டே திரு பீட்டர் அவர்கள் ஏசு அவர்களை கைது செய்வதற்காக வந்த அடிமையின் காதுகளை வெட்டினார் என்று பைபிள் அறிவிக்கும் வசனம்:

Luke 22:49 When those who were around him saw what was about to happen, they said, “Lord, should we use our swords?” 22:50 Then one of them struck the high priest’s slave, cutting off his right ear.



திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட பைபிள் வசனத்தில் அறிவிக்கபடும் நபர் திரு பீட்டர் அவர்கள் அல்ல என்று வாதத்தை நீங்கள் முன் வைக்க விரும்பினால், இவ்வாறு போர்வாள் உதவி கொண்டு ஏசுவை கைது செய்வதற்காக வந்த அடிமையின் காதுகளை வேட்டியது, திரு பீட்டர் அவர்கள் தான் என்று அறிவிக்கும் பைபிள் வசனம்:

John 18:10 Then Simon Peter, who had a sword, pulled it out and struck the high priest’s slave, cutting off his right ear. (Now the slave’s name was Malchus.) 18:11 But Jesus said to Peter, “Put your sword back into its sheath! Am I not to drink the cup that the Father has given me?”



திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட நிகழ்வுக்கு பிறகும், திரு ஏசு அவர்கள், திரு பீட்டர் அவர்களின் போர்வாளை தூக்கி எறிய பரிந்துரைக்கவில்லை. இதற்கு மாறாக மேலே கோடிட்ட வசனத்தில் போர்வாளை அதற்கு உரிய உரையுனுள் வைத்துக்கொள்ளும் படி பணிக்கிறார். இது அஹிம்சையை போதிக்கும் முறையா?


5

திரு உமர் அவர்களே, Luke 22:36 வசனத்தில் வரும் போர்வாள் என்பது உண்மையான போர்வாள்களை குறிக்கவில்லை, மாறாக அது பிரிவினையை குறிக்கிறது, என்று ஏனைய கிறிஸ்தவ அறிஞர்களின் வாதத்தை நீங்கள் முன் வைக்க விரும்பினால், இரண்டே போர்வாள் இருக்கிறது என்று ஏசுவின் சீடர்கள் விடை அளித்ததையும், அது போதுமானது என்று திரு ஏசு பதில் அளித்ததையும், நீங்கள் இன்னும் ஒரு முறை படிக்குமாறு நாங்கள் வேண்டி கேட்டு கொள்கிறோம்.


அது உண்மையான போர்வாள் அல்ல என்றால் எதற்காக திரு ஏசு அவர்களின் சீடர்கள் இரண்டே உள்ளது என்று அறிவித்தார்கள்?


அண்டங்களை எல்லாம் அறிந்த இறைவன் என்று திரு ஏசு அவர்களை புகழ விரும்பும் நீங்கள், தன் சீடர்கள் வைத்து இருக்கும் போர்வாள் பற்றி திரு ஏசு அவர்களுக்கு ஞானம் இல்லை என்ற வாதத்தை அறிவிக்க போகிறீர்களா?


6

திரு உமர் அவர்களே, பைபிளின் திரு ஏசு அவர்கள் வன்முறையை விரும்பவில்லை என்ற உங்கள் கூற்றில் கடுகளவேனும் உண்மை இருக்குமேயானால், போர்வாள் ஏந்தி நிற்கும் தன் சீடர்களிடம் இதற்கு முன்னரே அவர் இதை தெளிவாக அறிவித்து இருக்க வேண்டாமா?


திரு ஏசு அவர்கள், தன் என்னத்தை முன்னமே தெளிவாக அறிவித்து இருந்தால், இந்த நிகழ்வை தவிர்த்து இருக்கலாம் அல்லவா? திரு ஏசு அவர்களின் என்னத்தை அவரது சீடர்கள் முன்னமே அறிந்து இருந்தால் அதை தாண்டி நடக்க முயன்று இருப்பார்களா? இதன் அடிப்படையில் திரு பீட்டர் அவர்கள் திரு ஏசு அவர்களின் பரிந்துரையை ஏற்காமல் வன்முறையில் இறங்கினார் என்று அறிவிக்க விரும்புகிறீர்களா?


திரு பீட்டர் அவர்கள், இவ்வாறு வன்முறையில் இறங்குவார் என்பது உங்கள் இறைவன் அறியாததா?


திரு ஏசு அவர்கள் இந்த நிகழ்வை முன்னரே தடுக்க முயன்று இருக்க வேண்டாமா?


7

திரு உமர் அவர்களே, திரு ஏசு அவர்கள் போர்வாள் கொள்முதல் செய்ய தன் சீடர்களை பணித்தார். அது அவரை பற்றிய பழைய ஏற்பாட்டின் முன் அறிவிப்பை மெய் படுத்துவதற்காக கொள்முதல் செய்யப்பட்டது என்ற பிற கிறிஸ்தவ அறிஞ்சர்களின் வாதத்தை நீங்களும் முன் வைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் முன் அறிவிப்பு என்பது திட்டமிட்டு பின்னப்படும் வளை போன்றதா? அது எல்லாம் வல்ல இறைவனின் விருப்பதிற்கேர்ப்ப நடைபெறும் நிகழ்வு கிடையாதா?


இதற்கு முன்னரே பைபிளில் முன் அறிவிப்பு செய்யப்பட்ட, வர விருக்கும் தீர்க்கதரிசியின் முன் அறிவிப்புகள், தன் செயல்களுடன் ஒத்து இருக்க வேண்டும் என்பதற்காக, முன்னரே திட்டமிட்டு, திரு ஏசு அவர்கள் தன் செயல்களை அமைத்து கொண்டார் என்று நீங்கள் அறிவிக்க விரும்புகிறீர்களா?


இது ஏமாற்று வேலை இல்லையா?


கண் கட்டி விதைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று எங்களுக்கு அறிவிக்க முடியுமா?




திரு உமர் அவர்களே, வன்முறையை போதித்து, தன் சீடர்களின் உடமைகளை விற்று போர்வால் கொள்முதல் செய்ய பணித்த திரு ஏசு அவர்களையா அன்பே உருவானவர், அஹிம்சையை போதித்தவர் என்று அழைக்க விரும்புகிறீர்கள்?


திரு உமர் அவர்களே, வன்முறையை போதித்து, தன் சீடர்களின் உடமைகளை விற்று போர்வால் கொள்முதல் செய்ய பணித்த திரு ஏசு அவர்கள், அஹிம்சையை போதிக்க வில்லை என்பதை இந்த கட்டுரை மூலம் உங்களுக்கு நாங்கள் தெளிவாக்கி இருப்போம் என்று நம்புகிறோம்.


திரு உமர் அவர்களே, திரு ஏசு அவர்கள் தன்னுடைய முப்பத்திமுன்று வயதில், வெறும் பன்னிரெண்டு சீடர்கள் கொண்டிருந்த நிலையில், அந்த பன்னிரெண்டு சீடர்களும் திரு ஏசு அவர்களின் கொள்கைகளை சரிவர கடைபிடிக்காத நிலையில், எல்லாம் வல்ல இறைவன் திரு ஏசு அவர்களுக்கு உலகின் எந்த சாம்ராஜியத்தையும் ஆளும் வல்லமையை தந்திராதா நிலையில், திரு ஏசு அவர்கள் தம் சீடர்களை போர்வாள் கொள்முதல் செய்ய பணித்ததை நாம் இந்த கட்டுரையில் காண நேறிற்று. இதன் அடிப்படையில், திரு ஏசு அவர்கள் இன்னும் சிறிது காலம் பூவுலகில் வாழ்ந்து இருந்தால், எல்லாம் வல்ல இறைவன் திரு ஏசு அவர்களின் ஆள்மையின் கீழ் சாம்ராஜியங்களை தந்து இருந்தால், திரு ஏசு அவர்கள் பைபிளின் ஏனைய தீர்க்கதரிசிகள் செய்தது போல் யுத்தங்கள் செய்து ஒன்றும் அறியா பாமரமக்களை கொன்று குவித்து இருப்பார், என்பது நமக்கு இந்த கட்டுரை மூலம் தெளிவாகிறது. இது திரு ஈஸா (அலை) அவர்களை பற்றி பைபிள் அறிவிக்கும் பொய்யான வரலாறு அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்???


திரு உமர் அவர்களே, நாங்கள் விடுத்துள்ள இந்த கட்டுரைக்கேனும் உங்கள் சொந்த கூற்றை விளக்கமாக தராமல் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்..


அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்

No comments: