Thursday, March 17, 2011

அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 7, திரு உமர் அவர்களின் “ஆங்கிலத்தில் "I AM" (OR) "I" என்றால் தமிழில் எப்படி "இருக்கிறேன்" என்று பொருள் வரும்?” என்ற கட்டுரைக்கு மறுப்பு:



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 7, திரு உமர் அவர்களின் ஆங்கிலத்தில் "I AM" (OR) "I" என்றால் தமிழில் எப்படி "இருக்கிறேன்" என்று பொருள் வரும்? என்ற கட்டுரைக்கு மறுப்பு:

அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்கள் “ஆங்கிலத்தில் "I AM" (OR) "I" என்றால் தமிழில் எப்படி "இருக்கிறேன்" என்று பொருள் வரும்?” என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரை வரைந்துள்ளார். அந்த கட்டுரையில் குர்ஆன் மொழியாக்கத்தை உதாரணம் காட்டி அவர் முன்னர் அறிவித்த கிறிஸ்தவ கடவுளின் தனிப்பட்ட பெயர் “இருக்கிறேன்” என்பதை தெளிவாக்க விரும்பியுள்ளார். அந்த கட்டுரையில் திரு உமர் அவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளார்: “ஜாவித் அவர்களே... சையத் அலி அவர்களே...."இருக்கிறேன்" எங்கே "இருக்கிறது" என்று உங்களுக்கு இப்போது தெரிந்து "இருக்கிறதா"?

திரு உமர் அவர்களிடம் நாம் கேட்கவிரும்பும் கேள்விகள்:
  1. திரு உமர் அவர்களே, “இருக்கிறேன்” என்பது எப்படி இறைவன் பெயராகும் என்ற கேள்விக்கு, சிறிதும் பொருந்தாத குர்ஆன் வசனங்களை ஆதாரம் காட்டும் நீங்கள், அந்த குர்ஆன் வசனங்களில் வரும் “இருக்கிறேன்” என்பது, இறைவனின் தனிப்பட்ட பெயர் என்று இந்த வசனங்கள் அறிவிக்கின்றனவா? என்பதை தெளிவாக்க வேண்டும்.
  2. திரு உமர் அவர்களே, “இருக்கிறவன்” என்பது கிறிஸ்தவ இறைவனின் தனிப்பட்ட பெயர் என்பதை நிரூபிக்க, பைபிள் வசனங்களை பிரசுரிக்காமல் குர்ஆன் வசனங்களை நாடியது என்?
  3. “I AM” என்ற பைபிள் வார்த்தைகளுக்கு “இருக்கிறேன்” என்று விளக்கம் எந்த அகராதியில் இருக்கிறது என்ற கேள்விக்கு, குர்ஆனை ஆதாரம் காட்டுகிறீர்கள். அப்படி என்றால் குர்ஆன் பைபிளின் அகராதி என்று ஏற்று கொண்டீர்களா? பைபிளின் தெளிவில்லாத முரணான வசனங்களை குர்ஆனை கொண்டே விளங்க வேண்டும் என்பதை ஏற்று கொண்டிர்களா?
  4. திரு உமர் அவர்களே, உங்களிடம் அறியாமல் கேள்விகளை கேட்பவர்களிடமே, மீண்டும் விளக்கம் தர வேண்டும் என்று எதிர் கேள்வி கணைகளை தொடுகிறீர்கள், அப்படி என்றால் உங்கள் அகராதியில் விளக்கம் என்பது கேள்வி கணைகள் மட்டுமே அன்றி வேறு இல்லையா?
  5. கிறிஸ்தவ இறைவனின் தனிப்பட்ட பெயர் “இருக்கிறேன்” என்பதை தெளிவாக்க, குர்ஆன் வசனங்களை முன் வைக்கும் திரு உமர் அவர்கள், இதன் மூலம் என்ன அறிவிக்க விரும்புகிறார் என்பதை தெளிவாக்க வேண்டும். திரு உமர் அவர்கள் எடுத்து வைத்த ஆதாரத்தின் அடிப்படையில், இஸ்லாமிய இறைவன் “அல்லாஹ்” தான் கிறிஸ்தவ இறைவன் “இருக்கிறேன்” என்று அவர் ஏற்று கொண்டாரா? என்பதை தெளிவாக்க வேண்டும்.
  6. திரு உமர் அவர்களே, “இருக்கிறேன்” என்பது கிறிஸ்தவ இறைவனின் தனிப்பட்ட பெயர் என்று அறிவிக்கிறீர், அது எங்கிருந்து வந்தது என்பதை இவ்வாறு அறிவிக்கிறீர்: “ஜாவித் அவர்களே... சையத் அலி அவர்களே...."இருக்கிறேன்" எங்கே "இருக்கிறது" என்று உங்களுக்கு இப்போது தெரிந்து "இருக்கிறதா"?”. இதற்க்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களை முன் வைக்கிறீர், அப்படியானால் “இருக்கிறேன்” என்பது குர்ஆன் வசனங்களில் இருந்து வந்த கிறிஸ்தவ இறைவனின் தனிப்பட்ட பெயரா? அப்படி என்றால் குர்ஆன் இறைவன் “அல்லாஹ்” தான் உங்கள் இறைவன் “இருக்கிறேன்” என்பதை ஏற்று கொண்டிர்களா?


திரு உமர் அவர்கள் நம்முடைய இந்த கேள்விகளுக்கு தெளிவான ஆதாரத்தோடு விரைவில் கட்டுரை வரைவார் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்

No comments: