பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு ... அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும், பைபிளின் ஏசு அன்பை போதிப்பவர் என்றும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சையை போதிக்கவில்லை என்றும், பொய் பிரசாரம் செய்து கொண்டு இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சை வழியை போதிக்கவில்லை என்ற அவர்களின் பொய் கூற்றை நிரூபிக்க, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் கால தாமதம் செய்யும் இவ்வேளையில், அவர்களது கூற்றுகளின் அடிப்படையில், பைபிளில் திரு ஏசு அவர்கள் அஹிம்சை முறையை நடைமுறை படுத்தவில்லை என்பதை மைய கருத்தாக கொண்டு, எல்லாம் வல்ல இறைவானின் கிருபையை நாடியவர்களாக, இந்த தலைப்பில் நாம் கட்டுரைகள் வரைய துவங்கியுள்ளோம். இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக, பாகம் – 2 இப்பொழுது வெளியிடுகிறோம். திரு உமர் அவர்களே, உலகில் உள்ள எல்லா கனி வகைகளும் பெறும் பாலும், அதன் காய் காய்க்கும் தவணை மற்றும் பருவ நிலைக்கு ஒப்பவே மாறுபடும். ஒரு மரம் அதற்கு உரிய தவணை மற்றும் பருவ நிலை அடையும் பொழுதே காய் காய்கிறது. இந்த தவணையை விடுத்து ஏனைய பருவ காலங்களில் அவை காய் காய்ப்பது இல்லை என்பது மானிடர்கள் அனைவரும் அறிந்த உண்மை. இதற்கு மாறாக நீங்கள் இறைவனாக வணங்கும் திரு ஏசு அவர்கள், ஒரு அத்தி பழ மரம், அதன் பருவ நிலைக்கு ஏற்பவே காய்க்கும் என்பதை அறியாமல், அத்தி பழம் காய்க்கும் பருவ காலம் அல்லாத காலத்தில், தன் பசிக்கும் புசிக்க அத்தி மரத்தில் பழம் காய்க்காத காரணத்தினால், அதை சபித்து அழித்ததாக பைபிள் அறிவிக்கும் தெளிவான பைபிள் வசனம்: Matthew 21:18 Now early in the morning, as he returned to the city, he was hungry. 21:19 After noticing a fig tree by the road he went to it, but found nothing on it except leaves. He said to it, “Never again will there be fruit from you!” And the fig tree withered at once திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தின் அடிப்படையில் உங்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்:
திரு உமர் அவர்களே, இன்றைய உலக சூழ்நிலையில் மர வளர்ப்பின் அத்தியாவசியத்தை நீங்கள் நன்கு அறிந்திர்பீர்கள் என்று நம்புகிறோம். இப்படி மனிதனே மரங்களின் அத்தியாவசியத்தை உணர்த்து மரவளர்ப்பு திட்டங்களை வகுக்கும் நிலையில், நீங்கள் இறைவனாக வணங்கும் திரு ஏசு அவர்கள், தொலை தூற நோக்கத்தோடு மர வளர்ப்பை போற்றி அல்லவா இருக்க வேண்டும்? இதற்க்கு மாறாக அவரே இவ்வாறு மரங்களை அழிக்க முனைந்தது ஏன்? திரு உமர் அவர்களே, தக்க காரணம் அன்றி, இது போன்று பொது உடமைகளை, மரங்களை அழிப்பவர்களை குர்ஆன் வன்மையாக கண்டிக்கிறது (அல் குர்ஆன் 2:204-206), இவர்களை பசாது செய்பவர்கள் என்று அழைக்கிறது. இன்னும் அதிக படியாக அன்னல் நபி திரு முஹம்மத் (ஸல்) அவர்கள், மர வளர்ப்பை போற்றியுள்ளார்கள், இன்னும் அதிகபடியாக, மர வளர்ப்பு என்பது முடிவில்லாத தான தர்மம் செய்வதற்கு இணையான கூலியை பெற்று தரும் என்று பரிந்துரைத்து உள்ளார்கள்.
திரு உமர் அவர்களே, மரம் வளர்ப்பது அத்தியாவசிய தேவையாகிய இன்றைய சூழ்நிலையில், செழித்து வளர்ந்த மரத்தை தன் சொந்த விருப்பதிற்காக சாபமிட்டு அழித்த பைபிளின் திரு ஏசுவை காட்டிலும், மரவளர்பை ஒரு புண்ணியமாக போதித்து அதன் மூலம் மக்களை உலகிற்கு நன்மை செய்ய தூண்டிய திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், மேன்மையானவர் என்பது இந்த கட்டுரை மூலம் தெளிவாகி இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் விடுத்துள்ள இந்த கட்டுரைக்கேனும் உங்கள் சொந்த கூற்றை விளக்கமாக தராமல் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.. அஸ்ஸலாமு அழைக்கும் -ஜியா & அப்சர் |
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)
Tuesday, April 5, 2011
ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 2, அத்தி பழ மரத்தின் மீது கோபம் கொண்ட ஏசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment