Saturday, April 2, 2011

“இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற கட்டுரைக்கு மறுப்பு



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



திரு உமர் அவர்களின் இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற கட்டுரைக்கு மறுப்பு:


அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்கள் இடையரை (முஹம்மதுவை)ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார், அந்த கட்டுரையில் திரு உமர் அவர்கள் வெளியிட்டு இருந்த புஹாரி ஹதீஸ் ஆதாரம்:

5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல்(என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்.

Volume :6 Book :68



திரு உமர் அவர்கள், இதற்கு முன்னர் ஒரு கட்டுரையில், தான் எவ்வாறு கட்டுரை வரைவதாக விவரித்து இருந்தார். அந்த கட்டுரையில், திரு உமர் அவர்கள்: "ஒரு கருத்தை விவரிப்பதற்கு முன் அந்த கருத்தை ஒன்றிய அணைத்து விவரங்களையும் அறிந்த பிறகே அந்த விளக்கத்தை வெளியிடுவதாக மாறு தட்டி கொண்டார்". ஆனால் இதற்கு மாறாக இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற இந்த கட்டுரையை வெளியிடுவதற்கு முன்னர், இந்த கருத்துக்கு ஒன்றிய வேறு எந்த ஆதாரத்தையும் திரு உமர் அவர்கள் ஆராய்ந்து இந்த கட்டுரையை வரைந்ததற்கான எந்த சுவடையும் திரு உமர் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இன்னும் அதிகபடியாக, புஹாரி தொகிர்ப்பில் இந்த ஹதீஸை எடுத்த திரு உமர் அவர்கள், இதற்கு முந்திய மற்றும் பிந்தைய ஹதீஸ்களை எதற்காக படிக்க மறுத்தார் என்பது நமக்கு வியப்பாக உள்ளது. அப்படி அவர் அந்த ஹதீஸ்களை படித்து இருப்பாராயின் எதற்காக அதை வெளியிடாமல் மறைத்தார் என்பது திரு உமர் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் 5255 , திரு உமர் அவர்கள் வெளியிட மறுத்த ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 :

5254. அப்துர் ரஹ்மான் பின் அல்அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஹம்மத் பின் முஹ்லிம் அஸ்ஸுஹ் (ரஹ்) அவர்களிடம் (நபி (ஸல்)அவர்களிடம்) நான் தங்களிடமிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்என்று அவர்களுடைய துணைவியால் யார் கூறியது எனக் கேட்டேன். அதற்கு ஸுஹ் (ரஹ்)அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துரைத்தபடி உவா (ரஹ) அவர்கள் அறிவித்த (பின் வரும்) ஹதீஸைக் கூறினார்கள்: அவ்ஜவ்ன் குலத்துப் பெண் ஒருவரை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப் பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நெருங்கினார்கள். அப்போது அவர் உங்களிடத்திலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன் என்று கூறினார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகத்துவமிக்க (இறை)வனிடம் நீ பாதுகாப்புக் கோரிவிட்டாய்! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றுவிடு! என்று கூறிவிட்டார்கள்.

Volume :6 Book :68

5256. & 5257. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள் :

நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Volume :6 Book :68



திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் ஆதாரத்திலும், இன்னும் மேலே கோடிட்ட ஹதீஸ்களிலும், அல்ஜவ்ன் குலத்துப் பெண்ணான உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்பவருடன், முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு, இதற்கு முன்னரே முறையே திருமணம் ஒப்பந்தம் முடிந்து இருந்தது என்பதை தெளிவாக அறிவிக்கிறது. இதை கைப்பிடி சோற்றில் பூசணியை மறைக்கும் முயற்சியாக, திரு உமர் அவர்கள் தனக்கே உரிய வார்த்தை ஜாலத்தை முன் வைத்து மறைக்க முயன்றுள்ளார். இந்த தருணத்தில் திரு உமர் அவர்களிடம் நாம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.

  1. திரு உமர் அவர்களே, மேலே நாங்கள் கோடிட்ட ஹதீஸ்களை எதற்காக நீங்கள் வெளியிடாமல் மறைதீர்கள்?
  2. திரு உமர் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும், அல்ஜவ்ன் குலத்துப் பெண் உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்ற பெண்ணுக்கும், முறையே திருமணம் ஒப்பந்தம் முடிந்து இருந்ததை எதற்காக நீங்கள் மறைக்க முயன்றீர்கள்?
  3. திரு உமர் அவர்களே, முறையே திருமணம் ஒப்பந்தம் முடிந்த பெண்ணை, கணவன் அழைப்பது உங்கள் அகராதியில் கற்பளிப்பா? முறையே திருமணம் முடிக்காமல் பெண்களுடன் வீடு கூட பணிக்கும் பைபிளை (Genesis 30:9-10,Numbers 31:17-18) புகழ முன் வரும் நீங்கள், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தன்னுடன் முறையே திருமண ஒப்பந்தம் செய்த பெண்ணை அணுகினால் தவறு என்று கூர முன் வருகிறீர்களே? இஸ்லாமில் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமண ஒப்பந்தம் முறையே முடிந்தால், அவர்கள் கணவன் மனைவி ஆவார்கள் என்பது இஸ்லாமிய அறிஞராக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் உங்களுக்கு தெரியாதா?
  4. திரு உமர் அவர்களே, உங்கள் கூற்று படி, அந்த பெண்ணை கற்பழிக்க பலவந்தமாக அழைத்து வரப்பட்டு இருந்தால், எதற்காக அவரை வளர்த்த செவிலித் தாயும் அவருடன் அழைத்து வரப்பட்டார்? கற்பழிப்புக்கு அவர் உறவினரையே சாட்சியாக அழைத்து வருவது அந்த காலத்து நடைமுறையா? இதை போன்றே பைபிள் கற்பழிப்புக்கு சாட்சியாக உறவினர்களை அழைத்து வந்த வசன ஆதாரங்கள் உள்ளனவா?
  5. திரு உமர் அவர்களே, உங்கள் கூற்று படி, அந்த பெண்ணை கற்பழிக்க பலவந்தமாக அழைத்து வரப்பட்டு இருந்தால், பலவந்தமாக அழைத்து வரப்பட்ட பெண்ணிடம் கற்பழிக்க யாராவது அனுமதி பெறுவார்களா? உங்கள் ஆதாரத்தில், திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், அந்த பெண்ணிடம் தனக்கு அன்பளிப்பு செய் என்று அனுமதி கேட்பதாக அறிவித்து இருக்கிறீர்? இது நடைமுறையில் சாத்தியமா? இதை போன்ற பைபிள் கற்பழிப்புக்கு முன்னர் அனுமதி பெற்ற வசனங்களை ஆதாரம் தருவீர்களா?
  6. திரு உமர் அவர்களே, அல்ஜவ்ன் குலத்துப் பெண் உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்ற பெண், 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கூறியதாக அறிவிக்கிறீர், அந்த பெண் ஒரு அரசியா? அந்த பெண் எந்த நாட்டின் அரசி என்று கொஞ்சம் விளக்க ஆதாரங்கள் தாருங்களேன்.
  7. திரு உமர் அவர்களே, அல்ஜவ்ன் குலத்துப் உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்ற பெண், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இடையர் என்று அழைத்ததாக ஆதாரம் தருகிறீர். திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இடையர் குளத்தை சேந்தவாரா? அவர்கள் மக்கா வாழ் உயர்ந்த அரச குலமான குறைஷி குளத்தை சேந்தவர் என்பது உங்களுக்கு தெரியாதா? இன்னும் அந்நாளில் மதீனா மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள ராஜ்யங்களை ஆளும் மன்னர் என்பது உங்களுக்கு தெரியாதா? இப்படி இருக்க எதற்காக அந்த பெண் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இடையர் என்று விவரிக்க வேண்டும்? இதற்கு காரணம் அந்த பெண் திட்டமிட்டு முஹம்மத் நபி (ஸல்)அவர்களை திருமணம் முடித்து இழிவு செய்ய நாடி இருப்பார் என்று தானே அர்த்தம்? இதன் விளைவாக தான் அவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் திருமண ஒப்பந்தம் செய்து பிறகு, அவர் அழைப்புக்கு இழிவு செய்யும் வகையில், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இடையர் என்று அழைத்ததாக நீங்கள் வெளியிட்ட ஆதாரம் அறிவிக்கிறது.
  8. திரு உமர் அவர்களே, உங்கள் கூற்றுப் படி, கற்பழிக்க பலவந்தமாக அழைத்து வரப்பட்ட பெண்ணை, முறையே திரும்பி அனுப்ப பணிக்கும் பொழுது, அவருக்கு அன்பளிப்பு அளித்து முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அனுப்ப பணித்ததை நீங்கள் உங்கள் ஆதாரம் முலமே விவரித்துள்ளீர்கள். இது எப்படி முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு சாத்தியம் ஆயிற்று? தன்னை இழிவு செய்த பெண்ணுக்கு அன்பளிப்பு அளிக்க நடைமுறையில் எவருக்கும் மனம் வருமா? ஆனால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும் அந்த உயர்ந்த குணம் இருந்தது என்று நீங்களே சாட்சி கூருகிறீர்கள். இப்படி எதிரிகள் வாயிலே அவருடைய மேன்மையை இறைவன் பரவ செய்வது ஒன்றே உங்களுக்கு போதவில்லையா? இறைவன் உங்களுடன் இல்லை என்பதை உணர. திரு உமர் அவர்களே, கற்பழிப்புக்கு பிறகு அந்த பெண் மீது விருப்பம் இல்லாமல் போனால் விரட்டி அடிக்க சொல்லும் (Deuteronomy 21:10 – 14) பைபிளை போற்ற முன் வரும் நீங்கள், தன்னை திருமணம் முடித்து இழிவு செய்த பெண்ணை அன்பளிப்பு அளித்து அனுப்ப பனித்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு செய்ய முயற்சிக்கிறீர்களே?
  9. திரு உமர் அவர்களே, உங்கள் கூற்று படி, அந்த பெண்ணை கற்பழிக்க பலவந்தமாக அழைத்து வரப்பட்டு இருந்தால், தன்னை இடையர் என்று இழிவு செய்த பெண்ணை ஒரு மன்னர் எவ்வாறு திரும்பி செல்ல அனுமதிப்பார்? உங்கள் கூற்று படி, தன் விருபதிற்காக பலவந்தமாக அழைத்து வரவழைக்கபட்ட பெண்ணை, மீண்டும் அனுப்ப முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு மனம் வந்தது? இது ஒன்றே போதவில்லையா, திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மேன்மை பற்றி உங்களை அறியாமலே நீங்கள் அளித்த நற் சான்றிதழ் இது என்பதை உணர. தன்னிடம் உதவி நாடி வந்த பெண்ணை நாய் என்று உதாரணம் காட்டிய (Mark 7:27-29) உங்கள் ஏசுவை காட்டிலும் தன்னை இழிவு செய்த பெண்ணை உபசரித்து அனுப்பிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மேன்மையானவர் என்று நீங்களே அளித்த நற் சான்றிதழ் தானே இந்த கட்டுரை?



திரு உமர் அவர்களே, இதற்கு முன்னரே உங்களிடம், எங்கள் எழுத்து விவாத அழைப்பை ஏற்று, கையெப்பம் இட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டு விட்டு, கட்டுரை வரைய துவங்குமாறு நாங்கள் பல முறை அறிவித்து விட்டோம். இவ்வாறு செய்ய துணிவில்லாத நீங்கள் இனி கனவிலும் இஸ்லாமியர்களை எழுத்து விவாததிருக்கு அழைக்க மாட்டீர்கள் என்று நங்கள் நம்புகிறோம். இனியேனும் கட்டுரை வரைய முனைவதற்கு முன்னர் அந்த கருத்துக்கு ஒன்றிய அணைத்து ஆதரங்களையும் ஆராய்ந்து அறிந்த பிறகு கட்டுரை வரைய துவங்குமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்.


அஸ்ஸலாமு அழைக்கும்,


-ஜியா & அப்சர்


--

--

No comments: