பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்
திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும்
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
திரு உமர் அவர்களின், “கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல் (பாகம் - 3)” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு:
55:13 فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:13. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
|
5:12 وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيبًا ۖ وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ ۖ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ وَآمَنتُم بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللَّهَ قَرْضًا حَسَنًا لَّأُكَفِّرَنَّ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ فَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ
5:12. நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின்
சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை
அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள்
தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும்
புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால்
நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே
ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே
இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை)
நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.”
5:13 فَبِمَا
نَقْضِهِم مِّيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً ۖ يُحَرِّفُونَ الْكَلِمَ عَن مَّوَاضِعِهِ ۙ وَنَسُوا حَظًّا مِّمَّا ذُكِّرُوا بِهِ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَائِنَةٍ
مِّنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
5:13. அப்பால், அவர்கள் தம்
உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை
அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு
வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில்
சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல்
கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை
மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ்
நேசிக்கிறான்.
5:14 وَمِنَ
الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَىٰ أَخَذْنَا مِيثَاقَهُمْ فَنَسُوا حَظًّا
مِّمَّا ذُكِّرُوا بِهِ فَأَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ
إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ ۚ وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللَّهُ بِمَا كَانُوا
يَصْنَعُونَ
5:14. அன்றியும் எவர்கள் தங்களை, “நிச்சயமாக நாங்கள்
கிறிஸ்தவர்கள்” என்று கூறிக்கொள்கிறார்களோ
அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால்
அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து
விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே
பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி
அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.
5:15 يَا
أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا
كُنتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَن كَثِيرٍ ۚ قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ
مُّبِينٌ
5:15. வேதமுடையவர்களே!
மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக்
கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது
தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும்,
தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
5:16 يَهْدِي
بِهِ اللَّهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهُ سُبُلَ السَّلَامِ وَيُخْرِجُهُم مِّنَ
الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَىٰ صِرَاطٍ
مُّسْتَقِيمٍ
5:16. அல்லாஹ் இதைக் கொண்டு அவனது
திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில்
செலுத்துகிறான்; இன்னும் அவர்களை
இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின்
பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில்
செலுத்துகிறான்.
5:17 لَّقَدْ
كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ۚ قُلْ فَمَن يَمْلِكُ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ
أَرَادَ أَن يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَن فِي الْأَرْضِ
جَمِيعًا ۗوَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَمَا بَيْنَهُمَا ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ
شَيْءٍ قَدِيرٌ
5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா)
தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர்
நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர்
மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ்
அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர்
சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர்
கேளும்; வானங்களிலும், பூமியிலும்,
அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி
அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்;
இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக
இருக்கின்றான்.
5:18
وَقَالَتِ الْيَهُودُ وَالنَّصَارَىٰ نَحْنُ أَبْنَاءُ اللَّهِ
وَأَحِبَّاؤُهُ ۚ قُلْ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُم ۖ بَلْ أَنتُم بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ۚ يَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۚ وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَمَا بَيْنَهُمَا ۖ وَإِلَيْهِ الْمَصِيرُ
5:18. யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்; அவனுடைய
நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள்
பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன்
படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!)
நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத்
தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும்,
அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி
அவனுக்கே உரியது; மேலும், அவன்
பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
5:19 يَا
أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ عَلَىٰ فَتْرَةٍ
مِّنَ الرُّسُلِ أَن تَقُولُوا مَا جَاءَنَا مِن بَشِيرٍ وَلَا نَذِيرٍ ۖ فَقَدْ جَاءَكُم بَشِيرٌ وَنَذِيرٌ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
5:19. வேதமுடையவர்களே! நிச்சயமாக
(ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங்
கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும்
எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும்
பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்)
தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே
நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும்
உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும்
அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
|
வாசகர்களே, திரு உமர் அவர்கள் “கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும்
அப்ரஹாமின் உரையாடல் (பாகம் - 3)” என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். இந்த கட்டுரைக்கு, எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையை நாடியவர்களாக பதில் அளிக்க முனைகிறோம்.
திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில், எல்லாம் வல்ல ஏக இறைவன், “முந்தைய வேதத்தை பெற்றவர்கள், அதனை இடைசொருகல் செய்தார்கள், இன்னும் இறை வசனங்களை அதனுக்கு உரிய இடங்களில் இருந்து மாற்றி அமைத்தார்கள், இன்னும் தங்கள் கைகளால் இயற்றி அதனை இறைவன் அருளினான் என்று பொய்யுரைகிறார்கள்” என்பது போன்று திரு குர்ஆன்னில் அறிவிப்பதற்க்கு விளக்கம் அளிக்க எண்ணி, ஒரு உவமை கட்டு கதையை கோடிட்டு, அதனை இறைவனின் செயலுக்கு ஒப்பாக்க முயன்று, இதன் மூலம் இறைவன் வல்லமை அற்றவன் அல்லது அவனே இந்த செயலை அனுமதிதான் என்பது போன்ற கருத்தினை வெளியிட்டு இருந்தார்கள் (இதனை போன்று பல கட்டுரைகளை / கருத்துகளை நாம் இணையதளங்களில் காணலாம்). திரு உமர் அவர்களின், இந்த கட்டுரை இன்னும் அவருடைய பேர் அறிவை அவருடைய இணையதளத்தில் பல கிறிஸ்தவ நண்பர்கள் பாராட்டி இருந்தார்கள். நல்ல காலம் "பாட்டி நிலவுல வடை சுட்டுகிட்டு இருந்தாங்க, காகா வடைய திருடிட்டு போச்சு, ஒன்னு அந்த காகா பாட்டிய விட வல்லதாக இருக்கனும், இல்லை பாட்டியே இந்த வடை திருட்டை அனுமதித்து இருக்கனும், இதில வந்த பாட்டி ஆண்டவன், காகா கிறிஸ்தவ மற்றும் யூதர்கள், இன்னும் வடை முந்தைய வேதங்கள்" என்று விந்தையான உவமை கதையை சொல்லாமல் போனாரு, சொல்லி இருந்தா, அவருடைய இணையதள கிறிஸ்தவ வாசகர்கள், ஆளுக்கு ஒரு வடையை கவ்விகிட்டு ஓடி இருப்பாபங்க போலும்.
இதோ திரு உமர் அவர்கள் வெளியிட்ட கட்டுகதையின் சாராம்சம்:
திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில், எல்லாம் வல்ல ஏக இறைவன், “முந்தைய வேதத்தை பெற்றவர்கள், அதனை இடைசொருகல் செய்தார்கள், இன்னும் இறை வசனங்களை அதனுக்கு உரிய இடங்களில் இருந்து மாற்றி அமைத்தார்கள், இன்னும் தங்கள் கைகளால் இயற்றி அதனை இறைவன் அருளினான் என்று பொய்யுரைகிறார்கள்” என்பது போன்று திரு குர்ஆன்னில் அறிவிப்பதற்க்கு விளக்கம் அளிக்க எண்ணி, ஒரு உவமை கட்டு கதையை கோடிட்டு, அதனை இறைவனின் செயலுக்கு ஒப்பாக்க முயன்று, இதன் மூலம் இறைவன் வல்லமை அற்றவன் அல்லது அவனே இந்த செயலை அனுமதிதான் என்பது போன்ற கருத்தினை வெளியிட்டு இருந்தார்கள் (இதனை போன்று பல கட்டுரைகளை / கருத்துகளை நாம் இணையதளங்களில் காணலாம்). திரு உமர் அவர்களின், இந்த கட்டுரை இன்னும் அவருடைய பேர் அறிவை அவருடைய இணையதளத்தில் பல கிறிஸ்தவ நண்பர்கள் பாராட்டி இருந்தார்கள். நல்ல காலம் "பாட்டி நிலவுல வடை சுட்டுகிட்டு இருந்தாங்க, காகா வடைய திருடிட்டு போச்சு, ஒன்னு அந்த காகா பாட்டிய விட வல்லதாக இருக்கனும், இல்லை பாட்டியே இந்த வடை திருட்டை அனுமதித்து இருக்கனும், இதில வந்த பாட்டி ஆண்டவன், காகா கிறிஸ்தவ மற்றும் யூதர்கள், இன்னும் வடை முந்தைய வேதங்கள்" என்று விந்தையான உவமை கதையை சொல்லாமல் போனாரு, சொல்லி இருந்தா, அவருடைய இணையதள கிறிஸ்தவ வாசகர்கள், ஆளுக்கு ஒரு வடையை கவ்விகிட்டு ஓடி இருப்பாபங்க போலும்.
இதோ திரு உமர் அவர்கள் வெளியிட்ட கட்டுகதையின் சாராம்சம்:
ஒரு ஊரிலே ஒரு
இராஜா இருந்தான், அவன் மிகவும் அறிவாளி, அவனைப்போல உலகத்தில் வேறு யாரும் அவ்வளவு
அறிவாளி கிடையாது. அவருக்கு பல இலட்ச போர் வீரர்கள் இருக்கிறார்கள். அவன் தன்
கோட்டையைச் சுற்றி தண்ணீர் விட்டு, முதலைகளை அதில் விட்டுவைப்பான், யார்
வந்தாலும் சரி, முதலைகள் திண்றுவிடும். அந்த
கோட்டைக்குள்ளே போகனும் என்றால், ஒரே வாசல் தான், அந்த வாசலின்
முன்பும், பின்பும் பல
நூறு காவலாளிகள் 24 மணி நேரமும்
காவல் காப்பார்கள். அந்த
இராஜாவிற்கு உள்ள ஒரு வினோத சக்தி என்னவென்றால், தன்னை யார் எதிர்க்க வந்தாலும், அதை அவர் தன்
சக்தியால் கண்டுபிடித்துவிடுவார். தன்னுடைய கோட்டைக்குள் எந்த ஒரு மனிதன்
வரவேண்டுமானாலும், பல
பரிசோதனைகள் செய்துவிட்டுத் தான் வரவேண்டும். மட்டுமல்ல, இராஜாவை எதிர்க்க, அல்லது கொல்லவதற்காக ஒரு வேளை யாராவது
நல்லவர்கள் போல நடித்து உள்ளே வரமுடியாது, ஏனென்றால், மனதில் உள்ளதை அறியும் சக்தியும் அவருக்கு
உள்ளது. அதாவது, எப்படி இறைவனுக்கு முன்பாக எதுவும் மறைக்கமுடியாதோ, இறைவனை தோற்கடிக்க முடியாதோ அது போல, இந்த
இராஜாவும்.
இந்த இராஜா ஒரு
புத்தகத்தை எழுதினார், அதில் தன் சட்டங்களை எழுதிக்கொண்டு இருக்கிறார்.
மற்றும் அந்த சட்டப்புத்தகம், தன் அரண்மனையிலேயே தன்னிடமே வைத்துக்கொண்டு
இருக்கிறார். மட்டுமல்ல, அந்த புத்தகத்தில்
உள்ள விவரங்களை, மக்களுக்குச்
சொல்லி,
இவர்
பெருமைப்பட்டுக்கொண்டு இருப்பார், மக்களும் இவரின் ஞானத்தை மெச்சிக்கொள்வார்கள்.
இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த புத்தகத்தை இந்த இராஜா தவிர மற்ற யார் தொட்டாலும், உடனே, அம்மனிதர், கல்லாக
மாறிவிடுவார். இராஜாவின்
அனுமதி இல்லாமல், யாரும்
கோட்டைக்குள் வரமுடியாது, மற்றும் அப்புத்தகத்தை தொடவும் முடியாது. இராஜா அனுமதி
கொடுத்தால், அப்புத்தகத்தை
தொடலாம், படிக்கலாம். இப்படி
இருக்கும்போது, அந்த ஊரிலே
இருக்கும், ஒரு ஏழை விவசாயிக்கு இந்த இராஜா மீது பொறாமை
வந்தது. எப்படியாவது, அந்த கோட்டைக்குள் நிழைந்து, அவர் எழுதிய புத்தகத்தை கிழித்துவிட்டு
வரவேண்டும் என்று இவரது ஆசை. இதற்காக, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கிறான். கண்டிப்பாக, இந்த விஷயம் இராஜாவிற்கு தெரியும், ஏனென்றால், இப்படிப்பட்ட
வினோத சக்தி அந்த இராஜாவிற்கு இருக்கிறதே. திடீரென்று ஒரு நாள், அந்த இராஜா ஒரு அறிக்கையிட்டார், அது
என்னவென்றால், தன்னிடம் உள்ள புத்தகத்தை யாரோ ஒரு மனிதர்
கிழித்துவிட்டு சென்று விட்டதாக சொன்னார். என்னை
பொருத்தவரையில் இதற்கு வாய்ப்பு உள்ளது. இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.
அதாவது, இராஜாவிற்கு நான் சொன்ன தகுதிகள், சக்திகள்
இருப்பது உண்மையானால், அந்த இராஜா, தன் புத்தகத்தை யாரோ கிழித்துவிட்டார்கள், என்றுச்
சொன்னதும் உண்மையானால், இந்த இரண்டு வாய்ப்புக்கள் தவிர வேறு எந்த செயலாலும், இக்காரியத்தை
செய்யமுடியாது?
இதை போன்று திரு குர்ஆனில் அல்லாஹ்வும் அறிவிப்பதனால் :
|
திரு உமர் அவர்களே, பைபிள்ளில் திரு இயேசு அவர்கள் அறிவித்த உவமை கதைகளை போல, நிங்களும் இஸ்லாமியர்கள் கேள்விகளுக்கு, தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு விளக்கம் அளிக்காமல், கட்டுகதைகளை அறிவித்து வாசகர்களை குழப்பும் முயற்சியில் இறங்கியுள்ளீர்கள் என்று தோன்றுகிறது.
திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில்,
முந்தைய
வேதங்களை மாற்றி அமைக்க இறைவனே அனுமதிதான், அல்லது அதனை மாற்றி அமைத்தவர்கள்
இறைவனை காட்டிலும் வல்லவர்கள் என்று மேல்புரமாக அறிவிக்க முயன்றாலும், மறைமுகமாக
இறைவன் அருளிய முத்தைய வேதங்களை, உங்கள் கிறிஸ்தவ மற்றும் யூதர்கள் மாற்றி
அமைத்தார்கள் என்பதனை ஒப்பு கொண்டுள்ளீர்கள் தானே!!
சரி, உங்கள் கதையில் கோடிட்ட
மன்னரின் சராசரி மனித செயல்பாடுகளை, எல்லாம் வல்ல ஏக இறைவனின் செயல்பாடுக்கு
ஒப்பாக்குவது, சிறிதும் தகுதியானது இல்லை என்பது எங்களுடைய கருத்து.
உதாரணமாக:
- உங்கள் கதையில் கோடிட்ட மன்னன், அந்த ஏழை விவசாயியை படைத்தவன் இல்லை. ஆனால் எல்லாம் வல்ல ஏக இறைவன் மனிதர்கள் மட்டுமல்ல, அனைத்தையும் படைத்தது பரீபாலிப்பவன்.
- “இறைவன் மனிதனை படைத்தது, நன்மை தீமைகளை தெளிவாக அவனுக்கு அறிவித்து, அதற்க்கு பின்னர் அவர் அவர் விருப்பத்திற்கு தேர்வு செய்ய அனுமதித்து, இன்னும் அவர் அவர் செயல்பாட்டிற்கு ஏற்ப சிலருக்கு அவன் விருப்பத்தின் பெயரில் உடனே தண்டனை வழங்க பெற்று, இன்னும் சிலருக்கு அவன் விருப்பத்தின் பெயரில், பாவ மன்னிப்பு வேண்ட, ஒரு சில காலம் தவணை வழங்க பெற்று, பின்னர் அனைவருக்கும் இறுதி நாளில் “ஒன்று சேர்ந்த தீர்ப்பு அளிக்க போவதாக” அறிவித்தது போன்று இல்லாமல், உங்கள் கதையில் வரும் மன்னரின் செயல்பாடு, அவருடைய விருப்பதையே அனைவரும் செய்ய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றது.
- உங்கள் கதையில் கோடிட்ட மன்னன், தான் இயற்றிய சட்டதிட்டங்களை பாதுகாக எடுத்த முயற்சியை போன்று, தன் முந்தைய வேதங்களை பாதுகாக எந்த முயற்சியையும் செய்ததாக பைபிள் மற்றும் திரு குர்ஆன் எதிலும் இறைவன் அறிவித்ததாக நம்மால் அறிய முடிய வில்லை. மாறாக பைபிள், “தான் மாற்றங்கள் இல்லாமல் இருப்பதாக” தனக்கு தானே சாட்சி கூறுவதாக நம்மால் அறிய முடியவில்லை. இன்னும், இறைவன் அறிவித்த முந்தைய வேதங்கள் என கிறிஸ்தவர்கள் கோடிடும் வேதங்கள், இறைவன் தெளிவாக அறிவிக்கும் முந்தைய வேதங்களின் பெயரை கொண்டு இல்லை. இன்னும் அவைகளை முகவரி அற்ற நபர்களே இயற்றி இருக்கிறார்கள்.
- “தன்னுடைய முந்தைய வேதங்கள் முழுமை பெற்றவை” என்பது போன்று பைபிள் மற்றும் திரு குர்ஆனில் இறைவன் தன் வாயிலாக தெளிவாக அறிவித்ததையும் நம்மால் அறிய முடியவில்லை.
ஆக, உங்கள் சராசரி மனித மன்னர்களின்
உதாரணம், “எல்லாம் வல்ல ஏக இறைவனின் செயல்பாடிற்க்கு சிறிதும் ஒப்பாகாது” என்பது
தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.
“Before I
formed you in the womb I knew you, and before you were born I
consecrated you; I appointed you a prophet to the nations.” (Jeremiah 1:5)
|
I make known the end from the beginning, from ancient times, what is
still to come. I say: My purpose will stand, and I will do all that I please. (Isaiah 46:10)
|
திரு உமர் அவர்களே, உங்கள் பைபிள்
நம்பிக்கை அடிப்படையிலே “உங்கள் இறைவனுக்கு, நடந்தவை, நடப்பவை இன்னும் நடக்க
இருப்பவை அனைத்தும் அறிந்தது” என்பது உங்கள் நம்பிக்கை தானே? உங்கள் இறைவன் அனுமதி
இல்லாமல் அணுவும் அசையாது என்பதனை நீங்கள் நம்புவோர் தானே? உங்களை போல் நாங்கள் வாசகர்களுக்கு
சுயமாக கதை சொல்லி குழப்ப விரும்பவில்லை. பைபிள்ளில் இருந்து ஒரு உதாரணம்
தருகிறோம். பார்க்க:
The LORD God commanded
the man. He said, "You are free to eat from any tree in the
garden. But you must never eat from the tree of the
knowledge of good and evil because when you eat from it, you will certainly
die."
(Genesis 2:16 – 17)
|
மேலே கோடிட்ட பைபிள் வசனத்தில், இறைவன் ஆதாம் அவர்களை தெளிவாக எச்சரிப்பதை
கண்டு இருப்பீர்கள். கிழே வரும் பைபிள் வசனத்தில் இறைவனின் எச்சரிக்கைக்கு
கிழபடியாமல், படைத்த இறைவனின் விருப்பதீர்க்கு முற்றிலும் எதிராக, திரு ஆதாம் தன்
மனைவியிடம் இருந்து, அந்த விளக்கப்பட்ட மரத்தின் கனிகளை புசித்த விவரங்களை அறிந்து
கொள்ளுங்கள்.
The woman saw that the
tree had fruit that was good to eat, nice to look at, and desirable for
making someone wise. So she took some of the fruit and ate it. She
also gave some to her husband, who was with her, and he ate it. (Genesis 3:6)
|
ஆக, நீங்கள் முன்னர் அறிவித்த கருத்தின்
அடிப்படையில், இந்த பைபிள் நிகழ்வில், விளக்கப்பட்ட மரத்தின் கனிகளை, திரு ஆதாம்
புசிக்காமல் தடுக்க மறுத்த உங்கள் இறைவன் வல்லமை அற்ற வஞ்சககாரன் தானே???
திரு ஆதாம் அவர்கள் இறைவனை காட்டிலும் வல்லவர் தானே?
மனிதர்கள் அனைவரும் இந்த பாவதினை சுமக்கிறார்கள் என்று நம்பும் கிறிஸ்தவர் தானே நீங்கள்?
இதனை இறைவன் நினைத்து இருந்தால் ஆதியிலே தடுத்து இருக்கலாம் தானே?
திரு ஆதாம் அவர்கள் இறைவனை காட்டிலும் வல்லவர் தானே?
மனிதர்கள் அனைவரும் இந்த பாவதினை சுமக்கிறார்கள் என்று நம்பும் கிறிஸ்தவர் தானே நீங்கள்?
இதனை இறைவன் நினைத்து இருந்தால் ஆதியிலே தடுத்து இருக்கலாம் தானே?
இதனை போன்று, இறைவன் விருப்பத்திர்க்கு எதிரான எண்ணிகையில் அடங்கா நிகளுவ்களை பைபிள்ளில் நீங்கள் காணலாம், உங்கள் நம்பிக்கை அடிப்படையில் அவன் முற்றும் அறிந்தவன் தானே?
ஏன் அவன் இதனை முன்னமே
அறியவில்லை?
அல்லது, ஏன்
அவன் இதனை தடுக்க முயலவில்லை?
அல்லது, அவனால் இதனை தடுக்க இயலவில்லையா?
அல்லது, அவனால் இதனை தடுக்க இயலவில்லையா?
இவற்றை
அனுமதித்த உங்கள் ஆண்டவன், நீங்கள் முன்னர் அறிவித்த கருத்தின் அடிப்படையில், அநீதிக்காரர், அநியாயக்காரர்,
அவரிடம் நீதி நியாயம் இல்லை என்று தானே அர்த்தம்???
அப்படியல்ல, இந்த பைபிள் வசனம், இன்னும்
இதனை போன்ற எண்ணிகையில் அடங்கா பைபிள் வசனங்கள் மூலம் தெளிவாகும் கருத்து:
“இறைவன் மனிதனை படைத்தது, நன்மை தீமைகளை தெளிவாக
அவனுக்கு அறிவித்து, அதற்க்கு பின்னர் அவர் அவர் விருப்பத்திற்கு தேர்வு செய்ய
அனுமதித்து, இன்னும் அவர் அவர் செயல்பாட்டிற்கு ஏற்ப சிலருக்கு அவன் விருப்பத்தின்
பெயரில் உடனே தண்டனை வழங்க பெற்று, இன்னும் சிலருக்கு அவன் விருப்பத்தின் பெயரில்,
பாவ மன்னிப்பு வேண்ட, ஒரு சில காலம் தவணை வழங்க பெற்று, பின்னர் அனைவருக்கும் இறுதி
நாளில் ஒன்று சேர்ந்த தீர்ப்பு அளிக்க போகிறான்” என்பது.
இதை போன்றே, எல்லாம் வல்ல ஏக இறைவன், தன்னுடைய
முந்தைய வேதங்களை முழுமை பெற்ற வேதங்களாக தன் வாயிலாக அறிவித்ததாக நம்மால் அறிய முடியவில்லை.
இறைவன், தன்னுடைய முந்தைய வேதங்களை,
தக்க காலத்திற்க்கு ஏற்ப, சிறிது சிறிதாக தெளிவாக மனிதர்களுக்கு அறிவித்ததை நம்மால்
காண முடிகிறது. ஆனால், அவை முழுமை அடைந்த வேதங்களாக நமக்கு தோன்ற வில்லை. உதாரணமாக,
ஒரு முத்தைய இறைவேதம்
முழுமை அடைந்தவிட்ட நிலையில், பின்னாளில் இன்னும் ஒரு இறைத்தூதர் வர வேண்டிய அவசியம்
என்ன?
பின்னாளில் வர
விருக்கும் இறைதூதர்களை, இறைவன் முன் அறிவிப்பு செய்ய அவசியம் என்ன?
பின்னாளில் வந்த
இறைதூதர்கள், இன்னும் அதிகபடியான சட்டதிட்டங்களை அறிவிக்க என்ன அவசியம்?
33:40 مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில்
எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
|
இன்னும், பைபிள் வாயிலாகவே உதாரணம் அறிவிக்க
வேண்டும் என்றால், இறைவன் ஆதியில் பிறந்த திரு ஆதாமுக்கு “விருத்தசேதனம்”
கட்டளையை விடுத்ததாக பைபிள் அறிவிக்கவில்லை. ஒரு சமயம், அப்படி இந்த சட்டத்தை
இறைவன் அவருக்கு விடுத்து இருந்தால் அதனை திறனே நிறைவேற்ற தக்க சூழ்நிலை அவருக்கு இல்லாமல்
இருந்து இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்க்கு தக்க வசதி பெற்ற
நிலையிலே, அந்த சட்டத்தை பின்னாளில் திரு ஆபிரகாம் அவர்களுக்கு இறைவன் வழங்கியதாக
பைபிள் அறிவிக்கிறது. இதை போன்றே திரு ஆபிரகாம் அவர்களுக்கு அளிக்காத
கட்டுப்பாட்டையும், தெளிவான சட்டதிட்டங்களையும், பின்னாளில் திரு மோசேஸ்
அவர்களுக்கு இறைவன் வழங்கியதாக பைபிள் நமக்கு அறிவிக்கிறது.
ஆக, திரு ஆபிரகாம் அவர்களுக்கு இறைவன் வழங்கிய வேத சட்டதிட்டங்களை அதற்க்கு
முன்னரே, திரு ஆதம் அவர்களுக்கு இறைவன் வழங்கி இருந்தால், ஒரு சமயம் அந்த
காலகட்டத்தில், அதனை ஏற்று சரிவர பேனா திரு ஆதாம் அவர்கள் இயலாதவர் ஆகி இருப்பார். இது போன்ற மனிதர்களுக்கு இயலாத சிரமத்தை, கருணையே உருவான ஏக இறைவன் மனிதர்களுக்கு விதிப்பது இல்லை.
2:286 لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது
தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின்
நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே!
(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா!
நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க
முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப்
பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக!
நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது
(நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
|
There hath no temptation taken you but such as man can
bear: but God is faithful, who will not suffer you to be tempted above that
ye are able; but
will with the temptation make also the way of escape, that ye may be able to
endure it. (1 Corinthians 10:13)
|
எனவே,
முழுமையடையா திரு ஆதமின் வேதத்தை பாதுகாக அவசியம் இல்லாமல் போகிறது. ஏன்னெனில், பின்னாளில்
திரு ஆபிரகாம் அவர்களுக்கு, அவருடைய காலத்திற்கு ஏற்ப இன்னும் தெளிவான
சட்டதிட்டங்கள் வர விருக்கிறது.
இதை போன்று, திரு மோசேஸ் அவர்களுடைய காலத்தில்,
முழுமையடையா திரு ஆபிரகாமின் வேதத்தை பாதுகாக வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
ஏன்னெனில், பின்னாளில் திரு மோசேஸ் அவர்களுக்கு, அதிகபடியான தெளிவான இறைவனின்
கட்டளைகள் வர விருக்கிறது.
இந்த
கட்டளைகளும், பின்னாளில் மனிதர்களால் இடைசொருகள் செய்யப்படும் என்பதனை எண்ணி, திரு
மோசேஸ் அவர்கள் முன்னமே எச்சரித்த பைபிள் வசனங்களையும், நாங்கள் இதற்க்கு முன்னர்
பல முறை வெளியிட்டு இருக்கிறோம்.
ஆக, இந்த முழுமை அடையா முந்தையா வேதங்களை, பின்னர் தெளிவான வேதங்கள் வர
இருப்பதினால் எல்லாம் வல்ல ஏக இறைவன் பாதுகாக வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
இருப்பினும், இவற்றினை திருத்தி இடைசொருகல் செய்தது, இன்னும் பல தெளிவான வேத
வசனங்களை அதனுக்குரிய இடத்தில இருந்து அகற்றி மறைத்து, அற்ப மனிதர்களின் வேலை என்று
பைபிள் மற்றும் திரு குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது.
How can you say, "We [the Jews] are
wise, for we have the law of the LORD," when actually the
lying pen of the scribes has handled it falsely?' (From the NIV Bible, Jeremiah 8:8)
|
2:78. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக்
கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை.
மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
2:79 فَوَيْلٌ
لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ
عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا ۖ فَوَيْلٌ لَّهُم مِّمَّا
كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ
2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம்
கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது
என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு
எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும்
அவர்களுக்குக் கேடுதான்!
|
5:41 يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ مِنَ الَّذِينَ قَالُوا آمَنَّا بِأَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِن قُلُوبُهُمْ ۛ وَمِنَ الَّذِينَ هَادُوا ۛ سَمَّاعُونَ لِلْكَذِبِ سَمَّاعُونَ لِقَوْمٍ آخَرِينَ لَمْ يَأْتُوكَ ۖ يُحَرِّفُونَ الْكَلِمَ مِن بَعْدِ مَوَاضِعِهِ ۖ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَٰذَا فَخُذُوهُ وَإِن لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوا ۚ وَمَن يُرِدِ اللَّهُ فِتْنَتَهُ فَلَن تَمْلِكَ لَهُ مِنَ اللَّهِ شَيْئًا ۚ أُولَٰئِكَ الَّذِينَ لَمْ يُرِدِ اللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمْ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ ۖ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
5:41. தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறி
அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக்
குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம்
விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள
வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர்; உம்மிடம்
(இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும்
கேட்கின்றனர்; மேலும் அவர்கள் (வேத) வசனங்களை
அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி “இன்ன சட்டம்
உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளங்கள்; அதை
உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள்; மேலும் அல்லாஹ்
எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து
(எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர்; இத்தகையோருடைய
இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு
இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
|
4:46 مِّنَ الَّذِينَ هَادُوا يُحَرِّفُونَ الْكَلِمَ عَن مَّوَاضِعِهِ وَيَقُولُونَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَرَاعِنَا لَيًّا بِأَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِي الدِّينِ ۚ وَلَوْ أَنَّهُمْ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَاسْمَعْ وَانظُرْنَا لَكَانَ خَيْرًا لَّهُمْ وَأَقْوَمَ وَلَٰكِن لَّعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا
4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின்
(கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை
நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை)
நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!”
என்று கூறி, “ராயினா” என்று
தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம்
செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;”
(இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை
அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க
நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின்
(நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ்
அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
|
5:13. அப்பால், அவர்கள்
தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை
அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு
வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர
அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே
இருப்பீர்; எனவே நீர் அவர்களை
மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ்
நேசிக்கிறான்.
|
3:78 وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُم بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ
3:78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார்
இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து
ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று
நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக; ஆனால் அது வேதத்தில்
உள்ளதல்ல; “அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது
அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும் அறிந்து
கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.
|
ஆக, இந்த முழுமை அடையா முந்தைய வேதங்களை, பின்னர் தெளிவான வேதங்கள் வர
இருப்பதினால், எல்லாம் வல்ல ஏக இறைவன் பாதுகாக வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது
என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இன்னும், வேத வசனங்கள் அந்த அந்த காலத்திற்கு
ஏற்ப, இறைவனிடம் இருந்து சிறிது சிறிதாக நிறைவு பெற்றது என்பதும் தெளிவாகி
இருக்கும் என்று நம்புகிறோம். முன்னமே இதனையே, திரு இயேசு அவர்களும், தன் வாயிலாக
அறிவித்ததாக நம்பப்படும் பைபிள் வசனங்களில் அறிவித்ததாக பைபிள் அறிவிக்கிறது.
உதாரணமாக, இன்னும் பல சட்டதிட்ட திருத்தங்கள் வர இருப்பதாகவும், ஆனால் அதனை ஏற்கும்
சூழ்நிலை அவருடைய காலத்தில் இல்லை என்பதனை அவரே அறிவித்ததாக பைபிள் அறிவிப்பதனை பாருங்கள்:.
“I still have
many things to say to you, but you cannot bear them now. When the
Spirit of truth comes, he will guide you into all the truth, for he will not
speak on his own authority, but whatever he hears he will speak, and he will
declare to you the things that are to come. He will glorify me, for he will
take what is mine and declare it to you. (John
16:12 - 14)
|
இவ்வாறு முழுமை அடையா முந்தைய வேதங்களுக்கு, சிறிதும் திரு குர்ஆன் ஒப்பகாது. ஏன்னெனில், உலக இறுதி நாள் வரை ஏற்க வல்ல, இறுதியான இறைவனின் சட்டதிட்டங்களை கொண்டு அது முழுமை அடைந்த காரணத்தினால், எல்லாம் வல்ல ஏக இறைவனின் பாதுகாப்பிற்க்கு அது தகுதியானதாகிறது. இன்னும் அது முழுமையான வேதம், இன்னும் அதனை தானே பாதுகாப்பதாக இறைவனே தெளிவாக வாக்களித்து இருக்கிறான்.
5:3 حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
5:3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
|
15:9 إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்)
இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக
நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
|
இதை
உறுதிபடுத்தும் வகையில், இறைவேதம் என்ற பெயரில், அன்றாடம் சராசரி மனிதர்களால்
பிழைதிருத்தம் செய்ய பெரும் பைபிள் நூலை போல் இல்லாமல், திரு குர்ஆன் வழங்க பெற்ற
உச்சரிப்பு, மற்றும் மூல கருத்தின் புனிதம் சிறிதும் குறையாமல், இன்றளவும்
அதிகப்படியான இஸ்லாமியர்கள் மத்தியில், முழுமையாக மனதில் மனனம் செய்து கொள்ள
வல்லதாக பாதுகாக பெற்று திகழ்ந்து வருகிறது.
வாசகர்களே, இந்த
கட்டுரை வாயிலாக கிழ வருபவை தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்:
- இறைவன் மனிதனை படைத்தது, நன்மை தீமைகளை தெளிவாக அவனுக்கு அறிவித்து, அதற்க்கு பின்னர் அவர் அவர் விருப்பத்திற்கு தேர்வு செய்ய அனுமதித்து, இன்னும் அவர் அவர் செயல்பாட்டிற்கு ஏற்ப சிலருக்கு அவன் விருப்பத்தின் பெயரில் உடனே தண்டனை வழங்க பெற்று, இன்னும் சிலருக்கு அவன் விருப்பத்தின் பெயரில், பாவ மன்னிப்பு வேண்ட, ஒரு சில காலம் தவணை வழங்க பெற்று, பின்னர் அனைவருக்கும் இறுதி நாளில் ஒன்று சேர்ந்த தீர்ப்பு அளிக்கிறான்.
- இறைவன் அறிவிக்கும் முந்தைய வேதங்கள் அந்த அந்த காலங்களுக்கு ஏற்ப வழங்க பெற்றது, அவை முழுமை அடையா வேதங்கள் என்று திரு குர்ஆன் மற்றும் பைபிள் பரிந்துரைக்கிறது.
- அவை முழுமை அடையா முந்தைய வேதங்கள் என்னும் பட்சத்தில், அதனை பாதுகாக வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. இருப்பினும் அதனை இடைசொருகள் செய்து, அதன் மூல கருத்தினை மாற்றியது மனிதர்கள் தாம் என்று பைபிள் மற்றும் திரு குர்ஆன் அறிவிக்கிறது.
- திரு குர்ஆன் முழுமை அடைந்த இறுதி வேதம் என்பதனால் இறைவன் அதனை பாதுகாபாதாக அறிவிக்கிறான்.
வாசகர்களே, இதற்க்கு முன்னர் பல
முறை தெளிவான எழுத்து விவாத அழைப்பை, நாம் திரு உமர் அவர்களுக்கு விடுத்து
இருந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இன்னும், ஒவ்வொரு கட்டுரையிலும், “தெளிவான
பைபிள் வசன ஆதாரம் கொண்டு மறுப்பு இயற்றும் மாறு” திரு உமர் அவர்களுக்கு தெளிவாக அழைப்பு
விடுத்ததும் நீங்கள் அறிந்ததே. ஆனால், தங்களுடன் இறைவன் இருக்கிறான் என்று நம்பும்
திரு உமர் அவர்கள், இன்றைய தினம் வரை எந்த தெளிவான பைபிள் வசனமும் கொண்டும் நம் முந்தைய
கட்டுரைகளுக்கு விளக்கம் அளித்ததாக நம்மால் அறிய முடியவில்லை. இனியும், அவருடைய
இறைவன் அவருடன் இருக்கிறான் என்று நம்பிக்கையை அவர் தொடர்வதாக இருந்தால், தெளிவான கையெழுத்து
விவாத ஒப்பந்தத்தை வெளியிட்டு பின்னர், தெளிவான பைபிள் வசனம் கொண்டு மறுப்பு எழுத
முயலட்டும். இவ்வாறு செய்ய இயலாமல் போகும் பட்சத்தில், எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் “தன்னை
நேர் வழி படுத்த” பிராத்தனை செய்து கொள்ளட்டும். இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல ஏக
இறைவன் அவருக்கு நேர் வழி வழங்குவான், ஆமீன்.
அஸ்ஸலாமு அழைக்கும்,
-ஜியா & அப்சர்
--
--
No comments:
Post a Comment