Friday, January 27, 2012

“திரு உமர் அவர்களுக்கு இன்னும் ஒரு சவால், திரு இயேசு அவர்கள் தன் கையாள இயற்றியது, இன்னும் இறைவன் திரு இயேசு அவர்களுக்கு அறிவித்தது எங்கே?”


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



திரு உமர் அவர்களுக்கு இன்னும் ஒரு சவால், திரு இயேசு அவர்கள் தன் கையாள இயற்றியது, இன்னும் இறைவன் திரு இயேசு அவர்களுக்கு அறிவித்தது எங்கே?”


வாசகர்களே, சமீபமாக நமது நண்பர் திரு உமர் அவர்கள் Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு 3” என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அந்த கட்டுரையில் திரு பீஜே அவர்கள் தன் புத்தகத்தில் அறிவித்த கருத்தை இவ்வாறு வெளியிட்டு இருந்தார்.

பீஜே அவர்கள் எழுதியது:

பைபிள் ஓர் அறிமுகம்

[...]

சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும் புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம். இயேசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், இயேசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் இயேசு எழுதியதையும் இயேசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். (பக்கம் 5)


வாசகர்களே, திரு உமர் அவர்கள், தன்னுடைய கட்டுரையில், திரு ஈஸா (அலை) அவர்கள் அறிவித்ததாக இறைவன் திரு குர்ஆனில் அறிவிக்கும் வசனங்களை கோடிட்டு விட்டு, இவை திரு இயேசு அவர்கள் அறிவித்தவை அல்ல, கிட்டத்தட்ட 15 வசனங்களில் இயேசு பேசியதாக குர்‍ஆனில் வருகிறது. அதுவும் இந்த வார்த்தைகள் இயேசு கூறியது அல்ல, இயேசுவின் பெயரில் குர்‍ஆன் ஆக்கியோன் புனைந்த‌ கற்பனை வார்த்தைகளாகும். என்று அறிவித்து இருந்தார். திரு உமர் அவர்கள் கோடிட்ட திரு குர்ஆன் வசனங்கள் இதோ:     



3:49   وَرَسُولًا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ ۖ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ ۖ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَىٰ بِإِذْنِ اللَّهِ ۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).

3:50   وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِأُحِلَّ لَكُم بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ ۚ وَجِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
3:50. எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.

3:51   إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ ۗ هَٰذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ
3:51நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.

3:52   فَلَمَّا أَحَسَّ عِيسَىٰ مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ ۖ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ
3:52அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்எனக் கூறினர்.


5:72   لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ۖ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ ۖ إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
5:72நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.



5:112   إِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ ۖ قَالَ اتَّقُوا اللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
5:112மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்என்று கூறினார்.

5:113   قَالُوا نُرِيدُ أَن نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَن قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ الشَّاهِدِينَ
5:113அதற்கவர்கள், “நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்என்று கூறினார்கள்.

5:114   قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ
5:114மர்யமுடைய மகன் ஈஸா, அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய் என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.



19:30   قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا
19:30நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

19:31   وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا
19:31இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

19:32   وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا
19:32என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

19:33   وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا
19:33இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்என்று (அக்குழந்தை) கூறியது.



43:63   وَلَمَّا جَاءَ عِيسَىٰ بِالْبَيِّنَاتِ قَالَ قَدْ جِئْتُكُم بِالْحِكْمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعْضَ الَّذِي تَخْتَلِفُونَ فِيهِ ۖ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
43:63இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள் என்று கூறினார்.

43:64   إِنَّ اللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ ۚ هَٰذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ
43:64நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).



61:6   وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُم مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ ۖ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَٰذَا سِحْرٌ مُّبِينٌ
61:6மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் அஹமதுஎன்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் இது தெளிவான சூனியமாகும்என்று கூறினார்கள்.



61:14   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا أَنصَارَ اللَّهِ كَمَا قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ ۖ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ ۖ فَآمَنَت طَّائِفَةٌ مِّن بَنِي إِسْرَائِيلَ وَكَفَرَت طَّائِفَةٌ ۖ فَأَيَّدْنَا الَّذِينَ آمَنُوا عَلَىٰ عَدُوِّهِمْ فَأَصْبَحُوا ظَاهِرِينَ
61:14ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.



திரு உமர் அவர்கள், மேலே கோடிடபட்ட திரு குர்ஆன் வசனங்கள், முன்னாளில் திரு ஈஸா (அலை) அவர்கள் போதித்தவைகளை, பின் நாளில் எல்லாம் வல்ல ஏக இறைவன், திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கிறான். எல்லா நிகளுவுகளையும் இறைவன் அறிவான் என்பதனை நம்பும் கிறிஸ்தவர் தானே நீங்கள்? அவன் அறியாமல் திரை மறைவில் நம்மால் எதனையும் செய்ய இயலாது என்பதனை நம்பிக்கை கொண்டுள்ளா கிறிஸ்தவர்களே தானே நீங்கள்? எல்லாம் வல்ல ஏக இறைவன் தானே சாட்சியாக நின்று, முன்னர் நடந்த நிகழ்வுகளை, திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னாளில் திரு குர்ஆனில் தெளிவாக அறிவிக்கிறான். அது மட்டும் இல்லாமல், இதனை போன்ற முன்னர் நடந்தேறிய நிகழ்வுகள், அவை நடந்தேறிய தருணத்தில், திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அங்கு சாட்சியாக இருக்க வில்லை என்றும், எல்லாம் வல்ல ஏக இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்.

பார்க்க:


3:44   ذَٰلِكَ مِنْ أَنبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۚ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ
3:44(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.



திரு உமர் அவர்கள், முன்னர் நடந்த நிகழ்வுகளை, எல்லாம் வல்ல ஏக இறைவன், தாமே முன் நின்று சாட்சி அளித்தால் அது கற்பனை என்று அறிவிக்க விரும்பும் நீங்கள், முன்னர் நடந்த நிகழ்வை, கண்ணால் காணாத, முகவரி இல்லா ஆசிரியர்கள், தாங்கள் கண்ணால் கண்டது போல் அறிவித்தால் அதனை கண்ணை முடிக்கொண்டு ஏற்க முன் வருகிறீர்களே? இது எப்படி சாத்தியம் ஆயிற்று?

உதாரணமாக, மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷம் முகவரி அற்ற நபர்களால் இயற்ற பெற்றது என்பதனை, இதற்க்கு முன்னரே தெளிவான ஆதாரம் கொண்டு விவரித்து இருந்தோம்.

பார்க்க:



திரு இயேசு, அவர்கள் தன்னுடைய போதனைகளை துவங்கிய வேளையில் அவருக்கு முப்பது வயதாகி இருந்தது என்று விவரத்தை லூக்கா சுவிசேஷம் அறிவிக்கிறது.

பார்க்க:

Jesus, when he began his ministry, was about thirty years of age, being the son (as was supposed) of Joseph, the son of Heli, (Luke 3:23)


திரு உமர் அவர்களே, இதற்க்கு வெகு காலங்களுக்கு பிறகே, திரு இயேசு அவர்கள், திரு மத்தேயு அவர்களை சந்தித்ததாக மத்தேயு சுவிசேஷம் அறிவிக்கிறது.

பார்க்க:

As Jesus passed on from there, he saw a man called Matthew sitting at the tax booth, and he said to him, “Follow me.” And he rose and followed him. (Matthew 9:9)



திரு உமர் அவர்களே, நீங்கள் பொதுவாக தெளிவான ஆதாரத்தை முன் வைக்காமல், மத்தேயு சுவிசேஷம் திரு இயேசு அவர்களின் சீடரான மத்தேயு அவர்களால் இயற்ற பெற்றது, என்று அறிவிக்க விரும்புவதை ஒரு வாதத்திற்காக ஏற்க முனைந்தாலும், திரு இயேசு அவர்களின் பிறப்பிர்க்கு பின் முப்பது வருடா காலங்களுக்கு பின் சந்திக்க நேரிட்ட திரு மத்தேயு என்ற நபர், திரு இயேசு அவர்களின் பிறப்பிற்க்கு முந்திய நிகழ்வுகளை, தான் முன் நின்று கண்ணால் கண்டது போல் இயற்றி வைத்து இருப்பதை பைபிள்ளில் காண நேரிடுகிறது. 

  1. இந்த நிகழுவுகள் நடந்தேறிய வேளையில், திரு மத்தேயு அவர்கள் தன் கண்களால் இதனை கண்டரா?
  2. அல்லது, இந்த நிகழ்வுகளை கண்ணால் கண்ட சாட்சி யார்?
  3. இந்த விவரங்களை திரு மத்தேயு அவர்களுக்கு அறிவித்தது யார்?
  4. இவற்றினை திரு மத்தேயு அவர்களுக்கு எங்கே எப்பொழுது அறிவித்தார்?
  5. இதனை இயற்ற திரு மத்தேயு அவர்களுக்கு எப்படி சாத்தியம் ஆயிற்று?
உங்கள் சொந்த விளக்க வுரையை வழங்காமல், தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு அறிவியுங்களேன்!!

பார்க்க:

But as he considered these things, behold, an angel of the Lord appeared to him in a dream, saying, “Joseph, son of David, do not fear to take Mary as your wife, for that which is conceived in her is from the Holy Spirit. She will bear a son, and you shall call his name Jesus, for he will save his people from their sins.” All this took place to fulfill what the Lord had spoken by the prophet: “Behold, the virgin shall conceive and bear a son, and they shall call his name Immanuel”. When Joseph woke from sleep, he did as the angel of the Lord commanded him: he took his wife, but knew her not until she had given birth to a son. And he called his name Jesus.(Matthew 1:20 - 25)
   

திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் “இயேசுவின் வார்த்தைகளை நாம் அறிந்துக்கொள்ள, அவரை நேரடியாக கண்டு, அவரோடு வாழ்ந்தவர்களாகிய முதல் நூற்றாண்டு சீடர்கள் எழுதியதில் காணமுடியுமே தவிர, இயேசுவிற்கு பிறகு ஏழாம் நூற்றாண்டில் மக்காவில் வாழ்ந்த ஒரு மனிதனிடம் இயேசுவின் வார்த்தைகளை காணமுடியாது.” என்று அறிவிகிறீர்.

  1. அப்படி திரு இயேசு அவர்களின் சீடர்கள் யாரேனும், எதையேனும், தன் கைப்பட இயற்றி வைத்து இருகிறார்களா?
  2. இப்படி எதையேனும் இயற்ற, உலகிள் சரீரா நிலையில் திரு இயேசு அவர்கள் தன் வாயால் அறிவித்து இருக்கிறாரா? 
தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு விவரியுங்களேன்!!! குறைந்த பட்சம், புதிய ஏற்பாட்டின் முகவரி இல்ல ஆசிரியர்கள் பற்றிய கட்டுரைகளுக்கு தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு பதில் அளிக்க முயலுங்களேன்!!!

பார்க்க:






திரு உமர் அவர்களே, திரு பீஜே அவர்கள், “ஏன் கிறிஸ்தவர்கள் திரு இயேசு அவர்கள் இயற்றியனவற்றை பாதுகாக வில்லை” என்று அறிவித்ததற்கு தெளிவான ஆதாரம் கொண்டு விளக்கம் அளிக்காமல், மறுப்பு என்ற போர்வையில் எதிர் கேள்வி எழுப்பி இருந்தீர். எதிர் கேள்வி எழுப்புவது தான் உங்கள் அகராதியில் மறுப்பு/விளக்கம் அளிப்பதா? தெளிவான விளக்கம் அளித்து விட்டு தானே எதிர் கேள்விகள் எழுப்புவது முறை???

உதாரணமாக:
பீஜே அவர்களின் வரிகளில், முதலாவதாக, "2000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த இயேசு, ஏதோ எழுதியிருக்கிறார்" என்று திரு பீஜே அவர்கள் சுயமாக ஒரு கோட்பாட்டை (Theory) உருவாக்குகிறார்.

இரண்டாவதாக, ஏன் கிறிஸ்தவர்கள் இயேசு எழுதியதையும், கர்த்தரிடமிருந்து வந்ததையும் "பாதுகாக்காமல் விட்டுவிட்டீர்கள்" என்று கேள்வி கேட்கிறார்.

இவரின் வரிகளை படிக்கின்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் கேட்கவேண்டிய கேள்விகள் என்னவென்றால்:

1) "பீஜே அவர்களே, இயேசு எழுதியது என்ன என்று முதலாவது உங்களுக்குத் தெரியுமா?" இயேசு எழுதினாரா அல்லது இல்லையா என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?

2) இயேசு சுயமாக எழுதிய புத்தகம் எது? அல்லது தாம் சொல்லச் சொல்ல சீடர்கள் எழுதிய புத்தகம் எது? இப்படி எழுதப்பட்ட புத்தகம் உண்டா?

3) இயேசு எழுதிய புத்தகம் முதல் நூற்றாண்டில் காணப்படாமல் போய், எந்த ஒரு சீடரின் கண்களிலும் காணப்படாமல், ஏழாம் நூற்றாண்டில் உங்கள் முஹம்மதுவினாலோ அல்லது அல்லாஹ்வினாலோ கண்டுபிடிக்கப்பட்டு, அந்த புத்தகத்தை 20ம் நூற்றாண்டில் அதுவும் தமிழ் நாட்டில் வாழும் பீஜே அவர்களுக்கு வெளிப்படுத்தியது போல எழுதுகிறீர்கள் நீங்கள். இப்படி ஏதாவது வெளிப்பாடு உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது இயேசு எழுதியது உங்கள் குர்‍ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

4) திரு பீஜே அவர்கள் தம்மை "இறைவன் மாதிரி" கற்பனை செய்துக்கொண்டு, எல்லாமே தெரிந்தவர் போல (சர்வ ஞானம் படைத்தவர் போல) கற்பனை செய்துக்கொண்டு, கிறிஸ்தவர்களிடம் வந்து "ஏன் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கவில்லை?" என்று கேட்கிறார்.

5) "இயேசு எழுதினார்" என்று உங்களுக்கு எப்படி தெரியும்? எந்த சரித்திரத்தில் படித்தீர்கள்? நீங்கள் முதல் நூற்றாண்டில் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தீர்களா? இயேசுவின் சீடர்களோடு வாழ்ந்தீர்களா? அல்லது இயேசுவின் சீடர்களின் சீடராக இருந்தீர்களா? குறைந்தபட்சம் யூதாஸ் என்ற சீடனின் நண்பனாகவாவது இருந்தீர்களா?
நீங்களாகவே "இயேசு ஒரு புத்தகத்தை எழுதினார்" என்று கற்பனை செய்துக்கொள்வது, அது எங்கே என்று கிறிஸ்தவர்களிடம் கேட்பது, உங்க கற்பனை மிகவும் அருமையாக உள்ளது!


திரு உமர் அவர்களே, திரு பீஜே அவர்கள் “ஏன் கிறிஸ்தவர்கள் திரு இயேசு அவர்கள் இயற்றியனவற்றை பாதுகாக வில்லை” என்று அறிவித்ததற்கு மறுப்பு அளிக்க நீங்கள் விரும்பினால், தெளிவான ஆதாரம் கொண்டு, இதனை போன்று திரு இயேசு அவர்கள் எதனையும் இயற்ற வில்லை என்பதனை நிருபித்து தெளிவான மறுப்பு அளித்து இருக்க வேண்டும். இதனை மறுத்து தெளிவில்ல எதிர் கேள்விகளை விடுத்து இருக்கிறீர்கள். வேடிக்கையாக இருக்கிறது.

வாசகர்களே, தெளிவான ஆதாரம் இல்லாமல், திரு இயேசு அவர்கள் எதனையும் இயற்ற வில்லை என்று அறிவிக்கும் கிறிஸ்தவர்கள், திரு இயேசு அவர்களுக்கு முந்தைய ஏறத்தாள எல்லா இறைதூதர்களும் தலா ஒரு பைபிள் புத்தகத்தை இயற்றினார்கள் என்ற விந்தையான விவரத்தை அறிவிகிறர்கள்.

உதாரணமாக, திரு மோசேஸ், டேனியல், எஜ்ரா என்று இந்த இறைதூதர்கள் பட்டியல் நிண்டு கொண்டே போகிறது.

திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை போல், திரு இயேசு அவர்கள் கல்வி அறிவு இல்லாதவர், ஆகையால் அவர் எதனையும் தன் கையாள இயற்ற வில்லை என்ற வாதத்தையும் கிறிஸ்தவர்கள் வைக்க இயலாது, ஏன்னெனில் திரு இயேசு அவர்கள் கல்வி அறிவில் தேர்ச்சி பெற்றவர் மட்டும் அல்ல, தனக்கு பாடம் கற்பிக்க முயன்ற ஆசிரியர்களுக்கே கல்வி கற்பித்தவர். இன்னும் தனக்கு கல்வி கற்பிக்க முன் வந்த ஆசிரியர்களை சாபமிட்டு கொன்றவர் என்ற சரித்திரங்களை தாமஸ் சுவிசேஷம் (infancy gospel – gospel of Thomas) அறிவிக்கிறது. இப்படி கல்வி அறிவு மிக்க, யூத “ரப்பி” என்று பைபிள்ளில் பலமுறை அழைக்க பெற்ற திரு இயேசு அவர்கள், “ஏன் தன் போதனைகளை இயற்ற மறுத்தார்” என்று தெளிவான ஆதாரத்தை திரு உமர் அவர்கள் தான் எடுத்து தர வேண்டும்.


சாரா சரி இறைதூதர்களே பைபிள் புத்தகங்களை இயற்றி வைத்து இருப்பதாக அறிவிக்கும் கிறிஸ்தவர்கள், உங்கள் நம்பிக்கை அடிப்படையில் இறைவனாக ஏற்க பெற்ற, கல்வி அறிவு மிக்க ஒரு நபர், எதனையும் இயற்றவில்லை என்ற தெளிவான ஆதாரம் எதனையும் முன் வைக்காமல், விந்தையான விவரங்களை அறிவிகிறீர், இது ஏற்புக்கு உரிய வாதமா???.


திரு உமர் அவர்களே, திரு இயேசு அவர்களின் சரித்திரத்தை பைபிள்ளை கொண்டே அறிய முடியும் என்று அறிவிகிறீர். உங்கள் வாததிற்கே வருகிறோம், திரு இயேசு அவர்கள் வாழ்நாளில் எதனையும் எழுத வில்லையா? அவர் எத்தனையாவது இயற்றியத்தை பைபிள் விவரித்து இருக்கிறதா?

பார்க்க:
The experts in the law and the Pharisees brought a woman who had been caught committing adultery. They made her stand in front of them and said to Jesus, “Teacher, this woman was caught in the very act of adultery. In the law Moses commanded us to stone to death such women. What then do you say?” (Now they were asking this in an attempt to trap him, so that they could bring charges against him.) Jesus bent down and wrote on the ground with his finger. When they persisted in asking him, he stood up straight and replied, “Whoever among you is guiltless may be the first to throw a stone at her.” Then he bent over again and wrote on the ground. Now when they heard this, they began to drift away one at a time, starting with the older ones, until Jesus was left alone with the woman standing before him. Jesus stood up straight and said to her, “Woman, where are they? Did no one condemn you?” She replied, “No one, Lord.” And Jesus said, “I do not condemn you either. Go, and from now on do not sin any more.” (John 8:3 – 11


திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட பைபிள் வசனத்தில் வீதியில், திரு இயேசு அவர்கள் அமர்ந்து எத்தனையோ இயற்றி கொண்டு இருந்த விவரத்தை பைபிள் அறிவிக்கிறது.

  1. இந்த நிகழ்வை கண்ணால் கண்டு அறிவித்த நபர் யார்?
  2. அப்படி அவர் இந்த நிகழ்வை கண்ணால் கண்டது உண்மை என்ற நிலையில், தன்னுடைய இறைவன் வீதியில் என்ன இயற்றினார் என்பதனையும் கண்டு இருக்க வேண்டும் தானே?
  3. இதனை ஏன் அவர் பாதுகாக அல்லது இயற்றி வைக்க தவறினார்?
  4. திரு இயேசு அவர்கள், வீதியில் சுயநினைவு இல்லாதோர் கிறுக்குவதை போல் கிறுகீனர் என்று அறிவிக்க போகிறீர்களா?
  5. அல்லது பெண்களை போல் வீதியில் கோலமிட்டு அலங்காரம் செய்தார் என்று அறிவிக்க போகிறீர்களா?
  6. உங்கள் இறைவனின் எழுத்து உங்களுக்கு முக்கியமானது இல்லையா? அது பாதுகாபீர்க்கு உரியது இல்லையா?
  7. இதனை ஒரு கண்ணால் கண்ட சாட்சி கூட இயற்றி வைக்கவில்லை என்று அறிவிக்க போகிறீர்களா?
  8. குறைந்த பட்சம் பின்னாளில் உங்கள் பரிசுத்த ஆவி, திரு இயேசு அவர்கள் என்ன இயற்றினார் என்று அறிவித்து இருக்க வேண்டாமா?    

இதற்க்கு முன்னரே, இறைவன் இயற்றி வழங்கிய கல்வெட்டுகளை பின்னுக்கு தள்ளிய நீங்கள், திரு இயேசு அவர்கள் எதையேனும் இயற்றி இருந்தால் அதனை பாதுகாத்து இருக்க போகிறீர்களா? என்ற கேள்வியை நாங்கள் விடுத்து இருந்தோம்.

பார்க்க:


திரு உமர் அவர்களே, பீஜே திரு இயேசு அவர்கள் ஒரு புத்தகத்தை இயற்றினார் என்று அறிவிக்க வில்லை, மாறாக “இயேசு எழுதியதையும் இயேசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை” என்று கேள்வி எழுப்பி இருந்தார். நீங்கள் பைபிள் புதிய ஏற்பாடு என்ற பெயரில், திரு இயேசு அவர்கள் அறிவித்ததாக நீங்கள் கற்பனை செய்து கொண்டவைகளை, முகவரி இல்ல நபர்களை கொண்டு இயற்றி வைத்து கொண்டிர்கள். இதை விடுத்து,

  1. இறைவன் திரு இயேசு அவர்களுக்கு அறிவித்தது எங்கே?
  2. திரு இயேசு அவர்கள் சரீரா நிலையில் வாழ்ந்த வேளையில், இறைவன் மனிதர்களுக்கு அறிவித்தது எங்கே?
  3. இன்னும் திரு இயேசு அவர்கள் சுயமாக இயற்றியது எங்கே?
  4. குறைந்த பட்சம் திரு இயேசு அவர்கள் வீதிகளில் இயற்றிய செய்தி என்ன?
  5. வீதியில் இறை செய்திகளை இயற்றிய நபர் ஏன் சுவிசேஷ புத்தகங்களை இயற்ற தவறினார்? 
  6. அவர் இயற்ற தவறினாரா? அல்லது நீங்கள் அதனை பாதுகாக தவறிநீற்களா?

இவற்றினை, தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு விளக்குவீர்களா? இதனை விவரிக்கு தெளிவான பைபிள் வசனம் இருக்கிறதா? உங்களுக்கு நாங்கள் சவால் விடுகிறோம், முடிந்தால் தெளிவான வசன ஆதாரம் கொண்டு விளக்கம் அளியுங்கள். எல்லாம் வல்ல இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்..

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்.


--

--

No comments: