Thursday, October 27, 2011

“பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்க பட்ட நபர் யார், திரு பால் அவர்களா?”





பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக




“பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்க பட்ட நபர் யார், திரு பால் அவர்களா?”


வாசகர்களே, பொதுவாக கிறிஸ்தவ அறிஞ்சர்கள், திரு உமர் அவர்கள் உட்பட, திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இறைவன் அருளிய தீர்க்கதரிசியாக ஏற்க மறுக்க, அறிவிக்கும் காரணம் அவர் ஒரு கள்ளத்திர்க்கதரிசி என்ற பொய்யுரையாகும். இன்னும் இந்த கருத்தை ஆதரிக்க கிறிஸ்தவ அறிஞ்சர்கள் பொதுவாக கோடிடும் பைபிள் வசனம் Matthew 24:24 ஆகும். இந்த பைபிள் வசனத்தை ஆராய எல்லாம் வல்ல இறைவனின் கிருபையை நாடியவர்களாக இந்த கட்டுரையை துவங்குகிறோம்.



வாசகர்களே, கிறிஸ்தவர்கள் கோடிடும் பைபிள் Matthew 24:24 வசனத்தின் பொருளை முழுமையாக அறிய வேண்டுமெனில் அதற்க்கு முந்தைய மற்றும் பிந்தைய வசனங்களை சேர்த்தே அறிய வேண்டும். உதாரணமாக Matthew 24:24 வசனத்தை அறிய Matthew 24:23-26 என்ற தொடர் வசனங்களை அறிய வேண்டும் அவை இதோ:




Then if someone will say to you, “Behold, The Messiah is here or there”, you should not believe. False messiahs and false prophets will appear. They will work spectacular, miraculous signs and do wonderful things to deceive, if possible, even those whom God has chosen. Listen! I've told you this before it happens. If therefore they will say to you, “Behold, he is in the desert”, you should not go out, or “Behold, he is in an inner room”, do not believe it.  (Matthew 24:23-26)




வாசகர்களே, மேலே திரு இயேசு அவர்கள் அறிவிப்பதாக சித்தரிக்க படும் பைபிள் வசனத்தில், திரு இயேசு அவர்கள் தனக்கு பின் வரவிருக்கும் தீர்க்கதரிசிகளை ஏற்க வேண்டாம் என்று அறிவிப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. மாறாக, திரு இயேசு அவர்கள், தனக்கு பின் வரும் நபர்கள், தான் இங்கு இருப்பதாகவும் அல்லது தான் அங்கு இருப்பதாகவும் அறிவித்தால், தன்னை கண்டதாக பொய்யுரைதால், அந்த பொய்யர்களை நம்பா வேண்டாம் என்றே எச்சரிப்பதாக நம்மால் அறிய முடிகிறது. இன்னும் அதிகப்படியாக கிறிஸ்தவர்கள் அறிவிப்பது போல் அல்லாமல், தனக்கு பின் வரவிருக்கும் தீர்க்கதரிசியை ஏற்று கொள்ளுங்கள் என்றே திரு இயேசு அவர்கள் அறிவிப்பதாக பைபிள்ளில் நம்மால் அறிய முடிகிறது:


"I have a lot more to tell you, but that would be too much for you now.  When the Spirit of Truth comes, he will guide you into the full truth. He won't speak on his own. He will speak what he hears and will tell you about things to come.  (John 16:12-13)




வாசகர்களே, பைபிள்ளில் திரு இயேசு அவர்கள் அறிவிப்பதாக சித்தரிக்க படும் வசனத்தில், திரு இயேசு அவர்கள் தன்னை அங்கு கண்டதாகவும், இங்கு கண்டதாகவும் பொய்யுரைக்கும் நபர்களை நம்பா வேண்டாம் என்று எச்சரிப்பதை மேலே கோடிட்டு இருந்தோம். இவ்வாறு திரு இயேசு அவர்களை ஒரு முறையேனும் உயுருடன் பாத்திராதா ஒரு நபர், சரித்திரத்தில் அவரை அங்கு கண்டதாகவும், இங்கு கண்டதாகவும் அறிவித்தவர் என்ற பட்டியலை நாம் தொகுக்க முயன்றால் அதில் முதலாமானவராக வரும் நபர் திரு பால் அவர்கள்.



As Saul was coming near the city of Damascus, a light from heaven suddenly flashed around him. He fell to the ground and heard a voice say to him, "Saul! Saul! Why are you persecuting me?" Saul asked, "Who are you, sir?" The person replied, "I'm Jesus, the one you're persecuting. Get up! Go into the city, and you'll be told what you should do." Meanwhile, the men traveling with him were speechless. They heard the voice but didn't see anyone. Saul was helped up from the ground. When he opened his eyes, he was blind. So his companions led him into Damascus. For three days he couldn't see and didn't eat or drink. (Acts 9:3 – 9)




"But as I was on my way and approaching the city of Damascus about noon, a bright light from heaven suddenly flashed around me. I fell to the ground and heard a voice asking me, 'Saul! Saul! Why are you persecuting me?' "I answered, 'Who are you, sir?' "The person told me, 'I'm Jesus from Nazareth, the one you're persecuting.' "and those who were with me saw indeed the light, and were afraid; but they heard not the voice of him that spake to me. "Then I asked, 'What do you want me to do, Lord?' "The Lord told me, 'Get up! Go into the city of Damascus, and you'll be told everything I've arranged for you to do.' "I was blind because the light had been so bright. So the men who were with me led me into the city of Damascus. (Acts 22:6 – 11 )




"I was carrying out these activities when I went to the city of Damascus. I had the power and authority of the chief priests. Your Majesty, at noon, while I was traveling, I saw a light that was brighter than the sun. The light came from the sky and shined around me and those who were with me. All of us fell to the ground, and I heard a voice asking me in Hebrew, 'Saul, Saul! Why are you persecuting me? It's hard for [a mortal like] you to resist God.' "I asked, 'Who are you, sir?' "The Lord answered, 'I am Jesus, the one you're persecuting. Stand up! I have appeared to you for a reason. (Acts 26:12 - 16 )





வாசகர்களே, மேலே கோடிட்ட பைபிள் வசனங்கள் திரு பால் அவர்கள் திரு இயேசு அவர்களை சந்தித்ததாக சித்தரிக்கும் வேளையில் நடந்தேறிய நிகழ்வுகளை முன்னுக்கு பின் முரணாக அறிவிக்கிறது. உதாரணமாக:  

  1. முதலாவதாக - திரு பால் அவர்கள், திரு இயேசு அவர்களின் அழைப்பை செவியுற்று புவியில் விழுந்த நிலையில், அவர் உடன் இருந்தவர்கள் திரு இயேசு அவர்களின் குரலை செவியுற்று, அவரை கண்ணால் காணமுடியாத நிலையில் திகைத்து நின்றார்கள் என்பது.
  2. இரண்டமாவது - திரு பால் அவர்கள், திரு இயேசு அவர்களின் அழைப்பை செவியுற்று புவியில் விழுந்த நிலையில், அவர் உடன் இருந்தவர்கள் வானில் ஒளியை கண்டார்கள், ஆனால் அவர்கள் திரு இயேசு அவர்களை செவியுராத நிலையில் பயத்துடன் நின்றார்கள் என்பது.
  3. முன்றமாவது - திரு பால் அவர்கள், திரு இயேசு அவர்களின் அழைப்பை செவியுற்ற வேளையில், அவருடன் இருந்த அனைவரும் புவியில் விழுந்தார்கள் என்பது.


வாசகர்களே, சமீபமாக தனக்கு நடந்தேறிய நிகழ்வை (திரு இயேசு அவர்களை ஒரு முறையேனும் உயுருடன் பாத்திராதா) திரு பால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பைபிள்ளில் அறிவிக்கிறார். இப்படி பட்ட விந்தையான நபர் இயற்றிய நூல்களே பைபிள்லின் புதிய ஏற்பாட்டில் அதிகப்படியாக சேர்க்க பட்டுள்ளது என்று கிறிஸ்தவர்கள் அறிவிக்கிறார்கள். மேலே கோடிட்ட பைபிள் தெளிவான வசனங்கள் வாயிலாக பைபிள்ளில் திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்க பட்ட நபர் திரு பால் அவர்களாக இருக்குமோ? என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. இதனை தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் தெளிவக்குவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்




--
--

4 comments:

Johnson Victor said...

http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=28&topic=2307&Itemid=287

மேற்கண்ட தொடுப்பில் இது தொடர்பான என் கருத்துகளுக்கும் கேள்விகளுக்கும் தயவுகூர்ந்து விளக்கம் தரவும். நன்றி.

Zi said...

திரு ஜான்சன் விக்டர் அவர்களே, எங்கள் இணையதளத்திற்கு நீங்கள் வருகை தந்தமைக்கு மிகவும் நன்றி. பொதுவாக நாங்கள் திரு உமர் அவர்களுடைய பொய்யுரைகளுக்கு பதில் அளிப்பதை முதன்மை குறிகோளாக கொண்டு இந்த இணைய தளத்தில் கட்டுரை மற்றும் மறுப்புகளை வெளியிட்டு கொண்டு இருக்கிறோம். உங்களுக்கு எங்கள் தலைப்பு தொடர்பான ஏதேனும் கேள்வி அல்லது மறுப்பு இருப்பின் அதனை தெளிவான ஆதாரம் கொண்டு எங்களிடம் விட்டு வைக்கலாம், அவற்றுக்கு நாங்கள் முயையே விளக்கம் அளிக்க முயற்சிப்போம். இதற்க்கு மாறாக நீங்கள் வேறு ஒரு இணைய தளத்தில் நீங்கள் பிரசுரித்த உங்கள் கருத்துகளுக்கு நாங்கள் விடை அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறீர். இப்படி நாங்கள் செய்ய முனைந்தால் உலகில் வெளிவரும் எல்லா இஸ்லாமியர்களுக்கு எதிரான இணைய தளங்களுக்கு நாங்கள் இரு இளைஞ்சர்கள் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உருவாக்கும். உண்மையில் அது மிக பளுவான வேலை, இருப்பினும் உங்கள் வேண்டுதலுக்கு இணங்க இந்த முறை எல்லாம் வல்ல இறைவன் நாடினால் மிக விரைவில் உங்கள் கருத்துகளுக்கு நாங்கள் விளக்கம் அளிக்க முயற்சிப்போம். அதுவரை நீங்கள் பொருத்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்

Johnson Victor said...

உங்கள் பதில் பணிவையும் நேர்மையையும் வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘திரு.உமர் அவர்களின் பொய்யுரை’ போன்ற கூற்றுகளை என்னால் ஏற்றக் கொள்ள முடியாது என்றாலும், மாறுபாடான கோட்பாடு உடையவர்கள் சந்திக்கும் போது இப்படிப்பட்ட கூற்றுகளையும் தவிர்க்க முடியாது என்பதை அறிவேன். மேலும், என்னுடைய எழுத்துகளிலும் உங்கள் தரப்பைச் சார்ந்தவர்களுக்கு எதிரான வாசகங்களைக் கண்டு வேதனைப் பட்டிருக்கலாம். ஆனாலும், அவற்றைப் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு வசதியான நேரத்தில் பதில் தாருங்கள், நான் பொறுத்திருப்பேன். இப்பதிப்பில் வழங்கப்படுகிற பின்னூட்டை அறிந்து கொள்ளும் வகையில் எனது மின்னஞ்சல் தொடுப்பை வழங்கியிருக்கிறேன். எனவே, பதில் எப்படியாவது எனக்கு வந்து சேரும்.
ஆனாலும், மௌனமாக இருந்தால் உங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொண்டேன் என்று பொருள்படுத்திக் கொள்ளாதீர்கள்.
உரையாடல்கள், விவாதங்கள், வாக்குவாதங்கள் எல்லாம் நமது கோட்பாட்டின் பிரிவினையைச் சரிபடுத்திவிடப்போவதில்லை.
ஒரு குடும்பத்தில் கூட கணவன் - மனைவியிடம் பிரிவினைகள் நிலவும் நிலையில் குடும்பக் கப்பலைச் செலுத்துவது போல, இரண்டு மார்க்கத்தார் இடையில் காணப்பாடும் கோட்பாட்டுப் பிரிவினைகளை அணுசரித்து, ஏற்றுக் கொள்ள முடியாமல் போனாலும், ‘தோற்றவர் போல்’, ‘விட்டுக் கொடுத்தவர் போல்’ இருப்பதே மேலானது என்று நம்புகிறேன். நன்றி.

Zi said...

அஸ்ஸலாமு அழைக்கும்,

திரு ஜான்சன் விக்டர் அவர்களே, உங்கள் சுய கண்ணோடங்களுக்கு உங்களுக்காக இந்த முகவரியில் விளக்கம் அளித்துள்ளோம்

http://isaakoran.blogspot.com/2011/11/answering-ravon-is-paul-one.html

-ஜியா & அப்சர்