Thursday, October 27, 2011

உமரின் "உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு


உமரின் "உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு 


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் 
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) 

 அஸ்ஸலாமு அழைக்கும் - 
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


திரு உமர் அவர்கள், "கலிFபா உஸ்மான் அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் உலகில் உண்டா?" என்ற கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பளிக்கும் விதமாக இந்த கட்டுரையை ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக துவங்குகிறோம்.

வாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவித்த கருத்துகளை ஆராய்வதற்கு முன்னர், இஸ்லாமியர்கள் பைபிளின் நம்பகத்தன்மைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள்/கருத்துகளுக்கு இது வரையிலும் எந்த பதிலும் இல்லை என்பதை நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இன்றுள்ள பைபிளின் மூல பிரதிகள் ஏசுவின் காலத்திற்கு எத்தனை நூற்றன்றுகள் கழித்து எழுதப்பட்டது? அப்படி எழுதப்பட்ட பைபிளுக்கும் இன்றுள்ள பைபிளுக்கும் எத்தனை பகுதிகள் மாறுபடுகின்றன, சேர்க்கப்பட்டுள்ளன, நீக்கப்பட்டுள்ளன? இதனை விவரிக்க திரு உமர் அவர்கள் முன்வருவாரா??

இப்படி பைபிளை பற்றி வாய் திறக்க மறுக்கும் திரு உமர் அவர்கள் குரானை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரு உமர் அவர்கள் முன் வைத்த கேள்விக்கு/ போலியான கருத்துக்கு கிறிஸ்தவர்களே பதிலளிக்கிறார்கள். BBC யை சேர்ந்த கிறிஸ்தவர் Ian MacWilliam வெளியிட்டது.


 இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது "It was completed in the year 651, only 19 years after Muhammad's death." முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குள் தொகுக்கப்பட்டதென்று. 

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, "Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood." அந்த குர்ஆன் மூல பிரதியில் இரத்த கரை போன்ற கரைகள் இருப்பதாகவும் அவை கலிFபா உத்மான் அவர்கள் கொல்லப்படும்போது ஏற்பட்ட கரையாக இருக்கலாம் என்று... 

திரு உமர் அவர்கள் வெளியிட்டது...

"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

திரு உமர் அவர்களே, இப்படி உங்களை அறியாமலேயே நீங்கள் உண்மையை ஒப்பு கொள்கிறீரே!!! ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் (இடம்பெயர்தல்) செய்தார்களே அந்த ஆண்டிலிருந்து துவங்குகிறது. முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ஏறக்குறைய ஹிஜ்ரத் செய்து பதினோரு ஆண்டுகள் கழித்து மரணிக்கிறார். உங்களின் ஆதாரப்படியே, முஹம்மது நபி ஸல் அவர்கள் மரணித்து தொண்ணூறு ஆண்டுகளுக்குள்ளாக எழுதப்பட்ட கையெழுத்து பிரதி இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது.

சரி ஏசு மரணித்த பிறகு, நூறு ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட ஏதேனும் பைபிள் எழுத்துக்கள் உள்ளனவா? முழுவதுமாக கேட்கவில்லை ஏதேனும் ஒரு சில வரிகள்.....????  

மறுப்புகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்....

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்







No comments: