Thursday, September 15, 2011

"isa koran : குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்" என்ற கட்டுரைக்கு மறுப்பு




பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



திரு உமர் அவர்களின் குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு 


திரு உமர் அவர்களின் புதிய முயற்சி

திரு உமர் அவர்கள், சமீபமாக திரு குர்ஆனில் பிழை இருப்பதாகவும், அதை இஸ்லாமியர்கள் திருத்திக் கொள்வதாகவும், தனது வழக்கமான பாணியில் தனது கற்பனையை வாசகர்கள் நம்புவதற்காக கட்டுரையாக வெளியிட்டுள்ளார். குர்-ஆனில் குறைகள் உள்ளதாக மாயையை கிளப்ப திரு உமர் அவர்கள் வீணாக செலவழிக்கும் நேரத்தை அவர் தன்னுடைய பைபிளை ஆராய்ந்து அதில் உள்ள முரண்பாடுகளுக்கு விளக்கம் அளித்திருந்தால், ஆட்டம் கண்டு போயிருக்கும் க்றிஸ்தவர்களுக்காவது சிறிதேனும் உபயோகமாக இருந்திருக்கும்.

அது சரி, அந்த அறிவு இல்லாததினால் தானே எலோஹிம் = I am = இருக்கிறேன் = ....... என தன்னுடைய இறைவனுக்கு புது பெயர்களை சூட்டியுள்ளார். தன்னுடைய இறைவனுக்கே புதிய பெயர்களை சூட்டிய திரு உமர் என்ற பட்டம் அவருக்கு வழங்கலாம்!!! பலே! பலே!! இதற்கு மேலும் கிறிஸ்தவ தலைப்புகளை முன்வைத்தல் அஸ்திபாரம் ஆட்டம் கண்டு இரண்டு மதங்களுக்கு மேல் தலைமறைவாகி விடுவர்!!!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது பல அவதூறுகளை அறிவித்து விட்டு அவற்றையும் தெளிவான ஆதாரம் கொண்டு நிரூபிக்க தவறிய திரு உமர் அவர்கள்!!!

அடுத்ததாக "நாம் அவர் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபீடியாவில் இருந்து முன்வைத்த ஆதாரத்தில் பித்தலாட்டம் செய்ததாகவும், நான்(உமர்) சொல்லாததை எல்லாம் சொன்னதாக கூறுகிறார்கள்" எனவும் நம் மீது ஆதாரம் அற்ற குற்றச்சாட்டை திரு உமர் அவர்கள் சுமத்தினார். அவற்றையும் நிரூபிக்க தவறி தலை மறைவு ஆனார். அவருடைய "கர்த்தருக்கு சித்தமில்லையோ? என்னவோ!!!"

அவரின் அடுத்த முயற்சியாக, குர்-ஆனை குறை கூறுவதை ஆயுதமாக எடுத்துள்ளார். இன்ஷா அல்லாஹ், ஏக இறைவனின் உதவியுடன் உமரின் கட்டுரை(கட்டுக்கதை)களுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்க முயற்சிப்போம்.

குர்‍ஆன் 35:8 பற்றி உமரின் கருத்து

உமர் அவர்கள் எழுதியது,
"அல்லாஹ் ஒரு வாக்கியத்தை சரியாக முடிக்காமல், அதாவது பாதியிலேயே அந்த வாக்கியத்தை அறைகுறையாக விட்டுவிட்டு, அடுத்த வாக்கியத்திற்குச் சென்றுள்ளார்" என்பதாகும். அல்லாஹ்வின் இந்த பிழையை சரி செய்ய மொழியாக்கம் செய்பவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதைக் காண்போம்.

திரு உமர் அவர்கள் இங்கு ஒன்றை மறந்துவிட்டார்.
  • திரு உமர் அவர்கள் பிழை திருத்தமாக அறிவிக்க முயற்சிபவை ஏன் அரபி மூலத்தில் இடம் பெற வில்லை?
  • திரு உமர் அவர்கள் பிழை திருத்தமாக அறிவிக்க முயற்சிக்கும் அடைப்புக்குறிகள் ( ) ஏன் அரபி மூலத்தில் இடம் பெற வில்லை?
  • அப்படியானால் அரபி மூலத்தை இயற்றிய நபர்கள் திரு உமர் அவர்கள் பிழை திருத்தமாக அறிவிக்க முயற்சிபவைகளை இயற்ற மறந்து விட்டார்களா?
அப்படியல்ல, இதுவும் திரு உமர் அவர்கள் முதலில் கூறியது போல, அரபி வசனங்களை தமிழில் மொழி பெயர்க்கும் வேளையில் வசன கோர்வை/பொருள் சரி வர அமையா மொழிபெயற்ப்பளர்கள் இணைக்கும் அடைப்புக்குறிகள் ( ) ஆகும்.

திரு உமர் அவர்கள் வழக்கமாக செய்யும் வார்த்தை ஜாலமே சமீபமாக வெளியிட்ட இந்த கட்டுரையும்... திரு உமர் அவர்கள் கோடிட்ட வசனத்தை விளங்க வேண்டுமெனில் அதற்க்கு முந்தைய வசனமான 35:7 வசனத்துடன் சேர்த்து வாசிக்க வேண்டும், அதன் பின்னரே அது அறிவிக்கும் பொருள் நம்மால் விளங்க முடியும்.

திரு குர் ஆன் 35:7 எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.
35:8 எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதை அழகாகக் காண்கிறானோ, அவனா (சொர்க்கவாசி)? அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.


மேலே கோடிடபட்ட திரு குர்ஆன் வசனங்கள் தெளிவாக நிராகரிபோர்க்கு கடுமையான வேதனையுண்டு (நரகம்) மென்றும் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியும்(சொர்க்கம்) உண்டு என்று அறிவிக்கிறது. அதற்க்கு பின்னர் எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதை அழகாகக் காண்கிறானோ, அவனா? என்ற கேள்வியை மூன் வைக்கிறது. இந்த வசனத்தை விளங்க அவனுக்கும் சொர்க்கமா, என்ற பொருளை விளங்க மொழிபெயற்ப்பாலர்களால் அடைப்புக்குறிகள் (சொர்க்கவாசி) என்று இணைகிறார்கள். இதனையே திரு உமர் அவர்கள் தனக்கே உரிய பணியில் தீரித்து, தனது கற்பனை வளத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

உதாரணமாக, மேலே உள்ள வசனம் வெற்றி தோல்வி பற்றி வருவதால், தேர்வில் வெற்றி தோல்வி பற்றி இதே பாணியில் ஒரு உதாரணத்தை பார்போம்:

34 மதிப்பெண் எடுத்தால் தோல்வி
35 மதிப்பெண் எடுத்தால் வெற்றி
20 மதிப்பெண் எடுத்தாலுமா?

இதை தனியாக "20 மதிப்பெண் எடுத்தாலுமா?" என வாசித்தால் அரைகுறையாக தான் தோன்றும். ஆனால் இதை முழுவதுமாக வாசிக்கும் அனைவரும் தெளிவாக "20 மதிப்பெண் எடுத்தாலுமா (வெற்றி பெறுவார்கள்)?" என புரிந்துகொள்வார்கள். இதை போன்றது தான் மேல் உள்ள குர்ஆன் வசனமும்.  குர்ஆன்னை வரிசைப்படி வாசிப்பவர்கள் இதை புரிந்துகொள்வார்கள். இந்த அத்தியாயங்களை தனிப்பட்ட முறையில் எழுதும் வேளையிலும், வாசிக்கும் வேளையிலும் பொருள்பட அடைப்புக்குறிக்குள் விளக்கம் அளிக்கப்படுகிறது.

நாம் இவ்வாறு அறிவித்த உடன் திரு உமர் அவர்கள் “ஏன் மொழிபெயற்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் வித விதமாக வார்த்தைகளை உபயோகித்துள்ளர்கள்?” என்ற கேள்வியை மூன் வைக்க விரும்பலாம். அடைப்புக்குறிகள் ( ) இருப்பவை மூல வசனங்களை விளங்க தங்களால் இயற்ற பெற்றது, அது மூல வசனத்தின் பகுதி அல்ல என்பதை தெருவிக்கவே மொழிபெயற்ப்பாளர்கள் அடைப்புக்குறிகள் ( ) தங்கள் வார்த்தைகளை அமைத்து பயன் படுத்தும் வழக்கம் திரு உமர் அவர்கள் அறியாத செய்தியா?

திரு உமர் அவர்களே, நீங்கள் வேண்டுமானால் அரபி மொழி மூலத்தில் ஏன் இந்த அடைப்புக்குறி பயன்படுத்த படவில்லை என்பதை, எப்போதும் போல உங்கள் கற்பனை வளத்தை கொண்டு தீரித்து ஒரு கட்டுரை வரையுங்களேன்...

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்

No comments: