Thursday, October 27, 2011

“பைபிளில், திரு சால் அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்த நபர் யார்?”



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக






“பைபிளில், திரு சால் அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்த நபர் யார்?”


வாசகர்களே, பைபிள் புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியை இயற்றிய நபராக நம்பப்படும் திரு பால் அவர்கள், திரு இயேசு அவர்களை ஒருமுறையேனும் உயுருடன் பார்த்தது இல்லை என்ற செய்தியை இதற்க்கு முன்னரே தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு விவரித்து இருந்தோம். 




பார்க்க:


திரு பால் அவர்களின் இயற் பெயர் சால் என்று பைபிள் சான்ருரைகிறது, அவ்வாறே நாம் முன்னர் வெளியிட்ட பைபிள் தெளிவான வசன ஆதாரத்திலும் திரு இயேசு அவர்கள், திரு பால் அவர்களை, அவருடைய இயற் பெயரான சால் என்று அழைத்ததாக பைபிள் அறிவிக்கிறது.



"But as I was on my way and approaching the city of Damascus about noon, a bright light from heaven suddenly flashed around me. I fell to the ground and heard a voice asking me, 'Saul! Saul! Why are you persecuting me?' "I answered, 'Who are you, sir?' "The person told me, 'I'm Jesus from Nazareth, the one you're persecuting.' "and those who were with me saw indeed the light, and were afraid; but they heard not the voice of him that spake to me. "Then I asked, 'What do you want me to do, Lord?' "The Lord told me, 'Get up! Go into the city of Damascus, and you'll be told everything I've arranged for you to do.' "I was blind because the light had been so bright. So the men who were with me led me into the city of Damascus. (Acts 22:6 – 11 )







இதற்க்கு முன்னர், திரு உமர் அவர்களுக்கு “ஆபிரகாமின் உண்மைப் பெயர் பைபிள் இறைவனுக்கு தெரியுமா? என்ற கட்டுரையில் “திரு உமர் அவர்களே ஆபிரகாம் இறைத்தூதர், ஆகையால் அவருக்கு பைபிள்ளில் இறைவன் பெயர் மாற்றம் செய்தான் என்று கிறிஸ்தவர்கள் அறிவிக்கிறீர்கள். ஆபிரகாமின் மனைவி என்ன இறைதூதரா? மூதாட்டி ஆனா அவருக்கு எதற்காக இறைவன் பைபிள்ளில் பெயர்மாற்றம் செய்தான்?” என்ற கேள்வியை எழுப்பி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையில் திரு சால் அவர்களுக்கு பால் என்று பெயர் மாற்றம் செய்த நபர் யார், இன்னும் அதற்க்கு காரணம் என்ன? என்ற கேள்விகளையும் விட்டு வைக்கிறோம்.





வாசகர்களே, பைபிள்ளில் முதல் முறையாக திரு சால் அவர்களை பால் என்று அறிவிக்கும் வசனம் (Acts 13:9), இதனை தொடர்ந்து இந்த பெயர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று பைபிள் தெளிவாக அறிவிக்காமல், அவரை குறிப்பிடும் பெரும்பலான வசனங்களில் அவரை பால் என்றே அறிவிப்பதை நம்மால் காண முடிகிறது.  


Then Saul, who was also called Paul, filled with the Holy Spirit, looked straight at Elymas and said, (Acts 13:9)


வாசகர்களே, பொதுவாக கிறிஸ்தவர்கள் பைபிள் புத்தக தொகுப்பினை (எண்ணிகையில் அடங்கா) முகவரி அற்ற நபர்கள் இயற்றி இருப்பினும், அது இறைவனால் வழங்க பெற்றது என்ற நம்பிக்கையை கொண்டுள்ளார்கள்.

  1. பைபிள் வசனங்கள் அனைத்தும் இறைவனால் வழங்க பெற்றது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், திரு இயேசு அவர்கள் இறைவன் என்ற கிறிஸ்தவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில், திரு சால் அவர்கள் தன் பெயரை பின் நாளில் பால் என்று மாற்றி கொள்ள போவதை திரு இயேசு அவர்கள் முன்னமே அறிந்து இருக்க வேண்டாமா?
  2. குறைந்த பட்சம் திரு ஆபிரகாம் அவர்களுக்கு இறைவன் பெயர் மாற்றம் செய்ததாக பைபிள் பழைய ஏற்பாடு அறிவித்தது போல், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியை இயற்றியதாக நம்பப்படும் திரு சால் அவர்களுக்கு, இறைவன் புதிய பெயரை வழங்கினான் என்ற தெளிவான பைபிள் வசனம் இருக்க வேண்டாமா?
  3. திரு இயேசு அவர்கள், திரு சால் அவர்களை ஒரு முறையேனும் அவருடைய புதிய பெயரில் பால் என்று அழைத்த தெளிவான பைபிள் வசனம் இருக்க வேண்டாமா? திரு சால் அவர்களின் புதிய பெயரை அறியாதவனா பைபிள்லின் இறைவன்?



வாசகர்களே, திரு சால் அவர்களுக்கு பால் என்று பெயர் மாற்றம் செய்த நபர் யார், இன்னும் இதற்கு என்ன பின்னணி என்பதை திரு உமர் அவர்கள் தெளிவான வசன ஆதாரத்தை கொண்டு விவரிப்பார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்




--

--

“பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்க பட்ட நபர் யார், திரு பால் அவர்களா?”





பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக




“பைபிளில், திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்க பட்ட நபர் யார், திரு பால் அவர்களா?”


வாசகர்களே, பொதுவாக கிறிஸ்தவ அறிஞ்சர்கள், திரு உமர் அவர்கள் உட்பட, திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இறைவன் அருளிய தீர்க்கதரிசியாக ஏற்க மறுக்க, அறிவிக்கும் காரணம் அவர் ஒரு கள்ளத்திர்க்கதரிசி என்ற பொய்யுரையாகும். இன்னும் இந்த கருத்தை ஆதரிக்க கிறிஸ்தவ அறிஞ்சர்கள் பொதுவாக கோடிடும் பைபிள் வசனம் Matthew 24:24 ஆகும். இந்த பைபிள் வசனத்தை ஆராய எல்லாம் வல்ல இறைவனின் கிருபையை நாடியவர்களாக இந்த கட்டுரையை துவங்குகிறோம்.



வாசகர்களே, கிறிஸ்தவர்கள் கோடிடும் பைபிள் Matthew 24:24 வசனத்தின் பொருளை முழுமையாக அறிய வேண்டுமெனில் அதற்க்கு முந்தைய மற்றும் பிந்தைய வசனங்களை சேர்த்தே அறிய வேண்டும். உதாரணமாக Matthew 24:24 வசனத்தை அறிய Matthew 24:23-26 என்ற தொடர் வசனங்களை அறிய வேண்டும் அவை இதோ:




Then if someone will say to you, “Behold, The Messiah is here or there”, you should not believe. False messiahs and false prophets will appear. They will work spectacular, miraculous signs and do wonderful things to deceive, if possible, even those whom God has chosen. Listen! I've told you this before it happens. If therefore they will say to you, “Behold, he is in the desert”, you should not go out, or “Behold, he is in an inner room”, do not believe it.  (Matthew 24:23-26)




வாசகர்களே, மேலே திரு இயேசு அவர்கள் அறிவிப்பதாக சித்தரிக்க படும் பைபிள் வசனத்தில், திரு இயேசு அவர்கள் தனக்கு பின் வரவிருக்கும் தீர்க்கதரிசிகளை ஏற்க வேண்டாம் என்று அறிவிப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. மாறாக, திரு இயேசு அவர்கள், தனக்கு பின் வரும் நபர்கள், தான் இங்கு இருப்பதாகவும் அல்லது தான் அங்கு இருப்பதாகவும் அறிவித்தால், தன்னை கண்டதாக பொய்யுரைதால், அந்த பொய்யர்களை நம்பா வேண்டாம் என்றே எச்சரிப்பதாக நம்மால் அறிய முடிகிறது. இன்னும் அதிகப்படியாக கிறிஸ்தவர்கள் அறிவிப்பது போல் அல்லாமல், தனக்கு பின் வரவிருக்கும் தீர்க்கதரிசியை ஏற்று கொள்ளுங்கள் என்றே திரு இயேசு அவர்கள் அறிவிப்பதாக பைபிள்ளில் நம்மால் அறிய முடிகிறது:


"I have a lot more to tell you, but that would be too much for you now.  When the Spirit of Truth comes, he will guide you into the full truth. He won't speak on his own. He will speak what he hears and will tell you about things to come.  (John 16:12-13)




வாசகர்களே, பைபிள்ளில் திரு இயேசு அவர்கள் அறிவிப்பதாக சித்தரிக்க படும் வசனத்தில், திரு இயேசு அவர்கள் தன்னை அங்கு கண்டதாகவும், இங்கு கண்டதாகவும் பொய்யுரைக்கும் நபர்களை நம்பா வேண்டாம் என்று எச்சரிப்பதை மேலே கோடிட்டு இருந்தோம். இவ்வாறு திரு இயேசு அவர்களை ஒரு முறையேனும் உயுருடன் பாத்திராதா ஒரு நபர், சரித்திரத்தில் அவரை அங்கு கண்டதாகவும், இங்கு கண்டதாகவும் அறிவித்தவர் என்ற பட்டியலை நாம் தொகுக்க முயன்றால் அதில் முதலாமானவராக வரும் நபர் திரு பால் அவர்கள்.



As Saul was coming near the city of Damascus, a light from heaven suddenly flashed around him. He fell to the ground and heard a voice say to him, "Saul! Saul! Why are you persecuting me?" Saul asked, "Who are you, sir?" The person replied, "I'm Jesus, the one you're persecuting. Get up! Go into the city, and you'll be told what you should do." Meanwhile, the men traveling with him were speechless. They heard the voice but didn't see anyone. Saul was helped up from the ground. When he opened his eyes, he was blind. So his companions led him into Damascus. For three days he couldn't see and didn't eat or drink. (Acts 9:3 – 9)




"But as I was on my way and approaching the city of Damascus about noon, a bright light from heaven suddenly flashed around me. I fell to the ground and heard a voice asking me, 'Saul! Saul! Why are you persecuting me?' "I answered, 'Who are you, sir?' "The person told me, 'I'm Jesus from Nazareth, the one you're persecuting.' "and those who were with me saw indeed the light, and were afraid; but they heard not the voice of him that spake to me. "Then I asked, 'What do you want me to do, Lord?' "The Lord told me, 'Get up! Go into the city of Damascus, and you'll be told everything I've arranged for you to do.' "I was blind because the light had been so bright. So the men who were with me led me into the city of Damascus. (Acts 22:6 – 11 )




"I was carrying out these activities when I went to the city of Damascus. I had the power and authority of the chief priests. Your Majesty, at noon, while I was traveling, I saw a light that was brighter than the sun. The light came from the sky and shined around me and those who were with me. All of us fell to the ground, and I heard a voice asking me in Hebrew, 'Saul, Saul! Why are you persecuting me? It's hard for [a mortal like] you to resist God.' "I asked, 'Who are you, sir?' "The Lord answered, 'I am Jesus, the one you're persecuting. Stand up! I have appeared to you for a reason. (Acts 26:12 - 16 )





வாசகர்களே, மேலே கோடிட்ட பைபிள் வசனங்கள் திரு பால் அவர்கள் திரு இயேசு அவர்களை சந்தித்ததாக சித்தரிக்கும் வேளையில் நடந்தேறிய நிகழ்வுகளை முன்னுக்கு பின் முரணாக அறிவிக்கிறது. உதாரணமாக:  

  1. முதலாவதாக - திரு பால் அவர்கள், திரு இயேசு அவர்களின் அழைப்பை செவியுற்று புவியில் விழுந்த நிலையில், அவர் உடன் இருந்தவர்கள் திரு இயேசு அவர்களின் குரலை செவியுற்று, அவரை கண்ணால் காணமுடியாத நிலையில் திகைத்து நின்றார்கள் என்பது.
  2. இரண்டமாவது - திரு பால் அவர்கள், திரு இயேசு அவர்களின் அழைப்பை செவியுற்று புவியில் விழுந்த நிலையில், அவர் உடன் இருந்தவர்கள் வானில் ஒளியை கண்டார்கள், ஆனால் அவர்கள் திரு இயேசு அவர்களை செவியுராத நிலையில் பயத்துடன் நின்றார்கள் என்பது.
  3. முன்றமாவது - திரு பால் அவர்கள், திரு இயேசு அவர்களின் அழைப்பை செவியுற்ற வேளையில், அவருடன் இருந்த அனைவரும் புவியில் விழுந்தார்கள் என்பது.


வாசகர்களே, சமீபமாக தனக்கு நடந்தேறிய நிகழ்வை (திரு இயேசு அவர்களை ஒரு முறையேனும் உயுருடன் பாத்திராதா) திரு பால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பைபிள்ளில் அறிவிக்கிறார். இப்படி பட்ட விந்தையான நபர் இயற்றிய நூல்களே பைபிள்லின் புதிய ஏற்பாட்டில் அதிகப்படியாக சேர்க்க பட்டுள்ளது என்று கிறிஸ்தவர்கள் அறிவிக்கிறார்கள். மேலே கோடிட்ட பைபிள் தெளிவான வசனங்கள் வாயிலாக பைபிள்ளில் திரு இயேசு அவர்கள் முன்னமே எச்சரித்த கள்ளத்தீர்க்கதரிசியாக சித்தரிக்க பட்ட நபர் திரு பால் அவர்களாக இருக்குமோ? என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. இதனை தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் தெளிவக்குவார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்




--
--

திரு குர்ஆனில் பிழை திருத்தங்களா? - திரு உமர் அவர்கள் குர்ஆன் மீது கூறிய அவதூறுகளுக்கு மறுப்பு (மறுப்புகளின் தொகுப்பு)


திரு உமர் அவர்கள் குர்ஆன் மீது கூறிய அவதூறுகளுக்கு மறுப்பு 
(மறுப்புகளின் தொகுப்பு )

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
  

அஸ்ஸலாமு அழைக்கும்

பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக

திரு உமர் அவர்கள் சமீபமாக உலகில் உள்ள  திரு குர்ஆனில் (பைபிளை போல்) பல பிழை திருத்தங்கள் (Versions) உள்ளது என்றும், இன்னும் திரு குர்ஆன் பைபிளை போல் முழுமை அடையா நூல் என தன் பொய் கூற்றுகளை வாசகர்களை நம்ப செய்யும் முயற்சியில், பல இடை சொருகள்கள் செய்யபட்டு போலியான மற்றும் தெளிவில்லாத ஆதாரங்களை கொண்டு மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு கொண்டு இருக்கிறார். திரு உமர் அவர்களின் இந்த பொய்யான கருத்துகளை எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் ஒன்றின் பின் ஒன்றாக ஆராய்ந்து தெளிவு பெற முனைவோம்.


வாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவித்த கருத்துகளை ஆராய்வதற்கு முன்னர், இஸ்லாமியர்கள் பைபிளின் நம்பகதன்மைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள்/கருத்துகளுக்கு அடிப்படை என்னவென்பதை பார்போம்:

பைபிள் முரண்பாடுகள் 
ஓர் இறை கொள்கையை பைபிளின் பழைய ஏற்பாடும், ஈஸா (அலை) அவர்களும் தெளிவாக போதிக்க, இதற்கு முற்றிலும் எதிரான திரித்துவ கொள்கையை கிறிஸ்தவர்கள் பைபிளில் இடைசொருகள்கள் செய்ததும், “நானே வணக்கத்திற்கு உரிய இறைவன் என தன்னை ஒரு முறையேனும் தன் வாயால் ஈஸா (அலை) அவர்கள் அறிவிக்காத நிலையில், இன்னும் தன்னை பரிசுத்தமானவர் என்று அழைப்பதை கடுமையாக எதிர்த்த ஈஸா (அலை) அவர்களை, கிறிஸ்தவர்கள் எல்லாம் வல்ல இறைவனுக்கு நிகராக வணங்குவதும், இன்னும் ஈஸா (அலை) அவர்களை ஒருமுறையேனும் உயிருடன்  பார்திராத திரு பால் அவர்கள், பைபிள் புதிய ஏற்பாட்டின் புத்தகங்களை அதிக படியாக இயற்றி, திரு ஈஸா (அலை) அவர்களின் போதனைக்கும்/கொள்கைக்கு முற்றிலும் எதிரான மார்கத்தை விளக்குவதுமே ஆகும். இது (பைபிள்) தொடர்பாக நாம் முன்வைத்த அடிப்படையான ஒரு சில கேள்விகளுக்கு கூட இன்னும் எந்த பதிலும் இல்லை. ஆக நாம் பைபிளை முன்வைத்து எழுதிய அணைத்து கருத்துக்களும்/ கேள்விகளும் உண்மை என்பதை திரு உமர் அவர்கள் ஒப்புக்கொள்கிறார். பைபிளின் குழப்பங்களையும், முரண்பாடுகளையும் மறுத்து விளக்கமளிப்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்த திரு உமர் அவர்கள், சரி பைபிளின் தரத்தை தான் உயர்த்த முடியவில்லை, குர்ஆனின் தரத்தை தாழ்த்தியாவது குர்ஆனின் தரமும் பைபிளின் தரத்தை போன்றதே என்ற மாயயை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

ஆக நாம், குர்ஆனின் மீது திரு உமர் அவர்களும் அவரின் ஆங்கில மூல ஆசிரியர்களும் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் மறுத்து உண்மையை நிரூபித்தாலே, குர்ஆன் இறைவனால் பாதுகாக்கப்பட்ட இறைவேதம் என்பதும், திரு உமர் அவர்கள் முன்னரே அறிவித்தது போல பைபிள் எல்லாம் கலந்த கதை புத்தகம் என்பதும் நிரூபணம் ஆகும்.

திரு உமர் அவர்கள், முன்னர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கூறி வந்தார், எழுத்து விவாததிற்கு தயார் என்றார். அவற்றுக்கு தக்க ஆதரங்களுடன் பதில் எழுதியவுடன் நழுவலாக பதில் என்ற போர்வையில் கேள்விகளையும் பொய் கருத்தையும் முன் வைத்தார். கடைசிவரை எழுத்து விவாததிற்கு வர மறுத்துவிட்டார்.

கடைசியாக எழுத்து விவாதத்திற்கு வர மாட்டேன் என்பதை சூசகமாக, "நான் கட்டுரைகள் ஆதாரங்களுடன் எழுதுகிறேன், முடிந்தால் பதிலளியுங்கள் பாதிப்பு யாருக்கு என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்" என ஒரு தோரணையில் எழுதினார் என்பதை அனைவரும் அறிந்ததே....

சரி இப்போது திருக்குரானை தலைப்பாக எடுத்திருக்கிறார். இப்போதும் கேட்கிறோம், திரு உமர் அவர்களே, நீங்கள் உங்கள் கருத்துக்கள் அனைத்திலும் உறுதியாக இருந்தால், நீங்கள் வெளியிடும் கட்டுரைகள் உங்கள் விவாதத்திற்கு உதவும் என்று நீங்கள் நம்பினால், பைபிளை காட்டிலும் குர்ஆனில் பிழைகள் உள்ளது என நம்பினால் தெளிவாக "பைபிள் - குரான் முரண்பாடுகள்" என்ற தலைப்பில் விவாதிக்க தயார் என பகிரங்கமாக அறிவியுங்கள். பிறகு மற்ற விவரங்கள் முடிவு செய்த பிறகு எழுத்து விவாதத்தை துவங்குவோம்.

ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக இந்த பகிரங்க அழைப்பை விடுகிறோம். உங்கள் பதில் என்ன?

அதுவரையில் வாசகர்கள் பயன்பெறுவதற்காக, இது தொடர்பாக நாம் வெளியிட்ட மருப்புகளின் தொகுப்பு....


  1. குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறா? - குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  2. "isa koran : குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்" என்ற கட்டுரைக்கு மறுப்பு
  3. உமரின் "உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு
  4. திரு உமர் அவர்களின், "வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு


மறுப்புகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்....

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்

உமரின் "உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு


உமரின் "உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா?" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு 


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் 
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) 

 அஸ்ஸலாமு அழைக்கும் - 
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


திரு உமர் அவர்கள், "கலிFபா உஸ்மான் அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் உலகில் உண்டா?" என்ற கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பளிக்கும் விதமாக இந்த கட்டுரையை ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக துவங்குகிறோம்.

வாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவித்த கருத்துகளை ஆராய்வதற்கு முன்னர், இஸ்லாமியர்கள் பைபிளின் நம்பகத்தன்மைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள்/கருத்துகளுக்கு இது வரையிலும் எந்த பதிலும் இல்லை என்பதை நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இன்றுள்ள பைபிளின் மூல பிரதிகள் ஏசுவின் காலத்திற்கு எத்தனை நூற்றன்றுகள் கழித்து எழுதப்பட்டது? அப்படி எழுதப்பட்ட பைபிளுக்கும் இன்றுள்ள பைபிளுக்கும் எத்தனை பகுதிகள் மாறுபடுகின்றன, சேர்க்கப்பட்டுள்ளன, நீக்கப்பட்டுள்ளன? இதனை விவரிக்க திரு உமர் அவர்கள் முன்வருவாரா??

இப்படி பைபிளை பற்றி வாய் திறக்க மறுக்கும் திரு உமர் அவர்கள் குரானை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரு உமர் அவர்கள் முன் வைத்த கேள்விக்கு/ போலியான கருத்துக்கு கிறிஸ்தவர்களே பதிலளிக்கிறார்கள். BBC யை சேர்ந்த கிறிஸ்தவர் Ian MacWilliam வெளியிட்டது.


 இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது "It was completed in the year 651, only 19 years after Muhammad's death." முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குள் தொகுக்கப்பட்டதென்று. 

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, "Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood." அந்த குர்ஆன் மூல பிரதியில் இரத்த கரை போன்ற கரைகள் இருப்பதாகவும் அவை கலிFபா உத்மான் அவர்கள் கொல்லப்படும்போது ஏற்பட்ட கரையாக இருக்கலாம் என்று... 

திரு உமர் அவர்கள் வெளியிட்டது...

"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

திரு உமர் அவர்களே, இப்படி உங்களை அறியாமலேயே நீங்கள் உண்மையை ஒப்பு கொள்கிறீரே!!! ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் (இடம்பெயர்தல்) செய்தார்களே அந்த ஆண்டிலிருந்து துவங்குகிறது. முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ஏறக்குறைய ஹிஜ்ரத் செய்து பதினோரு ஆண்டுகள் கழித்து மரணிக்கிறார். உங்களின் ஆதாரப்படியே, முஹம்மது நபி ஸல் அவர்கள் மரணித்து தொண்ணூறு ஆண்டுகளுக்குள்ளாக எழுதப்பட்ட கையெழுத்து பிரதி இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது.

சரி ஏசு மரணித்த பிறகு, நூறு ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட ஏதேனும் பைபிள் எழுத்துக்கள் உள்ளனவா? முழுவதுமாக கேட்கவில்லை ஏதேனும் ஒரு சில வரிகள்.....????  

மறுப்புகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்....

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்







Thursday, October 13, 2011

“ஆபிரகாமின் உண்மைப் பெயர் பைபிள் இறைவனுக்கு தெரியுமா?”




பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



ஆபிரகாமின் உண்மைப் பெயர் பைபிள் இறைவனுக்கு தெரியுமா?



வாசகர்களே, திரு உமர் அவர்களின் வழக்கமான பொய்யுரைகளில் ஒன்றான “ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா? என்ற மொழிபெயர்ப்பு கட்டுரையை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியை நாடியவர்களாக இந்த கட்டுரையில் ஆராய முனைவோம்.



திரு உமர் அவர்கள் வெளியிட்ட “ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா? என்ற கட்டுரையில் தோராவின், ஆதியாகமம் 17: 1-5 வசனங்கள் ஆபிரகாமின் முந்தையா பெயர் “ஆபிராம்” என்று விவரிப்பதாகவும், ஆனால் இதற்க்கு மாறாக திரு குர்ஆன் ஆபிரகாமின் இளமை பருவத்தை விவரிக்கும் வேளையிலும், அவரின் முந்தைய பெயரை அறியாமல், அவரை ஆபிரகாம் என்றே குறிப்பிடுகிறது என்றும்,  இது ஒரு சரித்திர பிழை என்று வாசகர்களை நம்ப செய்யும் முயற்சியில் கட்டுரை மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார். இந்த கருத்துக்கு ஆதாரமாக திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஆதாரம்:

பைபிள்

When Abram was 99 years old, the LORD appeared to him. He said to Abram, "I am God Almighty. Live in my presence with integrity. I will give you my promise, and I will give you very many descendants." Immediately, Abram bowed with his face touching the ground, and again God spoke to him, "My promise is still with you. You will become the father of many nations. So your name will no longer be Abram, but Abraham because I have made you a father of many nations. (Genesis 17:1-5)


திரு குர்ஆன்

21:60   قَالُوا سَمِعْنَا فَتًى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ

21:60அதற்கு (அவர்களில் சிலர்) இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறதுஎன்று கூறினார்கள்.




வாசகர்களே, திரு உமர் அவர்களும், இன்னும் பல கிறிஸ்தவ ஊழியர்களும், நம்மை ஏற்க பணிக்கும் தோரா வேதம் பைபிள்லின் ஒரு பகுதி என்ற பொய்யுரையை முதலில் ஆராய முனைவோம். இதற்க்கு முன்னரே பைபிள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள், தோராவின் பகுதிகளாக இருக்க முடியாது என்றும், இன்னும் அதிகப்படியாக இந்த புத்தகங்களை திரு மூஸா (அலை) அவர்கள் இயற்றி இருக்க வாய்ப்பு கிடையாது என்பதனையும் தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு நாம் இதற்க்கு முன்னரே கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இதற்க்கு தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் மறுப்பு அளிக்காத நிலையிலும், அவர் தொடர்ந்து இதே கருத்தினை வெளியிட்டு கொண்டு இருக்கிறார். பைபிள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள் தோராவின் பகுதிகளா? இத்தனை இயற்றிய நபர் திரு மூஸா (அலை) அவர்களா? என்ற கேள்விகளின் தொடர்ச்சியாக இன்னும் ஒரு ஆதாரத்தை வெளியிடுகிறோம். இது பொதுவாக திரு உமர் அவர்கள் ஆதாரம் தேடும் விக்கிபீடியா அறிவிப்பது. கிழே தொடுக்க படும் விக்கிபீடியா ஆதாரம் வாயிலாக பைபிள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள் தோராவின் பகுதிகள் அல்ல என்பதும், இன்னும் இந்த புத்தகங்களை இயற்றிய நபர் திரு மூஸா (அலை) அவர்கள் அல்ல என்பதும் வாசகர்களுக்கு தெளிவாகும் என்று நம்புகிறோம்.      


Tradition credits Moses as the author of Genesis, Exodus, Leviticus, Numbers and Deuteronomy, but the books are in fact anonymous and look back on Moses as a figure from the distant past;[3] some traditions contained in Genesis are as old as the United Monarchy, but modern scholars increasingly see it as a product of the 6th and 5th centuries BCE.[4]

For much of the 20th century most scholars agreed that the five books of the Pentateuch - Genesis, Exodus, Leviticus, Numbers and Deuteronomy - were made up of four sources, the Yahwist, the Elohist, the Deuteronomist and the Priestly source, each telling the same basic story, and joined together by various editors.[10] Since the 1970s there has been a revolution in scholarship: the Elohist source is now widely regarded as no more than a variation on the Yahwist, while the Priestly source is increasingly seen not as a document but as a body of revisions and expansions to the Yahwist (or "non-Priestly") material. (The Deuteronomistic source does not appear in Genesis).[11]

In composing the Patriarchal history the Yahwist drew on four separate blocks of traditional stories about Abraham, Jacob, Judah and Joseph, combining them with genealogies, itineraries and the "promise" theme to create a unified whole.[12] Similarly, when composing the "primeval history" he drew on Greek and Mesopotamian sources, editing and adding to them to create a unified work that fitted his own theological agenda.[13] The Yahwistic work was then revised and expanded into the final edition by the authors of the Priestly source.[14]

This leaves the question of when these works were created. Scholars in the first half of the 20th century came to the conclusion that the Yahwist was produced in the monarchic period, specifically at the court of Solomon, and the Priestly work in the middle of the 5th century (the author was even identified as Ezra), but more recent thinking is that the Yahwist was written either just before or during the Babylonian exile of the 6th century, and the Priestly final edition was made late in the Exilic period or soon after.[4]

As for why the book was created, a theory which has gained considerable interest, although still controversial is "Persian imperial authorisation". This proposes that the Persians, after their conquest of Babylon in 538 BCE, agreed to grant Jerusalem a large measure of local autonomy within the empire, but required the local authorities to produce a single law code accepted by the entire community. The two powerful groups making up the community - the priestly families who controlled the Temple and who traced their foundation-myth to Moses and the wilderness wanderings, and the major landowning families who made up the "elders" and who traced their own origins to Abraham, who had "given" them the land - were in conflict over many issues, and each had its own "history of origins", but the Persian promise of greatly increased local autonomy for all provided a powerful incentive to cooperate in producing a single text.[15]






இரண்டாவதாக, திரு உமர் அவர்கள், பைபிள் தோராவின் ஆதியாகமம் அறிவிப்பதாக அறிவிக்கும் திரு ஆபிரகாம் அவர்களின் பெயரும், இன்னும் அதற்க்கு பைபிள் அறிவிக்கும் விளக்கமும் முற்றிலும் தவறானது என்று கிறிஸ்தவ பைபிள் அறிஞ்சர்கள் சாட்சியளிக்கும் இன்னும் ஒரு விக்கிபீடியா ஆதாரம்:

Etymology

Abraham first appears as Abram in the book of Genesis until he is renamed by God in Genesis 17:5. The narrative indicates that abraham means “the father of a multitude" (Hebrew: ʼaḇ-hămôn goyim).[13] However, scholars do not accept the narrative's definition to be the etymology of Abraham because, though "ab-" means "father", "-hamon" is not the second element, and "-Raham" is not a word in Hebrew. The word in Hebrew for "multitude" is rabim. Johann Friedrich Karl Keil suggested that there was once a word raham (רָהָם) in Hebrew that meant "multitude", on analogy with the Arabic ruhâm which does have this meaning. [14] another possibility is that the first element should be abr-, which means "chief", but this yields a meaningless second element, "-aham". David Rohl suggests the name comes from the Akkadian "the father loves",[15] but scholars would prefer an origin based on Hebrew.[why?]




முன்றாவதாக, பைபிள்லின் எல்லா பகுதிகளும், இன்னும் அணைத்து புத்தகங்களும் பைபிள்லின் இறைவனால் வழங்க பெற்றது என்பது சராசரி கிறிஸ்தவர்கள் நம்பிக்கை. இந்த புத்தகங்களை முகவரி இல்லாத நபர்கள் இயற்றி இருந்த போதிலும், இதனை வழங்கியது இறைவன் என்பது அவர்கள் நம்பிக்கை. திரு உமர் அவர்களின் கருத்தின் அடிப்படையில், திரு ஆபிரகாம் அவர்களுக்கு பைபிள்ளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை, திரு குர்ஆனில் அவருடைய முந்தைய சரித்திரத்தை விவரிக்கும் வேளையில் இறைவன் அறிவிக்க தவறியதால், திரு குர்ஆனின் இறைவன் ஆபிரகாமின் முத்தையா பெயர் அறியாதவர் என்று வாதிட விரும்பும் திரு உமர் அவர்கள், பைபிள்ளில் திரு ஆபிரகாம் அவர்களின் பெயர் மாற்றத்திற்கு முந்திய வரலாற்றை விவரிக்கும் வேறு புத்தகங்களில், அவரை ஆபிரகாம் என்று பிந்தையா பெயரை கொண்டே பைபிள்லின் இறைவன் குறிப்பிடுவதை பற்றி திரு உமர் அவர்கள் அறியவில்லையா? திரு உமர் அவர்களின் கருத்தின் அடிப்படையில், பைபிள்லின் இறைவன் ஆபிரகாமின் முந்தைய பெயரை அறியாதவரா?



திரு உமர் அவர்களே, இந்த புத்தகங்களை முகவரியற்ற மனிதர்கள் இயற்றி இருப்பினும், உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில், இவை இறைவன் வழங்கிய புத்தகங்கள் தானே, அப்படியானால் உங்கள் கருத்தின் அடிப்படையில் ஆபிரகாமின் முந்தைய வாழ்கையை விவரிக்கும் வேளையில் பைபிள்லின் இறைவன் ஆபிரகாமின் பெயரை ஆபிராம் என்று தானே விவரித்து இருக்க வேண்டும்???



Then the high priest said, “Are these things true?” So he replied, “Brothers and fathers, listen to me. The God of glory appeared to our forefather Abraham when he was in Mesopotamia, before he settled in Haran, and said to him, ‘Go out from your country and from your relatives, and come to the land I will show you.’ Then he went out from the country of the Chaldeans and settled in Haran. After his father died, God made him move to this country where you now live. (Acts 7:1-4)




திரு உமர் அவர்களே, ஒரு வாதத்திற்காக நீங்கள் அறிவிக்கும் பைபிள் சரித்திரம் உண்மை என்று எடுத்து கொண்டாலும், ஒரு முறை இறைவனால் பெயர் மாற்றம் செய்யபட்ட நபரை, பின்னாளில் குறிப்பிடும் வேளையில், அவருடைய புதிய பெயரை கொண்டு அறிவிப்பது தானே முறையானது? அல்லது அவருடைய முந்தைய சரித்திரத்தை அறிவிக்கும் வேளையில் முந்தைய பெயரையும், இன்னும் பிந்தைய சரித்திரத்தை அறிவிக்கும் வேளையில் பிந்தைய பெயரையும் அறிவிப்பது வழக்கத்தில் உள்ளதா?



திரு உமர் அவர்களே ஆபிரகாம் இறைத்தூதர், ஆகையால் அவருக்கு பைபிள்ளில்  இறைவன் பெயர் மாற்றம் செய்தான் என்று கிறிஸ்தவர்கள் அறிவிக்கிறீர்கள். ஆபிரகாமின் மனைவி என்ன இறைதூதரா? மூதாட்டி ஆனா அவருக்கு எதற்காக இறைவன் பைபிள்ளில் பெயர்மாற்றம் செய்தான்? ஓ ஆபிரகாமின் மனைவி தன் அடிமை பெண்ணை ஆபிரகாமிற்க்கு திருமணம் இன்றி கற்பழிக்க கொடுத்து, அவள் கர்ப்பம் தரித்த வேளையிலும், அவளை துன்புறுதி அடிமை தானம் செய்ததற்கு இறைவன் வழங்கிய மேன்மையான பரிசா அது???   

Then God said to Abraham, “As for your wife, you must no longer call her Sarai; Sarah will be her name. (Genesis 17:15)




வாசகர்களே, வழக்கமாக நாம், திரு உமர் அவர்கள் எந்த தெளிவான பைபிள் வசன ஆதாரத்தையும் முன் வைத்து பதில் அளிக்க முயற்சிக்க போவது இல்லை என்பதனை தெளிவாக அறிந்து கொண்டே, திரு உமர் அவர்கள் தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு பதில் அளிப்பார், என்ற போலியான நம்பிக்கையில் உங்களிடம் விடை பெறுவதை போல், இந்த கட்டுரையிலும் நாங்கள் உங்களிடம் விடை பெறுகிறோம். எல்லாம் வல்ல இறைவன் நாடினால் விரைவில் மிண்டும் சந்திப்போம்.


அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்  


--

--