பிஸ்மில்லா
ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் -
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது
உண்டாகுக
திரு உமர் அவர்களின் “கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு: பாகம் ஒன்றின் தொடர்ச்சி...
போதகர்:
|
பிரதர், நாம் பைபிளில் படிப்பது போல, நிகழ்ச்சிகள் கோர்வையாக குர்ஆனில் சொல்லப்படவில்லை. என்று திரு உமர் அவர்கள் அறிவிக்கிறார் அதை பற்றி?
|
||||||
நாம்:
|
அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறது பாஸ்டர், உண்மையில் பைபிள் நிகழ்வுகளை கோர்வையாக அறிவிக்கிறதா? பைபிள் என்பது முகவரியற்ற பல மனிதர்கள், பல காலகட்டங்களில் இயற்றிய பல புத்தகங்களின் கோர்ப்பு (இந்த புத்தகங்களின் எண்ணிகையில் கிறிஸ்தவ அறிஞ்சர்கள் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது). இவற்றில் ஒரு நிகழ்வை முழுமையாக அறிய குறைந்த பட்சம் நான்கு புத்தகங்களை/சுவிசேஷங்களை படிக்க வேண்டும். உதாரணமாக, இயேசு கடைசியாக வாய்
மொழிந்தது என்னவென்று திரு உமர் அவர்களை கேட்டு பாருங்கள். அவர் பல வசனங்களை கோடிடுவார்?
இவை அனைத்தும் ஒரே புத்தகத்தில் இருந்து எடுக்க பட்டதா என்று கேட்டு பாருங்கள், "இல்லை" என்று பதில் வரும். அப்படியானால் இயேசு அவர்கள் கடைசியாக வாய் மொழிந்த சில
வசனங்களை/ஒரு தொடர் நிகழ்வை அறிய நாம் எல்லா புத்தகங்களை/சுவிசேஷங்களை அறிய
வேண்டும் என்றால் அது எவ்வாறு பைபிள் ஒரு நிகழ்வை கோர்வையாக அறிவிப்பதாகும்?
1. Father forgive them, for they know not what they do (Luke 23:34). 2. Truly, I say to you, today you will be with me in paradise (Luke 23:43). 3. Woman, behold your son: behold your mother (John 19:26-27). 4. My God, My God, why have you forsaken me, (Matthew 27:46 and Mark 15:34). 5. I thirst (John 19:28). 6. It is finished (John 19:30). 7. Father, into your hands I commit my spirit (Luke 23:46).
மேலும் கதை புத்தகங்கள்
தான் கோர்வையாகவும், முதல் பக்கம் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை தொடர்ச்சியாகவும்
இருக்கும். (சூசகமாக திரு உமர் அவர்கள் பைபிள் ஒரு கதை புத்தகம் என்பதை சொல்லாமல்
சொல்கிறார்). ஆனால் திரு குர்ஆன் மனித வாழ்வின் நெறிகளை விளக்கும் சட்டதிட்டங்கள் நிறைந்த வேத நூல். சட்டதிட்டங்களை விளக்கும் புத்தகங்களில் உதாரணங்கள்/நிகழ்வுகள் கோர்வையாக இல்லை என யாராவது கூறினால் அவர்களை நாம் என்னவென்று கருதுவது? ஒரு சட்டம் பற்றி அறிவிக்கும் வேளையில் அதற்கு சம்பந்தமான வரலாற்று நிகழ்வுகளை தேவையான அளவுக்கு மட்டுமே கூறப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, தூக்கு தண்டனை பற்றி அறிவிக்கும் வேளையில், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் ஒரு சில விவரங்கள் கூறப்பட்டிருக்கும். அதற்காக தண்டனைக்கு உரியவன் பிறந்த வரலாறு, வளர்ந்த வரலாறு பற்றி அதில் கூறவில்லை என யாராவது கூறினால் அவரை என்னவென்று சொல்வது?
|
||||||
போதகர்:
|
பிரதர், குர்ஆனில்
பைபிளிலிருந்து சில நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது, அப்படி
சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் கூட முழுவதுமாக சொல்லப்படாமல் பாதி விவரங்கள் மட்டுமே
சொல்லப்பட்டுள்ளது. இந்த
நிகழ்ச்சிகளை முழுவதுமாக அறிந்துக்கொள்ள பைபிளை படித்தால் மட்டுமே
புரிந்துக்கொள்ளமுடியும். என்று திரு உமர் சொல்கிறாரே?
|
||||||
நாம்:
|
அப்படியா, அப்படி என்றால் எந்த பைபிளை படித்தால்
இந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள முடியும் என்று அவரிடமே கேட்டு சொல்லுங்கள். ஏனெனில்
எண்ணிகையில் அடங்க பைபிள் பிழை திருத்தங்கள் உலா வருகின்றன. அவற்றில் எதனை திரு
உமர் அவர்கள் ஏற்று கொண்டார் என்று தெளிவாக அறிவிக்க சொல்லுங்கள்.
மேலும் பைபிள் பல இடங்களில் தனக்கு தானே முரண்படுகிறது. எனவே, பைபிள் கூறும் கீழ்க்கண்ட நிகழ்வுகளில் எது உண்மை என்பதை திரு உமர் அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள்??? | ||||||
போதகர்:
|
பிரதர், இஸ்லாம் வந்து 1400 ஆண்டுகளுக்கு மேல்
ஆகிறது, இன்னும் இஸ்லாமியர்களே இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ளவில்லை, நீங்க
அவ்வளவு சீக்கிரமாக அறிந்துக்கொள்ள முடியுமா என்ன? என்று திரு உமர் அவர்கள்
கேட்கிறாரே??
|
||||||
நாம்:
|
இஸ்லாம் ஒரு முடிவில்லா கடல். கிறிஸ்தவத்தை போல,
இயேசு அவர்கள் துவங்கிய மார்க்கம் என்று பொய்யுரைக்க பெற்று திரு பால் அவர்களால்
வழக்க பெற்றது அல்ல. இயேசு அவர்கள் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் தான் ஒரு
புதிய மார்கத்தை நிருவுகிறேன் அதற்கு பெயர் கிறிஸ்தவம் என்று அறிவித்த எந்த
தெளிவான ஆதாரத்தையும் நம்மால் காண முடியவில்லை. இஸ்லாம் ஆதி முதல் வேறூன்றி இருக்கும் மார்க்கம். உலகம் தோன்றியது முதல்
வந்த அணைத்து நபி மார்களும் இஸ்லாத்தை நிலை நாட்டவே வந்தார்கள், என்பது இஸ்லாமிய
நம்பிக்கை. கிறிஸ்தவம் போல் முந்தைய இறைதுதர்கள், "ஒரு இறைவனை வணங்க பணித்து அதையே
இயேசு அவர்களும் வாய்மொழிய" அதை விடுத்து மூன்று இறைவன் என்று அறிவிப்பவர்கள்
இஸ்லாமியர்கள் அல்ல. ஆகையால் இஸ்லாமின் முழுமையான வரலாற்றை அறிய சிறிது சிரமம்
மேற்கொள்ள வேண்டுமே அன்றி இஸ்லாம் அறிந்து கொள்ள கடினமான மார்க்கம் அல்ல...
இந்த உலகில் வசதியாகவும் மற்றும் நிம்மதியாக வாழ்வதற்காக ஒருவர் தனது மூன்று வயது முதல் தன் வாழ்நாளில் பாதி நேரத்தை முதலீடு செய்கிறான். இந்த உழைப்பானது கல்வி பயில்வதுடன் நின்றுவிடாமல், அலுவலக வேலையாக தன் உழைப்பை தொடர்கிறான். இன்னும் அநேகர் தன் வாழ்நாள் முழுவது உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த சாதாரண உலக தேவைகளுக்காக நம் வாழ்நாளில் முக்கால் பாகத்தை செலவிடுகிறோம்.
அப்படி என்றால் இந்த வாழ்வை நமக்கு அருளிய இறைவனை துதிப்பதற்கு, அவன் வகுத்து தந்த சட்ட திட்டங்களை அறிந்துகொள்வதற்கு, இந்த உலகத்திற்கான உழைப்பை விட குறைவான நேரமே தேவைபடுகிறது. இதற்கான நேரத்தை செலவு செய்வதற்கு ஒருவன் தயங்குவனே யானால், அவன் இறைவனின் அருளில் நன்றி மறந்தவனாகவே இருக்கிறான்.
சரி இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்னரும் பைபிளை கிறிஸ்தவர்கள் முழுவதுமாக அறிந்துள்ளனரா? கர்த்தர் தடுத்த "பன்றி மாமிசம்" உண்பதற்கு தடை இல்லை என திரு உமர் அவர்கள் கூட இன்று வரை கூறி வருகிறார். இப்படி பல முரண்பாடுகள் உள்ளன.
பார்க்க: பன்றியின் மாமிசம்
|
||||||
போதகர்:
|
பிரதர் தமிழ் நாட்டிலே
பாருங்க. நாங்க தான் உண்மையான முஸ்லீம்கள் என்று ஒரு குழு சொல்லும், இன்னொரு குழு நாங்க தான் உண்மையான முஸ்லீம்கள்
என்றுச் சொல்லும். இந்த ஹதீஸ் தவறு என்று ஒரு குழு சொல்லும், இல்லை இல்லை அது சரியான ஹதீஸ் என்று இன்னொரு குழு
சொல்லும். என உமர் சொல்கிறாரே??
|
||||||
நாம்:
|
பாஸ்டர் கருத்து வேறுபாடு என்பது எல்லா மதத்திலும்
உள்ளதே, திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் “நாங்க தான் உண்மையான
முஸ்லீம்கள் என்று ஒரு குழு”
அறிவித்த ஆதாரங்களை நம்மால் அறிய முடியவில்லை. மாறாக நாங்கள் நபிவழியை முழுமையாக
கடைபிடிக்கிறோம் என்று அறிவிக்கும் மனிதர்களை நாம் காணலாம். இதற்கு பொருள்
இவ்வாறு அறிவிக்கும் நபர்கள் தான் உண்மை முஸ்லிம்கள் என்று அல்ல. இன்னும் சொல்ல போனால் திரு உமர் அவர்கள் அறிவிக்க விரும்பும் நபர்கள் தமக்கென்று ஒரு திரு குர்ஆனை கொண்டவர்கள் அல்ல. எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே என்பதிலும் அவன் அருளிய திரு குர்ஆன் ஒன்று என்ற அடிப்படையில் ஒரே திரு குர்ஆனை கொண்டவர்கள் தான். ஆனால் கிறிஸ்தவ அமைப்புகள் தமக்கென தனி பைபிள்
கோர்புகளை கொண்டுள்ளார்கள். இவர்களின் யார் உண்மை கிறிஸ்தவர் என்பதை திரு உமர்
அவர்கள் தான் அறிவிக்க வேண்டும்!!!
|
||||||
போதகர்:
|
பிரதர், இஸ்லாம் பற்றி அறிய இஸ்லாம் அல்லாதோர்கள் எழுதிய நூல்களையும் படிக்க வேண்டும் என்று திரு உமர் அவர்கள் சொல்கிறாரே...?
|
||||||
நாம்:
|
பாஸ்டர், நாம் முன்னமே அறிவித்து போல் இஸ்லாமை அறிய
திரு குர்ஆன் மற்றும் ஸஹிஹ் ஹதிஸ் நூல்களை படித்தால் போதும். ஆனால் கிறிஸ்தவத்தை
அறிய பைபிள் ஒன்று போதுமா? அது இயேசு அவர்களின் வாழ்கை ஒரு சில ஆண்டுகளை மட்டுமே
அறிவிக்கிறது. ஏனைய ஆண்டுகளை அறிய கிறிஸ்தவம் மற்றும் கிறிஸ்தவம் அல்லாதோர்
இயற்றிய நூல்களை படிக்கலாமா என்று திரு உமர் அவர்களை கேட்டு சொல்லுங்கள்.
|
||||||
போதகர்:
|
பிரதர், முஹம்மதுவின் இராணுவ
பலம் அதிகரித்த போது, மற்ற நாட்டு மன்னர்களுக்கு "இஸ்லாமை தழுவும் படி முஹம்மது
கடிதங்கள்" எழுதினார். அதாவது,
"இஸ்லாமை ஏற்கிறாயா அல்லது என் இராணுவத்தால் மடிந்து சாகிறாயா" என்று
கேட்டு, பயப்படவைத்து இஸ்லாமுக்கு அழைத்தார். என்று புதிதாக எதையோ சொல்கிறாரே??
|
||||||
நாம்:
|
பாஸ்டர் திரு உமர் அவர்கள் அறிவிக்கும் இதை போன்ற
செய்திகளுக்கு தெளிவான ஆதாரம் எங்கே என்று அவரிடம் கேட்டு விடாதீர்கள். மீண்டும்
இரண்டு மாதம் தலைமறைவாகி விட போகிறார். இதை போன்று அவருடைய கருத்துக்கு நாம்
முன்னரே தெளிவான மறுப்பு அளித்துள்ளோம்.
இவற்றுக்கு விடை அளிக்காமல் மீண்டும் மீண்டும் தன்
பொய் கூற்றுகளை உங்களை போன்ற ஏமாளிகளை நம்ப சொல்கிறார்.
பாஸ்டர் நான் உங்களை கேட்கிறேன். தன்னை ஏற்க மறுத்த
மனிதர்களை எதற்காக இயேசு அவர்கள் பழிதீர்க்க பணித்தார்? பைபிளில் இயேசு அவர்கள் தன் வாயால் அறிவித்த தெளிவான வசனம் உதவி கொண்டு திரு உமர் அவர்களை
பதில் சொல்ல சொல்லுங்கள்...
| ||||||
போதகர்: |
பிரதர், திரு உமர் அவர்கள் திரு பீ.ஜே. அவர்களுக்கு தான் பதில் அளித்ததாகவும் அதற்கு அவர் பதில் அளிக்க வில்லை என்றும் அறிவிக்கிறாறே? |
||||||
நாம்:
|
பாஸ்டர், திரு பீ.ஜே. அவர்களுக்கு எழுத்து
விவாதத்தில் நம்பிக்கை இல்லை. அதுவும் திரு உமர் போன்ற பொய்யர்கள், தங்கள்
இயற்பெயரை யேனும் வெளியிட துணிவில்லாத கோழைகள் எழுத்து விவாதம் புரிய
தகுதியற்றவர்கள் என்பது அவருடைய கருத்து. அவர் தெளிவாக இஸ்லாமியர்களுக்கு எதிராக
கருத்து அறிவிப்பவர்களை நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்தள்ளார். இதை ஏறக்க
திரு உமர் அவர்களுக்கு துணிவு இல்லை போலும். அப்படியே திரு பீஜே அவர்கள் மறுப்பு வெளியிட்டால் திரு உமர் அவர்கள் அந்த கட்டுரைகள்
நீக்கிவிடவா போகிறார். இதுவரை நாமே பல தெளிவான ஆதாரம் கொண்ட மறுப்புகளை
வெளியிட்டு இருக்கிறோம். இன்னும் தெளிவான எழுத்து விவாத அழைப்புகளை விடுத்து
உள்ளோம். இவற்றை தெளிவாக ஏறக்க மறுக்கும் திரு உமர் அவர்களுக்கு திரு பீஜே அவர்களை எழுத்து
விவாதத்திற்கு அழைக்க தகுதி உள்ளதா என்று நீங்களே சொல்லுங்கள் பாஸ்டர்...
|
||||||
போதகர்:
|
பிரதர், இஸ்லாமிய
பின்னணியிலிருந்து வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட எங்களைப் போன்றவர்கள் பல
ஆண்டுகளாக இஸ்லாமை கற்றுக்கொண்டு இருக்கிறோம், இன்றும் கூட ஒவ்வொரு நாளும் இஸ்லாமை தொடர்ந்து
படித்துக்கொண்டு இருக்கிறோம். பல இஸ்லாமிய நூல்களை படிக்கிறோம், ஆங்கிலத்திலும் படிக்கிறோம். அரபியிலும்
படிக்கிறோம் அல்லது அரபி தெரிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறோம்.
என்று திரு உமர் அவர்கள் அறிவிக்கிறே..
|
||||||
நாம்:
|
அப்படியா, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது பாஸ்டர்,
இதனை விவரங்களை ஆராய்ந்த பிறகும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விவாதம் புரிய
தெளிவான ஆதாரம் அவருக்கு கிட்ட வில்லையா? ஏன் அவர் தினமும் ஜபிக்கும் இயேசு இதை
எடுத்து தர முன் வரவில்லையா? நாங்கள் திரு உமர் அவர்களுக்கு மறுப்பு அளிக்க
இத்தனை சிரமங்கள் மேற்கொள்ளுவது இல்லை. அவர் வெளியிடும் விவரங்களை ஆராய்கிறோம்
அவ்வளவு தான். அவர் எடுத்து வைக்கும் ஆதாரத்தில் இருந்தே அவருக்கு எதிரான உள்ள விவரங்களை வெளிபடுத்துகிறோம். இன்னும் பைபிள் ஒன்று போதுமே அவர்
இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவிக்கும் கருத்துகளை அறிவிக்க அவர் ஒண்டி இருக்கும்
கிறிஸ்தவம் தகுதியற்றது என்று நிரூபிக்க.
பாஸ்டர், இஸ்லாமியர்களுக்கு எதிராக இதனை ஆய்வு
நேரங்களை வீன் விரயம் செய்யும் திரு உமர் அவர்கள் அதற்கு பதிலாக சிறிது
நேரத்தை கிறிஸ்தவத்தை அறிந்து பைபிள் தெளிவான வசன ஆதாரமிட்டு விடை அளிக்க
செலவழித்து இருந்தால் கிறிஸ்தவம் செழித்து இருக்குமே. இப்படி அவருடைய பொய்
கூற்றுகளை நம்ப உங்களை கெஞ்ச வேண்டிய அவசியம் வந்து இருக்காது அல்லவா..
. |
||||||
போதகர்:
|
பிரதர், திரு உமர் அவர்களிடம் நீங்க ஒரு முறை எங்க சபைக்கு வரணும், ஒரு மணி நேரம் உங்களிடம் எங்க விசுவாசிகள் தங்கள்
சந்தேகங்களை கேட்பாங்க. அப்போ நீங்க ஒரு முன்னுரையை கொடுத்தால் போதும் மிகவும்
உதவியாக இருக்கும்
என்று கேட்டு இருந்தேன், நீங்கள் சொல்லுவதை பார்த்தல் அவ்வாற இதை செய்ய முன் வரமாட்டார் போலும்!!!.
|
||||||
நாம்:
|
பாஸ்டர், இஸ்லாமியர்கள் நீண்ட நெடுநாட்களாக திரு
உமர் அவர்களை நேரடி விவாதத்திற்கு அழைத்து அவர் வரவில்லை. இன்னும் எழுத்து
விவாதத்திற்கு தெளிவான அறிவிப்பு கொடுக்க பெற்றும் அதை ஏற்கவும் அவர் முன் வரவில்லை. குறைந்த பட்சம் அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை வெளியிடுவார் என்று
வாசகர்கள் எதிர் பார்த்தார்கள், அதற்கும் அவர் மசியவில்லை. இன்னும் அவர் இயற்
பெயர் என்ன, ஆணா? பெண்ணா? போன்ற அடிப்படை கேள்விக்கு கூட பதில் இல்லை. இப்படி
பட்ட நபரையா நீங்கள் உங்கள் சபைக்கு வந்து விசுவாசிகள் கேள்விக்கு பதில் அளிக்க
சொல்கிறீர்கள்? நாங்கள் இரு இளைஞர்கள் கேட்கும் ஒரு சில கேள்விக்கே பதில்
அறியாமல் விழிக்கும் திரு உமர் அவர்கள் உங்கள் சபையினர் கேட்கும் கேள்விக்கு
பதில் அளிக்க முன் வருவாரா? பகல் கனவு காணாதீர்கள். முதலில் அவருடைய
இணையதளத்தில் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பைபிள் ஆதாரம் கொண்டு
விடை அளிக்க சொல்லுங்கள், பின்பு உங்கள் சபையினர் கேள்விகளுக்கு பதில் அளிக்க
அவர் முயற்சிக்கட்டும். அல்லது உமர் அவர்கள் பங்குபெறும் சபைக்கு நாங்களும் வருகிறோம். கிறிஸ்தவர்கள் இருக்கும் சபை தானே அதனால் அவருக்கு பயம் தேவை இல்லை.
|
||||||
போதகர்:
|
பிரதர், நீங்கள் சொல்வதும் உண்மை தான். திரு உமர்
என்று எண்ணி நானும் ஒரு நபரிடம் பேசிவிட்டு வந்தேன். ஆனால் அது இணைய தளத்தில் வெளியிட பட்ட பொழுது ஏதோ மூன்றாவது நபர் பேசிவிட்டு சென்றது போல், இருவரும் சில நிமிடங்கள் ஜெபித்து விட்டு, விடைப்பெற்றுக்கொண்டு சென்றார்கள். என்று முடிவில்
அறிவித்து இருந்தார்...
|
||||||
நாம்:
|
பாஸ்டர், நீங்களும் ஏமாந்துட்டீங்களா? திரு உமர்
என்பது ஒரு நபர் அல்ல பல நண்பர்கள் ஒன்று சேர்ந்து உமர் என்ற பெயரில் கட்டுரை
வெளியிடுவதாக அந்த ஆசிரியரே பல முறை அறிவித்து இருக்கிறார்கள். இவர்களில் ஒருவரை
நீங்கள் சந்தித்து இருக்கலாம்!!! அதனால் தான் அந்த கட்டுரையின் ஆரம்பத்தில் “அந்த விசுவாசி அனேக இஸ்லாமிய கேள்விகளை கேட்பதாக தெரிந்தது. அந்த
விசுவாசிக்கு யாரோ இஸ்லாம் பற்றிய அறிவை புகட்டியுள்ளார்கள் என்பது மட்டும்
தெளிவாக புரிந்தது. அந்த போதகரிடம் இப்போது நாம் உரையாடுவோம்“ என்று அறிவித்த நபர்
முடிவில் நீங்கள் அறிவிப்பது போல் அறிவிக்கிறார். இன்னும் தன் ஒருவனால் உங்கள்
சபை கேள்விகளை சமாளிக்க முடியாது என்பதனாலோ என்னவோ அந்த நபர் தன் நண்பர்கள் படை
சூழ வந்து உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அறிவிக்கிறார்..
கர்த்தருக்கு சித்தமானால், அந்த கூடுகையில் என் நண்பர்களோடு உங்களை
சந்திக்கிறேன்...
|
||||||
போதகர்:
|
பிரதர், உங்கள் விளக்கங்கள் அருமையாக இருந்தது.
நீங்கள் இப்படி விளக்கங்கள் அளிப்பதனால் திரு உமர் அவர்கள் கோபம் கொண்டு
இஸ்லாமியர்களுக்கு எதிராக இன்னும் அதிக அதிகமாக பொய்யும் புரட்டும் சொல்ல
மாட்டாரா??
|
||||||
நாம்:
|
பாஸ்டர், இதை போன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக இன்னும் அதிக அதிகமாக பொய்யும் புரட்டும் சொல்வேன் என்று, சில வாரங்களுக்கு முன்னர் தன் இணையதளத்தில் கேள்வி எழுப்பிய இஸ்லாமியர்களை அவர் பயமுறுத்தியதை நீங்கள் அறியவில்லையா??? தன்னை எதிர்த்து எழுப்பப் பட்ட கேள்வியை பொறுத்துக்கொள்ள முடியாமல் திருக்குர்ஆனை கழிவறையில் இட்டு அந்த புகை படத்தை வெளியிட்ட நபருக்கு
இதெல்லாம் ஒரு விஷயமா? இன்னும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் கேலி சித்திரத்தை
வெளியிட்டார். இன்னும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மனைவிகளை இழிவு செய்யும்
கருத்துகளை வெளியிட்டார். இப்படி கேவலமான செயல்களை கிறிஸ்தவத்தின் பெயரில் பெருமையாக
செய்யும் நபர் எதையும் செய்ய துணிவார். இவரை போன்ற நபர்கள், தான் ஏற்று இருக்கும்
கிறிஸ்தவத்தைதையும், முறையே ஏற்று நடப்பவர்கள் அல்ல. இன்னும் இவர் போன்ற நபர்கள்
எழுப்பும் சலசலப்புக்கு நாம் அஞ்ச வேண்டியது இல்லை. அவர் செய்வதன் பயனை அவர்
அனுபவிப்பார். கர்த்தரை உதவிக்கு அழைப்பதன் மூலம், கர்த்தரிடம் தன் பொய் கூற்றுக்களால் ஏற்படும் பாவ சுமைகளை கர்த்தர் மீது சுமத்திவிடலாம் என எண்ணுகிறார். கர்த்தர் இவரை போன்ற பொய்யர்களுக்கு உதவி புரிய மாட்டார் என்பதை அறியவில்லை போலும். நம்முடைய முயற்சி உண்மை கிறிஸ்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே....
|
||||||
போதகர்:
|
பிரதர், இதை போன்ற கேள்வி பதில் சந்திப்புகள் இனி
தொடரும் என்று திரு உமர் அவர்கள் அறிவித்து இருக்கிறார், அதை பற்றி???
|
||||||
நாம்:
|
பாஸ்டர், கேள்வி பதில் சந்திப்புகள் தொடரட்டும், அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்க விருக்கும் கேள்வி
பதில் சந்திப்புகளை முதலில் கிறிஸ்தவத்திற்க்கு எதிராக நடத்திவிட்டு, அதையே பிறகு
இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தினால் அது இரண்டு தரப்பினரையும் அறிந்து கொள்ள
ஒரு வாய்ப்பாக இருக்கும். அதாவது இஸ்லாமியர்கள் மீது சுமத்த முயற்சிக்கும்
கருத்துகளை முதலில் பைபிளுடன் ஆராய்ந்து அது இஸ்லாமை காட்டிலும் பைபிளுக்கு பொருந்துகிறதா என்பதை ஆராய்ந்து, கிறிஸ்தவம் இந்த கருத்துகளை அறிவிக்க தகுதியானதா என்பதை அறிந்து, அப்படி பைபிள்
அறிவிக்காத பழிபாவங்களை இஸ்லாமியர்கள் செய்த தெளிவான ஆதாரம் கிட்டும் நிலையில்
அவற்றை கோடிட்டு இதை போன்ற கேள்வி பதில் சந்திப்புகள் நடத்தினால் அதை நாம்
மறுப்பு அளிக்க இறைவனின் உதவியை நாடியவர்களாக காத்திருக்கிறோம். இதை விடுத்து மீண்டும் மீண்டும் அதே
தெளிவான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை மொழிவது சூரியனை கண்டு ஏதோ ஒன்று குரைப்பது
என்று உங்களை போன்ற நபர்களை கூட எண்ண செய்யும்...
|
||||||
போதகர்:
|
பிரதர், எனக்கு மீண்டும் திரு உமர் அவர்களை சாரி
இந்த போர்வையில் இருக்கும் அந்த நபரை சந்திக்க நேரிட்டால் உங்கள் சார்பாக
எதாவது சொல்லட்டுமா...
|
||||||
நாம்:
|
கண்டிப்பாக, நாங்கள் சலாம் அறிவித்ததையும் நலம்
விசாரிததையும் சொல்லுங்கள். இன்னும் அடுத்த முறை அவர் கட்டுரை வரைவதற்கு முன்னர்
தெளிவான ஆதாரம் எடுத்து தருமாறு அவர் இறைவனாக வணங்கும் இயேசு அவர்களை ஜெபித்து கொள்ள கூறுங்கள். இன்னும் தெளிவான பைபிள் வசன ஆதாரங்களை எடுத்து வைத்து பைபிள்
கேள்விகளுக்கு விடை அளிக்க சொல்லுங்கள். குறைந்த பட்சம் சிந்தித்து அவர் வெளியிட
விரும்பும் கருத்துகளை அறிவிக்க அவர் தகுதியானவர் தானா என்று பதில் அளிக்க
சொல்லுங்கள். நம் விவாத அழைப்புகளை ஏற்று கையெப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிட
சொல்லுங்கள். அவர் வெளியிடும் பொய் கட்டுரையில் அவர் தோல்வியுற்றால் இனி
கனவிலும் அவரும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவருடைய தோழர்களும்
இஸ்லாமிற்கு எதிராக எந்த செயலிலும் ஈடுபடுவது இல்லை என்ற வாக்குறுதியை தர
சொல்லுங்கள். எழுத்து விவாத தவணை இன்னும் அதன் கால அளவுகளை அழகான முறையில்
வெளியிட சொல்லுங்கள். முடிவாக அவரை எல்லாம் வல்ல ஒரே இறைவனுக்கு பயந்து உண்மையாளராக
மரணிக்க ஜெபம் செய்யுமாறு வேண்டுங்கள்...
|
||||||
போதகர்:
|
கண்டிப்பாக நீங்கள் சொன்ன விவரங்களை அவருக்கு தெரிவிக்கிறேன். ஆனால் இது செவிடன் காதில் ஊத்திய சங்காக தான் இருக்கும் என்பது என் கருத்து. நான்
விடை பெறுகிறேன்...
|
||||||
நாம்:
|
போய் வாருங்கள்... திரு உமர் அவர்கள் தெளிவான
ஆதாரங்கள் வைத்து விடை அளித்தால் விரைவில் மீண்டும் சந்திப்போம்... அஸ்ஸலாமு
அழைக்கும்,
|
- ஜியா & அப்சர்