Tuesday, September 27, 2011

திரு உமர் அவர்களின் “கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு - பாகம் 1

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அழைக்கும் 
பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


திரு உமர் அவர்களின் “கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1 என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு:  பாகம் 1



வாசகர்களே, திரு உமர் அவர்கள் சமீபமாக கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1 என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். இந்த கட்டுரையை ஒரு உரையாடல் வடிவில் வரைந்து இருந்தார். அவருக்கு பதில் அளிக்க விரும்பும் நாம் அவர் காட்டித்தந்த உரையாடல் பாணியையே பின்பற்றி பதில் அளிக்க எல்லாம் வல்ல இறைவனின் உதவியை நாடியவர்களாக முயற்சியை துவங்குகிறோம்.

குறிப்பு: இந்த கட்டுரையில் நம்மிடம் உரையாடுபவராக சித்தரிக்க பெரும் கிறிஸ்தவ போதகர் தற்போதுதான் திரு உமர் அவர்களிடம் உரையாடி விட்டு நம்மை சந்திக்க வருகிறார் என்ற தோனியில் இந்த உரையாடல் வரைய பெறுகிறது.

மேலும் இதை போன்ற கேள்விகளுடன் (உமரை போல போலியாக எழுதாமல்) உண்மையை அறிந்துகொள்ள, இஸ்லாமிய நண்பர்களை தேடி வரும் நேர்மையான கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உதவியாகவும் இருக்கும் என்பதற்காகவும் இந்த உரையாடல் வரைய பெறுகிறது.



போதகர்: 
பிரதர் வணக்கம். 

நாம்:
அஸ்ஸலாமு அழைக்கும், சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டகாட்டும். சொல்லுங்க பாஸ்டர் எப்படி இருக்கீங்க?


போதகர்: 
நான் நல்லா தான் இருக்கேன். வணக்கம் சொன்னா உங்களுக்கு பதில் வணக்கம் சொல்ல தெரியாதா பிரதர். “சாந்தியும் சமாதானமும்ன்னு இழுத்துக்குட்டு போறீங்க ???

நாம்:
பாஸ்டர் ஏன் கோவிச்சிக்கிறீங்க? வணக்கம், வழிபாடு எல்லாம் படைத்த இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உரியது. மனிதர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் தான். ஏன் நீங்கள் பைபிளில் இயேசு இவ்வாறு வாழ்த்தியதை அறிய வில்லையா? அவர் வணக்கமா சொன்னாரு?? Luke 24:36 வசனத்தை படித்தது இல்லையா??? சரி என்ன விஷயம் சொல்லுங்க..


போதகர்: 
ஓ! அப்படியா! இனிமேல் திருத்திக்கொள்கிறேன். நினைவு படுத்தியதுக்கு நன்றி!! சமீபமாக தான் இஸ்லாமை பற்றி அறிந்த கிறிஸ்தவ நண்பர் திரு உமர் (என்று தன்னை கூறிக்கொள்ளும்) அவர்களுடன் உரையாடி விட்டு வந்தேன். அவரிடம் இஸ்லாம் பற்றி சில கேள்விகள் கேட்டேன் அவர் தந்த பதில்களை உங்களிடம் சரி பார்க்கலாம் என்று வந்தேன்.

நாம்: 
உமரா, பைபிள் வசனங்களில் இருந்து கேள்விகள் கேட்டால் தலை மறைவாகும் நபரா? அவரிடமா கேள்வி கேட்டீங்க, இஸ்லாமை பற்றி அறிய உங்களுக்கு வேரு யாரும் தென்பட வில்லையா? கேள்விகள் கேட்டால், கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்து, கழிவு நீரை தூர் வாறுவதை தொழிலாக கொண்டு இருப்பதாக பெருமையாக அறிவித்து இருப்பாரே!! இன்னும் சொறி நாய் பிடிப்பது, யானைக்கு வால் வெட்டுவது போன்ற தொழில்களையும் செய்பவர் என்று அறிவித்து இருப்பாரே?உங்களுக்காவது ஒழுங்கா பதில் சொன்னாரா? நான்கு ஆண்டுகால என்று புராணத்தை தவறாமல் சொல்லி இருப்பாரே?? அதை தவிர அவர் ஒன்னையும் சொல்லமாட்டார்.


போதகர்: 
இல்ல, அவர் பல இஸ்லாமியர்களுடன் எழுத்து விவாதம் நடத்தி இருப்பதாக அறிவித்தார். ஆதலால் தான் அவரிடம் இரண்டு மதங்களை பற்றியும் ஞானம் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரிடம் சென்றேன். 

நாம்: 
பாஸ்டர், எங்களுக்கு தெரிஞ்சு அவருக்கு அப்படி எந்த ஞானமும் இருப்பதாக நாங்கள் அறியவில்லை. அப்படி எதாவது இருந்தா சராசரி கிறிஸ்தவ வாசகர்களே எங்கள் கட்டுரைகளுக்கு பதில் அளிக்க முயற்சிக்கும் பொழுது.... பைபிளின்  தெளிவான வசனங்களுக்கு தாமாக ஒரு விளக்கத்தை கொடுக்க முயற்சிக்கும் போது....., திரு உமர் அவர்கள் வாய் மூடி இருப்பதை தொழிலாக கொண்டுள்ளார்??? இன்னும் அதிக படியாக கிறிஸ்தவ பைபிள் விபசார விரச வசனங்கள் தன்னை ஒன்றும் செய்வது இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்??? குறைந்த பட்சம் "அல்லேலூயா" என்றால் என்ன வென்று அவரிடம் வினவி பாருங்கள் இரண்டு மாதம் ஆள் அட்ரஸ் இல்லாமல் மறைந்து விடுவார். பின்பு, தான் பதில் அளிக்க போவதாக வீர வசனம் மொழிந்து கொண்டு வேரு கட்டுரைகளை மொழி பெயர்பார். அவர் அப்படித்தான் அவரை திருத்த முடியாது. அவரை பற்றி விமர்சிப்பது என்றால் நமக்கு நேரம் போதாது. விசயத்திற்கு வருவோம்? நீங்கள் என்ன கேள்விகள் தொடுத்தீர்கள்? உங்களுக்கு என்ன பதில் கிட்டியது?


போதகர்: 
திரு உமர் அவர்கள், பல கிறிஸ்தவர்கள் இஸ்லாமை தலுவுவதனால் அச்சமுற்று பல கட்டுரைகளை இஸ்லாமியர்களுக்கு எதிராக சமீபமாக வரைவதாக சொல்கிறார். இஸ்லாம் பற்றி இஸ்லாமியர்கள் மறைத்த உண்மைகளை உலகுக்கு சொல்வதாக சொல்கிறார். இதை பற்றி நீங்கள் என்ன நினைகிறீர்கள்??

நாம்: 
அவர் அச்சமுற்று இருப்பது உண்மை தான் பாஸ்டர். இந்த பயம் உமர் அவர்களுக்கு மட்டும் அல்ல, உலகில் உள்ள எல்லா கிறிஸ்தவ அறிஞர்களுக்கும் இருக்கிறது. இதன் வெளிப்பாடு தான் சமீபத்ய கட்டுரைகள். அவை அணைத்தும் அவருடைய கற்பனைகள். அந்த கட்டுரைகள் தொடர்பாக நாம் எதிர் கேள்வி கேட்டவுடன் மௌனம் காக்கிறார். பதிலளிக்காமல் ஓடி ஒளிகிறார்!! இப்படி கட்டுரைகள் வரைவதை காட்டிலும் தங்கள் கிறிஸ்தவத்தை, கிறிஸ்தவத்திர்க்கு எதிரான பைபிள் வசனங்களை தெளிவான ஆதாரம் கொண்டு இவர்கள் விவரிக்க முயற்சித்தால் ஏன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு விலக போகிறார்கள்??? கிறிஸ்தவ அறிஞர்கள் பதில் அளிக்க மறுத்து, போலியான ஆதாரம் கொண்டு எதிர் கேள்வி கேட்பதும், இஸ்லாம் வளர்வதற்கு ஒரு முக்கிய காரணம். இதை தான் நாம் முன்னமே அறிவித்து இருந்தோம். இஸ்லாம் வளர உதவும் திரு உமர் என்று...


போதகர்: 
பிரதர், உமர் அவர்களிடம் உரையாடும் பொழுது அவர் இந்த செய்தியை அறிவித்தார்:
ஒரு கால கட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளும், சபை போதகர்களும் புது மொழிகளை கற்று, பைபிளை அந்த மொழிகளில் மொழிப்பெயர்க்கும் பொறுப்பை ஏற்று அயராது உழைத்தார்கள். இரவு பகல் என்று பாராமல் பல ஆண்டுகள் உழைத்து புதிய மொழிகளில் பைபிளை மொழியாக்கம் செய்து மக்கள் தங்கள் சொந்த மொழியில் தேவனுடைய வார்த்தையை படிக்க உதவினார்கள். அவர்களின் உழைப்பினாலே, நூற்றுக்கணக்கான மொழிகளில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. 

அப்படியானால் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தும் கிறிஸ்தவ அறிஞர்களா?

நாம்: 
பாஸ்டர், நமக்கு தெரிஞ்சு பைபிளை தமிழில் மொழி பெயர்த்து ஆறுமுக நாவலர் என்று ஹிந்து மதத்தை சார்ந்த பண்டிதர். அவர் செய்த பல பிழைகளை இதற்கு முன்னரே நம் கட்டுரை வாயிலாக கோடிட்டு இருந்தோம் இதற்கே திரு உமர் அவர்கள் பதில் அளிக்காத நிலையில் இதை போன்ற கருத்துகளை மீண்டும் மீண்டும் அறிவித்து கொண்டு இருக்கிறார். மொழி பெயர்ப்புகளில் ஆயிரம் பிழைகள் வெளிப்படும் நிலையில் பைபிளின் மூல நூல்களை அது இயற்றபெற்ற மொழியில் பயின்று, கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கருத்து...
அது சரி உங்களிடம் மூல மொழியில் உள்ள பைபிள் உள்ளதா? 


போதகர்: 
என்னிடம் இல்லையே?!!! பிரதர், உமர் அவர்களிடம் உரையாடும் பொழுது தற்காலத்து சபை போதகர்களின் நிலையை இவ்வாறு விவரித்தார்:

தங்கள் சபை போதகருக்கு எல்லாமே தெரிந்து இருக்கவேண்டும் என்று விசுவாசிகள் எண்ணுகின்றார்கள். தங்கள் சபை போதகர் ஒரு நடமாடும் நூல்நிலையம் என்றும், ஒரு கலைக் களஞ்சியம் என்றும் எண்ணுகிறார்கள். (அனேக கிறிஸ்தவ போதகர்கள் நடமாடும் நூல் நிலையங்களாக திகழ்வதையும் நாம் காணமுடிகிறது.) இதனால் அனேக கேள்விகளைக் கொண்டு சபை போதகரை துளைத்துவிடுகிறார்கள்.

சபை போதகர்களிடம் விசுவாசிகள் ஸ்பேஸ் சயின்ஸ் பற்றிய கேள்விகளா எழுப்ப போகிறார்கள்? தங்கள் விசுவாசம் கொண்டு இருக்கும் மார்க்கத்தை பற்றி தங்களை வழிநடத்தும் நபரிடம் வினாவுவது அவ்வளவு பெரிய குற்றமா?

நாம்: 
பாஸ்டர், திரு உமர் அவர்கள் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. பொதுவாக எல்லா சபை போதகருக்கும் இன்ன கேள்விகள் தான் கேட்க படும் என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்க பயில்விக்க படுகிறது. இதை விடுத்து நீங்கள் வேரு கேள்விகளை எழுப்புவீர்களாயின் அது எங்கள் நம்பிக்கை என்பது போன்ற பொதுவான பதிலை நீங்கள் எதிர் பாக்கலாமே தவிர அதற்கு மேல் இல்லை. இதற்காக விசுவாசிகளை குறை சொல்ல முடியாது. அவர்கள் உண்மையை அறிய சபை போதகர்களிடம் விரைகிறார்கள், அவர்களிடம் பதில் இல்லாத நிலையில் வேரு மதங்களை தழுவுகிறார்கள்...


போதகர்: 
நீங்கள் சொல்வது உண்மை தான், நான் திரு உமர் அவர்களிடம்
எங்க சபை விசுவாசி ஒருத்தர், அனேக இஸ்லாம் பற்றிய கேள்வியை கேட்கிறார், முஹம்மது கடைசி தீர்க்கதரிசியா என்று கேட்கிறார்? இயேசு இறைவனா அல்லது ஒரு தீர்க்கதரிசியா? என்று கேட்கிறார். நமக்கு பைபிள் பற்றி மட்டுமே தெரியும், இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது மட்டுமல்ல, கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமுக்கும் இடையே இருக்கும் அடிப்படை ஒற்றுமைகள்/வித்தியாசங்கள் கூட தெரியாது. இப்படி இருக்கும் போது எப்படி நான் பதில் சொல்றது?

இவற்றுக்கு அவர் பதில் அளிக்காமல், இஸ்லாமின் மூல நூல்கள் சிலவற்றுடன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிற்கு எதிராக எழுதிய சில நூல்களையும் என்னை படிக்க ஆர்வம் ஊட்டினார். இஸ்லாமை இஸ்லாமிற்கு எதிரான நபர்களின் எழுத்துகளில் இருந்து எவ்வாறு அறிவது??? இது சாத்தியமா???

நாம்: 

பாஸ்டர், இது திரு உமர் அவர்களின் வழக்கமான யுத்தி. கேள்விக்கு தெளிவான ஆதாரம் வைத்து விடை அளிக்காமல் இதை படியுங்கள் அதை படியுங்கள் என்பார். அல்லது ஆதாரம் ஒன்று சொல்ல அதை விடுத்து இப்படி சிந்தியுங்கள் அப்படி சிந்தியுங்கள் என்று ஒரு கட்டுரையை மொழிபெயர்பார். இவ்வாறு இஸ்லாமிற்கு எதிராக எழுத பெரும் கட்டுரைகளின் உண்மை நிலையை திரு குர்ஆன் மற்றும் ஸஹிஹ் ஹதீஸ் வாயிலாக ஒப்பிட்டு பார்க்க முயல்வீர்களாயின் இவர்கள் எப்படி பட்ட பொய்யர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு ஆய்வுகளை நீங்கள் தொடர்வீர்களாயின் இஸ்லாம் கலங்கம் அற்றது என்பதை நீங்களே அறிவீர்கள். இப்படி ஆராய்ந்த பலரும் இஸ்லாத்தின் உண்மை நிலையை அறிந்து இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இதுவும் இஸ்லாமை அறிய ஒரு வழி. இதை போன்ற சில ஆய்வுகள் செய்து திரு உமர் அவர்கள் திரித்து அறிவித்த ஆதரங்களை எங்கள் இணையதள முகப்பிலே பட்டியல் போட்டுள்ளோம் உங்களை போன்றவர்கள் படித்து தெரிந்து கொள்ள. ஒருவர் சொல்வதை மட்டும் வைத்து எப்படி உண்மையை கண்டறிய முடியும்?

பாஸ்டர், பொதுவா பைபிள் விபச்சார மற்றும் விரச வசனங்களுக்கு திரு உமர் அவர்கள் பதில் அளிக்க மாட்டார் என்று எண்ணி இருந்தோம். நீங்கள் எழுப்பிய ஏனைய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வில்லையா? வியப்பாக இருக்கிறது. இதோ திரு உமர் அவர்கள் பதில் அளிக்க மறுத்த கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்கிறோம்.

 இயேசு இறைவனா அல்லது ஒரு தீர்க்கதரிசியா என்ற கேள்விக்கு திரு குர்ஆனிலும் பைபிளிலும் விளக்கம் இருக்கிறது:

திரு குர்ஆன் 61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் அஹமது என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் இது தெளிவான சூனியமாகும் என்று கூறினார்கள்.
As he entered Jerusalem the whole city was thrown into an uproar, saying, “Who is this?” And the crowds were saying, “This is the prophet Jesus, from Nazareth in Galilee.” (Matthew 21:10-11) 
After the two days he departed from there to Galilee. (For Jesus himself had testified that a prophet has no honor in his own country.) So when he came to Galilee, the Galileans welcomed him because they had seen all the things he had done in Jerusalem at the feast (for they themselves had gone to the feast). (John 4:43-45)

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்ற செய்தியை திரு குர்ஆன் அறிவிக்கிறது:

திரு குர்ஆன் 33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
 “I have many more things to say to you, but you cannot bear them now. But when he, the Spirit of truth, comes, he will guide you into all truth. For he will not speak on his own authority, but will speak whatever he hears, and will tell you what is to come. 16:14 He will glorify me, because he will receive from me what is mine and will tell it to you. (John 16:12-13) 

உண்மை கிறிஸ்தவத்திற்க்கும் இஸ்லாமிற்கும் இடையே உள்ள சில ஒற்றுமைகள்: 

கலிமா ஸாஹதாவின் ஒரு பகுதி அதாவது “வணக்கத்திற்கு உரிய இறைவன் ஒருவனே என்பது...
 Jesus answered, “The most important is: ‘Listen, Israel, the Lord our God, the Lord is one. (Mark 12:29)
தொழுகை
From the rising of the sun to the place where it sets, the name of the LORD is to be praised. (Psalms 113:3)

"As for me, I will call upon God; and the Lord shall save me. Evening, and morning, and at noon, will I pray, and cry aloud: and he shall hear my voice." (Psalms 55:16-17) (PS: crying aloud apparently means praying with passion).

"And as soon as the lad was gone, David arose out of a place toward the south, and fell on his face to the ground, and bowed himself three times: and they kissed one another, and wept one with another, until David exceeded." (1 Samuel 20:41)
"Now when Daniel knew that the writing was signed, he went into his house; and his windows being open in his chamber toward Jerusalem, he kneeled upon his knees three times a day, and prayed, and gave thanks before his God, as he did afortime." (Daniel 6:10)

நோண்பு
After he fasted forty days and forty nights he was famished. (Matthew 4:2)
ஜகாத்
"One tenth of the produce of the land, whether grain from the fields or fruit from the trees, belongs to the LORD and must be set apart to him as holy. If you want to buy back the LORD's tenth of the grain or fruit, you must pay its value, plus 20 percent. Count off every tenth animal from your herds and flocks and set them apart for the LORD as holy. You may not pick and choose between good and bad animals, and you may not substitute one for another. But if you do exchange one animal for another, then both the original animal and its substitute will be considered holy and cannot be bought back." (Leviticus 27:30-33)

As Jesus looked at him, he felt love for him and said, “You lack one thing. Go, sell whatever you have and give the money to the poor, and you will have treasure in heaven... (Mark 10:21)
புனித பயணம் (ஹஜ்)
But you must seek only the place he chooses from all your tribes to establish his name as his place of residence, and you must go there. And there you must take your burnt offerings, your sacrifices, your tithes, the personal offerings you have prepared, your votive offerings, your freewill offerings, and the firstborn of your herds and flocks. Both you and your families must feast there before the Lord your God and rejoice in all the output of your labor with which he has blessed you. (Deuteronomy 12:5-7)
துஆ
When Solomon finished presenting all these prayers and requests to the Lord, he got up from before the altar of the Lord where he had kneeled and spread out his hands toward the sky. (1 Kings 8:54)
சலாம்
On the evening of that day, the first day of the week, the disciples had gathered together and locked the doors of the place because they were afraid of the Jewish leaders. Jesus came and stood among them and said to them, “Peace be with you.” (John 20:19)
விருத்தசேதனம்
At the end of eight days, when he was circumcised, he was named Jesus, the name given by the angel before he was conceived in the womb. (Luke 2:21)
பர்தா
But any woman who prays or prophesies with her head uncovered disgraces her head, for it is one and the same thing as having a shaved head. For if a woman will not cover her head, she should cut off her hair. But if it is disgraceful for a woman to have her hair cut off or her head shaved, she should cover her head. (1 Corinthians 11:5 – 6)
ஹராம்
சாராயம்  for he will be great in the sight of the Lord. He must never drink wine or strong drink, and he will be filled with the Holy Spirit, even before his birth. (Luke 1:15)
 பண்றி மாமிசம்  Also the pig is ritually impure to you; though it has divided hooves, it does not chew the cud. You may not eat their meat or even touch their remains. (Deuteronomy 14:8)
 வட்டி  He does not charge interest when he lends his money. He does not take bribes to testify against the innocent. The one who lives like this will never be upended. (psalms 15:5)
 விபச்சாரம் - (Deuteronomy 22:13 -25) 

இறை வணக்கத்திற்கு முன் கை மற்றும் கால்கள் அலம்புவது
Then he put the curtain at the entrance to the tabernacle. He also put the altar for the burnt offering by the entrance to the tabernacle, the tent of meeting, and offered on it the burnt offering and the meal offering, just as the Lord had commanded Moses. Then he put the large basin between the tent of meeting and the altar and put water in it for washing. Moses and Aaron and his sons would wash their hands and their feet from it. Whenever they entered the tent of meeting, and whenever they approached the altar, they would wash, just as the Lord had commanded Moses. (Exodus 40:28 – 32)
புனித தளங்களில் காலனிகள் அணியாமல் இருப்பது
God said, “Do not approach any closer Take your sandals off your feet, for the place where you are standing is holy ground. (Exodus 3:5)


போலி கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே உள்ள பெரிய வேற்றுமை (பைபிளில் இடை சொருகள் செய்யபட்ட கொள்கை) :

திரித்துவ கடவுள் கொள்கை
இயேசு கடவுளின் சரீர மகன் அல்லது இயேசு இறைவன் என்பது. 

பாஸ்டர் இப்பொழுது உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்...



போதகர்: 
பிரதர் தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி. நான் திரு உமர் அவர்களிடம் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள எந்த புத்தகத்தை படிக்கவேண்டும்? முஸ்லிம்கள் தங்கள் வேதம் என்றுச் சொல்லும் "குர்‍ஆனை" படித்தால் போதுமா? என்று கேட்டேன் அதற்கு அவர் குர்‍ஆனை மட்டும் நாம் படித்தால், நாம் உயிரற்ற ஒரு சடலத்தோடு பேச முயற்சிப்பதற்கு சமமாகும். ஒரு சடலம் பார்ப்பதற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல், கண் காது மூக்கு என்று எல்லா பாகங்களை கொண்டாதாக‌ இருந்தாலும், உயிர் இல்லையானால் என்ன உபயோகம். அது போலத் தான் வெறும் குர்‍ஆனை படித்தால் நீங்கள் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாது. 
என்று பதில் அளிக்கிறார். இதை பற்றி உங்கள் கருத்து???


நாம்: 
பாஸ்டர், உங்களுடைய கேள்வி “இஸ்லாமை பற்றி அறிந்து கொள்ள திரு குர்ஆன் படித்தால் போதுமா என்பதாகும். அதற்கு எங்களுடைய பதில் கண்டிப்பாக திரு குர்ஆன் மட்டும் படித்தால் இஸ்லாம் பற்றிய அடிப்படைகளை அறிந்து கொள்ளலாம். அதிலும் கூட ஒரு தலைப்பை பற்றி மட்டும் குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை அறியவேண்டும் என்றால் குர்ஆனின் கடைசி பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் அட்டவணையை பார்த்து தேவையான பகுதியை மட்டும் படித்துக்கொள்ளலாம்.

உதாரணமாக ஏசுவை பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை அறிய “பொருள் அட்டவணையில் ஏசு/ஈஸா என்ற பகுதியில் கூறப்பட்டிருக்கும் வசனங்களை/பக்கங்களை படித்தால் மட்டும் போதும். முழுவதுமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இஸ்லாம் கூறும் நடைமுறை சட்டங்கள், அன்றாட வாழ்வின் நெறிமுறைகள் போன்றவற்றை முழுவதுமாக விளங்க வேண்டும் என்பது உங்கள் ஆர்வம் என்ற நிலையில் ஸஹிஹ் ஹதீஸ்களில், திரு குர்ஆன் பரிந்துரைக்கு ஏற்ப முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய இறை பொருத்தத்தை பெரும் அமல்களை விவரிக்கிறது அவற்றின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். திரு குர்ஆன்,   ஸஹிஹ் ஹதீஸ் அறிவிக்கும் அமல்கள் இவை இரண்டும் தான் இஸ்லாமை அறிய மூல நூல்களே அன்றி திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிற்கு எதிராக இயற்றிய நூல்கள் அல்ல.

நான் உங்களிடம் கேட்கிறேன், இஸ்லாமியர் அல்லாதவர்கள் இஸ்லாம் பற்றி இயற்றி வைத்து இருப்பதை படிக்க சொல்லும் திரு உமர் அவர்கள், கிறிஸ்தவர்கள் அதிலும் இயேசு அவர்களுடன் இருந்ததாக நம்பப்படும் அப்போஸ்தல்கள்,இயற்றியதாக நம்பப்படும் புத்தகங்களை, அல்லது குறைந்த பட்சம் சில கிறிஸ்தவ பிரிவினர் தங்கள் பைபிளில் இணைத்து வைத்துள்ள புத்தகங்களை ஏற்க திரு உமர் அவர்கள் முன் வருவாரா? அல்லது முன்னாள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை பற்றி எழுதிய நூல்களை, கிறிஸ்தவத்தை பற்றி அறிந்துகொள்ள விரும்பும் நபர்களுக்கு பரிந்துரைப்பாரா?

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தான் இஸ்லாம். அவர்களின் வாழ்கை வரலாற்றை திரு உமர் அவர்கள் கோடிடும் நூல்களில் இருந்து அறிய வேண்டும் என்று அறிவிக்கும் உமர் அவர்களுக்கு இயேசு தான் கிறிஸ்தவம் என்பது அறியாததா? அவர் வாழ்நாளில் ஒரு சில ஆண்டுகளை தான் பைபிள் சித்தரிக்கிறது, இதன் அடிப்படையில் விடுப்பட்ட ஆண்டுகளை கிறிஸ்தவ அறிஞர்கள் விவரிக்கும் நூல்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாமா? அதை மற்றவர்களுக்கு பரிந்துரைபாரா???

திரு உமர் அவர்களின் எடுத்து காட்டுகளும் தவறானது. உயிர் அற்ற உடல், உறுப்பு தானம் மூலம் பல உயிர்களை காக்கலாம். இன்னும் உயிர் அற்ற உடல் செவியுறும் என்ற நம்பிக்கையிலே கிறிஸ்தவ இறுதி சடங்கு பிராத்தனைகள், பேய் பிசாசு ஓட்டும் கிறிஸ்தவ வழிபாடு நடப்பதை திரு உமர் அவர்கள் அறியவில்லை போலும். இன்னும் இயேசு உயிர் அற்ற தன் தோழரை இறைவன் கிருபையால் உயிர்பிக்கும் பொழுது இறைவன் பெயரில் எழுந்து வா என்று அழைக்கும் வேளையில் அவர் உயிர் அற்ற சடலத்திடம் தான் அவ்வாறு கூறினார் சடலம் இறைவன் கிருபையால் உயிர் பெற்றது என்பது திரு உமர் அவர்கள் அறியாததா???



போதகர்: 
பிரதர், கிறிஸ்தவம் பற்றி ஒருவர் அறிய, புதிய ஏற்பாட்டை தொடர்ச்சியாக படித்தால் போதுமே, பெரும்பான்மையான‌ எல்லா விவ‌ர‌ங்களையும் அறிந்துக்கொள்ளலாம். அது போல‌, குர்‍ஆனை ப‌டித்தால் இஸ்லாம் ப‌ற்றி அறிந்துக்கொள்ள‌முடியாதா?

நாம்: 
பாஸ்டர் புதிய ஏற்பாடு என்று எதை சொல்கிறீர்கள்? ஏனெனில் கிறிஸ்தவதில் பல பிரிவினர் இருக்கிறீர்கள். ஒவ்ஒருவரும் தமக்கென்று ஒரு எண்ணிகையில் பைபிள் புத்தக கோர்பை கொண்டுள்ளீர்கள். ஒரு தரப்பினர் எங்கள் பைபிளின் பிழை திருத்தமே இறுதியானது என்கிறது. இன்னும் ஒரு தரப்பினர் நாங்கள் தான் உண்மை பைபிளை கொண்டுள்ளோம் என்று போதிகிறார்கள். முதலில் நீங்கள் எந்த பைபிள் பிழை திருத்தத்தை முகவரி இடுகிறீர்கள் என்பதை தெளிவாக்குங்கள். அதற்கு பின் கிறிஸ்தவ திரித்துவ கொள்கை, “நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள் என்று இயேசு தன் வாழ்நாளில் தன் வாயால் உரைத்த வசனங்களை எடுத்து வையுங்கள். நீங்கள் எங்களை கிறிஸ்தவத்தை அறிய சொல்வது இயேசு அவர்களை உயிருடன் பாத்திராத கேட்டிராத முகவரி அற்ற நபர்கள் இயற்றி வைத்து ஆயிரத்துக்கும் மேலான பிழை திருத்தங்களை கொண்ட நூர் கோர்ப்பு. இதை கொண்டு எவ்வாறு நாங்கள் கிறிஸ்தவத்தை அறிவது?


போதகர்: 
நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை தொழுதுக்கொள்கிறீங்கள் என்று ஒரு முஸ்லிமிடம் கேட்டுப்பாருங்க. அவர் ஐந்து முறை என்று பதில் சொல்லுவார். ஆனால், குர்‍ஆனில் இந்த ஐந்துமுறை தொழவேண்டும் என்று எங்கு சொல்லப்பட்டுள்ளது என்று கேளுங்க. அவரால் குர்‍ஆனைக் கொண்டு மட்டும் பதில் சொல்லமுடியாது. என்று திரு உமர் அவர்கள் அறிவிகிறர்களே??

நாம்: 
பாஸ்டர், திரு குர்ஆன் ஒரு நாளின் தொழுகை தவணைகளை விவரிக்கும் பல தெளிவான வசனங்களை கொண்டுள்ளது உதாரணமாக:

சலாத் அல் பாஜர் – அல் குர்ஆன் 24:58
சலாத் அல் அசர் – அல் குர்ஆன் 2:238
சலாத் அல் மக்ரிப் - அல் குர்ஆன் 24:58
சலாத் அல் இஷா - அல் குர்ஆன் 11:114

திரு குர்ஆன் கடமையான ஐவேளை தொழுகை மட்டும் இன்றி இன்னும் அதிகபடியாக இறைவனை வணங்கி இறை பொருத்தத்தை பெருமாறு நம்பிகையாளர்களை பணிகிறது.

பாஸ்டர் உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பொதுவாக விசுவாசிகள் எப்பொழுது திரு சபைக்கு சென்று இறை வணக்கத்தில் ஈடுபடுவார்கள்??

போதகர்: 
ஞாயிற்று கிழமை விடி காலைகளில்

நாம்: 
ஞாயிறுகிழமை விடி காலைகளில் மட்டுமே திரு சபைகளில் கூட வேண்டும் அல்லது கூட்டு வணக்கத்தில் ஈடு படவேண்டும் என்று இயேசு தன் வாயால் தெளிவாக அறிவித்த பைபிள் வசனம் ஏதேனும் உள்ளதா? அப்படி ஒன்று இருக்குமெனில் எங்களுக்கு எடுத்து தாருங்கள் ஆய்வுக்காக... அப்படி உங்களால் ஒரு தெளிவான வசனத்தை கோடிட முடியாது என்ற நிலையில் பைபிளை கொண்டு இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கையை இறை வழிபாடுகளை அறிய முடியாது என்பதை ஏற்று கொள்ள நீங்கள் முன் வருவீர்களா?

இறைவன் நாடினால் நாளை தொடர்வோம்... 

அஸ்ஸலாமு அழைக்கும் 

ஜியா & அப்சர்



No comments: