பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
கிறிஸ்தவ வாசகர் திரு கொல்வின் அவர்களின் “ஜாகீர் நாயக்கின் ஐந்து நிமிடத்தில் இருபத்தைந்து தவறுகள்” என்ற காணொளிக்கு எங்கள் மறுப்பு
வாசகர்களே சமீபமாக திரு உமர் அவர்களுக்கு
நம்மால் அளிக்கபட்ட மறுப்புகளில் ஒன்றான “திரு உமர் அவர்களின், “விவாதம் புரிய மறுக்கும் ஜாகிர்
நாயக்கின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு – பாகம் – 1” என்ற கட்டுரைக்கு, கிறிஸ்தவ வாசக நண்பர் திரு கொல்வின்
அவர்கள்,
“ஜாகீர் நாயக்கின் ஐந்து நிமிடத்தில் இருபத்தைந்து தவறுகள்” என்ற ஒரு யூ-டுயுப்
காணொளியை நம்முடைய இணையதளத்தில் முகவரி இட்டு சென்று இருந்தார்.
நம்முடைய மூல
கட்டுரையான திரு உமர் அவர்களின், “விவாதம் புரிய மறுக்கும் ஜாகிர்
நாயக்கின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு – பாகம் – 1 என்ற கட்டுரையில், நாம் திரு உமர்
அவர்களின் நீர்பந்ததால் திரு ஜெர்ரி தாமஸ் என்ற கிறிஸ்தவ பேச்சாளரின் போலிதுவதை,
இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர் அறிவித்த கருத்துகளில் செய்த பிழைகளை, தீரித்து அறிவித்தவனவற்றை, நாம் கோடிட்டதை போருக்க இயலாமல், சராசரி
கிறிஸ்தவராக திரு கொல்வின் அவர்கள், திரு ஜாகீர் நாயக் செய்ததாக சில தவறுகளை நம்
மூன் சுட்டி காட்ட எண்ணி, இந்த முகவரியை நமக்கு கோடிட்டு இருப்பார் என்று
எண்ணுகிறோம். திரு கொல்வின் அவர்களுக்கு விளக்கம் அளிக்க எல்லாம் வல்ல இறைவன் கிருபையை
நாடியவர்களாக இந்த கட்டுரையை துவங்குகிறோம்.
திரு கொல்வின் அவர்களே, நாங்கள் திரு
ஜெர்ரி தாமஸ் செய்த பிழைகளை கோடிட்டவைகளுக்கும், நீங்கள் திரு ஜாகீர் நாயக்
செய்த பிழைகள் என்று கோடிடுவதர்க்கும் உள்ள வேருபாடுகளை முதலில் உங்களுக்கு
சுட்டி காட்ட விரும்புகிறோம். அதாவது நாங்கள் கோடிட்ட தவறுகள், திரு ஜெர்ரி
தாமஸ் அவர்கள், திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு எதிராக வழங்கிய
கருத்தரங்கு/போதுகூட்டம், அது அறிவிக்க பட்ட நாளில் இருந்து மிகவும் துல்லியமாக
முன்னேற்பாடு செய்யப்பட்டு, மிகவும் சிரம பட்டு அறிவிக்கபட்ட ஆதாரங்களில்,
முன்னேற்பாடாக காகித குறிப்புகளை வரைந்து அவற்றை படித்து கோடிடும் வேளையில் திரு
ஜெர்ரி தாமஸ் அவர்கள் செய்த கருத்து பிழைகள், இன்னும் திரு குர்ஆன் மற்றும்
பைபிள் வசன முகவரிகளில் ஏற்பட்ட பிழைகள். ஆனால் நீங்கள் திரு ஜாகீர் நாயக்
அவர்களுக்கு எதிராக கோடிடுவது, திரு ஜாகீர் நாயக்கின் ஆரம்ப காலங்களில், ஒரு
கருத்தரங்கின் இடையில் வழங்க பட்ட கேள்வி நேரத்தில், அந்த கருத்தரங்கு டார்வின்
கோட்பாட்டை பற்றி இல்லாத நிலையிலும், ஒரு நபர் அந்த கோட்பாட்டை பற்றிய தன்னுடைய
கேள்விகளை எழுப்பிய நிலையில், சிறிதும் சிந்திக்க நேரம் எடுத்து கொள்ளாமல், திரு
ஜாகீர் நாயக் அவர்கள் நீங்கள் அறிவித்தது போல் ஐந்தே நிமிடத்தில் தன் வாழ்நாளில்
என்றோ படித்த, கேள்விப்பட்ட விசயங்களை துல்லியமாக நினைவு கூர்ந்து, மிகவும்
கடினமான டார்வின் கோட்பாட்டின் சாராம்சம் மற்றும் அதனுள் அடங்கிய நிறை குறைகளை,
அறிவிக்க முனைந்த வேளையில் ஏற்பட்ட உச்சரிப்பு பிழைகள் ஆகும்.
திரு கொல்வின் அவர்களே இன்னும் உங்களுக்கு எளிதாக விளங்க ஒரு உதாரணத்தை சொல்கிறோம், நாங்கள் கோடிட்டது உங்களை பத்து மாதம் உங்களை ஈன்று பெற்றெடுத்து, பாராட்டி சீராட்டி வளர்த்த உங்கள் அன்னையின் பெயரை, உங்கள் கடவுச்சீட்டு (passport) விண்ணப்பத்தில் முற்றிலும் தவறாக அறிவிப்பது போன்றதாகும். நீங்கள் அறிவிக்கும் ஆதாரம் என்றோ ஒரு நாள், ரயில் சிநேகத்தில் ஏற்பட்ட அறிமுகத்தை, பின் நாளில் துல்லியமாக நினைவு கொர்ந்து அவர்களின் பெயரை அறிவிக்க முனையும் வேளையில் ஏற்பட்ட உச்சரிப்பு பிழைகள் ஆகும். இப்பொழுது சொல்லுங்கள் இவை இரண்டிற்கும் உள்ள வேற்பாடு உங்களுக்கு புரிந்ததா??? உதாரணமாக: திரு கொல்வின் கோடிட்ட காணொளியில், திரு ஜாகிர் நாயக் மிகவும் கடினமான டார்வின் கோட்பாட்டை, ஐந்தே நிமிடங்களுக்குள் விவரிக்க முனையும் வேளையில், முதலாவதாக டார்வின் அவர்கள் இந்த ஆய்வை “Keletropist” என்னும் தீவில் நடந்தினர் என்று அறிவிக்கிறார், அது தவறு என்று இந்த காணொளி அறிவித்துவிட்டு அது “Kelotropis” தீவாகும் என்று அறிவிக்கிறது. இவை இரண்டுக்கும் உள்ள உச்சரிப்பு பிழை எந்த அளவு பெரியது என்பதை வாசகர்கள் நிர்ணயிக்க அவர்களிடம் விடுகிறோம்.
திரு ஜாகீர் நாயக் அவர்கள், திரு
டார்வின் அவர்கள் ஆய்வு நடத்திய பறவைகள் அவை இருப்பிடத்தின் கடினத்திற்க்கு ஏற்ப்ப,
அந்த பறவைகளின் அழகுகள் பெரியதாகவும் சிறியதாகவும் இருப்பதை டார்வின்
கண்டறிந்தார் என்று அறிவிக்கிறார். இது மட்டும் அல்ல, அந்த பறவைகளின் அழகுகளின்
தோற்றம் நிறம் மற்றும் அவை எழுப்பும் ஓசைகளின் மாற்றத்தை டார்வின் கண்டறிந்தார்
என்று அந்த காணொளி அறிவிக்கிறது. இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு, திரு
ஜாகீர் நாயக் தன் நினைவில் இருந்த, டார்வின் அவர்கள் கண்ட பறவைகளில் இரண்டு
பெரிய மாறுபாடுகளை அறிவிக்கிறார். இந்த காணொளி இன்னும் சில மாறுபாடுகளை
அறிவிக்கிறது. திரு ஜாகீர் நாயக் அறிவித்த அந்த இருபெரும் வேறுபாடு தவறானது
என்று இந்த காணொளி அறிவித்தால் தானே அது சரியான வாதம்???
திரு ஜாகீர் நாயக் அவர்கள், திரு டார்வின் அவர்கள் தன்னுடைய
ஆய்வுகளை தனது நண்பர் திரு “தாமஸ் த்ரோம்டன்” என்ற நபருக்கு கடிதம் முலம்
அறிவித்ததை விளக்குகிறார். ஆனால் அப்படி ஒரு நபர் இல்லை என்று திரு கொல்வின்
அவர்கள் கோடிட்ட காணொளி அறிவிக்கிறது. இது தவறானது, திரு டார்வின் அவர்கள் தனது
கணவர் “தாமஸ் த்ரோம்டன்” அவர்களுக்கு எழுதிய கடிந்தங்களை அவருடைய விதவையான மனைவி
வெளியுடுள்ளர்கள், இவற்றை அந்த காணொளியின் ஆசிரியர் அறிய வில்லையா? பார்க்க: http://www.jstor.org/pss/224920
திரு ஜாகீர் நாயக் அவர்கள், திரு டார்வின் அவர்கள் தன்னுடைய
ஆய்வுகளில் விலங்கினத்தின் பரிணாமா வளர்ச்சியில் பல தொடர்புகள் அறுபட்டு பொய்
இருப்பதை ஒப்பு கொள்கிறார் என்று அறிவிக்கிறார். இதற்க்கு அந்த காணொளி மறுப்பு
அளிக்காமல், திரு டார்வின் அவர்கள் தன்னுடைய ஆய்வுகளில் தொடர்ப்பு அறுபட்டு
போனதை ஒப்பு கொள்கிறார் ஆனால், இதற்க்கு பொருள் பரிணாமா வளர்ச்சி நடை பெறவில்லை என்பது
அல்ல என்று அறிவிக்கிறர்கள். இது அவர்களுடைய சொந்த கருத்து, இது எவ்வாறு திரு
ஜாகீர் நாயக் அவர்கள் தவறு உரைத்ததாக பொருள்படும்???
திரு ஜாகீர் நாயக், தன்னுடைய உரையில்
முந்தைய தேவாலையங்கள் விஞ்ஞானதிர்க்கு எதிராக இருந்தது என்று அறிவிக்கிறார். இதற்க்கு
மறுப்பு அளிக்க விரும்பிய அந்த காணொளி முந்தைய தேவாலையங்கள் விஞ்சியனதிர்க்கு
எதிராக இல்லை என்று அறிவித்து விட்டு பல கிறிஸ்தவ அறிஞர் , விஞ்ஞானிகள் பெயரை குறிப்பிடுகிறார்.
திரு கொல்வின் அவர்களே திரு ஜாகீர் நாயக் அறிவித்தது அன்றைய தேவாலையங்கள் விஞ்ஞானதிர்க்கு
எதிராக செயல்பட்டது என்பதாகும். நீங்கள் குறிப்பிடுவது கிறிஸ்தவத்தை சார்ந்த
அன்றைய அறிஞர், விஞ்ஞானிகள் பெயர்களை இது திரு ஜாகிர் நாயக் அவர்களின் கேள்விக்கு
சரியான பதிலாக இருக்க முடியுமா? உங்கள் வழிகே வருகிறோம், அந்த அறிஞர், விஞ்ஞானிகள் பட்டியலில் திரு நியூட்டன்
பெயரும் குறிப்பிட்டு இருக்கிறது, அவர் உங்கள் நம்பிக்கை போல் கிறிஸ்தவத்தை
நம்பினாரா? உதாரணமாக கிறிஸ்தவ அடிப்படை திரித்துவ கொள்கையை நியூட்டன் ஏறக்க
வில்லை, அது ஒரு இடை சொற்கள் என்று அவர் வாதிடுகிறார், இன்னும் அதிகமாக அவர்
பைபிள் மனிதர்களால் திருத்தபட்டதற்க்கு ஆதாரங்களை நீட்டியுள்ளார் பார்க்க: http://en.wikipedia.org/wiki/An_Historical_Account_of_Two_Notable_Corruptions_of_Scripture http://en.wikipedia.org/wiki/Isaac_Newton. இப்படி கிறிஸ்தவத்திதிற்க்கு எதிரான
தன்னுடைய கண்டுபிடிப்புகளை கிறிஸ்தவ தேவலையங்களுக்கு பயந்து வெளியிடமலே மறைத்து
உள்ளாறு. இது ஒன்றே போத வில்லைய அன்றை தேவலையங்கள் இப்படி விஞ்ஞானதிர்க்கு
எதிராக செயல் பட்டது என்பதை அறிய? இன்னும் பல அறிஞர், விஞ்ஞானிகளை கிறிஸ்தவம் கொன்று
குவித்துள்ளது பார்க்க: http://en.wikipedia.org/wiki/Giordano_Bruno
திரு ஜாகீர் நாயக் தன்னுடைய உரையில்
காலம் சென்ற திரு கலேலியோ கிறிஸ்தவத்திற்க்கு எதிரான ஆய்வுகளை (உதாரணமாக: உலகம் சூரியனை சுற்றி வளம்
வருகிறது, சூரிய சந்திரன் தூனிட பட்டு நிறுத்தி வைக்க பெறவில்லை, Biblical
references Psalm 93:1, 96:10, and 1 Chronicles 16:30 include text
stating that "the world is firmly established, it cannot be moved."
In the same manner, Psalm 104:5 says,
"the Lord set the earth on its foundations; it can never be moved."
Further, Ecclesiastes1:5 states that
"And the sun rises and sets and returns to its place" etc.[49]) வெளியிட்டதற்கு கிறிஸ்தவ சபைகளால் தண்டிக்க
பெற்றார் என்று அறிவிக்க எண்ணி தவறுதலாக மரண தண்டனை வழங்க பெற்றார் என்று
அறிவிக்கிறார். இதில் அவர்க்கு மரண தண்டனை மட்டுமே வழங்க பெறவிலையே அன்றி,
அவருக்கு சிறை தண்டனை வழங்க பெற்றது, பின்னர் அது விட்டு சிறை (house arrest) என்று தீர்ப்பு
வழங்க பெற்றது, இந்த தண்டனை அவர் வாழ்நாள் முழுவதும் என்று வழங்க பெற்றது, வாரம்
ஒருமுறை பைபிள் வசனங்களை உரக்க வாசிக்க அவருக்கு தண்டனை வழங்க பெற்றது. திரு கலேலியோ அவர்களால்
நிறைவேற்ற முடியாத நிலையில் இந்த தண்டனையை அவரது மகள் ஏற்று கொண்டார்கள்.
தன்னுடைய கடைசி நாட்களை கண்கள் குருடான நிலையில் இந்த விட்டு சிறை (house arrest) தண்டனையில் கழித்து உள்ளார்கள். இந்த தண்டனை
காலத்திலே ஏறத்தாள எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர் மரணம் எய்துள்ளர். அவர்
மனதிற்கு பிறகும் கிறிஸ்தவர்கள் அவருடைய உடலை அவருடைய தந்தை புதைக்க பெற்ற
இடத்திற்க்கு அருகாமையில் புதைக்க அனுமதிக்காமல் வேரு இடத்தில புதைக்க ஆணை
பிறப்பித்து உள்ளார்கள். கிறிஸ்தவ தேவலையங்கள் கிறிஸ்தவ அறிஞ்சர்களுக்கு வழங்கிய
மிக பெரிய பரிசுகளில் இதுவும் ஒன்று... இது போதவில்லையா கிறிஸ்தவ தேவாலையங்களை
அறிய? பார்க்க: http://en.wikipedia.org/wiki/Galileo_Galilei
திரு ஜாகீர் நாயக் தன்னுடைய உரையில்,
டார்வின் அவர்களின் மனித வளர்ச்சியின் உட்பிறிவான ஹோமொனிட்ஸ் (hominids) பற்றி அறிவிக்க எண்ணி அதை ஹோமொனைட்ஸ் (homonites) என்று அறிவிக்கிறார். இவை இரண்டிற்கு உள்ள உச்சரிப்பு வேற்றுமை எத்தகையது
என்பதை வாசகர்கள் காண விடுகிறோம்.
திரு ஜாகீர் நாயக் தன்னுடைய உரையில், டார்வின் அவர்களின் கருத்துக்கு எதிராக அறிவித்த சில அறிஞ்சர்களை கோடிட எண்ணி திரு சார் ஆல்பர்ட ஜயொர்ஜி (Sir Albert Georgie) என்ற நபரை அறிமுக படுத்துகிறார். அவரை நாம் அறிய ”Got noble price for inventing Vitamic-C” என்று அறிவிக்கிறார். இதற்க்கு அந்த காணொளி ”Sir Albert Georgie not invented but discovered Vitamin-C” என்று பதில் அளிக்கிறது. இயற்கையால் படைக்க பெறாத ஒன்றை கண்டு பிடிப்பது invention என்படும். இயற்கை படைத்த ஒன்றை வெளிபடுத்தினால் அது discovery எனப்படும். இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேரு பட்டை திரு ஜாகீர் நாயக் அவர்கள் தனக்கு கிடைத்த ஐந்தே நிமிடத்தில் அறிவிக்க தவரியதானால் இந்த காணொளி அறிஞ்சர் கோபம் கொண்டாரோ? இன்னும் ஒரு கிறிஸ்தவ அறிஞ்சர், டார்வின் கொட்பாடிற்க்கு எதிராக இயற்றிய புத்தகத்தின் பெயரை “The crazy ape and man” என்று திரு ஜாகீர் நாயக் அறிவிக்கிறார். இதற்க்கு அந்த காணொளி அறிஞ்சர், இது தவறு அந்த புத்தகத்தின் பெயர் “The crazy ape” என்று அறிவிக்கிறார், இன்னும் அது ஒரு பொதுவான எதிர் கருத்து புத்தகம் என்று அறிவிக்கிறார். திரு ஜாகீர் நாயக் தனக்கு கிடைத்த ஐந்தே நிமிடத்தில், அவர் என்றோ படித்த புத்தகத்தின் பெயரை நினைவு கூர்வதே அபூர்வம் என்ற நிலையில், அந்த புத்தகத்தின் பெயரில் உச்சரிப்பு பிழை செய்தது அந்த காணொளி அறிஞ்சரை கோபமுடியதோ?
திரு ஜாகீர்
நாயக் அவர்கள் தனக்கு கிடைத்த ஐந்து நிமிடத்தில் டார்வின் கொர்பாட்டை போன்ற
இன்னொன்றை அறிவித்த அறிஞ்சரின் பெயரை “Ruperts Albert” என்று
அறிவிக்கிறார். இதை போன்ற ஒரு நபரை தன்னால் காண முடியவில்லை என்பதனால் இது
பொய்யானது என்று அந்த காணொளி அறிஞ்ஜர் வாதிடுகிறார். திரு ஜாகீர் நாயக் அறிவித்த
அறிஞ்ச்ர் பெயர் “Rupert Sheldrake” பார்க்க http://en.wikipedia.org/wiki/Rupert_Sheldrake
திரு ஜாகீர்
நாயக் அவர்கள் தனக்கு கிடைத்த ஐந்து நிமிடத்தில் டார்வின் கொர்பாட்டை ஆதரிக்காத
இன்னும் ஒரு நபரை “Sir Frank Salosbury” என்று
அறிவிக்கிறார். இவரையும் தன்னால் காண முடியவில்லை என்பதனால், இது பொய்யான செய்தி
என்று அந்த காணொளி அறிவிக்கிறது. இவரை பற்றி அறிய பார்க்க: http://www.jstor.org/pss/4443526 Frank B. Salisbury, "Doubts about the Modern Synthetic Theory
of Evolution," American Biology Teacher, September 1971, p. 336.
இன்னும்
திரு ஜாகீர் நாயக் அவர்கள் தனக்கு கிடைத்த ஐந்து நிமிடத்தில் “Paramecium” என்பதை “Paramishia” என்று உச்சரித்தார் போன்ற
குற்றச்சாட்டுகளை அந்த காணொளி கோடிடுகிறது. இப்படி தனக்கு கிடைத்து வெறும் ஐந்து
நிமிடத்தில் திரு ஜாகீர் நாயக் அவர்கள் இதனை விவரங்களை அறிவித்ததை கண்டு
வியக்காமல் திரு கொல்வின் அவர்கள் போன்றவர்கள் உச்சரிப்பு பிழைகளை பெரிதாக உருவக
படுத்த முயல்கிறார்கள்.
திரு
கொல்வின் அவர்கள் உச்சரிப்பு பிழைகளை கோடிட்டதினால் அவர்களுக்காக நாமும் ஒன்றை கோடிடுவோம்.
நாம் முன்னர் அறிவித்த திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் காணொளிகளில் http://www.youtube.com/watch?v=6-gvEREm904, திரு ஜெர்ரி தாமஸ் தம் வாதத்தில், திரு குர்ஆன் வசனத்தில் திரு ஈஸா (அலை) அவர்களை இறைவன் உயர்த்தி கொண்டதை அறிவிக்கும் வசனத்தில் வரும் வார்த்தை “Waffa” என்று அறிவிக்கிறார். அரபி மொழியில் “Waffa” என்று அறிவித்தால் அதற்க்கு பொருள் “நம்பிக்கைக்கு உரிய”, “உண்மையுள்ள” என்பதாகும். இன்னும் திரு குர்ஆனில் திரு ஈஸா (அலை) அவர்களை இறைவன் உயர்த்தி கொண்டதாக அறிவிக்கும் வசனங்களில் “Waffa” என்று வரவில்லை மாறாக “Rafa”, ”Tawaffika”, “Tawaffay” என்றே வருகிறது. பார்க்க:
திரு
கொல்வின் அவர்களுக்கு அரபி உச்சரிப்பு அறியாமல் இருக்கலாம், அவருடைய தோழர் திரு
உமர் அவர்கள் இஸ்லாமில் இருந்து விலகி சென்றவர் என்று அறிவிக்கிறார், அவர் இந்த
வசனங்களை திரு கொல்வின் அவர்களுக்கு படித்து உச்சரிக்க மூன் வரலாமே!!!
திரு ஜெர்ரி
தாமஸ் அவர்கள் இன்னும் சில திரு குர்ஆன் வசனங்களை கோடிட்டு விட்டு அவரிலும் “Waffa” என்று வருகிறது, இதன் அடிப்படையில்
எங்கெல்லாம் “Waffa” என்று வருகிறதோ அங்கெல்லாம் அதற்க்கு
பொருள் மரணம் என்ற விளக்கத்தை தருகிறார். அவர் கோடிட்ட வசனங்களிலும் “Waffa” என்று வரவில்லை மாறாக “Tawaffakum”, “Tawaffal”, “Tawaffanii” என்றே வருகிறது. “Rafa”, “Tawaffika” என்ற அரபி வார்த்தைக்கு “உயர்த்தி
கொள்ளுதல்”, “கைப்பற்றி கொழுத்தல்”, “முடிவுற்றால்” போன்று பொருள் படுகிறது, இவை
எந்த வார்த்தையுடன் தொடர படுகிறதோ அதை பொருத்து அதன் பொருள் அமைகிறது. உதாரணமாக
“உங்கள் உயிரை மல்க்குள் மவ்த் கைப்பற்றும் பொழுது” என்று அறிவிக்கும் வசனத்தில்
“Tawaffakum” என்ற வார்த்தை அமைக்க பெற்றால் அது
கண்டிப்பாக மரணத்தை குறிக்கிறது, ஏன்னெனில் மல்க்குள் மவ்த் கைப்பற்றுவது மரண
வேளையில்.
பொதுவாக திரு குர்ஆன் மரணத்தை அறிவிக்க Ahnisar, amuutu, Himam, Qaziah, misraa, mammat, mauto, dummto, waffat, etc... போன்ற வார்த்தைகளை உபயோக படுத்துகிறது. திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின் வாதத்தின் அடிப்படையில் “Waffa” என்றால் மரணம் என்ற பொருள் என்றால், திரு ஈஸா (அலை) அவர்களின் மரணத்தை திரு குர்ஆன் “Waffa” என்ற வார்த்தை கொண்டு விவரிக்கிறது என்றால், அவர் தன்னுடைய சொற்பொழிவில், திரு ஈஸா (அலை) அவர்களின் மரணத்தை அறிவிப்பதாக கோடிட்ட 19:33 வசனத்திலும் “Waffa” என்றே அறிவித்து இருக்க வேண்டும் மாறாக அந்த வசனம் ஏன் “Ammutu” என்ற வார்த்தை உபயோகிக்கிறது???
:
திரு
கொல்வின் அவர்களே இப்பொழுது நாங்கள் அறிவிக்கும் திரு ஜெர்ரி தாமஸ் அவர்களின்
தவறுகளுக்கும், நீங்கள் அறிவிக்கும் திரு ஜாகிர் நாயக் அவர்களின் தவறுகளுக்கும்
உள்ள வேறுபாடு நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு ஏன்
இதனை சிரமம், இதற்க்கு முன்னரே திரு ஜாகீர் நாயக் அவர்கள் தெளிவாக அறிவித்து
இருந்தாரே, “தான் தான் கடவுள், தன்னை வணங்குங்கள்” என்று திரு இயேசு அவர்கள் தன்
வாயால் அறிவித்த தெளிவான பைபிள் வசனத்தை கோடிடுங்கள் தான் கிறிஸ்தவத்தை உடனே
தலுவுகிறேன் என்று. இப்படி அவருக்கு எதிரான குற்றசாட்டுகளை இணையதளங்களில் தேடும்
வேலையில், அவர் அறிவித்தது போன்ற ஒரு தெளிவான பைபிள் வசனத்தை கண்டு அவருக்கு முகவரி
இட்டு இருந்தால், அவரும் உங்கள் உமருடன் இணைந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக
கட்டுரை வரைய, திரு உமர் அவர்களுக்கு இது வரை கிட்டாதா, உங்கள் இறைவன் எடுத்து
தர மறுத்த பல தெளிவான ஆதாரங்களை எடுத்து கொடுத்திருப்பார், உங்களையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருப்பார். என்ன திரு கொல்வின் அவர்களே அதை போன்ற ஒன்றை
எடுத்து கொடுக்க மூன் வருவீர்களா? குறைந்த பட்சம் உங்கள் திரு ஜெர்ரி தாமஸ் போன்று,
பைபிள் வசனத்தை தவறாக கோடிட்டு விட்டு அதை இஸ்லாமியர்கள் திருத்துவதை நகைத்து
கொண்டு ரசிக்க மாட்டிர்கள் என்று நம்புகிறோம்...
இறைவன்
நாடினால் மிண்டும் சந்திப்போம்...
அஸ்ஸலாமு
அழைக்கும்
-ஜியா &
அப்சர்
|
--
--
3 comments:
சகோதரரே நான' கேட்டது ஒவ்வொரு தவறுக்குமான விளக்கம் வீடியோ பாருங்கள். மற்றது ஜாகிர் நாயக சிறந்த மருத்துவர். உச்சரிப்பு பிழை செய்யக்கூடியவர் அல்ல. அவரின் ஞாபக சகதியும் அபாரமானது. மற்றும் PJ அவர்களும் ஜாகிர் நாயக் நிறைய தவறுகள் செய்வதாக அவரின் தளதில் குறிப்பிட்டுள்ளார். அதற்கும் விளக்கம் தேவை. யார் சொல்லுவது சரி?
கொல்வின் அண்ணா,
நான் ஏற்கனேவே கூறியது போல, "ஒரு ஆதாரத்தையும் முன் வைக்காமல் யாரோ ஒருவர் பேசுவதை எதை கொண்டு எங்களை நம்ப சொல்கிறீர்?" யார் வேண்டுமானாலும் உண்மையையும் பொய்யையும் கலந்து தனது விருப்பம் போல எழுதலாம், உதாரணத்திற்கு நீங்கள் அனுப்பிய வீடியோ தொடுப்பு. இந்த தளத்தில் விளக்கம் அளித்த ஒரு சில தகவல்களிலேயே புரிந்துள்ளது அந்த வீடியோவில் உள்ள நபர் தன் இஸ்டத்திற்கு உளறுகிறார் என்று. இப்படி உலருபவர்களுக்கு வரிக்கு வரி பதில் வேண்டும் என கேட்பது முட்டாள் தனம். இதை நீங்கள் மறுக்காததின் மூலம் அவர் உளறுகிறார் என்பதை ஒத்துகொள்கிறீர்கள். அந்த நபர் உளறுகிறார் என்பதை உங்களுக்கு புரிய வைக்கவே இந்த தளத்தில் விளக்கமாக எழுதியுள்ளனர். அது சரி ஜாகிர் நாயகிடம் கேள்வி கேட்க வந்த ஜெர்ரி தாமஸ் அவர்கள், பைபிள் வசன என்னை கூட சரியாக சொல்லவில்லையே? அவர் எப்படி சமாளித்தார் என்பதை மறந்துவிடீர்களா? அவர் கிறிஸ்தவ அறிஞரா? இல்லையா? இப்படி பட்ட அறிஞர் பைபிள் வசன என்னை மறப்பது அவருக்கே தகுதியானதா? விளக்கம் தேவை.
இந்த தளத்தில் குறிப்பிட பட்டுள்ளதை போல உமர் அண்ணன் கட்டுரைகளில் தலைப்புகளை மாற்றி மாற்றி திசை திருப்புவது போல, ஜாகிர் நாயக் பொய் சொல்கிறார் என சொல்லிவிட்டு, PJ அவர்களும் ஜாகிர் நாயக் அவர்களும் தங்கள் கருத்துக்களில் வித்தியாச படுகின்றனர் என கூறுகிறீரே!!! பொய் சொல்வதற்கும் கருத்துக்களில் வேறுபடுவதும் ஒன்றாகாது. கருத்துக்கள் வேறுபடுவதை எடுத்துகொண்டால் தமிழ்நாட்டில் மட்டுமே நூறு பேர் நூறு விதமாக கருத்து சொல்வார்கள். அதற்காக 99 பேர் பொய் சொல்கிறார்கள் என்றாகிவிடுமா?
அஸ்ஸலாமு அழைக்கும், திரு கொல்வின் அவர்களே, உலகில் சராசரி மனிதனாக பிறக்கும் எவரும் தவறுகளுக்கு அப்பார்பட்டவர் இல்லை, எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே தவறுகளுக்கு அப்பார்பட்டவன், இதற்க்கு திரு ஜாகீர் நாயக் அவர்கள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல, அவர்களும் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சிறு தவறுகள் செய்து இருக்கலாம், ஆனால் அந்த தவறுகள் உங்கள் கிறிஸ்தவ பேச்சாளர் திரு ஜெர்ரி தாமஸ் அவர்கள் செய்யும் உண்மைகளை திரித்து அறிவிப்பது போன்றது அல்ல என்பதே மேலே எங்கள் கட்டுரையின் சாராம்சம்.
இஸ்லாமிய இரு அறிஞ்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம், இதற்க்கு பொருள் அவர்கள் அறிவிக்கும் எல்லா கருத்துகளையும் நாம் ஏற்க கூடாது என்பது அல்ல, இவ்விருவர்களில் ஒருவர் சொல்வது சரி மற்றொருவர் சொல்வது தவறு என்பதும் அல்ல, மாறாக அவர்கள் அறிவிக்கும் கருத்துகளை திரு குர்ஆன் ஹதிஸ் வாயிலாக ஆராய்ந்து அதில் உள்ள உண்மையை ஏற்க வேண்டும் என்பதே. உங்களுக்கு இன்னும் தெளிவாக புரிய பைபிள் வாயிலாக சொல்ல வேண்டும் என்றால், உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பைபிள்ளில் இயேசு அவர்களின் மரண வேலை நடந்தேறிய ஒரு நிகழ்வை பைபிள்ளில் நான்கு சீடர்கள் நான்கு விதமாக அறிவிக்கிறார்கள். இவற்றில் ஒருவர் சொல்வது தவறு மற்றோவர் சொல்வது சரி என்று உங்களால் பிரித்து அறிவிக்க முடியுமா???
இருப்பினும் ஒரு கிறிஸ்தவராக இருந்து கொண்டு திரு ஜாகீர் நாயக் அவர்களை நீங்கள் புகழ்வதை கண்டு நாங்கள் வியப்பு அடைகிறோம். உங்களுடைய முயற்சி தொடர வாழ்த்துகிறோம்..
அஸ்ஸலாமு அழைக்கும்..
-ஜியா
Post a Comment