பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக திரு உமர் அவர்களின் "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு: வாசகர்களே, திரு உமர் அவர்கள் சமீபமாக தன் வலைத்தளத்தின் முகப்பில், வாசகர்கள் அதிக படியாக படித்த கட்டுரைகளின் பட்டியலை வெளியிட்டு இருந்தார்கள். அந்த பட்டியலில் முதன்மையாக "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1” என்ற கட்டுரை இடம் பெற்று இருந்தது. இந்த கட்டுரையின் துவக்கத்தில் திரு உமர் அவர்கள் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:
வாசகர்களே, திரு உமர் அவர்கள் அந்த கட்டுரையின்
துவக்கத்திலே இவ்வாறு அறிவித்த உடன், ஏதோ இஸ்லாம் பற்றியும், திரு முஹம்மத் நபி
(ஸல்) அவர்களை பற்றிய பெரிய விவரத்தை தக்க ஆதாரங்களுடன் திரு உமர் அவர்கள் விவரிக்க
போகிறார்கள் என்ற எண்ணத்தில் அவர் கட்டுரையை படிக்க முனையும் வாசகர்களுக்கு
மிஞ்சி இருப்பது ஏமாற்றம் மட்டுமே. திரு உமர் அவர்கள் அந்த கட்டுரையில் திரு
முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக எந்த தெளிவான ஆதாரத்தையும் விட்டு
வைத்ததாக நம்மால் அறிய முடியவில்லை. அதற்க்கு மாறாக இஸ்லாம் பற்றி அறிய இந்த
புத்தகத்தை படியுங்கள், அந்த புத்தகத்தை படியுங்கள் என்ற இஸ்லாமியர்கள் மார்கமாக
ஏற்ற சில புத்தகங்களை அறிவித்து விட்டு அதனுடன், தன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிற்கு
எதிராக தெளிவான ஆதாரம் இல்லாமல் இயற்றிய நூல்களை விளம்பரம் படுத்தும் வகையில்
வாசகர்களை படிக்க அறிவுரை மட்டுமே விட்டு வைத்து இருகிறார்கள்.
வாசகர்களே திரு உமர் அவர்கள் தன்னுடைய கட்டுரையின் துவக்கத்தில் ஒரு பைபிள் வசனத்தை கோடிட்டு இருந்தார்கள் அது: திரு உமர் அவர்கள் மேலே கோடிட்ட பைபிள் வசனம், துளியளவும் திரு உமர் அவர்களின் செயல் பாடுகளுக்கு பொருந்தாது என்பது எங்களுடைய கருத்து, இன்னும் அந்த வசனத்தை கோடிட சிறிதளவும் அவர் தகுதியற்றவர் என்பது எங்களுடைய கருத்து. ஏன்னெனில் முறையான எழுத்து விவாத அழைப்புகளை ஏற்க மறுக்கும் திரு உமர் அவர்கள், தெளிவான பைபிள் வசன ஆதாரங்களுடன் எழுத்த பெரும் பைபிள்ளின் விமர்சனம் தன்னை ஒன்றும் செய்வது இல்லை என்று தெளிவாக பல முறை அறிவித்த திரு உமர் அவர்கள், இதுவரை ஒரு முறையேனும் பைபிள் தெளிவான வசன கேள்விகளுக்கு பைபிள் தெளிவான வசன ஆதாரத்தை முன் வைத்து மறுப்பு எழுத்த முயற்சிக்காத திரு உமர் அவர்கள், இன்னும் அதிக படியாக தன்னுடைய வலைத்தளத்தில் வாசகர்கள் கேட்கும் பைபிள் கேள்விகளுக்கே பதில் அளிக்காமல் வாய் மூடி இருக்கும் திரு உமர் அவர்கள், எந்த விதத்தில் இந்த பைபிள் வசனத்தை கோடிட தகுதியானவர் என்பதை வாசகர்கள் நீங்கள் தான் தீர்ப்பு அளிக்க வேண்டும். திரு உமர் அவர்கள் அந்த வசனத்தை கோடிட்டதர்க்கு பதிலாக தன்னை பற்றி கீழே உள்ள வசனத்தை கோடிட்டு இருக்கலாம், இதுவே அவருக்கு அந்த கட்டுரைக்கும் தக்க பொருந்தும் என்பது எங்களுடைய கருத்து:
இன்னும், திரு உமர் அவர்கள் தன்னுடைய
கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்:
“நீங்கள்
இஸ்லாமியர்களின் மத்தியில் ஊழியம் செய்யப் போவீர்களானால், உங்களுக்கு
இஸ்லாம் பற்றி ஓரளவிற்காவது தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.”
திரு உமர் அவர்களே இஸ்லாமியர்களின் மத்தியில் ஊழியம் செய்யப் போவோர்கள், தான் தழுவி இருக்கும் கிறிஸ்தவம் பற்றி ஓரளவிற்காவது தெரிந்து இருக்க வேண்டாமா? திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யுரை மொழியும் முன், தான் சார்ந்து இருக்கும் மதத்தை நிறுவிய இறைதூதர்களை பற்றி தான் நம்பும் பைபிள் என்னவென்று விவரிக்கிறது என்று அறிந்து இருக்க வேண்டாமா? பைபிள் இறைதூதர்கள் பற்றி விவரிக்கும் விபச்சார விரசம் நிறைந்த வசனங்களை இஸ்லாமியர்களின் மத்தியில் ஊழியம் செய்யப் போவோர்களுக்கு பைபிள் வசன உதவி கொண்டு விவரிக்க முன் வர நீங்கள் அறிவுரை வழங்க மாடிர்களா? இன்னும், திரு உமர் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் இவ்வாறு அறிவித்து இருந்தார்கள்
“இஸ்லாம்
பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டுமானால், நீங்கள்
முஹம்மதுவைப் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும். குர்ஆன் பேசுவது அவரைப்
பற்றியும் மற்றும் அவரைப் பற்றி மட்டுமே குர்ஆன் பேசுகிறது.”
இன்னும், திரு
உமர் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் இவ்வாறு அறிவிக்கிறார்
“முஹம்மது வாழ்ந்த
வாழ்க்கைமுறை (Life Style) தான்
இஸ்லாமாகும்.”
இது திரு உமர் அவர்களின் கற்பனையே அன்றி வேரு ஒன்றும் அல்ல. இஸ்லாம் என்பது ஏக இறைவனுக்கும் முற்றிலும் அடி பணிந்து அவனின் விருப்பத்திற்கு ஏற்ப அவன் வழங்கிய சட்ட திட்டங்களை பேணி பின்பற்றி வாழ்கை முறையை அமைத்து கொள்வதாகும். முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்கை முறையில் எது இறைவழிபாட்டை சார்ந்ததோ, எதை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக இறை பொருத்தத்தை பெற செய்தார்களோ, அந்த செயல் பாடுகளை இஸ்லாமியர்களினால் “சுன்னா” என்று விவரிக்க படுகிறது. திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல், திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் செய்த அனைத்தையும் இஸ்லாமியர்கள் “சுன்னா” வாக மேற்கொள்வது இல்லை. உதாரணமாக மூன்று விரல்களினால் சாப்பிடுவது, ஓட்டகை மற்றும் கழுதைகளில் பிரயாணம் செய்வது, கோதுமை ரொட்டியை பிரதான உணவாக சாப்பிடுவது...
திரு
முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் எந்த அமல்களில் இறை வணக்கம் சார்ந்து இருந்ததோ,
எந்த அமல்களை தன் அறிவுரைகளில் பின் பற்ற பணித்தாரோ, எந்த அமல்களை தொடர்ச்சியாக
செய்தாரோ, அவற்றை மட்டுமே இஸ்லாமியர்கள் சுன்னாவாக பின் பற்றுகிறார்கள். உதாரணமாக
பைபிள் ஏசு அவர்களின் சுன்னா என்றால் போர் வால் கொள்முதல் செய்வது, அப்பாவி
வியாபாரிகளை அடித்து துன்புறுத்துவது, அத்தி மரத்தை சபித்து அளிப்பது போன்றவை
அல்ல மாறாக, திரு ஏசு அவர்களின் போதனை ஏற்று எல்லாம் வல்ல ஒரே இறைவனை வணங்குவது,
காலையிலும் மாலையிலும் இன்னும் கஷ்டம் நேரும் வேளையிலும் சுஜுது செய்து எல்லாம்
வல்ல ஒரே இறைவனை வணங்குவது போன்றதாகும்...
திரு உமர்
அவர்கள் தன்னுடைய கட்டுரையில் மேலே உள்ள அறிவுரையை அறிவித்து இருந்தார்கள், ஏன்
திரு உமர் அவர்களே நீங்கள் உங்கள் தேவனிடம் பைபிள் கேள்விகளுக்கு பதில் அளிக்க
பைபிள் தெளிவான வசனத்தை கோரி ஜெபம் செய்யலாமே? ஏன் ஊழியம் செய்பவர்களுக்கு மட்டுமே
உங்கள் தேவன் பதில் அளிப்பாரா? உங்களை போன்ற போலி கிறிஸ்தவர்களுக்கு அவரிடம்
இடம் இல்லையா???
திரு உமர் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் இஸ்லாம் பற்றி அறிய திரு குர்ஆன், திரு குர்ஆன் விரிவுரை, ஹதிஸ், மற்றும் சீராக்கள் (வாழ்க்கை வரலாறு) போன்றவற்றை அறிய வேண்டும் என்று அறிவிக்கிறார். திரு உமர் அவர்கள் அறிவிப்பதில் ஒரு பாதியே இஸ்லாமியர்களால் ஏற்கபடுவது, அதாவது திரு குர்ஆன் மற்றும் சஹி ஹதிஸ் மட்டுமே இஸ்லாமியர்களால் மார்கமாக ஏற்கபடுவது. திரு குர்ஆன் விரிவுரை, தனி மனிதர்கள் தங்களால் முடித்த வகையில், தாங்கள் அறிந்த வகையில் திரு குர்ஆன்னை விவரிப்பதாகும், இதை ஒரு ஆயுவுக்காக துணை நூலக இஸ்லாமியர்கள் ஏற்ப்பார்களே அன்றி அதை முழுமையாக மார்கமாக ஏற்ப்பவர்கள் இல்லை. திரு உமர் அவர்கள் சீராக்கள் (வாழ்க்கை வரலாறு) என்று ஒரு அட்டவணையை வெளியிடுகிறார்கள். அது இதோ:
வாசகர்களே, இதற்க்கு முன்னரே இந்த சிராத்துகளின் மூல
நூல் அழிந்து விட்ட நிலையில் எதை அடிப்படையாக கொண்டு இவற்றை நாம் ஏற்ப்பது என்று
விடுத்த கேள்விக்கே திரு உமர் அவர்கள் இன்றளவில் தெளிவான ஆதாரத்தை முன் வைத்து பதில்
அளிக்க மறுப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. உதாரணமாக “ஸிராத்துல் ரசுல்லுலாஹ்” என்ற
காலம் சென்ற இப்னு இஷாக் அவர்கள் இயற்றிய நூலின் பிரதி முற்றிலும் அழிந்து போன
நிலையில், இஸ்லாமிய தொல் பொருள் ஆய்வாளர்களே உலகளவில் இதன் மூல நூலை தேடும்
பணியில் இருக்கும் நிலையில், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு
கிறிஸ்தவர் அந்த மூல நூல் அழிந்து ஏறத்தாள 1200
ஆண்டுகள் கழிந்த
பிறகு இது தான் “ஸிராத்துல் ரசுல்லுலாஹ்” என்று ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை
நீட்டினால் இதை யாரேனும் ஏற்க முன் வருவார்களா? மூல நூல் அழிந்த நிலையில் இவற்றை
ஏற்க்க சொல்லும் திரு உமர் அவர்கள், தங்கள் கிறிஸ்தவர்கள் தங்கள் கையால் திரு
ஏசு அவர்களை பற்றி இயற்றி வைத்துள்ள நூல்களை, பைபிள்ளில் இணைக்க மறுக்கும்
நூல்களை (சில நூல்கள் பல கிறிஸ்தவ பிரிவுகளால் ஏற்க பெற்று அவர்கள் பைபிள்ளில்
இணைக்க பெற்ற நிலையிலும்) திரு உமர் அவர்கள் அவற்றை ஏற்க்க முன் வருவார்களா? இதோ
சில புத்தகங்கள்:
மேலே கோடிட்ட ஆதாரங்களில் இருந்து நாம் கேள்வி எழுப்பினால் அதை திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரம் வைத்து மறுப்பு அறிவிப்பர்களா? அவர் ஏற்று கொண்ட பைபிள் ஆதாரங்களுக்கே பதில் அளிக்க மறுக்கும் திரு உமர் அவர்கள் இந்த ஆதாரங்களுக்கு பதில் அளிக்க முன் வருவார்களா??? 21 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதிய நூல்களை ஏற்க்க சொல்லும் திரு உமர் அவர்கள் கிறிஸ்தவதிற்கு எதிராக கிறிஸ்தவர்களே இயற்றி வெளியிட்டு இருக்கும் நூல்களை அங்கிகரிக்க முன் வருவார்களா???, இதோ சில:
வாசகர்களே, பைபிள்
புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதி திரு ஏசு அவர்களை உயிருடன் ஒரு முறையேனும்
பத்திராத, ஆரம்ப கால கிறிஸ்தவ பெரும் எதிரியான திரு பால் அவர்களால் இயற்ற பெற்றது என்று நம்ப
படுகிறது, இதை ஏற்க்க
முன் வரும் திரு உமர் அவர்கள், இஸ்லாமியர்களின் மத்தியில் ஊழியம் செய்யப்
செல்லும் கிறிஸ்தவர்களை, மேலே கோடிட்ட கிறிஸ்தவ அறிஞ்சர்கள் இயற்றிய புத்தகங்களை
படித்து ஏசு அவர்களின் வாழ்கையை பற்றியும் விவரிக்க, திரு உமர் அவர்கள் அறிவுரை
வழங்க முன் வருவார்களா???
வெறும் பைபிள் உதவி கொண்டு திரு ஏசு அவர்களை முழுமையாக அறிய முடியுமா? பைபிள் திரு ஏசு அவர்களின் வாழ் நாளில் ஒரு சில ஆண்டுகளை மட்டுமே விவரிக்கிறது. அவருடைய பிறப்பு மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் அவர் மரண வேலைக்கு முன் நடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகளை மட்டுமே விவரிக்கிறது. அப்படியானால் மீதம் உள்ள ஏறத்தாள முப்பது ஆண்டுகள் அடங்கிய வரலாற்றை மேலே நாங்கள் கோடிட்ட புத்தகங்கள் மூலம் நாம் விளங்கி கொள்ளலாமா? இதற்கேனும் திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரம் கொண்டு நமக்கு விளக்கம் தருவாரா? பொறுத்து இருந்து பார்போம்... அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா &
அப்சர்
|
--
--
No comments:
Post a Comment