அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 2 பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக தலைப்புக்கு செல்வதற்கு முன் திரு உமர் அவர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் ஒரு கருத்தை கட்டுரையாக வரைவதற்கு முன்னர், “இந்த கருத்தை அறிவிக்க நீங்கள் தகுதியானவரா” என்று ஒரு முறை ஆராய்ந்து பார்த்து விட்டு அறிவியுங்கள்!!. “இன்னும் நீங்கள் சார்ந்து இருக்கும் கிறிஸ்தவம் இந்த கருத்துக்கு அப்பாற்பட்டதா” என்று பல முறை ஆராய்ந்து பார்த்து விட்டு கேள்வி எழுப்புங்கள்? இவ்வாறு தற்காப்பு நோக்கத்தோடு முன்னரே ஆராய்ந்து கட்டுரை வரைவீர்களாயின், இப்படி நீங்களும், உங்கள் கட்டுரைகளால் கிறிஸ்தவமும் ஒன்று சேர்ந்து இழிவு நிலை அடைவதை தவிர்த்து கொள்ளலாம். உமரிடம் நேரமில்லையா? அல்லது கிறிஸ்தவத்திடம் தகுந்த ஆதாரம் இல்லையா? திரு உமர் அவர்களே, நீங்கள் முதலில் நேரமில்லை என்ற காரணத்தை முன் வைத்து பதில் அளிப்பதை தவிர்த்து வந்தீர். பின்னர் “ரவுண்டுகட்டி அடிக்க போவதாக” அறிவித்துவிட்டு, சாரம் இல்லாத மூன்று கட்டுரைகளை மொழி பெயர்துள்ளீர்கள். திரு உமர் அவர்களே நீங்கள் சுத்தி.. சுத்தி.. தாக்கினீர்களா ? அல்லது தாக்கப்பட்டீர்களா? என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மாதம் ஒரு கட்டுரையை வரைந்து, உங்களை பின் தொடர்பவர்களுக்கு கணக்கு காட்ட எண்ணி, ஜனவரி மாதம் எதையேனும் வெளியிட வேண்டிய நிர்பந்தத்தில், மூன்று சாரம் இல்லாத கட்டுரைகளை மொழி பெயர்ததின் மூலம், நீங்கள் முதலில் நேரமில்லை என மறுத்து வந்தது “பொய்” என்று நீங்களே சாட்சி கூறியுள்ளீர்கள். மீண்டும் இப்பொழுது திரு ஜியா அவர்களுக்கு பதில் என எங்களுடைய கட்டுரைக்கு எதிர் கட்டுரை என்ற பெயரில் எந்த ஆதாரமும் இல்லாமல், எழுதியதன் மூலம் நீங்கள் ரவுண்டுகட்டி அடிக்கபோவதாக சொன்னதும் “பொய்” என நீங்களே சாட்சி கூறுகிறீர்கள். உங்களது இந்த சாரம் இல்லாத மூன்று மொழி பெயர்ப்புகள் மூலம் மற்ற அனைவரையும் அடித்து வீழ்த்தி விட்டீர்களா? என்பது உங்களுக்கு (திரு உமர் அவர்களுக்கு) மட்டுமே தெரிந்த ரகசியம்!! திரு உமர் அவர்களே, இப்படிப்பட்ட உங்களுடைய குழப்பங்களுக்கு என்ன நிர்பந்தம், யார் நிர்பந்தித்தார்கள் என தெரியவில்லை. சரி இப்படி இத்தனை கால தாமதத்திற்கு பிறகு வந்தது தான் வந்தீர்கள், உங்களுடைய பதில்களை நீங்கள் விட்ட இடத்தில இருந்து தொடரலாமே? நீங்கள் மறுபடியும் பதிலளிக்க தொடங்குவது என்றால் எந்த இடத்தில் முடித்தீர்களோ அங்கிருந்து தானே தொடர வேண்டும். ஏதோ சாட்சிகளை மண்ணுக்குள் போட்டு மறைப்பது போல அவசர அவசரமாக மூன்று சாரம் இல்லாத மொழிபெயர்ப்பு கட்டுரைகளை வெளியிட்டு, பின்னர் வேறொரு தலைப்பில் இருந்து ஆரம்பிப்பது தான் உங்களது அகராதியில் எழுத்து விவாதமா? உமர் எழுதியது "மக்களை ஏமாற்றவேண்டும், இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டுவர வேண்டும்" என்ற ஒரே நோக்கத்திற்காக எவ்வளவு கீழ்தரமாக செயல்படவும், இஸ்லாமிய அறிஞர்கள் தயங்க மாட்டார்கள்”. யார் கீழ்தரமாக செயல்படுவது? வாசகர்கள் மேலுள்ள பத்தியை படித்தீர்களேயாயின், இந்த வாக்கியத்திற்கு பொருத்தமானது உமரும் அவரது கட்டுரைகள் மூலம் அவர் நம்பும் கிறிஸ்தவமும் தான் என்பது தெளிவாக விளங்கும். உமர் அவர்கள் “ஸஃபிய்யாவின் திருமணம்” பற்றி ஒரு அவதூறு கட்டுரை வரைந்திருந்தார். நாம் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு கட்டுரையை சில மாதங்களுக்கு முன்னர் வரைந்தோம் இதன் தொடர்ச்சியாக திரு உமர் அவர்கள் ஒரு மழுப்பு கட்டுரையை, தலைப்பை மாற்றி வரைய ஆரம்பித்தார். “நாம் ஏன் தலைப்பை மாற்றினீர்கள்?” என்று கேள்வியோடு அவர் முன் வைத்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கட்டுரை எழுதினோம். அத்துடன் பைபிளில் இருந்து சில வசனங்களை முன் வைத்து அதற்கு தக்க ஆதாரத்துடன் பதிலளிக்கும்படி கேள்வி எழுப்பினோம். நாங்கள் கேள்வி எழுப்பியது தான் தாமதம், அன்று முதல் திரு உமர் அவர்களிடமிருந்து பதில் இல்லை! டிசம்பர் 5 ஆம் தேதியில் இருந்து திரு உமர் அவர்களை காணவில்லை. திரு உமர் அவர்களிடம் தெளிவான ஆதாரம் இல்லாமையால் அன்சரிங் இஸ்லாம் இணையதள அறிஞர்கள் உதவியின் வருகைக்கு, பதில் வருகைக்காக காத்திருக்கிறாரோ என்னமோ.. அவருடைய கட்டுரையின் நம் அலசல் பார்க்க பகுதி 2: http://isaakoran.blogspot.com/2010/12/blog-post_12.html நம் பதில் பகுதி 3: http://isaakoran.blogspot.com/2010/12/blog-post_17.html இதற்கு முன்னரே பதில் அளிப்பதை தவிர்த்து விட்டு ஓடி ஒளிந்துவிட்டார். ஏன் தன்னை கிறிஸ்தவ அறிஞர் என்று காட்டிக்கொள்ள முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், பைபிளை முன் வைத்தால் இப்படி அலரி அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் என தெரியவில்லை!! சராசரி கிரிஸ்தவர்களே பின்னூட்டங்கள் மூலம் அவர்களுடைய மறுப்பை, அவர் அவருக்கு தெரிந்த முறையில் வெளிக்காட்டும் பொழுது, தன்னை கிறிஸ்தவ அறிஞன் என சொல்லிக் கொள்ளும் திரு உமர் அவர்கள் ஏன் ஓடி ஒளிந்தார் என தெரியவில்லை. அவருக்கு கிறிஸ்தவத்தில் ஞானம் இல்லையா? அல்லது கிரிஸ்தவத்திடம் நம் கேள்விகளுக்கு பதில் இல்லையா? மற்றவர்களால் கிறிஸ்தவம் கேவலபடுவதை காட்டிலும், நமது நண்பர் திரு உமர் போன்று கிறிஸ்தவ அறிஞர்கள், “கிறிஸ்தவத்தை காப்பாற்றுகிறேன்” என்ற போர்வையில், கிறிஸ்தவத்தை நட்டாத்தில் தவிக்க விட்டு ஓடி ஒளிவதாலே தான் கிறிஸ்தவம் இன்னும் அதிகபடியாக கேவலப்படுகிறது. திரு உமர் அவர்கள், தன்மானத்துடன் தொடர விரும்பி இருந்தால், இனமும் அவர் கிறிஸ்தவத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தால், தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, அவர் வெளியிட்ட கருத்துக்களில் இருந்து பின் வாங்கி, திரு உமர் அவர்கள் பல இணையதளங்களில் பிரசுரித்த இந்த கருத்துகளை நீக்க முன் வந்தால் கிறிஸ்தவத்தின் கொஞ்ச நஞ்ச மானமாவது மிஞ்சி இருக்கும் அல்லவா? திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் குர்ஆன் மூலத்தை பற்றிய கேள்விகள் என்ற போர்வையில், நீங்கள் பதில் அளிக்காமல் ஓடிய தலைப்பை போன்று, முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு செய்யும் வகையில், எந்த ஆதாரம் இல்லாமல் பல கருத்துகளை அறிவித்து இருந்தீர். இவ்வாறு நீங்கள் வெளியிட்ட பொய்யான கருத்துகள் ஏதேனும் ஒன்றின் மீது உங்களிடம் தெளிவான ஆதாரங்கள் இருந்தால், அதை கட்டுரையாக வரையுங்கள், உங்கள் கிறிஸ்தவத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் உண்மையாக கிறிஸ்தவராக இருந்தால் அப்படி செய்யுங்கள்.
அப்படி தக்க ஆதரத்துடன் நீங்கள் வரையப் போகும் கட்டுரைக்கு, எதிர் வாதம் வரைய இறைவன் கிருபையை நாடியவர்களாக நாங்கள் காத்திருக்கிறோம். இப்படி முறையே எழுத்து விவாதத்திற்கு வருவதை விடுத்து, எந்த ஆதாரமும் முன் வைக்காமல் இப்படி புலம்பி கொண்டு இருக்காதீர்கள். இனியேனும் இப்படி தெளிவான ஆதாரத்தை முன் வைத்து நேரடி விவாதத்திற்கோ அல்லது எழுத்து விவாதத்திற்கோ முன் வராமல் பொய்யான வார்த்தைகளை நீங்கள் மொழிவதை தொடர்வீர்களாயின் “சூரியனை பார்த்து குறைகிறீர்கள்” என்று கிறிஸ்தவர்களாலே ஒதுக்க படுவீர், இன்னும் உங்கள் பெற்றோர்களை பார்த்து நீங்கள் இந்த கருத்தை தெரிவித்ததாக வாசகர்களால் கருத்த படுவீர். இப்போது உங்களுடைய கட்டுரைக்கு வருவோம்.... திரு உமர் அவர்கள், அவருடைய இணையதளத்தில் "தமிழ் முஸ்லீம் தளமும், அல்லேலூயா வார்த்தையும்” என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அந்த கட்டுரையில், “அல்லேலூயா” என்ற ஹிப்ரேவ் மொழி வார்த்தைக்கு அர்த்தமாக "யேகோவா தேவனை துதித்தல் – Praise the LORD or Praise Yahweh" என்ற, பிழையான விளக்கத்தை தந்து இருந்தார். இதற்க்கு மறுப்பு அளிக்க எண்ணி, திரு ஈசா உமர் ஒரு நல்ல நடுநிலையான கிறிஸ்தவர் என்ற நம்பிக்கையில், இறைவன் கிருபையில், “அல்லேலூயாவும் ஈசா உமரும்!!!” என்ற தலைப்பில், ஒரு கடிதம்/கட்டுரையை வரைந்து, அதர்க்கு விளக்கம் அளிக்குமாறு திரு உமர் அவர்கள் இணையதளத்தில் பின்னூட்டமிட்டேன். இதற்கு முன்னரே, நான்கு முறை திரு உமர் அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில், அவரது இணையதளத்தில் பின்னூட்டமிட்டு இருந்தேன். ஆனால் திரு உமர் அவர்கள், எனக்கு பதில் அளிக்காத நிலையில் என் கடிதம்/கட்டுரைகளை வெளியிடாத நிலையில், இந்த கடிதம்/கட்டுரையின் ஒரு நகலை, திரு அப்சர் அவர்கள் இணையதளத்துக்கு அனுப்பி இருந்தேன், இவ்விருவர்களில் யார் உண்மையாளர் என்று அறிய. இந்த கடிதம்/கட்டுரை உட்பட, நான் அனுப்பிய அணைத்து கடிதம்/கட்டுரைகளை, திரு அப்சர் அவர்கள், தன்னுடைய இணையதளத்தில் பிரசுரிப்பது மட்டும் இல்லாமல், அவர் இணையதளத்தில் சுயமாக நான் கட்டுரை வரைய வழிவகுத்துதந்தார். இதற்கு மாறாக நேரடி விவாதத்திர்க்கு வர மறுப்பதை கொள்கையாக கொண்டுள்ள திரு உமர் அவர்கள், தன்னை ஒரு கிறிஸ்தவ அறிஞராக காட்டிகொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்கள், இன்றைய தினம் வரை அவர் இணையதளத்தில் பின்னூட்டமிட்ட என் கடிதம்/கட்டுரைகளில் ஒன்றை காட்டிலும் வெளியிடவில்லை/விளக்கம் அளிக்கவில்லை. தன்னுடைய இணையதள முகவரி, மற்றும் பொய் கூற்று நிறைந்த கட்டுரைகளை, இஸ்லாமிய இணையதளங்களில் பிரசுரிக்க வேண்டும், என்று வேண்டும் நபர், அவருக்கு வரும் மறுப்புகளை முழுமையான முறையில் ஒரு தடவையேனும் பிரசுரிப்பது/விளக்கம் அளிப்பது இல்லை என்பதற்க்கு இந்த கட்டுரைகளே சான்று. திரு உமர் அவர்கள், “அல்லேலூயா” என்ற ஹிப்ரேவ் மொழி வார்த்தைக்கு அளித்த "யேகோவா தேவனை துதித்தல் – Praise the LORD or Praise Yahweh" என்ற விளக்கத்துக்கு மறுப்பு தெரிவிக்க “அல்லேலூயாவும் ஈசா உமரும் !!!” என்ற தலைப்பில், நான் வரைந்த கட்டுரையை, திரு அப்சர் அவர்கள், http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_3573.html இந்த முகவரியில் வெளியிட்டு இருந்தார். என்னுடைய கட்டுரையில், திரு உமர் அவர்கள் வெளியிட்ட “யேகோவா தேவனை துதித்தல்” என்ற மொழிபெயர்ப்பு தவறு என்று மொழியும் வண்ணம், “அல்லேலூயா” என்ற ஹிப்ரேவ் மொழி வார்த்தைக்கு "ஓ! அவன் தான் எலொஹ், அவனையே துதி" என்ற தெளிவான ஆதாரங்களுடன் முன்வைத்து இருந்தேன். அதர்க்கு மறுப்பு தெரிவிக்க எண்ணி, திரு உமர் அவர்கள் இரண்டரை மாத கால தாமதத்திர்க்கு பின் இப்பொழுது “Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1” என்ற கட்டுரையை எதிர்வாதம் என்ற பெயரில் முன் வைத்து உள்ளார். இரண்டரை மாத காலதாமதத்திர்க்கு பிறகு, நாம் வெளியிட்ட கருத்தான “அல்லேலூயா” என்ற ஹிப்ரேவ் மொழி வார்த்தைக்கு "ஓ! அவன் தான் எலொஹ், அவனையே துதி" என்ற கருத்துக்கு, எதிர்வாதம் செய்யும் திரு உமர் அவர்கள், நம்முடைய கருத்துக்கு தெளிவான ஆதாரம் கொண்டு மறுப்பார் என்று எண்ணி, அவர் இணையதளத்தை படிக்க முனைந்தால், இத்தனை காலதாமதத்திர்க்கு பிறகும், தெளிவான ஆதாரம் கொண்டு நாம் அறிவித்த கருத்தை மறுக்காமல், தமக்கே உரிய வார்த்தை ஜாலங்களை முன் வைத்து, “விக்கிபிடியா ஆதாரங்களை திரித்தோம்”, “கட்டுரை வரையும் முறை அறியவில்லை” போன்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே நம் மீது விட்டு வைத்துள்ளார். கிறிஸ்தவ அறிஞர் என்று தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்களுக்கு, இரண்டரை மாத காலதாமதத்திர்க்கு பிறகும், நம் கருத்தை மறுக்க தெளிவான ஆதாரம் கிட்டவில்லையா? அதர்க்கு இன்னும் கால அவகாசம் வேண்ட வேண்டிய அவசியம் என்ன? "அர்த்தம் புரியாமல் குர்ஆன்னை படிக்கும் இஸ்லாமியர்கள் வெட்கப் படவேண்டும்” என்ற கருத்தை முன் வைத்த திரு உமர் அவர்கள் பைபிளில் மிஞ்சி இருக்கும் ஓரிரு ஹிப்ரேவ் வசனத்துக்கு கூட அர்த்தம் தெரிவிக்க இத்தனை காலதாமதம் ஏன்? அப்படியானால் அர்த்தம் தெரியாமல் “அல்லேலூயா”, “அல்லேலூயா” என்று முழக்கம் இட்டுக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களை பற்றி திரு உமர் அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்? பைபிளை அர்த்தம் புரிந்து படிப்பதாக மாறுதட்டி கொள்ளும் திரு உமர் அவருடைய கட்டுரையில், இவ்வாறு அறிவித்து இருந்தார்: "யா" "Yah" என்பது ஒரு பெயர்ச் சொல். அதாவது, இது "யேகோவா – Yehweh" தேவனைக் குறிக்கிறது. எப்படி "அல்லா" என்பது ஒரு பெயரோ அது போல "யா" என்பது "யேகோவா" என்ற பெயர்ச் சொல்லின் சுருக்கமாகும்.” திரு உமர் அவர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி “Yehweh” என்றால் பெயர் சொல்லா? இதை நிரூபிக்க உங்கள் கட்டுரையில் ஏதேனும் ஆதாரத்தை முன் வைத்தீர்களா? இதோ எங்கள் ஆதாரம்: Etymology and meaning of YHWHIt has often been proposed that the name YHWH is etymologically a third person masculine imperfect verb form derived from the Biblical Hebrew triconsonantal root היה (h-y-y) "to be", which has הוה (h-w-y) as a variant form.[5] This would connect it to the passage in verse Exodus 3:14, where God gives his name as אֶהְיֶה אֲשֶׁר אֶהְיֶה (Ehyeh Asher Ehyeh), translated most basically as "I am what I am" (or "I will be that which I now am"). יהוה with the vocalization "Yahweh" could theoretically be a hiph'il verb inflection of root h-w-y, with a meaning something like "he who causes to exist" or "who gives life". As a qal (basic stem) verb inflection, it could mean "he who is, who exists".[5] reference: http://en.wikipedia.org/wiki/Tetragrammaton மேலே அளித்த ஆதாரத்தின் படி “Y.H.W.H” – “YAHWEH” என்றால் அது பெயர் சொல் அல்ல, அது “அவன் தான்” போன்ற கருத்தை குறிக்கும் சொல்லாகும். இதை மறுத்து “யேகோவா” தேவன், “ஜெஹோவா” தேவன் என்று அவர் அவர் விருப்பத்திற்க்கு இறைவன் பெயரை மாற்றி உச்சரிப்பதையே பைபிளின் மொழிபெயர்ப்பு என்று திரு உமர் அவர்கள் பெருமைபட்டு கொள்கிறார்.
திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களை பழிப்பது போல், அர்த்தம் புரியாமல் குர்ஆனை படிக்க இறைவன் பணித்தானா? இறைவன் திரு குர்ஆன்னில் பல இடங்களில் திரு குர்ஆன் அர்த்தம் புரிந்து நினைவு படுத்திக்கொள்ளும் வகையில் அருளியுள்ளதாக அறிவிக்கிறான். உதாரணமாக: Al quran surah al qamar (54):17 wa laqad yassarnal-qur-‘aana liz zikri fahal mim-muddakir? Al quran surah al qamar (54):17 and we have indeed made the quran easy to understand and remember: then is there any that will receive admonition? அல் குர்ஆன் சுராஹ் அல் காமர் (54):17 நிச்சயமாக, இக் குர்ஆனை நன்குபுரிந்து நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? குர்ஆனை அருளிய எல்லாம் வல்ல இறைவனும், அதை நமக்கு பெற்று தந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களும், குர்ஆனை அர்த்தம் புரிந்து படியுங்கள் என்றே நம்மை பணிக்கிறார்கள். அதன் வாயிலாக தான் இன்று உலகளவில் அதிக படியான மக்கள் மனதில் நினைவு படுத்தி கொள்ளப்படும் ஒரு மார்க்க நூலாக குர்ஆன் திகழ்கிறது. அர்த்தம் புரியாத ஒரு நூலை, முழுவதுமாக நினைவுபடுத்தி கொள்வது என்பது மிகவும் கடினம். அதிலும் உலகளவில் அதிகப்படியான மக்கள், வெவ்வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் நினைவுபடுத்தி கொள்கிறார்கள் என்றால், அதன் சிறப்பை அறிவிக்க நம் வேறு ஏதேனும் வார்த்தைகளை தேடவேண்டுமா? சரி திரு உமர் அவர்கள் இந்த தலைபிலாவது உறுதியோடு இருப்பார் என்ற நம்பிக்கையில், அவர் நம்மீது வைத்த ஆதாரம் இல்லாத குற்றச்சாற்றுகளுக்கு, கேள்விகளுக்கு, எல்லாம் வல்ல இறைவன் கிருபையை நாடியவர்களாக விடை அளிக்க முயற்சிப்போம். திரு உமர் அவர்கள் நம்மீது வைத்த குற்றச்சாட்டுக்கள் / கேள்விகள்:
இந்த கேள்விகளுக்கு நம்முடைய விளக்கத்தை காண்போம்:
திரு உமர் அவர்கள், பெறும்பாலும் அவருடைய எல்லா கட்டுரையிலும், “தன்னுடைய இணையதள முகவரியை தாருங்கள்” என்று வேண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார், இவ்வாறு நாம் “ஏன் திரு உமர் அவர்கள் முகவரியை நாம் தருவது இல்லை” என்று தெளிவான விளக்கத்தை இதற்க்கு முன்னரே http://isaakoran.blogspot.com/2011/01/blog-post.html என்ற முகவரியில் “14” என் கேள்வியில் விளக்கம் அளித்துள்ளோம். இருப்பினும் இன்னும் எதற்க்காக நம்மிடம் முகவரி இல்லாத திரு உமர் அவர்கள், அவர்களுடைய இணையதள முகவரியை பிரபல படுத்த சொல்கிறார் என்று தெரியவில்லை. திரு உமர் அவர்கள் கட்டுரையிலே, நாம் அவர் வெளியிட்டதாக அறிவித்த கருத்துகள் அனைத்தும், அவருடையது தான் என்று தெளிவாக ஒப்பு கொள்ளும் பொழுது, அதர்க்கு மறுப்பு தெரிவிக்காத பொழுது, அவருடைய இணையதள முகவரியை நாம் அறிவிக்க என்ன அவசியம்? இந்த கருத்து அவருக்கு சொந்தமானது இல்லை என்ற பட்சத்தில், அதை ஒத்து பார்க்க அவர் முகவரி தேவை படலம், இருபினும் பெறும்பாலும் எங்கள் வலைதளத்திற்கு வருபவர்கள் அவர் வலைதளத்தை படித்துவிட்டு தான் வருகிறார்கள்!!. நாங்கள் வரைந்த கட்டுரைகள், அவர் வலைத்தளத்தில் பின்னுட்டமிட வரைய பெற்றவை தான், அப்படி இருக்க மீண்டும் அவர் முகவரியை கோடிட என்ன அவசியம்? “நேரடி விவாதத்திற்கு வர மறுப்பது” திரு உமர் அவர்களது கொள்கை, “திரு உமர் அவர்களின் பொய் கூற்று நிறைந்த இணையதளத்தை பிரபல படுத்துவது இல்லை” என்பது எங்களது வழக்கம், இதில் தவற ஒன்றும் இல்லையே... திரு உமர் அவர்கள், இனியேனும் அவர் கட்டுரைகளுக்கு தலைப்பை தேர்வு செய்யும் பொழுது, சிறிது கவனமாக இருப்பார் என்று நம்புவோம். எனெனில் "Answering Ziya" என்று தலைப்பை ஆரம்பித்து விட்டு எந்த தெளிவான விளக்கமும் தராமல் பொய்யான குற்றச்சாட்டுகளை மட்டுமே முன் வைத்து உள்ளார். "அல்லேலுயாவும் அல்லாஹ் படும் அல்லல்களும்" என்று தலைப்பை வைத்து விட்டு இத்தனை கால தாமதத்திற்கு பிறகு வெளியிடும் மறுப்புக்கு எந்த ஆதாரதையும்/விளக்கத்தையும் முன் வைக்காத காரணத்தால் அல்லல் படுவது அல்லாஹ் இல்லை மாறாக திரு உமர் அவர்களாக தான் இருகிறார்கள். எனவே இந்த கட்டுரைக்கு உகந்த தலைப்பு "Questioning Ziya : தக்க ஆதாரம் இல்லாமல் கட்டுரை வரைந்து அல்லல் படும் உமர் - பாகம் 1” என்று மாற்றி வைத்து இருக்கலாம். இனியேனும் எதிர்வாதம் என்ற பெயரில் காலதாமதம் செய்யாமல், வார்த்தை ஜாலங்களை மட்டுமே நம்பி கட்டுரைகளை வரையாமல், தெளிவான ஆதாரத்துடன் கட்டுரையின் தலைப்பை மாற்றாமல், எதிர்வாதத்தை திரு உமர் அவர்கள் வரைவார்கள், என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம். அஸ்ஸலாமு அழைக்கும் -ஜியா |
கேள்வி – பதில் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
கிறிஸ்தவர்களிடம் இருந்து நமக்கு வரும் கேள்விகளில், ஒரு விஷயம் நமக்கு புரியாத புதிராகவே உள்ளது, அது “ஏன் நம் இணையதளத்தில் கேள்விகள் கருத்துகளை முன் வைக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் முகவரியை அளிக்காமல் அனானிமஸ்ஸாகவே இருகிறார்கள், ஆனால் திரு உமர் அவர்கள் வலைதளத்தில் கேள்விகளை முன் வைக்கும் அனேக இஸ்லாமியர்கள் தங்கள் பெயரை வெளியிடுகிரார்கள் என்பதாகும்?” சரி அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்கள் நம்பும் பைபிளை இயற்றிய நபர்களுக்கும் முகவரி இல்லை, நம் அருமை நண்பர் திரு உமர் அவர்களுக்கும் முகவரி இல்லை, ஆகையால் திரு உமர் அவர்களின் நலவிரும்பிகளுக்கும் முகவரி இல்லை போலும். திரு அனானிமஸ் என்ற போர்வையில், ஒரு கிறிஸ்தவ நண்பர் நம் கட்டுரைகளுக்கு தொடந்து தகாத கொச்சையான வார்த்தைகளில் கேள்வி எழுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பொதுவாக வெளியிட தகுதியற்ற இந்த கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிப்பது இல்லை. ஒரு வேலை இந்த முகவரி அற்ற நபர், முகவரி அற்ற திரு உமர் அவர்களாக இருக்க கூடும், அல்லது இவர் திரு உமர் அவர்களின் நலவிரும்பியாக இருக்க கூடும் என்ற எண்ணத்தில், இறைவன் கிருபையை நாடியவர்களாக பதில் அளிக்க முயற்சிக்கிறோம். திரு அனானிமஸ் அவர்களே, நீங்கள் வரையும் கேள்விகள் முலம் உங்களுக்கு கிறிஸ்தவமும் தெரியாது, இஸ்லாமும் தெரியாது, இன்னும் கன்னியமான முறையில் கேள்வி எழுபவும் தெரியாது என்பது தெளிவாக விளங்குகிறது. உங்களுக்கு கிறிஸ்தவத்தையும், இஸ்லாத்தையும், கற்று தருவதற்கு முன்னர், கன்னியத்தை கற்று தர பல நாட்கள் ஆகும் என்று தோன்றுகிறது. உங்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் “குடிகாரன் போதையில் குடித்து விட்டு வாந்தி எடுப்பது போல்”, நீங்கள் உங்கள் என்னத்துக்கு கொச்சையான கேள்விகளை முன் வைத்துள்ளீர். இருபினும் உங்கள் கேள்விகளில் இருந்த கொச்சையான கருத்துக்களை நீக்கிவிட்டு, அதன் மைய கருத்தை மட்டும் கேள்விகளாக இங்கு விட்டு வைத்துள்ளோம். இனி வரும் காலங்களில் நீங்கள் இப்படி தரம் அற்ற முறையில் கேள்வி எழுப்புவதை தொடர்வீர்களாயின், அவற்றுக்கு பதில் அளிக்கபடாது என்று உங்களுக்கு நாங்கள் அறிவிக்க கடமை பட்டுள்ளோம். இதன் மூலம், முறையே தலைப்புக்கு ஒப்ப கேட்கபெரும் கேள்விக்கு மட்டுமே நாங்கள் பதில் அளிக்க முயற்சிப்போம், என்று உங்களுக்கு அறிவித்து கொள்கிறோம். உங்களுடைய கேள்வி/கருத்து : 1. விக்கிபீடியா கட்டுரையை மோசடி செய்து எழுதினோம் 2. மூன்று திருமணம் செய்த ஸபியா ஒரு மோசமான பெண் 3. இஸ்லாமிய பெண்ணுக்கு மட்டும் தான் இத்தா தவணை உள்ளதா? தமிழ் பெண்கள் மற்றும் யூத பெண்களிடம் இத்தா வழக்கத்தில் இல்லையா? 4. சொர்ப்பனத்தில் ஸபியாவுக்கு அல்லாஹ் திருமணம் பற்றி அறிவித்து இருந்தால் அதற்காக ஸபியா திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? 5. முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் நான்குக்கு மேலான மனைவிகள், என்ன ஐயா அல்லாஹுவின் நியாயம்? இவற்றுக்கு நம்முடைய விளக்கம்: 1. விக்கிபீடியா கட்டுரையை மோசடி செய்து எழுதினோம் நம்முடைய விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, விக்கிபீடியா கட்டுரையை நாங்கள் மோசடி செய்து வரையவில்லை, மாறாக திரு உமர் அவர்கள் தனக்கே உரிய வார்த்தை ஜலத்தை முன்வைத்து அப்படி ஒரு மாயை எழுப்பா முயற்சித்தார் என்று இந்த கட்டுரையில் இதற்க்கு முன்னரே தெளிவாக்கி இருந்தோம், மீண்டும் ஒருமுறை படியுங்கள்: http://isaakoran.blogspot.com/2011/02/2.html 2. மூன்று திருமணம் செய்த ஸபியா ஒரு மோசமான பெண் நம்முடைய விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, உங்களது சகோதரிக்கு, அல்லது நீங்கள் ஈன்றெடுத்த மகளுக்கு, இப்படி அவர்களுடைய பதினேழு வயதிற்குள், முதல் கணவனால் விவாகரத்து செய்யபட்டு, இரண்டாவது கணவனால் விதவையாக்கபட்டு இருந்தால் அவர்களை என்ன செய்ய முனைவீர்கள்? அவர்கள் மறுமணம் செய்ய உதவ மாட்டிர்களா? அப்படி அவர்களை திருமணம் செய்தால் நீங்கள் அறிவித்து நாங்கள் வெளியிடாத அணைத்து கொச்சையான வார்த்தைகளும் அவர்களுக்கு பொருந்துமா? இதற்க்கு நீங்கள் தான் விடையளிக்க வேண்டும். 3. இஸ்லாமிய பெண்ணுக்கு மட்டும் தான் இத்தா தவணை உள்ளதா? தமிழ் பெண்கள் மற்றும் யூத பெண்களிடம் இத்தா வழக்கத்தில் இல்லையா? நம்முடைய விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, நாங்கள் அறிவிக்கும் இத்தா தவணை, இறைவன் அருளிய சட்டம் பற்றியது. நீங்கள் அறிவிக்கும் சடங்கு, ஒரு சமுகத்தில் வழக்கத்தில் இருப்பது பற்றியது. ஒரு சமூகத்திடம் வழக்கத்தில் இருக்கும் ஒரு சடங்கை அனைவரும் கடைபிடிப்பது இல்லை, கடைபிடிக்க வேண்டும் என்பது அவர்கள் மீது கட்டாயமும் கிடையாது. அது கடைபிடிக்கப்படவில்லை என்றால் இறைவன் அவர்கள் மீது குற்றம் பிடிக்க போவதும் கிடையாது. ஆனால் இறைவன் அருளிய சட்டதிட்டங்கள் கடைபிடிக்கப்படவில்லை என்றால் அது இறைவன் பார்வையில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். நாங்கள் அறிவிப்பது போல் இத்தா தவணை தமிழ் மற்றும் யூத பெண்கள் மீது இறைவனால் சட்டமாக்கபெற்றதா? ஆதாரம் எடுத்து வையுங்கள். இதை பற்றி இன்னும் தெளிவான விளக்கத்தை அறிய இந்த முகவரியை பாருங்கள் http://isaakoran.blogspot.com/2011/01/blog-post_25.html 4. சொர்ப்பனத்தில் ஸபியாவுக்கு அல்லாஹ் திருமணம் பற்றி அறிவித்து இருந்தால் அதற்காக ஸபியா திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? நம்முடைய விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, இறைவன் ஸபியாவுக்கு அறிவித்தது, நடக்கவிருப்பது பற்றிய முன் அறிவிப்பு, அது நடந்தேறியே தீரும். உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் “கன்னி மேரிக்கு அவரின் கருவறையில் உருவாகப்போகும் குழந்தையை பற்றி இறைவன் முன் அறிவிப்பு செய்தது போல”, அது அவ்வாரே நடந்தேறும். 5. முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் நான்குக்கு மேலான மனைவிகள், என்ன ஐயா அல்லாஹுவின் நியாயம்? நம்முடைய விளக்கம்: திரு அனானிமஸ் அவர்களே, முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு என் இறைவன் அதிகபடியாக மனைவிகள் அனுமதிதான் என்பதை இதற்க்கு முன்னரே தெளிவான விளக்கம் அளித்துள்ளோம் பார்க்க http://isaakoran.blogspot.com/2011/01/blog-post.html திரு அனானிமஸ் அவர்களே, உங்கள் கேள்வியை உங்களுக்கே கேட்கிறேன், திருமணம் உங்கள் இறைவனால் நிச்சையிக்க படுகிறது என்று நம்பும் கிறிஸ்தவர்கள் என் சாலமனுக்கு மட்டும் இறைவன் ஆயிரம் மனைவிகளை அனுமதிதான் என்பதை விளக்க முன் வர மறுக்கிறீர்கள்? அப்படி என்றால் இது என்ன எலோஹீமின் நியாயம்? அஸ்ஸலாமு அழைக்கும் -ஜியா & அப்சர் |
5 comments:
Excellent Excellent Mr. Zia and Apsar..Masha Allah...Your works are excellent..Poor Umar who have no evidence over his bible..Pathetic Umar don't have even the guts to accept my comments over his postings in isakoran blog..You know these Christians though they have this good for nothing bible,they have learnt the wonderful art of compromising and answering with lies..Continue your good job..I was a Christian and after knowing that bible and Christianity is a mere waste,and now i converted to Islam..Sure one day our Umar brother will read Quran and do namaz after he have got a "full knowledge" over their bible..
With regards,
Ibrahim
உமர் அண்ணா,
இது என்ன ஆச்சர்யம், இது வரை உங்களிடம் தாங்கள் பெயரிலே கேள்வி கேட்டு கொண்டு இருந்த இஸ்லாமியர்கள், ஈஸாகுர்ஆன் கிறிஸ்தவர்கள் ஏன் முகவரியை தருவது இல்லை என்று கேள்வி எழுபியவுடன், இப்பொழுது முகவரி தராமல் கேள்வி கேட்க துவங்கிவிட்டார்களா? இது நம்பும் படியாக இல்லையே...
நேரம் இல்லை என்று காரணத்தை சொல்லும் நீங்கள், Mist(Naya) அவர்கள் 3 பிப்ரவரி, 2011 5:35 am அன்று வைத்த கேள்விகளுக்கு பதில் தராமல் முகவரி இல்லாத நபர் 5 பிப்ரவரி, 2011 9:25 pm அன்று இரவு கேட்ட கேள்விகளை, உடனே வெளியிட்டு 6 பிப்ரவரி, 2011 5:57 am பதில் அளிகிறீர்கள், அதுவும் இந்த முகவரி அற்ற நபரை Mist(Naya) என்று முகவரி இடுகிறீர், இது தான் முறையா? இப்படி உடனே பதில்லை கட்டுரையாக அளிக்க நேரம் இருக்கும் உங்களுக்கு, பைபிள் மீது இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க நேரம் இல்லையா? இதை எங்களை நம்பா சொல்கிறீர்களா?
ஒரு பொதுவான இடத்தில பதில்கள், கட்டுரைகள் எழுதும் பொது எப்படி அழகான முறையில் எழுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா?
உமர் அண்ணா, முஹம்மது ஒரு பாவி, முஹம்மது ஒரு விபச்சாரக்காரர், முஹம்மது ஒரு தீவிரவாதி என்று ஆதாதொடு எழுதியதாக சொல்கிறீர், அப்படி ஆதாரம் எதையும் உங்கள் கட்டுரையில் எனக்கு தெரியவில்லை, அப்படி நீங்கள் ஆதாரதொடு எழுத்தி இருந்தால் அந்த தலைப்பை வைத்து ஈஸாகுர்ஆன் சவாலை ஏற்கலமே? எழுத்து வாதத்திற்கு ரெடி என்னும் நபருக்கு சவாலுக்கு நான் ரெடி என்று ஒரு வார்த்தையில் அறிவிக்க கூட நேரம் இல்லையா?
மனிதர்களை முட்டாள் ஆக்குவது, விபச்சாரர்கள் ஆக்குவது, தீவிரவாதிகளாக ஆக்குவது, பெண்பித்து பிடித்தவர்களை உருவாக்குவது, உலகத்தை அழித்துக்கொண்டு இருப்பது, என்று நீங்கள் சொல்வது எல்லாம் கிறிஸ்தவத்துக்கு பொருந்துமா அல்லது இதற்க்கு சிறிதும் பொருந்தாத இஸ்லாமிற்கு பொருந்துமா? முட்டாள்தனம், விபசாரம், அரசாங்கத்திடமே தீவிரவாதம், பெண்பித்து பிடித்த அறிஞ்சர்கள், யுத்தம் என்ற பெயரில் உலகத்தை அழித்துக்கொண்டு இருக்கும் தலைவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் தானே? அப்படியானால் நீங்கள் சொன்னது கிறிஸ்தவத்தை பார்த்து தானே? இதை பைபிள் கொண்டு மறுக்க முடியுமா?
திவிரவததிர்க்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தம் இல்லை என்று குருடனுக்கு கூட தெரியும், அன்னல் கிறிஸ்தவத்திற்கும் திவிரவததிர்க்கும் சம்பந்தம் இருபதனலே கிறிஸ்தவ ஆட்சி நாடுகள் லட்ச கணக்கில் மக்களை கொன்று குவிக்கிறார்கள், என் அவர்களுக்கும் பைபிள் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது பைபிள் சொல்வதை தான் செய்கிறார்களா?
இந்த பதிலில் இரண்டு கேவலமான புகை படத்தை வெளியிட்டு இருந்தீர், நீங்கள் ஒரு உண்மை கிறிஸ்தவராக இருந்தால் இப்படி புகை படங்களை வெளியிடுவிர்களா? அப்படியானால் அடுத்தவர் நம்பிக்கையை மதிக்க தெரியாத நீங்கள் ஒரு உண்மை கிறிஸ்தவர் இல்லை என்று நிங்களே ஒத்து கொள்கிறீர்கள் தானே!!!
உங்களால் பதில் அளிக்க முடியவில்லை என்றால் எவ்வளவு கில்தரமான செயலிலும் இறங்குவிர்கள் என்பதற்க்கு இதுவே தக்க உததரணம், இப்படி கில்தரமான செயல்களை செய்துவிட்டு பெருமை பட்டு கொள்கிறீர்களா? இதற்க்கு நீங்கள் வேட்க பட வேண்டுமே தவிர பெருமை பட கூடாது, உங்கள் செயலால் கிறிஸ்தவமும் சேர்ந்து வேட்க பட வேண்டும். பொதும் இன்னும் கிறிஸ்தவத்தை அதிக படியாக கேவல படுத்ததிர்கள், விட்டுவிடுங்கள் பாவம்.
- ஜாவித்
உமர் அண்ணா, என்னுடைய கேள்விகளை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி, ஆன்னல் நான் கேட்ட கேள்விகளுக்கு அல்லாமல் வேறு பதிலை அளித்தால் எப்படி?
உமர் அண்ணா, "முஹம்மது நபி பற்றிய உங்கள் கருத்துக்கு அதாரம் இருந்தால் அந்த தலைப்பை வைத்து ஈஸாகுர்ஆன் சவாலை ஏற்கலமே? எழுத்து வாதத்திற்கு ரெடி என்னும் நபருக்கு சவாலுக்கு நான் ரெடி என்று ஒரு வார்த்தையில் அறிவிக்க கூட நேரம் இல்லையா?" என்ற கேள்விக்கு தெளிவில்லாத பல வாத தலைப்புகளை பதிலாக தந்துள்ளிர்கள், அப்படியானால் நீங்கள் வெளியிட்ட இந்த வாதங்களை கொண்டு ஈஸாகுர்ஆன் சவாலை ஏற்க்குறீர்களா? இதில் எந்த தலைப்பை கொண்டு ஏற்க்க விரும்புகிறிர்கள் என்று தெளிவாக அறிவியுங்களேன்?
"மனிதர்களை முட்டாள் ஆக்குவது, விபச்சாரர்கள் ஆக்குவது, தீவிரவாதிகளாக ஆக்குவது, பெண்பித்து பிடித்தவர்களை உருவாக்குவது, உலகத்தை அழித்துக்கொண்டு இருப்பது, என்று நீங்கள் சொல்வது எல்லாம் கிறிஸ்தவத்துக்கு தான் பொருந்தும், இதை பைபிள் கொண்டு மறுக்க முடியுமா?" என்ற என்னுடைய கேள்விக்கு பைபிள் கொண்டு மறுப்பு தெரிவிதீர்களா?
"கிறிஸ்தவத்திற்கும் திவிரவததிர்க்கும் சம்பந்தம் இருபதனலே கிறிஸ்தவ ஆட்சி நாடுகள் லட்ச கணக்கில் மக்களை கொன்று குவிக்கிறார்கள், என் அவர்களுக்கும் பைபிள் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது பைபிள் சொல்வதை தான் செய்கிறார்களா?" என்ற கேள்விக்கு தனி நபர் செய்யும் கொலை பவ செயலை ஒப்பிடுகிறீர், தனிநபர் கைகூள்ளி வாங்கிகொண்டு செய்யும் தீவிரவாதமும், அரசாங்கள் செய்யும் தீவிர வாதமும் ஒப்பாகுமா? லட்சகணக்கான அப்பாவி மக்கள் கொள்ள படுவது உங்கள் அகராதியில் பவம் இல்லையா? இதை எப்படி கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்?
"வசன ஆதாரத்தோடு கேள்வி கேட்டால், அதற்கு பதில் அளிக்க வசன ஆதாரத்தோடு கட்டுரை எழுதவேண்டும், சிறிது ஆராய்ச்சி செய்து, அனேக விவரங்களை சேகரித்து, படித்து எழுதவேண்டும்" என்று நீங்கள் அறிவிப்பதால் இனி வரும் உங்கள் கட்டுரைகள் தெளிவான ஆதாரங்கள் நிறைந்ததாக வரும் என்று நங்கள் நம்பலாமா?
"ஒரு பொதுவான இடத்தில் எப்படி எழுதவேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்று அறிவிக்கும் நீங்கள், ஒரு முகவரி இல்லாத நபர் பைபிள்லை தூக்கி எரிய சொன்னால் அதற்க்கு இப்படி கேவலமான முறையில் புகைப்படத்தை வெளியிடுவது தான் நல்ல வழிமுறையா? உங்கள் பைபிள்லை நங்கள் கழிவறையில் எரிய எதனை நேரம் ஆக்கும் என்று சிந்திதிர்களா? குர்ஆன்னை கழிவறையில் எரிந்து புகை படம் எடுத்து வெளியிடுகிறீர், அந்த கழிவறையை நீங்கள் அப்படியே உபயோக படுத்த முடியாது, கண்டிப்பாக அந்த குர்ஆன்னை நீங்கள் வெளி எடுத்தே இருபிர்கள், அப்படியானால் உங்கள் கழிவறையில் நீங்கள் வெளியிட்ட அனைத்தையும் எடுக்க துணிந்தவர் தானே? இந்த ஈனா செயலை செய்வதில் உங்களுக்கு பெருமையா?
"முஹம்மது கூட தனக்கு 50க்கும் அதிகமாக வயது ஆகும் போது ஆயிஷாவை திருமணம் செய்துக்கொண்டு புகைப்படம் எடுத்தால் இப்படித் தான் இருக்கும் என்று நினைத்து மனம் வருந்துகிறீர்களோ" என்று என்னை கேட்டிர்கள், அதற்காக மனம் வருந்த வில்லை உங்கள் ஏசு குடும்ப படம் வெளியிட்டால் பன்னிரண்டு வயது மேரி தொண்ணூறு வயது கிழவர் ஜோசெப்புடன் வெளியிட்ட புகைபடமோ என்று தான் மனம் வருந்தினேன்.
"எச்சரிக்கை" என்ற பெயரில் கிறிஸ்தவத்தை கலங்க படுத்துவதை நிறுத்தி விட்டு, அதன் மனதை காக்க தெளிவான ஆதாரதொடு கட்டுரை வரைய முயற்சியுங்கள், ப்ளீஸ்.
-ஜாவித்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
திரு ஜாவித் அவர்களே, எதற்காக இந்த கேள்விகளை எங்களிடம் விட்டு வைத்துள்ளீர்கள் என்று எங்களால் அறிய முடியவில்லை? திரு உமர் அவர்களுக்கு நீங்கள் முகவரியிட்ட இந்த கேள்விகளை எங்களுக்கு முகவரியிட்டு உள்ளீர்கள், இதற்கு ஏதேனும் காரணம் உண்டா? இந்த கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று என்னுகிறீர்களா? கொஞ்சம் விளக்கமாக தெரிவியுங்கள், அதன்படி இறைவன் கிருபையில் நாங்கள் செய்ய முயற்சிப்போம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
http://sagakalvi.blogspot.com/
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
Post a Comment