பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் (துவங்குகிறேன்)
திரு உமர் அவர்களின் மொழிபெயர்ப்பான “இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதற்கான ஐந்து காரணங்கள்” என்ற கட்டுரையில் தொடுக்க பெற்ற பைபளின் வசனம் ஜான் 5: 22-23க்கான விளக்கம்: திரு உமர் அவர்கள், எழுத்து விவாதத்திற்கு அறை கூவல் விடுத்து விட்டு, நாம் எடுத்து வைத்த வாதத்திற்கு தெளிவான தக்க ஆதாரத்தை எடுத்து வைக்காமல், அந்த தலைப்பை மறைத்து, வேறு சில மொழி பெயர்ப்புகளை பிரசுரித்து உள்ளார்கள். எழுத்து விவாதத்துக்கு முறையே தவணையை அறிவித்து விட்டு வரைய நாம் பணித்து இருத்தும், அவ்வாறு முறையே அறிவிக்காமல் கால தாமதம் செய்து கொண்டு இருக்கிறார். திரு உமர் அவர்கள் மொழி பெயர்த்த அந்த கட்டுரைகளில் ஏதேனும் நம்பகத் தன்மை எஞ்சி உள்ளதா என்று ஆராயும் வண்ணம் எல்லாம் வல்ல இறைவன் கிருபையை நாடியவர்களாக இந்த கட்டுரையை வரைய துவங்குகிறோம். Al Quran 5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! திரு உமர் அவர்கள் வெளியிட்ட கட்டுரையில், மேலே உள்ள குர்ஆன் வசனம், ஈஸா (அலை) அவர்களை ஒரு இறைத்தூதர் என்று அழைப்பதால், இதை மறுக்க, ஈஸா (அலை) அவர்களே தான் இறைவன் என்று நிரூபிக்க, பைபிளில் இருந்து சில வாதத்தை எடுத்து வைப்பதாக அறிவிக்கிறர்கள். John 8:40 But now you are trying to kill me, a man who has told you the truth I heard from God. தன்னை ஒரு மனிதன் என்று ஈஸா (அலை) அறிவிக்க, அவரை இறைவன் என்று நிரூபிக்க, திரு உமர் அவர்கள் வெளியிட்டு இருந்த ஆதாரத்தை ஆராய துவங்கும் முன், இறைவன் பற்றி மக்களிடையே உள்ள நிலைபாட்டை அறிய முயற்சிப்போம். உலகில் எவனும் மனித சக்திக்கு அப்பால், வார்த்தைகளால் விவரிக்க முடியாதா ஒரு சக்தியை மறுபவனாக நம்மால் அறிய முடியவில்லை. அரியாதோர் அந்த சக்தியை இயற்கை என்கிறார்கள், நாம் அதை இறைவன் என்கிறோம். அப்படி எல்லாம் வல்ல இறைவனை என்பவனை பற்றி குர்ஆன் கூரும் இலக்கணம்: அல் குர்ஆன் 112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. 112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. இந்த இலக்கணத்துக்கு பொருந்துபவரையே நாம் இறைவனாக வணங்கு தகுதியானவராக இருக்க முடியும். ஏன்னெனில் தேவைகள் உடையவன், படைக்க பெற்றவன், படைப்பில் தனித்துவ மற்றவன், இறைவனாக வணங்க தகுதியற்றவன் ஆகிறான். இந்த இலக்கணத்தின் அடிப்படையில், உலகில் வந்த/உள்ள எந்த பொருளையோ, அல்லது எந்த படைப்பையோ நாம் இறைவனாக வணங்க இயலாது. ஏனெனில் அவை ஒரு சிறப்பான படைப்புக்கள், அவற்றை இத்தனை நேர்த்தியோடு படைத்த இறைவனே வணக்கத்துக்கு உரியவன், அவன் படைத்த படைப்புகள் வணக்கத்துக்கு உரியவை அல்ல. இப்படி இருக்க உலகில் மனிதராக படைக்க பெற்ற ஈஸா (அலை) அவர்கள் தான் கடவுள் என்று, திரு உமர் அவர்கள் வாதாட விரும்புகிறார். அப்படியானால் பிற மனிதர்களை மற்றும் மிருகங்களை புனிதம் என்று சிலை வடித்து, வணங்கும் சமூகத்துக்கும், கிறிஸ்தவத்துக்கும் என்ன வேற்றுமையுள்ளது, என்பதை திரு உமர் அவர்கள் தான் கண்டறிந்து நமக்கு அறிவிக்க வேண்டும். ஏனைய சமூகத்தினர் ஒன்றுக்கு மேல் இறைவன் படைப்புகளை இறைவனாக வணங்குகிறார்கள். திரு உமர் அவர்களும் இதையே நம்மை நம்ப சொல்கிறார், அப்படி என்றால் இவர்கள் இருவரும் சமம் தானே? சரி ஈஸா (அலை) இறைவன் என்பதற்க்கு திரு உமர் அவர்கள் சில காரணங்கள் கூறுகிறார் அவை:
திரு உமர் அவர்கள், அந்த கட்டுரையில் அறிவித்தது: “இயேசுவை நேரடியாகக் கண்டவர்கள் மற்றும் இயேசு பேசினதைக் கேட்டவர்களால் எழுதப்பட்ட முதல் நூற்றாண்டு நூல்கள் இக்கருத்துக்கு மாறான உண்மையான இயேசுவை நமக்கு காண்பிக்கின்றன”. திரு உமர் அவர்களே, ஈஸா (அலை) அவர்களை இறைவனாக நீங்கள் சித்தரிக்க விரும்பும் பைபிள் வசனங்கள் மட்டும் தான் உங்கள் கண்களுக்கு தெரியுமா? நீங்கள் அறிவிப்பது போல ஈஸா (அலை) அவர்களை கண்ணால் பார்த்தவர்கள், காதால் கேட்டவர்கள் ஈஸா (அலை) அவர்களை இறைத்தூதர் என்று அறிவித்த வசனங்கள் உங்கள் கண்களுக்கு தெரியாதா? அது எப்படி (நீங்கள் அறிவிப்பது போல) ஈஸா (அலை) அவர்களை இறைத்தூதர் என்று கண்ணால் பார்த்தவர்கள் அறிவிக்க, அவரை இறைவன் என்று நீங்கள் அறிவிக்க சாத்தியம் ஆகிற்று? உதாரணமாக: Luke 4:24 he-said yet amen i-am-saying to-you not-yet-one before-averer (prophet) receivable is in the father[place] of-him Matthew 21:11 the yet throngs said this is jesus the before-averer (prophet) the from Nazareth of-the galilee Matthew 14:5 and willing him to-from-kill he-was-afraid-of the throng as before-averer (prophet) him they-had Luke 24:19 and he-said to-them ?-the-which the-ones yet said the-him the about jesus the Nazarene who became man before-averer (prophet) able in act and saying in-instead of-the god and of-every the people John 4:19 is-saying to-him the women master! I-am-beholding that before-averer (prophet) are you John 6:14 the then humans perceiving which does sign the jesus said that this is truly the before-averer (prophet) the one-coming into the system (world). John 7:40 many then out of-the throng hearing the saying said this is truly the before-averer (prophet) 1 timothy 2:5 one for god one and mediation of-god and of-humans human anointed (Christ) jesus. திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் நீங்கள் கோடிட்ட பைபிள் வசனங்கள் ஈஸா (அலை) அவர்களை நேரடியாக கண்டவர்கள், மற்றும் ஈஸா (அலை) அவர்கள் பேசியதை கேட்டவர்களால் இயற்ற பெற்றதா? திரு உமர் அவர்களின் கட்டுரையில் கோடிட்டு இருந்த பைபிள் வசங்களை இயற்றியவர்கள் யார் என்பது கிறிஸ்தவர்களிடையே இன்றுவரை தெளிவாகாத பெறும் சர்ச்சையாக விளங்குகிறது. இவர்கள் உண்மையில் ஈஸா (அலை) அவர்களை உயுருடன் பார்த்தவர்களா, அல்லது அவர் பேசியதை கேட்டவர்களா, என்ற கேள்வி கிறிஸ்தவர்கள் இடையே இன்று வரை விடை அளிக்கபெறாமல் உள்ளது. உதாரணமாக பவுல் இயற்றியதாக நம்பப்படும் பைபிள் வசனங்கள் அவர் இயற்றியதா? பவுல் இயற்றியதாக நம்பப்படும் பைபிள் வசனங்களை, பவுல்தான் இயற்றினார் என்பது இன்றளவில் தெளிவாகாத கேள்வியாக உள்ளது. உதாரணமாக பிலிப்பியன்ஸ் இயற்றியவராக நம்பப்படும் திரு பவுல் அவர்கள், ஈஸா (அலை) அவர்களை தன் வாழ்நாளில் ஒரு தடவையேனும் உயுருடன் பார்த்தது கேட்டது கிடையாது. இன்னும் அதிக படியாக, இவர் தான் பிலிப்பியன்ஸ்சை இயற்றியவரா என்ற கேள்வி இன்றளவில் கிறிஸ்தவர்கள் இடையே தெளிவு பெறப் படாத கேள்வி. ஏன்னெனில் பிலிப்பியன்ஸ்சை இயற்றிய நபர் கிரேக்க மொழி வல்லுனராக இருக்க வேண்டும். ஆனால் பவுல் அப்படி இருந்ததாக எந்த சரித்திர ஆதாரமும் இதுவரை கிடைக்க பெற்றதாக நம்மால் அறியமுடியவில்லை. இன்னும் பவுல் தன்னை பற்றி அறிவிப்பதாக பைபிளில் முன்னுக்கு பின் முரனான செய்திகளை அறிவிக்கிறது, உதாரணமாக: Acts 9:3 As he was going along, approaching Damascus, suddenly a light from heaven flashed around him. 9:4 He fell to the ground and heard a voice saying to him, “Saul, Saul, why are you persecuting me?” 9:5 So he said, “Who are you, Lord?” He replied, “I am Jesus whom you are persecuting! 9:6 But stand up and enter the city and you will be told what you must do.” 9:7 Now the men who were traveling with him stood there speechless, because they heard the voice but saw no one. 9:8 So Saul got up from the ground, but although his eyes were open, he could see nothing. Leading him by the hand, his companions brought him into Damascus. மேலே உள்ள பைபிள் வசனத்தில், பவுல் வானத்தில் இருந்து ஒளியை கண்ட பொழுது, அவருடன் இருந்தவர்கள் ஈஸா (அலை)யின் குரலை கேட்டு திகைத்து நின்றார்கள், ஆனால் ஒளியை காணவில்லை என்கிறது. இன்னும் அதிக படியாக ஈஸா (அலை) பவுலுக்கு “நகரத்தில் நுழைந்த பிறகு அவருக்கு செய்யவேண்டியது பற்றியது அறிவிக்கப்படும்” என்று கூறியதாக எடுத்துரைக்கிறது. இதற்க்கு மாறாக கீழே உள்ள பைபிள் வசனம், பவுல் வானத்தில் இருந்து ஒளியை கண்ட பொழுது, அவருடன் இருந்தவர்கள் வானத்தில் ஒளியை கண்டார்கள், மாறாக ஈஸா (அலை)யின் குரலை கேட்கவில்லை என்கிறது. இன்னும் அதிக படியாக ஈஸா (அலை) பவுலுக்கு “டமாஸ்கஸ் நகரத்தில் நுழைந்த பிறகு அவருக்கு செய்யவேண்டியது பற்றியது அறிவிக்கப்படும்” என்று கூறியதாக எடுத்துரைக்கிறது. Acts 22:6 As I was en route and near Damascus, about noon a very bright light from heaven suddenly flashed around me. 22:7 Then I fell to the ground and heard a voice saying to me, ‘Saul, Saul, why are you persecuting me?’ 22:8 I answered, ‘Who are you, Lord?’ He said to me, ‘I am Jesus the Nazarene, whom you are persecuting.’ 22:9 And they that were with me saw indeed the light, and were afraid; but they heard not the voice of him that speaking to me. 22:10 So I asked, ‘What should I do, Lord?’ The Lord said to me, ‘Get up and go to Damascus; there you will be told about everything that you have been designated to do.’ 22:11 Since I could not see because of the brilliance of that light, I came to Damascus led by the hand of those who were with me. மேலே கோடிட பெற்ற இரண்டு வசனங்களுக்கும் மாறாக, கீழே உள்ள பைபிள் வசனம், பவுல் வானத்தில் இருந்து ஒளியை கண்ட பொழுது, அவருடன் இருந்த அனைவரும் ஒளியை கண்டு கீழே விழுந்ததாகவும், இன்னும் அவருக்கு செய்யவேண்டியது பற்றி அனைத்தையும் ஈஸா (அலை) அவ்விடத்திலேயே அறிவித்ததாகவும் எடுத்துரைக்கிறது. Acts 26:12 “While doing this very thing, as I was going to Damascus with authority and complete power from the chief priests, 26:13 about noon along the road, Your Majesty, I saw a light from heaven, brighter than the sun, shining everywhere around me and those traveling with me. 26:14 When we had all fallen to the ground, I heard a voice saying to me in Aramaic, ‘Saul, Saul, why are you persecuting me? You are hurting yourself by kicking against the goads.’ 26:15 So I said, ‘Who are you, Lord?’ And the Lord replied, ‘I am Jesus whom you are persecuting. 26:16 But get up and stand on your feet, for I have appeared to you for this reason, to designate you in advance as a servant and witness to the things you have seen and to the things in which I will appear to you. 26:17 I will rescue you from your own people and from the Gentiles, to whom I am sending you 26:18 to open their eyes so that they turn from darkness to light and from the power of Satan to God, so that they may receive forgiveness of sins and a share among those who are sanctified by faith in me.’ மேலே கொடிடபெற்றுள்ள பைபிள் வாசகங்கள், பவுல் வாழ்க்கையில் நடந்தேறிய நிகழ்வுகளை, முன்னுக்கு பின் முரணாக விவரிக்கிறது. இந்த வசனங்கள் ஒரு உதாரணமே, இதை போல் அனேக முரண்பாடுகளை பைபிளில் காணலாம், இவற்றை பவுல் இயற்றி இருந்தால் இந்த முரண் ஏற்பட்டு இருக்குமா? இது பவுலின் பெயரில் அவரது நண்பர் லூக் இயற்றியதாக பெறும்பாலும் நம்பப்படுகிறது, அப்படி லூக் இதை இயற்றி இருப்பரேயானால் எதற்காக பவுல் எழுதியதாக நம்ப செய்யும் வகையில் பவுல் பேசுவது போல் நடையை அமைத்து இருக்கவேண்டும்? சரி இந்த வாசகங்களை பவுல் இயற்றியாக நாம் நம்புவோம்மேயானால், தன் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த நிகழ்வை, முன்னுக்கு பின் முரணாக அறிவிக்கும் திரு பவுல் அவர்கள், தன் வாழ்நாளில் உயுருடன் ஒருமுறையேனும் சந்தித்திராத ஈஸா (அலை) அவர்களை பற்றி, எப்படி உண்மையை அறிவித்து இருக்க கூடும்? இதில் ஏதேனும் நம்பக தன்மை இருக்ககூடுமா? அபோஸ்தலே ஜான் இயற்றியதாக நம்பப்படும் பைபிள் வசனங்கள் அவர் இயற்றியதா? திரு உமர் அவர்கள் கொடிற்ற ஏனைய பைபிள் வாசனைகள் திரு அபோஸ்தலே ஜான் இயற்றியதாக நம்பப்படுகிறது, ஆனால் அவர் எழுத படிக்க தெரியாத மீனவர் என்று சரித்திரம் உறைகிறது. Acts 4:13 When they saw the boldness of Peter and John, and discovered that they were uneducated and ordinary men, they were amazed and recognized these men had been with Jesus. இன்னும் அபோஸ்தலே ஜான் அதை இயற்றவில்லை என்று பைபிள் ஆராய்ச்சியாளர்கள் சாட்சி கூறுகிறார்கள்.
இன்னும் பைபிளை அறிவோமேயானால், அபோஸ்தலே ஜான் எழுதியதாக நம்பப்படும் பைபிள் வசனங்கள், அவர் எழுதியது இல்லை என்று தமக்கு தாமே சான்றாளிபதை நம்மால் உணர முடியும். உதாரணமாக இந்த வசனத்தை ஜான் தாமாக இயற்றியதாக இருந்தால் அவர் ஏன் "HE" “அவன்” என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும்? நான் என்ற வார்த்தையை தானே உபயோகித்து இருப்பார்??? John 19:35 And he that saw it bare record, and his record is true: and he knoweth that he saith true, that ye might believe. John 21:24 This is the disciple which testifieth of these things, and wrote these things: and we know that his testimony is true. 21:25 And there are also many other things which Jesus did, the which, if they should be written every one, I suppose that even the world itself could not contain the books that should be written. Amen. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் அல்ல, பைபிளை இயற்றியதாக நம்பப்படும் நபர்கள் ஈஸா (அலை) அவர்களை உயிருடன் பார்த்தவர்கள் மற்றும் கேட்டவர்கள் இல்லை என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.
சரி மேலே உள்ள கருத்துகள் யார் அறிவித்தால் என்ன, அது ஈஸா (அலை) அவர்கள் தான் கடவுள் என்று போதிக்கிறது, என்ற வாதத்தை திரு உமர் அவர்கள் முன் வைக்க விரும்பினால், “தன்னை கடவுள் என்று சொல்லிகொள்ள விரும்பும் எல்லா நபரையும் கடவுளாக ஏற்று கொள்ள நீங்கள் தயாரா” என்ற கேள்வியை நாம் திரு உமர் அவர்கள் முன் எடுத்து வைப்பவர்களாக இருப்போம். சிறிது காலத்துக்கு முன் இங்கு வாழ்ந்த சில போலி முனிவர்களை நாளேடுகளில் படித்திருப்போம். அவர்கள் தங்களை காக்கை சித்தர்கள் என்றும், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்பவர்கள் என்றும், இன்னும் தாங்கள் தான் கடவுள் என்றும், கருத்துகளை வெளியிட்டு கொண்டு இருந்தார்கள். அவர்களின் சீடர்கள் அவர்களை கடவுள் என்று இன்றும் வழிபட்டுகொண்டு இருக்கிறார்கள். இப்படி பட்ட நபர்களை எல்லாம் இறைவன் என்று நம்ப திரு உமர் அவர்கள் முன் வருவாரா? அதிசயம் மற்றும் மாயா மந்திரம் செய்யும் மனிதர்கள் எல்லாம் கடவுள்கள் என்ற நிலை வருமேயானால், ஈஸா (அலை) யை காட்டிலும் அதிக படியான அதிசயத்தை நிகழ்த்த வல்லவர்களை, நாம் நாளேடுகளில் தினம்தோறும் படித்து வருகிறோம். உதாரணமாக “ஈஸா (அலை) செய்த அனைத்தையும் தன்னால் செய்ய முடியும்” என்றுரைக்கும் மேலை நாட்டவரான கிறிஸ் ஏஞ்சல் போன்ற நபர்கள் நீரின் மீது நடக்கிறார்கள், பறக்கிறார்கள், மற்றவர்களை அந்தரத்தில் பறக்க செய்கிறார்கள், இன்னும் உயுருடன் உள்ள பெண்னை, ஆயுதம் இல்லாமல், வெட்டவெளியில் இரண்டாக பிளகிறர்கள், இவர்களை இறைவன் என்று பரிந்துரைக்க திரு உமர் அவர்கள் முன் வருவாரா? சுகம் அளிக்கும் கூட்டம் என்ற போர்வையில், கிறிஸ்தவத்தின் பெயரில், மக்களிடம் ஏமாற்று வித்தை காட்டும் கிறிஸ்தவர்களை கடவுள் என்று திரு உமர் அவர்கள் ஏற்றுகொள்வாரா? உலகுக்கே சுகம் அளிக்கும் கூட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய நபர்கள், தங்களுக்கு சுகம் அளிக்க முடியாமல், கிட்னி மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பயன் அளிக்காத நிலையில், கடுமையான சிரமத்துக்கு பிறகு மரணம் எய்ததை நாம் நாளேடுகளில் படிப்பது இல்லையா? அவர்கள் தமக்கு தாமே சுகம் அளிக்க சக்தி அற்றவர்கள் என்ற வாதத்தை வைக்க நீங்கள் முன் வரலாம் அப்படியானால், இப்பொழுது அந்த பணியை ஏற்று, சுகமளிக்கு கூடத்தை நடத்தி வரும் இவர்களின் மனைவி மற்றும் வாரிசுகள் ஏன் தங்கள் தந்தைக்கு சுகம் அளிக்க முன் வரவில்லை? இது கிறிஸ்தவத்தின் போர்வையில் நடக்கும் ஏமாற்று வேலை அன்றி வேறு என்ன? இதன் அடிப்படையில், பைபிளில் ஈஸா (அலை) தன்னை, தன் வாயிலாக இறைவன் என்று அறிவிக்காத போதிலும், அவ்வாரே அவர் அறிவித்து இருந்தாலும், அது இறைவனின் போதனைக்கும் மற்றும் (ஏனைய) இறைதுதர்கள் போதனைக்கு முரணானது என்பதனாலும், ஒரு பெண்னின் கருவறையின் பத்து மதங்கள் இருளில் தங்கி அவளை அசுத்தப் படுத்தி வெளிபெரும் மனிதன் எல்லாம் வல்ல இறைவனாக இருக்க வல்லமையற்றவன் என்பதனாலும், இறைவன் குர்ஆனில் ஈஸா (அலை) ஒரு இறைத்தூதர் என்று அறிவிப்பதாளும், ஈஸா (அலை) அவர்கள் தான் இறைவன் என்ற வாதத்தை நாம் ஏற்க்க மறுக்கிறோம். சரி திரு உமர் அவர்கள் கோடிட்டு இருந்த வசனங்கள், உண்மையில் ஈஸா (அலை) தன்னை கடவுளாக காட்டிகொண்டதாக அறிவிக்கிறதா, என்பதை எல்லாம் வல்ல இறைவன் கிருபையை நாடியவர்களாக ஆராய முயல்வோம்: மேலே திரு உமர் அவர்கள் வெளியிட்ட கருத்துகளில்/பைபிள் வசனங்களில் ஜான் 5: 22-23 க்கான விளக்கத்தை இந்த கட்டுரையில் காண்போம்.
Green Manuscript John 5:22 oude gar ho patEr krinei (G2919) oudena alla tEn krisin pasan dedOken tO huiO 5:23 hina pantes timOsin ton huion kathOs(G2531) timOsin ton patera ho mE timOn ton huion ou tima ton patera ton pempsanta auton English Translation John 5:22 Not yet for the father is judging (G2919) not yet one but the judging every has given to the son: 5:23 That all may be valuing the son according-as (G2531) they are valuing the father the one no valuing the son not is valuing the father the one sending him. திரு உமர் அவர்கள் கோடிட்டு இருந்த பைபிள் வசனமான ஜான் 5: 22-23 மூலம் அவர் தெரிவிக்க விரும்பும் கருத்து:
திரு உமர் அவர்களின் இந்த கருத்துக்கு நம்முடைய விளக்கம்:
நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்கள் அந்த கட்டுரையில், "போல" என்பதைக் குறிக்கும் "kathōs" (Strong's G2531) என்கிற கிரேக்க வார்த்தைக்கு பொருளாக "… ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்..." என்று அறிவித்து இருந்தார். இதன் வாயிலாக "kathōs" என்ற கிரேக்க வார்த்தை உபயோக படுத்த பட்டமையால் “பிதாவாகிய தேவனைக் கனம் பண்ணி பயபக்தியுடன் இருப்பது போலவே, இயேசுவையும் அதே நிலையில் வைத்து கனம் பண்ணி பயபக்தியுடன் இருக்க வேண்டும்” என்று திரு உமர் அவர்கள் அறிவிக்கிறார். திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல கிரேக்க பைபிளில் "kathōs" (Strong's G2531) என்ற வார்த்தை உபயோக படுத்த பட்ட இடங்களில் எல்லாம் அவர் அளித்த விளக்கத்து படி "… ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்..." என்று அமைத்து நாம் விளங்க முடியுமா? உதாரணமாக: எல்லாம் வல்ல இறைவன், மனிதர்கள் மேல் பொழியும் அருள் இறக்கம் (அருளிரக்கமுடைய/இரக்கங்காட்டுகிற/தயையுள்ள/மன்னிக்குமியல்புடைய) போன்று அதே அளவில் (ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்) மனிதர்கள்லால் பொழிய முடியுமா? இது மனிதர்களுக்கு சாத்தியமா? Luke 6:36 Be ye therefore merciful, as (G2531) your Father also is merciful. எல்லாம் வல்ல இறைவன், ஈஸா (அலை) யுடன் பகிரங்கமாக பேசியதாக நம்மால் அறிய முடியவில்லை. ஆனால் ஈஸா (அலை) தன் சீடர்களிடம் பகிரங்கமாக பேசினார்கள் என்று பைபிள் அறிவிக்கிறது. அப்படி என்றால் இது இறைவன் தன் இறைதுதர்களுடன் பேசிய முறைக்கு சமமாக (ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்) திரு ஈஸா (அலை) அவர்கள் தாங்கள் சீடருடன் பேசியதற்கு ஒப்பாகுமா? John 12:50 And I know that his commandment is life everlasting: whatsoever I speak therefore, even as (G2531) the Father said unto me, so I speak. எல்லாம் வல்ல இறைவன் ஈஸா (அலை) யை உலகுக்கு ஒரு இறைத்தூதர்றாக அனுப்பினர், திரு உமர் அவர்கள் நம்பிக்கை படி மூன்றுறில் ஒரு இறைவனை, தன் சொந்த மகனை, உலகதொரின் பாவத்தை சுமக்க, பலிகொடுக்க அனுப்பினர். அப்படி என்றால் இறைவன் ஈஸா (அலை)யை அனுப்பியதற்கு ஒப்பான நிலையில் (ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்) திரு ஈஸா (அலை) அவர்கள் இறைவனான தன் சீடர்களை பலிகொடுக்க அனுப்பினாரா? John 20:21 Then said Jesus to them again, Peace [be] unto you: as (G2531) [my] Father hath sent me, even so send I you. திரு உமர் அவர்கள், இறைவனாக வணங்கும் ஈஸா (அலை) அவர்கள் மக்கள் மேல் பொழியும் அதே அளவிலான (ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்) அன்பை மக்கள் பொழிய முடியுமா? இது சாத்தியமா? (குறைந்த பட்சம் இந்த எதிர்ப்புகளை படித்து திரு உமர் அவர்கள் குர்ஆனை வேறு ஏதும் இழிவு செய்து புகைப்படம் வெளியிடாமல் இருந்தாலே அதுவே மிக பெரிய அதிசயமாக இருக்கும்.) John 15:12 This is my commandment, That ye love one another, as (G2531) I have loved you. திரு உமர் அவர்கள், ஈஸா (அலை) அவர்களை இறைவன் என்கிறார், ஆனால் ஈஸா (அலை) தான் இறைவன்னுள் இருப்பது போல (ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்) தன் சீடர்களும் இருகிறார்கள் என்று அறிவிக்கிறார். அப்படியானால் எல்லா சீடர்களும் இறைவன் என்று திரு உமர் அவர்கள் ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில் வணங்க முன் வருவாரா? John 17:21 That they all may be one; as (G2531) thou, Father, [art] in me, and I in thee, that they also may be one in us: that the world may believe that thou hast sent me. திரு உமர் அவர்கள், ஈஸா (அலை) அவர்கள் தன்னை இறைவனை போல அதே அளவில் (ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்) வணங்க வேண்டும் என்று அறிவித்து இருந்தால், மக்களுக்கு வணக்க முறையை அறிவிக்கும் பொழுது, தன்னை வணங்கும் முறையை தானே அவர் அறிவித்து இருக்க வேண்டும். இறைவனை போல தன்னையும் வணங்குங்கள் என்று அறிவித்து விட்டு, இதற்க்கு மாறாக, இறைவனை வணங்கும் முறைகளை மட்டும் அறிவிப்பது, மக்களை வழிகெடுக்கும் செயல் இல்லையா? உங்கள் வாதத்தின் அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் தான் இறைவன் என்றால், அவர் இறைவனிடம் பிராத்தனை செய்தார் என்று பைபிள் அறிவிகிறதே, அப்படி என்றால் அவர் என்னதான் பிராத்தனை செய்து இருப்பர்? Luke 11:1 Now Jesus was praying in a certain place. When he stopped, one of his disciples saidto him, “Lord, teach us to pray, just as John taught his disciples.” 11:2 So he said to them, “When you pray, say: Father, may your name be honored; may your kingdom come.11:3 Give us each day our daily bread, 11:4 and forgive us our sins, for we also forgive everyone who sins against us. Anddo not lead us into temptation. திரு உமர் அவர்களே, ஈஸா (அலை) தான் இறைவனை கனம் பன்னும் அதே நிலையில் தன்னையும் கனம் பண்ணுங்கள் என்று அறிவித்தாரா? அப்படி என்றால் அவர் தன்னை வணங்கும் முறையை தானே கற்று தர முன் வந்து இருக்க வேண்டும், மாறாக தன் இறைவனை கனம் பனுவதகவும் இதற்க்கு மாறாக இவர்கள் தன்னை ஒரு இறைத்தூதர் என்ற நிலையில் கனம் பன்ன மறுபதகவும் அறிவிக்கிறார், அது என்? John 8:49 Jesus answered, I have not a devil; but I honour (G5091) my Father, and ye do dishonour me. திரு உமர் அவர்களே, திரு ஈஸா (அலை) அவர்கள் இறைவனை கனம் பன்னும் அதே நிலையில் தன்னையும் கனம் பண்ணுங்கள் என்று அறிவித்தாரா? அல்லது இறைதூதர்களை கனம் பன்னும் வகையில் தன்னையும் கனம் செய்க என்று வினவினரா? Matthew 13:57 and they –were-snared in him the yet jesus said to them not is before-averer (prophet) un-valued (dishonored) if no in the father[-place] of-him and in the home of-him. திரு உமர் அவர்கள் கோடிட்ட பைபிள் வசனத்தில் “இறைவன் தாமே ஒருவருக்கும் நியாய தீர்ப்புச் செய்யாமல் நியாய தீர்ப்புச் செய்யும் அதிகாரத்தை குமாரனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார்” என்று உரைபதாக அறிவிக்கிறார். ஆனால் இந்த வசனத்தின் தொடர்ச்சியான ஜான் 5:30 யில் ஈஸா (அலை) அவர்கள் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்றும் இறைவனின் விருபதையே தான் நியாயத்தீர்ப்பு செய்ததாக அறிவிக்கிறார். அப்படி என்றால் திர்ப்பு யாருடையது, இறைவனுடையது தானே? John 5:30 not am-able I to-be-doing from myself not-yet-one according-as I-am-hearing I-am-judging (KrinO – G2919) and the judging the my just is that not I-am-seeking the will the my but the will of-the one-sending me father. ஜான் 5:30 யில் வரும் “KrinO – G2919” என்ற கிரேக்க வார்த்தையை பைபிள் மொளிபெயற்பாளர்கள் “Condemn” (பழித்துரை, கண்டி, பயனற்ற தென்று கழி, எதிராகக் குற்றத் தீர்ப்பளி) என்றும், Judging (தீர்ப்பளி, மதிப்பிடு, நீதிபதி, நடுவர்) என்றும், அவர் அவர் விருப்பத்திர்க்கு மொழிபெயர்த்து உள்ளத்தை நம்மால் காண முடிகிறது. இந்த மொழிபெயர்ப்புகளை எதை அடிப்படையாக கொண்டு அவர்கள் மேற்கொண்டார்கள் என்று கிறிஸ்தவ அறிஞரான திரு உமர் அவர்கள் தான் நமக்கு அறிவிக்க வேண்டும். உதாரணமாக: John 3:17 For god send not his son into the world to condemn (G2919) the world; but that the world through him might be saved. John 12:47 If anyone hears my words and does not obey them, I do not condemn (G2919) him. For I have not come to condemn the world, but to save the world. 12:48 There is a judge for the one who rejects me and does not accept my words; that very word which I spoke will condemn (G2919) him at the last day 12:49 for I did not speak of my own accord, but the father who sent me commanded me what to say and how to say it. John 3:18 he that believeth on him is not condemned (G2919): but he that believeth not is condemned (G2919) already, because he hath not believed in the name of the only begotten son of god. John 16:11 and concerning the judgment, because the ruler of this world has been condemned (G2919). மேலே கொடிடபட்டுள்ள பைபிள் வசனங்களின் அடிப்படையில், ஈஸா (அலை) அவர்களை இறைவன் நியாயதீர்ப்பு வழங்க உலகுக்கு அனுப்ப வில்லை, மாறாக உலகை காக்க, தன் இறை செய்தியை அறிவிக்கவே அனுப்பினான் என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். திரு உமர் அவர்களின், வாதமான “நியாய தீர்ப்பை அளிக்கும் வல்லமை ஈஸா (அலை)யிடம் உள்ளது” என்பதை ஏற்போமானால், ஈஸா (அலை) அறிவிக்கும் இறைவனே நியாய தீர்ப்பின் அதிபதி என்ற வாதம் அடிபட்டு விடும், இதில் எதை நம்புவது, திரு உமர் அவர்கள் அறிவிப்பதையா? அல்லது ஈஸா (அலை) அறிவிப்பதையா? John 8:49 answered Jesus I demon not am having but I am valuing the father of me and you are un valuing me. 8:50 I yet not am seeking the glory of me he is the one seeking and judging (G2919). John 12:47 If anyone hears my words and does not obey them, I do not condemn (G2919) him. For I have not come to condemn the world, but to save the world. 12:48 There is a judge for the one who rejects me and does not accept my words; that very word which I spoke will condemn (G2919) him at the last day திரு உமர் அவர்களின், வாதமான “நியாய தீர்ப்பை அளிக்கும் வல்லமை ஈஸா (அலை)யிடம் உள்ளது” என்றால், பைபிள் அறிவிக்கும் எல்லாம் வல்ல இறைவனே நியாய தீர்ப்பு வழங்க வல்லமை பெற்றவன் என்ற வாதத்திற்கு திரு உமர் அவர்கள் தான் விளக்கம் தர வேண்டும். 1 Peter 1:17 Since you call on a Father who judges each man's work impartially, live your lives as strangers here in reverent fear. திரு உமர் அவர்களே, நியாயதீர்ப்பு யார் வழங்க போவது? எல்லாம் வல்ல இறைவனா? அல்லது ஈஸா (அலை) அவர்களா? அல்லது அவரது பன்னிரெண்டு சீடர்களா? Jesus said to them, ‘Truly, I say to you, in the new world, when the Son of Man will sit on his glorious throne, you who have followed me will also sit on twelve thrones, judging the twelve tribes of Israel.’" Matthew 19:28 திரு உமர் அவர்களே, நியாயதீர்ப்பு திரு ஈஸா (அலை) அவர்களுக்கு உரியது என்றால், அவருக்கு, அதன் தவணை தெரிந்து இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு அல்ல அது தன் இறைவனுக்கு மட்டுமே தெரியும் என்று திரு ஈஸா (அலை) அறிவிப்பது மூலமே நியாயதீர்ப்பு இறைவன்கே உரியது என்பது தெளிவாக வில்லையா? Matthew 24:36 About yet the day that and the hour not-yet-one has-perceived not-yet the messengers of-the heavens if no the father of-me only. Mark 13:32 about yet the day that and the hour not-yet-one has-perceived not-yet the messengers the in heaven not-yet the son if no the father. திரு உமர் அவர்களே, நியாயதீர்ப்பு திரு ஈஸா (அலை) அவர்களுக்கு உரியது என்றால், தன் வழங்க இருக்கும் நியயதீர்ப்பை அவர் முன்னமே அறிந்து இருக்க மாட்டாரா? தன்னுடன் யார் அமர வேண்டும் என்பதை கூட நிர்ணயிக்க தனக்கு வல்லமை இல்லை, அது தன் இறைவனால் நிச்சயிக்கபட்டது என்று அறிவிப்பது மூலமே நியாயதீர்ப்பு வழங்க வல்லமை எல்லாம் வல்ல இறைவன் ஒருவனுக்கே உரியது என்பது தெளிவாகவில்லையா? Matthew 20:23 and he-is-saying to-them the indeed drink-cup of-me ye-shall-drinking and the dipism which I am-being-dipized ye-shall-be-being-dipized the yet to-be-seated out of-right of-me and out of-left of me not is my to-give but to-whom it-has-been-made-ready by the father of me Mark 10:39 the yet they-said to-him we-are-able the yet jesus said to-them the indeed drink-cup which I am-drinking ye-shall-be-drinking and the dipism which I am-being-dipized ye-shall-be-being-dipized 10:40 the yet to-be-seated out of right of-me and out of-left of-me not is my to-give but to-whom it-has-been-made-ready (by the father of me) 2. அல்லாஹ்வைக் கனம் பண்ணுவது போலவே முஹம்மது நபியைக் கனம் பண்ணுதல் என்பது ஒரு முஸ்லீமுக்கு ஏற்புடையதாக இருக்குமா? நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில் இஸ்லாமியர்கள் பார்த்து ஒரு கேள்வியை கேட்டு இருந்தார் அது: “இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால் இயேசுவைக் கனம் பண்ணுதல் அல்லது பிதாவைக் கனம் பண்ணுவது போல இயேசுவைக் கனம் பண்ணுதல் என்பது தேவ தூஷணமாகுமல்லவா? அல்லாஹ்வைக் கனம் பண்ணுவது போலவே முஹம்மது நபியைக் கனம் பண்ணுதல் என்பது ஒரு முஸ்லீமுக்கு ஏற்புடையதாக இருக்குமா?” என்று கேள்வியை எழுப்பி இருந்தார் John 5:23 That all may be valuing the son according as they are valuing the father the one no valuing the son not is valuing the father the one sending him. 5:24 amen amen I am saying to you that the one the saying of me hearing and believing to the one sending me is having life திரு உமர் அவர்களே, நீங்கள் கோடிட்டது போன்ற ஒத்த பல வசனங்களை குர்ஆனில் நாம் காண முடியும் உதாரணமாக அல் குர்ஆன் 4:59: yaaa-‘ayyu-hallaziina ‘aa-manuuu ‘atii – ‘ullaaha wa ‘atii – ‘ur rasuula… இந்த குர்ஆன் வசனத்தை பொதுவாக இவ்வாறு மொழி பெயர்ப்பார்கள் 4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்... இந்த வசனத்தில் வரும் “atii” – “ஆதி” என்ற அரபி வார்த்தைக்கு கீழ்படித்தல், கனம் செய்தல், மேன்மை செய்தல், வழிபடுதல் என்று பல அர்த்தம் உள்ளது. இந்த வசனத்தை திரு உமர் அவர்களின் கண்ணோட்டத்தில் பார்ப்போமேயானால் “இறைவனை கனம் பன்னுவது போல் இறைதுதர்களை (முஹம்மத் நபி (ஸல்)) கனம் பண்ணவேண்டும் என்று அர்த்தம் ஆகும்”. இன்னும் வழிபடுதல் என்ற கருத்தை முன் வைத்து பார்த்தால் “இறைவனை வழிபடுதல் போல் இறைதுதர்களை (முஹம்மத் நபி (ஸல்)) வழிபட வேண்டும்” என்று அர்த்தம் ஆகும். ஆனால் இஸ்லாமியர்கள் திரு உமர் போன்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தான் இறைவன் என்று வணங்குவது இல்லை, ஏனெனில் அவர்களுக்கு இறைவனை வழிபடுவதர்க்கும், இறைதூதர்களுக்கு வழிபடுவதர்க்கும் உள்ள வேறுபாடு அறிந்தவர்கள். வழிபடுதல் என்ற வார்த்தைக்கு வணங்குதல் என்று மட்டும் பொருள் படாது. “வழி” + “படுதல்” = காட்டிய வாழ்க்கை நெறிகளை வாழ்க்கை முறையாக அமைத்து கொண்டு பின்பற்றுதல். பொதுவாக வழிபடுதல், கனம்பன்னுதல் என்றால் அவர்கள் அறிவுறுத்திய கருத்துகளை ஏற்றுக்கொண்டு அதை மேன்மை படுத்தும் வகையில் அதன் அடிப்படையில் வாழ்க்கை முறையை அமைத்து பின் பற்றுதல் என்று வைத்துகொள்ளலாம். இதன் அடிப்படையில் இறைவன் அறிவுறுத்திய கருத்து “தன்னை அன்றி வணக்கத்துக்குரிய வேறு இறைவன் இல்லை” என்பதாகும். இறைதூதர்கள் அறிவுறுத்திய கருத்து “வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவனை வணங்குங்கள், நாங்கள் இறைதுதர்களே அன்றி வேறு இல்லை” என்பதாகும். இதன் அடிப்படையில் இறைவனை வழிபடுதல், கனம்பன்னுதல் என்றால் அவன் வலியுறுத்திய கருத்தை மனித வாழ்வின் அடிப்படையாக கொண்டு, அவனை அன்றி வேறு யாரையும் வணங்காது இருபதாகும். இறைதூதர்களை வழிபடுதல், கனம்பன்னுதல் என்றால் அவர்கள் வலியுறுத்திய கருத்தை மனித வாழ்வின் அடிப்படையாக கொண்டு, நேர்வழியில் நின்று, வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவனை வணங்கி, இறைவனால் அருள பெற்ற இறைத்தூதர்களை இழிவு செய்யாமல், அவர்களை புனிதமான இறைத்தூதர்கள் என்று ஏற்றுக்கொண்டு, இறைத்தூதர்களின் போதனைகளை வாழ்க்கை முறையாக அமைத்து கொள்வதாகும். இறைவனை கனம் பன்னுவது என்றால் இறைவன் என்ற தகுதிக்கு உரிய முறையில் அவனை வணங்குவது என்று அர்த்தமாகும், இறைத்தூதர்களை கனம் பன்னுவது என்றால் மதிர்பிர்க்கு உரிய இறைத்தூதர் என்ற முறையில் கனம் பன்னுவது என்று அர்த்தமாகும் மாறாக இறைத்தூதர்களை இறைவனாக வணங்க வேண்டும் என்று அர்த்தம் ஆகாது. இதனால் தான் திரு உமர் அவர்கள் கோடிட்ட பைபிள் வசனத்தின் தொடர்ச்சியில் John 5:24 amen amen I am saying to you that the one the saying of me hearing and believing to the one sending me is having life தான் சொல்வதை நம்புபவர்களும் (தான் காட்டும் நேர் வழி நின்று இறைவனை வணங்குபவர்கள்) தன்னை அனுப்பியது இறைவன் தான் என்று நம்புபவர்களுமே பரிசுத்த வாழ்வுவை அடைய முடியும் என்று ஈஸா (அலை) அறிவிக்கிறார். John 5:23 ....the one no valuing the son not is valuing the father the one sending him. மேலே உள்ளது போன்ற குர்ஆன் வசனம்: அல் குர்ஆன் 4:80: Many-yuti-ir-rasuula fa-qad ‘ataa-‘allaah:… அல் குர்ஆன் 4:80. எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;... மேலே கோடிடப்பட்ட குர்ஆன் வசனம், எவர் அல்லாஹ்வின் தூதருக்கு கீழ்படிகிறாரோ, கனம் பண்ணினரோ, அவர்தான் அல்லாஹுவுக்கு கீழ்படிந்தவர் ஆவார். இறைவனின் தூதர்களுக்கு கீழ்படியாதோர், கனம் பன்ன தவறியோர், அல்லாஹுவை கீழ்படியாதோர், கனம் பன்ன தவறியோர் ஆவார், என்று ஒத்த கருத்தை அறிவிக்கிறது. இதற்கும் இறைவனை வணங்குவது போல் இறைதுதர்களை வணங்கவேண்டும் என்று அர்த்தம் ஆகாது, மாறாக இறைவனை வணங்குவது முலம் இறைவனுக்கு கீழ் படிய வேண்டும், இறைதூதர்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் காட்டும் நல்வழி நின்று இறைவனை வணங்குவது மூலம் இறைதூதர்களை கீழ்படிய வேண்டும் என்றே அர்த்தம் ஆகும். மேலே அளிக்கபட்ட ஆதாரகள் இன்னும் விளக்கங்களின் அடிப்படையில் John 5:22 வசனத்தில் ஈஸா (அலை) தான் இறுதி நாள் நியாயதீர்ப்பு வழங்க போவதாக அறிவித்ததாக நம்மால் அறியமுடியவில்லை, இன்னும் “தன் தகப்பனை கன்னியம் செய்வது போல் தன்னையும் கன்னியம் செய்யுங்கள்” என்றும், “இறைவனை வணங்கும் அதே நிலையில் தன்னையும் வணங்குங்கள்” என்று அறிவித்ததாக நம்மால் அறிய முடியவில்லை. இதற்க்கு மாறாக இறைத்தூதர்களுக்கு உரிய மரியாதையை தனக்கு தருமாறு, இன்னும் இறைவனுக்கு உரிய மரியாதையை இறைவனுக்கு தருமாறு அறிவிக்கிறர்கள். இதன் அடிப்படையில் இறைவனுக்கு உரிய மரியாதையை இறைவனுக்கு தரவேண்டும், இறைதுதர்களுக்கு உரிய மரியாதையை இறை தூதர்களுக்கு தர வேண்டும் என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். |
திரு உமர் அவர்கள் கோடிட்ட Revelation 5:8-14 பைபிள் வசனத்திற்கு நம்முடைய விளக்கத்தை காண்போம்:
Revelation 5:8 and when he got the scrolled the four living-ones and the twenty-four seniors fell in-view of-the lambkin having each lyres and bowls golden being-replete of incenses which are the prayers of the holy ones. 5:9 and they are singing song new saying worthy you are to be getting the scrolled and to up open the seals of it that you were slain and buy of the god us in the blood of you out of every tribe and tongue and people and nation 5:10 and you make us to the god of us kings and sacred-ones and we shall be reigning on of the land 5:11 and I-perceived and I-hear sound of messengers many around-place of the throne and of-the living-ones and of the seniors and was the number of them myriads(10000) of myriads and thousands of thousands 5:12 saying to – sound great worthy is the lambkin the one having been slain to be getting the ability and riches and wisdom and strength and value and esteem and blessedness 5:13 and every creature which is in the heaven and in the land and under-down of the land and on of the sea which is and the in them all I-hear saying to the one sitting of the throne and to the lambkin the blessedness and the value and the esteem and the holding into the eons of the eons 5:14 and the four living ones said amen and the twenty-four seniors fall and worship to on living into the eons of the eons. 1. திரு உமர் அவர்களே, நீங்கள் வழக்கமாக ஆதாரம் தேடும் விக்கிபிடியா பைபிளின் வெளிப்படுத்தல் (revelation) ஒரு அபோகாலிப்பா(கனவு) என்கிறது. இது போல இன்னும் அதிக படியான அபோகாலிப்பா(கனவு) பைபிளிள் இணைக்க பெறாமல் உள்ளதாக அறிவிக்கிறது. அவற்றில் சிலவற்றை ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர்கள் தங்கள் பைபிளின் இணைத்துள்ளார்கள் என்றும் அறிவிக்கிறது. இதன் வாயிலாகவே அவர்கள் பைபிள், ஏனைய பைபிள்களை காட்டிலும் ஆறு அல்லது ஏழு புத்தகங்கள் அதிகம் கொண்டதாக காண பெறுகிறது. திரு உமர் அவர்களே, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பாவை (கனவுவை) ஏற்றுகொள்ள முன் வரும் நீங்கள் மிஞ்சி இருக்கும் அதிக படியான அபோகாலிப்பாகளை ஏற்க முன் வருவீர்களா? குறைந்த பட்சம் ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர்கள் இணைத்து வைத்துள்ள அபோகாலிப்பாகளை ஏற்க முன் வருவீர்களா?
2. திரு உமர் அவர்களே, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பாவை (கனவுவை) இயற்றியதாக நம்பப்படும், திரு ஜான் அவர்கள் எழுத்த படிக்க தெரியாத மீனவர் என்று முன்னமே நாம் தெளிவான ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளோம். இதன் அடிப்படையில் வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பாவை (கனவுவை) இயற்றியவர் யார் என்று கிறிஸ்தவ அறிஞரான நீங்கள் தான் எங்களுக்கு கண்டு அறிந்து தெளிவான ஆதாரத்துடன் அறிவிக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுகொள்கிறோம்.. 3. திரு உமர் அவர்களே, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பா (கனவு) ஈஸா (அலை) அவர்களின் கருத்துக்கு முரணான செய்திகளை அறிவிக்கிறது. உதாரணமாக: மரணத்திற்கு பிறகு உயிர்த்தெளுப்பப்பட்டவர்கள் திருமணம் முடிப்பது இல்லை என்று திரு ஈஸா (அலை) தெளிவாக அறிவிக்க, இதற்க்கு மாறாக வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பாவில் (கனவுவில்) உயிர்த்தெளுப்பப்பட்ட திரு ஈஸா (அலை) அவர்கள் திருமனம் முடித்தார்கள் என்று அறிவிக்கிறது. அது எப்படி ஈஸா (அலை) அவர்களின் கருத்துக்கு முரணான செய்திகளை அறிவிக்க வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பாவால் (கனவுவால்) சாத்தியம் ஆயிற்று? 4. திரு உமர் அவர்களே, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பா (கனவு), திரு ஈஸா (அலை) அறிவிக்காத ஜந்துக்களை பற்றி அறிவிக்கிறது, (இப்படிபட்ட ஜந்துக்களை நாம் கனவில் தான் காண முடியும்). அப்படியானால் ஜான் என்ற முகவரி இல்லாத நபர் திரு ஈஸா (அலை) அவர்களை காட்டிலும் உயர்ந்தவர் ஆவாரா?
5. திரு உமர் அவர்களே, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பா (கனவு), ஈஸா (அலை) அவர்களை ஒரு அட்டுகுட்டியாக சித்தரிக்கிறது. ஏனைய அப்போச்ட்லேகளை மனிதராக சித்தரித்து விட்டு ஈஸா (அலை) அவர்களை ஒரு அட்டுகுட்டியாக சித்தரிப்பது வியப்புக்கு உரிய செய்தி இல்லையா? திரு உமர் அவர்களே, ஏழு கண்கள் ஏழு கொம்புகள் கொண்ட ஆட்டுக்குட்டியை நீங்கள் கண்டதுண்டா? அது ஈஸா (அலை) என்கிறார் வெளிப்படுத்தல் (revelation) னின் ஆசிரியர்.
6. திரு உமர் அவர்களே, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பா (கனவு), ஈஸா (அலை) அவர்களுக்கு பெண்களை போன்ற மார்பகம் இருந்தது என்று சித்தரிகிறது. ஏனைய மனிதர்களை ஆண் மகனாக சித்தரித்து விட்டு ஈஸா (அலை) அவர்களை ஒரு பெண்னை போன்று சித்தரிப்பது ஏற்க கூடிய வாதமா?
7. திரு உமர் அவர்களே, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பா (கனவு), இறைவனை ஒரு கள் போன்றவன் என்று சித்தரிக்கிறது. இறைவனை ஒரு கள் போன்றவன் என்ற ஏனைய மதத்தினரின் நம்பிக்கை போல கிறிஸ்தவர்களும் அறிவிப்பது ஏற்புக்குரிய வாதமா?
8. திரு உமர் அவர்களே, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பா (கனவு), ஜான் இறைவனை பார்த்தார் என்று அறிவிக்கிறது. இது திரு ஈஸா (அலை) அறிவித்ததாக பைபிள் அறிவிக்கும் “இறைவனை யாரும் பார்த்தது இல்லை, அப்படி பார்த்து விட்டு உயிர் வாழ்வதும் இல்லை” என்ற வாதத்திற்கு எதிரானது, இது ஏற்புக்கு உரிய வாதமா?
9. திரு உமர் அவர்களே, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பா (கனவு), பைபிளின் இடை சொருகள் செய்பவர் தண்டிக்க படுவர் என்று மிரட்டல் விடுக்கிறது. ஆனால் இதற்க்கு மாறாக வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பாவில் (கனவுவில்) இடை சொருகள்கள் செய்ய பட்டுள்ளது என்று உங்கள் கிறிஸ்தவ அறிஞர்களே சாட்சி அளிக்கிறார்கள்.
10. திரு உமர் அவர்களே, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பா (கனவு), திரு ஈஸா (அலை) அவர்களை சிலுவையில் இடப்பட்டது ரோம் மாநகர் என்று சாட்சி கூறுகிறது. ஆனால் பெறும்பான்மையான கிறிஸ்தவர்கள் திரு ஈஸா (அலை) அவர்களை சிலுவையில் இடப்பட்ட இடம் ஜெருசலம் என்கிறார்கள். இதில் எது சரியானது என்று கிறிஸ்தவ அறிஞரான நீங்கள் தான் கண்டு அறிவிக்க வேண்டும்.
திரு உமர் அவர்களே, நாங்கள் மேலே கோடிட்டது, வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பா என்ற கனவின் நண்பகதன்மையில், காண பெறும் ஒரு சில குறைபாடுகள் மட்டுமே. இதை போன்று எண்ணற்ற குறைபாடுகள் வெளிப்படுத்தல் (revelation) என்ற அபோகாலிப்பா கனவில் காண முடிகிறது. இப்படி குறைபாடுகள் நிறைந்த, சிறிதும் நண்பக தன்மை இல்லாத ஒரு கனவின்/புத்தகத்தில் வரும் ஒரு சில வசனங்களை எதனை அடிப்படையாக கொண்டு நம்புவது? இப்படி அறிவிக்க படும் கனவுகளை எல்லாம் நாம் நம்பவேண்டும் என்று திரு உமர் அவர்கள் வலியுறுத்த விரும்புகிறாரா?
திரு உமர் அவர்களே, நீங்கள் கோடிட்ட வசனங்களை, உங்கள் வாதத்தின் அடிப்படையில் பார்த்தாலும் ஏழு கொம்புகள் மற்றும் ஏழு கண்கள் கொண்ட ஆட்டுக்குட்டி எப்படி ஈஸா (அலை) அவர்களுக்கு ஒப்பானது என்று அறிய முடியவில்லை? இன்னும் அந்த வசனங்களில் வானவர்கள் இறைவனை துதித்த பிறகு, இறைவனையும், ஏழு கொம்புகள் மற்றும் ஏழு கண்கள் கொண்ட அட்டுகுட்டியை வாழ்த்துகிறார்கள். வாழ்த்துவது என்பதும் துதிப்பது என்பதும் ஒன்றாகுமா? வானவர்கள் ஏழு கொம்புகள் மற்றும் ஏழு கண்கள் கொண்ட ஆட்டுக்குட்டியை வாழ்த்துவது எப்படி இறைவனுக்கு சமமாக ஈஸா (அலை) அவர்களை துதித்தது என்றாகும் ?? |
திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில் முன் வைத்த பைபிள் வசனங்களில் விடுபட்ட வசனங்களை இந்த கட்டுரையின் தொடர்ச்சியில் இறைவன் கிருபையில் ஆராய முயல்வோம் அது வரை உங்களிடம் தற்காலிகமாக விடை பெறுகிறோம்...
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர்
No comments:
Post a Comment