பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக விவாதம் பற்றி... திரு உமர் அவர்களே, எழுத்து விவாதத்திற்கு அறை கூவல் விடுத்த நீங்கள்... முஹம்மத் நபி (ஸல்) அவர்களை ஆதாரம் இல்லாமல் பழிப்பதையே வாடிக்கையாக கொண்ட நீங்கள்... விவாதத்திற்கு தயார் என வெளிப்படையாக, பகிரங்கமாக அறிவித்து கட்டுரையாக எழுதுலாமே. பிறகு விவாதத்திற்கான வரைமுறைகளை வகுத்துக்கொண்டு விவாதத்தை தொடரலாமே! நாம் இது வரையில் விவாதித்த கட்டுரைகளான “முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?” அல்லது “அல்லேலுயா வார்த்தையின் அர்த்தம் - யேகோவா தேவனை துதித்தல்” இவற்றில் ஏதேனும் ஒன்றின் மீது உங்களிடம் தெளிவான ஆதாரம் இருக்குமேயாயின், அதை எழுத்து விவாதத்திற்கு தலைப்பாக கொண்டு தொடரலாமே! இந்த இரண்டு தலைப்பையும் முன்னிறுத்த காரணம், இந்த தலைப்புகளில் ஒரு சில கட்டுரைகள் முன்னமே எழுதி இருப்பதால் மாத கணக்கில் விவாதம் இழுத்தடிக்க படாமல் ஒரு சில கட்டுரைகளில் முடிவு தெரிய வாய்ப்புள்ளது. அல்லேலூயாவும் ஈசா உமரும் “அல்லேலூயா” என்ற ஒரு ஹிப்றேவ் வார்த்தைக்கு விளக்கம் வேண்டினால் வேறு விளக்கங்களை தருவது முலம் காலம் தாழ்த்திக்கொண்டு இருக்கிறீர். ஓசை உச்சரிப்பிலும், பொருளிலும் ஒத்து இருக்கும் இரு வார்த்தைகளை நாங்கள் ஆதாரம் காட்டினால், ஓர் அளவு ஓசையில் ஒத்து, பொருளில் வேறுபாடும் வார்த்தைகளை எதிர்வாதமாக வைத்து வேடிக்கை செய்கிறீர். தலைப்புக்குள் நுழையாமல் வாசகர்களை குழப்புவதையே தொழிலாக கொண்ட உமர் அவர்கள் திரு. உமர் அவர்கள் தன்னையும், தான் நம்பும் கிறிஸ்தவத்தை காக்க படாத பாடு படுகிறார். இதற்க்கு முன்பே அவர் “முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?” என ஆரம்பித்து அதை நிரூபிக்க முடியாமல் தலைப்பை மாற்றி, மாற்றிய தலைப்பையும் நிரூபிக்க முடியாமலும், தோல்வியை ஒப்புக்கொள்ளவும் முடியாமலும், ஓடி ஒளிந்துவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. திரு உமர் அவர்கள், இனியாவது தன் ஞானத்தை கொண்டு தான் கேட்கும் பொய்யுரைகளுக்கு பதில் கிறிஸ்தவத்தில் இருக்கிறதா என்று முதலில் ஆராய்வார் என நம்புவோம்... இதுவரை இஸ்லாமியர்களுக்கு எதிரான தெளிவான ஆதாரங்கள் எடுத்து தர உங்கள் இறைவன் முன்வரவில்லை என்று நிருபித்து கொண்டு இருந்த நீங்கள், இப்பொழுது பைபிளில் மிஞ்சி இருக்கும் ஒரு சில ஹிப்றேவ் மொழி வார்த்தைகளுக்கு கூட தெளிவான விளக்கத்தை எடுத்து தர உங்கள் இறைவன் முன் வரவில்லை என்று சாட்சி கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். திரு உமர் அவர்கள், “தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்” என கட்டுரை வரைந்திருந்தார். அதற்க்கு பதில் அளிக்கும் விதமாக அல்லேலூயாவும் ஈசா உமரும்!!! என்ற தலைப்பில் நாமும் ஒரு பதில் கட்டுரை வரைந்தோம். இதற்க்கு பதில் அளிப்பதாக “Answering Ziya: அல்லேலூயாவும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1” என தலைப்பை மட்டும் ஆரவாரமாக ஆரம்பித்துவிட்டு, "ஆங்கிலத்திலும், தமிழிலும் "அல்லேலூயா" வார்த்தைக்கு நீங்கள் அளித்த விளக்கத்தை மறுப்பு அடுத்த பாகத்தில் தரப்படும்." என தலைபிற்குள் நுளையாமலே முடித்துவிட்டார். அந்த கட்டுரையில் நாம் முன்வைத்த விக்கிபீடியா தொடுப்பு தவறு என்பதை மட்டும் முன் வைத்துவிட்டு சென்றார். அதற்கும் நாம் பதில் அளித்துள்ளோம். சரி அவரது இரண்டாவது கட்டுரையிலாவது உருப்படியாக எதையாவது எழுதுவார் என நம்பி இருந்த வாசகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம். அவரது முதல் கட்டுரையில் அவர் இவ்வாறு எழுதி இருந்தார்: “இதற்கு தான் நான் முக்கியமாக பதிலைச் சொல்லப்போகிறேன். இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அதற்கான பதிலைத் தருவேன்.” உமரின் பொதுவான டெக்நிக் தலைப்பை மாற்றுவது, தோல்வியை மறைக்க பல கட்டுரைகளை மொழிபெயர்த்து போட்டுவிட்டு, ஒன்றுமே நடக்காதது போல் புதிதாக ஒரு தலைப்பை ஆரம்பித்து வாசகர்களை ஏமாற்றுவது. ஆனால் அவரது இரண்டாவது கட்டுரையிலோ புதிதாக ஒரு டெக்நிக் புகுத்தயுள்ளார். அதாவது தலைபிற்க்கு சம்பந்தமாக எழுதுவதுபோல் பாவனை காட்டுவதற்காக நாம் கேட்ட மேல் அதிக கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அவராக ஆரம்பித்த தலைப்பான “அல்லேலுயா” வின் அர்த்தத்தை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்... என இழுத்தடிதுக் கொண்டிருக்கிறார். இரண்டாவது கட்டுரையில் இதற்கு மேல் சென்று நான்காவது கட்டுரையாகத்தான் அவர் தலைப்புக்கு உகந்த பதில் அளிப்பதாக கூறியுள்ளார். உமர் எழுதியது: "இதன் தொடர்ச்சியாக இன்னொரு கட்டுரையும் எழுதப்படுகின்றது, அதாவது, எலோஹிம் என்ற எபிரேய வார்த்தைக்கு இவர் எழுதிய விவரத்திற்கு மறுப்பாக எழுதப்படும். அதன் பிறகு, "அல்லேலூயாவும், அல்லாஹ் படும் அல்லல்களும் பாகம் - 2" என்ற மறுப்புக் கட்டுரை வெளியிடப்படும்" உலகிலேயே ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை நான்கு கட்டுரைகள் கொண்டு விளக்கம் சொன்ன முதல் நபர் திரு உமர் அவர்களாக தான் இருக்க முடியும். நான்கு கட்டுரைகளுடன் முடிவு தெரியுமா என்பதும் நிச்சையமாக சொல்ல முடியாது! பாவம் அவரும் என்ன செய்வார், அவரது கட்டுரையின் மூல எழுத்தாளர் எழுதியதை தானே இவர் மொழி பெயர்த்து கொண்டிருக்கிறார். அவர்கள் நான்கு கட்டுரைகள் எழுதினால் இவரும் அதை நான்கு கட்டுரைகள் கொண்டு தானே மொழி பெயர்க்க முடியும். உமர் எழுதியது: “ஒரு கட்டுரை எழுத/பதில் எழுத எவ்வளவு நேரம் எனக்கு செலவாகிறது என்று எனக்குத் தான் தெரியும்” கட்டுரை எழுதுவதற்கு சரி... மொழி பெயர்பதற்குமா? “இஸ்லாமியர்களின் அறியாமைக்கு வானமே எல்லை” என்று அறிவிக்கும் திரு உமர் அவர்கள், “அல்லேலூயா” என்ற ஒரு ஹிப்றேவ் மொழி வார்த்தைக்கு விளக்கம் அளிக்க மூன்று மதங்களுக்கு மேல் காலதாமதம் செய்வது கொண்டு இருப்பதால் “கிறிஸ்தவர்கள் அறியாமைக்கு ஏழு வானம் கூட எல்லையாக கிடையாது” என்று நிருபித்து கொண்டு இருக்கிறார். திரு உமர் அவர்களே, ஹிப்றேவ் மொழி வார்த்தைகளை விவரிக்க http://www.blueletterbible.org என்ற இணையதளத்தை பயன்படுத்துவதாக அறிவிக்கிறீர். ஆனால் நீங்கள் அறிவிக்கும் இணையதளம் ஹிப்றேவ் மொழி வாசகங்களை தராமல் “King James Version” பைபிளின் ஆங்கில வசனங்களை ஆதாரம் காட்டுகிறது. இதை பற்றி இன்னும் அறிய இந்த முகவரியை பாருங்கள்: http://www.blueletterbible.org/help/why_kjv.cfm திரு உமர் அவர்களே, இதன் முலம் நீங்கள் என்ன அறிவிக்க விரும்புகிறீர்கள்? “King James Version” ஹிப்றேவ் மொழியில் எழுதப்பட்டது என்று அறிவிக்க முயற்சிக்கிறீர்களா? “King James Version” தான் நீங்கள் நம்பும் பைபிள் என அறிவிக்கிறீரா? அப்படி என்றால் மற்ற மொழிபெயர்ப்புகள் தவறா? அல்லது பைபிளின் மொழி பெயர்புகளுக்கிடையில் வேறுபாடு இல்லை என அறிவிக்கிறீரா? தெளிவுபடுத்தவும்!! “King James Version” ஆங்கில மொழியில் இயற்ற பெற்ற பைபிள் அல்லவா, இதற்கும் ஹிப்றேவ் மொழி வாக்கியங்களுக்கும் தொடர்ப்பு இருப்பதாக நீங்கள் அறிவிக்க விரும்பினால், ஹிப்றேவ் மொழி வசன மூலத்தையும் சேர்த்து தானே வெளியிட்டு இருக்கவேண்டும்? அப்படி என்றால் “King James Version” பைபிள் பிழை அற்றது என்று வாதாட விரும்புகிறீர்களா? அவ்வாறு அல்ல, “King James Version” மொழியாக்கத்தில் அதிகப்படியான பிழைகள் உண்டு என்று http://www.blueletterbible.org யின் ஆசிரியரே தெரிவிக்கிறாரே இன்னும் அதிகப்படியான கிறிஸ்தவ அறிஞர்களே “King James Version” பைபிள் மொழியாக்கத்தில் உள்ள பிழைகளை வெளிப்படுத்தும் பொழுது, அது பிழைகள் அற்றது என்று உங்கள் வாதத்தை எங்களை நம்ப சொல்கிறீர்களா? இப்படி http://www.blueletterbible.org இணையதளத்தின் ஆசிரியர், மற்றும் கிறிஸ்தவ அறிஞர் பிழையுடையது என்று சாட்சியளிக்கும் பைபிளில் இருந்து நீங்கள் அளிக்கும் ஹிப்றேவ் வார்த்தைகளின் மொழியாக்கத்தை, எதை அடிப்படையாக கொண்டு நம்புவது? இருப்பினும் நீங்கள் அளித்த மொழியாக்கத்தை இறைவன் கிருபையை நாடியவர்களாக ஆராய முனைவோம். திரு உமர் அவர்களே, ஹிப்றேவ் மொழியில் “அல்லாஹ்” என்றால் கர்வாலி மரம் என்று அர்த்தமா? ஹிப்றேவ் மொழியில் “அல்லாஹ்” என்றால் கர்வாலி மரம் என்றும், அவ்வாரே பைபிளில் யோசுவா 24:26 என்ற வசனத்தில் இடம் பெற்று உள்ளதாகவும் அறிவிக்கிறீர். ஹிப்றேவ் மொழி பைபிளில் இருப்பதாக அறிவித்து விட்டு யோசுவா 24:26 வசனங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடுகிறீர், இதற்க்கு முன்னரே ஒரு முறை பைபிளின் மூலம் உங்களிடம் இருப்பதாக அறிவித்த நீங்கள், அந்த மூலத்தில் இருந்து ஹிப்றேவ் வசனங்களை பதித்து இருக்கலாமே? ஏன் உங்களால் முடியாதா? நீங்கள் செய்ய தவறியதை உங்களுக்காக நாங்கள் செய்கிறோம். இதோ யோசுவா 24:26 ஹிப்றேவ் மூலம்: மேலே உள்ள ஹிப்றேவ் மூல பைபிளில் நீங்கள் அறிவித்த யோசுவா 24:26 வசனத்தில் வரும் வார்த்தையை “அல்லாஹ்” என்று உச்சரிபதாக அறியமுடியவில்லை, மாறாக “அலே” என்றே உச்சரிபதாக அறியமுடிகிறது. அப்படி என்றால் இதில் எதை நம்புவது? நீங்கள் சொல்வது சரியா, அல்லது ஹிப்றேவ் மூலம் சொல்வது சரியா? இந்த உச்சரிப்பு தவறு என்று வாதாட நீங்கள் முயல்வீர்கள், இந்த உச்சரிப்பை பற்றி பைபிள் அறிஞர்களும் இன்னும் நீங்கள் வழக்கமாக ஆதாரம் தேடும் விக்கிபிடியா என்ன வென்று அறிவிக்கிறது என்று பார்ப்போமா?
மேலே கொடுக்க பெற்றுள்ள ஆதாரங்கள் மூலம் நீங்கள் அறிவித்த யோசுவா 24:26 வசனத்தில் வரும் வார்த்தை “அல்லாஹ்” என்று உச்சரிக்க படுவதாக அறியமுடியவில்லை. மாறாக “அலே” என்ற உச்சரிப்பே சரி என்று சாட்சி கூறுகின்றன. சரி, திரு உமர் அவர்கள் அறிவித்த இணையதள முகவரியேனும் யோசுவா 24:26 வசனத்தில் வரும் வார்த்தை “அல்லாஹ்” என்று அறிவிக்கிறதா என்று பார்போம். திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவித்த முகவரியில் “Strong’s H427” என்ற வார்த்தைக்கு உச்சரிப்பு “al-la” என்றே அறிவிக்கிறது. ה – “He/Hey/ஹேய்” என்ற ஹிப்றேவ் எழுத்து, ஒரு வார்த்தையின் கடைசியில் அமைந்தால், அதற்க்கு ஓசை கிடையாது என்ற கிறிஸ்தவ அறிஞர்களின் விளக்கத்துக்கு மாறாக, நீங்கள் அறிவிக்கும் இணையதள உச்சரிப்பு “ல” என்று முடிவதாக அறிவிக்கிறது. இருபினும் அது நீங்கள் அறிவிக்க முயற்சிக்கும் “அல்லாஹ்” என்ற வார்த்தையின் உச்சரிப்பிலும், பொருளிலும் ஒத்து போவதாக நம்மால் விளங்கி கொள்ள முடியவில்லை. இதை “அல்லாஹ்” என்ற உச்சரிப்புடன் ஒத்துபோக வைக்க நீங்கள் மிகவும் சிரமம் எடுத்து கொண்டீர்கள் என்பது உங்கள் கட்டுரையை படிப்பது மூலம் அறிய முடிகிறது. எதற்கு இத்தனை சிரமம்? “Strong’s H421, H422, H423, H424” வரை விவரித்த நீங்கள் “H425” மற்றும் “H426” விவரித்து இருந்தால் உங்கள் முயற்சி எளிதாகி இருக்கும். திரு உமர் அவர்களே “H426” விவரிக்காமல் எதற்க்காக “H427” க்கு தாவினீர்கள் என்று விவரிக்க முடியுமா? திரு உமர் அவர்களே, இப்படி “அல்லாஹ்” என்ற வார்த்தையுடன் உச்சரிப்பிலும், பொருளிலும் ஒத்து போகாத அனைத்தையும் வெளியிட்டு விட்டு, “H426” வெளியிட மறுத்தது ஏன்? “இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலைக்கு எல்லையே இல்லை” என்று அறிவித்த நீங்கள் உங்கள் ஏமாற்று வேலை வெளிப்பட்டு விடும் என்ற பயத்தினாலா? இதோ நீங்கள் வெளியிட மறுத்ததை நாங்கள் வெளியிடுகிறோம்.
மேலே உள்ள Strong’s H426, H430 என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் “எலாஹ்” மற்றும் “எலாஹீம்” என்ற உச்சரிப்பே வருகிறது, அது மட்டும் இல்லாமல் இவற்றை அரபி மொழியில் “அல்லாஹ்” - என்றே நீங்கள் அறிவித்த இணையதளங்கள் சாட்சி கூறுகிறது. இதை தான் நாங்களும் சொன்னோம். உங்கள் இணையதளத்தில் பின்னுட்டமிட நாங்கள் எழுதிய கடிதத்தில்/கட்டுரையில் வெறும் உச்சரிப்பில் உள்ள ஒற்றுமையை மட்டும் நாங்கள் முற்படுத்தி வெளியிடவில்லை, மாறாக உச்சரிப்பிலும் அதன் பொருளிலும் ஒன்று படும் “எலொஹ்”, “அல்லாஹ்” வை ஒன்று படுத்தியே நாங்கள் கட்டுரை வரைந்தோம். இதற்க்கு மாறாக நீங்கள் உச்சரிப்பில் ஓரளவில் ஒத்து, அர்த்தத்தில் வேறுபடும் வார்த்தையை மட்டும் கண்டெடுக்க சிரமப்பட்டு, அதையும் சரிவர செய்யாமல் இப்படி கிறிஸ்தவர்களை சேர்த்தே குழப்பி கொண்டு இருக்கிறீர்கள். திரு உமர் அவர்களே, உங்கள் இணையதளத்தில் பின்னுட்டமிட நாங்கள் எழுதிய கடிதம்/கட்டுரையில், பைபிளில் 156 தடவைக்கு மேல் வரும் யா – ஹு வா எலொஹ் (Huwa eloh) – இம் (உதாரணமாக ஜெனிசிஸ் 2:7) பொருள்: "அவன் தான் எலொஹ்” என்ற வார்த்தை உச்சரிப்பிலும், பொருளிலும் குர்ஆனில் இடம் பெற்றுள்ள ஹுவல்லாஹ் (Hu wallah) – (உதாரணமாக குர்ஆன் 59:22) பொருள் : "அவன் தான் அல்லாஹ்" என்ற வார்த்தையின் பொருளிலும், உச்சரிப்பிலும் ஒத்து இருக்கிறது என்ற தெளிவான உதாரணத்தை எடுத்து வைத்து இருந்தோம். இதை அப்படியே மறைத்து விட்டு அல்லாஹ் என்று உச்சரிப்பிலும், பொருளிலும், ஒத்து போகாமல் எழுத்து வடிவத்தில் ஒத்து வரும் வார்த்தை உதாரணம் காட்டுகிறீர். உங்கள் திறமைக்கு எங்கோ இருக்கவேண்டிய நீங்கள், ஆபிரஹாமின் ஆசிர்வாதம் உங்கள் மீது இல்லாமல் போனதால், எங்களிடம் மாட்டி அவதி பட்டு கொண்டு இருக்கிறீர் என்று நினைக்கிறோம். உங்கள் வாதப்படி “எலோஹீம்” என்றால் “அல்லாஹ்” இல்லை என்றால், எதற்காக உங்கள் கிறிஸ்தவ அறிஞர்கள் செய்யும் பைபிள் அரபி மொழியாக்கம் “எலோஹீம்” என்ற பெயரை “அல்லாஹ்” என்று உச்சரிகிறார்கள்?
சரி திரு உமர் அவர்களே, உங்கள் வாதத்திற்கே வருகிறோம். உங்கள் வாத படி எலாஹ் “’Elah” என்றால் கர்வாலி மரம், ஆனால் நீங்கள் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபிடியா எலாஹ் “’Elah” என்றால் இறைவனின் இன்னொரு பெயர் என்று சாட்சி கூறுகிறது, இவற்றில் எத்தனை நம்புவது? நீங்கள் சொல்வதையா? அல்லது நீங்கள் ஆதாரம் தேடும் விக்கிபீடியா சொல்வதையா? உங்கள் வாத படி எலாஹ் “’Elah” என்றால் கர்வாலி மரம் என்று வைத்து கொண்டால் கிலே தரப்பட்டுள்ள அணைத்து பைபிள் வசனமும் கர்வாலி மரத்தை தான் குறிக்கிறது என்று எடுத்து கொள்ளலாமா? உதாரணமாக Daniel 2:23 வசனத்தின் படி, கர்வாலி மரத்தின் தந்தை என்று எடுத்துகொள்ளலாமா?
திரு உமர் அவர்களே, கிரேக்க மொழியில் “அல்லாஹ்” என்றால் “ஆனால்” என்று அர்த்தமா? கிரேக்க மொழியில் “அல்லாஹ்” என்றால் “ஆனால்” என்று அர்த்தத்தை அறிவித்து விட்டு, அதர்க்கு உதாரணமாக “Matthew 4:4” என்ற வசனத்தை அறிவிக்கிறீர். இருப்பினும் அதன் கிரேக்க மொழி மூலத்தை தராமல் மீண்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனங்களை வெளியிடுகிறீர். இதோ நீங்கள் தர தவறிய கிரேக்க மொழி வசனம்: மேலே உள்ள கிரேக்க மூலம், நீங்கள் சொல்வது போல் “அல்லாஹ்” என்று ஓசை படுவதாக நம்மால் அறியமுடியவில்லை, மாறாக “அல்” என்றே உச்சரிக்க படுவதாக அறிய படுகிறது. இன்னும் நீங்கள் அறிவித்த இணையதள முகவரியிலும், அது “அல்லாஹ்” என்று உச்சரிக்க படுவதாக நம்மால் அறியமுடியவில்லை, மாறாக “al-la” என்ற ஓசை படுவதாக அறிய படுகிறது. இது ஓசை உச்சரிப்பு, மற்றும் பொருள் ஆகிய இரண்டிலுமே மாறுபடுகிறது. இது இரண்டும் ஒரே வார்த்தைகள் என்று நிரூபிக்க நீங்கள் மிகவும் சிரம பட்டுள்ளிர்கள், அந்த நேரத்தை நீங்கள் விடை அளிக்காமல் விட்டு சென்ற பைபிள் வசனங்களை தெளிவான ஆதாரம் கொண்டு விவரிக்க முயற்சித்து இருந்தால் வாசகர்களுக்கு பயனாக அமைந்து இருக்கும். திரு உமர் அவர்களே, நாங்கள் அறிவித்த “எலாஹ்” “அல்லாஹ்” இடையே உள்ள ஒற்றுமை, இரு மொழி பெயர்களுக்கு இடையே உள்ள உச்சரிப்பு, மற்றும் அதன் பொருளில் உள்ள ஒற்றுமையை குறிப்பதாகும். மாறாக நீங்கள் அறிவிக்கும் ஒற்றுமை ஓரளவு ஓசையில் ஒத்து, பொருளில் வேறுபடும் இரு வார்த்தைகளை பற்றியதாகும். இவ்விரண்டுக்கும் உள்ள வேற்றுமையை இந்த கட்டுரை முலம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். திரு உமர் அவர்களே, பைபிளின் இறைவன் பெயர் “யேகோவா” என்று மீண்டும் மீண்டும் அறிவிக்கும் நீங்கள் அதை தெளிவான ஆதாரம் கொண்டு விளக்க ஏன் முயற்சிப்பது இல்லை? நீங்கள் பொதுவாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா நீங்கள் விரும்புவதை அறிவிக்க வில்லையா? நீங்கள் அறிவிக்கும் יהוה – Y.H.W.H ஹிப்றேவ் வார்த்தையின் உண்மையான உச்சரிப்பை அறிந்தவர் யாரேனும் உலகில் உண்டா? சரி நீங்கள் விரும்புவதை அறிவிக்கும் தெளிவான ஆதாரம் கொண்டு அறிவிப்பீர் என்று காத்திருக்கிறோம்.
திரு உமர் அவர்களே, நாங்கள் எடுத்து வைத்த பைபிள் வசனங்களுக்கு தெளிவான ஆதாரம் கொண்டு மறுப்பு தெரிவிக்க நேரம் இல்லை என்று அறிவித்து விட்டு, காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் திதாத் அவர்களின் கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்க போவதாக அறிவிக்கிறீர். ஏன் அவர் உங்களுக்கு மறுப்பு தெரிவிக்க இந்த உலகில் இல்லை என்ற தைரியத்திலா? உங்கள் ஆதாரம் இல்லாத கேள்விகளுக்கு பதில் அளிக்க இஸ்லாமிய அறிஞர்கள் தேவை இல்லை, எங்களை போன்ற இளைஞர்களே போதும். ஆனால் தன்னை கிறிஸ்தவ அறிஞராக காட்டி கொள்ள முயற்சிக்கும் உங்களை போன்ற நபர்களுக்கு நாங்கள் விடுத்து வைத்துள்ள பைபிளின் தெளிவான வசனங்களுக்கு தெளிவான ஆதாரம் கொண்டு விளக்கம் அளிக்க ஏன் இத்தனை காலதாமதம் ஆகிறது என்பதே எங்களுக்கு வியப்பாக உள்ளது. நேரடி விவாதத்தின் பொழுது இஸ்லாமியர்கள் வன்முறையை கையாள்வார்கள் என்று அபாண்டமாக பொய்யுரைத்து விட்டு, இப்பொழுது முகவரி இல்லாத நபர் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்க குர்ஆன்னை கழிவறையில் எறிந்ததாக அறிவிகிறீர். என்ன மனிதறையா நீர். உங்களுக்கு வரும் கேள்விகளுக்கு விடை அளிக்க முடியவில்லை என்றால், எந்த இழிவான செயலையும் செய்ய தயங்க மாட்டிர்கள் என்று நிருபித்துள்ளீர்கள். இதன் மூலம் இஸ்லாமியர்கள் அல்ல, கிறிஸ்தவர்கள் தான் வன்முறையை கையாள்பவர்கள் என்று உலகுக்கு சாட்சி கூறியுள்ளீர்கள். இதை காட்டிலும் கேவலமான கேள்விகள், கணவன் மனைவி உறவை விவரிக்கும் கொச்சையான வார்த்தைகள் நிறைந்த கருத்துகள், முகவரி இல்லாத உங்கள் கிறிஸ்தவர்கள் முலம் எங்கள் இணையதளத்தில் விட பட்டுள்ளது. அவற்றுக்கு எவ்வாறு கண்ணியமான முறையில் நாங்கள் பதில் அளித்து இருக்கிறோம் என்று சிறிது பாரும். ஏன் இத்தனை வருடமாக இஸ்லாமியர்களுக்கு ஏதிராக பொய் பிரசாரம் செய்யும் உங்களுக்கு முகவரி இல்லாத நபர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு கண்ணியமான முறையில் பதில் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா? அன்பை போதிபதாக சொல்லும் உங்கள் கிறிஸ்தவம் இதை உங்களுக்கு போதிக்க வில்லையா? “ஒரு கன்னத்தில் அடித்தல் மாறு கன்னத்தை காட்டு” என்று ஏசு அறிவித்ததாக பிரகண்டன படுத்திவிட்டு, இதை நடைமுறை படுத்தாமல் வன்முறையில் ஈடுபடுவதாக நீங்களே உங்கள் செயலுக்கு சாட்சி கூறுகிறீர்கள். அப்படியானால் இதை படிக்கும் சராசரி கிறிஸ்தவருக்கு வன்முறையை தானே புகட்டுகிறீர்? இதை அவனும் செய்ய துவங்கினால் உலகில் கலவரம் தானே மிஞ்சும்? இதன் வாயிலாக ஏசு வின் கொள்கையை கடைபிடிக்காத நீங்கள் ஒரு உண்மை கிறிஸ்தவர் இல்லை என்று நீங்களே சாட்சி கூறுகிறீர்கள் தானே? இப்படி இழிவான செயலை நீங்கள் செய்த பிறகும், எவ்வாறு இஸ்லாமியர்கள் அவர்களின் எதிர்ப்பை கண்ணியமான முறையில் வெளிபடுத்துகிறார்கள் என்று பாரும். இது ஒன்றே போதும் இஸ்லாமின் மேன்மையை உலகுக்கு அறிவிக்க, இன்னும் அன்பை போதிக்கும் கிறிஸ்தவம்?? என்ற முகத்திரையை கிழிக்க. ஈஸா (அலை) அறிவித்தது போல சராசரி இஸ்லாமியன் கூட கண்ணியத்தை காக்கிறார்கள் (good fruit), ஆனால் கிறிஸ்தவ அறிஞர் என்ற போர்வையில் உலாவும் திரு உமர் போன்ற போலி கிறிஸ்தவர்கள் வன்முறையை கையாள்கிறார்கள் (bad fruit). Matthew 7:18 A good tree is not able to bear bad fruit, nor a bad tree to bear good fruit. 7:19 Every tree that does not bear good fruit is cut down and thrown into the fire. 7:20 So then, you will recognize them by their fruit. திரு உமர் அவர்கள் ஒரு முகவரி இல்லாத நபர் கேட்ட கேள்விக்க இவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டதாக அறிவிக்கிறார், அப்படியானால் இது வரை இஸ்லாமியர்களுக்கு ஏதிராக ஆதாரம் இல்லாமல் இவர் மொழிந்த இழிவான வார்த்தைகளுக்கு நாம் என்ன செய்தால் தகும் என்று அவரே அறிவிக்கடும்.
இப்பொழுது இதை காட்டிலும் கேவலமான செயலாக, குர்ஆன்னை கழிவறையில் இட்டு புகை படத்தை வெளியிட்டு இருக்கிறார், இதன் மூலமே திரு உமர் அவர்கள் எப்படி ஒரு கேவலமான மனிதர் என்பதை அவரே உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். திரு உமர் அவர்களே, இஸ்லாமியர்கள் வன்முறையை கையாள்பவர்கள் என்று அறிவித்து விட்டு அவர்களுக்கே “எச்சரிக்கை... எச்சரிக்கை...” என்று பதில் அளிக்கிறீர், உங்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் பயப்பட வேண்டும் என்ற தோரணையில் விளக்கம் அளிக்கிறீர், உங்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை "முட்டிக்கு முட்டி தட்டி வழிக்கு கொண்டு வருவதாக" அறிவிக்கிறீர், இன்னும் அவர்களை "முளையிலே கில்லி எறிந்ததாக" அறிவிக்கிறீர், அப்படி என்றால் யார் வன்முறையை கையாள்வது? நீங்கள் தானே? அப்படியானால் ஏசு வின் கொள்கையான “ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கண்ணத்தை காட்டு” என்பதை தவறாமல் கடை பிடிபவர்கள் நாங்கள் தானே? கேள்வி கேட்பவர்கள் பயப்பட வேண்டும் என்று அறிவிப்பது தான் அன்பை போதிக்கும் முறையா? "வரம்பு மீரியவர் நான் அல்ல" என்று கருத்தை அறிவிக்கும் திரு உமர் அவர்கள், இஸ்லாமிய இறைவன் மீதும் அவர்கள் நம்பிக்கை மீதும் எவ்வளவு வரம்பு மீரியிருக்கிறார் என்று அவர் கட்டுரைகளை படித்தாலே பொதும். "இஸ்லாமியர்களின் அன்னையை வைபட்டி" என்பதும் இஸ்லாமியர்களின் "இறைவனை பெண்களைகூட்டிகொடுக்கின்ற இறைவன்" என்று பழிப்பதும் வரம்பு மீறிய செயல்கள் இல்லையா? இதற்க்கு இஸ்லாமியர்கள் வரம்பு மீறி உங்களை போல் புகை படத்தை வெளியிட்டார்களா? இஸ்லாமியர்களை பயப்பட சொல்லி எச்சரிக்கும் நீங்கள் ஏன் நேரடி விவாதத்திற்கு வர தைரியம் இல்லாமல், பூனை பெயரில், திரை மறைவில் ஒரு குழுவாக சேர்ந்து அவதூறு பரப்புகிறீர்? உங்களுக்கு தைரியம் இருந்தால், உங்கள் இறைவனின் மீது நம்பிக்கை இருந்தால் நேரடி விவாதத்திற்கு வரலாமே, உங்களை யார் தடுப்பது? அப்படி என்றால் ஒளியை பகைபவர் நீங்கள் தானே? சிறிதும் யோசிக்காமல் இப்படி கேவலமாக புகைப்படத்தை வெளியிடும் நீங்கள், இவ்வாறு நாங்கள் பைபிள்ளை செய்யமாட்டோம் என்ற நம்பிக்கையில் தானே வெளியிடுகிறீர். அப்படியானால் அதுவே இஸ்லாமியர்களின் மேன்மைக்கு கிடைத்த வெற்றி தானே? இதை அறிவித்த உடன் நிங்களே பைபிள்ளை கழிவறையில் எரிந்து, அதை புகை படம் எடுத்து, அதை முகவரி இல்லாத இஸ்லாமியன் வெளியிட்டான் போன்ற பாவனை செய்யாதீர்கள், வாசகர்கள் இதை நம்ப தயாராக இல்லை. திரு உமர் அவர்களே, காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் திதாத் அவர்களுடன் நேரடி விவாதம் செய்ய உங்களுடைய கிறிஸ்தவ அறிஞர்கள் அஞ்சி ஓடி ஒளிந்ததையும், உங்களுடைய மார்க் அறிஞர் திரு போப் உட்பட அனைவரும் நேரடி விவாதத்திற்கு உங்களை போல் பயந்து மறுப்பு தெரிவித்ததையும் நீங்கள் மறந்து விட்டிர்களா? இப்பொழுது ஒன்று நன்றாக விலங்குகிறது திரு உமர் அவர்களே, இப்படி காலதாமத படுத்தி தலைப்பை மாற்றி கட்டுரைகளை வரைவது நேரடி விவாதத்தில் இயலாது என்ற காரணத்தினாலே, நீங்கள் அதர்க்கு வர மருகிறீர்கள், சரிதானே? எழுத்து விவாதம் என்ற பெயரில், எப்படி வேண்டும்மேன்றலும் திரை மறைவில் இருந்து கொண்டு முதுகில் குத்தலாம் என்ற எண்ணத்தில், காலம் தாழ்த்தி, வாசகர்கள் பொன்னான நேரத்தை வீன் அடித்துக்கொண்டு இருக்கிறீர். நாங்கள் முன்னமே எழுத்து விவாதத்திற்கு தெளிவான விட்டுப்பு வைத்து விட்டோம், அதை ஏற்பதாக இருந்தால் பகிரங்கமாக அறிவித்து விட்டு கட்டுரை வரைய துவங்குங்களேன். ஏன் நீங்கள் முன்னமே அறிவித்த கருத்துகளுக்கு தெளிவான ஆதாரமும் உங்களிடம் இல்லையா?
திரு உமர் அவர்கள், “அல்லேலூயா” என்ற இந்த ஒத்தை ஹிப்றேவ் மொழி வார்த்தையை விளக்கம் அளிக்க, இன்னும் தெளிவான ஆதாரம் கொண்டு கட்டுரை வரைய போவதாக அறிவித்து இருபதானால், இந்த தலைப்பையே அவர் எழுத்து விவாதத்திர்க்கு ஏற்று கொண்டாரோ என்று எண்ணி, அவர் முன்னமே அளித்த "அல்லேலூயா” என்ற வார்த்தையின் விளக்கமான "யேகோவா தேவனை துதித்தல்” என்பதை தெளிவான ஆதாரம் கொண்டு நிரூபிப்பார் என்று நம்புவோமாக. நாம் முன்னமே “அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 2” என்ற கட்டுரையில் அறிவித்தது போல் திரு உமர் அவர்கள் காலம் தாழ்தாமல், தலைப்பை மாற்றாமல், தெளிவான ஆதாரம் கொண்டு எதிர்வாதம் செய்வார் என்ற நம்புவோம். இந்த தலைப்பை ஒற்றி அவர் எழுதவிருக்கும் கட்டுரையில், அவர் சரி வர விளக்கம் அளிக்க தவறினால், இந்த தலைப்பில் தோல்வியுற்றால்,இனி கனவிலும் இஸ்லாமியர்களை பழிக்க, திரு உமர் அவர்களும், திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும், முயற்சிப்பது இல்லை என்ற உறுதி மொழியோடு கட்டுரை வரைய துவங்குவார் என்று நம்புவோம். அப்படி அவர் வரைய இருக்கும் கட்டுரையை எதிர் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் கிருபையை நாடியவர்களாக நாங்கள் காத்து இருக்கிறோம்... அஸ்ஸலாமு அழைக்கும் , ஜியா & அப்சர் |
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)
Sunday, February 13, 2011
அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 3
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
assalamu alaikum,
dr brother ur answers always with proof, alhamthulillah,i like ur way of answer,i pray to allah for continuing ur valuable dawah,.
kader
Post a Comment