பிஸ்மில்லா
ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
“பண்டைய திரு குர்ஆன் கையெழுத்து பிரதிகளும் - க்யூபிக் எழுத்து
வடிவமும்”
வாசகர்களே, பண்டைய காலத்து திரு குர்ஆன்
கையெழுத்து பிரதிகள் உலகில் உள்ள பல புகழ் பெற்ற அருங்காட்சியகத்தில் பாதுகாக்க
பெற்று வருகின்றனா. 
உதாரணமாக:
- The “Qur'ān Of ʿUthmān” At The Topkapi Museum, Istanbul, Turkey.
 - The “Qur'ān Of ʿUthmān” At The Türk ve İslam Eserleri Müzesi (Turkish and Islamic Art Museum), Istanbul, Turkey.
 - The “Qur'ān Of ʿUthmān” At Tashkent (Samarqand), Uzbekistan.
 - The “Qur'ān Of ʿUthmān” At St. Petersburg (Russia), Katta Langar, Bukhārā And Tashkent (Uzbekistan).
 - The “Qur'ān Of ʿUthmān” At The Al-Hussein Mosque, Cairo, Egypt.
 - The “Qur'ān Of ʿUthmān” At The Egyptian National Library (Dār Al-Kutub Al-Misrīyya), Cairo, Egypt.
 
கிறிஸ்தவ அறிஞர்கள் (நமது நண்பர் திரு உமர் அவர்கள் உட்பட), புகழ் பெற்ற அருங்காட்சியகங்களில் பாதுகாக்க
பெற்று வரும் பழங்கால “திரு குர்ஆன் பிரதிகள் அனைத்தும் கி.பி. 750 ஆம் ஆண்டுக்கு பிறகே இயற்ற பெற்றது”,
என்ற போலியான வாதத்தை வாசகர்களிடையே பரப்பி வருகிறார்கள். 
இந்த தலைப்பில் எழுத்து விவாதம் புரிய கையெழுத்து ஒப்பந்தத்தை வெளியிடுமாறு நாம் இதற்கு முன்னரே தெளிவான அழைப்பு விடுத்த போதிலும், அதை ஏற்க திரு உமர் அவர்கள் இன்றளவும் முன் வந்ததாக நம்மால் அறிய முடியவில்லை. இன்னும் பைபிள் நூலின் முழுமையான புராதான கையெழுத்து பிரதி ஏதேனும் இருப்பின், அதனை ஆய்வுக்காக கோடிடுமாறு நாம் வேண்டுதல் விடுத்து இருந்தோம். அவற்றுக்கும், இன்றளவில் எந்த தெளிவான ஆதாரமும் திரு உமர் அவர்களிடம் இருந்து வெளிவந்ததாக நம்மால் அறிய முடியவில்லை. இருப்பினும், கிறிஸ்தவர்களின் இந்த போலியான வாதத்தில், இன்னும் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்திற்கு அடித்தளம் என்ன என்பதை எல்லாம் வல்ல இறைவன் கிருபையை நாடியவர்களாக இந்த கட்டுரை முலம் ஆராய முனைவோம்.
இந்த தலைப்பில் எழுத்து விவாதம் புரிய கையெழுத்து ஒப்பந்தத்தை வெளியிடுமாறு நாம் இதற்கு முன்னரே தெளிவான அழைப்பு விடுத்த போதிலும், அதை ஏற்க திரு உமர் அவர்கள் இன்றளவும் முன் வந்ததாக நம்மால் அறிய முடியவில்லை. இன்னும் பைபிள் நூலின் முழுமையான புராதான கையெழுத்து பிரதி ஏதேனும் இருப்பின், அதனை ஆய்வுக்காக கோடிடுமாறு நாம் வேண்டுதல் விடுத்து இருந்தோம். அவற்றுக்கும், இன்றளவில் எந்த தெளிவான ஆதாரமும் திரு உமர் அவர்களிடம் இருந்து வெளிவந்ததாக நம்மால் அறிய முடியவில்லை. இருப்பினும், கிறிஸ்தவர்களின் இந்த போலியான வாதத்தில், இன்னும் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்திற்கு அடித்தளம் என்ன என்பதை எல்லாம் வல்ல இறைவன் கிருபையை நாடியவர்களாக இந்த கட்டுரை முலம் ஆராய முனைவோம்.
வாசகர்களே, பழமை வாய்ந்த திரு குர்ஆன் பிரதிகளை
விமர்சிக்கும் வண்ணம், கிறிஸ்தவர்கள் இணையதளங்களில் பல கட்டுரைகளை வெளியிட்டு
இருக்கிறார்கள். உதாரணமாக நமது நண்பர், திரு உமர் அவர்கள் மொழிபெயர்த்து சமீபமாக வெளியிட்ட
“பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்ஆன் இன்று உலகில் உண்டா?” என்ற கட்டுரை. 
அந்த கட்டுரையில், திரு உமர் அவர்கள்
வெளியிட்ட கருத்து:
இரண்டு
  பழங்கால குர்ஆன் பிரதிகளின் ஒரு பகுதி இரண்டு இடங்களில் உள்ளது. தாஸ்கண்ட் என்ற
  இடத்தில் சமர்கண்ட் (Samarqand MSS) என்ற குர்ஆன் கையெழுத்துப் பிரதி உள்ளது. இன்னொரு குர்ஆன்
  கையெழுத்துப் பிரதி இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள தாப்காபி (Topkapi) அருங்காட்சியகத்தில் உள்ளது.
  பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு கையெழுத்துப்
  பிரதிகளும் "க்யூபிக் (Kufic)" என்ற எழுத்தில்
  எழுதப்பட்டவைகளாகும். இந்த கையெழுத்து பிரதிகள் முஹம்மது மரித்த பிறகு 200 ஆண்டுகளுக்கு
  பின்பாக எழுதப்பட்டவைகள் என்று இஸ்லாமிய பண்டிதர்கள் கணக்கிட்டுள்ளனர். ஒரு
  வேளை இந்த இரு பிரதிகளும் அக்காலத்திற்கு முன்பு எழுதப்பட்டு இருந்தால், அவை இரண்டும் "மைல் (Ma'il)" அல்லது "மஸ்க் (Mashq)" என்ற எழுத்துக்களில் எழுதப்பட்டு
  இருந்திருக்கும். ஜான் கிள்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்ஆன்"
  என்ற புத்தகத்தில் இதே முடிவுரையை கூறியுள்ளார் (John Gilchrist,
  Jam' Al-Qur'an, Jesus to the Muslims, 1989) 
 | 
 
மேலே கோடிடபட்ட திரு உமர் அவர்களின்
கருத்தில், தெளிவாகுவது என்னவென்றால்:
- இரண்டு பழமை வாய்ந்த திரு குர்ஆன் பிரதிகள் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன.
 - அவை “க்யூபிக் (kufic)” எழுத்து வடிவில் எழுத பெற்று இருக்கிறது.
 - இது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மரணித்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகே இயற்ற பெற்று இருக்கும்.
 - இதற்கு முன்னர் இயற்ற பெற்று இருந்தால், அவை "மைல் (Ma'il)" அல்லது "மஸ்க் (Mashq)" என்ற எழுத்து வடிவில் இயற்ற பெற்று இருக்கும்.
 - இந்த விவரங்களை அறிவித்த நபர் திரு ஜான் கில்க்ரிஸ்ட்.
 
திரு உமர் அவர்களே, மேலே நீங்கள் கோடிட்ட விவரங்களை
அளித்த நபர் திரு ஜான் கில்க்ரிஸ்ட் என்று அறிவிக்கிறீர்கள். அவர் யார்?
தொல்பொருள் ஆய்வாளரா? அல்லது அரபிக் எழுத்து வடிவ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம்
பெற்றவாரா? 
இது இரண்டும் இல்லை, அவர் இஸ்லாமிய பேச்சாளாரான காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்களை நேரடி விவாதத்தில், நேருக்கு நேர் சந்திக்க துணிவில்லாமல், அவரிடம் நேரடி விவாதத்தில் தோற்று புறமுதுகிட்டு ஓடிய கிறிஸ்தவ பேச்சாளரான திரு ஜான் மெக்டோவேலுடன் இணைந்து கொண்டு பின்னாளில், காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்கள் முதுகில் குத்தும் முயற்சியாக, கையேடுகளை அச்சடித்து வெளியிட்டவர்.
இது இரண்டும் இல்லை, அவர் இஸ்லாமிய பேச்சாளாரான காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்களை நேரடி விவாதத்தில், நேருக்கு நேர் சந்திக்க துணிவில்லாமல், அவரிடம் நேரடி விவாதத்தில் தோற்று புறமுதுகிட்டு ஓடிய கிறிஸ்தவ பேச்சாளரான திரு ஜான் மெக்டோவேலுடன் இணைந்து கொண்டு பின்னாளில், காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்கள் முதுகில் குத்தும் முயற்சியாக, கையேடுகளை அச்சடித்து வெளியிட்டவர்.
திரு உமர் அவர்களே, இதற்கு முன்னர் “ஜியா/அப்சருக்கு
பதில்: உஸ்மானின் முழு குர்ஆன் உயிரோடு உள்ளதா?” என்ற கட்டுரையில் “பிபிசி நிருபர்,
பிறவி கிறிஸ்தவர், வெளியிட்ட கட்டுரையை ஏற்க கூடாது” என்பது போன்ற கருத்தை
வெளியிட்ட நீங்கள், “ஒரு கிறிஸ்தவ எழுத்தாளர், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெளியிட்ட
கருத்துகளை ஏற்க வேண்டும்” என்று வேண்டுவது வேடிக்கையான விஷயம் தானே???
சரி, உங்கள் வாதத்திற்கே வருகிறோம்,
அருங்காட்சியகங்களில் பாதுகாக்க பெற்று வரும் பண்டைய திரு குர்ஆன் கையெழுத்து
பிரதிகள், கி.பி. 750 ஆம் ஆண்டுக்கு பிந்தையது என்ற உங்கள்
வாதத்திற்கு, நீங்கள் முன் வைக்க விரும்பும் ஒரே காரணம், அவை “க்யூபிக் (kufic)” எழுத்து வடிவில் இயற்ற பெற்று
இருப்பதனால், இன்னும் “க்யூபிக் (kufic)” எழுத்து வடிவம் கி.பி. 8 ஆம்
நூற்றாண்டிற்க்கு உரியது போன்ற கருத்தினை, நீங்கள் திரு குர்ஆன் அறிஞர் என்று அறிவிக்கும், காலம் சென்ற
திரு மார்டின் லிங்க்ஸ் (Martin Lings, also known
as Abu Bakr Siraj Ad-Din, January 24, 1909 – May 12, 2005) மற்றும் காலம் சென்ற திரு யாசின்
ஹமித் ஸபாதி (YASIN HAMID SAFADI. 1934–2006) போன்றவர்கள் அறிவித்ததாக நம்பப் படுவதனால். 
வாசகர்களே, திரு உமர் அவர்களால் இஸ்லாமிய அறிஞர்களாக கோடிடப்பட்ட நபர்கள்,
கிறிஸ்தவர்கள் அறிவிப்பது போல் அறிவித்தார்களா என்பதனை இந்த கட்டுரையில் காண
போகிறோம். அதற்கு முன்னர், “க்யூபிக் (kufic)” எழுத்து வடிவில் இயற்றபெற்ற ஒரே காரணத்தினால், திரு குர்ஆன் பிரதிகளை கி.பி. 8 ஆம் நூற்றாண்டிற்க்கு உரியது என்று கிறிஸ்தவர்கள் அறிவிப்பதினால், அந்த “க்யூபிக் (kufic)” எழுத்து வடிவத்தின் பின்னணியை சிறிது பார்போம்.
கைரோ
  அருங்காட்சியகத்தில் பாதுகாக பெற்று வரும் ஏழாம் நூற்றாண்டு “க்யூபிக் (kufic)”
  எழுத்து வடிவ கல்வெட்டு.  
Date      -    Jumada II, 31 AH / January -
  February, 652 CE. 
Size      -    38 cm x 71 cm. 
Script     -    Written in Kufic
  script 
Contents  - 
The translation of the inscription is: 
In the name of Allāh, the Merciful, the
  Compassionate; this tomb belongs to ‘Abd al-Rahmān Ibn Khair al-Hajrī. O
  Allāh, forgive him and make him enter into Thy mercy and make us go
  with him. (passer by) When reading this inscription ask pardon for him (the
  deceased) and say amīn! This inscription was written in Jumada II of the year one and thirty. 
Location  -    Cairo Museum of
  Arab Art, Cairo. 
 | 
 
“க்யூபிக் (kufic)”
எழுத்து வடிவின் பெயர், ஈராக் நாட்டின் க்யூபா (Kufa) நகரின் பெயரை தழுவி இருந்த போதிலும், அது
க்யூபா (Kufa) நகரம் தோற்றுவிப்பதற்க்கு ஏறத்தாள நூறு
ஆண்டுகள் முன்னரே புழக்கத்தில் இருந்தது என்று திரு உமர் அவர்கள் வழக்கமாக ஆதாரம்
தேடும் விக்கிபீடியா அறிவிக்கிறது. 
பார்க்க: 
Kufic is the oldest calligraphic form of the various Arabic scripts and consists of a modified form of the
  old Nabataean script.
  Its name is derived from the city of Kufa, Iraq, although it was known in
  Mesopotamia at least 100 years before the foundation of Kufa. At
  the time of the emergence of Islam,
  this type of script was already in use in various parts of the Arabian Peninsula. It
  was in this script that the first copies of the Qur'an were written. 
 | 
 
Kufa (Arabic,الكوفة
  al-Kūfah) is a city in Iraq,  The city
  was the final capital of ʿAlī ibn Abī Ṭālib, and was founded within the first hundred
  years of the 622 Hijra[citation
  needed]. 
The city contains the
  Great Mosque of Kufa, one of the earliest mosques in Islam, built in
  the 7th century. 
 | 
 
ஈராக் நாட்டின் க்யூபா (Kufa) நகரம் 622 C.E. (ஹிஜ்ரி) ஆண்டிற்கு பின்னர், அடுத்த நூற்றண்டுக்குள்
நிறுவ பெற்றது என்று விக்கிபீடியா அறிவிக்கிறது. “க்யூபிக் (kufic)” எழுத்து வடிவம், இதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே புழக்கத்தில் இருந்தது
என்று விக்கிபீடியா அறிவித்த ஆதாரத்தின் அடிப்படையில், “க்யூபிக் (kufic)” எழுத்து வடிவம் 622 C.E (ஹிஜ்ரி) ஆண்டிற்கு முன்னரே புழக்கத்தில்
இருந்தது என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இந்த விவரத்தை உறுதி
செய்யும் இன்னும் சில தெளிவான ஆதாரங்கள்...
The Arabic script [khatt] is
  the one which is now known as Kufic. From it evolved all the present pens. 
Ref: Abi al-‘Abbas Ahmad al-Qalqashandi, Kitab Subh al-A‘sha, 1914,
  Volume III, Dar al-Kutub al-Khadiwiyyah: Al-Qahirah, p. 15. 
 | 
 
The origin of Kufic or the
  angular style of Arabic script is traced back to about one hundred years
  before the foundation of Kufah (17H / 638CE) to which town it owes its
  name because of its development there 
Ref: S. M. Imamuddin, Arabic Writing And Arab Libraries, 1983, Ta-Ha
  Publishers Ltd.: London, p. 12. 
 | 
 
Although the script [i.e.,
  Kufic] itself,.... was known in Mesopotamia at least 100 years before the foundation of Kufa, we may conjecture that it
  received its name from the town in which it was first put to official use... 
Ref: B. Moritz, "Arabic Writing", Encyclopaedia Of Islam (Old
  Edition), 1913, E. J. Brill Publishers, Leyden & Luzac & Co.: London, p. 387. 
 | 
 
The Arabs usually distinguish four types of
  pre-Islamic script: al-Hiri (from Hira), al-Anbari (from Anbar), al-Maqqi
  (from Mecca) and al-Madani (from Medina). The famous author of Fihrist,
  Ibn Nadim (died c. 390/999) was the first to
  use the word 'kufic', deriving it from the hiri script. However, Kufic script
  cannot have originated in Kufa, since that city was founded in 17/638, and the Kufic script is known to have existed before that date, but
  this great intellectual centre did enable calligraphy to be developed and
  perfected aesthetically from the pre-Islamic scripts. 
Ref: A. Khatibi & M. Sijelmassi, The Splendor Of Islamic Calligraphy, 1994, Thames and
  Hudson, pp. 96-97. 
 | 
 
... Kufah and Basrah did not start
  their careers as Muslim cities until the second decade of Islam. But these cities
  were located closer to Anbar and Hirah in Irak, Kufah being but a few miles
  south ofHirah. We have already seen the major role the two earlier cities
  played in the evolution of Arabic writing, and it is but natural to expect
  them to have developed a characteristic script to which the newer cities of
  Kufah and Basrah fell heir, so that for Kufic and Basran script one is
  tempted to substitute Anbaran and Hiran ... our study so far shows that the
  script of Hirah must have been the leading script in the 6th century and as such must have influenced all later scripts, including
  the Makkan - Madinan. 
Ref: N. Abbott, The Rise Of The North Arabic Script And Its Kur'anic
  Development, 1939, op. cit., p. 17. 
 | 
 
மேலே தொடுக்க பெற்ற தெளிவான ஆதாரங்கள் வாயிலாக,
“க்யூபிக் (kufic)” கையெழுத்து வடிவம், கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்க்கு முந்தையது என்பது
தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். 
“க்யூபிக் (kufic)”
கையெழுத்து வடிவம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்க்கு முந்தையது என்பது
தெளிவான போதிலும், இஸ்லாமிய அறிஞ்ர்கள் அறிவித்ததாக கிறிஸ்தவர்கள் அறிவிக்கும்:
“க்யூபிக் (kufic)” எழுத்து வடிவம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டிற்க்கு உரியது போன்ற கருத்தினை, திரு குர்ஆன் அறிஞர், காலம் சென்ற திரு மார்டின் லிங்க்ஸ் (Martin Lings, also known as Abu Bakr Siraj Ad-Din, January 24, 1909 – May 12, 2005) மற்றும் காலம் சென்ற திரு யாசின் ஹமித் ஸபாதி (YASIN HAMID SAFADI. 1934–2006) போன்றவர்கள் அறிவித்தார்கள்.
என்ற விவரம் நமக்கு வியப்பை தருகிறது. இதை
போன்று அவர்கள் அறிவித்து இருப்பார்களா?
முதலாவதாக காலம் சென்ற திரு யாசின் ஹமித் ஸபாதி
(YASIN HAMID SAFADI. 1934–2006) அவர்கள் “க்யூபிக் (kufic)” கையெழுத்து வடிவம் பின்னணி பற்றி
இவ்வாறு அறிவிக்கிறார்:
Concerning the the Kufic
  script, Yasin Safadi says: 
The Kufic script, which reached
  perfection in the second half of the eighth century, attained a pre-eminence
  which endured for more than three hundred years .... 
Ref: Y. H. Safadi, Islamic Calligraphy, 1979, Shambhala Publications,
  Inc.: Boulder (Colorado), p. 11. 
 | 
 
அதாவது, “க்யூபிக் (kufic)” கையெழுத்து வடிவம், கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் முழுமை
பெற்ற போதிலும், அந்த எழுத்து வடிவம், அதற்கு முண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர்
இருந்தே, முக்கியத்துவம் பெற்று புழக்கத்தில் இருந்தது என்று தெளிவாக அறிவிக்கிறார்.
சரி, காலம் சென்ற திரு மார்டின் லிங்க்ஸ் (Martin
Lings, also known
as Abu Bakr Siraj Ad-Din, January 24, 1909 – May 12, 2005) அவர்கள் அறிவித்ததை பார்போம்: 
In the chapter "Kufic
  Calligraphy" Martin Lings says: 
The first calligraphic
  perfection of Islam is to be found in the monumental script which may be said
  to have reached its fullness in the last half of the second century AH which
  ended in 815 AD. 
Ref: M. Lings, The Quranic Art Of Calligraphy And Illumination, 1976,
  World of Islam Festival Trust, p. 16. 
 | 
 
காலம் சென்ற திரு மார்டின் லிங்க்ஸ் அவர்களும்,
திரு யாசின் ஹமித் ஸபாதி அவர்களின் கருத்துக்கு ஒத்த கருத்தையே அறிவிக்கிறார்.
அதாவது, “க்யூபிக் (kufic)” கையெழுத்து வடிவம், கி.பி. 8 ஆம்
நூற்றாண்டின் கடைசி பகுதியில் முழுமை பெற்றது என்று.  “க்யூபிக் (kufic)” கையெழுத்து வடிவம், கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முழுமை பெற்ற போதிலும், அதன் துவக்கம் வெகு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே வந்துள்ளது. 
இதன் அடிப்படையில், “க்யூபிக் (kufic)” கையெழுத்து வடிவம், கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் முழுமை பெற்ற போதிலும், அது ஏறத்தாள முண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே முக்கியத்துவம் பெற்று புழக்கத்தில்
இருந்தது என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இந்த எழுத்து வடிவில்
இயற்ற பெற்ற ஒரே காரணத்தை முன் வைத்து, திரு குர்ஆன் புராதான கையெழுத்து பிரதிகள்,
கி.பி. 750 ஆம் ஆண்டுக்கு பிந்தையது என்ற கிறிஸ்தவர்கள்
வெளியிடும் கருத்து மிகவும் தவறானது என்பது வாசகர்களுக்கு தெளிவாகி இருக்கும்
என்று நம்புகிறோம்....  
முடிவுரை:
மேலே தொடுக்க பெற்ற தெளிவான ஆதாரங்கள்
அடிப்படையில், அருங்காட்சியகங்களில் பாதுகாக பெற்று வரும் பண்டைய திரு குர்ஆன்
கையெழுத்து பிரதிகள், கி.பி. 750 ஆம் ஆண்டுக்கு பிந்தையது என்ற கிறிஸ்தவர்களின்
கருத்து, பொய்யானது என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இன்னும், இந்த
திரு குர்ஆன் பிரதிகள் அமைந்து இருக்கும் “க்யூபிக் (kufic)” எழுத்து வடிவம், ஏறத்தாள கி.பி. 8 ஆம் நூற்றாண்டிற்கு, முண்ணூறு
ஆண்டுகள் முன்னர் இருந்தே புழக்கத்தில் இருந்தது என்பதும் தெளிவாகி இருக்கும் என்று
நம்புகிறோம்.
"Never
  spread false rumors. Don't join forces with wicked people by giving false
  testimony. (Exodus 23:1) 
 | 
 
திரு உமர் அவர்களிடம், இந்த பழமை
வாய்ந்த திரு குர்ஆன் கையெழுத்து பிரதிகள், கி.பி. 750 ஆம் ஆண்டுக்கு பிந்தையது என்பதனை உறுதி
செய்யும், வேறு ஏதேனும் தெளிவான ஆதாரம் இருக்குமெனில், அதை முறையான எதிர்
கட்டுரையில், விரைவில் கையெழுத்து ஒப்பந்தத்தோடு வெளியிடுவார் என்ற நம்பிக்கையில்
தற்காலிகமாக விடை பெறுகிறோம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர் 


No comments:
Post a Comment