Wednesday, April 6, 2011

திரு உமர் அவர்களின் “டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1” என்ற கட்டுரைக்கு மறுப்பு



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



திரு உமர் அவர்களின் டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1என்ற கட்டுரைக்கு மறுப்பு:


அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்கள், டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அந்த கட்டுரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மேடையில் இவ்வாறு விவரித்த இருந்ததாக அறிவித்து இருந்தார்: யோவான் 1:1ல் தேவன் God என்ற வார்த்தை இரண்டுமுறை வருகிறது. முதல் முறை "தேவன்" என்ற வார்த்தை வரும் போது, அதன் கிரேக்க வார்த்தை "Hotheos" என்பதாகும். இதன் பொருள் "the God"என்பதாகும். (i.e. And the Word was with God) இதே வசனத்தில் இரண்டாவது முறை தேவன் - God என்று வருகிறது, அதன் கிரேக்க வார்த்தை "Tontheos" என்பதாகும். இதன் பொருள் "a god"என்பதாகும். ( i.e. "and the word was god.").


திரு உமர் அவர்களின் கட்டுரையில், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அறிவித்த கருத்து தவறு என்பதை விவரிக்கும் வண்ணம் இவ்வாறு விவரித்து இருந்தார்கள்: டாக்டர் நாயக் அவர்கள் சொல்வது போல, யோவான் 1:1ல் முதல் முதலில் "God" என்பதின் கிரேக்க வார்த்தை "Hotheos" இல்லை, அது "TON THEON" என்பதாகும். இரண்டாம் முறை "Tontheos" என்ற வார்த்தை வருகிறது என்றுச் சொல்கிறார். ஆனால், உண்மையில் இரண்டாம் முறை வரும் வார்த்தை "THEOS" என்பதாகும். டாக்டர் நாயக் சொன்னது மறுபடியும் தவறு.


திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில் இந்த கருத்தை அறிவிக்க பல ஆய்வுகளை செய்ததாக அறிவித்து இருந்தார். திரு உமர் அவர்களே, இப்படி பல ஆய்வுகளுக்கு பிறகு நீங்கள் வெளியிட்ட கிரேக்க மூலம் எந்த பைபிள் பிழைதிருத்தத்திற்கு(revision) உரியது என்று அறிவிக்க முடியுமா? நீங்கள் வெளியிட்டது Textus Receptusகிரேக்க மூலத்தின் பிழைதிருத்தமாக 1633 ஆம் ஆண்டு வெளி வந்தது தானே? அல்லது வேறு கிரேக்க மூலத்தில் இருந்து எடுத்து வெளியிட்டு இருந்தீர்களா?


திரு உமர் அவர்களே, இந்த தருணத்தில் உங்களிடம் நாங்கள் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறோம், நீங்கள் பொதுவாக ஆதாரம் தேடும் King James Version பைபிள் Textus Receptusகிரேக்க மூலத்தின் ஆங்கில மொழியாக்கம் என்று பறைசாற்றுகிறது. திரு உமர் அவர்களே, 1611 ஆம் ஆண்டே வெளிவந்த King James Version பைபிளுக்கு, அதற்கு பின் 1633 ஆம் ஆண்டு வெளிவர இருக்கும் Textus Receptusகிரேக்க மூலத்தை, மொழியாக்கம் செய்ய எவ்வாறு சாத்தியம் ஆயிற்று என்பதை தெளிவான ஆதாரம் கொண்டு எங்களுக்கு விளக்க முடியுமா?


திரு உமர் அவர்களே, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கோடிட்ட கிரேக்க பைபிள் வசனம் தவறு என்று அறிவிக்கிறீர்கள், ஆனால் பைபிளின் John 1:1 வசனத்தின் ஒன்றுக்கு மேலான கிரேக்க மூலம் இணையதளங்களில் காண முடிகிறது, இவற்றில் எது சரியானது என்று எங்களுக்கு கண்டு அறிவிக்க முடியுமா? இந்த வசனங்களுக்கு எத்தனை விதமான கிரேக்க மூலம் உள்ளது என்று எங்களுக்கு கண்டு அறிவிக்க முடியுமா?










திரு உமர் அவர்களே, பொதுவாக இவ்வாறு வரும் கிரேக்கம் அல்லாத ஹிப்ரேவ் வசனங்களுக்கு நீங்கள் blueletterbible உதவி கொண்டு தானே ஆதாரம் தருவீர்கள், உங்கள் blueletterbible ளில் நீங்கள் அறிவிக்கும் "TON THEON" என்ற வார்த்தைக்கு என்ன விளக்கம் தரப்பட்டுள்ளது என்று விவரிக்க முடியுமா? குறைந்த பட்சம் "TON THEON" என்ற வார்த்தை blueletterbible பைபிளில் விவரிக்க பட்டுள்ளதா என்பதை கண்டு எங்களுக்கு அறிவிக்க முடியுமா?


திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிக்கும் "TON THEON" என்ற வார்த்தையை blueletterbible பைபிளில் எங்களால் கண்டு பிடிக்க முறியவில்லை. இதற்கு மாறாக blueletterbible பைபிள் Ho Theosஎன்பதே சரியான உச்சரிப்பு என்று சான்று அளிக்கிறது. திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிக்கும் "TON THEON" என்பது இருவார்த்தைகளின் கூடமைப்பு ஆகும் "TON + THEON.


திரு உமர் அவர்களே நீங்கள் வழக்கமாக ஆதாரம் தேடும் blueletterbible லின் விளக்கத்தின் அடிப்படையில், "TONஎன்ற வார்த்தையின் சரியான உச்சரிப்பு Ho” – “Strongs G3588 (ref:http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?strongs=G3588) ).


THEONஎன்ற வார்த்தையின் சரியான உச்சரிப்பு Theos – “Strongs G2316 (ref: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=G2316&t=KJV ).


திரு உமர் அவர்களே, நீங்கள் வழக்கமா ஆதாரம் தேடும் blueletterbible லின் விளக்கத்தின் அடிப்படையில், “Ho Theos” என்பதே சரியான உச்சரிப்பு என்பதை இந்த கட்டுரை மூலம் உங்களுக்கு நாங்கள் தெளிவாக்கி இருப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு அல்ல என்று நீங்கள் அறிவிக்க விரும்பினால், நீங்கள் அறிவிக்கும் "TON THEON" என்ற வார்த்தையின் “Strongs Number” அய் கண்டு எங்களுக்கு அறிவிக்க முடியுமா?

திரு உமர் அவர்களே, நீங்கள் வழக்கமா ஆதாரம் தேடும் blueletterbible லின் கருத்துக்கு ஒத்த கருத்தை தானே டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அறிவித்தார்கள்!! இதை தவறு என்று விவரிக்க முயற்சித்த நீங்கள், செய்த குற்றம், இதை தவறு என்று சொல்வதை காட்டிலும், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் எந்த பைபிள் பிழைதிருத்தத்தின் அடிப்படையில் இந்த விளக்கத்தை அறிவித்தார்கள் என்று அவரிடம் நேரடி வினா எழுப்பி இருந்தால் உங்களுக்கு விளக்கம் கிடைத்து இருக்குமே!!.


திரு உமர் அவர்களே, பைபிளில் இத்தனை பிழை திருத்தங்கள் கொண்டு இருப்பது எங்கள் தவறா? இப்படி அதிகபடியாக பிழைதிருத்தங்கள் இருந்தால், எதை கொண்டு நாங்கள் சுட்டிக்காட்டுவது என்பதை நீங்கள் தான் எங்களுக்கு தெளிவாக்க வேண்டும்.


திரு உமர் அவர்களே, நேரடி விவாதத்திற்கு துணிவில்லாத உங்களுக்கு, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் மேடை பேச்சுகளின் இடையே வழங்க பெறும் கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்புவதற்கும் துணிவு இல்லையா? கிறிஸ்தவ அறிஞராக தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கும் உங்களுக்கு, அவரை எதிர்த்து கேள்வி எழுப்ப துனிவில்லையா? டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் மேடை பேச்சுகளில் கேள்வி எழுப்பினால் என்னை கொன்றுவிடுவார்கள் என்று எனக்கு பயம் என்று பொய்யுரைக்க போகிறீர்களா? இந்த கேள்வியை நீங்கள் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் நேரடியாக கேட்க முயற்சித்து இருந்தால், அவரே உங்களுக்கும் எங்களுக்கும் சேர்த்தே தெளிவான விளக்கத்தை தந்து இருப்பாரே, இதை விடுத்து இப்படி திரைக்கு பின் மறைந்து கட்டுரை வரைய காரணம் என்ன?


திரு உமர் அவர்களே, நீங்கள் பைபிளின் John 1:1 வசனத்தின் மொழியாக்கம் என்று அறிவிப்பது John 1:1 In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.


திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிக்கும் இந்த பைபிள் மொழியாக்கம்,பைபிளின் எந்த பிழைதிருத்தத்திற்கு உரியது என்று எங்களுக்கு அறிவிக்க முடியுமா? ஏன்னெனில் இதற்கு மாறாக பல பைபிள் மொழியகங்களை எங்களால் காண முடிகிறது, இவற்றில் எது சரியானது என்று எங்களுக்கு கண்டு அறிவிக்க முடியுமா? உதாரணமாக:

2001 Translation An American English Bible

John 1:1 In the beginning there was the Word. The Word was with The God and the Word was a powerful one.

ref: http://www.2001translation.com/JOHN.htm


1955 so the Word was divine - The Authentic New Testament, by Hugh J. Schonfield, Aberdeen.

1935 and the Word was divine - The BibleAn American Translation, by John M. P. Smith and Edgar J. Goodspeed, Chicago.

John 1: 1 – 3 'In the Beginning was the Word. And the Word was with God. So the Word was divine.. .'

ref: http://www.innvista.com/culture/religion/bible/versions/ont.htm




திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிக்கும் மூலம் கிரேக்க மொழியில் அமைந்து உள்ளது, இதை இயற்றிய நபர் திரு ஜான் என்று நம்பப் படுகிறது, ஆனால் திரு ஜான் அவர்கள் எழுத படிக்க தெரியாத மீனவர் என்று பைபிள் சரித்திரம் பறைசாற்றுக்கிறது (Acts 4:13), அப்படியானால் இந்த பைபிள் புத்தகத்தை கிரேக்க மொழியில் இயற்றியவர் யார்? திரு ஜான் அவர்களுக்கு கிரேக்கம் தாய் மொழியா? திரு ஜான் அவர்களே இதை அறிவித்து இருந்தாலும் இதை நம்பா வேண்டும் என்பதற்கு என்ன கட்டாயம்? இது திரு ஏசு அவர்கள் தன் வாயால் சொன்னது இல்லையே, திரு ஏசுவை பற்றி அடுத்தவர்கள் கற்பனை செய்து அறிவித்தது எல்லாம் ஏற்க படவேண்டும் என்பது சட்டமா?


திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிப்பது போல் John 1:1 என்று வசனம் எல்லாம் வல்ல இறைவனும், ஏசு அவர்களும் ஒன்று என்று அறிவிக்கிறதா என்பதை அறிய வேண்டும் என்றால், அந்த John 1:1 வசனத்தை இயற்றிய நபரை தான் கேட்க வேண்டும். John 1:1 வசனத்தை இயற்றிய நபர் இவ்வாறே எல்லாம் வல்ல இறைவனும் ஏசு அவர்களும் ஒன்று என்று கருத்துகளை அறிவித்துள்ளார்கள் என்று பைபிள் பறைசாற்றுகிறதா?

"Verily, verily, I say unto you, The servant is not greater than his lord; neither he that is sent greater than he that sent him." John 13:16.

திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட வசனத்தில் John 1:1 வசனத்தை இயற்றிய நபர் இறைவன் ஏசு அவர்களை காட்டிலும் உயர்ந்தவர்என்று பறைசாற்றுகிறது. John 1:1 வசனத்தை இயற்றிய நபர் இறைவனும் ஏசு அவர்களும் ஒன்று என்று அறிவிக்க விரும்பி இருந்தால், இறைவன் ஏசு அவர்களை காட்டிலும் உயர்ந்தவர்என்று அறிவித்து இருப்பாரா?

இருவரும் ஒருவர் என்ற நிலையில் ஒருவர் இன்னொருவரை காட்டிலும் உயர்ந்தவராக இருக்க முடியுமா?


"Ye have heard how I said unto you, I go away, and come [again] unto you. If ye loved me, ye would rejoice, because I said, I go unto the Father: for my Father is greater than I." John 14:28.

திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட வசனத்தில் John 1:1 வசனத்தை இயற்றிய நபர், ஏசு அவர்கள் இறைவனிடம் செல்வதாக அறிவிக்கிறார். இறைவனும் ஏசு அவர்களும் ஒன்று என்ற நிலையில் தன்னிடமே தான் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

இவ்வாறு செல்ல சாத்தியம் ஆகுமா?

John 1:1 வசனத்தை இயற்றிய நபர் இறைவனும் ஏசு அவர்களும் ஒன்று என்று அறிவிக்க விரும்பி இருந்தால், ஒருவர் அவரே தன்னை காட்டிலும் உயர்ந்தவறாக இருக்க முடியுமா?


"These words spake Jesus, and lifted up his eyes to heaven, and said, Father, the hour is come; glorify thy Son, that thy Son also may glorify thee: John 17:1.

திரு உமர் அவர்களே, John 1:1 வசனத்தை இயற்றிய நபர் இறைவனும் ஏசு அவர்களும் ஒன்று என்று அறிவிக்க விரும்பி இருந்தால், என்னை போற்றுங்கள், நான் என்னையே போற்றிகொல்வேன்என்று அறிவிப்பாரா?


"While I (Jesus) was with them in the world, I kept them in thy (God's) name: those that thou gavest me I have kept, and none of them is lost, but the son of perdition; that the scripture might be fulfilled." John 17:12.

திரு உமர் அவர்களே, John 1:1 வசனத்தை இயற்றிய நபர் இறைவனும் ஏசு அவர்களும் ஒன்று என்று அறிவிக்க விரும்பி இருந்தால், மேலே கோடிட்ட வசனத்தில் தனக்கு தானே, தான் உலகில் இருந்த பொழுது தன் மக்களை தன் பெயரில் வைத்து இருந்தேன் என்றும், தான் யாரை தனக்கு தந்து எடுத்துக் கொண்டேனோ அவர்களை தனக்கே வைத்து கொண்டேன்என்று அறிவிப்பாரா?


"Father, I will that they also, whom thou hast given me, be with me where I am; that they may behold my glory, which thou hast given me: for thou lovedst me before the foundation of the world." John 17:24.

திரு உமர் அவர்களே, John 1:1 வசனத்தை இயற்றிய நபர் இறைவனும் ஏசு அவர்களும் ஒன்று என்று அறிவிக்க விரும்பி இருந்தால், மேலே கோடிட்ட வசனத்தில் தனக்கு தானே, உலகத்தோற்றத்துக்கு முன் தான் தன் மீது அன்பாயிருந்தபடியினால், தான் தனக்கு தந்த தன்னுடைய மகிமையை தான் தனக்கு தந்தவர்கள் காணும்படியாக, தான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் தன்னுடன் கூட இருக்க விரும்புகிறேன்.என்று அறிவிப்பாரா?




திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட வசன ஆதாரத்தின் அடிப்படையில் John 1:1 வசனத்தை இயற்றிய நபர், இறைவனும் ஏசு அவர்களும் ஒன்று என்று அறிவிக்கவில்லை என்பது உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இன்னும் அதிகபடியாக டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஏதிராக நீங்கள் அறிவித்த கருத்து தவறு என்றும் நாங்கள் உங்களுக்கு தெளிவாக்கி இருப்போம் என்று நம்புகிறோம்.


திரு உமர் அவர்களே, நாங்கள் விடுத்துள்ள இந்த கட்டுரைக்குயேனும் உங்கள் சொந்த கூற்றை விளக்கமாக தராமல் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்..


அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்



--

--

3 comments:

Wanishaj said...

Masha Allah !!!..

afsar said...

allah ungalukku natkooli tharuvanaha..

afsar said...

alhamthulillah!