Wednesday, March 9, 2011

அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 5, கிறிஸ்தவ இறைவனின் தனிப்பட்ட பெயர் "யேகோவா" மறுப்பு...




பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும்
- பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



திரு உமர் அவர்களின், Answering Ziya: குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?என்ற கட்டுரைக்கு நம்முடைய மறுப்பு..


திரு உமர் அவர்கள் விடுத்த எழுத்து விவாத அழைப்பை ஏற்று, திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரம் எதையும் முன் வைக்காமல், முஹம்மத் நபி(ஸல்) அவர்களை பொதுவாக திரு உமர் அவர்கள் பழிக்கும் கூற்றுகளில், ஏதேனும் ஒன்றின் மீது அவரிடம் தெளிவான ஆதாரம் இருக்குமெனில், அதை முன் வைத்து கட்டுரை வரையுமாறு நாம் அவரிடம் முன்னரே வலியுறுத்தி இருந்தோம். அவ்வாறு அவர் கட்டுரை வரைய கால தாமதம் செய்வதனால், திரு உமர் அவர்களின் முந்தைய வாதமான அல்லேலுயா வார்த்தையின் அர்த்தம் – “யேகோவா தேவனை துதித்தல் என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு தெளிவான ஆதாரத்தை முன் வைத்து கட்டுரை வரையுமாறு திரு உமர் அவர்களை நாம் வேண்டி இருந்தோம். இவ்வாறு இந்த தலைப்பில் தோல்வியுற்றால் அல்லது தெளிவான எதிர்வாதம் செய்ய மறுத்தால், இனி கனவிலும் இஸ்லாமியர்களை பழிக்க திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் முயற்சிப்பது இல்லை என்ற உறுதி மொழியோடு கட்டுரை வரைய துவங்குமாறு திரு உமர் அவர்களை நாம் வேண்டி இருந்தோம்.


இந்த கட்டுரையை வரைய துவங்குவதற்கு முன் அதன் கால தவணை, இன்னும் பல விசயங்களை தெளிவாக அறிவித்து விட்டு துவங்க வேண்டும் என்று திரு உமர் அவர்களுக்கு முன்னமே நாம் அழைப்பு விடுத்து இருந்தோம். இதை வெளிப்படையாக அறிவிக்க திரு உமர் அவர்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும் என்று நாம் முன்னரே வேண்டி இருந்தோம்.

பார்க்க:

http://isaakoran.blogspot.com/2011/02/2.html,

http://isaakoran.blogspot.com/2011/02/3.html

http://isaakoran.blogspot.com/2011/02/4.html

http://isaakoran.blogspot.com/2011/03/blog-post.html



இந்த முறையான அழைப்புகளுக்கு பிறகு, மௌனமான முறையில் திரு உமர் அவர்கள் இப்பொழுது Answering Ziya: குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா? என்ற தலைப்பில் ஒரு புதிய பொய்யுரை வெளியிட்டு இருக்கிறார்.


நாம் முன்னரே விடுத்த எழுத்துவிவாத அழைப்புகளை ஏற்காதது மூலம், நாம் முன்னரே விடுத்த எழுத்துவிவாத நெறிகளை கடைபிடிக்காதது மூலம், நேரடி விவாதத்திற்கு அஞ்சி ஓடிய திரு உமர் அவர்கள் இப்பொழுது எழுத்து விவாதத்திர்க்கும் அஞ்சி ஓடுகிறார் என்று, தானே முன் வந்து சாட்சி கூறுகிறார்.


திரு உமர் அவர்கள் வெளியிட்டுள்ள Answering Ziya: குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?என்ற கட்டுரையில் தெளிவான ஆதாரத்தை முன் வைத்து, தன் கருத்தை வெளியிட்டுள்ளரா என்று இந்த கட்டுரையில் பார்போம்...


திரு உமர் அவர்கள் மேலே அளிக்கப்பட்ட தலைப்பில் தெரிவிக்க விரும்பிய மூல கருத்து:

  1. எலோஹீம்என்பது பைபிள் இறைவனின் பொது பெயராகும், அது இறைவன், கடவுள், ஆண்டவர், தேவன்போன்ற வர்ணனை பெயர்களாகும்.
  2. யேகோவாபைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயராகும்.



திரு உமர் அவர்கள் வெளியிட்ட கட்டுரையில் கொடிட்ட மூல கருத்துகளை எல்லாம் வல்ல இறைவன் கிருபையை நாடியவர்களாக ஆராய முனைவோம்:

1

எலோஹீம்என்பது பைபிள் இறைவனின் பொது பெயராகும், அது இறைவன், கடவுள், ஆண்டவர், தேவன்போன்ற வர்ணனை பெயர்களாகும்.


நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்களே, உங்களுடைய கட்டுரையில் அல்லாஹ்என்பதை இஸ்லாமிய இறைவனின் தனிப்பட்ட பெயர் என்ற விளக்கத்தை அளித்து இருந்தீர்கள். "எலோஹீம்" என்பது கிறிஸ்தவ இறைவனின் பொது பெயர் என்று அறிவித்து இருந்தீர்கள். நீங்கள் அறிவிப்பது உண்மை என்று எடுத்துக்கொண்டால், பைபிள் மொழி பெயர்ப்பாளர்கள் எலோஹீம்என்ற இறைவனின் பொது பெயரை மொழி பெயர்க்கும் பொழுது ரப்என்ற அரபி வார்த்தையை உபயோக படுத்தி இருக்க வேண்டும், ஏன்னெனில் "ரப்" என்றால் இறைவன் என்று பொதுவாக அறிவிப்பதாகும். இதற்க்கு மாறாக பைபிள் மொழி பெயர்ப்பாளர்கள் அல்லாஹ்என்ற இஸ்லாமிய இறைவனின் தனிப்பட்ட பெயரை மொழிபெயர்க்க பயன் படுத்தியுள்ளார்கள். இதன் அடிப்படையில் நீங்கள் சொல்வது தவறு, "எலோஹீம்" என்பது பொது பெயர் அல்ல அது இறைவனின் தனிப்பட்ட பெயர் என்று தானே அர்த்தம்? அல்லது அது பிழையான மொழிபெயர்ப்பு என்று வாதாட விரும்புகிறீர்களா?


திரு உமர் அவர்களே, இஸ்லாமிய இறைவன் பெயர் “எலோஹீம்” என்று நாங்கள் அறிவிக்க வில்லை, மாறாக கிறிஸ்தவ இறைவன் பெயர் “அல்லாஹ்” என்றே உங்கள் கிறிஸ்தவ அறிஞ்சர்கள் சாட்சி கூறுகிறார்கள். இதை ஏன் நீங்கள் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்க மருகிறீர்கள்?


எலோஹீம் = அல்லாஹ் = الله

COMPARISON

Translation

Genesis 1:1–3 (التكوين)

John 3:16 (يوحنا)

Van Dyck
فانديك

في البدء خلق الله السماواتوالأرض. وكانت الأرض خربةوخالية وعلى وجه الغمر ظلمةوروح الله يرف على وجه المياه.وقال الله: «ليكن نور» فكان نور.

لأنه هكذا أحب الله العالم حتىبذل ابنه الوحيد لكي لا يهلككل من يؤمن به بل تكون لهالحياة الأبدية.

Book of Life
كتاب الحياة

في البدء خلق الله السماواتوالأرض، وإذ كانت الأرضمشوشة ومقفرة وتكتنف الظلمةوجه المياه، وإذ كانروحاللهيرفرف على سطح المياه،أمر الله: «ليكن نور» فصار نور.

لأنه هكذا أحب الله العالم حتىبذل ابنه الوحيد لكي لا يهلككل من يؤمن به بل تكون لهالحياة الأبدية.

Revised Catholic
الترجمة الكاثوليكيةالمجددة

في البدء خلق الله السمواتوالأرض وكانت الأرض خاويةخالية وعلى وجه الغمر ظلاموروح الله يرف على وجه المياه.وقال الله: «ليكن نور»، فكاننور.

فإن الله أحب العالم حتى إنهجاد بابنه الوحيد لكي لا يهلككل من يؤمن به بل تكون لهالحياة الأبدية.

Good News
الترجمة المشتركة

في البدء خلق الله السماواتوالأرض، وكانت الأرض خاويةخالية، وعلى وجه الغمر ظلام،وروح الله يرف على وجه المياه.وقال الله: «ليكن نور» فكان نور.

هكذا أحب الله العالم حتى وهبابنه الأوحد، فلا يهلك كل منيؤمن به، بل تكون له الحياةالأبدية.

Noble Gospel
الإنجيل الشريف

في البداية خلق الله السماواتوالأرض. وكانت الأرض بلاشكل وخالية، والظلام يغطيالمياه العميقة، وروح الله يرفرفعلى سطح المياه. وقال الله: «ليكن نور فصار نور.

أحب الله كل الناس لدرجة أنهبذل ابنه الوحيد لكي لا يهلككل من يؤمن به، بل ينال حياةالخلود.

Reference: http://en.wikipedia.org/wiki/Bible_translations_(Arabic)


திரு உமர் அவர்களே, கிறிஸ்தவத்தின் தலை சிறந்த அறிஞர், காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் டி.டி. அவர்கள், தன்னுடன் அதிகபடியாக எட்டு கிறிஸ்தவ அறிஞர் பெருமக்களை, டி.டி. களை சேர்த்து கொண்டு, வெளியிட்ட ஸ்கோபில்ட் (scofield reference bible) பைபிள் மொழியாக்கத்தில், "எலோஹிம்" என்ற ஹீப்றேவ் பெயருக்கு முன்று கடவுள்களின் முதன்மையான கடவுளின் பெயர் first of the three primary names of Deity" என்ற விளக்கத்தை தருகிறார். இதையே நீங்கள் தமிழில் மொளிபெயக்கும் பொழுது தேவன்என்று மொழி பெயர்கிறீர்கள். திரு உமர் அவர்களே தேவன்என்பது கிறிஸ்தவ இறைவனுக்கே உரிய தனிப்பட்ட பெயரா? அல்லது பொது பெயரா?


திரு உமர் அவர்களே, எலோஹீம்என்பது இறைவனின் பொதுவான பெயர், அது பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயர் இல்லை, என்ற உங்கள் வாதத்தை ஏற்பது என்றால், இதை போலவே வரும் யேகோவா (Lord) என்ற பெயர் பைபிள் இறைவனின் பொதுவான பெயர் என்று பைபிள் விரிவுரையாளர்கள் சாட்சி கூறுகிரர்கள். இதை எப்படி பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயர் என்று நாம் ஏற்ப்பது?

Lord - A person who has general authority over others, A man of noble rank or high office; a nobleman…

Ref: Oxford Dictionary



திரு உமர் அவர்களே, "எலோஹீம்" என்ற பெயரை இறைவன் God என்ற மொழி பெயர்க்கபட்டுள்ளதால் அதை ஏற்க முடியாது என்று அறிவிக்கும் நீங்கள், யேகோவா - Lordஎன்று மொழிபெயர்க்கபட்டுள்ளத்தை எப்படி ஏற்க முன்வந்தீர்கள்?


பொதுவாக God என்று மனிதர்களை பெயரிடுவது இல்லை, ஆனால்Lord என்பது மனிதர்களையும் குறிக்க வழக்கத்தில் உள்ள சொல் ஆகும். மனிதர்களை குறிக்காத God என்ற வார்த்தையை ஏற்க முன் வராத நீங்கள் மனிதர்களையும் குறிக்கும் Lord என்ற வார்த்தையை எவ்வாறு ஏற்க முன் வந்தீர்கள்?

God - Any supernatural being worshipped as controlling some part of the world or some aspect of life or who is the personification of a force. (in Christianity and other monotheistic religions) the creator and ruler of the universe and source of all moral authority; the supreme being…

…(in certain other religions) a superhuman being or spirit worshipped as having power over nature or human fortunes; a deity…

Ref: Oxford Dictionary



திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் அந்நிய தெய்வங்களை குறிக்க எல்என்ற வார்த்தை பயன்பட்டுள்ளது என்று அறிவித்து விட்டு, ஒரு பைபிள் வசனத்தை வெளியிட்டு இருந்தீர். அந்த வசனத்தில் எல்என்பது மட்டும் உபயோக படுத்த படவில்லை மாறாக யேகோவாவும் பயன் படுத்த பட்டுள்ளது, இதன் அடிப்படையில் உங்கள் கருத்தை ஏற்க நேரிட்டால், யேகோவாஎன்பது அந்நிய தெய்வங்களின் பெயர் என்று நீங்கள் அறிவித்ததாக முடியும், இந்த கருத்தை ஏற்க நீங்கள் முதலில் தயாரா?

Who is like unto thee, O LORD ( יהוה ), among the gods?H410 who is like thee,glorious in holiness, fearful in praises, doing wonders? (Exodus 15:11)



திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் மனிதர்களை குறிக்க எல்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்து விட்டு, ஒரு பைபிள் வசனத்தை கோடிட்டு இருந்தீர். ஆனால் அந்த வசனத்தின் மூல நூலில் எல்என்ற வார்த்தை உபயோகிக்க படவில்லை மாறாக அலீம்என்ற ஹிப்ரேவ் வார்த்தையே பயன் படுத்தப்பட்டுள்ளது. அப்படி என்றால் எது சரியானது நீங்கள் அறிவிப்பதா அல்லது ஹிப்ரேவ் மூலமா?

உமர் கோடிட்டது:

When he raiseth up himself, the mightyH410 are afraid: by reason of breakings they purify themselves. (Job 41:25)

ஹிப்ரேவ் மூலம் :http://www.scripture4all.org/OnlineInterlinear/OTpdf/job41.pdf



திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் வானவர்களை குறிக்க எலோஹீம்என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்து விட்டு, ஒரு பைபிள் வசனத்தை கோடிட்டு இருந்தீர். ஆனால் அந்த வசனத்தின் மூல நூலில் வானவர் என்று விவரிக்கவில்லை, மாறாக எலோஹீம்என்றே விவரிக்க பட்டுள்ளது. திரு உமர் அவர்களே, எதை அடிப்படையாக கொண்டு வானவர்கள் என்று நீங்கள் முடிவுக்கு வந்தீர்? குறிப்பாக "எலோஹீம்" என்று நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதை ஹிப்ரேவ் பைபிள் aleimஎன்று உச்சரிபதாக அறிவிக்கிறது. அப்படி என்றால் இதில் எது சரி "எலோஹீம்" அல்லது aleim?

உமர் கொடிட்டது:

For thou hast made him a little lower than the angels,H430 and hast crowned him with glory and honour. (Psalms 8:5)

ஹிப்ரேவ் மூலம் :http://www.scripture4all.org/OnlineInterlinear/OTpdf/psa8.pdf



திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில் விக்கிறகங்களுக்கு "எலோஹீம்" என்ற பெயர் பயன்படுத்தபட்டுள்ளது என்று அறிவித்து விட்டு, நீங்கள் அதிக படியான பைபிள் வசங்களுக்கு முகவரி இட்டுள்ளீர்கள். ஆனால் அவற்றில் பெறும் பாலும் விக்கிரகங்களை குறிக்க வில்லை, மாறாக aleimஎன்றே குறிக்கிறது. இந்த கட்டுரை மூலம் உங்களை நாங்கள் கேட்க விரும்புவது, எந்த பைபிள் வசனத்தில் aleimஎன்ற வார்த்தை விக்கிறகங்களை குறிக்கிறது என்று கொஞ்சம் தெளிவாக அறிவியுங்களேன் என்பதாகும்.


திரு உமர் அவர்களே, யேகோவாஎன்பது இறைவனின் பெயர் என்றால், அதை ஏன் திரு ஜீசஸ் அவர்கள் ஒருமுறையேனும் தெளிவாக அறிவிக்க வில்லை? குறைந்த பட்சம் அவர் மரணிக்கும் வேளையில் யேகோவாவை அழைத்து இருக்கலாம் அல்லவா! இதற்க்கு மாறாக எலி/எலொஹ் என்று எதற்க்காக அழுது புலம்பினார்?


நாம் இங்கே விட்டுவைத்துள்ள கேள்விகளுக்கெல்லாம் தெளிவான ஆதாரத்தோடு திரு உமர் அவர்கள் கட்டுரை வரைவார்கள் என்ற நம்பிக்கையில், நம் கட்டுரையின் அடுத்த பகுதிக்கு தொடர்வோம்...


2

யேகோவாபைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயராகும்.


நம்முடைய விளக்கம்: திரு உமர் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் யேகோவாஎன்பது பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயராகும் என்பதை விவரிக்க, எந்த தெளிவான ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை.


திரு உமர் அவர்கள் முன்னர் வெளியிட்ட "தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும் என்ற கட்டுரையில், கோடிட்ட விக்கிபீடியா முகவரியில் இடப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில், திரு உமர் அவர்களிடம் நாம் முன்னரே கேள்விகள் எழுப்பி இருந்தோம், யேகோவாஎன்பது பைபிள் இறைவனின் பெயரா? יהוה ஹிப்ரேவ் வார்த்தையின் உண்மை உச்சரிப்பை அறிந்தவர் உலகில் யாரேனும் உள்ளார்களா என்று?

The second part, Yah, is a shortened form of YHWH, the name for the Creator.[3] This name is not pronounced by Jews, as they are not permitted to speak the name of God, and in any case the correct pronunciation is not known. However, it is sometimes rendered by Christians as "Yahweh" or "Jehovah"...

Ref: http://en.wikipedia.org/wiki/Hallelujah



கிறிஸ்தவ அறிஞ்சாரண திரு உமர் அவர்களிடம், இந்த கட்டுரை மூலம் நாம் மீண்டும் கேட்க விரும்பும் கேள்வி: திரு உமர் அவர்களே நீங்கள் பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயர் என்று அறிவிக்க விரும்பும் יהוה என்ற ஹிப்ரேவ் வார்த்தையின் உண்மையான உச்சரிப்பு என்ன? யஹ்வெஹ், யேகோவா, ஜேஹோவாஹ், கர்த்தர், Lord”...


திரு உமர் அவர்களே, இந்த கேள்விக்கு பதிலளிக்க காலவரையற்ற ஆயிரம் பொய்யுரைகளை நீங்கள் வரைய நேரிடலாம். உங்களுக்கு நாங்கள் சிரமம் கொடுக்க விரும்புபவர்கள் அல்ல. இதோ நீங்கள் தற்பொழுது ஆதாரம் தேடிய blueletterbibleஆதாரம்:

Strongs H3068 Yeh.ho.va

Ref: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?strongs=H3068


திரு உமர் அவர்களே, ஹிப்ரேவ் மொழி יהוה வார்த்தையின் உச்சரிப்பு யேகோவாஎன்று உங்களுக்கு சாதகமான ஆதாரத்தை blueletterbibleஅறிவித்து விட்டு, உங்களுக்கு பாதகமாக Lordஎன்று பொதுவான பெயரில் மொழிபெயற்பதாக தனக்கு தானே முரணான சாட்சி கூறுகிறது.

Gen 2:4

These [are] the generations of the heavens and of the earth when they were created , in the day that the LORD3068 God made the earth and the heavens,



יהוה என்றால் Lordஎன்ற பொதுவான பெயர் என்று நீங்கள் ஆதாரம் தேடும் blueletterbible பைபிள் வசனங்களை தருகிறது, இதற்க்கு மாறாக நீங்கள் அது இறைவனின் தனிப்பட்ட பெயர் என்கிறீர்கள், இதில் எதை ஏற்ப்பது?


திரு உமர் அவர்களே, உங்கள் கட்டுரையில், நீங்களே உங்களை அறியாமலே יהוה என்றால் Lordஎன்ற பொதுவான பெயர் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். இதோ நீங்கள் அறிவித்தது:

யேகோவாவை குறிக்க "எல்" வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:

And Abram said to the king of Sodom, I have lift up mine hand unto the LORD, the most high God,H410 the possessor of heaven and earth, (Genesis 14:22)



மேலே நீங்கள் கோடிட்ட பைபிள் வசனத்தில் יהוה என்ற ஹிப்ரேவ் வார்த்தை Lordஎன்று பொதுவான பெயரில் மொழிபெயர்க்க பெற்றுள்ளதாக உங்களை அறியாமல் நீங்களே சாட்சி கூறுகிறீர்கள்.


Lordஎன்ற ஆங்கில வார்த்தை வழக்கத்தில் மனிதர்களையும் குறிக்கவும் பயன்படுத்த படுகிறது

Lord - A person who has general authority over others, A man of noble rank or high office; a nobleman…

Ref: Oxford Dictionary



திரு உமர் அவர்களே, நீங்கள் அறிவிப்பது போல், יהוה வார்த்தையின் உச்சரிப்பு யேகோவாஎன்றால் ஏனைய பைபிள் மொழிபெயர்ப்புகள் பிழையானது. இப்படி ஏனைய பைபிள் மொழிபெயர்ப்புகள் பிழையான மொழிபெயர்ப்பு என்று நீங்கள் அறிவிக்க விரும்பினால், உலகில் எந்த பைபிள் மொழிபெயர்ப்பு சரியானது என்பதை நீங்கள் தான் எங்களுக்கு கண்டு அறிவிக்க வேண்டும்.


திரு உமர் அவர்களே, நீங்கள் தானே முன்னர் எல்லா பைபிளும் ஒன்று என்ற வாதத்தை முன் வைத்தது? இப்பொழுது முன்னுக்கு பின் முரணான வாதங்களை வைக்க முன் வர விரும்புகிறீர்களா?


திரு உமர் அவர்களே, பைபிள் மொழி பெயர்ப்பாளர்கள் பைபிளில் வரும் பெயர்களை எல்லாம் மொழி பெயர்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்களா? உதாரணமாக דָּוִד - தாவுத் என்ற ஹிப்ரேவ் பெயர்க்கு விருப்பமானவன், பிரியம் உடையவன்என்று பொருள்படும், ஆகையால் பைபிளில் இந்த பெயர் இடம்பெற்றுள்ள அணைத்து இடங்களிலும் விருப்பமானவன்அல்லது பிரியம் உடையவன்என்று மொழி பெயர்க்க பெற்றுள்ளதா?


திரு உமர் அவர்களே ஹிப்ரேவ் மொழி יהוה என்ற ஒத்தை வார்த்தையின் உச்சரிப்பு எப்படி யஹ்வெஹ், யேகோவா, ஜேஹோவாஹ், கர்த்தர்என்று மாறுபடுகிறது என்று கொஞ்சம் எங்களுக்கு விவரிக்க முடியுமா?


ஒரு வார்த்தைக்கு பல உச்சரிப்பு தர எப்படி பைபிள் மொழி பெயர்ப்பாளர்களுக்கு மட்டும் சாத்தியம் ஆகிற்று? அப்படி என்றால் அந்த ஹிப்ரேவ் வார்த்தையின் உச்சரிப்பு அறியாததால், அவர் அவர் விருப்பத்திர்க்கு ஒரு உச்சரிப்பை தந்தார்கள் என்று தானே அர்த்தம்? இது எப்படி சரியான பெயராக இருக்க முடியும்?


திரு உமர் அவர்களே, பைபிளின் יהוה என்ற ஹிப்ரேவ் வார்த்தை, குறைந்த பட்சம் ஒரு பெயர் அல்ல, அது அவன் தான்போன்ற ஒரு நபரை குறிக்கும் சொல் என்று நீங்கள் வழக்கமாக ஆதாரம் தேடும் விக்கிபீடியா அறிவிக்கிறது. திரு உமர் அவர்களே அவன் தான்அல்லது அவனேஎன்று ஒரு நபரை குறிக்கும் சொல் எப்படி இறைவனின் தனிப்பட்ட பெயராக இருக்க முடியும்? உங்கள் விக்கிபீடியா விவரங்களை கொஞ்சம் விளக்குங்களேன்...

The word Yahweh is a modern scholarly convention for the Hebrew יהוה, transcribed into Roman letters as YHWH and known as the Tetragrammaton, for which the actual pronunciation is disputed. The most likely meaning of the name may be “He Brings Into Existence Whatever Exists", but there are many theories and none is regarded as conclusive.[6]

Name

Main article: Tetragrammaton

The name is generally linked to a form of the Semitic word-stem HWH (originally HWY), meaning "being" or "becoming". Amorite personal names and Greek transcriptions of the tetragrammaton suggest that the vocalization Yahweh is correct, and as such should be read as having derived from a causative verbal form ("he becomes" or "he is").

On the other hand, if the name is analyzed as a (non-causative) G Stem, the verb "to be" plus the name of El, the chief god in the pantheon, could give rise to the forms yahweh-el ("He is El", "He shows himself as El") or the reverse, El-yahweh (El who shows himself).[19]

Exodus 3:13-15 is the first recorded instance of God naming himself. An etymologization of the name, connecting YHWH with the root HYH, occurs when YHWH, asked by Moses for his name, provides three names: "I Am That I Am", followed by "I Am," and finally "YHWH." He states that this is his name forever and a memorial name to all generations.[20]

... יהוה אלהי אבתיכם... זה־שמי לעלם... לבני ישראל אהיה שלחני אליכם׃

"I AM THAT I AM [...] Thus shalt thou say unto the children of Israel, I AM hath sent me unto you [...] YHWH God of your fathers, [...] this is my name for ever"[Exod. 3:14-15]

The Masoretes, who from about the 6th to the 10th century worked to reproduce the original text of the Hebrew Bible, added vowel points (niqqud) and cantillation marks to the manuscripts to indicate vowel usage and for use in the ritual chanting of readings from the Bible in synagogue services. To יהוה they added the vowels for "Adonai" ("My Lord"), the word to use when the text was read. The Leningrad Codex vowel points the Tetragrammaton to read Yehwah, Yehwih, and Yeho·wah. Thus, the translation Jehovahwas used by Christian scholars after the Renaissance and Reformation periods.[21]

Reference: http://en.wikipedia.org/wiki/Yahweh

http://en.wikipedia.org/wiki/Tetragrammaton



திரு உமர் அவர்களே, நீங்கள் ஆதாரம் தேடும் விக்கிபீடியா மற்றும் blueletterbibleகோர்ப்பில் இருந்தே, யேகோவாஎன்பது இறைவனின் தனிப்பட்ட பெயர் இல்லை என்பதை தெளிவான ஆதாரத்துடன் இந்த கட்டுரையில் நாங்கள் விவரித்துயுள்ளோம் என்று நம்புகிறோம். இந்த கட்டுரை மூலம் யேகோவாஎன்பது அவன் தான், அவனேபோன்ற ஒரு நபரை குறிக்கும் சொல், எலோஹீம் - aleimஎன்பதே அதி முதல் பைபிளின் இறைவனை குறிக்க உபயோகபடுத்தபட்ட பெயர் என்பதை, உங்களுக்கு நாங்கள் தெளிவாக்கி இருப்போம் என்று நம்புகிறோம்.


இனியேனும் பைபிளிள் உள்ள அல்லேலுயா வார்த்தையின் அர்த்தம் – “யேகோவா தேவனை துதித்தல் என்பதை நிரூபிக்க தெளிவான ஆதாரத்தோடு கட்டுரை வரைவீர்கள் என்று நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.


அஸ்ஸலாமு அழைக்கும்


- ஜியா & அப்சர்

1 comment:

Unknown said...

ASSALAMU ALAIKUM ZIA ANNA!!!!GREAT ARE YOUR POSTS!!!MASHA ALLAH..KEEP UP YOUR GOOD JOB..ALLAH HAFIZ
-A.SYED ALI FATHIMA