Wednesday, December 28, 2011

“கிறிஸ்மஸ் பாகம் 1 – வரலாற்று பார்வையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்”



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)

  
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



கிறிஸ்துமஸ் பாகம் 1 – வரலாற்று பார்வையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்”




But examine all things; hold fast to what is good. (1 Thessalonians 5:21)




வாசகர்களே, கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் பற்றிய அறியப்படாத விவரங்களை தொடர் மின்அஞ்சல் மூலம் திரு முஹம்மத் அர்ஷத் என்ற சகோதரர் வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, அந்த தலைப்பில் இணையதளங்களில் காணப்படும் சில விவரங்களை இணைத்து, உங்களுக்காக நாங்கள் மறுபதிப்பு செய்கிறோம். இந்த கட்டுரையில் வரலாற்று பார்வையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றிய சில விவரங்களை உங்களுக்காக எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையை  நாடியவர்களாக பிரசூரிக்க முனைகிறோம்.

கிறிஸ்துமஸ் (Christmas) திருநாள் உலகளவில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் கொண்டாடபடுகிறது. இந்த கொண்டாட்டம் இறைவழிபாடோடு  நின்று விடாமல் கேளிக்கை, விபசாரம், மது விநியோகம் இன்னும் படுகொலைகள் என்று பட்டியல் வருடா வருடம் நீண்டு கொண்டே செல்கிறது.

பார்க்க:


வாசகர்களே, தரம் கெட்டு போகும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பின்னணி என்ன என்று சராசரி கிறிஸ்தவரை வினவினால், பெரும்பாலும் அவர்கள் தரும் பதில், அது திரு ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தின கொண்டாட்டம் என்பதே. இன்னும் சில கிறிஸ்தவர்கள், திரு ஈஸா (அலை) பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில், இன்னும் அது தான் கிறிஸ்துமஸ் தினம் என்று எந்த தெளிவான ஆதாரமும் முன் வைக்காமல் அறிவிப்பதை நீங்கள் செவியுற நேரலாம்.

இந்த கிறிஸ்துமஸ் தினத்தை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் கொண்டாடுகிறார்கள். இன்னும் கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7 ஆம் நாள் இந்த கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படுகின்றது. திரு ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினம் தெளிவாக அறிய படாத நிலையில், தங்களுக்கு என்று ஒரு நாளை தேர்ந்தெடுத்து பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுகின்றனர்.


கிறிஸ்தவ அறிஞராக தன்னை காட்டி கொள்ள முயலும் நமது நண்பர் திரு உமர் அவர்கள், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறாரா?, இன்னும் அவர் கிறிஸ்மஸ் தினமாக டிசம்பர் மாதம் 25 ஆம் நாள், அல்லது ஜனவரி 7 ஆம் நாள் என்ற இரண்டில் எதனை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது நாம் அறியாத விவரம். இதனை தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு அவர் நமக்கு தெளிவாக்குவார் என்று எதிர்பார்போம்.    




பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுப்பூர்வமானதா?
கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாத பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 ஆம் நாள், அல்லது ஜனவரி 7 ஆம் நாள் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும் ஆய்வுக்குட்படுத்த எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையை நாடியவர்களாக முனைகிறோம்.


வரலாற்று ஒளியில் கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸின் தோற்றம்
ஆரம்ப கால கிறிஸ்தவ சமுதாயத்தில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்பட்டதாக எந்த தெளிவான ஆதாரத்தையும் நம்மால் அறிய முடியவில்லை. கிறிஸ்துமஸ் தினம், மரபுவழி கொண்டாட்டங்களில் இருந்து வந்ததே அன்றி, திரு இயேசு அவர்களின் உண்மையான பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதற்கு எந்த தெளிவான ஆதாரத்தையும் நம்மால் காண முடியவில்லை. மேலும், கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள், புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோ பீடியா(encyclopedia) அறிவிப்பதை நம்மால் காண முடிகிறது.


The Encyclopedia Britannica (1949, article "Christmas") says--

"CHRISTMAS (the 'Mass of Christ') ... Clement of Alexandria (about 200 AD) mentions several speculations on the date of Christ's birth, and condemns them as superstitious... The exact day and year of Christ's birth have never been satisfactorily settled. When the Fathers of the Church in AD 340 decided upon a date to celebrate the event, they wisely (!) chose the day of the Winter Solstice, which was firmly fixed in the minds of the people, and which was their MOST IMPORTANT FESTIVAL."


The Encyclopedia Americana (1946, article "Christmas") says the same--

"CHRISTMAS, the 'Mass of Christ'... In the 5th century the Western Church ordered it to be celebrated forever on the day of the old Roman feast of the Birth of Sol (the Sun)... Among the German and Celtic tribes, the Winter Solstice was considered an important point of the year, and they held their chief festival of Yule 1 to commemorate the return of the burning-wheel (the sun)."


Everyman's Encyclopedia says--

"CHRISTMAS (the Mass of Christ)... It is certain that the time now fixed could not by any possibility have been the period of Jesus' birth. The choice of this season was probably due to the general recognition that the Winter Solstice was the turning point of the year."



விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை, Saturnalia), மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்று அழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (Natalis Solis Invicti, சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக encyclopedia அறிவிப்பதை நம்மால் காண முடிகிறது. இதன் அடிப்படையில், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக கொண்டு, மிக மிக பிந்திய கால கட்டத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்பது தெளிவாகிறது.


செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ (Sextus Julius Africanus) என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால், இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 ஆம் நாள் பிறந்தார் என்ற கருத்து, வரலாற்றில் முன் வைக்கப்படுகின்றது. இந்த கருத்துக்கு ஒரிஜென்’ (Origen Adamantius, c.184/5 – c.253/4) போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்தவ போதகர்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு இருப்பதை நம்மால் அறிய முடிகிறது. கிறிஸ்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென், பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்றும், தனது கடும் கண்டனத்தை வெளியிட்டதை நம்மால் அறிய முடிகிறது.

ரோமப் பேரரசன் கான்ஸ்டான்டின்’ (Constantine the Great, c. 27 February 272 – 22 May 337) காலத்தில் இடம் பெற்ற நைசியன் திருச்சபை பிரகடனத்தில் (Declaration of Nicean Council) சூரியக்கடவுளின் பிறந்தநாள் டிசம்பர் 25 ஆம் நாள் திரு இயேசு அவர்களின் பிறந்தநாளாகவும், சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள் கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டதை நம்மால் அறிய முடிகிறது. .


கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் (Constantinople) அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் (Edward Gibbon) என்கின்ற ஆய்வாளர் அறிவிப்பதை நம்மால் காண முடிகிறது.  

வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் ஜான் கிறிசொஸ்டம்’ (John Chrysostom, c. 347–407) என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதை நம்மால் அறிய முடிகிறது.

மேலும், பேரரசன் சார்லேமக்னே (Charlemagne, c. 742 – 28 January 814, also known as Charles the Great) கி.பி 800 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் முடிசூட்டிக்கொண்டதாலும்,

இன்னும், கி.பி. 1066ல் முதலாவது வில்லியம் இங்கிலாந்து (William I, c. 1028 – 9 September 1087, also known as William the Conqueror) கிறிஸ்மஸ் தினத்தில் முடிசூட்டிக்கொண்டதாலும், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதை நம்மால் காண முடிகிறது.

மத்திய கால கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபைகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் - பாப்பரசின் ஆடம்பரம் என்று விமர்சித்து இருக்கிறது.

தூய்மைவாதிகள் (Puritans) எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி என்று மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கும் விவரத்தையும் நம்மால் அறிய முடிகிறது.

மேலும் கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்தவ பிரிவினர், ஒலிவர் க்ரோம்வேல் (Oliver Cromwell, 25 April 1599 – 3 September 1658) மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்தவ கொண்டாட்டங்களை தடைசெய்த விவரமும் நமக்கு கிடைக்கிறது.

இன்றும் கூட சில அங்கிலிகன் திருச்சபை கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை.

தூய்மைவாத கிறிஸ்தவ பிரிவினரால் கி.பி. 1659-1681 காலப்பகுதியில் புதிய இங்கிலாந்தின் பொஸ்டன் நகரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்ட விவரங்களை இணையதளங்கள் வளங்குகின்றனா.

மேலும் அமெரிக்க புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை உயிர்ப்பிப்பதில் எழுத்தாளர் வாசிங்டன் இர்விங் (Washington Irving, April 3, 1783 – November 28, 1859) எழுதிய “The Sketch Book of Geoffrey Crayon”, “Old Christmas” என்கின்ற சிறுகதை நூற்களும், அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மனியர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. எனினும், இர்விங் தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் கற்பனையானவை என்கின்ற விமர்சனமும் எழுந்தது.

சுருக்கமாக சொல்வது என்றால், கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 ஆம் நாள் மித்ரா என்கின்ற சூரியக்கடவுளின் பிறந்தநாளாகும். சடுர்நலியா என்கின்ற குளிர்கால பண்டிகையை தழுவியே, பெரியவர்களுக்கு மெழுகவர்த்தியும், சிறியவர்களுக்கு பொம்மைகள் வழங்குகின்ற கலாச்சாரமும் பரிசுப்பரிமாற்றங்களும், களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகளும்; மதுஅருந்துகின்ற வழக்கமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது இடம்பிடித்தன என்ற விவரங்களை இணையதள வாயிலாக நம்மால் அறிய முடிகிறது.

இதன் அடிப்படையில்,  வரலாற்று வாயிலாக, கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாட்டங்கள், கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது தெளிவாகுகிறது என்று நம்புகிறோம்.. இந்த கருத்துக்கு மறுப்பு அளிக்க திரு உமர் அவர்கள் விரும்பினால், தெளிவான பைபிள் வசன ஆதாரங்களை முன் வைத்து திரு ஈஸா (அலை) அவர்கள் பிறந்த தினம் டிசம்பர் 25 ஆம் நாள் என்பதை தெளிவாக்குவார் என்று நம்புகிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் நாடினால் மிக விரைவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை பைபிள் மற்றும் திரு குர்ஆன் வாயிலாக அடுத்த பாகத்தில் காண்போம். இன்ஷா அல்லாஹ்...

அஸ்ஸலாமு அழைக்கும்.

- ஜியா & அப்சர்     


துணை நின்றவை:

  1.  http://biblelight.net/sukkoth.htm
  2. http://en.wikipedia.org/wiki/Christmas
  3. http://www.antipas.org/books/xmas/xmas2.html
  4. Encyclopaedia - http://books.google.co.in/books?id=INJI4FGeLpYC&pg=PA609&lpg=PA609&dq=The+Encyclopedia+of+Religion+and+Ethics+christmas&source=bl&ots=7YI-uy3jgW&sig=zbmXQSaLhKxLJ0ExgjhlSA7fdqM&hl=en&sa=X&ei=1rn5Tr_vF4jTrQe9h-nzDw&ved=0CCwQ6AEwAA#v=onepage&q&f=false
  5. திரு முஹம்மத் அர்ஷத் என்ற சகோதரர் அனுப்பிய தொடர் மின் அஞ்சல்
  6. இயேசு நாதர் - மறைக்கப்பட்ட உண்மைகள் ஆசிரியர் - கேப்டன் அமிருத்தீன்

No comments: