பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
“கிறிஸ்மஸ் பாகம் 2 – பைபிள் மற்றும் திரு குர்ஆன் பார்வையில்
கிறிஸ்மஸ் கொண்டாட்டம்”
வாசகர்களே, வரலாற்று வாயிலாக, கிறிஸ்மஸ்
பண்டிகை டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள், கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல.
மாறாக, புறஜாதியினருடைய
பண்டிகை என்பதனை தெளிவான ஆதாரம் கொண்டு இதற்க்கு முந்தைய “கிறிஸ்மஸ்
பாகம் 1 – வரலாற்று பார்வையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்”
என்ற கட்டுரையில் முலம் தெளிவாகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இதன்
தொடர்ச்சியாக இந்த கட்டுரை பைபிள் மற்றும் திரு குர்ஆன் வாயிலாக கிறிஸ்மஸ் எனும்
திரு ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினா பின்னணிகளை எல்லாம் வல்ல ஏக இறைவனின்
கிருபையாய் நாடியவர்களாக ஆராய் முனைவோம். 
பைபிளின் ஒளியில்..
And it came to pass in those days, that
  there went out a decree from Caesar Augustus, that all the world should be
  taxed. (And this taxing was first made when Quirinius was governor
  of Syria.) And all went to be taxed, every one into his own city. And Joseph also went up from Galilee, out of the city of
  Nazareth, into Judea, unto the city of David, which is called Bethlehem;
  (because he was of the house and lineage of David:) To be taxed with Mary his espoused wife, being great with
  child. And so it was, that, while they were there, the days were
  accomplished that she should be delivered. And she brought forth her firstborn son, and wrapped him in
  swaddling clothes, and laid him in a manger; because there was no room for them in the inn. And there were in the same country shepherds abiding in the
  field, keeping watch over their flock by night. (Luke
  2:1-8) 
 | 
 
மேலே கோடிட்ட பைபிள்
வசனம், திரு இயேசு அவர்களின் தாயார், திரு மரியம் அவர்கள், திரு ஜோசப் என்பவரின்
துணையோடு கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம்
என்னும் தாவீதின் ஊருக்குப் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட தூரம் பிரயாணம்
செய்துள்ளதாக பைபிள் கூறுகின்றது. போக்குவரத்து வசதிகள் குன்றிய அக்காலகட்டத்தில் திரு
மரியம் அவர்கள் மேற்கொண்ட பயணம் மிகக் கடினமானது என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இருக்க முடியாது.
இந்த விவரத்தில் நமக்கு எழும் சந்தேகம்
என்னவென்றால், பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் மாதம் 25 காலப்பகுதியில் பனி உறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும்.
அக்காலகட்டத்தில் பெரும் பாலும் வாணிபக்கூட்டம் உள்ளிட்ட எவரும் நெடும் பயணங்கள் மேற்கொள்ள
முனைவது இல்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத
குளிர்காலத்தில் மன்னர் அகஸ்டஸ் இப்படிப்பட்ட கட்டளையை விடுத்து இருப்பாரா என்பது சந்தேகத்தை
எழுப்புகிறது. இருப்பினும் இது இந்த கட்டுரையின் சாராம்சம் அல்ல...
லூக்கா சுவிசேஷம் 2:8 வசனம்
குறிப்பிடுகின்ற ‘அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக்
கொண்டிருந்தார்கள்’ என்கின்ற வசனத்தை நாம் கவனிக்க நேரிட்டால் நமக்குள் பல கேள்விகள்
எலும்புகின்றனா...
உதாரணமாக, பனி உறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள்
வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின்
பிற்பகுதியிலேயே வயல்வெளிகளில் தங்கி, மந்தையைக் காத்து வருவது (கிடை
கட்டுவது) வழக்கத்தில் உள்ளது. அதன் மூலம் அறுவடை முடிந்த விளைநிலங்களை, அடுத்த
வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கத்தில் உள்ள முறை ஆகும்.
எனவே, பைபிளின் கூற்றுப்படி திரு இயேசு
அவர்களின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாக இருக்க வேண்டும். மாறாக, குளிர்காலமான டிசம்பர் 25 ஆக இருக்க
வாய்ப்புகள் குறைவு.
இது குறித்து Joe Kovacs
என்கின்ற
பத்திரிகை எழுத்தாளர் தனது ‘Shocked by the Bible’ எனும் நூலில் திரு இயேசு அவர்கள் டிசம்பர்
மாதம் 25 ஆம் நாள் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிப்பதை
நம்மால் காண முடிகிறது.
திரு இயேசு அவர்களின் பிறந்த தினம் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள்
அல்ல என்பதற்கு ரூபகாரம்- 1.
பைபிள் அடிப்படையில், இயேசு கிறிஸ்துவுக்கு
முன்னோடியான திரு யோவான் ஸ்நானகன் (John the
Baptist) அவர்கள், திரு இயேசு அவர்களுக்கு, வயதிலேயே
ஆறு மாதங்களுக்கு மூத்தவர். எப்படியெனில் காபிரியேல், இயேசுவின் தாயாராகிய மரியாளுக்கு
வாழ்த்துதல் கூறும் வேளையில், திரு யோவான் ஸ்நானகனின் தாயாகிய எலிசபெத்துக்கு இது
ஆறாம் மாதம் என்று அறிவித்து இருக்கிறார் (Luke 1:26-27). 
And in
  the sixth month of Elisabeth’s pregnancy, the angel Gabriel was sent from God
  unto a city of Galilee, named Nazareth, To a virgin espoused to a man whose name was Joseph, of the
  house of David; and the virgin's name was Mary. (Luke 1:26-27) 
 | 
 
ஆகவே, திரு இயேசு அவர்களின் பிறந்த தினத்தை அறிய திரு யோவான் ஸ்நானகனின் பிறப்பு பற்றிய குறிப்புகளை அறிவது அவசியம் ஆகிறது, இன்னும் இதற்க்கு தொடர்புடைய யோவான் ஸ்நானகனின் தந்தை திரு ஜக்கரியாவின் தேவாலைய ஊழியம் பற்றிய குறிப்புகளை அறிவது அவசியம் ஆகிறது.
ஜக்கரியாவின் தேவாலைய ஊழியம் பற்றிய
குறிப்புகள்:
There was in the days of Herod, the
  king of Judea, a certain priest named Zachariah, of the course of
  Abia: and his wife was of the daughters of Aaron, and her name was Elizabeth.
  And they were both righteous before God, walking in all the
  commandments and ordinances of the Lord blameless. And they had
  no child, because Elizabeth was barren, and they both were now well advanced
  in years. And it came to pass, that while he executed the priest's
  office before God in the order of his course, According to the custom of the
  priest's office, his lot was to burn incense when he went into the temple of
  the Lord. And the whole multitude of the people were praying
  outside at the time of incense. And there appeared unto him an angel of the
  Lord standing on the right side of the altar of incense. And when Zachariah
  saw him, he was troubled, and fear fell upon him. But the angel said unto
  him, Fear not, Zachariah: for your prayer is heard; and your wife Elizabeth
  shall bear you a son, and you shall call his name John. And you shall have
  joy and gladness; and many shall rejoice at his birth. For he shall be great
  in the sight of the Lord, and shall drink neither wine nor strong drink; and
  he shall be filled with the Holy Spirit, even from his mother's womb. And
  many of the children of Israel shall he turn to the Lord their God. And he
  shall go before him in the spirit and power of Elijah, to turn the hearts of
  the fathers to the children, and the disobedient to the wisdom of the just;
  to make ready a people prepared for the Lord. And Zachariah said unto the
  angel, How shall I know this? for I am an old man, and my wife well advanced
  in years. And the angel answering said unto him, I am Gabriel, that stands in
  the presence of God; and am sent to speak unto you, and to show you these
  glad tidings. And, behold, you shall be dumb, and not able to speak, until
  the day that these things shall be performed, because you believe not my
  words, which shall be fulfilled in their time. (Luke 1:5-20) 
 | 
 
மேலே கோடிடபட்ட பைபிள் வசனங்களில் “அபியா” என்ற
ஆசாரிய முறைமையில் திரு “ஜக்கரியா” அவர்கள் இருந்தார் என்றும், இன்னும் “ஜக்கரியா”
தன் ஆசாரிய முறைமையின் அடிப்படையில், தேவ சந்நிதியிலே தூபங்காட்டுவதற்க்கு தன் முறை சீட்டைப் பெற்றார்
என்றும் அறிவிக்கிறது. இதன் அடிப்படையில், திரு யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய திரு “ஜக்கரியா” அவர்கள் ஆலயத்திலே
ஊழியம் செய்த, அந்த
“அபியா”வின் முறை என்னவென்றும், அந்த காலகட்டத்தின் பின்னணியை பற்றிய குறிப்புகளை அறிவது அவசியம்
ஆகிறது.
King David on God's instructions (1 Chr 28:11-13) had
  divided the sons of Aaron into 24 groups (1
  Chr 24:1-4), to setup a schedule by which
  the Temple of the Lord could be staffed with priests all year round in an
  orderly manner. After the 24 groups of priests were established, lots were
  drawn to determine the sequence in which each group would serve in the
  Temple. (1 Chr 24: 7-19). That sequence is as follows:  
 1 Chr 24:19 These were the orderings of them in their service to come into the house of the LORD, according to their manner, under Aaron their father, as the LORD God of Israel had commanded him. Now each one of the 24 "courses" of priests would begin and end their service in the Temple on the Sabbath, a tour of duty being for one week (2 Chr 23:8, 1 Chr 9:25). On three occasions during the year, all the men of Israel were required to travel to Jerusalem for festivals of the Lord, so on those occasions all the priests would be needed in the Temple to accommodate the crowds. Those three festivals were Unleavened Bread, Pentecost, and Tabernacles (Deut 16:16). The Yearly Cycle of Service in the Temple. 
The Jewish calendar begins in the spring, during the month of Nisan,
  so the first "course" of priests, would be that of the family of
  Jehoiarib, who would serve for one week, Sabbath to Sabbath. The second week
  would then be the responsibility of the family of Jedaiah. The third week
  would be the feast of Unleavened Bread, and all priests would be present for
  service. Then the schedule would resume with the third course of priests, the
  family of Harim. By this plan, when the 24th course
  was completed, the general cycle of courses would repeat. This schedule would
  cover 51 weeks or 357 days, enough for the lunar Jewish
  calendar (about 354 days). So, in a period of a year,
  each group of priests would serve in the Temple twice on their scheduled
  course, in addition to the 3 major festivals, for a total of
  about five weeks of duty. 
The Conception of John the Baptist. 
Now back to Zacharias, the father of John the Baptist. 
Luke 1:23 And it came to pass, that, as soon as the days of his ministration
  were accomplished, he departed to his own house. 
Luke 1:24 And after those days his wife Elisabeth conceived, ... 
Beginning with the first month, Nisan, in the spring (March-April),
  the schedule of the priest's courses would result with Zacharias serving
  during the 10th week of the year. This is because he was a member of the course of
  Abia (Abijah), the 8th course, and both the Feast of
  Unleavened Bread (15-21 Nisan) and Pentecost (6 Sivan)
  would have occurred before his scheduled duty. This places Zacharias'
  administration in the Temple as beginning on the second Sabbath of the third
  month, Sivan (May-June). 
 
Having completed his Temple service on the third Sabbath of Sivan,
  Zacharias returned home and soon conceived his son John. So John the
  Baptist was probably conceived shortly after the third Sabbath of the month
  of Sivan. 
 | 
 
அதாவது திரு “தாவீது” அரசனின் காலத்தில்
ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய, முறைமை வகுக்கப்பட்டது, எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24
ஆசாரிய குழுக்கள் ஹரூன் அவர்களின் சந்ததியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு,
அவர்களில் வாரம் ஒரு குழு ஊழியம் செய்யும் முறை வகுக்கப்பட்டது. யூதா கால ஏடு
கணக்கின் அடிப்படையில் திரு “ஜக்கரியா” அவர்கள் ஊழியம் செய்த காலம், யூதா ஆண்டு
துவக்கத்தில் இருந்து பத்தாவது வாரமாக இருக்கவேண்டும். அதாவது யூதா “சிவன்” மாதம்,
ஆங்கில “மே” – “ஜூன்” மாதம். 
And it came to pass, that, as soon as the days of his
  service were accomplished, he departed to his own house.
  And after those days his wife Elizabeth
  conceived, and hid herself five
  months, saying, (Luke 1:23-24) 
 | 
 
பைபிள் வசனத்தின் அடிப்படையில், திரு
“ஜக்கரியா” அவர்கள் தன் ஊழியம் முடிந்து விடு திரும்பிய வேளையில் அவருடைய மனைவி
கருவுற்றாள் என்ற கருத்தின் அடிப்படையில், திரு “ஜக்கரியா” அவர்களின் மனைவி
கருவுற்றது யூதா “சிவன்” மாதத்தின் முன்றாவது ஸபத்திற்க்கு பிறகே என்பது
தெளிவாகிறது. இதன் அடிப்படையில், திரு “ஜக்கரியா” அவர்களின் மனைவி கருவுற்ற யூதா
“சிவன்” மாதத்தின் முன்றாவது ஸபத்து தினத்தில் இருந்து, பிரசவ பத்து லூனார்
மாதங்களை (நாற்ப்பது வாரங்களை) கணக்கிட்டால், அது யூதா “நிசான்” மாதத்தை
வந்தடையும். இந்த மாதத்தின் மத்தியில் திரு யோவான் ஸ்நானகன் (John the Baptist) அவர்கள் பிறந்து இருக்க வாய்ப்புகள் அதிகமாக
உள்ளது.
திரு இயேசு அவர்கள், திரு யோவான் ஸ்நானகன் (John the Baptist) கருவுற்ற
ஆறாம் மாதம் கருவுற்றதாக பைபிள் அறிவிப்பதன் அடிப்படையில், திரு யோவான் ஸ்நானகன் (John the Baptist) பிறந்த யூதா “நிசான்” மாதத்தின் மத்தியில்
இருந்து, திரு இயேசு அவர்களின் பிறப்பிற்க்கு எஞ்சி இருக்கும் ஆறு மாத கற்பா லூனார்
மாதங்களை கணக்கிட்டால், அது யூதா டிஸ்ரி (tishri)
மாத பதினைந்தாம் தேதியை வந்தடையும். அந்த நாள் தபெர்ணக்லஸ் (tabernacles) என்ற யூதா ஆண்டின்
இறுதி முன்றாம் பண்டிகையின் நாளை வந்தடையும். இந்த நாள் யூதர்கள் ஜெருசலம் நகர
தேவாளையத்தில் ஒன்று கூடும் நாள் ஆகும் (Lev 23:34). மக்கள் அனைவரும் ஜெருசலம் நகரத்தில்
ஒன்று கூடியத்தின் விளைவாக, சுற்று வட்டார இடங்கள் நிறைந்து வலிந்ததினால், திரு
மேரி அவர்களுக்கு பிரசவ வேளையில் தங்க இடம் கிட்டாமல் போனது போலும் (Luke 2:1-8). 
இன்னும் தபெர்ணக்லஸ் (tabernacles) விருந்து கொண்டாட்டம் எட்டு நாட்கள் கொண்டது, இதனாலே
திரு இயேசு அவர்களின் விருத்தசேதனம் பிறந்த எட்டாவது நாளான, இன்னும் தபெர்ணக்லஸ் (tabernacles) விருந்து கொண்டாட்டத்தின் கடைசி நாளான ஸபத்து தினத்தில்
நடந்திருக்க கூடும் (Luke 2:21).       
யூதா மாதம் – ஆங்கில மாத பட்டியல்  
  | 
 
மேலே தொடுக்க பெற்ற
விவரங்களின் அடிப்படையில் திரு இயேசு அவர்களின் பிறப்பு ஆங்கில செப்டம்பர் –
அக்டோபர் கால மத்தியில் அமைந்து இருக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பது
தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.. 
திரு இயேசு அவர்களின் பிறந்த தினம் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள்
அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.
திரு இயேசு அவர்களின் மரண நாள் யூதர் கால
அட்டவணை அடிப்படையில் “நீசான்” மாதம் 14-ம் நாள் என்று கிறிஸ்தவ அறிஞ்சர்கள்
அறிவிக்கிறார்கள். யூதா முதல் மாதமாகிய “நீசான்” மாதம், நமது தமிழ் மாதமான “பங்குனி”
மாதத்திற்கு ஏறத்தாள சமமானது. ஆங்கில மாதம் “மார்ச்” கடைசியிலோ அல்லது “ஏப்ரல்”
மாதம் துவக்கதிலோ பெரும்பாலும் இது அமைந்து இருக்கும். இயேசு தமது 33½ வயதில் மரணித்தார் என்று பைபிள்
விரிவுரையாளர்கள் அறிவிக்கிறார்கள். இன்னும் இது “மார்ச்” மாதக் கடைசியிலோ அல்லது “ஏப்ரல்”
மாத துவக்கதிலோ அமைந்து இருக்கிறது என்று அறிவிக்கிறார்கள். மரணிக்கும் வேளையில்,
திரு இயேசு அவர்களுக்கு 33½ வயது என்பதின்
அடிப்படையில், அவரது
பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக அமைந்து இருக்க வேண்டும். எனவே, மார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி 6
மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5, அக்டோபர் 6. எனவே, திரு இயேசு அவர்கள் பிறந்தது டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் மாதத்தில்
என்பது தெளிவாகுகிறது.
திரு இயேசு அவர்களின் பிறந்த தினம் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள்
அல்ல என்பதற்கு ரூபகாரம்-3.
திரு இயேசு அவர்கள் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள்
பிறக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. அதாவது, திரு இயேசு அவர்கள் பிறந்த வேளையில், அவரது
பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என பைபிள் அறிவிக்கிறது. தேவ
தூதர் மேய்ப்பர்களுக்கு தரிசனம் தந்த வேளையில் அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு
மந்தைகளை வைத்திருந்தார்கள் (லூக்.2:8:11). நமது நாட்டில் டிசம்பர் மாதம் குளிர்
காலமாக இருப்பது போல், பலஸ்தீனத்தில் டிசம்பர் மாதம் (யூதா கிஸ்லேவ் (KISLEV) ஒன்பதாம் மாதம்) கடும் குளிரானதாக இருக்கிறது. இன்னும், அது அடைமழை
காலமாகவும், குளிர்காலமாகவும்
இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்த
வாய்ப்பு மிக குறைவு. இதனை எஸ்றாவின் புத்தகத்திலும், பலஸ்தீனா சரித்திரங்களிலும் நாம் காணலாம் (எஸ்றா. 10:9,13: எரே.3:22)
எனவே, மேய்ப்பர்கள், வயல்வெளியில்
தங்கியிருந்த காலம், மழை காலமாகிய டிசம்பர் மதத்திற்கு முந்தின காலமாக இருக்க
வேண்டும். அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம், இன்னும்
அதுவே வழக்கத்தில் உள்ளது. எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முந்தியா அக்டோபர்
மாதம் என்பது தெளிவாகுகிறது.
திரு இயேசு அவர்களின் பிறந்த தினம் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள்
அல்ல என்பதற்கு ரூபகாரம்- 4.
மேலும், சில காரியங்களை கவனிப்போமானால் இந்த
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம், திருச்சபையின் தொடக்க காலங்களில்
இல்லை. வெகு நூற்றாண்டுகளுக்கு பிறகே கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் முறையாக கொண்டாடப்பட்டதாக
(Encyclopaedia) மூலமாக
அறியபடுகிறது. இதை ஆதி திருச்சபை வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது. அதாவது
வடஜரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர், கிறிஸ்து மார்க்கத்தை தழுவும்
முன்னே, அவர்கள்
இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள். சூரியனை வணங்கி அதன் கால மாற்றங்களை
பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பில், சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து
வடக்கு நோக்கி சஞ்சரித்து டிசம்பர் 22 ஆம் நாள் வடஅட்சத்தில் கடகரேகையை அடைகிறது.
இது வட ஐரோப்பாவில் சூரியன் தென்படும் உச்ச நிலையாகும். இது ஜுலியன் அட்டவணை
அடிப்படையில் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் என கணிக்கபட்டது. ஆகவே, அந்த தினத்திலே, அங்கு வாழ்ந்த மக்கள்
சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக ‘ஒளித்திருவிழா’ (Festival of Fires) என்று கொண்டாடி வந்தனர். இதன்
தொடர்ச்சியாக அதிலிருந்து 8 ஆம் தினம் ‘மகிழ்ச்சி திருவிழா’ (Joy Festival) என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர்.
ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள், தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும், தங்கள்
பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால், டிசம்பர் மாதம் 25 ஆம் தினம் கிறிஸ்து
பிறந்த நாளாகவும், அதிலிருந்து 8 ஆம் தினம் ஜனவரி முதல் தேதி திரு இயேசு அவர்களின்
விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.
வாசகர்களே, திரு இயேசு அவர்களின் பிறந்த தினம் கொண்டாட
பட வேண்டும், என்று வேதத்தில் எங்கும் தெளிவாக இருப்பதாக நம்மால் காண முடியவில்லை.
இன்னும் திரு இயேசு அவர்களின் சீடர்களும் இதை போன்று கொண்டாட்டங்கள் களியாட்டங்கள்
செய்ததாக நம்மால் அறிய முடியவில்லை. இதற்க்கு மாறாக கிறிஸ்துவின் மரண நாளை நினைவு கூறும்படி
பைபிள் அறிவுர்துகிறது (லூக். 22:19). 
பைபிள் எந்த வசனமும், திரு இயேசு
அவர்களின் பிறந்த தினத்தை திட்டவட்டமாக அறிவிப்பதாக நம்மால் அறிய முடியவில்லை,
மாறாக பைபிள் வசனங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் வேளையில், திரு இயேசு அவர்கள் கோடைகாலத்தின்
இறுதிப்பகுதியில் பிறந்து இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை நம்மால் அறிய
முடிகிறது. இது இந்த கட்டுரையில் முன் வைத்த தெளிவான ஆதாரங்கள் கொண்டு தெளிவாகி
இருக்கும் என்று நம்புகிறோம். 
திரு குர்ஆன் ஒளியில்..
திரு குர்ஆன், திரு இயேசு அவர்களின்
இயற்பெயாரான “ஈஸா” என்ற பெயரிலே அவரை அழைக்கிறது.
இன்னும், ‘அவர்
மீது சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்று முஸ்லிம்கள் வாழ்த்து
கூறுகின்றார்கள். இறைவேதம் திரு குர்ஆனின் 19 வது அத்தியாயம் அன்னாரின் அருமைத்
தாயார் “மர்யம்” அவர்களின் இயற் பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின்
22-26 வசனங்கள் திரு ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு பற்றிய பின்னணிகளை விவரிக்கிறது.
இதோ இறைமறையின் வார்த்தைகள்…
19:22 فَحَمَلَتْهُ فَانتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا 
19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். 
19:23
    فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَىٰ جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا
  لَيْتَنِي مِتُّ قَبْلَ هَٰذَا وَكُنتُ نَسْيًا مَّنسِيًّا 
19:23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை
  அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும்
  மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று
  கூறி(அரற்றி)னார். 
19:24
    فَنَادَاهَا مِن تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ
  تَحْتَكِ سَرِيًّا 
19:24. (அப்போது ஜிப்ரீல்)
  அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்!
  உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை
  உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார். 
19:25
    وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا
  جَنِيًّا 
19:25. “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக்
  குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது
  அது உதிர்க்கும். 
19:26   فَكُلِي
  وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا ۖ فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا
  فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَٰنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ
  إِنسِيًّا 
19:26. “ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண்
  குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால்,
  “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக
  நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த
  மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும். 
 | 
 
திருமறை குர்ஆன் குறிப்பிடுகின்ற பேரீச்சம்
பழம் உதிரக்கூடிய காலம் கோடையின் பிற்பகுதியாகும். இதன் அடிப்படையில் திரு குர்ஆன்
மற்றும் பைபிள் இயேசுவின் பிறப்பு பற்றிய ஒத்த கருத்தான கோடை காலத்தின்
இறுதிப்பகுதி என்று அறிவிப்பது தெளிவாகுகிறது. மாறாக, கிறிஸ்த்தவ அன்பர்கள்களால் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகின்ற டிசம்பர் மாதம் 25
ஆம் நாள், என்பது
பைபிள் மற்றும் திருக்குர்ஆனுக்கு அறிவிக்கும் விவரங்களுக்கு முற்றிலும் முரணானது.
இறுதியாக, கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் என்பது திரு இயேசு அவர்களுக்கு தெரியாத, பண்டையா கிறிஸ்த்தவர்கள் அறியாத, பைபிள் கூறாத ஓரு விஷயமாகும். பண்டையா கிறிஸ்த்தவர்கள் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் என்பது, ரோமானிய சூரியக்கடவுளான மித்ராவின் பிறந்தநாள் என்றுதான் அறிந்து வைத்திருந்தனர். எனவே, டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் அன்று கொண்டப்பட்ட, புறஜாதிப் பண்டிகையான சூரியக் கடவுள் மித்ராவின் பண்டிகையையே, கிறிஸ்த்தவர்கள் கொண்டாடுகின்றனர் என்பது இந்த கட்டுரை முலம் தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். உண்மைக் கிறிஸ்த்தவர்கள் சிந்திப்பார்களா?
But examine all things; hold fast to what is good. (1 Thessalonians 5:21) 
 | 
 
இந்த கருத்துக்கு மறுப்பு அளிக்க திரு உமர் அவர்கள் விரும்பினால், தெளிவான பைபிள் வசன ஆதாரங்களை முன் வைத்து திரு ஈஸா (அலை) அவர்கள் பிறந்த தினம் டிசம்பர் 25 ஆம் நாள் என்பதை தெளிவாக்குவார் என்று நம்புகிறோம்.
எல்லாம் வல்ல
இறைவன் நாடினால் மிக விரைவில் மீண்டும் சந்திப்போம்... இன்ஷா அல்லாஹ்...
அஸ்ஸலாமு அழைக்கும்.
- ஜியா & அப்சர்     
துணை நின்றவை:
- http://biblelight.net/sukkoth.htm
 - http://en.wikipedia.org/wiki/Christmas
 - http://www.antipas.org/books/xmas/xmas2.html
 - என்சய்ச்லோபேடியா - http://books.google.co.in/books?id=INJI4FGeLpYC&pg=PA609&lpg=PA609&dq=The+Encyclopedia+of+Religion+and+Ethics+christmas&source=bl&ots=7YI-uy3jgW&sig=zbmXQSaLhKxLJ0ExgjhlSA7fdqM&hl=en&sa=X&ei=1rn5Tr_vF4jTrQe9h-nzDw&ved=0CCwQ6AEwAA#v=onepage&q&f=பாலசே
 - திரு முஹம்மத் அர்ஷாத் என்ற சகோதரர் அனுப்பிய தொடர் மீன் அஞ்சல்
 - இயேசு நாதர் - மறைக்கப்பட்ட உண்மைகள் ஆசிரியர் - கேப்டன் அமிருத்தீன்
 
--
--
No comments:
Post a Comment