பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயர் அல்லாஹ் என்று சாட்சி அளித்த திரு உமர் அவர்கள்.
திரு உமர் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்னர் "எஸ்றா அல்லாவின் குமாரனா?" யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். அந்த கட்டுரையில் திரு குர்ஆன் வசனம் 9.30 கோடிட்டு இருந்தார்கள்.
திரு குர்ஆன் 9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? |
மேலே கோடிட்ட திரு குர்ஆன் வசனத்தை திரு உமர் அவர்கள் அறிவித்துவிட்டு இவ்வாறு தன்னுடைய கருத்தை அறிவித்து இருந்தார்கள்.
1. கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள் ; கிறிஸ்தவர்கள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. காரணம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, இந்த 21ம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, " இயேசு தேவனுடைய குமாரன் " என்று சொல்கிறார்கள். இதிலும், கிறிஸ்தவர்கள் சொல்லும் "இயேசு தேவனுடைய குமாரன்" என்பது ஒரு ஆன்மீக முறையில் குமாரன் என்று சொல்கிறோம். ஆனால், முஸ்லீம்கள் அல்லது குர்-ஆன் சொல்வது, சரீர பிரகாரமான உறவு முறையில் இயேசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் கருதுவதாக குர்-ஆன் சொல்கிறது. இந்த தற்போதைய கட்டுரையின் கருப்பொருள் இது அல்ல. பைபிள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்வதற்கும், "இயேசு தேவனுடைய குமாரன்" என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் என்று குர்-ஆன் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை தனி கட்டுரையில் காணலாம். |
திரு உமர் அவர்கள் மேலே மூன்று விவரத்தை நமக்கு அறிவிக்க முயற்சிக்கிறர்கள்.
- திரு குர்ஆன் வசனம் 9:30, கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள், கிறிஸ்தவர்கள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. காரணம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, இந்த 21ம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, " இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்கள்.
- கிறிஸ்தவர்கள் சொல்லும் "இயேசு தேவனுடைய குமாரன்" என்பது ஒரு ஆன்மீக முறையில் குமாரன் என்று சொல்கிறோம். ஆனால், முஸ்லீம்கள் அல்லது குர்-ஆன் சொல்வது, சரீர பிரகாரமான உறவு முறையில் இயேசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் கருதுவதாக குர்-ஆன் சொல்கிறது.
- "இயேசு தேவனுடைய குமாரன்" என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் என்று குர்-ஆன் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை தனி கட்டுரையில் காணலாம்.
திரு உமர் அவர்கள் மேலே அறிவித்த கருத்துகளை, எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையை நாடியவர்களாக ஆராய முனைவோம்...
1 | திரு குர்ஆன் வசனம் 9:30, கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள், கிறிஸ்தவர்கள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. காரணம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, இந்த 21ம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்கள்.
திரு குர்ஆன் வசனம் 9:30, “கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்” என்று அறிவிக்கிறது, இந்த விவரத்தை ஆமோதிக்கும் வண்ணம், திரு உமர் அவர்கள், “கிறிஸ்தவர்கள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்கள் என்று குர்-ஆன் சொல்கிறது இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. காரணம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, இந்த 21ம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சரி, "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்கள்.” என்று அறிவிக்கிறார். இதன் மூலம் திரு உமர் அவர்கள் குர்ஆன் அறிவிப்பதற்கு ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்கள்.
கிறிஸ்தவர்கள் கூறுவதாக திரு குர்ஆன் அறிவிப்பது “(ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன்” என்பதாகும், ஆனால் திரு குர்ஆன் அறிவிப்பதாக திரு உமர் அவர்கள் அறிவிக்க விரும்புவது “கிறிஸ்தவர்கள் இயேசு தேவனுடைய குமாரன் என்று சொல்கிறார்கள்” என்பதாகும். இவ்வாறு அறிவிப்பதின் மூலம் திரு உமர் அவர்கள் தன்னையும் அறியாமல் இஸ்லாமியர்களின் இறைவனாகிய அல்லாஹ்வே, பைபிள்ளின் இறைவன் தேவன்(எலோஹீம்) என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்கள். அவ்வாறு அல்ல என்று திரு உமர் அவர்கள் அறிவிக்க விரும்பி இருந்தால், இதற்க்கு முன்னரே திரு குர்ஆன் அறிவிக்கும் கருத்துக்கு இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும், “திரு குர்ஆன் அறிவிப்பது தவறு, கிறிஸ்தவர்கள் இயேசு அல்லாஹ்வின் மகன் என்று கூறுவது இல்லை, இயேசு தேவனுடைய மகன் என்றே கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள்” என்று.
இவ்வாறு மறுப்பு அறிவிப்பதை தவிர்த்து திரு குர்ஆன் அறிவிக்கும் கருத்தை ஆமோதிப்பது மூலம் இஸ்லாமியர்களின் அல்லாஹுவே கிறிஸ்தவர்களின் தேவன் (எலோஹீம்) என்ற ஒப்புதல் வாக்குமுலத்தை வெளியிட்டுள்ளார்கள். இதனையே கிறிஸ்தவ மொழிபெயற்ப்பாளர்கள் பைபிள்ளின் எலோஹீம் என்ற பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயரை அரபியில் அல்லாஹ் என்று மொழி பெயர்கிறார்கள் என்பதை இதற்க்கு முன்னரே தெளிவான ஆதாரத்தை முன் வைத்து நாம் வெளியிட்டு இருந்தோம். இவ்வாறு தன்னை ஏற்றுகொள்ள மறுக்கும் மனிதர்கள் வாயிலாகவே தன்னை ஏக இறைவனாக ஏற்க செய்வதே போத வில்லையா அல்லாஹ் ஒருவனே எல்லாம் வல்ல ஏக இறைவன் என்பதை உணர???
| ||||
2 | கிறிஸ்தவர்கள் சொல்லும் "இயேசு தேவனுடைய குமாரன்" என்பது ஒரு ஆன்மீக முறையில் குமாரன் என்று சொல்கிறோம். ஆனால், முஸ்லீம்கள் அல்லது குர்-ஆன் சொல்வது, சரீர பிரகாரமான உறவு முறையில் இயேசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் கருதுவதாக குர்-ஆன் சொல்கிறது.
திரு உமர் அவர்கள் பைபிள்ளை உணர்ந்து இந்த கருத்தை அறிவிக்கிறார்களா என்று நமக்கு வியப்பாக உள்ளது, ஏன்னெனில் பைபிள் இவ்வாறு அறிவிக்கிறது:
வாசகர்களே, இயேசு இறைவனின் ஒரே மகன் என்று அறிவிக்க, மேலே கோடிடப்பட்ட பைபிள் வசனத்தில் His only begotten Son என்று அறிவிக்கிறது. Begotten என்ற வார்த்தைக்கு ஆங்கில அகராதி சரீர தொடர்பால் பிறக்கும் சிசு என்ற விளக்கத்தை தருகிறது.
வாசகர்களே, மேலே கோடிட்ட ஆதாரத்தின் அடிப்படையில் பைபிள் இயேசு இறைவனின் சரீர தொடர்பால் பிறந்த சிசு என்ற விவரீக்கிறது, இந்த கருத்தையே திரு குர்ஆன் தெளிவாக எதிர்க்கிறது.
| ||||
3 | "இயேசு தேவனுடைய குமாரன்" என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் என்று குர்-ஆன் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை தனி கட்டுரையில் காணலாம்.
திரு உமர் அவர்கள், பைபிள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்வதற்கும், "இயேசு தேவனுடைய குமாரன்" என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் என்று குர்-ஆன் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை தனி கட்டுரையில் காணலாம் என்று அறிவிக்கிறார்கள், அவ்வாறு அறிவித்து விட்டு திரு உமர் அவர்கள் எந்த கட்டுரையும் கோடிடவில்லை. இதை போன்ற ஒரு கட்டுரையை திரு உமர் அவர்கள் இதற்க்கு முன்னரே வெளியிட்டு இருந்தால் தயவு செய்து எங்களுக்கு அதை முகவரி இட வேண்டுகிறோம், ஆய்வுக்காக....
|
திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில் இவ்வாறு அறிவிகிறர்கள்:
முன்னுரை: குர்-ஆன், பல பைபிள் நிகழ்ச்சிகளை மறுபதிவு செய்துள்ளது. அப்படி மறுபதிவு செய்யும் போது சில நிகழ்ச்சிகளை பைபிளில் விவரித்துள்ளது போலவே சொல்லப்பட்டுள்ளது. மற்றும் சில நிகழ்ச்சிகளை குர்-ஆன் மாற்றி சொல்லியுள்ளது. இப்படி குர்-ஆன் மாற்றிச் சொல்லும் போது பல முரண்பாடுகளை செய்துள்ளது.
குர்-ஆன் இன்னும் ஒரு படி மேலே சென்று கடந்த காலத்தில் நடந்திராத நிகழ்வுகள் நடந்ததாக சொல்கிறது. அப்படி சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சி அல்லது நம்பிக்கை தான் நாம் மேலே படித்த குர்-ஆன் 9:30 வசனம். |
திரு உமர் அவர்களே, திரு குர்ஆன் ஒரு நிகழ்வை அல்லது நடந்தேறிய சரித்திரத்தை விவரிக்கும் பொழுது அது சில இடங்களில் பைபிள் விவரிப்பது போல் அமைந்து இருக்கலாம், இன்னும் சில இடங்களில் பைபிள் அறிவிப்பதற்கு முரணானதாக இருக்கலாம், இதற்க்கு காரணம் திரு குர்ஆன் அறிவிப்பது தவறு என்பதல்ல, பைபிள் ஒரு உண்மையான சரித்திர நூல் களஞ்சியம் அல்ல என்பதனால். பைபிள்ளை கொண்டு உண்மை சரித்திரத்தை அறிய முடியாது என்பதனால், பைபிள் நடந்தேறிய சரித்திரத்தை திரித்து அறிவிக்கிறது என்பதனால், பைபிள் நடந்தேறதா நிகழ்வுகளை விவரிக்கிறது என்பதனால், பைபிள் இறைவனால் அல்ல மனிதர்களால் இயற்ற/திருத்த பெற்ற கோர்ப்பு என்பதனால். இதற்க்கு ஆதாரமாக இதற்க்கு முன்னரே சில கட்டுரைகளை நாம் வெளியிட்டு இருந்தோம், அவற்றுக்கே நீங்கள் இன்னும் தெளிவான ஆதாரம் கொண்டு மறுப்பு அளிக்காத நிலையை உங்களுக்கு நியாபகம் மூட்ட நாங்கள் விரும்புகிறோம்.
பைபிளில் சரித்திர பிழை – பாகம் 1 – இறைத்தூதர் ஆரோன் (அலை) மரணித்தது எங்கே?
பைபிள் அறிவிக்கும் முரணான செய்தி - ஜுதாஸ் மரணித்தது எவ்வாறு?
பைபிள் சரித்திர பிழை என்று கிறிஸ்தவர்களே சாட்சி அளிப்பனவற்றில் சில காண்போம்:
The one thing that is common to all forms of Christianity is the myth of the crucifixion and the resurrection of Jesus. It should be interesting to note that the story of the resurrection did not exist in the earliest manuscripts. Further, the Gospels were composed during times when hundreds of Jews were being crucified each week. They were written for a Greco-Roman audience. If the events did actually happen, the obvious role of the Romans in the trial of Jesus as well as his execution “had to be whitewashed and presented as sympathetically as possible” (Holy Blood, Holy Grail 348). There was absolutely no criticism of Roman oppression, nor any mention of Jewish revolt. The Jews were cast in the role of villains, but this is historically illogical because they (the Sanhedrin) had the right to pass death sentences. They did not need Pontius Pilate. Further, if they had wanted Jesus to be killed, he would have been stoned to death, not crucified. Crucifixion was exclusively used by Rome to execute the enemies of Rome. It was never a Jewish form of capital punishment. If he really was crucified, he did something to provoke Roman wrath, not Jewish wrath.
The three Synoptic Gospels have Jesus being arrested and condemned by the Sanhedrin on the night of the Passover. This could not be real history because the Sanhedrin, by Judaic law, were forbidden to meet over Passover. The Gospels state that the arrest and trial occurred at night, but the Sanhedrin “were forbidden to meet at night, in private houses, or anywhere outside of the precincts of the temple” (Holy Blood, Holy Grail 349).
The story of Barabbas being freed in exchange for Jesus is pure fiction. Two Gospels describe a Roman custom of freeing a prisoner during Passover festival, but no such policy ever existed on the part of the Romans. A Roman procurator, especially someone as ruthless as Pilate, would likewise never consent to the pressure of a mob.
Pontius Pilate, as he is depicted in the Gospels, appears to be a decent person who consents only reluctantly to the crucifixion of Jesus. History paints a different picture of him. He was a procurator of Judea from A.D. 26 o 36, and he was a cruel and corrupt man. Why is there no criticism of him in the Gospels?
Another historical impossibility in the crucifixion story is the removal of the body of Jesus from the cross. According to Roman law at the time, a crucified man/woman was denied burial. The person was left to the elements, birds, and animals, which completed the humiliation of this form of execution.
The punishment for robbery was not crucifixion. The New Testament accounts of the crucifixion depict two thieves being crucified along with Jesus. Crucifixion was never the penalty for robbery. On the other hand, the Romans spoke of Zealots as 'Robbers' in order to defame them. Zealots were crucified because of their crimes against the Roman empire.
Ref: http://www.hiddenmysteries.org/religion/christianity/realhistory.shtml |
திரு உமர் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் “திரு குர்ஆன் 9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்” என்று எல்லாம் வல்ல இறைவன் அறிவிப்பது தவறு என்பதை அறிவிக்க இந்த விவரங்களை முன் வைக்க விரும்புகிறார்...
இப்படி யூதர்கள் சொன்னார்களா?
1 | பழைய ஏற்பாட்டு யூதர்கள் சொல்லியிருப்பார்களா? | |
| | "ஓர் இறைக்கொள்கையை" மிகவும் தீவிரமாக நம்பும் யூதர்கள் இப்படி சொல்ல வாய்ப்பு உள்ளதா? |
2 | புதிய ஏற்பாட்டு யூதர்கள் சொல்ல வாய்ப்பு இருக்கிறதா? | |
| | இயேசுவோ அல்லது அவரது சீடர்களோ "யூதர்கள் இப்படி நம்புகிறார்கள்" என்று ஏதாவது புதிய ஏற்பாட்டில் சொன்னார்களா? அல்லது கண்டித்தார்களா? |
3 | இந்த 21ம் நுற்றாண்டு யூதர்கள் சொல்கிறார்களா? |
வாசகர்களே, திரு உமர் அவர்கள், யூதர்களை மற்றும் யூதர்களின் நம்பிக்கையை அறிந்து கொள்ள பைபிள் கோர்பை அளவு கோலாக எடுத்து கொள்ள நம்மை பணிக்கிறார். யூதர்களே பைபிள்ளை/பழைய ஏற்பாட்டை தம்முடைய வேதமாக அங்கிகரிக்காத நிலையில் பைபிள் கோர்பை எப்படி நாம் யூதர்களின் நம்பிக்கையை அறிய அளவு கோலாக ஏற்று கொள்ள முடியும் என்பதை திரு உமர் அவர்கள் தான் நமக்கு அறிவிக்க வேண்டும். இருப்பினும் திரு உமர் அவர்களின் விருப்பதை ஏற்கும் வகையில் அவர் அறிவித்த கருத்தினை பைபிள் வாயிலாக அறிய முனைவோம்.
1 | பழைய ஏற்பாட்டு யூதர்கள் சொல்லியிருப்பார்களா? | ||||||||
| | "ஓர் இறைக்கொள்கையை" மிகவும் தீவிரமாக நம்பும் யூதர்கள் இப்படி சொல்ல வாய்ப்பு உள்ளதா?
திரு உமர் அவர்களே, மேலே உங்கள் கருத்தில் ஒரு மனிதன், தான் தான் அல்லாஹ் என்று அறிவித்தால் யூதர்கள் நம்பா மாட்டார்கள் என்று அறிவிக்கிரீர்கள். திரு குர்ஆன், எஸ்றா தான் அல்லாஹ் என்று யூதர்கள் அறிவிப்பதாக நம்மால் அறிய முடியவில்லை, மாறாக யூதர்கள் எஸ்றா அல்லாஹு வுடைய குமாரன் என்று அறிவிக்கிறார்கள் என்றே அறிவிக்கிறது. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களால் அறிய முடியவில்லையா?
யூதர்கள் இதற்க்கு முன்னர் மனிதர்களை இறைவனுடைய குமாரன் என்று அறிவித்த பைபிள் வசனங்களை நீங்கள் கண்டது இல்லையா? உதாரணமாக:
வாசகர்களே, மேலே கோடிட்ட பைபிள் வசனங்கள் பழைய ஏற்பாடு அறிவிக்கும் யூதர்கள் இதற்க்கு முன்னரே பல மனிதர்களை இறைவனின் குமாரன் என்று அறிவித்ததை நம்மால் காண முடிகிறது. இருப்பினும் எஸ்றா இறைவனின் குமாரன் என்று அறிவிக்கும் வசனத்தை இன்றைய பைபிள்ளில் நம்மால் காண முடியவில்லை. இப்படி ஒரு வசனம் பைபிள்ளில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஏன்னெனில் பைபிள் முழுமை அடைந்த கோர்ப்பு அல்ல, பைபிள் அறிவித்து பைபிள்ளில் இடம் பெறாத புத்தகங்களை முழுமை அடையா பைபிள் கோர்ப்பு – பைபிள் அறிவிக்கும் பைபிள்ளில் இடம் பெறா சில புத்தகங்களின் அட்டவணை: என்ற கட்டுரையில் இதற்க்கு முன்னரே நாம் தெளிவாக கோடிட்டு இருந்தோம். இவை ஒரு சில பைபிள்ளில் இணைக்க பெறாத/மறைந்து போன புத்தகங்களே, இவற்றை போன்று இன்னும் எத்தனை புத்தகங்கள் பைபிள்ளில் இணைக்க பெறாமல் விடுபட்டனவோ? இவற்றில் திரு குர்ஆன் அறிவிப்பது போல எஸ்றா அவர்களை பற்றி அறிவிக்கும் புத்தகமும் பைபிள்ளில் இணைக்க பெறாமல் விடுபட்டு போய் இருக்கலாம், அல்லது கிறிஸ்தவர்கள் விரும்பியே அந்த ஆதாரத்தை மறைத்து இருக்கலாம் யார் அறிவார், எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே...
வாசகர்களே, எஸ்றா அவர்கள் மரணிக்காமல் பரலோகம் சென்றதாக யூதர்களின் நம்பிக்கை என்ற ஒரு ஆதாரத்தை நம்மால் பல இணைய தளங்களில் காண முடிகிறது, அப்படியானால் கிறிஸ்தவர்கள் இயேசு மரணித்து பின் உயிர்தெழுந்து பரலோகம் சென்றதாக நம்புகிறார்கள், ஆனால் யூதர்கள் அதை காட்டிலும் ஒரு படி மேல் சென்று எஸ்றா மரணிக்காமல் பரலோகம் சென்றார்கள் என்று நம்புகிறார்கள். இதன் அடிப்படையில் யூதர்கள் எஸ்றா அவர்களை இயேசு அவர்களை காட்டிலும் உயர்ந்தவராக எண்ணுகிறார்கள், கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் மனிதனாக மரணித்த நபரே இறைவன் என்றால் யூதர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் மரணிக்காமல் பரலோகம் சென்ற நபரை என்ன வென்று சொல்லி இருப்பார்கள் என்று வாசகர்களே சிந்தியுங்கள்...
வாசகர்களே, யூதர்கள் ஓர் இறை கொள்கையை கொண்டு இருந்ததாக திரு உமர் அவர்கள் அறிவிக்கிறர்கள். அப்படி அவர்கள் ஓர் இறை கொள்கையை முறையே கொண்டு இருந்தால் ஈஸா (அலை) அவர்களின் வரவே பொருள் அற்றது. முறையே இறைவனை வணங்குபவரை வழிநடத்த இன்னும் ஒரு இறைததூதரை அனுப்ப என்ன தேவை வந்தது என்பதை திரு உமர் அவர்கள் தான் நமக்கு அறிவிக்க வேண்டும்...
திரு உமர் அவர்கள் பைபிள்ளை முழுமையாக அறியாதவர் என்று நமக்கு தோன்றுகிறது. ஏன்னெனில் யூதர்கள் ஓர் இறைகொள்கையை முறையே ஏற்று வணங்க வில்லை என்று பைபிள் பல உதாரணங்களை அறிவிக்கிறது உதாரணமாக: யூதர்கள் காளை கன்றை வணங்கிய சம்பவம்.
இன்னும் யூதர்கள் இறை இல்லங்களை வியாபார தளங்களாக ஆக்கி கொண்ட சம்பவம்.
வாசகர்களே இவ்வாறு ஓர் இறை கொள்கையை முறையே ஏற்று வணங்க மறுத்த யூதர்களை தான் திரு உமர் அவர்கள் ஒரு இறை கொள்கையை தீவிரமாக மேற்கொண்டார்கள் என்று நமக்கு அறிவிக்க முயல்கிறார். திரு உமர் அவர்களே இந்த தருணத்தில் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறோம், கிறிஸ்தவத்திற்கு முத்திய யூதவம் மற்றும் அதற்க்கு பிந்திய இஸ்லாம் இது இரண்டும் ஓர் இறை கொள்கையை பின் பற்றுகிறது என்று உங்கள் வாயால் நீங்கள் அறிவிகிரீர்கள். திரு ஈஸா (அலை) அவர்களும் நம்முடைய இறைவன் ஒரே இறைவன் என்று பைபிள்ளில் அறிவிக்கிறார் அப்படி இருக்க இவற்றுக்கு மாறாக எவ்வாறு திரித்துவ கொள்கையை கிறிஸ்தவர்கள் கொண்டுள்ளார்கள் என்று எங்களுக்கு அறிவிக்க முடியுமா? அப்படியானால் திரித்துவ கொள்கையையை அறிய வாய்ப்பே பெறாத யூதர்கள் நரகத்திற்கு உரியவர்களா? பைபிள்ளின் வசன ஆதாரத்தை வைத்து தெளிவாக விளக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறோம்.
| |||||||
| | ||||||||
2 | புதிய ஏற்பாட்டு யூதர்கள் சொல்ல வாய்ப்பு இருக்கிறதா? | ||||||||
| | இயேசுவோ அல்லது அவரது சீடர்களோ "யூதர்கள் இப்படி நம்புகிறார்கள்" என்று ஏதாவது புதிய ஏற்பாட்டில் சொன்னார்களா? அல்லது கண்டித்தார்களா?
திரு உமர் அவர்களே, யூதர்கள் வழிபாட்டினை அறிய மீண்டும் பைபிள்ளின் புதிய ஏற்பாட்டினை கோடிடுகிறிர். யூதர்கள் பைபிள் பழைய புதிய ஏற்பாட்டினை ஏற்று கொண்டார்களா? இதை கொண்டு எவ்வாறு நாம் யூதர்கள் நம்பிக்கையை அறிய முடியும்?
இயேசுவோ அல்லது அவரது சீடர்களோ இவ்வாறு அறிவித்தார்களா என்று வினவுகிரீர், அவர்கள் அவ்வாறு அறிவித்து இருந்தால் நீங்கள் அதை உடனே மார்கமாக ஏற்க போகிறீர்களா? உதாரணமாக நம்முடைய இறைவன் ஒரே இறைவன் என்று இயேசு அறிவித்ததாக பைபிள் அறிவிக்கிறது ஆனால் நீங்கள் மூன்று இறைவன் என்று அறிவிகிறீர்களே? தான் புனிதமானவன் அல்ல, தன்னை காட்டிலும் தன் தந்தை மற்றும் உங்களது தந்தையாகிய இறைவனே புனிதமானவன்/உயர்ந்தவன் என்று இயேசு அறிவித்ததாக பைபிள் அறிவிக்கிறது ஆனால், நீங்கள் இயேசு தான் இறைவன் என்கிறீர்களே, இயேசுவின் அன்னை மரியம் வயது அடைந்து முதியவலாக மரணித்ததாக சரித்திரம் அறிவிக்கிறது ஆனால் நீங்கள் அவரை கண்ணி மேரியாக வணங்குகிறீர்களே? பன்றியின் மாமிசத்தை உன்ன பைபிள்ளின் இறைவன் தடை செய்கிறான் ஆனால் அதை விடுத்து நீங்கள் இயேசு அவர்களை ஒருமுறையேனும் உயிருடன் பாத்திரத்த பால் அவர்கள் இயற்றியதாக நம்பாபடும் போதனைகளை ஏற்று பண்றி மாமிசத்தை உன்ன முனைகிறீர்களே? இது எப்படி சாத்தியம் ஆயிற்று??? |
எல்லாம் வல்ல இறைவன் நாடினால் விரைவில் இந்த கட்டுரையின் தொடர்ச்சி வெளியாகும். அதுவரை தற்காலிகமாக விடை பெறுகிறோம்.....
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர்