இஸ்லாத்தை பரப்புவதற்கு உதவும் உமர் அவர்களுக்கு நன்றி!!!
உமர் (புனை பெயர்) அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகவுள்ள பல ஆங்கில இணையதளங்களில் உள்ள கட்டுரைகளை மொழி பெயர்த்து வெளியிடிகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உமர் அவர்களும் மற்றும் அவரை போன்றோரும் அவர்களே அறியாமல் இஸ்லாத்தை பரப்ப உதவி வருகின்றனர் என்பதே உண்மை. அது மட்டுமல்லாமல் அவர் இஸ்லாமிய வரலாறு அறியாத முஸ்லிம்களை அவரது கட்டுரை மூலம் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்று உண்மைகளை அறிய தூண்டுகிறார். அப்படி என்றால் இஸ்லாம் பரவுவதற்கு அவர் உதவி செய்கிறார் என்று தானே ?
சரி அவர் இஸ்லாத்திற்கு செய்த உதவிகளை இங்கே பார்போம்:
1 . முஸ்லிம்களை இஸ்லாத்தை பரப்ப தூண்டினார்.....
என்னை போன்ற சில முஸ்லிம்கள், "எல்லா மதத்தையும் மதிக்கிறேன்" என்ற எண்ணம் கொண்டு, அவர்களாக வந்து கேட்காதவரை மற்ற மதத்தவரிடம் இஸ்லாத்தை பற்றி எடுத்து கூறாமலும், "உனக்கு உன் மார்க்கம், எனக்கு என் மார்க்கம்" என்று அமைதியாக இருந்தவர்களை, இஸ்லாத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாக இஸ்லாமிய வரலாற்றை திரித்து மற்றும் பாதியை மறைத்து அவருக்கு சாதகமானதை மட்டும் எழுதினார். இல்லை இல்லை யாரோ எழுதியதை மொழி பெயர்த்தார். இதனால் நாங்கள் அவருக்கு பதில் அளிக்க தூண்டப்பட்டோம். எங்களை தூண்டியதன் மூலம் இஸ்லாத்தை பரப்ப அவர் உதவினார் தானே?
இதனால் தூண்டப்பட்ட நாங்கள் இதற்கு இணையத்தில் ஏதேனும் பதில் இருக்கிறதா என்று தேடினோம். ஆங்கிலத்தில் பல இணையதளங்கள் இதற்கு பதில் அளித்துள்ளன. உமர் அவர்கள் ஒரு உண்மையாளராக இருந்தால் அந்த பதில்களையும் ஆராய்ந்து பதில்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருந்தால் நாமும் பாராட்டி இருப்போம். அது சரி இவை அனைத்தும் அவர் ஆராய்ந்து எளிதியது இல்லையே, மொழி பெயர்த்து தானே. இதை பற்றி அவருக்கு என்ன தெரியும்.
எங்களை தூண்டிவிட்டதன் விளைவை, அவருக்கு நாங்கள் கொடுத்த பதில் (அடி) மற்றும் அவர் அவருடைய ப்ளாகுக்கு செய்த மாறுதல்களே உணர்த்தும். அவற்றை கீழே காண்போம்.
1 . இப்போதெல்லாம் அவர் நாங்கள் எழுதும் பின்னூட்டங்களை வெளியிடுவது இல்லை. கடைசியாக நான் எழுதிய பின்னூட்டங்களுக்கு அவர் பதில் அளிக்காமல் வெறுமனே வெளியிட்டுள்ளார். அதற்கு பிறகு 3 அல்லது 4 முறை நான் பின்னூட்டம் எழுதி இருப்பேன். அதை இணையத்தில் வெளியிடவில்லை ஏன்? என்னென்றால் வெளியிட்டால் கிறிஸ்தவர்களின் சுயரூபம் வெளியாகிவிடும்.
2. இப்போதெல்லாம் அவர் கட்டுரையின் பாணியில் மாற்றங்களை காணலாம். முன்பெல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் ஈசா உமர் அவர்கள் இப்போதெல்லாம் கேள்விகளுடன் நிருத்திகொல்கிறார் ஏன் ? ஏனெனில் எதையாவது எழுதி வாங்கி கட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லயோ என்னவோ!!
2. இந்த இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளை பெரிய ஆயுதமாக எடுத்துக்கொண்டு கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை வீழ்த்திவிடலாம் என்ற நினைப்பில் முஸ்லிம்களிடம் வந்து, முஸ்லிம்கலான நாம் எந்த உழைப்பும் செய்யாமலே அவர்களின் கேள்விக்கு ஏற்க்கதக்க பதில் அளித்தவுடன் உண்மையான இஸ்லாத்தை அறிந்து செல்கின்றனர். அது மட்டுமின்றி இசா உமரின் கயமையையும் புரிந்துகொள்கின்றனர்.
கிறிஸ்தவர்களை அவர்களின் கூட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டுவந்து இஸ்லாத்தை அறிந்து கொள்ள உதவினார் தானே?
இஸ்லாத்திற்கு எதிராக செய்யப்படும் இது போன்ற பிரச்சாரங்களின் விளைவுகள் இதுவே. இவற்றுக்கு கடந்த பத்து வருடங்களில் நடந்த உலக நிகழ்வுகளே உதாரணம். உதாரணமாக, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிப்புக்கு பின்னர் உலகமே இஸ்லாத்தை தீவிரவாத மதமாக பார்த்தது, இதன் பின்னரும் இஸ்லாத்தின் உண்மை நிலையை தெரிந்து கொண்ட பல அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.
மேலும் தொடரும் .......
2 comments:
அஸ்ஸலாமுஅலைக்கும். சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! உங்களது தளத்தின் ஊடாக தூய இஸ்லாத்தை தமிழுலகிற்கும் கள்ள கிருஸ்தவர்களின் உண்மை முகத்தை உலகிற்கும் உணர்த்த வழி செய்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். ஆக்கங்களை தாராளமாக எழுதுங்கள்.ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம். அரபு மொழி அறிவின்றி மொழிபெயர்ப்பு மோசடியில் ஈடுபட்டு இஸ்லாத்தை அசிங்கப்படுத்தும் உமர் போன்றோருக்கு இது நல்ல நெற்றியடி. படு வேகமாக எழிச்சி பெரும் இஸ்லாத்தைக் கண்டு பொருக்க முடியாமல் அவதியுரும் இந்த (உமர்) போன்ற மனநோயாளிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.!
அன்புடன்
அல் ஹாபிழ் மெளலவி ஸஹ்றான் (மஸ்ஊதி)
காத்தான்குடி
இலங்கை
அஸ்ஸலாமுஅலைக்கும். நல்லது சகோதரரே! மெளலவி ஸஹ்றான் சொன்னது போல் இந்த கிருஸ்தவ பாதிரிகளின் உண்மை முகம் மக்களுக்கு தெரிய வர வேண்டும்.அத்துடன் அவர்கள் வைக்கும் வாதங்கள் அனைத்திற்கும் மெளலவி ஸஹ்றான் போன்ற அறிஞர்கள் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு மாத்திரம் மார்க்க பிரச்சாரம் செய்யாமல் இஸ்லாத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப் பாடுபடும் முகமூடிகளான செங்கொடி மற்றும் உமர் ஈஸா குரான் போன்றவர்களுக்கு எழுத்திலும் மக்கள் களத்திலும் பதில் சொல்ல முன்வர வேண்டும்.நாங்கள் அரபு மொழி அறிவில்லாத பாமர மக்கள். உங்களைப் போன்ற அரபு மொழியில் புலமை பெற்றவர்கள் இத்துறையைப் பொறுப்பெடுத்து நடாத்தினால் மிகவும் ஆரோக்கியமாக அது அமைந்திருக்கும் என்பதே எனது கருத்து.
உங்கள் சகோதரன்
அப்பாஸ் நிலூபர்
கொழும்பு
இலங்கை
Post a Comment