பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும்
உங்கள் மீது உண்டாகுக
“இயேசு
ஒரு பாவி, பைபிளின் பரிந்துரை” பாகம் - 3
வாசகர்களே,
இதற்க்கு முன்னரே, கிறிஸ்தவர்கள் தெளிவான ஆதாரத்தை
முன் வைக்காமல், “திரு இயேசு அவர்கள் பரிசுத்தமானவர்” என்று அறிவிக்க
விரும்புவது போல் இல்லாமல், பைபிள் அவரை பரிசுத்தமற்றவர் என்றே விவரிக்கிறது
என்று தெளிவான ஆதாரங்களுடன் நாம் பல கட்டுரைகளை வெளியிட்டு இருந்தோம்.
பார்க்க:
வாசகர்களே,
இந்த கட்டுரைகளின் தொடர்ச்சியாக எல்லாம் வல்ல ஏக இறைவனின் கிருபையாய்
நாடியவர்களாக,
“இயேசு ஒரு பாவி, பைபிளின் பரிந்துரை பாகம் - 3” என்ற தலைப்பில் தெளிவான ஆதாரத்தை கொண்டு
கட்டுரை வரைய துவங்குகிறோம்.
வாசகர்களே, பொதுவாக
கிறிஸ்தவ அறிஞ்சர்கள், திரு இயேசு பரிசுத்தமானவர் என்பதனை விவரிக்க பைபிள் நூலை
விடுத்து, திரு குர்ஆணை முகவரி இடுவது வழக்கம். உதாரணமாக, தன்னை கிறிஸ்தவ
அறிஞ்சராக காட்டி கொள்ள முயலும், நமது நண்பர் திரு உமர் அவர்கள் தன் “Answering PJ: இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்” என்ற கட்டுரையில் இவ்வாறு அறிவித்து
இருந்தார்:
திரு உமர்
அவர்கள் தன் கட்டுரையில், திரு இயேசு அவர்கள் பரிசுத்தமானவர் என்று திரு குர்ஆன்
அறிவிப்பதாக தவறுதலாக கோடிட்டு திரு குர்ஆன் வசனம் இதோ:
வாசகர்களே,
மேலே கோடிட்ட திரு குர்ஆன் வசனத்தில், வானவர் திரு ஜீபிரில் (அலை) அவர்கள், எந்த
ஆடவனும் திரு மரியம் (அலை) அவர்களை தீண்டாத பரிசுத்தமான நிலையில், அவர்களுக்கு
இறைவன் தரவிருக்கும் பரிசுத்தமான பாலகன்/புதல்வன் பற்றிய நண்மாராயம்
அளிக்கிறார். இந்த வசனம் பிறக்கவிருக்கும் குழந்தை பரிசுத்தமானது, இன்னும் அது
பிறக்கவிருக்கும் முறை எந்த ஆடவனும் தீண்டாத நிலையில் இருப்பதனால் பரிசுத்தமானது
என்பதனை விவரிக்கிறது.
இஸ்லாமிய
நம்பிக்கை அடிப்படையில், பிறக்கும் அணைத்து குழந்தைகளும் கள்ளம் கபடம் அற்ற பரிசுத்தமான
குழந்தைகளே. கிறிஸ்தவர்களை போல், தனக்கே தெரியாத, என்றோ பிறந்து மறைந்த ஆதாமின்
பாவ சுமையை சுமந்து கொண்டு, உலகில் எல்லா பிள்ளைகளும் பிறக்கின்றன என்பது போன்று
இஸ்லாமியர்கள் நம்புவது கிடையாது.
எவர் ஒருவர் செய்யும்
பாவதிறுக்கு உரிய முழுமையான கூலி அவருக்கே உரியது, அடுத்தவர் புரியும் பாவங்களுக்கு
ஏனையவர்கள் வருத்த பட்டு பாரம் சுமக்கும் மூட நம்பிக்கைகள் இஸ்லாமில் இருப்பதாக
நம்மால் அறிய முடிய வில்லை.
இதன்
அடிப்படையில், பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் அவை பிறக்கும் வேளையில் பரிசுத்தமானதே,
பின்னாளில் அவர்கள் செய்யும் பாவங்கள் மற்றும், மனம் திருந்திய பாவ மன்னிப்பு கோரல்கள்
அடிப்படையிலே அவை பரிசுத்தமானதா அல்லது பாவ ஆன்மாவா என்பது நிர்ணயிக்க படுகிறது.
இதன் அடிப்படையில், திரு உமர் அவர்கள் கோடிட்ட திரு குர்ஆன் வசனம் திரு ஈஸா
(அலை) அவர்கள் பிறக்கும் வேளையில் பரிசுத்தமான புதல்வன் என்பதனை விவரிக்கிறது.
ஆனால், திரு உமர் அவர்கள் ஏற்று உள்ள வேத நூல் பைபிள், திரு இயேசு அவர்கள் பின்னாளில்
பரிசுத்தமானவராக இருக்கவில்லை என்பதனை தெளிவாக விவரிக்கிறது, இன்னும் திரு இயேசு அவர்கள் தன் வாழ்நாளில் தன்னை
பரிசுத்தமானவர் என்று அழைப்பதை கடுமையாக எதிர்த்ததை பைபிள் விவரிக்கிறது, இதற்க்கு துணையாக இதற்க்கு முன்னரே பல
தெளிவான ஆதாரங்களை நாங்கள் விவரித்து இருக்கிறோம், இப்பொழுது இன்னும் சில:
மேலே
கோடிடபட்ட பைபிள் வசனத்தில், திரு இயேசு அவர்கள் தன்னை தானே மது அருந்துபவன் என்று
சுய வாக்கு மூலம் அளிப்பதாக அமைந்து உள்ளதை நம்மால் காண முடிகிறது, திரு ஜான்
மது வருந்துபவர் இல்லை என்ற விவரத்தையும் அது அறிவிக்கிறது. மது அருந்துவது கிறிஸ்தவ
நம்பிக்கை அடிப்படையில் பாவத்துக்கு உரிய செயலா என்பதனை திரு உமர் அவர்கள் தான்
கண்டு அறிவிக்க வேண்டும்...
மேலே உள்ள
வசனத்தில் மது என்ற வார்த்தை வரவில்லை எனவே, இந்த வசனம் திரு இயேசு அவர்கள்
தண்ணீர் அல்லது அது போன்ற வேறு எதனையும் அருந்துவதை குறிப்பிடலாம், அது மது அல்லா
என்று சில கிறிஸ்தவ நண்பர்கள் தெளிவான வசன ஆதாரம் இல்லாமல் அறிவிக்க
விரும்பலாம். இந்த வசனம், தெளிவாக திரு ஜான் அவர்கள் அருந்துவது இல்லை, ஆனால்
திரு இயேசு அருந்துபவர் என்று விவரிக்கிறது, ஒரு சமயம் இந்த வசனம் தண்ணீர்
அல்லது அதனை போன்ற போதை அல்லாதா வேறு எதனையும் குறிப்பிடுவதாக இருந்தால், அதனை
ஏன் திரு ஜான் அவர்கள் அருந்துவது இல்லை என்று அறிவிக்கிறது? உதாரணமாக, இந்த
வசனம் தண்ணீரை குறிப்பிடுகிறது என்று வைத்து கொண்டால், திரு ஜான் அவர்கள்
தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்த நபரா? இது சாத்தியமா?
கிழே வரும்
வசனத்தில் “ஒரு தகப்பன் தன் மகள் இறந்துவிட்டதாக அறிவிக்கிறார்”, அங்கு சென்ற
திரு இயேசு “அந்த பெண் மரிக்கவில்லை மாறாக உறங்குகிறாள்" என்று அறிவிக்கிறார்.
பின்னர் அவளை தொட்டவுடன் அவள் விழித்து எழுகிறாள்.
இந்த வசனத்தில்,
வாசகர்களே, மேலே
கோடிட்ட தெளிவான ஆதாரங்கள், திரு உமர் அவர்கள் கோடிட்ட திரு குர்ஆன் வசனம், திரு
ஈஸா (அலை) அவர்கள் பிறக்கும் வேளையில் பரிசுத்தமானவர் என்பதனை விவரிக்கிறது
இன்னும், பைபிள் நூல் அவர் வாழ்நாளில் பரிசுத்தமானவராக வாழ வில்லை என்பதனை
விவரிக்கிறது என்ற கருத்து தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம். இதற்கான
மறுப்பை தெளிவான பைபிள் வசன ஆதாரம் கொண்டு திரு உமர் அவர்கள் வழங்குவர் என்ற
நம்பிக்கையில் விடை பெறுகிறோம்.
இன்ஷா அல்லாஹ்
விரைவில் மீண்டும் சந்திப்போம்....
அஸ்ஸலாமு
அழைக்கும்
-ஜியா &
அப்சர்
|
--
--