பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
திரு உமர் அவர்களின் “கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்ஆன் வசனங்கள்” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு – பாகம் 2 வாசகர்களே திரு உமர் அவர்கள் தன் மூல கட்டுரையில் “உலக மகா தீவிரவாதி பின்லாடன் மரித்ததற்கு வருத்தம் தெரிவித்து இஸ்லாமியர்கள் அவருக்காக தொழுகை நடத்துகிறார்கள்” என்று இஸ்லாமியர்கள் செயல்பாட்டில் தனக்கு ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இஸ்லாமின் கொள்கை அடிப்படையில், இஸ்லாமை ஏற்று எந்த ஒரு நபரும் மரணிக்க நேரிட்டாலும், அவர் வாழ் நாளில் நல்லவரோ அல்லது கெட்டவரோ, அவருக்காக நல்லென்னத்துடன் இறைவனை தொழுது பிராத்தனை செய்து அவர் இறுதி சடங்கை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாமியர்கள் வழிமுறை. இவ்வாறே கெட்டவர்கள் மீதும், அவர்கள் இறப்புக்கு பின்பும் இஸ்லாம் தன் அன்பை வெளிபடுதுகிறது. ஆனால் அன்பை போதிப்பதாக பொய்யுரைக்கும் கிறிஸ்தவ அரசாங்கங்கள், ஒரு தனி மனிதனுக்கு உலகில் உரிய கடைசி தொழுகையை கூட தொழ விடாமல், அவனுக்கு தீவிரவாதி என முத்திரை இட்டு அவனை ஆழ்கடலில் எறிந்ததாக அறிவிக்கிறது. இன்னும் அதிகபடியாக கிறிஸ்தவ பிரதிநிதியான திரு உமர் அவர்கள் மரணித்த நபருக்கு இஸ்லாமியர்கள் பிராத்தனை செய்வதை கடிந்து கொள்கிறார். இது ஒன்றே போத வில்லையா, இஸ்லாம் தான் உலகுக்கு அன்பை போதிக்கும் மார்க்கம் என்பதை அறிய, இன்னும் கிறிஸ்தவம் மற்றும் கிறிஸ்தவர்கள் அன்பை போதிக்க மறுக்கிறார்கள் என்பதை உணர??? யூதரின் ஜனாஸா (இறந்த உடல்) காக எழுந்து நின்ற நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் 'இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா" என்றோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" எனக் கூறினார்கள். ( புகாரி ஹதீஸ்) இதன் மைய கருத்து என்னவென்றால், ஒருவர் உயிருடன் இருக்கும்போது எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் இறந்தவுடன் அந்த உடல் இறைவனின் படைப்பாக மட்டுமே இருக்கிறது அந்த உடலுக்கு யூதன் கிறிஸ்தவன் என்ற வேறுபாடு கிடையாது. ஆகவே இறைவனின் படைப்புக்கு செலுத்த வேண்டிய மரியாதையை அவர் எப்படிப்பட்ட மனிதராக வாழ்ந்திருந்தாலும் செலுத்தியே ஆகவேண்டும். ஒரு பக்கம் தீவிரவாதிகளுக்க பிரார்த்தனை செய்யுங்கள் என போலியாக ஒரு விளம்பரம் தேடிக்கொள்ளும் திரு உமர் அவர்கள், இன்னொரு பக்கம் ஒருவர் மரணிததர்க்கு வருத்தம் தெரிவிக்கும் இஸ்லாமியர்களை சாடுகிறார். இப்படி பட்ட நல்லெண்ணம் கொண்ட இஸ்லாமியர்களை சாடுவதன் மூலம் உங்களுடைய கீழ்த்தனமான எண்ணமே வெளிபடுகிறது. என்ன மனிதர் ஐயா நீர்??? இதற்கு முன்னரே, “ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டார் “ என்ற செய்தியை திரு உமர் அவர்கள் தன் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த செய்தியுடன் ஒசாமா பின்லாடனின் புகை படத்தையும் வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட செய்தியை போல் அவர் வெளியிட்ட புகைப்படமும் சந்தேகத்திற்கு உரியது. இதோ திரு உமர் அவர்கள் வெளியிட்ட புகைப்படம்: திரு உமர் அவர்கள் வெளியிட்ட மேற்கண்ட புகைப்படம் சந்தேகத்திற்கு உரியது என்று அறிவித்தோம். ஏனெனில் உசாமா வலது கைகளில் கடிகாரம் அணியும் பழக்கம் உடையவர் என்று அமெரிக்க CIA உளவு துறை இணையதளம் அறிவிக்கிறது. ஆனால் திரு உமர் அவர்கள் வெளியிட்ட புகை படத்தில் அவர் இடது கையில் கடிகாரம் அணித்து இருப்பதாக சித்தரிக்க பட்டுள்ளது. இன்னும் அதிகபடியாக அந்த புகைப்படத்தில் உசாமாவின் பின் புறத்தில் அரபி எழுத்துகள் ஏனைய மொழிகளை போல் இடம் இருந்து வழம் எழுதப்பட்டுல்லதாக சித்தரிக்க பட்டுள்ளது ஆனால் உண்மையில் அரபி எழுத்துகள் வலம் இருந்து இடம் எழுத பெறுபவை. இன்னும் அதிகபடியாக திரு உமர் அவர்கள் ஒசாமா பின்லாடன் கொள்ளப்பட்டார் என்ற செய்தியை வெளியிட்டு இருந்தார். ஆனால் அமெரிக்க FBI, உசாமா பின்லாடன் கொள்ளப்பட்டார் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரி திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் ஒசாமா என்பதா அல்லது அமெரிக்க FBI அறிவிப்பது போல் உசாமா என்பதா? எனவே இந்த புகைப்படமும் அதனுடன் சேர்ந்த செய்தியும் சந்தேகத்திற்கு உரியதாக நாம் அறிவிக்க விரும்புகிறோம். இன்னும் அமெரிக்கா அறிவிக்கும் உசாமா கொலையுண்ட நிகழ்வுகளை அறியும் பொழுது உலகில் இதுவரை நடந்தேராதா அதிசயத்தை அமெரிக்க கிறிஸ்தவ அரசாங்கம் நடத்தேற்றியத்தை நம்மால் உணற முடிகிறது உதாரணமாக:
உலக அதிசியங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் கீழே கோடிட படும் நிகழ்வுகளுக்கு சாத்திய கூறுகளை ஆராய்வோம்:
உசாமாவின் மரணத்தை அமெரிக்க எவ்வாறு ஊர்ஜிதப் படுத்தியது என்று பார்போம்:
கையில் துப்பாக்கி ஏந்திய சதாம் ஹுசைனை பிடித்து கூண்டில் ஏற்றி படுகொலை செய்த அமெரிக்க ராணுவம் நிராய்தபானியாக நின்ற உசாமாவை கொள்ள என்ன காரணம்? கொலைக்கு கொலை தான் தண்டனையா? உசாமா தீவிரவாதம் செய்தார் என்று வைத்து கொண்டாலும் அமெரிக்கர்கள் அண்டை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சமூட்டும் வகையில் அனுமதி இன்றி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது தீவிரவாதம் இல்லையா? பாகிஸ்தான் முன்நாள் முதல்வர் முஷரப் கொலை குற்றவாளி, பெனசிர் பூட்டோ வெடிகுண்டு தாக்குதலில் முக்கிய குற்றவாளி, இப்பொழுது இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளார். அவரை சிறை பிடிக்க பாகிஸ்தான் ராணுவம் அனுமதி இல்லாமல் இங்கிலாந்து நாட்டினுள் நுழைந்தால் அமெரிக்கர்கள் வரவேற்பார்களா? இது முறையா? ஒரு மனிதனின் ஈமச்சடங்கை கூட செய்ய விடாமல் அவனை கடலில் தூக்கி எறிய அமெரிக்க கிறிஸ்தவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? குறைந்த பட்சம் அவர்தான் உசாமா என்பதற்க்கு புகை பட ஆதாரத்தை அமெரிக்க கிறிஸ்தவ அரசாங்கள் வெளியிட வேண்டாமா? ஊடகங்கள் வெளியிட்ட ஒசாமாவின் புகைப்படம்: ஆனால் அது போலியானது என்று நிரூபிக்க பெற்றது: மேலும் விவரங்களுக்கு கொள்ள பட்டது உசாமா தானா அல்லது இதற்கு முன்னரே அவர் இறந்து இருக்க கூடுமா? இதற்கு முன்னரே உசாமா தோரா போரா யுத்தத்தில் இடது கை மற்றும் கண்களை இழந்தார் என்று அமெரிக்க படைவீரர்கள் அறிவித்தார்கள். 54 வயது நிரம்பிய முதியவர், கடந்த இருப்பது ஆண்டுகளாக சிறுநீரக நோயினால் பாதிக்க பட்டவர். ஒரு ஆப்பிள் பழத்தை ஐந்து பேர் உணவாக பகிர்ந்து உன்னும் நிலையில், இத்தனை ஆண்டு காலம் பிழைத்து இருக்க கூடுமா? முடியும் அமெரிக்க கிறிஸ்தவர்கள் நினைத்தால் எதுவும் முடியும்.. உசாமா 2001 மரணித்து இருக்க வாய்ப்புகளை விவரிக்கும் இணைய தளம் இந்த தருணத்தில் திரு உமர் அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறோம். திரு உமர் அவர்களே ஒசாமாவின் புகைப்படம் என்று நீங்கள் வெளியிடுவது எந்த உசமாவின் புகைப்படம் என்று எங்களுக்கு அறிவிக்க முடியுமா? ஏன்னெனில் இவர் தான் உசாமா என்று அதிக படியாக ஒரே முக சாயலில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்களின் புகை படங்களை அமெரிக்க வெளியிட்டு உள்ளது. உதாரணமாக: உசாமா பின் லாடன் தான் அமெரிக்க தாக்குதல்களை செய்தார் என்பதற்க்கு எதாவது தெளிவான ஆதாரம் திரு உமர் அவர்களிடம் உள்ளதா? அமெரிக்க வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை கோடிட போகிறாரா? அந்த வீடியோவை நீங்கள் இன்னும் ஒரு முறை ஆய்வு செய்யும் படி உங்கள் வேண்டி கேட்டு கொள்கிறோம்:
அமெரிக்க தீவிரவாத தாக்குதல் அமெரிக்க அரசாங்கத்தால் நடந்தேற்றபட்ட நாடகம் என்று பல அமெரிக்கர்களே ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கும் நிலையில், கண் இருந்தும் குருடர்களாக காத்திருந்தும் செவிடர்களாக நமது நண்பர் திரு உமர் அவர்கள் போல், உலகில் பலர் அமெரிக்க அரசாங்கம் மற்றும் கிறிஸ்தவ ஊடகங்கள் அறிவிக்கும் பொய் பிரசாரத்தை நம்புகிறார்கள், இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? நாங்கள் இவ்வாறு கட்டுரையை வெளியிட்டவுடன் தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்ற மாயயை, திரு உமர் அவர்கள் எழுப்ப முயற்சிக்கலாம். நாங்கள் தீவிரவாதத்தை எந்நிலையிலும் ஆதரிபவர்கள் இல்லை. தீவிரவாதம் எந்த நிலையில் இருந்தாலும் எந்த முகத்திரையில் அமைந்து இருந்தாலும் அதை எதிர்கவே நாங்கள் விரும்புகிறோம், இந்த எங்கள் நிலைபாட்டை வெளிபடுதவே இந்த கட்டுரையை நாங்கள் வெளியிட்டு உள்ளோம், ஏனெனில் அண்டை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கும் வகையில் தங்களுடைய படை வீரர்களை அனுமதி இன்றி அண்டை நாடுகளுக்குள் அனுப்புவது ஒரு வித தீவிரவாதமே. இன்னும் நிராயுடபானியான ஒரு முதியவரை தீவிரவாதி என்று முத்திரை இட்டு அவரை கொன்று கடலில் வீசியதும் ஒரு வகை தீவிரவாதமே. அவரை முறையே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க ஆதாரங்களை நிரூபித்து பின் அவருக்கு தண்டனை வளங்குவதே சிறந்தது அன்றி இவ்வாறு படுகொலைகள் செய்ய படுவது முறை அல்ல. வலியவன் சொல்வது எல்லாம் சட்டம் என்பது போல் அமெரிக்க கிறிஸ்தவ இராணுவத்தின் நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க கூடாது. அப்படி ஆதரிக்க நேரிட்டால் இன்று பாகிஸ்தான் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய அமெரிக்க ராணுவம் நாளை வேறு ஒரு திவிரவதியின் முகவரியில் இந்திய நாட்டின் அமைதிக்கும், தேசிய பாதுகாப்பிற்க்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடும். எனவே இது வன்மையாக கண்டிக்க வேண்டிய கிறிஸ்தவ தீவிர வாதம் என்பதை உங்கள் முன் தெளிவாக்க நாங்கள் விரும்புகிறோம். இறைவன் நாடினால் பாகம் மூன்றில் சந்திப்போம், அஸ்ஸலாமு அழைக்கும் -ஜியா & அப்சர் |
No comments:
Post a Comment