பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)
அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக
திரு உமர் அவர்களின் “இஸ்லாமியர்களின் மீது யுத்தம் - War on Muslims” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு:
திரு உமர் அவர்கள், “இஸ்லாமியர்களின் மீது யுத்தம் - War on Muslims” என்ற மொழிபெயர்ப்பில் இஸ்லாமியர்களுக்கு ஏதிராக இழைக்க பெறும் கொடுமைகளை/யுத்தங்களை இருவிதமாக விவரித்து இருந்தார், அவை: - உலகின் வல்லமை நிறைந்த நாடுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட இஸ்லாமியர்கள் மீது தொடுக்கும் யுத்தம்,
- இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்கள் மீது தொடுக்க பெறும் யுத்தம்.
இவ்விரண்டும் நடைமுறையில் இல்லாத யுத்தம் ஆகும், ஒன்றும் அறியா பாமர இஸ்லாமியர்கள் மீது தொடுக்க பெறும் கொடுமைகள் / யுத்தங்களுக்கு அடிப்படை காரணம் கிறிஸ்தவத்தின் பெயரால் நடத்த பெறும் சிலுவை யுத்தம் ஆகும், அதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஏதிராக நடத்தும் சிலுவை யுத்தத்தை ஆராய்வதற்க்கு முன்னர், திரு உமர் அவர்கள் வெளியிட்ட பொய்யுரை நிறைந்த கருத்தை ஆராய்வோம். - உலகின் வல்லமை நிறைந்த நாடுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட இஸ்லாமியர்கள் மீது தொடுக்கும் யுத்தம்,
- இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்கள் மீது தொடுக்க பெறும் யுத்தம்.
உலகின் வல்லமை நிறைந்த நாடுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட இஸ்லாமியர்கள் மீது தொடுக்கும் யுத்தம் முன்பு மன்னர் ஆட்சி காலங்களில் உலகை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர மன்னர்கள் விரும்பினார்கள் என்று சரித்திரம் அறிவிக்கிறது. ஏனெனில் இவ்வாறு தங்கள் ஆதிக்கத்தின் கீழ் உலக நாடுகளை கொண்டு ஆட்சி பீடம் அமரும் வேலையில், தங்கள் செல்வ செழிப்போடு வாழலாம் என்று அம்மன்னர்கள் எண்ணினார்கள், அவர்கள் காலத்துக்கு பிறகு அவர்களது சந்ததினர் அந்த அறியாசனத்தை ஏற்று, வம்சா வழியாக சுகபோகத்தை அனுபவிப்பது மன்னர் ஆட்சி காலங்களில் நடந்தேறியது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் உலகின் பெறும் பலான நாடுகள் மக்கள் ஆட்சி முறையை கொண்ட ஜனநாயக நாடுகளாக உள்ளன. பெறும் பலான நாடுகளில் ஆட்சியாளர்களின் ஆட்சி காலம் அதிக படியாக ஐந்து வருடங்களாக உள்ளன. இன்னும் சில நாடுகளில் ஆட்சியாளர்கள் அதிக படியாக இருமுறை மட்டுமே அரியாசனத்தில் அமர அனுமதிக்க படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட, தங்கள் அரசாங்கத்தை விஸ்திரப்படுத்த, என்ன அவசியம் என்பதை திரு உமர் அவர்கள் தான் நமக்கு விவரிக்க வேண்டும். இவ்வாறு மேலை நாடுகளை ஆளும் ஆட்சியாளர்கள் போர் தொடுத்து வெற்றி கொண்டாலும், போரில் கொள்ளையுண்ட நாடுகள் அவர்கள் ஆட்சியின் கீழ் வருவது இல்லை. இதற்கு மாறாக அங்கு சுய ஆட்சியே நிறுவ பெறுகிறது. இந்த சூழ்நிலையில், வல்லமை நிறைந்த நாடுகள் இஸ்லாமிய நாடுகளை தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட யுத்தம் செய்கிறார்கள் என்பது திரு உமர் அவர்களின் கூற்றை தவிர வேறு ஒன்று இல்லை. எங்களது கருத்து தவறு என்று திரு உமர் அவர்கள் அறிவிக்க விரும்பினால், இந்த நூற்றாண்டில் யுத்தத்தில் கொள்ளையுண்ட எத்தனை இஸ்லாமிய நாடுகள் மேலை நாடுகளின் ஆட்சி ஆதிக்கத்தின் கீழ் சென்றது என்ற கணக்கெடுப்பை தெளிவான ஆதாரத்தோடு எடுத்து தர திரு உமர் அவர்கள் தர முன் வருவாரா?
இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்கள் மீது தொடுக்க பெறும் யுத்தம். திரு உமர் அவர்கள், இஸ்லாமிய இறைவனும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களும், இஸ்லாமியர்களை இஸ்லாமியர்களுக்கு ஏதிராக யுத்தம் செய்ய பணித்ததாக சில தெளிவில்லாத ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார் அவற்றை ஆராய முயற்சிப்போம்.
திரு உமர் அவர்கள், திரு குர்ஆன் வசனம் 2:278-279 கோடிட்டு விட்டு “இறைவனும், இறைதூதரும் இஸ்லாமியர்கள் மீது யுத்தம் செய்தார்கள் என்று அறிவிக்கிறார்”. எல்லாம் வல்ல இறைவன் வானவர்களை அனுப்பி வட்டி வாங்கியவர்கள் மீது யுத்தம் செய்ததை, அல்லது அவனே உலகுக்கு வந்து யுத்தம் செய்ததை தெளிவாக அறிவிக்க திரு உமர் அவர்களிடம் ஏதேனும் தெளிவான ஆதாரம் உள்ளதா என்பதை திரு உமர் அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். இவ்வாறு வட்டி வாங்கிய இஸ்லாமியர்கள் மீது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தொடுத்த யுத்தத்தை விவரிக்கும் தெளிவான ஆதாரம் திரு உமர் அவர்கள் தான் வெளியிட வேண்டும். திரு உமர் அவர்கள் குர்ஆன் வசனத்தில் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டு இருந்தார். அந்த வசனத்திற்கு முன்னும் பின்னும் அமைந்து உள்ள வசனங்களை ஆராய்ந்தால் இறைவன் சொல்வது நியாய தீர்ப்பு நாளில் நடக்க விருப்பதை, என்பது தெளிவாகி இருக்கும். இஸ்லாமிய அறிஞ்சாரக தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கும் திரு உமர் அவர்களுக்கு ஒரு வசனத்தின் முன்னும் பின்னும் அமைந்துள்ள வசனத்தை படிக்க நேரம் இல்லையா அல்லாது அவர் விரும்ப வில்லையா? 2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். 2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. 2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ,நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். 2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். 2:279. இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். 2:280. அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும். 2:281. தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. |
இந்த வசனத்திற்கு முன்னும் பின்னும் இறைவன் நரகத்திலும் சொர்கத்திலும் மனிதரின் நிலையை விவரிக்கிறான், இதன் அடிப்படையில் எல்லாம் வல்ல இறைவன் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை உலகில் வட்டி வாங்கும் இஸ்லாமியர்களுக்கு ஏதிராக யுத்தம் செய்ய பணிக்கவில்லை என்பதும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எந்த யுத்தத்தையும் செய்ததாகவும் நம்மால் அறிய முடிய வில்லை. இதை போலவே எல்லாம் வல்ல இறைவன் இஸ்லாமியர்களுக்கு ஹராம் ஆக்கிய செயல்களை செய்வோர்கள் மீது யுத்தம் செய்ய பணிக்கவில்லை மாறாக அவர்கள் வெற்றி அடையமாட்டார்கள் என்றே அறிவிக்கிறான். 5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். |
மேலே குறிப்பிட்ட வசனங்கள் வட்டியை பற்றி அறிவிப்பத்தினால் இந்த தருணத்தில் பைபிள் வட்டியை பற்றி என்ன சொல்கிறது என்று அறிவிக்க விரும்புகிறேன். பைபிள்லின் வாயிலிலும் வட்டி ஒரு குற்றமே: Prohibition in the Bible “Do not charge your brother interest, whether on money or food or anything else that may earn interest.” (Deuteronomy 23:19) “Do not take interest of any kind from him, but fear your God, so that your countryman may continue to live among you.” (Leviticus 25:36) “If you lend money to one of my people among you who is needy, do not be like a moneylender; charge him no interest” (Exodus 22:25) Righteous servant of God doesn’t take interest 5 "Suppose there is a righteous man who does what is just and right. 6 He does not eat at the mountain shrines or look to the idols of the house of Israel. He does not defile his neighbor's wife or lie with a woman during her period. 7 He does not oppress anyone, but returns what he took in pledge for a loan. He does not commit robbery but gives his food to the hungry and provides clothing for the naked. 8 He does not lend at usury or take excessive interest. He withholds his hand from doing wrong and judges fairly between man and man. 9 He follows my decrees and faithfully keeps my laws. That man is righteous; he will surely live, declares the Sovereign LORD. (Ezekiel 18:5-9) But the violent one will take it “10 "Suppose he has a violent son, who sheds blood or does any of these other things 11 (though the father has done none of them): "He eats at the mountain shrines. He defiles his neighbor's wife. 12 He oppresses the poor and needy. He commits robbery. He does not return what he took in pledge. He looks to the idols. He does detestable things. 13 He lends at usury and takes excessive interest. Will such a man live? He will not! Because he has done all these detestable things, he will surely be put to death and his blood will be on his own head”(Ezekiel 18:10-13) Jesus Christ (pbuh) came to fulfill the Law. He said: “[17] Think not that I am come to destroy the law, or the prophets: I am not come to destroy, but to fulfil. [18] For verily I say unto you, Till heaven and earth pass, one jot or one tittle shall in no wise pass from the law, till all be fulfilled. [19] Whosoever therefore shall break one of these least commandments, and shall teach men so, he shall be called the least in the kingdom of heaven: but whosoever shall do and teach them, the same shall be called great in the kingdom of heaven. [20] For I say unto you, That except your righteousness shall exceed the righteousness of the scribes and Pharisees, ye shall in no case enter into the kingdom of heaven.” (Mathew 5:17-20) The Hebrew word used for interest/usury in all these verses is neh'-shek: which means: From H5391; interest on a debt: - usury. Hence, The Quran and Bible both consider interest to be a sin and Muslims, Christians and Jews Should NOT indulge in it. |
திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில் குர்ஆன் வசனம் 9 :73 குறிப்பிட்டு விட்டு அந்த வசனத்தின் பின்னணியை இவ்வாறு விவரிக்கிறார்: "இவ்வசனம் இறக்கப்பட்ட சந்தர்பமானது, முஹம்மது ஜிஹாத் செய்வதற்கு முஸ்லிம்களை அழைக்கிறார். சில முஸ்லிம் இனங்கள் சண்டையிட விரும்பாமலிருந்தார்கள் (ஜிஹாத் செய்ய விரும்பவில்லை),எனவே அவர்கள் மாயக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் ஜிஹாதில் இணையும் வரை அவர்களோடு முஹம்மது போர் புரிவார் ." 9:73. நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக; மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக; (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது. 9:74. இவர்கள் நிச்சயமாக “குஃப்ருடைய” சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை. |
திரு உமர் அவர்களே இந்த வசனத்தின் பின்னியை எங்கிருந்து எடுத்தீதிர்கள் என்று எங்களுக்கு அறிவிக்க முடியுமா? குர்ஆன் வசனம் 9 :73 இறைவன் அறப்போர் செய்ய பணித்தானே தவிர யுத்தம் செய்ய பணிக்க வில்லையே, உங்கள் வாதம் சரியானது என்று எடுத்து கொண்டாலும் இறைவழியில் போர் செய்ய மறுத்த நபர்கள் மீது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யுத்தம் செய்த தெளிவான ஆதாரம் உங்களிடம் இருந்தால் அதை எங்களுக்கு அறிவிப்பீர்களா...
திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் குர்ஆன் வசனம் 49:9 குறிப்பிட்டு விட்டு இவ்வாறு அறிவிக்கிறார் "ஒரு முஸ்லிம் குழுவோடு அவர்கள் "அல்லாஹ்வின் கட்டளைக்குத் திரும்பும் வரை" யத்தம் செய்ய முஹம்மது கட்டளையிடுகிறார் என்று நாம் பார்க்கிறோம்.". 49:9. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள்.பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால்,அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள்(அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். 49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:11. முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய)பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து)மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். |
திரு உமர் அவர்களே, நீங்கள் கோடிட்ட வசனத்தில் இறைவன் இரு தரப்பினர் இடையே சுமூகம் / சமாதனம் செய்யவே பணிக்கிறான், சமாதானத்திற்கு பிறகும் அக்கிரமம் செய்யும் நபர் மீதே போர் செய்ய பணிக்கிறான், அக்கிரமக்காரர்கள் தங்கள் செய்யும் தவறில் இருந்து விலகிக் கொண்டால் அவர்களுக்கு சமாதனம் செய்யவே இறைவன் பணிக்கிறான். இது எப்படி நீங்கள் அறிவிப்பது போல் "அல்லாஹ்வின் கட்டளைக்குத் திரும்பும் வரை யத்தம் செய்ய முஹம்மது கட்டளையிடுகிறார்" என்று பொருள் படும்??
திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் ஹதீஸ் 1399 கோடிட்டு விட்டு இவ்வாறு அறிவிக்கிறார்: "முஹம்மது மரித்த பிறகு ஜகாத் (வரி)கொடுக்காத முஸ்லிம்கள் மீது அபூபக்கர் கூட போர் தொடுத்தார்." அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?'என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்;அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை(தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார். (பாகம் 2, அத்தியாயம் 24, எண்1399) |
திரு உமர் அவர்களே அந்த ஹதீசை நீங்கள் மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தால் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் தருவதாக வாக்களித்து விட்டு அவர் மரணத்திற்கு பிறகு தர மறுக்கும் நபர்கள் மீதே தான் போர் தொடுக்க போவதாக அபுபக்கர் அறிவிக்கிறார், இது எப்படி தவறாகும்??? இது அல்லாது, ஸகாத் தர மறுத்த நபர்கள் மீது அபுபக்கர் ஆட்சி காலத்தில் செய்த போர் பற்றிய தெளிவான ஆதாரம் உங்களிடம் இருந்தால் அதை எங்கள் முன் எடுத்து வையுங்களேன் ஆய்வுக்காக..
திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் Abu Dawood: book 26, no. 3675, Hasan என்பதை கோடிட்டு விட்டு "ஆல்கஹால் பயன்படுத்துவதை நிறுத்தாத முஸ்லிம்கள் மீது உண்மையான முஸ்லிம்கள் போர் தொடுக்க முஹம்மது கட்டளையிட்டார்." என்று அறிவிக்கிறார். தைலம் அல் – ஹிம்யரி (Daylam al-Himyari) கூறியதாவது: நான் நபியினிடத்தில்(அவர் மீது சமாதானம் உண்டாவதாக) கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே நாங்கள் ஒரு குளிர் பிரதேசத்தில் இருந்து கடினமான வேலைகளை செய்கிறோம் எங்கள் தேசத்தின் குளிரை சமாளிப்பதற்கும் எங்கள் வேலைக்கு தேவையான சக்தியை நாங்கள் பெறுவதற்கும் கோதுமையிலிருந்து ஒரு பானத்தை தயாரிக்கிறோம். அவர் என்னிடம் கேட்டார் : அது போதையூட்டக் கூடியதா?நான் சொன்னேன்: ஆமாம். அவர் சொன்னார்: நீ அதை தவிர்க்க வேண்டும்.நான் சொன்னேன்: ஜனங்கள் அதை கைவிடமாட்டார்கள். அவர் சொன்னார்:அவர்கள் அதை கைவிடவில்லை என்றால் அவர்களோடு யுத்தம் பண்ணு (அபூ தாவுத் - Abu Dawood: book 26, no. 3675, Hasan) |
திரு உமர் அவர்களே யுத்தம் என்பது ஆட்சியாளர்களால் நடத்த பாடுவதா அல்லது தனி நபர் செய்வதை யுத்தம் என்று அழைப்பார்களா? தனி நபர் செய்தால் அது எதிப்பு/சண்டை என்பது தானே சரியான வார்த்தை? அப்படி என்றால் மதுபானங்கள் அருந்துவதை தவிர்க்க மறுக்கும் மக்களுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் என்பது தானே இந்த ஹதீஸின் கருத்து? இந்த ஹதீஸின் அரபி மொழியாக்கம் இதை தான் அறிவிக்கிறது? எதிர்ப்பு தெரிவிப்பதர்க்கும் யுத்தத்திற்கும் உள்ள வித்தியாசம் அறியாதவரா நீங்கள்???
திரு உமர் அவர்கள் கோடிட்ட எல்லா குர்ஆன் வசனமும் இன்னும் ஹதிஸ்களும் இஸ்லாமியர்கள் தங்களை மார்கத்தை சேர்ந்த நபர்களை கொண்றதாக அறிவிக்கவில்லை. இதை நிரூபிக்க திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரத்தை வெளியிடவில்லை என்பதை இதுவரை வாசகர்கள் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். திரு உமர் அவர்களின் வேலையை எளிதாக்க, தங்கள் சமுகத்தை தாங்களே கொன்று குவித்த ஒரு சரித்திரத்தை உங்கள் முன் வைக்கிறோம்
மோசேஸ்சின் சகோதரர் இறைத்தூதர் ஆரோன், ஒரு காளை கன்றை வடிவமைத்து அதை இறைவன் என்றதாக பைபிள் அறிவிக்கும் சரித்திரம் இதோ:
Exodus 32:2 So Aaron said to them, “Break off the gold earrings that are on the ears of your wives, your sons, and your daughters, and bring them to me.” 32:3 So all the people broke off the gold earrings that were on their ears and brought them to Aaron. 32:4 He accepted the gold from them, fashioned it with an engraving tool, and made a molten calf. Then they said, “These are your gods, O Israel, who brought you up out of Egypt.”
|
கீழே உள்ள பைபிள் வசனத்தில், இறைவன் தன்னை விடுத்து காளை கன்றை மக்கள் வணங்கியதால், கோபம் கொண்டு அனைவரையும் அளிக்க போவதாக அறிவித்ததாகவும், அதற்கு மோசேஸ் இறைவனை தடுத்ததாகவும் பைபிள் சித்தரிக்கிறது.
இந்த தருணத்தில் திரு உமர் அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறோம்: திரு உமர் அவர்களே, உங்கள் இறைவன் சுயமாக சிந்திக்க வல்லமை அற்றவர? தன் படைப்புகளை கொள்ள போவதாக அறிவித்து விட்டு பிறகு மோசேஸ் அவர்களின் வார்த்தைகளை கேட்டு மனம் மாற்றி கொள்ள?
இது அணைத்து உலகத்தின் அதிபதியான இறைவனுக்கு தகுந்த செயலா?
திரு உமர் அவர்களே, இறைவன் ஆபிரகாம் மற்றும் இசாக் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை, ஒரு அறப்ப மனிதன் ஞாபகப் படுத்தும் அளவுக்கு ஞாபக மரதி உடையவனா? தன்னுடைய வாக்குறுதியை மறந்து இஸ்ரவேலர்களை அழிக்க போவதாக அறிவித்தது எல்லாம் வல்ல இறைவனுக்கு தகுந்த செயலா?
Exodus 32:7 The Lord spoke to Moses: “Go quickly, descend, because your people, whom you brought up from the land of Egypt, have acted corruptly. 32:8 They have quickly turned aside from the way that I commanded them – they have made for themselves a molten calf and have bowed down to it and sacrificed to it and said, ‘These are your gods, O Israel, which brought you up from the land of Egypt.’” 32:9 Then the Lord said to Moses: “I have seen this people. Look what a stiff-necked people they are! 32:10 So now, leave me alone so that my anger can burn against them and I can destroy them, and I will make from you a great nation.” 32:11 But Moses sought the favor of the Lord his God and said, “O Lord, why does your anger burn against your people, whom you have brought out from the land of Egypt with great power and with a mighty hand? 32:12 Why should the Egyptians say, ‘For evil he led them out to kill them in the mountains and to destroy them from the face of the earth’? Turn from your burning anger, and relent of this evil against your people. 32:13 Remember Abraham, Isaac, and Israel your servants, to whom you swore by yourself and told them, ‘I will multiply your descendants like the stars of heaven, and all this land that I have spoken about I will give to your descendants, and they will inherit it forever.’” 32:14 Then the Lord relented over the evil that he had said he would do to his people.
|
கீழே உள்ள பைபிள் வசனத்தில், இறைவனை தன் படைப்புகளை கொள்ள கூடாது என்று தடுத்த மோசேஸ் அவர்கள், தானே முன் வந்து தன் படைகள் கொண்டு மக்களை கொன்று குவித்ததாக பைபிள் அறிவிக்கிறது.
திரு உமர் அவர்களே, தன்னுடைய படைப்புகளை கொன்று குவிக்க இறைவனுக்கு தகுதி உள்ளதா? அல்லது ஒரு இறைதூதருக்கு தகுதி உள்ளதா? தெளிவான ஆதாரம் கொண்டு விவரிப்பீர்களா?
திரு உமர் அவர்களே இந்த தவறுக்கு தலைமை ஏற்றது இறைத்தூதர் ஆரோன் அவர்கள். அவர்தானே முதலில் கொள்ள பட்டு இருக்க வேண்டும். அவரை கொள்ளாமல் அவர் பணித்ததை நம்பி காளை கன்றை இறைவனாக்கிய மக்களை கொன்று குவித்தது எந்த விதத்தில் நியாயம் என்பதை கொஞ்சம் விவரிப்பீர்களா?
இப்படி தன் சொந்த பந்தங்களை கொன்று குவித்த சரித்திரத்தை கொண்டுள்ள நீங்கள், எந்த தெளிவான ஆதாரமும் இல்லாமல் இஸ்லாமியர்கள் தங்களை தாங்களே கொன்று குவித்து கொள்கிறார்கள் என்று பொய்யுரைக்கிரீர்.
சில தீவிரவாதிகள் அரசியல் ஆதாயத்திற்காகவும், சொந்த பகைக்காகவும் செய்யும் பழிபாவங்களை இஸ்லாமின் மீது சுமத்த முயற்சிக்கும் நீங்கள் உங்கள் கிறிஸ்தவர்கள் செய்யும் பழிபாவங்களை விவரிக்க மறுப்பது ஏன்???
Exodus 32:25 Moses saw that the people were running wild, for Aaron had let them get completely out of control, causing derision from their enemies. 32:26 So Moses stood at the entrance of the camp and said, “Whoever is for the Lord, come to me.” All the Levites gathered around him,32:27 and he said to them, “Thus says the Lord, the God of Israel, ‘Each man fasten his sword on his side, and go back and forth from entrance to entrance throughout the camp, and each one kill his brother, his friend, and his neighbor.’” 32:28 The Levites did what Moses ordered, and that day about three thousand men of the people died. 32:29 Moses said, “You have been consecrated today for the Lord, for each of you was against his son or against his brother, so he has given a blessing to you today.”
|
சிலுவை யுத்தம் (crusade)
திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல், இன்று உலக அளவில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் யுத்தம், இஸ்லாத்தை கொண்டோ அல்லது இஸ்லாமை மக்கள் சரி வர பேணாத காரணத்தினாலோ நடக்கபெருவது இல்லை. இஸ்லாமியர்களுக்கு ஏதிராக கிறிஸ்தவர்களால் மற்றும் கிறிஸ்தவ தலைவர்களால் பின்னப்படும் சூழ்ச்சியின் பின்னணியில் இருக்கும் மற்றொரு சிலுவை யுத்தம் ஆகும்.
| cru·sade (kr-sd) n. 1. often Crusade Any of the military expeditions undertaken by European Christians in the 11th, 12th, and 13th centuries to recover the Holy Land from the Muslims. 2. A holy war undertaken with papal sanction. Ref:http://www.thefreedictionary.com/crusader |
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றும் அறியா மக்களை தூண்டிவிட்டு, கிளர்ச்சி என்ற பெயரில், தங்கள் ராணுவங்களை அங்கு அனுப்பி ஆட்சியாளர்களுக்கு ஏதிராக யுத்தம் அறிவித்து, மற்றும் கிறிஸ்தவர்களை கொண்டு இஸ்லாமியர்களை கொன்று குவிப்பது, இந்த சிலுவை யுத்தத்தை பின்னணியாக கொண்டே.
இவர்கள் ஏன் சீனா, இலங்கை மற்றும் மியன்மார் போன்ற ராணுவ அடக்குமுறை ஆட்சியை கொண்டு நாடுகளை, மக்களை அடக்கி ஆளும், மற்றும் பாமர மக்களை கொன்று குவிக்கும் ராணுவ ஆட்சியாளர்களை கண்டுகொள்வது இல்லை? இந்த மக்கள் சுதந்திரமாக இருக்க தகுதியற்றவர்களா? அல்லாது இவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல, கொள்ள படுவதற்கு தகுதியற்றவர்கள் அல்ல என்பதனாலா?
|
The word crusade was used by US President George W. Bush first on the day of the September 11, 2001 attacks, quoted below, and on the national day of mourning which honored the death of the more than 3,000 victims of the attacks. He said that "this crusade, this war on terrorism is going to take a while.".[1] The use of this figure of speech was criticized in Europe, and Arabic-speaking countries. Ref:http://en.wikipedia.org/wiki/Tenth_Crusade |
இதற்கு முன்னரே கிறிஸ்தவர்கள் சிலுவை யுத்தம் என்ற பெயரில் எண்ணிகையில் அடங்கா இஸ்லாமியர்களை சதி செய்து கொன்று உள்ளார்கள், அதையே இப்பொழுதும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்...
The Crusades - What were the Crusades? The Crusades were a series of Holy Wars launched by the Christian states of Europe against the Saracens. The term 'Saracen' was the word used to describe a Moslem during the time of the Crusades. The Crusades started in 1095 when Pope Claremont preached the First Crusade at the Council of Claremont. The Pope's preaching led to thousands immediately affixing the cross to their garments - the name Crusade given to the Holy Wars came from old French word 'crois' meaning 'cross'. The Crusades were great military expeditions undertaken by the Christian nations of Europe for the purpose of rescuing the holy places of Palestine from the hands of the Mohammedans. They were eight in number, the first four being sometimes called the Principal Crusades, and the remaining four the Minor Crusades. In addition there was a Children's Crusade. There were several other expeditions which were insignificant in numbers or results. For full details, facts and information about the crusades click one of the following links: Ref: http://www.middle-ages.org.uk/the-crusades.htm
|
இன்னும் பல இணையதளங்களில் இருந்து சிலுவை யுத்தம் என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் நடத்திய படுகொலைகளை நாம் அறிய முடியும். இந்த தருணத்தில் திரு உமர் அவர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி:
திரு உமர் அவர்களே எதை அடிப்படையாக கொண்டு அன்பை போதிக்கும் உங்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஏதிராக இந்த சிலுவை யுத்தத்தை மேற்கொண்டார்கள் என்று தெளிவான ஆதாரம் கொண்டு எங்களுக்கு விளக்க முடியுமா?
அன்பை போதிக்கும் கிறிஸ்தவம் எதற்காக எண்ணிக்கையில் அடங்கா இஸ்லாமியர்களை கொன்று குவித்தது என்று எங்களுக்கு தெளிவாக அறிவிக்க முடியுமா?
நீங்கள் அறிவிக்க விரும்புவது போல், உங்கள் கிறிஸ்தவம் இதை பணிக்காமல் இருந்தால், உங்கள் பாதரிகளே இந்த பழிபாவங்களை வழிநடத்தி இருப்பார்களா?
2 chronicle 15:13 Anyone who would not seek the Lord God of Israel would be executed, whether they were young or old, male or female.
|
Deuteronomy 13:12 Suppose you should hear in one of your cities, which the Lord your God is giving you as a place to live, that 13:13 some evil people have departed from among you to entice the inhabitants of their cities, saying, “Let’s go and serve other gods” (whom you have not known before). 13:14 You must investigate thoroughly and inquire carefully. If it is indeed true that such a disgraceful thing is being done among you, 13:15 you must by all means slaughter the inhabitants of that city with the sword; annihilate with the sword everyone in it, as well as the livestock. 13:16 You must gather all of its plunder into the middle of the plaza and burn the city and all its plunder as a whole burnt offering to the Lord your God. It will be an abandoned ruin forever – it must never be rebuilt again.
|
திரு உமர் அவர்களே, மேலே கோடிடப்பட்ட பைபிள் வசனங்கள் ஒரே இறைவனை அன்றி வேறு இறைவனை வணங்குபவர்களை கொன்று குவிக்க சொல்கிறது. இதன் அடிப்படையில் தானே, ஓரிறை கொள்கையை தவறவிட்டு, மனிதர்களை மற்றும் இறைதுதர்களை இறைவனாக வணங்கும் கிறிஸ்தவர்கள் ஆகிய நீங்கள், ஒரே இறைவனை வணங்க போதிக்கும் இஸ்லாமியர்களை சிலுவை யுத்தம் என்ற பெயரில் கொன்று குவித்தீர்கள்?
இப்போது நடக்கும் சிலுவை யுத்தத்தை தீவிரவாதத்துக்கு எதிராண சிலுவை யுத்தம் என்ற வாதத்தை திரு உமர் அவர்கள் முன் வைக்க விரும்பலாம். அப்படியானால் இதற்கு முன்னரே “திரு உமர் அவர்களின் "கிறிஸ்தவர்களே... தீவிரவாதிகளை தத்து எடுத்துக் கொள்ளுங்கள், ஜெபியுங்கள்" என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு” என்ற தலைப்பில் சில கிறிஸ்தவ தீவிரவாத அமைப்புகளை பற்றி குறிப்பிட்டிருந்தோம். அவற்றின் ஏதேனும் ஒன்றின் மீது சிலுவை யுத்தம் தொடுத்த தெளிவான ஆதாரத்தை கொண்டு திரு உமர் அவர்கள் கட்டுரை வரைய முன் வருவாரா?
கிறிஸ்தவத்தின் பெயரால் முற்றும் துறந்த கிறிஸ்தவ பாதரிகள் முன்னிலையில், கிறிஸ்தவர்கள் அப்பாவி மக்களை கொன்று குவித்தால் அது புனித யுத்தமா??? ஆனால் தங்கள் உடமைகளையும், உடன்பிரப்புகளையும் காக்க இஸ்லாமியர்கள் தற்காப்பு செய்தால் அதை இஸ்லாமிய தீவிரவாதம் என்று முத்திரையிடுவதா??
ஒரு சில தீவிரவாதிகள் தங்கள் சுய லாபத்திற்காகவும், ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்காகவும் செய்யும் தீவிரவாதத்தை கொண்டு ஒரு சமூகத்தை பலிப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை திரு உமர் அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். எங்களுடைய இந்த கட்டுரைக்கேனும் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தோடு மறுப்பு வரைய திரு உமர் அவர்கள் முன் வருவாரா...? இன்ஷா அல்லாஹ் மிண்டும் சந்திப்போம்...
அஸ்ஸலாமு அழைக்கும்
-ஜியா & அப்சர்
|
No comments:
Post a Comment