Thursday, April 19, 2012

“வஞ்சக கிறிஸ்தவ ஆசிர்வாதமும், கபட நிற்பந்தமும் - பைபிள்ளின் பரிந்துரை”, பாகம் - 1



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக



வஞ்சக கிறிஸ்தவ ஆசிர்வாதமும், கபட நிற்பந்தமும் - பைபிள்ளின் பரிந்துரை”, பாகம் - 1


வாசகர்களே, சமீபமாக திரு உமர் அவர்கள் “இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள்: நிர்பந்தமும் கபட இஸ்லாமிய வாழ்வும் (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்)” எனும் தெளிவில்லாத மொழிபெயர்ப்பு கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். அந்த கட்டுரையின் இரத்தினச் சுருக்கமாக அவரே அறிவித்தது:



வஞ்சகத்தை கடிந்துக்கொண்டு, ஆனால் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுக்காமல் இருந்து, வஞ்சகமாக வாழ்பவர்களை தண்டிக்கும் இஸ்லாமே ஒரு மிகப்பெரிய வஞ்சகமாகும்.



வாசகர்களே, வழக்கம் போல், மேலே கோடிட்ட திரு உமர் அவர்களின் பொய்யுரைகளை விவரிக்க, அதற்க்கு தொடர்புடைய தெளிவான ஆதாரமாக, இஸ்லாமியகள் மார்கமாக கொடுள்ள எந்த திரு குர்ஆன் வசனங்களையும், இன்னும் ஸஹிஹ் ஹதிஸ் வசனங்களையும், திரு உமர் அவர்கள் தன கட்டுரையில் கோடிட்டு இருப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. இது அவருடைய வழக்கமான வாய் ஜாலமே அன்றி வேறு இல்லை. இருப்பினும், திரு உமர் அவர்கள் நமக்கு கேள்விகளை விட்டு சென்றதனால், எல்லாம் வல்ல ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக, இந்த கட்டுரை இன்னும் இதன் தொடர்ச்சியில் பதில் அளிக்க முனைகிறோம்.  


வாசகர்களே, தன் கட்டுரையில், திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரத்தை முன் வைக்காமல், அறிவிக்க விரும்பிய குற்றச்சாட்டு:

“இஸ்லாமை வாய் அளவில் ஏற்று கொண்டேன் என்று அறிவித்து விட்டு, அதை முழுவதுமாக நடை முறை படுத்த மறுக்கும் வஞ்சகர்களை எல்லாம் வல்ல ஏக இறைவன் திருமறை குர்ஆனில் கடுமையாக கண்டித்த போதிலும், இஸ்லாமிய ஆட்சியின் கிழ வாழும் இஸ்லாம் அல்லாத ஏனைய மதத்தினரை (திரு உமர் அவர்களின் ஆதாரம் இல்லாத போலியான நம்பிக்கையின் அடிப்படையில்) கொடுமைக்கு ஆளாக்க படுவதினால் அவர்கள் இஸ்லாமை ஏற்கிறோம் என்று வாயளவில் அறிவித்து மனதளவில் வேறு கடவுள்களை வணங்கி வஞ்சகராக வாழ்கிறார்கள், இதனால் இஸ்லாம் வஞ்சகர்களை உருவாக்குகிறது.”


வாசகர்களே, மேலே திரு உமர் அவர்கள் ஆதாரம் இல்லாமல் அறிவிக்க விரும்பிய கருத்தில் “இஸ்லாமை வாய் அளவில் ஏற்று கொண்டேன் என்று அறிவித்து விட்டு, அதை முழுவதுமாக நடை முறை படுத்த மறுக்கும் வஞ்சகர்களை எல்லாம் வல்ல ஏக இறைவன் திருமறை குர்ஆனில் கண்டிக்கிறான்” என்பது உண்மைதான். உதாரணமாக:


2:8   وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
2:8. இன்னும் மனிதர்களில் நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

2:9   يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
2:9. (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.

2:10   فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

2:11   وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
2:11. பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்என்று அவர்கள் சொல்கிறார்கள்.

2:12   أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.

2:13   وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ۗ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَٰكِن لَّا يَعْلَمُونَ
2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.

2:14   وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ
2:14. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்எனக் கூறுகிறார்கள்.

2:15   اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.

2:16   أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ
2:16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.

2:17   مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَّا يُبْصِرُونَ
2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.

2:18   صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.

2:19   أَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِم مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ ۚ وَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ
2:19. அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.

2:20   يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ ۖ كُلَّمَا أَضَاءَ لَهُم مَّشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا ۚ وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
2:20. அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அத(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.





4:37   الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
4:37. அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்; அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.

4:38   وَالَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ ۗ وَمَن يَكُنِ الشَّيْطَانُ لَهُ قَرِينًا فَسَاءَ قَرِينًا
4:38. இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்); எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)




2:256   لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

2:257   اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ۖ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ ۗأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
2:257. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.



வாசகர்களே, மேலே கோடிடபட்ட திருமறை தெளிவான வசனங்களில், எல்லாம் வல்ல ஏக இறைவன் “இஸ்லாமை வாய் அளவில் ஏற்று கொண்டேன் என்று அறிவித்து விட்டு, அதை முழுவதுமாக நடை முறை படுத்த மறுக்கும் வஞ்சகர்களை கண்டித்த போதிலும், அவர்களுக்கு உரிய தண்டனை தன்னிடத்திலே உள்ளது” என்பதனை தெளிவாக அறிவிக்கிறான். உதாரணமாக “நரகத்தில் கடுமையான வேதனை அவர்களுக்கு உண்டு” என்பதனையே அவை அறிவிக்கிறது, இதற்க்கு மாறாக “அன்பையே போதிக்கும்” என்று பொயுரைக்கபடும் கிறிஸ்தவ பைபிள், இதனை போன்ற வஞ்சக செயல்களில் இடுப்படும் நம்பிக்கையாளர்களை, அவர்கள் உங்கள் இரத்த சொந்தங்களாக இருந்த போதிலும், அவர்களை கொன்று குவிக்க பணிக்கிறது, இதுவா “மனிதர்களை சுயமாக முடிவெடுக்க” இன்னும், “அன்பை போதித்த” வழி முறை? பார்க்க:


Suppose your own full brother, your son, your daughter, your beloved wife, or your closest friend should seduce you secretly and encourage you to go and serve other gods that neither you nor your ancestors have previously known, the gods of the surrounding people (whether near you or far from you, from one end of the earth to the other). You must not give in to him or even listen to him; do not feel sympathy for him or spare him or cover up for him. Instead, you must kill him without fail! Your own hand must be the first to strike him, and then the hands of the whole community. You must stone him to death because he tried to entice you away from the Lord your God, who delivered you from the land of Egypt, that place of slavery. Thus all Israel will hear and be afraid; no longer will they continue to do evil like this among you. (Deuteronomy 13:6 - 11)



வாசகர்களே, தன் கட்டுரையில் திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரத்தை முன் வைக்காமல் “இஸ்லாமிய ஆட்சியின் கிழ வாழும் இஸ்லாம் அல்லாத ஏனைய மதத்தினரை (திரு உமர் அவர்களின் ஆதாரம் இல்லாத போலியான நம்பிக்கையின் அடிப்படையில்) கொடுமைக்கு ஆளாக்க படுவதினால் அவர்கள் இஸ்லாமை ஏற்கிறோம் என்று வாயளவில் அறிவித்து மனதளவில் வேறு கடவுள்களை வணங்கி வஞ்சகராக வாழ்கிறார்கள், இதனால் இஸ்லாம் வஞ்சகர்களை உருவாக்குகிறது.” என்று அறிவித்தது முற்றிலும் பொய்யான வாதமாகும். இஸ்லாமிய மார்கத்தில் எந்த நிற்பந்தமும் இருந்ததாக நம்மால் அறிய முடியவில்லை, உதாரணமாக கிழ வரும் திருமறை வசனங்களை பாருங்கள் :


அவரவர் மார்க்கம் அவரவர்க்கு உரியது என்று இஸ்லாம் போதிக்கும் தெளிவான வசனங்கள்:
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
109:1    قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
109:1. (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!

109:2   لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3   وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4   وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

109:5   وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

109:6   لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.




2:62   إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَىٰ وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.




2:256   لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.



வாசகர்களே, மேலே கோடிடப்பட்ட திருமறை வசனங்கள், ஏனைய மதத்தினருக்கு அவர்கள் இறைநம்பிக்கை ரீதியாக அளித்த சுதந்திரத்தை நம்மால் உணர முடிகிறது.


வாசகர்களே, இஸ்லாமிய ஆட்சி நாடுகளில், இஸ்லாமியர்களிடம் இரண்டு சதவிதம் சொத்து வரி, ஏழைகளுக்கு ஜக்காது தர்மம் என வசூலிக்கப்பட்டு, அதனை ஏழைகளுக்கும் இன்னும், அரசாங்க திட்டங்களுக்கும் உபயோக படுத்த படுகிறது. இஸ்லாமிய ஆட்சியின் கிழ வாழும் ஏனைய மதத்தினர், இஸ்லாமியர்களுக்கு இணையாக எல்லா சுகபோகங்கள் மற்றும், சுகந்திரத்தை அனுபவிக்கும் நிலையில் இதற்க்கு பகரமாக, இஸ்லாமியர்களுக்கு இணையாக, இஸ்லாமிய ஆட்சியாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், “ஜிஸ்யா” எனும் வரியை அரசாங்கத்திற்கு செலுத்துவார்கள். இவ்வாறு இஸ்லாமியர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, இஸ்லாமிய ஆட்சியின் கிழ சுகந்திரமாக வாழும் ஏனைய மதத்தினருக்கு சிறிதளவும் கொடுமை அளிக்கப்படுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. உதாரணமாக:


இஸ்லாமுக்கு மாறு செய்த கூடத்தினரை சபிக்க மறுத்து, திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அந்த கூடத்தினர்களுக்காக பிராத்திதா தெளிவான ஆதாரம்:


6397. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) துஃபைல் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின்தூதரே! தவ்ஸ் குலத்தார் (இறைவனுக்கு) மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க) மறுத்துவிட்டனர். அவர்களுக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே அவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என்று மக்களும் எண்ணினர். (ஆனால்) நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்துவிடுவாயாக' என்று (நல்வழி வேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.
Volume :6 Book :80



இஸ்லாமிய ஆட்சியின் கிழ சுகந்திரமாக வாழும் ஏனைய மதத்தினருக்கு சிறிதளவும் கொடுமை அளிக்கபடுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கும் சில ஆதாரங்கள்:

6914. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இஸ்லாமிய அரசுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் கீழ் வாழ்ந்துவரும்) ஓர் ஒப்பந்தக் குடிமகனை (அநியாயமாக)க் கொலை செய்பவன் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டான். சொர்க்கத்தின் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும். 
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.57
Volume :7 Book :87


3166. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அதந் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும். 
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Volume :3 Book :58


இஸ்லாமிய ஆட்சியின் கிழ சுகந்திரமாக வாழும் ஏனைய மதத்தினர்களை பாதுகாக போரிட வேண்டும் இன்னும், அவர்கள் மீது அதிகப்படியான “ஜிஸ்யா” வரி சுமை சுமத்த பட கூடாது என்று அறிவுறுத்தும் தெளிவான ஆதாரம்:

3052. உமர்(ரலி) அறிவித்தார்.
(எனக்குப் பின் வருகிற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன். அல்லாஹ்வின் பொறுப்பிலும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்கேற்பவே தவிர (ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) பாரத்தை அவர்களின் மீது சுமத்தக் கூடாது. 
Volume :3 Book :56


இஸ்லாமிய கலிபா உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்கள், தன் மரண தருவாயிலும், இஸ்லாம் அல்லாத ஒருவனால் குத்துப்பட்டு மரண வேதனை நிலையிலும், முஸ்லிம் அல்லாதோர் பாதுகாக படவேண்டிய போதனைகளை, அடுத்து வரவிருக்கும் ஆட்சியாளர்களுக்கு விட்டு சென்ற தெளிவான ஆதாராம்:

1392. அம்ருப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்.
நான் உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் கூறியதாகச் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்' எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்" என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) 'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்' எனக் கூறினார். உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, 'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள். நபி(ஸல்) தாம் அவர்கள் மரணிக்கும் வரை எவரெவர் விஷயத்தில் திருப்தி கொண்டிருந்தார்களோ அவர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிப் பொறுப்பிற்குத் தகுதியுடையவர்களாக எனக்குத் தெரியவில்லை. எனவே, எனக்குப் பிறகு இவர்களில் யாரை கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அவர் தாம் கலீஃபா! அவர் சொல்வதைக் கேட்டு அவருக்குக் கட்டுப்படுங்கள்' எனக் கூறிவிட்டு, உஸ்மான்(ரலி), அலீ(ரலி), தல்ஹா(ரலி) ஸுபைர்(ரலி) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார். அப்போது அன்ஸார்களில் ஓர் இளைஞர் வந்து 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்! உங்களுக்கு இஸ்லாத்தில் இருந்த அந்தஸ்து என்ன என்பதைத் தாங்கள் அறிவீர்கள். பிறகு நீங்கள் தலைவராம் நீதி, நேர்மையை நிலைநாட்டினீர்கள். இதற்கெல்லாம் மேலாக ஷஹாதத்... வீரமரணமும் கிடைத்திருக்கிறது" என்றார். உமர்(ரலி) 'என்னுடைய சகோதரரின் மகனே! என்னுடைய விருப்பமெல்லாம் இந்த ஆட்சிப் பொறுப்பு எனக்கு நன்மையைத் தேடித் தராவிட்டாலும் எனக்குத் தீமையை தந்துவிடாமலிருந்தால் அதுவே போதும் என்பதே' எனக் கூறிவிட்டு, 'எனக்குப் பின்னால் தலைவராக வருபவருக்கு நான் கூறிக்கொள்வது யாதெனில், அவர் துவக்கத்தில் ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களின் விஷயத்தில் நல்லபடி நடந்து கொள்ளவேண்டும்; அவர்களின் உரிமைகளை அறிந்து அவர்களின் கண்ணியத்தையும் கெளரவத்தையும் பேணிக் காக்க வேண்டும். அதுபோன்றே அன்ஸார்களிடமும் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் (மதீனாவில்) இருப்பிடத்தையும் நம்பிக்கையையும் தக்க வைத்தவர்கள். அவர்களில் நல்லவர்களின் நற்செயலை ஏற்று மதிப்பளித்து தவறிழைக்கக் கூடியவர்களை மன்னித்துவிடவேண்டும். மேலும், அல்லாஹ்வினதும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலுள்ள (முஸ்லிம்களில்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும். அவர்களைப் பாதுகாக்கப் போர் புரியவேண்டும். மேலும், அவர்களின் சக்திக்குமேல் அவர்களைச் சிரமப் படுத்தக் கூடாது" என்று கூறினார்.
Volume :2 Book :23


இஸ்லாம் அல்லாத ஏனைய மதத்தினர்ரிடம் வசூலிக்க படும் “ஜிஸ்யா” வரி, பின்னர் வரவிருக்கும் திரு ஈஸா(அலை) அவர்களின் ஆட்சி காலத்தின் செல்வ செழிப்பின் காரணத்தினால் தவிர்க்கப்படும் என்ற இஸ்லாமிய பரிந்துரை:

2222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!" 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
Volume :2 Book :34


இஸ்லாமிய ஆட்சியில், பிற மத்தினர் நிலை மற்றும் அவர்கள் பாதுகாப்பை போதிக்கும் நிலையில், அதனை பொய்யுரைத்து கலங்க படுத்த விரும்பும் திரு உமர் அவர்கள், கிறிஸ்தவ பைபிள் அறிவிக்கும் ஆட்சி நிலை மற்றும் கிறிஸ்தவம் அல்லாத ஏனைய மதத்தினரின் இழிவு நிலையை அறிவிக்க மறுக்கிறார். இதோ அவர்க்காக நாங்கள் பைபிள் நூலில் இருந்து எடுத்து அறிவிக்கிறோம். “கிறிஸ்தவ ஆட்சியில், கிறிஸ்தவம் அல்லாதோர் சமாதானத்தை விரும்பினால் அனைவரும் அடிமை பிடிக்க படவேண்டும், அடிமை பிடிபட மறுக்கும் ஆண்கள் கொடுரமாக கொன்று குவிக்க பெற்று, பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் அடிமை பிடிக்க பெற வேண்டும். இதுவா கிறிஸ்தவம் மனிதர்களை சுயமாக முடிவெடுக்க இன்னும் அன்பை போதித்த முறை? இதோ பைபிள் தெளிவான வசனம்:


When you draw near to a city to fight against it, offer terms of peace to it. And if it responds to you peaceably and it opens to you, then all the people who are found in it shall do forced labor for you and shall serve you. But if it makes no peace with you, but makes war against you, then you shall besiege it. And when the LORD your God gives it into your hand, you shall put all its males to the sword, but the women and the little ones, the livestock, and everything else in the city, all its spoil, you shall take as plunder for yourselves. And you shall enjoy the spoil of your enemies, which the LORD your God has given you. Thus you shall do to all the cities that are very far from you, which are not cities of the nations here. But in the cities of these peoples that the LORD your God is giving you for an inheritance, you shall save alive nothing that breathes, but you shall devote them to complete destruction, a the Hittites and the Amorites, the Canaanites and the Perizzites, the Hivites and the Jebusites, as the LORD your God has commanded, that they may not teach you to do according to all their abominable practices that they have done for their gods, and so you sin against the LORD your God. (Deuteronomy 20:10-18)



வாசகர்களே, இது வரை, திரு உமர் அவர்கள், தன் கட்டுரையில் தெளிவான ஆதாரம் இல்லாமல் இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்வைத்த கருத்துகள் பொய்யானது, இந்த கருத்துகளுக்கு தகுந்தது கிறிஸ்தவமும் அதன் வேத நூல் பைபிலும் தான் என்பதனை தெளிவாகி இருக்கிறோம் என்று நம்புகிறோம். இன்னும், வஞ்சகத்தை இஸ்லாம் கண்டிக்கிறது, ஆனால் மக்களுக்கு சுயமாக முடிவெடுக்க சுதந்திரத்தை அளிக்கிறது, இதற்க்கு மாறாக கிறிஸ்தவம் வஞ்சகத்தை கண்டிப்பது மட்டும் அல்லாமல் கிறிஸ்தவர் உட்பட கிறிஸ்தவம் அல்லாத ஏனைய மதத்தினரை, இன்னும் பழி பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகள் உட்பட, சுயமாக சிந்திக்க அனுமதிக்காமல், ஏனைய மதத்தினை தழுவிய அவர்களை கொன்று குவிக்க பணிக்கிறது, என்பதனை பைபிள் தெளிவான வசனங்கள் வாயிலாக தெளிவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம். இந்தன் வாயிலாக வஞ்சகத்திற்கு வித்திட்டது கிறிஸ்தவமே என்பது தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.


இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக இனி வரும் காலங்களில், எல்லாம் வல்ல ஏக இறைவன் நாடினால், திரு உமர் அவர்கள் வெளியிட்ட கிறிஸ்தவத்தில் கட்டாயம் கிடையாது என்பது போன்ற பைபிள் வசனங்களை அதன் தொடர்புடைய வசங்களை கொண்டு மிக விரைவில் ஆராயா முனைவோம்.

அஸ்ஸலாமு அழைக்கும்

-ஜியா & அப்சர்


--
--

No comments: