Wednesday, July 20, 2011

திரு உமர் அவர்களின் “கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்” என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு – பாகம் 3


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்)



அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக


திரு உமர் அவர்களின் கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்என்ற கட்டுரைக்கு எங்கள் மறுப்பு பாகம் 3



வாசகர்களே திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஏதிராக தனக்குள் இருக்கும் வெறுப்பினை வெளிப்படுத்தும் விதமாக வெளியிட்ட கட்டுரையில், சில கருத்துகளை வெளியிட்டு இருந்தார் அவற்றை பார்போம்:


1

திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் குர்‍ஆனின் படி - நீங்கள் தங்கும் இடம் நரகம் தான்:என்ற கருத்தினை வெளியிட்டு விட்டு அந்த கருத்துக்கு ஆதாரமாக கிழ வரும் திரு குர்ஆன் வசனத்தை கோடிட்டு இருந்தார்.


5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.



திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல், பொதுவாக “எல்லா கிறிஸ்தவர்களும் தங்கும் இடம் நரகம்” என்று மேல் வரும் குர்ஆன் வசனம் அறிவிப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. மாறாக, திரு ஈஸா (அலை) (மற்றும் ஏனைய இறைதுதர்களின்) அவர்களின் அழைப்பான ஓர் இறை கொள்கையை மறுத்து, சக்தியற்ற பிற தெய்வங்களை, படைத்த இறைவனுடன் இணை கர்ப்பிப்பவர்களுக்கு தங்கும் இடம் நரகம் என்று மேலே கோடிட்ட குர்ஆன் வசனம் அறிவிப்பது, நமக்கு தெளிவாகுகிறது.


இன்னும் அதிக படியாக மேலே கோடிட்ட குர்ஆன் வசனம் திரு ஈஸா (அலை) அவர்களின் போதனைகளை விவரிக்கிறது, அது இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதாகும்.


வாசகர்களே, நாம் இவ்வாறு அறிவித்த உடன் திரு உமர் அவர்கள் இதை போன்ற எந்த பைபிள் வசனமும் இல்லை என்ற வாதத்தை நம் முன் எடுத்து வைக்க முயற்சிப்பார். இன்ஜீல் அது அருளா பெற்ற நிலையில் இல்லாத போதிலும், திரு உமர் அவர்களின் வேலையை எளிதாக்க எங்களுடைய முயற்சி


Now one of the experts in the law came and heard them debating. When he saw that Jesus answered them well, he asked him, “Which commandment is the most important of all?


Jesus answered, “The most important is: ‘Listen, Israel, the Lord our God, the Lord is one. Love the Lord your God with all your heart, with all your soul, with all your mind, and with all your strength. (Mark 12:28 – 30)



மேலே கோடிட்ட பைபிள் வசனத்தில் திரு ஈஸா (அலை) அறிவித்ததாக பைபிள் அறிவிப்பது: நம்முடைய இறைவன் ஒருவனே, (the Lord our God, the Lord is one) அவனையே வணங்குங்கள் என்பதாகும். இந்த வசனத்தில் திரு ஈஸா (அலை) ஒரே இறைவன் என்று அறிவித்து போதிலும், அது திரு குர்ஆன் அறிவிப்பது போல் “அல்லாஹ்வை” வணங்குங்கள் என்று வரவில்லையே, என்பது போன்ற கருத்தினை திரு உமர் அவர்கள் முன் வைக்க விரும்பலாம். வாசகர்களே மேலே கோடிட்ட பைபிள் வசனத்தை நீங்கள் இன்னும் ஒருமுறை படிக்க நேரிட்டால், மூஸா (அலை) அவர்களுக்கு அருளா பெற்ற சட்ட திட்டங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு நபர், திரு ஈஸா (அலை) அவர்களிடம் கேள்வி கணைகளை தொடுப்பாதை உங்களால் உணரா முடியும். அவர் “மூஸா (அலை) அவர்களுக்கு அருளா பெற்ற இறைவனின் கட்டளைகளில் தலையானது எது” என்று கேள்வியை திரு ஈஸா (அலை) அவர்களிடம் வினாவுகிறார், இதற்க்கு திரு ஈஸா (அலை) அவர்கள் பைபிள்லின் பழைய ஏற்பாட்டில் அமைத்துள்ள இறைவனின் கட்டளையான Deuteronomy 6:4 – 5 வசனத்தை மறு மொழிகிறார் அந்த வசனம் இதோ:


Listen, Israel: The Lord is our God, the Lord is one! (Deuteronomy 6:4 – 5 – english translation)



மேலே கோடிட்ட பைபிள் பைபிள் மொழியாக்கதிலும் “அல்லாஹ்வை” வணங்குங்கள் என்று வரவில்லையே என்பது போன்ற கருத்தினை திரு உமர் அவர்கள் முன் வைக்க விரும்பலாம். வாசகர்களே மேலே கோடிட்ட பைபிள் மொழியாக்கத்தின் மூலத்தை ஒரு முறை படிபோம்மா...


Shmo ishral ieue alei-nu ieue achd: (Deuteronomy 6:4 – Hebrew in english transcript)


hear-you ! Israel Yahweh Elohim-of us Yahweh one (Deuteronomy 6:4 – word by word english translation)



வாசகர்களே, மேலே கோடிட்ட பைபிள் வசனத்தில் யூதா/கிறிஸ்தவ இறைவன் ஒருவனே என்பதை விவரிக்க “Yahweh Elohim-of us Yahweh one” என்று விவரிக்க பட்டுள்ளதை நாம் காண்கிறோம். இதற்க்கு முன்னரே அல்லேலூயாவும் ஈசா உமரும் பாகம் 6, திரு உமர் அவர்களின் “Answering Ziya: அல்லேலூ 'யா' வும், அல்லாஹ் படும் அல்லல்களும் - பாகம் 2என்ற கட்டுரைக்கு மறுப்பு: என்ற கட்டுரையில் Yahweh - யேகோவாஎன்பதற்க்கு “அவன் தான்” என்று பொருள் படும், அது இறைவனின் தனிப்பட்ட பெயராக இருக்க முடியாது என்பதை தெளிவான ஆதாரத்தோடு விவரித்து இருந்தோம், இதற்க்கு திரு உமர் அவர்கள் இன்னும் தெளிவான ஆதாரம் கொண்டு மறுப்பு அளிக்காத நிலையில், இன்னும் அதிக படியாக பைபிள் அரபி மொழி பெயர்ப்பாளர்கள் ஹிப்ரேவ் “எலோஹீம்” என்ற இறைவனின் தனிப்பட்ட பெயரை அரபி மொழியில் “அல்லாஹ்” என்று மொழிபெயர்கிறார்கள் என்ற தெளிவான ஆதாரத்தை “திரு உமர் அவர்களின், Answering Ziya: குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா? என்ற கட்டுரைக்கு நம்முடைய மறுப்பு..” என்ற கட்டுரையில் விவரித்து இருந்தோம். இதற்கும் திரு உமர் அவர்கள் இன்னும் தெளிவான ஆதாரம் கொண்டு மறுப்பு அளிக்க வில்லை. நாம் வெளியிட்ட இந்த கட்டுரைகளின் அடிப்படையில் பைபிள்ளில், எல்லாம் வல்ல யூதா/கிறிஸ்தவ இறைவனாக “Yahweh Elohim” – “அவன் தான் அல்லாஹ்” என்று விவரிப்பதை நம்மால் உணரா முடிகிறது. இதன் அடிப்படையில் மேலே கோடிட்ட பைபிள் வசனத்தை இன்னும் ஒருமுறை படிப்போம்மேயான்னால் நம்முடைய கருத்து தெளிவாக வெளிப்படும்.


hear-you ! Israel Yahweh Elohim-of us Yahweh one (Deuteronomy 6:4 – word by word english translation)


செவியுர்ங்கள் ! இஸ்லாவேலர்களே அவன் தான் அல்லாஹ் நம் இறைவன், அவன் ஒருவனே



மேலே விவரிக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் இறைவனின் கட்டளையான Deuteronomy 6:4 – 5 வசனத்தையே திரு ஈஸா (அலை) அவர்கள் Mark 12:28 – 30 என்ற பைபிள் வசனத்தில் மறு மொழிகிறார், இதன் முலம் திரு குர்ஆன் அறிவிப்பது போல் திரு ஈஸா (அலை) அவர்களின் போதனை இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதே என்ற கருத்து தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறோம்.


இதை போன்றே திரு ஈஸா (அலை) அவர்கள் ஒரே இறைவனை (Yahweh Elohim - அவன் தான் அல்லாஹ் - LORD your God) வணங்க பணித்த இன்னும் சில தெளிவான பைபிள் வசனங்கள்:


"You shall worship the LORD your God, and Him only you shall serve" (Mat 4:10).


"You shall love the LORD your God with all your heart, with all your soul, and with all your mind. This is the first and the great commandment" (Mat 22:37).


"And you shall love the LORD your God with all your heart, with all your soul, with all your mind, and with all your strength. This is the first commandment" (Mk 12:30).


"You shall worship the LORD your God, and Him only you shall serve" (Luke 4:8).


If you obey my commandments, you will remain in my love, just as I have obeyed my Father’s commandments and remain in his love. (John 15:10 )


“Do not think that I have come to abolish the law or the prophets. I have not come to abolish these things but to fulfil them. I tell you the truth, until heaven and earth pass away not the smallest letter or stroke of a letter will pass from the law until everything takes place. So anyone who breaks one of the least of these commands and teaches others to do so will be called least in the kingdom of heaven, but whoever obeys them and teaches others to do so will be called great in the kingdom of heaven. For I tell you, unless your righteousness goes beyond that of the experts in the law and the Pharisees, you will never enter the kingdom of heaven. (Matthew 5:17-20)



இதை போன்றே திரு ஈஸா (அலை) அவர்கள் தன்னை புனிதமானவர் என்று அழைக்க படுவதை எதிர்த்து, பின் ஒரே இறைவனை வணங்க, எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே புனிதமானவன் என்பதை தன் வாயால் உணர்த்திய பைபிள் வசனங்கள்:

Jesus said to him, “Why do you call me good? No one is good except God alone. (Mark 10:18)


You know the commandments: ‘Do not commit adultery, do not murder, do not steal, do not give false testimony, honor your father and mother.’” (Luke 18:20 )


He said to him, “Why do you ask me about what is good? There is only one who is good. But if you want to enter into life, keep the commandments.” (Matthew 19:17)



இதை போன்றே திரு ஈஸா (அலை) அவர்கள் அறிவித்த: தன் விருப்பதை நிறைவேற்றுபவர்கள் அல்லாமல், எல்லாம் வல்ல இறைவனின் விருப்பதை ஏற்று அவன் சட்ட திட்டங்களை பின் பற்றுபவர்களே சொர்க்கத்தில் நுழைய முடியும் என்று அறிவித்த தெளிவான பைபிள் வசனம்:


“Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter into the kingdom of heaven – only the one who does the will of my Father in heaven. (Matthew 7:21)



மேலே கோடிட்ட பைபிள் வசனம், எல்லாம் வல்ல இறைவனின் விருப்பதை ஏற்று அவன் சட்ட திட்டங்களை பின்பற்றுபவன் சொர்க்கத்தில் நுழைகிறான் என்று அறிவிக்கிறது. இதை போன்று எல்லாம் வல்ல ஒரே இறைவனின் பொருத்தத்தை நாடி அவன் விருப்பதிர்க்கு ஏற்ப அவன் வகுத்த சட்ட திட்டங்களை பின் பற்றுபவன் “இஸ்லாமியன்” ஆகிறான், இஸ்லாம்மை சேர்ந்தவன் என்று அழைக்க பெறுகிறான். ஏன்னெனில் “இஸ்லாம்” என்பது ஒரு மதம் கிடையாது, அது இனிய மார்க்கம் ஆகும், வாழ்க்கை வழிமுறை ஆகும், “இஸ்லாம்” என்ற வார்த்தையே “சலேமா” என்ற புரதான வார்த்தையில் இருந்து பிறந்தது, அதர்க்கு எல்லாம் வல்ல ஒரே இறைவனின் விருப்பதிர்க்கு முற்றிலும் அடி பணிவது, அவனுடைய சட்ட திட்டங்களை பேணி நடப்பது என்று பொருள் ஆகும்.



வாசகர்களே திரு குர்ஆன் மட்டும் அல்ல, பைபிள்ளும் நிராகரிப்போர் தங்கும் இடம் நரகமே என்று வாய் மொழிகிறது:

But to the cowards, unbelievers, detestable persons, murderers, the sexually immoral, and those who practice magic spells, idol worshipers, and all those who lie, their place will be in the lake that burns with fire and sulfur. That is the second death.” (Revelation 21:8)

2

திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் “அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் வேதக்காரர்கள் (கிறிஸ்தவர்கள்/யூதர்கள்):” என்று அறிவித்து விட்டு கிழ வரும் திரு குர்ஆன் வசனத்தை கோடிட்டு இருந்தார்.


98:6. நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.



மேலே கோடிட்ட திரு குர்ஆன் வசனமும், திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் “எல்லா வேதக்காரர்களும் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்” என்று அறிவிப்பதாக நம்மால் அறியமுடியவில்லை. மாறாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ (திரு ஈஸா (அலை) அவர்களின் போதனையான ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதை நிராகரிப்போர்) “அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்” என்று திரு குர்ஆன் அறிவிப்பதை நம்மால் தெளிவாக உணரா முடிகிறது. திரு உமர் அவர்களே நிராகரிப்போரை இஸ்லாம் கேட்டவர்கள் என்றே வாய் மொழிகிறது, ஆனால் பைபிள் அவர்கள் பச்சிளம் குழந்தைகளாக இருந்த போதிலும் கருணையற்ற முறையில் கொன்று குவிக்க பணிக்கிறது...


Anyone who would not seek the Lord God of Israel would be executed, whether they were young or old, male or female. (2 chronicles 15:13)

3

திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில், திரு குர்ஆன் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் எதிரான கருத்துகளை வெளிபடுதுகிறது என்ற மாயை வாசகர்கள் மனத்தில் உருவாக்கும் முயற்சியில் மிண்டும் “உங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் அதிக வேதனை உண்டு:” என்று திரித்து அறிவித்து விட்டு, கிழ வரும் திரு குர்ஆன் வசனத்தை கோடிட்டு இருந்தார்.


3:56. எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்; அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.



மேலே கோடிட்ட பட்ட திரு குர்ஆன் வசனமும், திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் “எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இவ்வுலகிலும், மறுமையிலும் அதிக வேதனை உண்டு” என்று பொதுவாக அறிவிப்பதாக நம்மால் அறியமுடியவில்லை. மாறாக நிராகரிப்போரை (திரு ஈஸா (அலை) அவர்களின் போதனையான ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதை நிராகரிப்போர்) இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக் கொண்டு இறைவன் வேதனை செய்வதாக திரு குர்ஆன் அறிவிப்பதை நம்மால் தெளிவாக உணரா முடிகிறது.


வாசகர்களே நாம் இவ்வாறு தெளிவான விளக்கங்களை அறிவித்த உடன் திரு உமர் அவர்கள் பைபிள்லின் இறைவன் இவ்வாறு அல்ல, அவன் தன்னை நிராகரிபோர்களையும் விரும்புகிறான் என்ற போலியான வாதத்தை முன் வைக்க விரும்பலாம். திரு உமர் அவர்களே திரு குர்ஆன்னில், எல்லாம் வல்ல இறைவன் படைத்த தன்னை நிராகரித்து, ஏனைய சக்தியற்ற கடவுள்களை வணங்குபவர்கள் மனம் திருந்த வாய்பளிக்கும் வகையில், வரவிருக்கும் வேதனைகளை பற்றி எச்சரிக்கை மட்டுமே செய்கிறான். ஆனால் கிழ வரும் பைபிள் வசனங்களில் பைபிள்லின் இறைவன், தன்னை நிராகரிக்கும் ஏனைய மதங்களை சார்ந்தவர்களை, உங்கள் உடன் பிரப்பாக இருந்த போதிலும், கருணை யற்ற முறையில் கொன்று குவிக்க பணிக்கிறான். இதையே இன்றளவும் உங்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஏதிராக கருணை இன்றி செய்து முடிகிறர்கள், இதையே நிங்களும் விரும்புகிறீர்கள் :


Whoever sacrifices to a god other than the Lord alone must be utterly destroyed. (Exodus 22:20)

Suppose your own full brother, your son, your daughter, your beloved wife, or your closest friend should seduce you secretly and encourage you to go and serve other gods that neither you nor your ancestors have previously known, the gods of the surrounding people (whether near you or far from you, from one end of the earth to the other). You must not give in to him or even listen to him; do not feel sympathy for him or spare him or cover up for him. Instead, you must kill him without fail! Your own hand must be the first to strike him, and then the hands of the whole community. You must stone him to death because he tried to entice you away from the Lord your God, who delivered you from the land of Egypt, that place of slavery. Thus all Israel will hear and be afraid; no longer will they continue to do evil like this among you. (Deuteronomy 13:6 - 11)

4

திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் “அல்லாஹ் உங்களை அழிப்பான்” என்று அறிவித்து விட்டு கிழ வரும் திரு குர்ஆன் வசனத்தை கோடிட்டு இருந்தார்.


9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?



மேலே கோடிட்ட பட்ட திரு குர்ஆன் வசனமும், திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் “எல்லா கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் அழிப்பான்” என்று பொதுவாக அறிவிப்பதாக நம்மால் அறியமுடியவில்லை. மாறாக இதற்க்கு முன் சென்ற நிரகரிப்போர்களின் கூற்றுக்கு ஒப்ப உலகில் பிறந்த மனிதர்களை மற்றும் இறைதூதர்களை, எல்லாம் வல்ல ஒரே இறைவனின் மகன் என்று இணைவைத்து வணங்கும் வழிமுறை கொண்டோர்களை, “அல்லாஹ் அழிப்பானாக!” என்று திரு குர்ஆன் வசனம் தெளிவான சாபம் இடுவதாக வருகிறதே அன்றி, பைபிள் அறிவிப்பது போல் தன்னை விரும்பாத பிற மனிதர்களை தன் முன் இழுத்து வரப்பட்டு கொடூரமான முறையில் கொன்று குவிக்க திரு குர்ஆன் பணிக்கவில்லை.


‘I tell you that everyone who has will be given more, but from the one who does not have, even what he has will be taken away. But as for these enemies of mine who did not want me to be their king, bring them here and slaughter them in front of me!’” (Luke 19:26 - 27)

5

திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் “கிறிஸ்தவ போதகர்களே, உங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்று அறிவித்து விட்டு கிழ வரும் திரு குர்ஆன் வசனத்தை கோடிட்டு இருந்தார்.


3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.



மேலே கோடிட பட்ட திரு குர்ஆன் வசனமும், திரு உமர் அவர்கள் அறிவிப்பது போல் “எல்லா கிறிஸ்தவ மார்கமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்று பொதுவாக அறிவிப்பதாக நம்மால் அறியமுடியவில்லை. மாறாக இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கம் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என்றே அறிவிக்கிறது. இஸ்லாம் என்பதற்க்கு, எல்லாம் வல்ல ஒரே இறைவனை வணங்கி, அவன் விருபதிர்க்கு முற்றிலும் அடி பணிந்து, அவன் சட்ட திட்டங்களை ஏற்று நடப்பது என்ற பொருளை இந்த கட்டுரையில் நாம் முன்னமே அறிவித்து இருந்தோம். இதன் அடிப்படையில் எவன் ஒருவன் எல்லாம் வல்ல ஒரே இறைவனுக்கு அடி பணிந்து, அவன் அருளிய மார்கத்தை முற்றிலும் பின் பற்றுகிரனோ, அவன் இஸ்லாமை சேர்ந்தவன் ஆகிறான், அவனுடையா மார்க்கம் எல்லாம் வல்ல இறைவனால் ஏற்று கொள்ள படுகிறது. ஆனால் இதற்க்கு மாறாக பைபிள் தான் போதிக்கும் மார்கதிர்க்கு புரன்னாக செயல் படும் நபர்களை, பெண்களாகவோ அல்லாது பச்சிளம் குழந்தைகலகவோ இருந்த போதிலும் கருணையற்ற முறையில் கொன்று குவிக்க பணிக்கிறது.


They solemnly agreed to seek the Lord God of their ancestors with their whole heart and being. Anyone who would not seek the Lord God of Israel would be executed, whether they were young or old, male or female. (2 Chronicles 15:12 - 13)

He said to them, “Go into all the world and preach the gospel to every creature. The one who believes and is baptized will be saved, but the one who does not believe will be condemned. (Mark 16:15 – 16)

The wicked are turned back and sent to Sheol; this is the destiny of all the nations that ignore God, (Psalms 9:17)

6

திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் “ஹலோ போதகர்களே! இஸ்லாமியர்கள் உங்களை பாதுகாவலர்களாக, நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது” என்று அறிவித்து விட்டு கிழ வரும் திரு குர்ஆன் வசனத்தை கோடிட்டு இருந்தார்.


5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.



வாசகர்களே, திரு உமர் அவர்களின் இந்த கருத்தை நாம் படிக்க நேரிடும் பொழுது அவர்க்கு கிறிஸ்தவம் அடிப்படையாக தெரியாதோ என்று தோன்றுகிறது, ஏன்னெனில் இந்த குர்ஆன் வசனம், போர் முனையில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் எதிர்த்து நின்ற பொழுது அருளா பெற்றது, அவ்வேளையில் இஸ்லாமியர்கள் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை பாதுகாவலர்களாக எடுத்து கொள்ள கூடாது என்று அறிவிக்கிறது. ஆனால் பைபிள் அவ்வாறு இல்லாமல் பைபிள்ளை பின் பற்றாத நபர்களை பாதுகாவலர்களாக எடுத்து கொள்வதை தடுப்பது மட்டும் அன்றி அவர்கள் உடமைகளை அழித்து எறிய பணிக்கிறது. அவர்களுடன் ஏறுபடும் எந்த வித உறவையும் அறுத்து எரிந்து விட்டு, பகைமை பாராட்ட பணிகிறது, இதையே திரு உமர் அவர்கள் உட்பட பெறும்பாலான கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் மீது பொழிகிறார்கள்.


You must not intermarry with them. Do not give your daughters to their sons or take their daughters for your sons, for they will turn your sons away from me to worship other gods. Then the anger of the Lord will erupt against you and he will quickly destroy you. Instead, this is what you must do to them: You must tear down their altars, shatter their sacred pillars, cut down their sacred Asherah poles, and burn up their idols. For you are a people holy to the Lord your God. He has chosen you to be his people, prized above all others on the face of the earth. (Deuteronomy 7:3 - 6 )

Do not become partners with those who do not believe, for what partnership is there between righteousness and lawlessness, or what fellowship does light have with darkness? And what agreement does Christ have with Beliar? Or what does a believer share in common with an unbeliever? And what mutual agreement does the temple of God have with idols? For we are the temple of the living God, just as God said, “I will live in them and will walk among them, and I will be their God, and they will be my people.” Therefore “come out from their midst, and be separate,” says the Lord, “and touch no unclean thing, and I will welcome you, (2 Corinthians 6:14 - 17)

Do not be deceived: “Bad company corrupts good morals. (1 Corinthians 15:33)

7

திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் “இஸ்லாமை ந‌ம்பாதவர்கள் ஜிஸ்யா என்னும் வரியை இஸ்லாமியர்களுக்கு கட்டும் வரை அவர்களிடம் போர் புரிய வேண்டும்” என்று அறிவித்து விட்டு கிழ வரும் திரு குர்ஆன் வசனத்தை கோடிட்டு இருந்தார்.


9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.



திரு உமர் அவர்களே, இஸ்லாமியர்கள் தங்கள் சொத்துகளில் இருந்து இரண்டு அரை சதவிதம் ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்காகவும், இன்னும் அரசாங்க செயல் பாட்டிர்க்காகவும் செலுத்த வேண்டும், ஆனால் அதே அரசாங்கத்தின் கிழ வாழும் ஏனைய மதத்தினர், இஸ்லாமியர்களுக்கு இணையாக எல்லா சுகபோகங்களை அனுபவித்த போதிலும், அவர்களுக்கு இந்த இரண்டு அரை சதவிதம் ஜக்காத்து கடமை கிடையாது என்பது, இஸ்லாமிய அறிஞ்சரக தன்னை காட்டி கொள்ள முயற்சிக்கும் உங்களுக்கு அறிந்து இருக்கும் என்று நம்புகிறோம். இதற்க்கு மகரமாக இஸ்லாமிய ஆட்சி நாடுகளில் வாழும் ஏனைய மதத்தினர், ஒரு சிறிய துகையை, ஜிஸ்யா என்ற சொத்து வரியாக செலுத்த வேண்டும் என்பதனையே மேல் வரும் குர்ஆன் வசனம் தெளிவாக்குகிறது. இன்று உலகளவில் இஸ்லாமிய நாடுகளே வரி வசூல் விகிதத்தில் மிகவும் குறைந்த சதவிதம் வரி நிர்ணயித்த நாடுகளாக இருக்கின்றன, மாறாக கிறிஸ்தவ நாடுகள் வரி என்ற பெயரில் பொது மக்களின் சேமிப்பு அனைத்தையும் பிடுங்கும் என்னோதொடு செயல் படுவதை http://en.wikipedia.org/wiki/Tax_rates_around_the_world இந்த இணைய தள வரி சதவித ஆட்டவனை மூலம் நாம் அறியலாம்.


திரு உமர் அவர்களே, இஸ்லாமிய ஆட்சி நாடுகளில் ஏனைய மதத்தினர் வாழ்வதற்கு ஜிஸ்யா என்ற சொத்து வரி வசூலிக்க இஸ்லாம் வழி வகுகிறதே அன்றி, பைபிள் அறிவிப்பது போல், ஏனைய மதத்தினரை கொன்று குவித்து அவர்கள் உடமைகளை அழிக்க இஸ்லாம் பணிக்கவில்லையே, ஏனைய மதத்தினரை கொன்று குவிப்பது தான் கிறிஸ்தவம் அன்பை போதிக்கும் வழி முறையா?


Suppose you should hear in one of your cities, which the Lord your God is giving you as a place to live, that some evil people have departed from among you to entice the inhabitants of their cities, saying, “Let’s go and serve other gods” (whom you have not known before). You must investigate thoroughly and inquire carefully. If it is indeed true that such a disgraceful thing is being done among you, you must by all means slaughter the inhabitants of that city with the sword; annihilate with the sword everyone in it, as well as the livestock. You must gather all of its plunder into the middle of the plaza and burn the city and all its plunder as a whole burnt offering to the Lord your God. It will be an abandoned ruin forever – it must never be rebuilt again. (Deuteronomy 13:12 - 16)

8

திரு உமர் அவர்கள் தன் கட்டுரையில் “அல்லாஹ்வின் பார்வையில் இஸ்லாமை ஏற்காதவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்” என்று அறிவித்து விட்டு கிழ வரும் திரு குர்ஆன் வசனத்தை கோடிட்டு இருந்தார்.


8:55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.



திரு உமர் அவர்களே, மேலே கோடிட்ட வசனம் நீங்கள் அறிவிக்க விரும்புவது போல் “அல்லாஹ்வின் பார்வையில் இஸ்லாமை ஏற்காதவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்” என்று பொதுவாக அறிவிப்பதாக நம்மால் விளங்க முடியவில்லை. இதற்க்கு மாறாக மேல் வரும் குர்ஆன் வசனம் “அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம்” என்று அறிவிக்கிறது. நிராகரிப்போர் “உயிரினங்களில் கெட்டவர்கள்” என்பதற்கும் “மிருகங்களை விட கேவலமானவர்கள்” என்பதற்கும் உள்ள வித்தியாசம் அறியாதவர்களா நீங்கள்? உதாரணமாக கிழ வரும் பைபிள் வசனம் புல் பூண்டுகளை துன்புறுத்துவதை தடுக்கிறது, ஆனால் இதற்க்கு மாறாக நிராகரிபோரை ஒரே அடியாக கொள்ளாமல் துன்புறுத்த பணிக்கிறது, ஒரு புல் புண்டுக்கு கொடுக்க படும் முக்கியத்துவம், உயிரினங்களில் நிராகரிபோருக்கு வழங்க பெற வில்லை, எனவே நீங்கள் அழிக்க விரும்பிய கருத்தான “அல்லாஹ்வின் பார்வையில் இஸ்லாமை ஏற்காதவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்” என்ற வசனம் நீங்கள் கோடிட்ட திரு குர்ஆன் வசனத்தை காட்டிலும், கீழே கோடிட பட்டுள்ளா பைபிள் வசனத்துகே மிகவும் சரியாக பொருந்தும், அப்படி என்றால் மனிதர்களை இழிவு செய்வது பைபிள் மற்றும் அத்தனை சார்ந்த கிறிஸ்தவம் தானே?


They were told not to damage the grass of the earth, or any green plant or tree, but only those people who did not have the seal of God on their forehead. The locusts were not given permission to kill them, but only to torture them for five months, and their torture was like that of a scorpion when it stings a person. In those days people will seek death, but will not be able to find it; they will long to die, but death will flee from them. (Revelation 9:4 - 6)



திரு உமர் அவர்கள் வெளியிட மறுத்த இன்னும் சில திரு குர்ஆன் வசனங்களை இங்கு நாங்கள் கோடிட விரும்புகிறோம், இவை இந்த தலைப்புக்கு ஒத்த கருத்துகளை வெளியிடுகிறது.


5:69. முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.


5:72. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.


5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.


5:74. இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.


5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!


5:76. அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.



வாசகர்களே மேலே கோடிட்ட திரு குர்ஆன் வசனம் 5:69 முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்று அறிவிக்கிறது. இதன் அடிப்படையில் எல்லா கிறிஸ்தவர்களும் நரகத்தை சென்றடைவார்கள் என்பது ஏற்புக்கு உரிய வாதம் அல்ல, கிறிஸ்தவர்களில் இன்றளவும் சில தரபினர் திரு ஈஸா (அலை) அவர்களை இறைதூதரகவும், பைபிள்ளில் இடை சொருகல் செய்ய பட்ட “முன்று இறைவன்கள்” என்ற கொள்கை நம்பாதவர்களாகவும் இருகிறார்கள், அவர்களிடம் இஸ்லாம் சரி வர எடுத்து வைக்க படாத நிலையில் அவர்கள் இன்னமும் கிறிஸ்தவத்தை சார்ந்து இருகிறார்கள், இப்படி பட்டவர்களே தங்களிடம் உண்மை மார்க்கம் எடுத்து வைக்க படும் பொழுது கண்ணீர் மழுங்க அதை ஏற்கிறார்கள், இதை விடுத்து நமது நண்பர் திரு உமர் போன்றவர்கள், தங்கள் பொய் கூற்றுகளை திணித்து, வாய்மையில் வெள்ள முயல்கிறர்களே யன்றி, தெளிவான ஆதாரத்தை முன் வைத்து விவாதம் செய்ய முயல்வது இல்லை. சமீபமாக தான் பதிலளிக்க போவதாக விர முழக்கம் செய்த திரு உமர் அவர்கள், இந்த கட்டுரைக்கவது தெளிவான ஆதாரத்தை முன் வைத்து, முறையே தவணையை அறிவித்து விட்டு, நாம் கோடிட்ட பைபிள் வசனங்களுக்கு விளக்கம் அளிப்பார் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.


அஸ்ஸலாமு அழைக்கும்


-ஜியா & அப்சர்


--

--

1 comment:

Wanishaj said...

Jazak Allah for sharing this worthfull info..

May Allah reward both of you for all your hard effort on your valuable findings.

Masha Allah !!!!