பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) அஸ்ஸலாமு அழைக்கும் - பொருள்: சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 4, காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்களின் பெயரில் பொய்யுரைக்கும் உமர்... திரு உமர் அவர்கள், " Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா" " என்ற தலைப்பில் ஒரு புதிய கட்டுரையை சமீபமாக வெளியிட்டு இருக்கிறார். திரு உமர் அவர்கள் விடுத்த எழுத்து விவாத அழைப்பை ஏற்று, திரு உமர் அவர்கள் தெளிவான ஆதாரம் எதையும் முன் வைக்காமல், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை பொதுவாக திரு உமர் அவர்கள் பழிக்கும் கூற்றுகளில், ஏதேனும் ஒன்றின் மீது அவரிடம் தெளிவான ஆதாரம் இருக்குமெனில், அதை முன் வைத்து கட்டுரை வரையுமாறு நாம் அவரிடம் முன்னரே வலியுறுத்தி இருந்தோம். அவ்வாறு அவர் கட்டுரை வரைய கால தாமதம் செய்வதனால், இப்பொழுது அவர் வெளியிட்டு கொண்டு இருக்கும் கட்டுரைகளையே எழுத்து விவாதத்தின் தலைப்பாக எடுத்து விவாதம் செய்ய நாம் முன்னரே அவறுக்கு அழைப்பு விடுத்து இருந்தோம். இந்த அழைப்பின் அடிப்படையில், திரு உமர் அவர்களின் முந்தைய வாதமான “அல்லேலுயா” வார்த்தையின் அர்த்தம் – “யேகோவா தேவனை துதித்தல்” என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு தெளிவான ஆதாரத்தை முன் வைத்து கட்டுரை வரையுமாறு திரு உமர் அவர்களை நாம் வேண்டி இருந்தோம். இவ்வாறு இந்த தலைப்பில் தோல்வியுற்றால் அல்லது தெளிவான எதிர்வாதம் செய்ய மறுத்தால், “இனி கனவிலும் இஸ்லாமியர்களை பலிக்க திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் முயற்சிப்பது இல்லை” என்ற உறுதி மொழியோடு கட்டுரை வரைய துவங்குமாறு திரு உமர் அவர்களை நாம் வேண்டி இருந்தோம். இந்த கட்டுரையை வரைய துவங்குவதற்கு முன் அதன் கால தவணை, இன்னும் பல விசயங்களை தெளிவாக அறிவித்து விட்டு துவங்க வேண்டும் என்று திரு உமர் அவர்களுக்கு முன்னமே நாம் அழைப்பு விடுத்து இருந்தோம். பார்க்க: http://isaakoran.blogspot.com/2011/02/3.html இந்த அழைப்புகளுக்கு பிறகு, மௌனமான முறையில் திரு உமர் அவர்கள் இப்பொழுது “Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"” என்ற கட்டுரையை வெளியிட்டு உள்ளார். இந்த கட்டுரையின் மூலம் திரு உமர் அவர்கள் தங்களுடைய மௌனத்தை சம்மதமாக தந்துள்ளார் என்று தோன்றுகிறது. இதன் அடிப்படையில் திரு உமர் அவர்கள், முன்னர் அறிவித்த “அல்லேலுயா” வார்த்தையின் அர்த்தம் – “யேகோவா தேவனை துதித்தல்” என்ற தலைப்பை அவர் தெளிவான ஆதாரம் கொண்டு விளக்க மறுத்தால், அல்லது இந்த தலைப்பில் அவர் தோல்வியுற்றால், திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவர் தோழர்களும் “கனவிலும் இஸ்லாமியர்களை பழிக்க முயற்சிப்பது இல்லை” என்ற வாக்குறுதியை நமக்கு தருகிறார்கள் என்று நம்புவோம். இதை வெளிப்படையாக அறிவிக்க அவர் கையொப்பம்மிட்ட ஒப்பந்தத்தை பிரசுரிபார் என்று நம்புவோம். திரு உமர் அவர்களுக்கு, வாசகர்கள் சார்பில் ஒரு வேண்டுகோள், இப்படி தலைப்புக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத கட்டுரைகளை வெளியிட்டு, வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதை தவிர்த்து விட்டு, நீங்கள் முன்னர் அறிவித்த, “அல்லேலுயா வார்த்தையின் அர்த்தம் - யேகோவா தேவனை துதித்தல்” என்ற கருத்தை, இன்னும் அதிகபடியாக கால தாமதம் செய்யாமல், தெளிவான ஆதாரத்துடன் விளக்குமாறு, வாசகர்கள் சார்பில் வேண்டி கேட்டு கொள்கிறோம். நீங்கள் முன்னர் அறிவித்த, “அல்லேலுயா வார்த்தையின் அர்த்தம் - யேகோவா தேவனை துதித்தல்” என்ற உங்கள் கருத்து சம்பந்தமாக, ஆன்சரிங் இஸ்லாம் இணையதல ஆசிரியர்களின் கருத்து வருகைகாக, கட்டுரைகளை மொழிபெயற்பதற்காக காத்திருகிறீர்கள் என்றால் அதை தெளிவாக, வெளிபடையாக அறிவியுங்கள். நீங்கள் ஆன்சரிங் இஸ்லாம் இணையதள ஆசிரியர்களின் கட்டுரையை பெற்று மொழி பெயர்த்து வெளியிடும் வரை நாங்கள் உங்களுக்காக காத்திருப்போம். திரு உமர் அவர்களே, இதற்க்கு முன்னர் உங்கள் கட்டுரையில் கிங் ஜேம்ஸ் வெர்சன் (king James Version) பைபிளை போற்றிய நீங்கள் இப்பொழுது நீங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஸ்கோபில்ட் வெர்சன் (Scofield Reference Version) பைபிளை போற்றுகிறார். திரு உமர் அவர்களே, "எந்த பைபிளை நீங்கள் பின் பற்றுகிறீர்கள்?" என்று கொஞ்சம் தெளிவாக அறிவிக்க முடியுமா? அப்படி நீங்கள் அறிவித்தால் தான் அதன் அடிப்படையில் நாங்கள் வாதங்களை எடுத்து வைக்க இலகுவாக இருக்கும். இப்பொழுது ஸ்கோபில்ட் வேர்சியன் (Scofield Reference Version) பைபிளை போற்றி விட்டு எல்லா பைபிளும் ஒன்று என்ற கருத்தை நீங்கள் வெளியிட மாட்டிர்கள் என்று நம்புகிறோம். அப்படியே நீங்கள் வெளியிட்டாலும் அது தவறு என்று நாங்கள் சொல்ல விரும்பவில்லை, நீங்கள் போற்றிய ஸ்கோபில்ட் வேர்சியன் (Scofield Reference Version) பைபிளை இயற்றிய ஆசிரியர் தான் அவ்வாறு சொல்கிறார்.
திரு உமர் அவர்கள் அறிவித்தது: “Scofield Version குழுவினர் தங்களுடைய அடுத்த பதிவில் தாங்கள் கொடுத்த விளக்கம் (Commentary) சரியானது அல்ல என்பதை அறிந்து அவர்கள் திருத்திவிட்டார்கள்.” திரு உமர் அவர்களுக்கு நன்றி சொல்ல நான் இந்த நேரத்தில் கடமை பட்டவனாக இருக்கிறேன். ஒரு கிறிஸ்தவராக இருந்தும் ஸ்கோபில்ட் வேர்சியன் (Scofield Reference Version) பைபிளில், தவறு இருந்தது, அது திருத்த பட்டது என்பதை வெளிபடையாக அறிவித்ததற்காக. இருப்பினும் திரு உமர் அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், "கிறிஸ்தவர்கள் நாங்கள் புரியாமல் மூலத்தை படிப்பது இல்லை, இதற்க்கு மாறாக மொழிபெயர்ப்பை மட்டுமே படிக்கிறோம்" என்று மாறு தட்டி கொள்ளும் நீங்கள் இப்பொழுது வைத்து இருக்கும் பைபிள், எந்த மொழியாக்கம்? அதில் உள்ள பிழைகளை எப்பொழுது பிழை திருத்தப்பட்டு முழுமை அடையும் என்பதை கொஞ்சம் தெளிவாக அறிவித்தீர்கள் என்றால் அது வாசகர்களுக்கு பயனாக இருக்கும். திரு உமர் அவர்களே, “Scofield Reference Version குழுவினர் தங்களுடைய அடுத்த பதிவில் தாங்கள் கொடுத்த விளக்கம் (Commentary) சரியானது அல்ல என்பதை அறிந்து அவர்கள் திருத்திவிட்டார்கள்.” என்பதை அறிவித்த நீங்கள், இவ்வாறு அடுத்தவர் படைப்புகளை அவர்கள் அனுமதி இல்லாமல் பிழைதிருத்தம் செய்து வெளியிட அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்பதையும் அறிந்து அறிவித்து இருந்தால் அது கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். ஏன்னெனில் 1921 ஆண்டே மரணித்த காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் அவர்களின் பெயரில் அவருடைய படைப்பை (மரணித்த மனிதரின் அனுமதி இல்லாமல்) பிழை திருத்தி 1967 ஆம் ஆண்டு வெளியிட யார் அனுமதி தந்தது என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்பவில்லை, இதற்க்கு மாறாக, கிறிஸ்தவ அறிஞர்கள் தான் எழுப்பி உள்ளார்கள். மரணித்த மனிதனின் படைப்பை பிழை திருத்த வேண்டும் என்றால் அவருடைய அனுமதி பெற்று இருக்க வேண்டும். இன்னும் பிழை திருத்தும் நபர் தான் சொந்த பெயரில் தான் அந்த பிழைகளை திருத்தி வெளியிட வேண்டுமே தவிர, காலம் சென்ற திரு டாக்டர் சி. அய். ஸ்கோபில்ட் பெயரில் அதை வெளியிட கூடாது என்று கிறிஸ்தவ அறிஞர்கள் தான் அறிவிக்கிறார்கள். இன்னும் விவரம் அறிய இந்த இணையதளங்களை பார்க்கவும்:
திரு உமர் அவர்களே, ஸ்கோபில்ட் வெர்சன் பைபிளை இயற்றிய காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் தன்னை ஒரு கிறிஸ்தவ டி.டி. என்கிறார். இது மட்டும் இல்லாமல் அவருடன் சேர்ந்து கிறிஸ்தவ தலைசிறந்த எட்டு டி.டி.கள் இந்த ஸ்கோபில்ட் வெர்சன் பைபிளை மொழி பெயர்க்க உதவி உள்ளார்கள், மொழி பெயர்த்து உள்ளார்கள்.
இப்படி தலை சிறந்த கிறிஸ்தவ அறிஞர்களால் பல காலங்கள் சிரமத்திற்கு பிறகு வெளியிட்ட ஒரு மொழி பெயர்ப்பின் முதல் அத்தியாயத்திலேயே பிழை இருக்கிறது என்று நீங்கள் சாட்சி கூறுகிறீர்களா?
அப்படி என்றால் "இப்படி பிழையோடு பல வருட காலங்கள், பல லட்சம் பிரதிகள் விநியோகம் செய்ய பெற்ற பைபிள் வசனங்களை ஓதியோர் / படித்தோர் நிலை என்ன" என்பதை கொஞ்சம் தெளிவாக அறிவியுங்களேன்? இவர்களை வழி தவற செய்த பாவம் இந்த கிறிஸ்தவ அறிஞர்களை சென்றடையாதா? பின் ஒரு நாளில் நீங்கள் கையில் வைத்து இருக்கும் பைபிளில் பிழை திருத்தப்பட்டால், அதை இறை வேதம் என்று நம்பிய உங்களின் நிலை என்ன? கொஞ்சம் தெளிவாகுங்களேன். நீங்கள் வைத்திருக்கும் பைபிள் பிழைகளுக்கு அப்பார்பட்டது என்று நீங்கள் வாதாட விரும்பினால், அது மூல பைபிளுக்கு இணையானது என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பினால், தயவு செய்து அதன் பெயரை கொஞ்சம் வெளியிடுங்கள், அதனுள் இருக்கும் பிழைகளை உங்களுக்க இறைவன் கிருபையில் நாங்கள் பட்டியல் இடுவோம். இதற்க்கு பின்னரேனும் திரு உமர் வெர்சன் என்று பெயரில் பிழை இல்லாத மொழியாக்கத்தை வெளியிட முன் வருவீர்களா? திரு உமர் அவர்களே, காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்கள், உங்கள் கிறிஸ்தவ அறிஞர்கள் செய்த பைபிள் மொழியாகத்தை உதாரணம் காட்டினால், அது பெரிய தவறு போன்ற மாயயை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால், உங்கள் கிறிஸ்தவ அறிஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து செய்த, புழக்கத்தில் பல ஆண்டுகள் இருந்து, பல லட்சம் பிரதிகள் விநியோகிக்கபட்ட பைபிள் மொழியாக்கத்தை, பிழையான மொழி பெயர்ப்பு செய்த உங்கள் பைபிள் அறிஞர்களை, பழிக்க முன் வர மறுக்கிறீர்கள், அது ஏன்? உங்கள் கிறிஸ்தவர்கள் செய்தால் அது கிறிஸ்தவ புனித தொண்டு, ஆனால் அதை இஸ்லாமியர்கள் உதாரணம் காட்டினால் அது பெரும் குற்றம் அப்படி தானே? திரு உமர் அவர்களே, உங்கள் போப் உட்பட, தலை சிறந்த கிறிஸ்தவ அறிஞர்கள் அனைவரும், காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்களுடன் நேரடி விவாதம் செய்ய அஞ்சி ஓடி ஒழிந்த வரலாற்றை, நீங்கள் மறந்து விட்டீர்கள் போலும். இப்பொழுது அவர் உயிருடன் இல்லாத நிலையில், அவர் வெளியிட்ட ஒரே ஒரு கருத்துக்கு பொய்யான மறுப்பு தெரிவித்து விட்டு, அதையும் திறன் பெற செய்யாத நிலையில், அந்த மறுப்புக்கு மாறுதட்டி கொள்ள விரும்புகிறீர்கள். இவ்வாறு செய்ய உங்களுக்கு தகுதி இருக்கிறது என்று மாறு தட்டி கொள்ள விரும்புகிறீர்களா? திரு உமர் அவர்களே, நீங்கள் வெளியிட்ட காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்களின் "Is the Bible God’s Word?" என்ற புத்தகத்தில் நீங்கள் வெளியிட்ட இந்த ஒரு கருத்தை மட்டுமே அவர் ஆதாரம் காட்டி இருந்தாரா? ஒரு மனிதரின் புத்தகத்திற்கு மறுப்பு என்று அறிவித்து விட்டு, ஒரே ஒரு கருத்தை மட்டும் பொய்யான மறுப்பு செய்தால், அது ஏற்புக்கு உறிய வாதமா? இதை போன்று அவர் தெளிவான ஆதாரத்தோடு வெளியிட்ட ஆயிரம் கருத்துகள் நிறைந்து கிடக்கிறது. அவற்றில் குறைந்த பட்சம் ஐம்பது சதவிதம் கருத்துகளுக்கேனும் பைபிள் உதவிகொண்டு, தெளிவான ஆதாரம் கொண்டு விடை அளித்து விட்ட பிறகு, அதற்காக பெருமை பட முயற்சியுங்களேன்??? ஏன் இது, கிறிஸ்தவ அறிஞர் ஆகிய உங்களால் முடியாதா? காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்களின் கருத்துகளில் ஒன்றுக்கு விடை அளிக்க ஏறத்தாழ இருப்பது ஐந்து வருடங்கள் கழித்து முயற்சித்து, அதிலும் தோல்வியுறும் நீங்கள் அவர் விட்டு சென்ற ஏனைய கருத்துகளுக்கு விடை அளிக்க முயற்சிக்கலாமே? பொய்யுரை தானே மொழிய போகிறீர் அதற்க்கு எதற்கு கால தாமதம்? திரு உமர் அவர்கள் வெளியிட்டது:
திரு உமர் அவர்கள் வெளியிட்டது:
திரு உமர் அவர்களே, கிறிஸ்தவத்தின் தலை சிறந்த அறிஞர் காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் டி.டி. அவர்கள், தன்னுடன் அதிகபடியாக எட்டு கிறிஸ்தவ அறிஞர் பெருமக்களை, டி.டி. களை சேர்த்து கொண்டு செய்த பைபிள் மொழியாக்கத்தில், எலோஹிம் என்ற ஹீப்றேவ் பெயருக்கு இவ்வாறு விளக்கம் தருகிறார்கள். “Elohim (sometimes El or Elah), English form "God", the first of the three primary names of Deity, is a uni-plural noun formed from El - strength, or the strong one, and Alah, to swear, to bind oneself by an oath, so implying faithfulness.” திரு உமர் அவர்கள், தன்னுடைய கட்டுரையில், கிறிஸ்தவத்தின் தலை சிறந்த அறிஞர், காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் டி.டி. அவர்களின் விளக்கத்தை இவ்வாறு மொழியாக்கம் செய்கிறார். “Elohim - எலோஹிம்” (தேவன்/இறைவன்/கடவுள்) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளின் கூட்டு என்று இந்த விளக்கவுரையில் ஆசிரியர் எழுதுகிறார். அந்த இரண்டு வார்த்தைகள் "EL" மற்றும் "ALAH” என்பதாகும். "EL" என்றால், வலிமை அல்லது வலிமை உள்ளவன் என்று பொருள் (El - strength, or the strong one). "ALAH" என்றால் சத்தியம் செய்தல், வாக்குறுதி கொடுத்தல், செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இருத்தல் என்று பொருள் (Alah, to swear, to bind oneself by an oath, so implying faithfulness). திரு உமர் அவர்களே, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன், ஆனால் முழு பூசணிக்காயை ஒரு சோற்று பருக்கையில் மறைக்க முயற்சிக்கும் நபரை இப்பொழுது தான் உங்கள் கட்டுரை மூலம் பார்க்க நேறிற்று. உங்கள் மொழியாக்கத்தை கிறிஸ்தவத்தின் தலை சிறந்த அறிஞர் காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் டி.டி. அவர்களின் விளக்கத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் உங்கள் வழக்கமான கண் கட்டி வித்தை தெளிவாகுகிறது. திரு உமர் அவர்களே, காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் டி.டி. அவர்கள் தங்கள் விளக்கத்தில் “Elohim - எலோஹிம்” என்பதற்கு தந்த விளக்கமான ”first of the three primary names of Deity" என்ற ஆங்கில சொற்களின் மொழியாக்கத்தை உங்கள் மொழி பெயர்பில் காண முடியவில்லையே? Elohim - எலோஹிம் என்பது முன்று கடவுள்களின் முதன்மையான கடவுளின் பெயர் என்று காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் டி.டி. அவர்கள் அளித்த விளக்கத்தை அப்படியே விழுங்க ஏன் நீங்கள் முயற்சித்தீர்கள் என்று கொஞ்சம் தெளிவாக்குங்களேன்? இதை மொழிபெயர்ப்பு செய்யாததற்கு, இந்த கருத்தை நீங்கள் விரும்பாதது காரணமா? அல்லது ஆங்கிலம் உங்களுக்கு தெரியாதா? அப்படி என்றால் இதை போல நீங்கள் செய்த வெளியிட்ட அனைத்து மொழியாக்கமும் பிழையானது, உங்கள் விருப்பதிர்க்கு ஏற்ப இடை சொருகள்கள் செய்யப்பட்டது என்று நீங்களே சாட்சி கூறுகிறீர்களா?
திரு உமர் அவர்களே, காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் டி.டி. அவர்கள், Elohim - எலோஹிம் என்பது முன்று கடவுள்களின் முதன்மையான கடவுளின் பெயர் என்கிறார், அது "EL" மற்றும் "ALAH” என்ற வார்த்தைகளால் உருவானது என்கிறார். நீங்கள் "EL" என்றால், வலிமை அல்லது வலிமை உள்ளவன் என்றும், "ALAH" என்றால் சத்தியம் செய்தல், வாக்குறுதி கொடுத்தல், செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இருத்தல் என்றும் பொருள் தருகிறீர்கள். உங்களின் கருத்தின் அடிப்படையில், எலோஹிம் என்பதற்க்கு “வலிமை உள்ளவன் செய்த சத்தியம்” அல்லது “வலிமையானவன் கொடுத்த வாக்குறுதி” என்று பொருள் எடுத்து கொள்ளலாமா? உதாரணமாக பைபிள்ளின் முதல் வசனம் (Genesis 1:1) Genesis 1:1 (Hebrew in English typeset) b-rashith bra aleim ath e-shmim u-ath e-artz: Genesis 1:1(English translation) in-beginning he-created Elohim >> the-heavens and ->> the-earch Genesis 1:1(Typical Tamil bible translation) ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் திரு உமர் அவர்களின் அறிவித்த கருத்தின் அடிப்படையில் மேலே உள்ள பைபிள் மொழியாக்கங்கள் தவறாகும். Genesis 1:1(Proposed Mr. Omars version of Tamil bible translation) ஆதியிலே வலிமை உள்ளவன் செய்த சத்தியம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தது. அல்லது ஆதியிலே “வலிமையானவன் கொடுத்த வாக்குறுதி” வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தது. இதை போன்ற அத்தியாயம் கொண்ட ஒரு புதிய பைபிள் மொழியாக்கத்தை திரு உமர் அவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று நாம் காத்திருக்கலாம். திரு உமர் அவர்களே, பொதுவாக சத்தியம், உறுதிமொழி (oath), போன்றவைகள் எல்லாம் வல்ல இறைவனை சாட்சியாக வைத்து மனிதர்களிடையே செய்ய படுவதாகும். பொதுவாக சத்தியம், உறுதிமொழி (oath) அறிவிப்பவர் ஒரு நபரின் மீதோ அல்லது ஒரு பொருளின் மீதோ இந்த சத்தியம், உறுதிமொழி அறிவிப்பார். இவ்வாறு எந்த நபரின் மீதோ அல்லது பொருளின் மீதோ அறிவிக்க படாத சத்தியம் இறைவன் பெயரால் அறிவிக்கப்பட்ட சத்தியமாக கருத்த பட்டு, அந்த சத்தியத்தை அறிவிக்கும் நபர் நம்பப்படுவார். இந்த கருத்தை அடிப்படையாக கொண்டே காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் டி.டி. அவர்கள் தங்களின் விளக்கத்தில் எலோஹிம் என்பது மூன்று கடவுள்களின் முதன்மையான கடவுளின் பெயர் என்றும், அது "EL" மற்றும் "ALAH” என்ற வார்த்தைகளால் உருவானது என்றும் விளக்கம் அளிக்கிறார். “ALAH” என்ற சத்தியம் இறைவனின் பெயரில் இரண்டில் ஒரு பகுதி என்றால் இறைவன் என்பவன் சத்தியம் என்று தானே அர்த்தம்? Exodus 20:7 la thsha ath-shm –ieue alei-k l-shua ki la inqe ieue ath ashr-isha ath-shm-u l-shua :p Exodus 20:7 not you-shall-take-up >> name-of Yahweh elohim-of-you for –the-futility that not he-shall-hold-innocent Yahweh >> who he-is-taking-up >> name-of-him for-the-futility Another translation Exodus 20:7 Thou shalt not take the name of the lord thy god is vain; for the lord will not hold him guiltless that taketh his name in vain.
திரு உமா அவர்களே, காலம் சென்ற டாக்டர் திரு சி. அய். ஸ்கோபில்ட் டி.டி. அவர்கள் தங்களின் விளக்கத்தில் Elohim - எலோஹிம் என்பது முன்று கடவுள்களின் முதன்மையான கடவுளின் பெயர் என்றும், அது "EL" மற்றும் "ALAH” என்ற வார்த்தைகளால் உருவானது என்றும் விளக்கம் அளிக்கிறார். “ALAH” என்ற சத்தியம் இறைவனின் பெயரில் இரண்டில் ஒரு பகுதி என்று விளக்கம் அளிக்கிறார், இதையே உங்கள் ஏனைய கிறிஸ்தவ அறிஞர்களும் எலோஹிம் என்ற முதன்மையான இறைவனின் பெயரை அரபியில் அல்லாஹ் என்று மொழி பெயர்கிறார்கள். உங்கள் கிறிஸ்தவ அறிஞ்சர்கள் பைபிளின் முதன்மை இறைவனான எலோஹீம்மின் பெயரை அல்லாஹ் என்று மொழி பெயர்த்தால் அதை கிறிஸ்தவ தொண்டு என்று போற்ற முன் வருகிறீர், இதையே நாங்கள் உதாரணம் காட்டினால் அதை மிக பெரிய குற்றமாக பொய்யுரை சேர்த்து விவரிக்கிறீர், இன்னும் அதிக படியாக எச்சரிக்கை விடுகிறீர். திரு உமர் அவர்களே யாரிடம் உங்கள் கையாள் ஆகாத தனத்தை மறைக்க, எச்சரிக்கை செய்ய முயற்சிக்கிறீர்? அதிக படியாக கீழ்தனமாக முகவரி இல்லாத பெயரில் நீங்களே ஒரு பின்னுட்டம் இட்டுவிட்டு, அதற்க்கு மறுப்பு என்ற பெயரில் குர்ஆன் பிரதிகளை இழிவு செய்ய முயற்சிப்பீர். இன்னும் அதிக படியாக புகைப்படங்களை வெளியிடுவேன் என்று ஒரு தீவிரவாதியை போல எச்சரிக்கை விடுவீர், இதை தானே உங்களால் செய்ய முடியும், இதற்கெல்லாம் இஸ்லாமியர்கள் அஞ்சி விடுவார்கள் என்று உங்கள் எண்ணமா? “அல்லேலுயா” என்ற ஒத்தை ஹிப்றேவ் மொழி வார்த்தைக்கு நீங்கள் முன்னர் அறிவித்த “யேகோவா தேவனை துதித்தல்” என்ற கருத்தை நிரூபிக்க இன்னும் தெளிவான ஆதாரத்தை கொண்டு வராமல் காலம் தாழ்த்தி இழிவு பட்டுக்கொண்டு இருக்கும் நீங்களா எங்களை எச்சரிக்கை செய்வது, வேடிக்கையாக இருக்கிறது. தயவு செய்து உங்கள் இணையதளத்தில் “உமர் அண்ணா”, “உமர் அண்ணா” என உங்களது பொய்யுரைகளை போற்றும் கிறிஸ்தவர்களிடம் சென்று இந்த பூச்சாண்டி வேலைகளை காட்டுங்கள். எங்களிடம் இந்த சலசலப்பு எல்லாம் ஒன்றும் செல்லாது. முடிந்தால் தெளிவான ஆதாரத்தோடு எங்கள் கட்டுரைகளை எதிர் கொள்ளுங்கள், இறைவன் கிருபையில் உங்கள் பொய்யான கருத்துகளை தகர்த்து எறிவோம். இறைவன் நாடினால் கூடிய விரைவில் மீண்டும் சந்திப்போம். அஸ்ஸலாமு அழைக்கும் -ஜியா & அப்சர் |
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)
Tuesday, February 22, 2011
அல்லேலூயாவும் ஈசா உமரும் – பாகம் 4, காலம் சென்ற ஹாஜி திரு அஹ்மத் தீதாத் அவர்களின் பெயரில் பொய்யுரைக்கும் உமர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment